Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 24.1

“அந்த நல்லவனை தான் நீயும் நல்லா பயன்படுத்திக்கிட்டையே..!” என மகளோடே இணைந்தார் அவரும்.

“வேற வழி.. அந்த லூசுவோட அண்ணனுக்கு புள்ள பொறந்தா.. உடனே, நானும் பெத்துக்கனுமா..? 



Advertisement

ஓயாம.. யாராவது கேட்கறாங்கன்னு வந்து என்கிட்ட நிற்கறது. 

Advertisement

ச்சை.. நானும், குழந்தைக்காக ஏங்கற மாதிரி நடிக்கறதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே..!

Advertisement

ஒவ்வொரு தடவை அவனோட இருந்ததுக்கு பின்னாடி, கர்ப்பம் ஆகிட கூடாதுன்னு மறச்சு மாத்திரை எடுத்து.. சப்பா.. முடியல. 

Advertisement

அஞ்சு வருஷம் சமாளிச்ச என்னால, இனியும் அதோட தொல்லை தாங்காதுன்னு.. அதுக்கு ஒரு முடிவு கட்ட தானே..

இந்த திட்டத்தையே கொரோனா டைம்ல, இவ நம்ம வீட்டுக்கு வந்தத வச்சு போட்டோம்..” என்றாள் பெருமையாக.

“இது நமக்கு எப்படியும் தேவைப்படுமுன்னு தானே.. அவனை ஏமாத்தி அவனோட ஸ்போர்ம் வாங்கி ஸ்டோர் பண்ணி வச்சோம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே.. 

நம்ம திட்டம் தெரியாம டாக்டர்கிட்ட டெஸ்ட் பண்ணலாம்.. குறை என்னன்னு தெரிஞ்சுக்கலாமுன்னு சொன்னதும் அவனுக்கு என்ன ஒரு சந்தோஷம்..! 

நீ இந்த அளவு இறங்கி வந்ததே போதுமுன்னு ஓடி வந்து கொடுத்தானே..! 

இந்த டாக்டரும் கச்சிதமா பேசி அவனோட ஸ்போர்ம் வாங்கி சேமிச்சு வச்சு.. சரியான நேரத்துல இதெல்லாம் பண்ணது எல்லாம் எதுக்காக.. 

இதோ இதுக்காக தானே..” என குழந்தையை கைகாட்டி சொன்னவர்,

“நமக்கும் நேரம் சாதகமா அமைய.. ரெண்டாவது அலைன்னு.. கொரோனா மறுபடியும் வந்து.. அவனை இங்கே வரவே விடாம ஆக்கிடுச்சு..! 

அதனால, நீ கன்சீவ் ஆகிட்டேன்னு சொல்லாமலேயே புள்ளைய பெத்துக்க முடுஞ்சிருக்கு..” என்றிட,

“ஆமா.. டாக்டர் இவள செக் பண்ணி எல்லாம் ஓகேன்னு சொன்னதும்.. ப்ரசீஜரை ஆரம்பிக்க சொல்லிட்டு, 

அவனை பேசி டெல்லிக்கு வர வச்சு, நானும் அந்த பெருசுங்கள பாக்க போற மாதிரி போய்.. அவனோட ஒரு வாரம் இருந்துட்டு, அவன அப்படியே பேக் பண்ணி அனுப்பிட்டு வந்து இவள வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாலும்,

இந்த புள்ள சரியா உண்டாகனும்.. அது நிலைக்கனுமுன்னு ஆயிரமிருக்கே..! அவசரப்பட்டு சொல்ல முடியுமா..?

அஞ்சு மாசம் ஆகி சொல்லாமுன்னு நினைச்சேன். அப்போ ரெண்டாவது அலை தீவிரமா இருந்ததுல, 

கர்ப்பினிங்க தானே அதிகமா போய் சேர வாய்ப்பு இருந்துச்சு..! 

அப்படி எதாவது ஆகிட்டா.. போட்ட திட்டம் வேஸ்ட் தானே..? அதனால தான் மொத்தமா மறச்சேன். 

அந்த லூசு போன்ல.. வீடியோ கால் பண்ணா கூட, நா அட்டன் பண்ணாம.. இத்தனை மாசம் கடத்துனது எதுக்கு..? 

இப்போ, உங்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கன்னு சொன்னா போதும்.. 

அதோட லேசா கண்ணை கசக்கிட்டு, 

நா கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சா.. உங்களால என்னை விட்டு இருக்க முடியாது. என்னை ரொம்ப தேடுவீங்க. 

எவ்வளவு ஆசை.. உங்களுக்கு பிறக்க போற பிள்ளை மேலேன்னு எனக்கு நல்லா தெரியுமே..? 

அத்தை மாமாகிட்ட சொன்னா.. அவங்க ஆர்வத்துல உங்ககிட்ட சொல்லிட்டா என்ன பண்ணறது..?

இந்த கொரோனாவால நீங்க இங்கே வரவும் முடியாது. 

அங்கே இருந்து நீங்க தவிக்கறதை என்னால பார்க்க முடியாதுன்னு உருக்கமா பேசினா போதும்.. அது அப்படியே ப்ளாட் ஆகிடும்..” என சொல்லி விகாரமான சிரிப்பை சிந்த, 

‘அடிப்பாவி.. அமைதியாய் தன்னிடம் பேசி.. நடந்த.. அந்த பெண்ணிடமா இத்தனை கயமை..! 

கிட்டத்தட்ட ஒருவருடம் உடன் இருந்த என்னால் கொஞ்சமும் உணர முடியவில்லையே இவர்களின் இந்த அழுக்கு குணத்தை..!’ எனத் தோன்றியது இனியாளுக்கு. 

அவளின் எண்ணப்போக்கை மீண்டும் குழைத்தது அவர்களின் உரையாடல்.

“எனக்கென்னமோ.. நீ ஆரம்பத்துலையே உன் புருஷன்கிட்ட சொல்லியிருக்கலாம். 

இப்போ ஆரம்பத்துல எதுவும் பேசலைன்னாலும்.. போகப்போக இது ஒரு பேச்சா வரும். 

அதுக்கு நீ சொல்லியே இருந்தாலும், அவன் வந்திருக்க முடியாது தானே..? சமாளிச்சிருக்கலாம்..” என பெருமூச்சோடு கோமதி சொல்ல,

“லூசு மாதிரி அதையே பேசாதம்மா. 

அவன்கிட்ட நா ஆரம்பத்துல சொல்லியிருந்தா.. அவன் நேர்ல வரலைன்னாலும் போன்ல, வீடியோ கால்லையே என்னை டார்ச்சர் பண்ணியிருப்பான்.. அக்கறைங்கற பேர்ல.

அதோட, ஹாஸ்பிடல் செக்கப் வர்றப்போ டாக்டர்கிட்ட பேசறேன்னு வீடியோ கால் வந்தா.. அதுக்கு தனியா நாடகம் ஆடனும். 

ஸ்கேன் ரிப்போர்ட் அது.. இது.. எப்பா..!!! 

இதுல இன்னொரு விசயமும் இருக்கு. 

லாக்டவுன் க்ளியர் ஆக எவ்வளவு நாள் ஆகுமுன்னு அப்போ நமக்கு தெரியாது. 

மேபி, இவ்வளவு நாள் ஆகாம ஆரம்பத்துலையே லாக்டவுன் முடுஞ்சிருந்தா.. அந்த ஆளை இங்க வராம பிடிச்சு வைச்சிருக்க முடியுமுன்னு நினைக்கறே..? நோ ச்சான்ஸ்..

வேலையும்.. கொரேனாக்கு முன்னாடின்னா தான் ஆஃபீஸூக்கு போயே ஆகனும். 

இப்ப எல்லாமே.. வொர்க் ஃப்ரம் ஹோம் தானே..? 

அடுச்சு புடுச்சு இங்கேயே வந்து செட்டில் ஆகிடும் அது. 

அப்புறம் மொத்த ப்ளானும் கோ.. கையா.. தான்..” என்று இலகுவாக சொல்ல,

“எல்லாம் சரிடீ. உன் மாமனார் மாமியார் வந்தா கேட்டா எப்படி சமாளிக்கறதுடீ..?” என கேட்டவருக்கு, 

“என்னம்மா.. நம்ம தான் ஏற்கனவே திட்டம் போட்டு வச்சிருக்கோமே..! 

அது படி, சொல்ல வேண்டியது தான்..” என்றாள் அலட்சியமாக. 

“உன் மாமனார் ஆக்ஸிடென்ட்ல காலை உடைச்சுக்கிட்டதும் நல்லதா தான் போச்சு இல்ல..?” என்றதும், 

“அதே தான். ஆனா பாரு.. விசயம் சொன்னதும் நொண்டிக்கிட்டாச்சும் அதுங்க வந்து சேர்ந்திடும். 

அதுக்கு தான் சொல்றேன். உடனே பெட்டிய கட்டலாமுன்னு..‌” என தாயும் மகளும் பேசப்பேச, 

‘ஒரு அப்பாவி மனிதனையும்.. அவனின் குடும்பத்தையும்.. இவ்வளவு தூரம் ஏமாற்றி கொண்டிருப்பவர்களுக்கு.. நான் எம்மாத்திரம்..?’ என்ற எண்ணமே எழுந்தது அமிழ்தினியாளுக்கு.

அந்த எண்ணம் கொடுத்த வலியில், உடலில் உண்டான வலி கூட மறந்து போனது அவளுக்கு.

அந்த நேரம் ஒலித்தது அந்த பெண்ணின் மொபைல் போன். 

அதை எடுத்து பார்த்தவள், “பாரு.. மூக்குல வேர்த்த மாதிரி கூப்பிட்டுடுச்சு..” என சொன்னபடியே,

“அம்மா.. அந்த ஸ்கிரீனை இழுத்து விடு. 

இந்த பெட்ல நான் படுத்துக்கறேன். வீடியோ ஆன் பண்ணி கொடு..” என சொன்னவள், 

அவசரமாக அந்த மருத்துவமனை உடையோடு, அந்த அறையிலிருந்த மற்றொரு மெத்தையில் படுக்க கோமதியும் அவள் சொன்னதை செய்திருந்தார்.

எடுத்த உடனேயே..

“என்னங்க.. நம்ம புள்ளைய பாத்தீங்களா..?” என தளுதளுத்த குரலில் இவள் பேச ஆரம்பித்ததும்,

“ஏன்டா கண்ணம்மா.. என்கிட்ட மறச்சே..? எவ்வளவு கஷ்டமா போச்சு தெரியுமா..? 

இந்த மாதிரி நிலைமையில நீ இருக்க, நா பாட்டுக்கு வேலை அது.. இதுன்னு இருந்திருக்கேனே..? சாரி கண்ணம்மா..” என உருகினான் அவள் கணவன். 

“வேற என்னங்க பண்ணறது..? 

மாமாக்கு அடிபட்டிடுச்சுன்னு போன் வந்து.. நான் அதிர்ச்சியில மயங்கி விழ, அப்ப தான் கர்ப்பமா இருக்கறதே எனக்கு தெரியும். 

இவ்வளவு வருஷம் கழிச்சு உண்டான குழந்தை.. வந்ததுமே, தாத்தாக்கு இப்படின்னு உங்க சொந்தங்க யாரும் பேசிடக்கூடாதுன்னு தாங்க யார்கிட்டையும் சொல்லல. 

ஏற்கனவே, நம்ம கல்யாணமே இப்படி சொந்தங்க பேசி தான் அவசரமா நடந்துச்சு. 

இல்ல கொஞ்ச நாள் நம்ம லவ் லைஃப் என்ஜாய் பண்ணிட்டு.. கல்யாணம் பண்ணியிருக்கலாமுன்னு எவ்வளவு நாள் கவலை பட்டிருப்பீங்க..?

அது கூட பரவாயில்லை. ஆனா இது, குழந்தை விசயம். 

காலத்துக்கும் யாராவது நம்ம குழந்தைய எதாவது சொல்லிட்டே இருந்தா.. தாங்க முடியுமா நம்மாள..?” என கண்ணீர் சிந்த, துடித்து போனான் அவள் கணவன்.

“கண்ணம்மா அழதடா. எனக்கு புரியுது. நீ எவ்வளவு தூரம் குழந்தைக்காக ஏங்குனேன்னு எனக்கு தெரியாதா..?

ஆரம்பத்துல டாக்டர்கிட்ட போலமுன்னு நீயே தான் சொன்னே. 

ஆனா, முதல் நாள் நைட் முழுக்க குறை உன்கிட்ட இருக்குன்னா என்னைவிட்டு போயிடுவேன்னு அழுததை தாங்காம.. நான் தான் மறுத்தேன்.

இப்பவும், டாக்டர்கிட்ட போலாமுன்னு நீ சொன்னப்போ.. உன்கிட்ட குறை இருந்தாலும், ஸ்போட்டீவா எடுத்துக்கிட்டு போகனுமுன்னு உன்னை தேத்தி கூட்டிட்டு போக நான் பட்ட பாடு எனக்கு தானே.. தெரியும்..?” என அவன் உருக,

கோமதியோ நமுட்டுச்சிரிப்போடு இருக்க கண்ணால் அதட்டிவிட்டு,

“உண்மை தாங்க. நீங்க கொடுத்த அந்த தைரியம் தான்.. இப்போ நம்மள பேரண்ட்ஸ் ஆக்கியிருக்கு.

நா உங்கள எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா..? 

ஒவ்வொரு தடவ பேசும் போதும்.. வாய் வரை வரும் வார்த்தைய.. நீங்க இங்கே வரமுடியாதேன்னு நினைச்சே அடக்கிக்குவேன்.

ஏன்னா, நான் கர்ப்பமா இருக்கேன்னு தெரியும் போது.. கரெக்ட்டா கொரோனாவும் தீவிரமா இருந்துச்சே இங்கே. உங்களால எப்படி இங்கே வந்திருக்க முடியும்..? 

இந்தியா வரை வந்தாலும்.. கோரண்டைன் பீரியடுன்னு உங்களால என்னை பார்க்க முடியாது. இப்ப தான் அது சரியாகி இருக்கு.

மாமாக்கு அடிபட்டதுக்கே.. பார்க்க வரமுடியலன்னு தவிச்ச நீங்க, இந்த 

விசயமும் தெரிஞ்சு.. தவிக்கறத என்னால பார்க்க முடியுமா சொல்லுங்க..? 

அதுலையும் நானும் உங்களுக்காக ஏங்கறேன்னு சொன்னா.. தாங்குவீங்களா நீங்க..? 

அத்தை மாமாகிட்ட சொன்னா.. அவங்களால இதை மறைக்க முடியுமா சொல்லுங்க..? 

இதனால தான் அவங்களுக்கும் சொல்லலை..” என ஆரம்பித்து, 

அவளின் உருக்கமான நடிப்புக்கு, அந்த பக்கமிருந்த ஆண்மகனின் தவிப்பான குரலும், அவனின் அக்கறையான.. ஆசை பேச்சையும் கேட்டிருந்த இனியாளுக்கு அவனை நினைத்து நெஞ்சமெல்லாம் வலி.

அவளிடம் பேசி முடிக்கும் போது இறுதியாக, “அப்பா அம்மாக்கு விசயத்தை சொன்னதும் ஷாக்..! அதோட, ரொம்ப சந்தோஷமும் கூட.. 

எதனால நீ சொல்லலைன்னு ஃபீல் பண்ணாங்க. 

நீ சொன்ன ரீசனையெல்லாம் கேட்டா, அவங்க சரியாகிடுவாங்கன்னு நினைக்கிறேன். 

கோபப்பட்டாலும் நான் வந்து அவங்கள சமாளுச்சுக்கிறேன்.. சரியா..? 

எப்படியும் இன்னும் டூ ஆர் த்ரி ஹவர்ல அங்கே வந்திடுவாங்க. 

நானும் கிளம்பிட்டே இருக்கேன். கனைக்ட்டிங் ப்ளைட் தான் இருக்குன்னு சொன்னாங்க. 

அதை பார்த்து.. முடுஞ்ச வரை சீக்கிரம் வந்திடுறேன் கண்ணம்மா.. டேக் கேர். 

பையன பத்திரமா பார்த்துக்கோ. ஒரு தடவை அவனை மறுபடியும் காட்டேன்..” என தந்தைக்கே உரிய ஆசையோடு கேட்டவனுக்கு குழந்தையை காட்டிவிட்டு காலை கட் செய்தவள்,

“நான் தான் சொன்னேனே..! அதுங்க தகவல் தெரிஞ்சா உடனே கிளம்பிடுமுன்னு. 

முதல்ல போய் அந்த டாக்டரை வரச்சொல்லு..” என்றாள் எரிச்சலோடு.

கோமதியும் அதை செய்ய, வந்த மருத்துவரோ, “ஒரு நாளாவது அப்ஜர்வேஷன்ல இருக்கறது தான் குழந்தைக்கு நல்லது. 

உனக்கு என்ன.. இவ இருக்கற இடத்துல நீ இருக்க கூடாது.. நீ தான் புள்ள பெத்த மாதிரி தெரியனும்.. அவ்வளவு தானே..? 

இந்த ஹாஸ்பிடல்ல வேற ரூமா இல்ல..? நீ அதுல இரு. 

உன் பேமிலி மெம்பர்ஸ் வந்தா.. நீ டிஸ்ச்சார்ஜ் ஆகறவரை, அவங்கள சமாளிக்க.. இந்த நர்ஸ் ஹெல்ப் பண்ணுவாங்க..” என அவரும் இவங்களுக்கு உடந்தையாய் செயல்பட, 

அடுத்த சில நிமிடத்தில், அந்த அறையிலிருந்து குழந்தையோடு வெளியேறினர் அந்த தாயும் மகளும்..‌

அதுவரை, முயன்று.. தன் சுயநினைவை இழந்து விடாமல் நிலை படுத்தியிருந்தவளால்.. குழந்தையின் பிரிவு.. இருந்த திடத்தை மறைய வைக்க ஆழ்ந்த மயக்கத்துக்குள் சென்றிருந்தாள் அமிழ்தினியாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!