Skip to content
Post Views: 8,409
மகளுக்கு நோகாமல்.. தான் அவளை முழுதாய் உணரும் வண்ணம் தன்னோடு இறுக்கிக்கொண்ட ரியான்,
“முகுந்தை பிரு.. ச்சை.. அவ தூக்கிட்டு போனா சரி.
Advertisement
டாக்டர்கிட்ட இருந்து வெண்பாவ எப்படி நீ மீட்டே.?” என்றான் இனியாளை நேர்கொண்டு பார்த்து.
Advertisement
அவனை நிமிர்ந்து ஒரு நொடி பார்த்தவள் பின் மெதுவாக,
Advertisement
“நான் மயக்கத்துல இருக்கேன்னு நினைச்சு அவங்க பேசினதை கேட்டுட்டேன்னு அவங்களுக்கு தெரியாதே..!
Advertisement
முகுந்தை அவங்க வேற ரூமுக்கு கூட்டிட்டு போனதும் நான் நிஜமா மயங்கிட்டேன்.
மயக்கம் தெளியும் போது ஒரு நர்ஸ் மட்டும் அங்கே இருந்தாங்க.
நானா கேட்கப்போய்.. எனக்கு எல்லா விசயமும் தெரியுமுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடக்கூடாதேன்னு அமைதியா இருந்தேன்.
அந்த நர்ஸ் டாக்டர்கிட்ட போய் சொல்லிட்டு, வரும் போது பாப்பாவோட வந்தாங்க.
“இந்தா உன் பொண்ணு.. ஃபீட் பண்ணு. உன்னை அட்மிட் பண்ணவங்க வெளியே இருக்காங்க.
கொரோனா பாதுகாப்புக்காக யாரையும் அலோவ் பண்ண மாட்டோம்..” ன்னு அவங்க புதுசா ஒரு கதை சொன்னாங்க.. எனக்கு உண்மை தெரியுமுன்னு தெரியாம.
திரும்ப நான் தூங்கும் நேரம் ட்யூட்டி மாத்த வந்த நர்ஸ்,
“என்னடீ.. இந்த பேஷன்ட் பெரிய விஐபி யா..?
கூடவே இருக்கனும்.. டாக்டரை தவிர வேற யாரையும் உள்ளே அலவ் பண்ண கூடாது..ன்னு அத்தனை கண்டீஷன் போட்டு ட்யூட்டிக்கு அனுப்பியிருக்காங்க..” ன்னு கேட்டதுக்கு,
அவங்க சொன்ன பதிலை வச்சு, ‘கோமதி. அடிக்கடி இல்லீகலா தன் பொண்ணுக்காக அந்த டாக்டரை யூஸ் பண்ணியிருக்காங்க.
இப்போ இந்த திட்டமும் அவங்க ஏற்பாடு தான்.
ஆனா, அதுல இவங்க கொடுக்கற பணம் அல்லாம.. தனியா தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமான்னு பார்க்கும் போது தான், ஸ்கேன்ல ஆண் பெண்ணுன்னு ரெட்டை பிள்ளை இருக்கறது தெரிஞ்சிருக்கு.
பொய்யான ரிப்போர்ட் ரெடி பண்ணி.. ‘சிங்கிள் பேபி..’ தான்னு கொடுத்திருக்காங்க.
எனக்கு பெயின் வந்து, நார்மல் ஆக வாய்ப்பிருந்தும், நான் கான்சியஸ்ல இருந்தா.. விசயம் வெளியே வர வாய்ப்பு இருக்கு.. ன்னு சீசெஷன் பண்ண எனக்கு அனஸ்தீஷியா கொடுத்திருக்காங்க.
ஆனா, நான் முழு மயக்கத்துக்கு போகல.
அதுமட்டுமில்லாம, பெண் குழந்தைங்களுக்கு மார்கெட்ல நல்ல டிமாண்டுங்கறதால.. பெண் குழந்தைய மறச்சு,
வாரிசுன்னா அவங்களும் ஹேப்பி ஆவாங்கன்னு பையன கொடுத்திட்டதா.. அவங்க பேச்சுல தெரிஞ்சுக்கிட்டேன்.
பையன விட பொண்ணு ரொம்ப அன்டர்வெயிட். குழந்தைக்கு என்னோட ஃபீட் இருந்தா தான் நல்லதுன்னு என்கிட்ட கொடுத்திருக்காங்க.
குழந்தை கொஞ்சம் தேறி வந்ததும்.. அவங்க அதை விற்க போறதா பேசினாங்க.
யாருக்காவது தத்து கொடுக்க போறாங்கன்னா கூட.. நான் என் மக குடும்பமா வாழட்டுமுன்னு மனசை தேத்திட்டு விட்டு கொடுத்திருப்பேனோ என்னவோ..?!
ஆனா, அவங்க பேசின விதமே.. காட்டி கொடுத்துடுச்சு.. அவங்க இல்லீகலா பொண்ணு பிஸ்னஸ் பண்ணறவங்களுக்கு என் மகளை கொடுக்க போறாங்கன்னு..
அப்புறமும் எப்படி நான் சும்மா இருக்க முடியும்..?
இப்போ என் மகள் என் கையில.. சமயம் பார்த்து அங்கிருந்து எங்கையாவது போயிடனுமின்னு முடிவு பண்ணிட்டேன்.
ஏற்கனவே காதல்ன்னு ஏமாற இருந்ததால.. காதல், கல்யாணம் இதுல எனக்கு ஆர்வம் போயிடுச்சு.
இந்த குழந்தைய எனக்கே எனக்குன்னு ஆண்டவன் கொடுத்திருக்கான்.
அவங்க பண்ண கெட்டதுலையும்.. எனக்கு கிடைச்ச பொக்கிஷம் இந்த குழந்தை.. ன்னு நினைச்சு தான், அவளோட தப்பிக்க ஏதுவான நேரத்தை பார்த்துட்டு இருந்தேன்.
அதுக்கான சந்தர்ப்பம் அடுத்த ரெண்டு நாள் முழுக்க எனக்கு கிடைக்கவே இல்லை.
யாராவது ஒருத்தங்க அங்கே என்கூடவே இருந்தாங்க.
மேபி கோமதியோ.. இல்ல அவ பொண்ணோ.. என்னை பார்க்க வந்து, உண்மை தெரிஞ்சிட கூடாதேன்னு காவல் இருந்தாங்க போல.
அடுத்த நாள் ஆரம்பிக்க எனக்கு பயம் வந்திடுச்சு.. ஏன்னா, தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் என் பொண்ணுக்கு ஆபத்து தானே..?
அதனால தப்பிக்க சமயம் பார்த்துட்டே இருந்தேன்.
நான் நல்லா தூங்கறேன்னு நினைச்சு நர்ஸ் போனதை எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்.
அன்னைக்கு என்னோட ட்ரஸ் மாத்தியிருந்ததால, நா எஸ்கேப் ஆக கொஞ்சம் ஈஸியா இருந்துச்சு.
மாஸ்க் போட்டு அவுட் பேசன்ட் இருக்கற பக்கமா நா போயிட்டதால, யாருக்கும் பெருசா வித்தியாசமா தெரியல போல.. வெளியேயும் வந்துட்டேன்.
ஆனா ஆப்ரேஷன் பண்ணதால அந்த வலியில என்னால ரொம்ப வேகமாவோ, தூரமாகவோ போக முடியல.
அவங்க யாரோட கண்ணுல பட்டாலும் ஆபத்துன்னு பயந்து போய்.. என்ன செய்யன்னு தெரியாம ரோட்டுல நின்னேன்.
கையில காசும் இல்ல. இப்படிபட்ட நிலையில தான் மறுபடியும் தனம்மாவையும், சம்யுக்தாவையும் நான் பார்த்தேன்..” என நன்றி உணர்வோடு தனத்தை ஏறிட,
“அமிழ்தினியாளை.. அவளோட சித்தப்பா வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து எங்களுக்கு தெரியும்.
என்னோட வீட்டுக்காரர் அந்த ஊர் கவர்மென்ட் ஆஃபீஸ்ல தான் க்ளர்க்கா வேலை பார்த்தார்.
இவங்க சித்தப்பா வீட்டுல இருந்து.. ஒரு நாலு வீடு தள்ளி தான் நாங்க இருந்த வீடும்.
சம்யுக்தா அவ அப்பாவோட ரொம்ப செல்லம். இனியாவும், சம்யுக்தாவும் ஒரே ஸ்கூல் தான் படுச்சாங்க.
தினமும் இவ அவங்க அப்பாவோட போகும் போது அவ்வளவு ஏக்கமா நின்னு பார்ப்பா.
நாங்க நிறைய முறை அதை பார்த்தாலும்.. நெருங்கி போய் பேச மாட்டோம். ஏன்னா இவங்க சித்தி வாய் அப்படி.
இனியா ஸ்கூல் முடுச்சு.. காலேஜ் போன சமயத்துல, அவரோட அண்ணங்க பூர்விக வீட்டை விற்கனுமுன்னு சொல்ல,
நாங்களும் வித்துட்டு வந்த காசுல அந்த ஊருக்கு வெளியே கொஞ்சம் இடத்தை மட்டும் வாங்கிட்டு, மிச்ச பணத்தை சம்யுக்தா பேர்ல டெப்பாசிட் பண்ணிட்டோம்.
அப்போ அங்கிருந்து வர வேண்டி இருக்க, இனியாவை நாங்க பார்க்கல.
ஒரு வருஷம் கழிச்சு.. அங்கே ஒரு பங்ஷனுக்கு போனப்ப தான்.. இனியா யாரோடவோ ஓடிப்போயிட்டான்னு அங்கே எல்லாம் பேசிட்டு இருந்தாங்க.
எனக்கு அவங்க குடும்பத்து மேல தான் கோபம்.
அந்த புள்ள முகத்துல தெரிஞ்ச அன்புக்கான ஏக்கம் தான்.. அவளை இப்படி ஒரு முடிவெடுக்க வச்சிருக்குமுன்னு நினைச்சிட்டு,
எங்கிருந்தாலும், இனியாவது.. அவ ஆசைப்பட்ட மாதிரியே ஒரு அன்பான வாழ்க்கை வாழட்டுமுன்னு நினைச்சிட்டு வந்துட்டேன்.
அடுத்து வந்த முதல் கொரோனால என் வீட்டுக்காரர் இறந்து போக.. மொத்தமா நாங்க உடைஞ்சு போயிட்டோம்.
அதுலையும் சம்யுக்தா ரொம்பவும் தவிச்சு போயிட்டா. அவளோட சிரிப்பு.. கலகலப்பு எல்லாம் போய்.. என் மகளை எப்படி மீட்கன்னு தெரியாம இருந்தேன்.
காலேஜ் சம்யுக்தா சேர்ந்தாலும்.. லாக்டவுன் பீரியட்ல ஆன் லைன் க்ளாஸ் தானே..?
அதனால அவ ஹாஸ்டல்ல இருந்து ஊருக்கு வந்திருந்தா.
என்னோட வீட்டுக்காரருக்கு கவர்மெண்ட் கொடுத்த செட்டில்மென்ட் பணத்தை பேங்க்ல போட அன்னைக்கு நாங்க வந்திருந்தோம்.
அப்ப தான், தடுமாறி எங்க மேல மோதின இனியாளை பார்த்தோம்.
கையில குழந்தையோட அவ இருந்த கோலம் எங்க மனசை உலுக்கிடுச்சு.
ஆட்டோ வச்சு, நாங்க இருந்த வீட்டுக்கு கூட்டி வந்து விசாரிச்சப்போ..
“நா நம்பி போனவங்க எல்லாம்.. என்னை ஏமாத்திட்டே இருக்காங்க. இனி, இந்த குழந்தை மட்டும் தான் எனக்கு எல்லாம்..” ன்னு சொல்லி அழுதா.
அவ சித்தப்பா.. இல்ல அப்பாகிட்ட போறையா..? ன்னு கேட்டதுக்கு,
‘உங்களுக்கு கஷ்டமா இருந்தா.. நான் வெளியே போயிடுறேன்.
அவங்ககிட்ட சொல்லாதீங்க. நா போனவ போனதாவே இருக்கட்டும்..’ன்னு சொல்லிட்டா.
பச்சை உடம்புக்காரிய அம்போன்னு விட மனசில்லாம.. கொஞ்சம் தேறி வரட்டும்.. அப்புறம் எதாவது பண்ணலாமுன்னு நினைச்சு தான் ஆரம்பத்துல எங்ககூட இருக்க வச்சோம்.
ஆனா, நாள் போகப்போக இந்த பிஞ்சோட சிரிப்பும்.. இனியாவோட குணமும் இவங்கள பிரிய விடல.
அதுமட்டுமில்லாம, சம்யுக்தா அவ அப்பா போனதுக்கு அப்புறம் இனியா வந்தது, வெண்பாவோட பேசறது.. ரொம்ப ஆறுதலா இருந்துச்சு.
நாங்க அவளுக்கு ஆறுதலா.. இல்லை இவளுக்கு நாங்களா..ன்னு தெரியாமலேயே எங்களை நாங்க தேத்திக்கிட்டோம்.
சம்யுக்தா கொஞ்சம் சரியானதும், பழைய படி அவளோட துள்ளலும், சிரிப்பும் அந்த வீட்டுக்கே மறுபடியும் ஒரு மகிழ்ச்சிய கொடுக்க,
என் மகள மீட்டு கொடுத்தவங்கள கை விட எங்களுக்கும் மனசில்ல.
அப்போ தான், இனியா வெளியே போகவே பயந்து.. தயங்கி இருக்கறத வச்சு கேட்டோம்.
ஆனா, அவ அப்ப எந்த உண்மையும் சொல்லல..” என்று தனம் குற்றம் சாட்டும் குரலில் தங்களின் பக்கத்தை சொல்லி முடிக்க,
“ஆரம்பத்துல உண்மைய மறைக்கிறோமேன்னு குற்ற உணர்வா இருந்துச்சு.
கொஞ்சம் சரியானதும்.. நானும் என் பொண்ணும் இவங்களுக்கு பாரமா இருக்க கூடாது.. விலகி போகனுமுன்னு தான் நான் நினைச்சேன்..
நானே தள்ளி நின்னாலும், வலிய பேசி அன்பா.. அனுசரனையா.. நடந்துக்கிட்டா.. சம்யூ.
இதுவரை நான் தேடி பாசத்தை எனக்கு கொட்டி கொடுத்தா.. அவ.
தனம்மா கண்டிப்போட அம்மாவ நடந்துக்கிட்டா.. சம்யுக்தா எனக்கு அம்மாவா.. தோழியா.. அன்பா அரவணைச்சுக்கிறது சில நேரம் அப்பாவா இருந்தா..
அவளை விட்டு பிரியனுமான்னு யோசிச்சாலும், கோமதி இருக்கற ஊர்ல இருக்க எனக்கு பயம்.
எங்கே அவ கண்ணுல நான் பட்டு.. வெண்பா விசயம் தெரிஞ்சிடுமோன்னு இருந்துச்சு.
அப்போ தான் காலேஜ் ஓப்பன் பண்ணாங்க.
என்னை ஏமாத்தினவன் மூலம் என் மகளுக்கு ஆபத்து.. இங்கிருந்து நான் போகனுமுன்னு தனம்மாகிட்ட சொல்ல,
அவங்க நான் ஏற்கனவே வெளியே போக பயந்ததை வச்சு.. நான் சொன்னதை நம்பி.. அந்த ஊரையே விட்டுட்டு இங்கே வந்துட்டாங்க.
சம்யுக்தாவும் ஹாஸ்டல் போகாம வீட்டுல இருந்து காலேஜ் போனா.
கொஞ்ச நாள்ல நாங்க அவங்களுக்கு பாரமுன்னு தோன.. தனம்மாகிட்ட பேசினப்போ தான்,
“நீ ஃபேஷன் டெக்னாலஜி தானே படுச்சே.. டெய்லரிங் முடி..” ன்னு சொல்ல, ஏற்கனவே நான் அதை முடுச்சிட்டேன்னு சொன்னதும்,
அவங்க வீட்டுக்காரர் பணத்தை பேங்க்ல இருந்து எடுத்து, இப்போ நா வச்சிருக்க பொட்டிக்கை வச்சு கொடுத்தாங்க.
என்னை முழுமனசா அவங்க பொண்ணாவே பார்க்க ஆரம்பிச்சு.. இப்போ நா அவங்க பொண்ணா மட்டுமே இருக்க.. முழு காரணமும் தனம்மாவும் சம்யுக்தாவும் தான்.
அவங்க என் வாழ்க்கையில வராம போயிருந்தா.. நானும் என் மகளும் அநாதையா இருந்திருப்போம்.
அப்படி பார்த்துகிறவங்ககிட்ட உண்மைய மறைக்கிறோமேன்னு ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வோட தான் இதுவரை இருந்தேன்.
ஆரம்பத்துல சொல்லாம.. இப்போ முடுஞ்சு போனதை சொல்லி, அதனால என்ன பிரயோஜனமுன்னு விட்டுட்டேன்.
ஆனாலும் நான் பண்ணது தப்பு தான். என்னை மன்னிச்சிடுங்க தனம்மா..” என மடங்கி அமர்ந்து அழ,
அவசரமாய் அவளை தாங்கிக்கொண்ட சம்யுக்தா,
“அக்கா.. என்ன இது..! எப்பவும் நீ எனக்கு சொந்த அக்கா தான்.. என்ன பேச்சு அநாதை அது.. இதுன்னு..
அதோட மன்னிப்புன்னு.. உன்னோட நிலைமை எங்களுக்கு புரியாதா..?” என லேசான அதட்டலோடு,
அவளை அணைத்துக்கொண்ட சம்யுக்தாவின் மீதும்.. தனத்தின் மீதும்.. மதிப்பு கூடி போனது அங்கிருந்தவர்களுக்கு.
அதுவரை விளையாட்டு பிள்ளை.. எதையும் சட்டென செய்துவிட்டு அதை சரி செய்ய வழி தேடும் அசடு.. என நினைத்திருந்த வெங்கடேஷூக்கு இப்போது சமாதானம் செய்யும் இந்த சம்யுக்தா வேறு மாதிரி தெரிந்தாள்.
இது வரை, ‘நட்பா..? இல்லை நட்புக்கு மேலா..?’ என்ற குழப்பம் நீங்க,
‘இனி அவள் தான்..’ என்ற முடிவோடு அவளை ஆசையாய் அரவணைத்திருந்தான் தன் கண் பார்வையாலேயே…
error: Content is protected !!