“எ… என்.. என்ன சொன்னீங்க..?” என வார்த்தை தந்தி அடித்தது இனியாளுக்கு.
“உன் காதுல என்ன விழுந்துச்சோ அதை தான் சொன்னேன்.
Advertisement
என்னை கல்யாணம் பண்ணிக்கிறையா..?” என்றான் மீண்டும் அழுத்தமாக.
Advertisement
அதற்கு மறுப்பாக ஏதோ பேச வந்தவளை தடுத்தவன், “உன்னோட தகுதின்னு நீ சொன்ன எதுவுமே என் மனசுல இல்லை.
Advertisement
நடந்த எதுவுமே என் நாலேஜ்க்கு வராம நடந்தாலும்.. நடந்ததுல என்னோட பங்கும் உண்டு.
Advertisement
அதுலையும் என்னோட குழந்தை மீதான ஆசைக்காக தான் இதெல்லாம் அப்படிங்கும் போது பெரும்பாலான பங்கு எனக்கு தான்.
அந்த பாவம் தான் என்னோட அப்பா அம்மாவை நான் இழந்ததற்கு காரணமுன்னு நான் நினைக்கிறேன்.
இதனால நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கை சீராகறதோட நான் என் மகளோடவும்.. நீ உன் மகனோடவும் ஒரே வீட்டில் கடைசிவரை வாழ முடியும். பிள்ளைங்க ஏக்கமும் தீரும்..” என்று சொல்ல,
அவனின் அந்த விழியில் அதில் இருந்த உறுதியில் சம்மதிக்க மனம் உந்திய போதும்,
‘அவர் சொல்வது போல இருந்தால் பிள்ளையை பிரிய வேண்டாம் தான்.. ஆனால், அவனிடம் தான் எதிர்பார்க்கும் நேசம் கிட்டுமா..? என்ற எண்ணத்தால்,
“கல்யாண வாழ்க்கை விளையாட்டில்லை.
பிள்ளைங்களுக்காக மட்டும் கடைசி வரை நம்ம வாழ முடியாது.
நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணா.. உங்க தாம்பத்திய வாழ்க்கையும் நல்லபடியா இருக்கும்..” என்று அவள் சொல்ல,
“ஏன்.. உன்னோட அப்படி வாழ முடியாதா..? இல்ல வாழ கூடாதா..?” என்றான் அவனும் அவளோடு இசைந்து.
“அது.. நான்.. எனக்கு..” என அவள் தடுமாற,
“என்ன உனக்கு..? ஹெல்த் வைஸ் நான் பிட் தான்.
அங்கே எதாவது சிக்கலா..? வேனுமுன்னா டெஸ்ட் பண்ணி பார்த்துடலேமே..!” என்றான் கண்களில் குறும்பு மிளிர,
“ச்சே.. ச்சே.. இதுக்கு எல்லாம் டாக்டரை பார்க்க போவாங்களா..?” என ஆரம்பித்தவள்,
பேச்சு போகும் பாதை புரிந்து.. அவனை பார்க்க,
அதில் தெரிந்த விசமத்தில்.. அவன் சொன்னதன் பொருள் புரிய சட்டென பேச்சை நிறுத்தி திருதிருவென விழிக்க,
அவளின் பாவனையில் எழுந்த புன்னகையை இதழை கடித்து அடக்கியவன்,
“லிசன்.. நம்ம லைஃப் அடுத்த கட்டத்துக்கு போறது.. அது நம்ம அப்புறமா டிசைட் பண்ணிக்கலாம்.
இப்போ, குழந்தைங்களுக்காக தான் இந்த கல்யாணம்.
ஆனா அது நிரந்தரம் இல்ல. நிச்சயமா உன் எதிர்பார்ப்பு எல்லாத்தையும் என்னால கொடுக்க முடியுமுங்கற நம்பிக்கையோட கேட்கறேன்.. உனக்கு ஓகே வா..?” என்றிட,
‘மறுத்து என்ன பேசுவது..?’ என புரியாது விழித்தவள்,
‘வெண்பாவை விட்டு கொடுத்துவிட்டு.. தன்னால் இருக்க முடியுமா..?
முகுந்த், அவனின் தாய்க்கான ஏக்கம் தெரிந்தும்.. உதறி தள்ள முடியுமா..?’ என்ற குழப்பமும் பாடாய்படுத்த வேறு வழியின்றி..
‘சரி..’ என தலையசைத்தாள் அமிழ்தினியாள்.
அவளின் சம்மதம் அதுவரை தன் இதயத்தை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒன்றை இல்லாமல் ஆக்க, முகம் மலர, “தேங்க்ஸ்..” என்றான் ஆத்மார்த்தமாய்.
புரியாமல் அவள், ‘ஏன்..?’ என விழியால் வினவ,
“எல்லாத்துக்கும்.. என் வாழ்க்கையில நீ வர்றேன்னு ஒத்துக்கிட்டதுக்கு..
அப்படி வரும் முன்னமே எனக்காக ரெண்டு பொக்கிஷங்களை பிள்ளைகளா கொடுத்ததுக்கு..” என்றான் உள்ளம் நிறைய.
அவனின் பேச்சில் அவளை முன்னிருத்தி விட்டு.. பிள்ளைகளை அடுத்து சொன்ன விதம்.. அவளுக்கு ஒருவித இதத்தை தந்தது.. என்பது தான் உண்மை.
ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது அதை தானே..!
பிள்ளையே.. என்றாலும் தனக்கு முன்னுரிமை வேண்டும் தன் துணையிடம் என்று தானே போராடுவார்கள்.
இனியாளும் அது போன்ற மனம் கொண்ட பெண் தானே..!
அவளின் அந்த இதம் அவளின் முகத்தையும் மலர வைக்க அவனை கண்டு லேசான புன்னகையை சிந்தினாள் முதல் முறையாக.
அதை ரசித்து பார்த்தவனுக்கு இன்னும் அவளுடன் நேரத்தை செலவிட தோன்றினாலும்.. கீழே தங்களுக்காக காத்திருக்கும் மற்றவர்களை மனதில் வைத்து,
“வா அம்மூ.. கீழே போலாம்..” என்றான் தன் கரத்தை அவளை நோக்கி நீட்டியவாரு.