கோவை, பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஈச்சனாரி விநாயகர் ஆலயம்.. அன்று அதிகாலையிலேயே கூட்ட நெரிசலில் மிதந்து கொண்டிருந்தது.
Advertisement
புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால், அன்று.. அங்கு நிறைய சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகி இருக்க,
எப்போதைய கூட்டத்தையும் விடவும் இன்று இன்னும் அதிகமாய் இருந்ததன் விளைவே அந்த நெரிசல்.
Advertisement
Advertisement
தங்களின் முறைக்காக காத்திருந்த ரியான் தன் ஒரு கையில் மகளை வைத்துக்கொண்டு,
மற்றொரு கரம் கொண்டு தன்னருகே முகுந்தை வைத்தபடி நின்றிருந்த அமிழ்தினியாளை அரவணைத்திருந்தான்.
Advertisement
இருவருக்கும் திருமணம்.. என்ற முடிவுக்கு வந்து இன்றோடு பதினைந்து தினங்கள் கடந்திருக்க, ஓரளவு இயல்பாக பேசும் அளவுக்கு வளர்ந்திருந்தது அவர்களின் உறவு.
அதற்கு காரணியாக அமைந்தது.. அவர்களின் பிள்ளைகள் என்றால் மிகையில்லை.
முகுந்துக்கு, ‘இனியாள் தான் அவனின் தாய்..’ என சொன்னதும்,
வெண்பாவை போல ஆர்ப்பாட்டம் செய்து அதை வெளிப்படுத்தாமல், இயல்பாய் அவளோடு ஒட்டிக்கொண்டு..
‘அவளை தாயாய் ஏற்றுக்கொண்டேன்..’ என செயலால் காட்டினான் அந்த குட்டிக்கண்ணன்.
ஆரஞ்சும் அல்லாது மஞ்சளும் அல்லாது இரண்டு கலந்த நிறத்தில் அரக்கு வர்ண முந்தானை கொண்ட சேலையும், அவள் கையாலேயே வேலைப்பாடுகள் செய்த ப்ளவுஸூம் அணிந்து.. மிக மிக எளிமையான அலங்காரத்தில்,
முதல் முறையாக தன் முன் புடவையில் நின்றிருந்தவளை ரசிக்க நினைத்தாலும் இருக்கும் இடமும்.. நேரமும்.. அதை செய்ய விடாமல் தடை போட்டுவிட்டதை எண்ண பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது ரியானால்.
அவளின் புடவை முந்தானை நிறத்தில் மகனுக்கு தன் கையாலேயே வடிவமைத்த குட்டி சேர்வானி அணிவித்து இருக்க இளவரசு தோரணையில் மிளிர்ந்தான் அவன்.
வெண்பாவோ.. இனியாளின் உடைக்கு ஏற்ப புடவை நிறத்தில் பட்டுப்பாவாடையும், அரக்கு நிறத்தில் மேல் சட்டையும் அணிந்து அழகு இளவரசியாய் இருந்தாள்.
ரியானை போலவே, முதல் முறையாக பட்டு வேட்டி சட்டை உடுத்தி தன்னருகே தன்னை அரவணைத்து நின்றிருந்தவனை நேரடியாக ரசித்து பார்க்க கூச்சம் தடுக்க, அவனின் அருகாமை தந்த இதத்தை அனுபவித்த படி நின்றிருந்தாள் இனியாள்.
ஒரு வழியாக அவர்கள் முறை வர ரியான், அமிழ்தினியாள் இருவரும் சந்நிதி முன்பாக நிறுத்தப்பட்டனர்.
அவர்களை சேர்ந்தவர்கள் அவர்களை சூழ சந்தீப்.. சம்யுக்தா.. இருவரும் குழந்தைகளை வாங்கிக்கொண்டனர்.
இறைவனின் அருளோடு சுற்றி இருந்த நல்உள்ளங்களின் ஆசியோடு.. தங்க தாலியை இனியாளின் கழுத்தில் சூட்டி.. தன் சரி பாதி ஆக்கிக்கொண்டான் ரியான்.
தாயின் கழுத்தில் போட்ட சங்கிலியை உற்று பார்த்துக்கொண்டிருந்த மகளை கண்டு லேசான புன்னகையை சிந்திய ரியான்,
தனது சட்டை பையிலிருந்து எடுத்த இரு சங்கிலியை வெண்பா, முகுந்த் இருவரின் கழுத்திலும் மாட்ட இரு குழந்தைகளுக்கும் ஏககுஷி.
அதே குஷியோடு தன்னிடம் தாவிய மகளை அள்ளிக்கொண்டான் அந்த தந்தை.
அதை கண்டதும் முகுந்த்.. தானும் இனியாளிடம் போக கை நீட்ட அவளும் அன்பாக அவனை தூக்கிக்கொண்டாள்.
“பெரிப்பா.. அப்பா போட்டு.. தேங்க்ஸ்..” என சந்தீப்பிடம் அதை தூக்கி காட்டி பெருமை பேசியவள், தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு நன்றி சொல்லவும் மறக்கவில்லை.
அதை பார்த்த முகுந்த், தானும் இனியாளின் கரத்திலிருந்தபடியே எம்பி அவன் கழுத்தோடு கையிட்டு இழுத்தவன்,
“ஐ லவ் யூ ப்பா..” என்று அவனின் இன்னொரு கன்னத்தில் முத்தமிட ரியானுக்கு உலகையே வென்ற நிறைவு.
முகுந்த் இனியாளிடமிருந்து எம்பியதால் ரியானுக்கு நெருக்கமாக வந்திருந்த இனியாளின் காதருகே குனிந்தவன்,
“நான் தந்த கிப்ட்க்கு என் பிள்ளைங்க சமத்தா ரிட்டன் கிப்ட் கொடுத்துட்டாங்க..!