Skip to content
Post Views: 7,552
பகுதி 30
சம்யுக்தா இனியாளிடம் சொன்னது போல அல்லாமல், வொர்க் ஃப்ரம் ஹோம் இப்போதைய டிஎல்லான வெங்கடேஷிடமிருந்து வாங்கியிருக்க அங்கிருந்தபடியே அவள் வேலையை பார்க்க தொடங்கினாள்.
Advertisement
அவ்வப்போது கிடைக்கும் இடைவெளியில்.. குழந்தையோடு குழந்தையாய் சேர்ந்து ஆட்டம் போட,
அன்றைய பொழுது கலகலப்பாய் கழிய மாலை அவர்கள் வீட்டிற்கு வந்தார் தனம்.
Advertisement
Advertisement
“தம்பி.. நாளைக்கு மறுவீட்டு விருந்துக்கு இனியாளை கூட்டிட்டு குழந்தைங்களோட வரனும்..” என வந்தவர் முறையாக அழைப்பு விடுக்க,
இனியாளுக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்து போனது தனத்தின் செயலில்.
Advertisement
பெறாவிட்டாலும் தன் மகளாய் நினைத்து அவர் செய்யும் இப்படியான சில விசயங்கள் தானே.. அவளை இத்தனை நாட்கள் உயிர்ப்போடு வாழ வைத்திருக்கிறது.
அதில் நன்றியோடு அவரையே கண்கலங்க பார்த்திருந்தவளை கண்டு கண்டிப்போடு பார்த்த தனம்,
“உண்மைய மறச்சு இத்தனை நாளா பொய் சொல்லி.. என்னை ஏமாத்தினவளுக்கு செய்யக்கூடாது தான்.. என்ன பண்ணறது அம்மாவா போயிட்டேனே..!
தப்பு பண்ணிட்டாலும்.. மன்னிச்சு ஏத்துக்க சொல்லுதே இந்த மனசு..” என,
‘நான் உன் தாய் தான். நீ எப்படி நினைத்தாலும் சரி..’ என ஆணித்தரமாக அழுத்தமாய் சொல்லிவிட,
அவரை அணைத்துக் கொண்டவளுக்கு அத்தனை நெகிழ்ச்சி.
அவளின் அழுகையை உணர்ந்தவர், “இனியா.. இங்கே பாரு குழந்தைங்க என்னவோ.. ஏதோன்னு பார்க்கறாங்க. பயந்திடப்போறாங்க..” என அதட்ட, அந்த அதட்டல் கூட இனித்தது அவளுக்கு.
பின் ஓரளவு தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் அவரை விட்டு விலகி புன்னகைக்க, தாயாய் அவளின் தலையை கோதியவரிடமும் நெகிழ்வே.
‘அவரையும் இரவு உணவு உண்டுவிட்டு தான் செல்ல வேண்டும்..’ என தம்பதிகளாய் சேர்ந்து கட்டாயப்படுத்த, வேறு வழியின்றி.. அங்கேயே உணவை முடித்துக்கொண்டு சம்யுக்தாவோடு இல்லம் திரும்பினார்.
நேற்று போல அல்லாமல் குழந்தைகள் இருவரும் இன்று விழிப்போடு இருக்க, அவர்களை தூங்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது பெரியவர்கள் இருவருக்கும்.
முகுந்தும், வெண்பாவோடு சேர்ந்து கொண்டு இயல்பான குழந்தை தனத்தை காட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சி ரியானுக்கு.
அதனாலேயே தன் மகளை கொஞ்சி தீர்க்க.. பொறாமை கொள்ளாமல் தாயோடு இணைந்து அதை ரசித்தான் இளையவன்.
வெண்பா பாடலை ஒலிக்க விடச்சொல்லி அவளுக்கு தெரிந்த விதத்தில் கை, கால்களை அசைக்க,
‘உலகின் மிகச்சிறந்த நடனம் இது தான்..’ என்பது போல ரசித்து கொண்டிருந்தான் அவள் தந்தை.
இடையில் அவள் ரியானையும் இழுத்து ஆடச்சொல்ல, பிறப்பும்.. வளர்ப்பும்.. வடநாட்டில் கொண்டவனுக்கு ஆட்டத்திற்கு குறை இருக்குமா என்ன..?!
பாடலுக்கு ஏற்ற நளினத்தோடு ஆடியவனை வாயை பிளந்து, விழி விரித்து ஆச்சர்யத்தோடு ரசித்தவளை,
பிள்ளைகள் அறியாமல் கண்ணடித்து இதழை குவித்து முத்தத்தை பறக்க விட, அதைவிட அதிர்வு.. அவள் விழியில்..
“கேடி..” என்றன அவளின் இதழ்கள் ரசனையாய்.
அதையும் கண்டு கொண்டவன், அதற்கும் பதிலடியை ஆடிக்கொண்டே பிள்ளைகள் அறியாமல் காட்ட,
‘இவர சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் போலவே..!’ என்ற எண்ணம் இன்பமாய் இனியாவினுள்..
ஒரு கட்டத்தில் அவர்களையும் இழுத்து ஆட விட அந்த படுக்கை அறையே.. ஆட்டம் பட்டமென கலைகட்டியது.
பொறுத்து பார்த்த இனியாள், “விட்டா.. விடிய விடிய இப்படியே நீங்க டைம் பாஸ் பண்ணுவீங்க.
காலைல தனம்மா வீட்டுக்கு போகனுமா இல்லையா..?
முதல்ல லைட் ஆஃப் பண்ணுங்க..” என்று அதட்டல் போட்ட பின்னரே அந்த ஆர்ப்பாட்டம் ஒருவழியாக அடங்கியது.
மனதில் எழுந்த அளவற்ற மகிழ்வோடு அந்த குடும்பம் நித்திரையை சுகமாய் தழுவிக்கொள்ள,
அடுத்த நாளும் எந்த தடங்கலும் இன்றி இனிதாய் புலர்ந்தது.
குழந்தைகள் எழுவதற்கு முன் எல்லை மீறா சின்ன சின்ன சேட்டைகள், சில்மிஷங்களோடு பெரியவர்கள் தயாராகிட,
பிள்ளைகள் எழுந்ததும் கிளப்பிக்கொண்டு.. தனத்தின் வீட்டிற்கு வந்துவிட்டனர் காலை உணவிற்கே.
இனியாள் வந்ததும் தனத்திற்கு உதவ செல்ல, சம்யுக்தா அன்றும் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்ததால் பிள்ளைகளின் பொறுப்பு ரியான் வசமானது.
சிறு கூடாகினும்.. அதில் இருந்த ஒரு நிறைவு ரியானை ஈர்த்தது என்றே சொல்லலாம்.
அவனின் ஆசையும் அதானே..!!
மாப்பிள்ளை விருந்து முடிந்து, மதியம் பிள்ளைகள் இருவரும் தூங்கிய பின்.. இனியாளின் யோசனை படிந்த முகத்தை பார்த்த ரியான் என்னவென விசாரிக்க,
“இன்னும் டூ வீக்ஸ்ல தீபாவளி வருது.
நம்ம மேரேஜ் அது இதுன்னு ஏற்கனவே டெலிவரி கொடுக்க வேண்டிய துணிகளோட, என்னோட ரெகுலர் கஸ்டமர்ஸ் துணியும் ஸ்டிச் பண்ணி கொடுக்கனும்.
அதான் பொட்டிக் போறத பத்தி அம்மாகிட்ட பேசினேன்.
அவங்க இனி அதை செய்யாதேங்கற மாதிரி சொல்றாங்க..” என சொன்னவளுக்குள் ஓடும் எண்ணம் உணர்ந்தவனாய்,
“இதுவரை என்னை உன் பொட்டிக் கூட்டிட்டு போய் காட்டலையே..!
இப்ப குழந்தைங்க தூங்கறாங்க.. நம்ம போலாமா..?” என்றிட,
ஆர்வமாக விழிகள் பிரிகாசிக்க, “போலமே..” என்றாள் இனியாள்.
தனத்திடம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, தம்பதிகள் இருவரும் அடுத்த பதினைந்தாவது நிமிடம் அந்த பொட்டிக் உள்ளே இருந்தனர்.
அங்கிருந்ததில் இனியாளின் கை வண்ணம்.. என காட்டப்பட்டதையும், அவளின் ஸ்கெட்ச் நோட்டையும் கண்டவனுக்கு அவளின் திறமை நன்றாக புரிந்தது.
“வாவ்.. சூப்பர் அம்மூ.. ஏற்கனவே நம்ம மேரேஜ்ல உன் கை வண்ணத்தை பார்த்திருந்தாலும், இது இன்னும் நல்லா இருக்கு.
என்ன ஆனாலும் சரி.. உன் திறமையை வீணாக்கிடாதே..” என மனமார பாராட்டியவன்,
அவள் அருகே வந்து அவளின் தோளில் கையிட்டு, “அதுக்காக நீ ஸ்ட்ரைன் பண்ணிக்கனுமின்னு அவசியமில்லை.
நீ பேட்டர்ன் தயார் பண்ணறதோட நிறுத்திட்டு.. ஆள் போட்டு செய்..” என்றதும்,
அவள் அவனின் முகத்தை பார்த்து தயங்க,
‘என்னாச்சு..?’ என்றான் அவன், வாய் வார்த்தையாய் இன்றி புருவமுயர்த்தி.
“இல்லங்க.. இந்த ஒரு மெஷின்.. கடைக்கு வேணுங்கற திங்க்ஸ்.. இந்த இடத்துக்கான அட்வான்ஸ்.. எல்லாமே தனம்மா கொடுத்தது.
இத்தனை நாள்ல அதை திரும்ப அவங்களுக்கு கொடுக்கன்னு எடுத்து வச்சாலும் பெருசா என்னால சேர்க்க முடியல.
காரணம் மெட்டீரியல்ஸ் அண்ட் மத்த ஐட்டம்ஸ் வாங்கி இன்வஸ்ட் பண்ணியிருக்கேன்.
இப்ப தான் லாபம் பார்க்க ஆரம்பிச்சேன். அதுல சேர்த்தது வெண்பா ஸ்கூல் அட்மிஷனுக்கு சரியா போச்சு.
இப்படி திடீர்னு நம்ம கல்யாணம் ஆகுமுன்னு எதிர்பார்க்கல.
அவங்க பணத்தை கொடுக்கனும். அப்புறம் சம்யுக்தா கல்யாணம்..
இதெல்லாம் இருக்கும் போது கடைக்கு ஆள் போட்டா அவங்க சம்பளம்..” என அவள் சொல்லிக்கொண்டே போனவள்,
ரியானின் முகத்தில் தெரிந்த மாறுதலில் பேச்சை நிறுத்தியிருந்தாள்.
“என்ன.. அவ்வளவு தானா..? இன்னும் மிச்சமிருக்கா..?” என கேட்டவன்,
“லுக் அம்மு.. இன்னும் நீ தனம்மாவ சரியா புருஞ்சுக்கல.
நீ கொடுத்தா உடனே அதை அவங்க வாங்கிப்பாங்கன்னு நினைக்கிறையா..? நெவர்..” என்றவனின் எண்ணத்தை வழிமொழிந்தவளாக,
“கரெக்ட் தாங்க. ஆனா, அது அவங்க பணம். சம்யுக்தாவுக்கு வர்ற வரனுக்கு நிறைவா செய்யனுமுன்னா இந்த பணம் அவங்களுக்கு கண்டிப்பா தேவையா இருக்கும்.
அவங்க கொடுத்ததுக்காக மட்டும் இல்லாம, இன்னும் கூட நா அவளுக்கு செய்யனும்.
ஏன்னா.. அவங்க எனக்கு செஞ்ச உதவி சாதாரணமானது இல்லை..” என உணர்ச்சிவசப்பட்டு பேசியவளை விட்டு ஒரு அடி விலகி நின்று.. தனது இரு கையையும் மார்போடு கட்டிக்கொண்டு அவளை கூர்ந்து பார்த்த ரியான்,
“அப்போ.. நீ மட்டும் செய்யனும். நான் தனி அப்படி தானே..?” என்றான் கோபமாக.
“அய்யோ.. நான் அப்படி சொல்லலைங்க.
எனக்கு அவங்க செஞ்சதுக்கு நா எதாவது செய்ய வேணாமா..? அதை தான் சொன்னேன்.
இதுல நீங்க எங்கே வர்றீங்க..?!” என்றவளிடம்,
“அப்படி பார்த்தா.. என்னோட வருங்காலத்தை காப்பாத்தி.. என்கிட்ட சேர்த்தவங்க அவங்க.
அவங்களுக்கு நானும் செய்யனும் தானே..?” என்றான் கூர்மையாக.
‘ஆமாம் தானே.. அவன் கேட்பதும் சரி தானே..?’ என அவளின் மனசாட்சி உரைக்க,
வேகமாய், “ம்ம்..” என தலை அசைத்திருந்தாள் சிறுபிள்ளை போல.
அதில் கவரப்பட்டவன் அவளை மீண்டும் நெருங்கி அவளின் இரு தோளின் மீதும் தனது கரங்களை போட்டு,
அவளின் விழியை ஆழ்ந்து பார்த்தவாரு, “இங்க பாரு அம்மு.. இனி.. நீ, நான்னு கிடையாது.
நாமன்னு முதல்ல நீ நினைக்க பழகு.
தனம்மாக்கும், சம்யுக்தாவுக்கும் நான் ஏற்கனவே என்ன செய்யனுமுன்னு முடிவெடுத்துட்டேன்..” என்றிட,
அவனின் விழி அசைவுக்கு கட்டுப்பட்டவள் போல அவளின் தலை மீண்டும் சரியென அசைய,
மெல்லிய புன்னகையோடு, “இந்த ப்ளேஸ்ல இன்னும் ரெண்டு மிஷின் தான் போட முடியும். ஏம் ஐ கரெக்ட்..?” என்றவனுக்கு,
‘ஆமாம்..’ என அவள் தலையசைவிலேயே பதிலளிக்க,
“வெல், சந்தீப்கிட்ட சொல்லி ரெண்டு மிஷினும், மூனு பேரையும் அனுப்ப சொல்றேன்.
அவங்கள வச்சு நீ வேலை வாங்கிட்டு பசங்கள பார்த்துக்கோ.. சரியா..?” என்றவன்,
அவள் தலை அசைவுக்கு காத்திருக்காமல்,
அவள் மேல் இட்ட கரத்தை அவளின் கழுத்தோடு சேர்த்து இன்னும் அவளை தனக்கு நெருக்கமாக்கி மெல்லிய குரலில்,
“இப்போ நான் பண்ணறதுக்கு ரிட்டன் பண்ணணுமுன்னு நீ நினைச்சா கேஸா வேண்டாம்..
எனக்கு எப்போ.. எப்படி வேணுமுன்னு கேட்கறேனோ.. அப்போ.. நீ மறுக்காம எனக்கு ஃபுல்லா செட்டில் பண்ணிடு.. டீல் ஓகே வா..?” என கண் சிமிட்டியவனின்,
‘வசூல் என்னவாக இருக்கும்..’ என்பது புரிய,
அழகாய் சிவந்தது இனியாளின் அழகு முகம்.
error: Content is protected !!