Skip to content
Post Views: 1,754
13(2)
டேய் மச்சான், “கிளம்பலையாடா?” சத்தமிட்டுக் கொண்டே குரு இளந்திரையன் வீட்டுக்குள் வந்தான். இளவேலன் அவனை பார்த்து, வாங்க மாப்பிள்ள உட்காருங்க..
Advertisement
மாமா, எங்க தீரனை?
அவன் வேலைய பார்க்க போயிட்டான்ல்ல?
Advertisement
Advertisement
இல்லையே! அவன் எங்குமே வரலை..
வரலையா? அவர் எழுந்தாள். உள்ளிருந்து சுந்தரம் எட்டிப் பார்த்து “சாப்பிடுங்க தம்பி” உணவுண்ண குருவை அழைத்தார்.
Advertisement
நோ அங்கிள், “சாப்பிட்டு தான் கிளம்பினேன். இவன் இன்னுமா கிளம்பிட்டு இருக்கான்?” குரு அவனறையை பார்த்தான்.
வைஷ்ணவி பாப்பாவுடன் வெளியே வந்தாள். அதே நேரம் வெளியே சத்தம் கேட்க, எல்லாரும் எட்டி பார்த்தனர்.
முன்னே வந்த ராதிகா இளவேலன் வீட்டை பார்க்கவும் அப்படியே நின்று விட்டார்.
“வாங்க” சண்முகம் அழைக்க, எல்லாரும் வெளியே பார்த்தனர்.
வைஷ்ணவி ராதிகாவை பார்த்து, பாப்பாவுடன் வெளியே வந்தாள். இளவேலன் நம்ப முடியாமல் ராதிகாவை பார்த்தார்.
மாமா, “அத்தை எப்படியோ வீட்டுக்கு வந்துட்டாங்க?” கண்ணடித்து இளவேலனை கேலி செய்தான் குரு.
உச்சுக் கொட்டியவாறு, “சும்மா இருடா. காரணமில்லாமல் வர மாட்டாளே!” சிந்தனையுடன் அவரும் வெளியே வந்தார்.
“வாங்க ஆன்ட்டி” ராதிகாவின் கையை புன்னகை முகமாக பிடித்து வீட்டிற்குள் அழைத்து வந்தாள் வைஷ்ணவி.
“வைசு ஒரு நிமிடம்” அவர் சொல்ல, வைஷ்ணவி அவர் கையை விட்டு அவரை ஆழ்ந்து பார்த்தார். ராதிகா நேராக உள்ளே சென்றார்.
“உரிமையோட கூப்பிடுறாங்க” என்ற சிந்தனையுடன் அவர் பின்னே வந்தாள் வைஷ்ணவி.
இளவேலனை பார்த்துக் கொண்டே “தீரனோட அறை எங்க இருக்கு?” குருவை பார்த்தார். அவன் கையை காட்டினான்.
“அவரோட அறைக்குள்ள யாரும் போகக் கூடாது. அவருக்கு பிடிக்காது” வைஷ்ணவி சொல்ல, குரு வாயை பிளந்து கொண்டு வைஷ்ணவியை பார்த்தான்.
“தீரனை பார்க்கணும்” ராதிகா சொல்ல, இளந்திரையன் மாடியிலிருந்து இறங்கி வந்தான். அவன் கட்டை பார்த்து குருவும் இளவேலனும் பதறி அவனிடம் ஓடினார்கள்.
தீரா, “என்ன கட்டு?” குரு கேட்க, “என்னடா பண்ணீட்டு வந்துருக்க?” இளவேலன் சத்தமிட்டார்.
எங்களால் தான் என்று ராதிகா சொல்ல, எல்லாரும் அவரை பார்த்தனர்.
சித்தி, “அது உங்களால இல்லை. நான் நம்ம ஊரு காவல்காரன். உங்க வீட்டுக்கு காவலாக இருப்பதும் என் வேலை” இளவேலனை பார்த்துக் கொண்டே, “நான் அங்கே இல்லைன்னா நீங்க இப்ப இருந்திருக்க மாட்டீங்க” என்றான்.
“அதான் வேண்டாம்ன்னு சொல்ல வந்தேன்” ராதிகா சொல்ல, அது என்னோட கடமை சித்தி.
தீரா, “என்ன பேசுறீங்க? எனக்கு புரியல” இளவேலன் ராதிகாவை பார்த்தார்.
சித்தப்பூ, “நீ அமைதியா இரு” என்ற இளந்திரையன்..
“இதுக்கு தான் நாங்க வந்த அன்றே நம்ம வீட்டுக்கு உங்களை அழைத்தேன் சித்தி. இனியும் உங்களுக்கு ஆபத்து இருக்கு. எல்லா நேரமும் சத்யாவோ நானோ வேறு யாருமோ உங்களை பாதுகாக்க முடியாது. அதனால நம்ம வீட்டுக்கு வந்துருங்க” ராதிகாவை அழைத்தான் இளந்திரையன்.
“யாருடா மச்சான்?” குரு சீரியசாக முகத்தை வைத்து கேட்க, இளந்திரையனின் கண்ணசைவில் குருவிற்கு “அரசன் வீட்டு ஆட்கள் தான்” என்று புரிந்து விட்டது.
“இருடா. நான் வாரேன்” குரு சினமுடன் நகர, குரு நில்லு..அவசரம் முட்டாள்தனத்திற்கான முதல் அறிகுறி.
என்னடா நடக்குது? இளவேலன் சினமுடன் கத்தினார்.
“இவங்கள கொல்ல ஆள் வீட்டுக்கே போயிருக்காங்க” குரு சொல்ல, “கொல்லவா யாரு?” இளவேலன் கேட்டார்.
சித்தப்பூ, இந்த விசயத்துல்ல நீ தலையிடாத. இது எனக்கான பழைய கணக்கு. நானே முடிச்சுக்கிறேன்.
சுந்தரம் இளவேலன் முன் வந்து, ஐய்யா..பேரரசன் அய்யா பொன்னரசனையும், அவ்வீட்டின் மூத்த பேரன் அகிலரசனையும் உங்க பையன் கைது செய்துட்டார். இன்று கோர்ட்டுக்கு போகப் போறாங்க..
இளவேலன் சிந்தனையுடன், இன்றே கோர்ட்டுல்ல பிரடியூஸ் பண்ணப் போறானா? நேற்று…
நேற்று அவன் வீட்டுக்கே வரவில்லை. இப்பொழுது வரை வரலை ராதிகா கூறினார்.
உங்களுக்கு பள்ளி இருக்குல்ல? குரு கேட்டான்.
நான் தீரனை பார்க்க வந்தேன்..
எனக்கு பெரிய காயமெல்லாம் இல்லை. நான் நல்லா இருக்கேன். நீங்க பள்ளிக்கு போங்க. நீங்க வந்ததிலிருந்து உங்களுக்கு நிறைய பிரச்சனை வந்துருச்சு சித்தி. இனி உங்களை யாரும் ஏதும் பேசக் கூடாது..
தீரா, இனி எங்களுக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம்.
ராது, “என்ன பேசுற? அப்படியே எப்படி விடுறது? நேற்று நாம பேசினோம்ல்ல?” இளவேலன் கேட்டார்.
ம்ம்..ஆனால் இப்ப எதுவும் முடியாது. முதல்ல பிரச்சனை எல்லாம் முடியட்டும்.
“சித்தி” இளந்திரையன் சினமுடன் அழைத்தான்.
சாரி தீரா, “நான் கிளம்புறேன்” அவர் திரும்ப, “ஒரு நிமிசம் நில்லுங்க” குட்டிம்மா உங்க அலைபேசியில தான் கொஞ்ச நேரம் முன் அழைத்தாள். நீங்க பள்ளிக்கு இன்னும் போகலைன்னா குட்டிம்மாவும் மாறனும் உங்க வீட்டுக்கு வந்தாங்களா? கேட்டான்.
இளவேலனுக்கு நன்றாக புரிந்து விட்டது. ராதிகாவின் வார்த்தை மாறுவது மாறனால் என்று..
இல்ல, “நான் கடைக்கு செல்லும் போது சுப்ரியா என்னை பார்த்து சைக்கிளில் வந்து பேசினாள். அப்பொழுது தான் என்னிடமிருந்து அலைபேசியை வாங்கி பேசினாள். அப்பொழுது தான் உனக்கு அடிபட்டதே தெரிந்தது. அதான் பார்க்க வந்தேன்” ராதிகா கூற, தீரன் ராதிகாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவரின் பாரா முகத்துடனான பேச்சில் அவர் பொய் கூறுவதை கண்டு கொண்டான் இளந்திரையன்.
நீங்க கிளம்புங்க. பள்ளிக்கு நேரமாகுது. குரு அவங்கள விட்டு வா..
“நானே பார்த்துக்கிறேன்” ராதிகா இளவேலனை பார்த்தார்.
“குருவோட போ” அவர் சொல்ல, ராதிகா ஏதும் பேசாமல் முன் செல்ல குரு அவர் பின்னே சென்றான்.
தீரா, யாரவன்? இளவேலன் கேட்க, “சித்தப்பூ நீ தலையிடாத. நீ சொல்லு? நேற்று சத்யா ஏதும் சொன்னானா? என்ன பேசுனீங்க?” இளந்திரையன் கேட்டுக் கொண்டே அமர்ந்தான்.
இளவேலன் நடந்ததை கூற, சித்தப்பூ இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல்ல?
இல்ல தீரா, அவங்க எந்த பிரச்சனையுமில்லாமல் நம்ம வீட்டுக்குள்ள வரணும்.
நடக்காது சித்தப்பூ. நான் முடிவெடுத்துட்டேன். அவங்க நாளைக்குள் வரணும்.
வைஷ்ணவி இருவரையும் பார்த்துக் கொண்டே படுக்கை விரிப்பை ஹாலில் விரித்து நிகிதாவை படுக்கப் போட்டாள்.
அம்மாடி, இங்க போடுற பிள்ளைய?
அங்கிள், எவ்வளவு நேரம் அறைக்குள்ளவே இருப்பா. விளையாடட்டும்..என்று அவளும் பாப்பா அருகே அமர்ந்தாள்.
சாப்பிடலையாம்மா?
“அதுவா அங்கிள்…நான் விரதம்” அவள் இளந்திரையனை பார்க்க, அவன் வைஷ்ணவியை கூர்ந்து பார்த்தான். அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
விரதமா? இருக்கட்டும்…நல்லது தான?
பிள்ள உடம்பு கெட்டுப் போயிரும்..
“ஆமா, அந்த புள்ள உடம்பு கெட்டுப் போகும். எங்க உடம்பெல்லாம் நல்லா இருக்கும் பாரு” இளந்திரையன் பேசுவதை ஆச்சர்யமாக இளவேலன் பார்த்தார்.
“விரதம் இருக்க வேண்டியது கடவுளுக்காக. போட்டிக்காக இல்லை” வைஷ்ணவி கூற, “அதை யாரு சொல்றாங்க பாரு சித்தப்பூ” என்றான் இளந்திரையன்.
“தீரா” அவர் அழுத்தி அழைக்க, அவன் புன்னகையுடன் அவளை பார்க்க, அவள் முணங்கிக் கொண்டே எழுந்து அறைக்கு சென்றாள்.
அம்மாடி, பாப்பா?
அங்கிள், “நான் எங்கேயும் ஓடிப் போகலை. வருவேன்” கண்ணாடி முன் அமர்ந்து இளந்திரையனை திட்டிக் கொண்டிருந்தாள்.
சித்தப்பூ, மேடம் கோபமா இருக்காங்க..
எதுக்கு தீரா?
சித்தப்பூ, சிட்டுவுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். நேற்று சிறுவயது அத்தை பொண்ணை மறக்க முடியாதுன்னு சொன்னேன் என்று மாறனுடன் பேசியதை இளந்திரையன் சொல்ல, சுந்தரமும் அதை கேட்டு புன்னகைத்தார்.
“தம்பி, நீங்க கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் முன்னே தேவிம்மா தொடங்கிருவாங்கன்னு நினைக்கிறேன்” சொல்லி அவர் சிரிக்க, “சுந்தரம்” இளவேலனின் சத்தத்தில் உள்ளே சென்று விட்டார்.
என்ன சித்தப்பூ?
சுந்தரம் நம்ம வைசு கிட்ட நல்லா பேசுறாரு. பேச்சு வாக்கில் பாப்பாவிடம் ஏதும் சொல்லி, அவங்களுக்கு கோபம் வந்து கிளம்பீட்டாங்கன்னா? அவர் கேட்டார்.
அப்படியெல்லாம் சொல்ல மாட்டார் சித்தப்பூ..
சரி, நான் கிளம்புகிறேன். சராம்மா.. செழியா இப்ப வந்துருவான்ம்மா. தயாரா இரு..
அவளறையில் சத்தமேயில்லை.
“அவ எப்பையோ கிளம்பீட்டா” வைஷ்ணவி வெளியே வந்தாள்.
செழியா வரலையே!
சீனியர், அவளை வெளிய வர சொல்லி அழைச்சிட்டு போயிட்டார்..
“என்னிடம் சொல்லவில்லை” இளவேலன் கேட்டார்.
நீங்க தான அலைபேசியில் பேசிட்டு இருந்தீங்கல்ல? எப்படி தொந்தரவு செய்றதுன்னு பார்த்துட்டு என்னை சொல்ல சொல்லி போனா. நான் மறந்துட்டேன்..
சரிம்மா..
“இந்த வீட்ல எல்லாரும் இப்படி தானா? வேலையில மட்டும் தான் குறியா இருப்பீங்க போல?” ஓரக்கண்ணால் இளந்திரையனை பார்த்தாள்.
இல்லம்மா..
“அதான் தெரியுதே!” சினமுடன் வைஷ்ணவி பேச, இளவேலன் தீரன் அருகே வந்து, தீரா வைசும்மா பேசாமல் இருந்த போதே பரவாயில்லை. பேச்சு அதிகமா இருக்கு.
அங்கிள், கூப்பிட்டீங்களா?
“இல்லவே இல்லம்மா” அவர் இளந்திரையனிடம் கண்ணை காட்டி கிளம்பினார். இளந்திரையன் புன்னகையுடன் அவளறையையும் நிகிதாவையும் பார்த்தான்.
நிகிதா சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. அதனருகே வந்து அமர்ந்தான்.
பள்ளியில் வகுப்பிற்குள் நேராக வித்யாவை நோக்கி சென்ற சுப்ரியா அவளை தாண்டி கடைசி பெஞ்சில் அமர்ந்தாள்.
“சுபா” வித்யா அழைக்க, “நீயும் வா” அழைத்தாள் சுப்ரியா. எல்லாரும் அவளை வித்தியாசமாக பார்த்தனர். “நான் வரலை” வித்யா அவளிருக்கையிலே அமர்ந்து கொண்டாள்.
கலையரசன் அன்று வரவில்லை. அவன் நண்பர்களும் மாறனும் உள்ளே வந்தனர்.
மாறா, “அங்க பாரு” ஒருவன் கை காட்ட, சினமுடன் மாறன் சுப்ரியாவை முறைத்தான். காரணம் அது மகேஷ் பாண்டியின் இருக்கை.
மணியடிக்கும் முன் அவன் வந்து சுப்ரியாவை பார்த்து விட்டு எல்லாரையும் பார்த்தான். எல்லாரும் இவர்களை தான் பார்த்தனர். மாறனுக்கு கடுப்பாக இருந்தது.
சுப்ரியா, நீங்க உங்க இருக்கைக்கு போங்க..
“ஏன்? நான் உன் இருக்கையில் அமரக் கூடாதா?”
மகி புன்னகையுடன், “வித் ப்ளசர்” கையை விரித்தான். சுப்ரியா புன்னகைத்தாள். வித்யாவிற்கு தான் “திக்திக்” என இருந்தது.
“ஏய்! அவகிட்ட சொல்லுடி” ரம்யா வித்யாவை சுரண்டினாள்.
சுபா சொன்னால் கேட்க மாட்டாடி..
ஒருவன் எழுந்து, “கொலைகாரனோட மகன் அவன். அவனோட நாம பேசக் கூடாது சுப்ரியா” என்றான்.
நல்ல பட்டம் கொடுக்குறீங்கடா” கொலை இவனா பண்ணான்? நீ எதையும் நேரில் பார்த்தது போல பேசாத..
“சொன்னால் கேளு சுபா” ஒரு பொண்ணு சொல்ல, எனக்கு மகியோட பேச பிடிச்சிருக்கு. உங்களுக்கு பிடிச்சிருந்தா பேசுங்க. அதை விட்டு என்னை கட்டுப்படுத்த நினைக்காதீங்க..
“என்னவாது பண்ணு” அந்த பொண்ணு அமர்ந்தாள்.
“ராதிகா மேம் வரலையாம்” ஒருவன் சொல்ல, மாறன் ஏளனப்புன்னகை சிந்தினான்.
“கண்டிப்பா வருவாங்கடா. நீயே பாரேன்” சுப்ரியா மாறனை முறைத்தவாறு, “நீ சொல்லு மகி? மேம் வருவாங்கல்ல?”
தெரியல..
“வருவாங்க பாரு” சொல்லி அவளது புத்தகங்களை எடுத்து வெளியே வைத்தாள்.
எதுக்கு எல்லாத்தையும் வெளிய வைக்கிற? மகி கேட்டான்.
மேம் வரும் வரை, அட்டவணை தயார் செய்யலாம்ல்ல? எதுக்கு நேரத்தை வீணாக்கணும்?
அட்டவணையா?
எஸ், எப்படியும் முதல் இரு பாடங்கள் தான நடத்துவாங்க…
அவங்க நடத்தும் முன் அதை பார்த்துக் கொண்டால் அவங்க நடத்தும் போது எளிதாக புரியும்..
நடத்தும் முன் பார்த்து எப்படி புரியும்?
நாம பதினொன்றாம் வகுப்பில் படித்ததன் தொடர்ச்சி தான் பன்னிரண்டாம் வகுப்பில் பாடத்திட்டமாக இருக்கும். அதனால் எளிதாக புரியும்.
“அது பதினொன்றாம் வகுப்பு படித்தவனுக்கு” முன்னிருந்து ஒருவன் குரல் கொடுத்தான்.
எழுந்த சுப்ரியா அவனை பார்த்து, “ஏன்டா நீ பதினொன்றாம் வகுப்பு படிக்காமலே இந்த வகுப்பில் வந்து இருக்கியா?”
நாங்க எல்லாம் ஜஸ்ட் பாஸ்..
“அதனால என்ன? பேசிக் கூடவா உனக்கு தெரியாது? சரி கணக்கை எடுத்துக்கோ. அதுல பை வேல்யூ என்ன?” சுப்ரியா கேட்க, பதில் உடனே அனைவரிடமும் இருந்து வந்தது.
ஹ..அவ்வளவு தான்..அதே போல சின்ன சின்ன விசயத்தில் தான் எல்லாமே ஆரம்பிக்கும். ஆர்வத்தோட பாருங்க பிடிக்கும்.
வாவ் சுபா, சூப்பரா சொல்ற? நீயும் எங்களை மாதிரி தான் படிப்பாயா? மற்றவன் கேட்க, அவள் புன்னகையுடன் “நோ..நான் இந்த வருசம் மாநிலத்திலே முதல் மதிப்பெண் வாங்கியே தீருவேன்”.
“என்னது?” மாறன் அருகே இருந்த அவன் நண்பன் சிரித்தான்.
“நான் கண்டிப்பாக வாங்கி காட்டுவேன்டா” சவால் விடுத்தாள் சுப்ரியா. அனைவரும் நகைத்தனர். அவள் சினமுடன் கையை கட்டி அமர்ந்தாள்.
ராஜ் சார், பிரின்சிபுல் சார், ராதிகா மேம், இன்னும் சில ஆசிரியர்கள் நின்றிருந்தனர்.
பிரின்சிபில் சார் சுப்ரியாவை அழைத்தார்.
சார்…
“எல்லாரும் பசங்களை கவனிங்க. நாங்க பேசிட்டு வாரோம்” அவளை தனியே அழைத்து சென்றார்.
உங்க அப்பா பேர் இதுவா? அவர் கேட்க, அவள் அதிர்ந்து அவரை பார்த்தாள்.
ராதிகா காதிலும் இது விழுந்திருக்க, யோசனையுடன் வகுப்பிற்குள் சென்றார்.
பசங்களா, நேற்று நடத்தியதை பாருங்க என்று சொல்லி வெளியே எட்டி பார்த்தார்.
பிரின்சிபிலிடம் பேச சென்ற சுப்ரியா முகம் மாறியதை பார்த்திருப்பான் மாறன்.
வெளியே வந்து ராஜ் சாரிடம் அவர் யூகத்தை சொல்லி தீரனிடம் பேச சொன்னார் ராதிகா.
“உன்னோட பெற்றோர் பெயர் இதுவா?” என்று அவர் பெயர் சொல்லி கேட்க, ஆமா சார்..அவங்க நேம் பள்ளியிலிருந்தே இதான்…
“அப்படியா?” அவர் சிந்தனையுடன், “சரி நான் கேட்டதை நீ தீரனிடம் சொல்லாதே!” அவளை அனுப்பினார். அவள் குழப்பமுடன் வெளியே வந்து ராஜ்ஜை இடித்தாள்.
ராஜ் அவளை பார்த்து, “அவர் என்ன சொன்னார்?” கேட்டார்.
சார், “அவரு எதுக்கு மாமாகிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொல்லணும்?”
“ஓ! இதான் கதையா? நான் பார்த்துக்கிறேன்” என்று ராஜ் சுப்ரியாவை அவளது வகுப்பறைக்கு அழைத்து சென்றார். ராதிகா அவரை பார்த்து விட்டு சுப்ரியாவை பார்த்தார். அவள் குழப்பமுடன் உள்ளே வந்தாள்.
“ஏய், குள்ளவாத்து. சும்மா மூளைய யூஸ் பண்ணாத. அப்புறம் இவனுக மாதிரி மூளை மலுங்கி போயிடும்” கேலியுடன் கூற, எல்லாரும் அவரை முறைத்தனர்.
“சார்” ராதிகா அழைக்க, “ஒன்றுமில்லை மேம். நான் பார்த்துக்கிறேன். அவளோட மைண்டை டைவர்ட் பண்ணுங்க” கூறி சென்றார்.
ராதிகா என்ன பேசினாலும் அவளுக்கு பிரின்சிபில் பேசியதில் ஏதோ வித்தியாசமாக இருந்தது. இதை விட அவர் எதுக்கு மாமாவிடம் அவர் பேசியதை சொல்ல வேண்டாமென கூறினார்.
“சுப்ரியா” அவள் மேசையை துடைப்பானின் பின்புறத்தால் அழுத்தி தட்டினார் ராதிகா.
“மேம்” எழுந்து அவரை பார்த்தாள்.
“கிளாஸ்ஸை கவனிக்க போறீயா? வீட்டுக்கு போகணுமா?” அவர் கேட்க, “கவனிக்கிறேன் மேம்” அமைதியாக அமர்ந்தாள். எல்லாரும் அவளை ஆச்சர்யமாக பார்த்தனர்.
ஹே சுபா, என்னாச்சு? ஹஸ்கி வாய்சில் மகி கேட்டான்.
“சும்மா இருடா. எனக்கே மண்ட காயுது” இருவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, மாறன் இருவரையும் முறைத்தவாறு இருந்தான்.
“சுப்ரியா மகேஷ்” ராதிகா அழைக்க, இருவரும் அவரை பார்க்க, எல்லாரும் இருவரையும் திரும்பி பார்த்தனர். இருவரும் எழுந்து நின்றனர்.
மாறனுக்கு கோபம் இருந்தாலும் ஏன் இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்கா? கண்டிப்பாக ஏதோ இருக்கு. அந்த ராஜ் அண்ணாவை பார்த்து பேசலாம் என்று மாறன் எழுந்தான்.
ராதிகா புருவத்தை உயர்த்தினார்.
ரெஸ்ட் ரூம் போகணும்..
“முதல் பீரியடிலேவா?” அவன் நண்பன் சிரிக்க, அவன் தலையில் அடித்தான் மாறன்.
போக சொல்லவும் இருவரையும் முறைத்துக் கொண்டே சென்றவன் ராஜ் வகுப்பை பார்த்தார். அவர் வகுப்பில் இல்லை. அதனால் அவரை தேடினான். பள்ளிக்கு பின் பக்கம் பேச்சுக் குரல் கேட்டது.
மாறன் மறைந்து நின்று கேட்க ஆரம்பித்தான்.
மச்சான், “சுபா இங்க படிக்க வேண்டாம். எனக்கு சரியா படலை” ராஜ் சொல்ல, அந்த பக்கம் பேசுபவர் சத்தம் கேட்கவில்லை.
இல்லடா, பிரின்சிபில் அவளோட அம்மா, அப்பா பற்றி ஏதோ பேசி இருக்கார். உன்னிடம் அவர் பேசியதை சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்கார். அப்புறம் நான் சுபாவை பார்த்துக்கிறேன். ஆனால் எப்போதும் பார்த்துக் கொள்ள முடியாது.
“மாறனை நம்ப முடியதுடா” ராஜ் சொல்ல, “என்னோட பேர் அடிபடுது” எண்ணினான் மாறன்.
இதுக்கு நீ மாறாகிட்ட விசயத்தை சொல்லலாம்ல்ல?
புரியுது டேஞ்சர் தான். அதுக்கு நீயும் இங்க ஜாயின் பண்ணிடலாம்ல்ல?
சரிடா. அக்சராவும் காலேஜ் போயிருக்கா? உனக்கு வேற காலேஜ்ஜா கிடைக்கல? ராஜ் திட்டினான்.
இவன் என் தீரன் அண்ணாவிடமா பேசுகிறான்? அண்ணா எதை என்னிடம் மறைக்கிறார்? மனதில் எண்ணினான்.
ஹோ தீரா..உனக்கு புரியலையா? அவன் அங்க இருக்கான். செழியா பிக், டிராப் தான் பண்றான்.
போதும்டா. இதுக்கு மேல முடியல. நீ மட்டும் நேர்ல்ல வந்த உன்னை என்ன செய்வேன்னே தெரியாது..
சரி பார்த்துக்கிறேன். இருந்தாலும் நீ பிரின்சிபல் சாரை கவனிப்பது நல்லது தான்.
“சரி வைக்கிறேன்” ராஜ் வைக்கவும் வேகமாக ஓடி விட்டான் மாறன்.
இளந்திரையன் பேசியதற்கு பதில் கூறினார் அவன் நண்பன் ராஜ் சார் . அவரும் அவர் வகுப்பிற்கு சென்று விட்டார்.
error: Content is protected !!