வெங்கடேஷ், சம்யுக்தா இருவருக்கும் தை மாதத்தின் முதல் முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தமும்,
பின் ஜாதகம் கொண்டு மண்டபம் கிடைப்பதை வைத்து கல்யாணம் வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
ஏனெனில் வெங்கடேஷ் சம்யுக்தா இரு வீட்டிலும் கடைசி திருமணம்.
அதனால் பெரிதாக தான் செய்ய வேண்டும்.. என்று அனைவரின் மனதிலும் இருக்க, அதற்கு ஏற்ப மண்டபம் அமைய வேண்டுமே.. என்பதால் தான் இப்படியான ஏற்பாடு.
‘சம்யுக்தா இனி எங்கள் வீட்டு மருமகள்..’ என்பதை உறுதிசெய்யும் விதமாக,
பெண் மக்கள் இருவரும் சம்யுக்தாவுக்கு பூச்சூட்டிவிட, மரகதமோ தன் கரத்தால் சங்கிலி ஒன்றை அணிவித்தார்.
எல்லாம் சிறப்பாய் முடிந்து, ரியானின் ஏற்பட்டின் படி இரவு உணவையும் முடித்துக்கொண்டு எல்லாரும் கிளம்ப சம்யுக்தாவை அழைத்துக்கொண்டு தனமும் கிளம்ப எத்தனித்தார்.
அவர்களை தடுத்த இனியாள், “தனம்மா.. நீங்க அந்த வீட்டுக்கு இப்ப போக வேணாம்.
பக்கம் தான்.. இருந்தாலும் இந்த நேரத்துக்கு சம்யுக்தாவுக்கு பூ வச்சதும் போறது சரியில்லை.
இன்னைக்கு ஒரு நாள் இங்கேயே இருங்களேன்.. ப்ளீஸ்..” என கெஞ்சலாக கேட்க,
இனியாளின் முகத்தை பார்த்து மறுக்க முடியாது சரியென சொல்லியிருந்தார் தனமும்.
நீண்ட நாட்களுக்கு பின் தன் சித்தாவோடு தூங்க கிடத்த வாய்ப்பை விடுவாளா வெண்பா..?
வெண்பா அவளோடு உறங்க போகிறேன் என ஓட, முகுந்தும் வெண்பாவை ஒட்டிக்கொண்டு சம்யுக்தா இருக்கும் அறைக்கு ஓடினான்.
இனியாள் போய் எவ்வளவு போராடியும் இருவரும் வராமல் ஆட்டம் காட்ட,
ரியானிடம் அவள் முறையிட, அவனும் அவன் பங்கிற்கு சொன்ன எதற்கும் வெண்பா இறங்கி வருவதாய் இல்லை.
அவளின் கைகோர்த்து தூங்கி பழகியதோடு, “சித்தா.. கட சூப்பரா சொல்வா.. தெர்யுமா..?” என முகுந்திடம் வெண்பா ஏத்தி விட அவனும் ஆர்வத்தோடு சம்யுக்தாவை கட்டிக்கொண்டான்.
‘என்ன செய்வது..?’ என கணவனும் மனைவியும் கவலையோடு பார்த்துக்கொள்ள,
“மாமா விடுங்க. அவங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்..! என்கூடவே தூங்கட்டும்.
சப்போஸ் இடையில உங்கள கேட்டாலும் நான் அங்கே கொண்டு வந்து விடறேன்..” என்று சம்யுக்தா சொல்லிவிட,
வேறு வழியின்றி அவளிடமே உறங்கட்டும்.. என விட்டுவிட்டு தங்கள் அறைக்கு வந்து சேர்ந்திருந்தனர் ரியானும், இனியாளும்.
இருவருக்கும் இதுவரை பிள்ளைகளோடு இருந்துவிட்டு, இன்று வெறுமையாக இருந்த மெத்தை ஒரு மாதிரியாக இருக்க, அமைதியாய் அடுத்தடுத்து ரெப்ரஸ் செய்து வந்து அவரவர் இடங்களில் படுக்கையில் சரிந்தனர்.
இனியாளுக்கு எப்படியோ, ஆனால்.. ரியானுக்கு இந்த தனிமை மீண்டும் ஏதேதோ பழைய நினைவுகளை கொண்டு வர..
தூங்க முடியாமல் எழுந்தவன், விடிவிளக்கின் ஒளியில் இனியாளை பார்க்க.. அவளோ முகத்தை மறுபக்கம் திரும்பி படுத்திருந்தாள்.
சிறிது நேரம் கவனித்த வரையில் அவள் நல்ல உறக்கத்தில் இருப்பது தெரிய.. ஆழ்ந்த பெருமூச்சோடு எழுந்தவன்,
தனது கபோர்டை திறந்து.. எப்போதும் தனிமை வாட்டும் போதோ, இல்லை மனம் அதீத வலியில் தவிக்கும் போதோ மட்டும்.. எடுத்துக் கொள்ளும் மதுவை திறந்து வாயருகே கொண்டு செல்ல,
அதை தன் கரம் கொண்டு தடுத்திருந்தாள் இனியாள்.
“என்னங்க இது..? நா இங்கே வந்த அடுத்த நாளே இதை பார்த்திட்டேன்.
ஆனா, நான் பார்த்த வரை நீங்க இத்தனை நாள்ல இதை யூஸ் பண்ணவே இல்லை.
அதனால இதை பத்தி நானும் பேசல.
இப்போ என்ன ஆச்சுன்னு இதை கையில எடுத்திருக்கீங்க..?” என கண்டிப்போடு அவள் கேட்க,
‘இவள் தூங்காமல் இருந்தாளா..?’ என அதிர்ந்த போதும்,
“நா ரெகுலரா ட்ரிக் பண்ணற ட்ரிங்கர் இல்ல அம்மூ.
ஆனா, பசங்க கூட இல்லாம ஒரு மாதிரி லோன்லியா ஃபீல் ஆகுது.
அது எனக்கு.. பழைய நினைவுகளை தூண்டுது.
ஃபுல்லா எல்லாம் குடிக்கமாட்டேன்.
நா தூங்க, ஜஸ்ட் மருந்து மாதிரி லைட்டா தான்..” என அவளின் முகத்தை பார்க்காமல் உரைத்தவன்,
அவளின் கரத்தை விலக்க பார்க்க, இன்னும் இறுக்கமாக பற்றி அதை தடுத்தவளை கண்டு,
“ம்ப்ச்.. என்ன அம்மூ..! விடு.
ஏன் என்னை புருஞ்சுக்காம படுத்தறே..?
போ.. போய் படு. நான் ரெகுலராவெல்லாம் எடுத்துக்கற ஆள் இல்ல.. சரியா..?