Skip to content
Post Views: 8,583
“இன்னைக்கு.. உரிமையா இனியாள் கழுத்துல தாலிய கட்டி என் உரிமையாக்கிட்ட பின்னாடி அவங்களும் நம்ம குடும்பமுன்னு சொன்னீங்க தானே..?
அப்போ, உங்க மனைவின்னு நான் கூட இருக்கும் போது தனிமைய ஃபீல் பண்ணறேன்னு சொன்னா என்னங்க அர்த்தம்..?” என்று அழுத்தமாக இனியாள் கேட்க, லேசான தடுமாற்றம் ரியானிடம்.
Advertisement
“அது அம்மூ.. நீ கிட்ட இருந்தா பசங்க கூட இருக்கும் போதே.. என்னை நான் கஷ்டப்பட்டு தான் கன்ட்ரோல் பண்ணிக்கறேன்.
Advertisement
இன்னைக்கு.. பசங்க இல்லைங்கற காரணத்தை வச்சு.. உன்னை நான் நெருங்கினா.. முழுசா உன்னை எடுத்துக்க தோனும்.
Advertisement
இதான் சாக்குன்னு நான் இத்தனை நாள் காத்திருக்கேன்னு, நீ நினைச்சிட்டா..!” என்று அவளை நேராக பார்க்க முடியாமல் தடுமாறி பேசியவனின் பேச்சை..
Advertisement
அவனின் டீசர்ட் காலரை பற்றி இழுத்து, தன் இதழ் கொண்டு தன்னுள் வாங்கியிருந்தாள் ரியானின் அம்மு.
இத்தனை நாள் அவன் கொடுத்த பழக்கத்தில் ஓரளவு கற்றுக்கொண்ட போதும் அவள் தடுமாற,
ஒரு நொடி அதிர்ந்தாலும், அடுத்த நொடியே தன் இதழில் ஒட்டி நின்ற தன் இணையை.. தனக்குள் அழுத்தமாக, ஆழமாக உள்வாங்கிக்கொண்டான் ஆர்வத்தோடு.
தடுமாறிய இனியாளுக்கும்.. கற்று கொடுத்து, சுவாச காற்றுக்கு ஏங்காத வகையில் அவனின் செய்கை இருக்க, மெல்ல மெல்ல அதில் கலந்து.. கரைய துவங்கினாள் பெண்ணவள்.
ஆடைகள் அந்நியமாக, ஆசைகள் அணை உடைக்க.. அழகான ஆலிங்கனம் அரங்கேற தொடங்கியது அந்த ஏகாந்த இரவில்.
முற்றும் முழுதாய் ஏற்கனவே தெரிந்த கலை.. என்பதால் ரியான் தடுமாறாமல் தன்னவளில் பயணிக்க,
பெண்ணவளோ, அவனின் மென்மையையும்.. வன்மையையும்.. ஒரு சேர தாங்கி.. தவித்து.. தகித்து.. தயங்கி.. பின் அதில் மயங்கி.. கடைசியில் கிறங்கி போக,
தன் தேவையை அடுத்து அடுத்து அவளுக்கு அழுத்தமாக உணர்த்தி, அவளையும் அவளுக்கே உணர்த்திவிட்டே விலகினான் அவள் கணவன்.
கலவியின் முடிவில் பெறும் நெற்றி முத்தம் கூட இத்தனை தித்திக்கும்.. என்பது இன்று தான் புரிந்தது பெண்ணிற்கு.
அதோடு, அவளின் வயிற்றில் இருந்த தழும்பை.. சிறு கண்ணீர் சிதறலோடு, அவன் தடவி இதழ் பதித்த கணம்..
அன்று தான் கண்ட வலியெல்லாம் மாயமான தோற்றம்.. இன்னும் உடலில் சிலிப்பை தொடரச்செய்வதாய்…
அவளின் உடல் சிலிர்ப்பு.. இன்னும் மிச்சமில்லாமல் அவளை ஆளும் பேராசையை அவனுள் கிளப்ப,
மீண்டும் அவளை தன்னுள் உள்வாங்கி கொண்டவன், நிதானமாய் தன்னை அவள் முழுவதும் உணர வைக்க,
வெக்கமும்.. கூச்சமும் தடுத்தாலும்.. அறியும் ஆவல் கொண்ட வயது தானே.. அவளுக்கும்.
அவளுள் இருக்கும் ஆசையும் அவளை அவனுக்கு இணங்க வைக்க, இருவருக்கும் மறக்க முடியா கணங்களாய் நீண்டு போனது அந்த இரவு..
கலியாட்டத்தில் திளைத்திருந்த போதும், மகன் மகள் பற்றிய சிந்தனையும் இடையிடையே எழாமல் இல்லை ரியானுக்கு.
அதனால் ஒருமுறை இனியாளை சென்று சம்யுக்தாவோடு மூவரும் நன்றாக உறங்குவதை உறுதி செய்து வந்த பின்னரே நிம்மதியாய் இருந்தது அவனுக்கு.
‘அவனே சென்று பார்த்திருப்பான் தான்..!
என்ன தான் மகளாய் நினைத்த போதும்.. சம்யுக்தா இருக்கும் அறைக்கு.. இரவில், அவள் உறங்கும் நேரம் செல்வது நாகரீகமான செயல் இல்லை..’ என்பதாலேயே இனியாளை அனுப்பியிருந்தான்.
நடு இரவிற்கு மேல் மெல்ல உறங்க தொடங்கினாலும்.. விடியலுக்கு முன் தன்னை நெருங்கி அணைத்த அணைப்பின் வித்தியாசத்தில் புரிந்து.. இதழ் விரிய புன்னகை பூத்தவளை.. தன்னுள் மீண்டும் நிறைத்துக்கொண்டே எழ விட்டான் ரியான்.
“சரியான பேட் பாய்..” என செல்லமாய் கொஞ்சிக்கொண்டு குளியலறை புகுந்தவளுக்கு,
அன்று.. “என்னைத் தாண்டி வேற எதையும் நினைக்க விடமாட்டேன்..” என அவன் சொன்னது எத்தனை உண்மை என்பது புரிய, முகமெல்லாம் சிவந்து போனது இப்போது.
கூடலில் போது அவன் பேசிய பேச்சுக்களும்.. அவனின் கரங்களும், உதடுகளும் தன்னுள் செய்த மாயத்தையும் நினைத்தபடியே குளித்து முடித்து வந்தவள்,
அயர்ந்த உறங்கி கொண்டிருந்த ரியானை கண்டு சீண்ட தோன்றினாலும்..
அப்புறம் அதன் விளைவை எண்ணி, அமைதியாய் அவ்வறையை விட்டு வெளியே வந்து பூஜை முடித்து, தனது வழமையை வழக்கம் போல தொடர்ந்தாள் முகத்தில் வெக்கச்சிரிப்போடு.
அவளின் வெக்கம் கொண்ட முகத்தின் சிவப்போடு, சமையல் செய்வதால் உண்டான வியர்வையில்.. லேசாக கலைந்த குங்குமமும், திருநீரும் அவளின் அழகை பலமடங்கு பெருக்கியிருக்க, அன்று அணிந்திருந்த புடவை கூட அவளுக்கு புதிது தான்.
பெரும்பாலும் தன் வேலை பொருட்டு சுடிதார் தான் அணிவாள். சேலை அணிவது.. என்பது மிகமிக அரிதான ஒன்று.
நேற்று தீபாவளி பண்டிகை என்பதாலும், வெங்கடேஷ் வீட்டினர் வருவது பற்றி ஏற்கனவே ரியான் சொல்லியிருந்ததாலும், தங்கள் திருமணத்திற்கு பின்.. அன்று தான் சேலை அணிந்திருந்தாள் அவள்.
“சேரில நீ செம அழகுடீ.. அம்மூ..!!” என மோகத்தோடு முனங்கியவனின் ஆசையை தூண்ட வேண்டுமென்றே,
இன்றும் புடவையை கட்டிக்கொண்டவளுக்கு இப்போதும் உடலில் ஒரு வித சிலிர்ப்பு தான்.. அவனின் எதிர்வினை பற்றி நினைக்கும் போது.
அதே சிந்தனையில் இருந்தவளின் இடையில், அழுத்தமாக பதிந்த கரமும்.. தோளில் உணர்ந்த உஷ்ண மூச்சின் நிலையும்.. ‘அவளை அணைப்பது யார்..?’ என சொல்லிவிட,
இதழில் அழகான வெக்க முறுவல் இனியாளிடம்.
அதோடு அவனின் தலை முடியை தனது கரம் கொண்டு வருடியபடி,
“என்ன தூக்கம் தெளிஞ்சிடுச்சா..?” என்றிட,
“ஊகூம்.. இன்னும் தூங்கனும்.. அதுக்கு நீயும் வேணும்..” என சிறுபிள்ளையாய், அவளின் காதோரம் இதழுரசி கேட்டவனின் செய்கையில்,
கூசி சிலிர்த்தவள், “ப்ம்ச்.. என்ன விளையாட்டு இது..!
போய் தூங்குங்க.. நான் சமைச்சிட்டு இருக்கேன் தானே..?” என்று கோபம் போல சொல்ல,
அடுத்த நொடி அவளை தன் புறம் சட்டென திருப்பியவன், அதே வேகத்தில் அடுப்பையும் அணைத்திருந்தான்.
அவனின் வேகத்தில் மிரண்டு விழி விரித்தவளை.. தனது இரு கரத்தையும், அடுப்பு திட்டில் ஊன்றி சிறை செய்தவன்,
“தனியா தூங்க ட்ரிங்க்ஸ் எடுக்க போனவனை தடுத்து.. அதை விட கிக்கான போதைய கொடுத்துட்டு.. இப்போ தனியா போய் தூங்குன்னு சொல்லறது சரியா.. அம்மூ..?
நா பாவமில்லையா..? என்னை தூங்க வச்சிட்டு வந்து.. நீ உன் வேலைய பாரு.. யாரு வேண்டாமுன்னு சொன்னா..?” என்று ஏதும் அறியா பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டு.. கொஞ்சி, கெஞ்சியவனின் பாவனையில் இனியாளின் இதழ்கள் தாராளமாக விரிந்து கொள்ள..
ஆசையாய் அதை அடைத்து, ஆள ஆரம்பித்தான் அவளின் மன்னவன்.
கரங்கள் இடையில் உலாவர, இதழ் ஸ்பரிசத்தை உள்வாங்கி திளைத்திருந்தவர்களுக்கு..
தனம் வந்ததும், இவர்கள் நிலை கண்டு.. அவசரமாக அவர் இரவு தங்கியிருந்த அறைக்கே திரும்பி சென்றதும் தெரியாமலேயே போனது.
இனியாளும், ரியானும் திருமணத்தால் இணைந்த போதும், ‘அவர்களுக்குள் இன்னும் இணக்கமான சூழல் இல்லை..’ என்பது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த அவருக்கு புரிந்திருக்க,
‘குழந்தைகளுக்காக தான் இந்த திருமண பந்தத்திற்கு ஒத்துக்கொண்டார்களோ..?’ என்ற சந்தேகம் அவரை வாட்டிக்கொண்டே தான் இருந்தது இதுவரை.
இப்போது, அவர் பார்த்தது.. அவருக்கு பெரும் நிறைவையே கொடுத்தது.. என்று தான் சொல்ல வேண்டும்.
வெண்பாவுக்கு ஒரு வயதை தொடும் முன்பே, பொட்டிக் வந்த ஒரு பெண்மணி தனத்திடம் பேச்சு கொடுத்து இனியாளின் தனிமையை அறிந்து கொண்டவர்,
“என்னோட அக்கா பையன் டைவர்ஸ் பண்ணிட்டு.. தனியா தான் இருக்கான்.. ரொம்ப நல்ல பையன்.
அந்த பொண்ணு வேற ஒரு லவ் இருந்ததை மறச்சு, கல்யாணம் பண்ணி.. இவன் வாழ்க்கை போச்சு.. நீங்க பேசிட்டு சொல்லுங்க..” என்று சொல்ல,
அன்று தனத்திடம் அவள் சொன்ன,
“இனி யாரையும் நம்பியும்.. என் வாழ்க்கையை நான் ஒப்படைக்க போவது இல்லை.
எனக்கு நீங்களும், என்னோட பொண்ணும் கடைசி வரை போதும்..” என்று சொன்ன போது இருந்த அந்த தீவிரம்..
‘எங்கே.. இவர்களை வாழவிடாமலேயே செய்துவிடுமோ..?’ என்ற அச்சம் நீங்கியதில் நிம்மதியாக உணர்ந்தவர்,
“எப்பவும் இப்படியே சந்தோஷமா நிறைஞ்ச வாழ்க்கையை ரெண்டு பேரும் வாழனும் ஆண்டவா..” என வேண்டியும் கொண்டார்.
error: Content is protected !!