உங்கள விட்டு ஒரு பங்ஷன்னா.. அதுல யாருக்குமே விருப்பம் இருக்காது.
அதனால அவங்களும் இதை தான் சொல்வாங்க..” என்ற வெங்கடேஷின் வார்த்தையை தான், அப்படியே உரைத்தனர் தனமும், மரகதமும்.
இதில் உண்மையான கவலை இனியாளுக்கே..
ரியானிடமிருந்து ஒரு பிரிவை அவளால் கற்பனையாய் கூட நினைத்து பார்க்க முடியவில்லை.
அந்த அளவுக்கு அவனை தேட வைத்திருந்தான் ரியான் இந்த இடைப்பட்ட மாதங்களில்.
உடல் அளவு தேடலாக இருந்தால் கூட சமாளிக்கலாம்.
ஆனால், ‘உள்ளத்தால் எங்கும்.. எதிலும்.. உன் துணை நான்.. என அவளுக்குள் நீக்கமற நிறைந்து நிற்பவனை எப்படி விட்டு இருப்பது..?’ என்ற எண்ணம் அவளை கலங்க வைத்தது.
அதை கண்ட சம்யுக்தா, “மாமா, நீங்க போயிட்டு வர்ற வரைக்கும் அக்கா, பசங்க எங்க கூட இருக்கட்டும்..” என்றாள் விசமம் வழியும் குரலில்.
“என்னது.. அம்முவ விட்டுட்டு போறதா..?
நோ ச்சான்ஸ் பேபி. நாங்க ஹோல் ஃபேமிலியா தான் போறதுன்னா போவோம்..” என்று அவசரமாக சொன்னவனின் பாவனையில்,
இனியாள் இனிதாய் அதிர்ந்தாள் எனில் சம்யுக்தா வாய்விட்டு சிரித்துவிட்டாள்.
“என்ன அக்கா.. உன் கவலை போச்சா..?
மாமாவ பத்தி இன்னுமா உனக்கு புரியல..?” என்றிட,
‘விட்டுட்டு போவேன்னா நினைச்சே..?’ என கண்டிப்பான பார்வை ரியான் பார்க்க,
‘அச்சோ.. சாரி..’ என இறைஞ்சுதல் பார்வை பார்த்தாள் அவன் மனையாள்.
‘இருக்கட்டும்.. உனக்கு இதுக்கு பனிஷ்மெண்ட் உண்டு..’ என பதிலுக்கு கண்ணால் உரைத்தவன்,
அதன்படி அழகான தண்டனையை அன்றைய தினமே அவளுக்கு கொடுத்துவிட்டே விலகினான்.
ஒருபுறம் நிச்சயதார்த்த வேலை, மற்றைய புறம் வேலை விசயம்.. என ரியான் பரபரப்பாக இருந்த போதும்,
அவனின் இளைப்பாறும் இடமாய் அவனின் அம்மு இருக்க, எங்கும் எதிலும் தோய்வு இன்றி நாட்கள் கடந்தது.