Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 33

நிலவு 33

அன்றைய இரவு அனைவருக்கும் சந்தோஷத்தின் உச்சத்தால்.. நிம்மதியான உறக்கத்தில் கழிய, ரியானுக்கு மட்டும் ஒருவித பதட்டத்தோடே கடந்தது.



Advertisement

இனியாளுக்கு இருந்த அலுப்பில்.. வந்ததும் அயர்ந்து உறங்கியிருக்க, 

பிள்ளைகளை பார்த்து, அவர்களின் தேவையை செய்து தூங்க வைத்த போதும் அவனால் தூங்கவே முடியவில்லை.

Advertisement

Advertisement

‘நாளை மருத்துவரை சந்தித்து.. அவர் மூலம் விசயம் உறுதியாகும் வரை தன்னால் உறங்க முடியாது..’ என நினைத்தவன், 

இனியாளின் தூக்கம் கலையாது அவளை நெருங்கி படுத்தவன் அலைப்புருதலோடே அந்த இரவை கடந்தான்.

Advertisement

மறுநாளும் அவன் பதட்டம் அவன் விழியில் தெரிய அவனின் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டாள் இனியாள்.‌

அவனின் பதட்டம்‌ ஏன்..? என புரிந்தாலும், என்ன சொன்னாலும் அவனுக்கு அதை உறுதி செய்த பின்னரே நிம்மதி வரும்.. என்பதால், 

விழியாலேயே ஆறுதலை சொல்லி அமைதியாய் அவனோடு மருத்துவமனைக்கு சென்றாள்.

இனியாளை பரிசோதித்து, “வாழ்த்துக்கள்.. நீங்க மறுபடியும் அப்பா ஆகிட்டீங்க..” என மருத்துவர் சொன்ன போது, 

அதுவரை அழுத்திய ஏதோ ஒன்று மறைந்து போனது அவனுள்.

“தேங்க்ஸ் டாக்டர்..” என சொன்ன ரியான் கேட்ட கேள்வியில் குழம்பிப்போனார் மருத்துவர்.

“இது உங்களுக்கு நெக்ஸ்ட் பிரக்னன்ஷி தானே..?” என ஏற்கனவே கேட்டு, 

இவர்களுக்கு முன்பு ட்வீன்ஸ்.. நான்கு வயதில் இருப்பது தெரிந்திருக்க, இப்போது ரியான் கேட்பது அனைத்தும் முதல்முறைக்கு கேட்பதாக இருந்த போதும்,

மருத்துவராய் அவனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்வது அவரின் கடமை அல்லவா..?! 

அதனால் முகம் சுழிக்காமல் அவனின் அத்தனை கேள்விக்கும்.. ஏன்.. அந்தரங்கம் சார்ந்த கேள்விக்கும் பொறுமையாய் விளக்கம் கொடுக்க..

அதன் பிறகே ரியானின் முகம் தெளிவானது.

இறுதியாய் ரியான் கேட்ட கேள்விக்கு.. அவர் சொன்ன பதிலில் ரியான் மட்டுமல்ல இனியாளுக்கும் மிக பெரிய அதிர்ச்சி தான். 

‘என்ன செய்வது..?’ என புரியாது இல்லம் வந்து சேர்ந்தவர்களை, வரவேற்றனர் சந்தீப் வெங்கடேஷ் இருவரின்‌ மொத்த குடும்பமும்.

வந்தவுடன்‌ டாக்டர் குழந்தை விசயத்தில் சொன்ன பதிலை ரியான் சொல்ல அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி தான்.

ஆனாலும் ரியானின் முகத்தில் இருந்த குழப்பம்.. அனைவரையும் குழப்ப, இனியாளை ஓய்வுக்காக அனுப்பி விட்ட ரியான்,

“டாக்டர் இப்ப தான் பார்டீ ஃபைவ் டேஸ் ஆகியிருக்கறதால.. இன்னும் டூ ஆர் த்ரீ மன்த்க்கு ட்ராவலிங் கூடாதுன்னு ஸ்டிக்ட்டா சொல்லிட்டாங்க..” என கவலையாக சொல்ல,

‘முதல் முறை தான் அப்படி..! 

இந்த முறையாவது அனைத்தையும் அணுஅணுவாய் அனுபவிக்க ஆசை கொண்டவர்களை, விதி ஏன் மறுபடியும் பிரிக்க நினைக்கிறது..?’ என்ற கவலை அனைவரையும் தொற்றிக்கொண்டது.

“இப்போ.. என்ன பண்ணறதுன்னே புரியல..?” என தன் நெற்றியை நீவி விட்டவன், 

“ஆரம்பத்துலையே இந்த ப்ராஜெக்ட் வேணாமுன்னு சொன்னேன். 

இப்போ எல்லா விசயத்தையும் ஆரம்பிச்சிட்டு கேன்சல் பண்ணவும் முடியாது..” என்று இயலாமை தந்த எரிச்சலோடு சொல்ல,

“அண்ணா, இதுக்கு நா ஒரு தீர்வு சொல்லவா..?” என்ற வெங்கடேஷை கேள்வியாய் அனைவரும் பார்க்க,

“உங்களுக்கு பதிலா நான் போறேன். 

எப்படியும் நீங்க அதை முடுச்சிட்டு வந்த பின்னாடி தானே எங்க வெட்டிங் ன்னு முடிவு பண்ணியிருக்கோம். 

சோ, நா போறதால இங்கே எதுவும் மாறிப்போறது இல்லை. 

என்னோட பிரஷன்ஸ் விட.. இப்போ, இந்த நேரம்.. உங்களோட பிரஷன்ஸ் அண்ணிக்கு நிச்சயம் தேவை. 

அதோட உங்களுக்கும் இது ரொம்ப முக்கியமான தருணம். 

அதனால நான் போய்.. நல்லபடியா அதை முடுச்சிட்டு வர்றேன்..” என்ற வெங்கியை நன்றியோடு ரியான் ஏறிட,

இன்னும் பொங்கி பெருகும் காதலோடு பார்த்திருந்தாள் அவனின் சதா.

வெங்கடேஷ் தரப்பிலும் அதற்கு எதிர்ப்பு இல்லாமல் போனாலும், அவனின் தாயாரை நினைத்து கவலை கொண்டான் ரியான்.

‘வெளிநாட்டு ஆஃபர் வந்த போது, அவன் போகாமல் இங்கு இருந்ததற்கான காரணமே அதானே..! 

அப்படியிருக்க இப்போது..’ என அவன் தயங்க..

“அத்த எங்க வீட்டுல இருக்கட்டும்..” என சம்யுக்தா சொல்ல,

“கல்யாணம் ஆனா.. காலம் முழுக்க எங்க அம்மா உங்க கூட தானே இருப்பாங்க..

ஏன்.. எங்க அம்மாவ அண்ணா தான் எப்பவும் பார்த்துக்கனுமா..? 

ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கோம் அண்ணா. 

நாங்களும் பார்த்துப்போம்..” என்று அவரின் பெண்மக்கள் வந்து நிற்க,

வேறு என்ன வேண்டும்..? 

சந்தீப், வெங்கடேஷோடு ரியானும் உடனடியாக அலுவகம் சென்று, 

அடுத்து செய்ய வேண்டியதை சரிபார்த்து, அடுத்த வாரத்தில் வெங்கடேஷ் அங்கு செல்ல அனைத்தையும் முடித்து வீடு வர இரவு வெகு நேரமாகியிருந்தது.

அத்தனை பிரச்சினையும் கடந்து நிம்மதியான இரவு வேளை.. தன் மனையாளின் அருகே ரியான்..

பகல் முழுவதும் சந்தீப் குழந்தைகளோடு நன்றாக போட்ட ஆட்டத்தின் விளைவால் குழந்தைகள் இருவரும் நேரமே உறங்கிவிட, 

மற்ற எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு வந்த ரியான் இனியாளிடம் சென்று படுக்க, அதற்காகவே காத்திருந்தது போல.. அவன் மார்பில் தஞ்சமடைந்தாள் அவன் சதி.

குழந்தையின் வரவை அறிந்தது முதல் அவனுக்கும் அவளை தன்னோடு அணைத்துக்கொள்ள பேராவல் இருந்த போதும்.. 

சூழல் இடமளிக்காமல் இருக்க அவனும் வாகாய் அவளை அணைத்துக்கொண்டவன் இதழ்கள் அவளின் உச்சியில் பதிந்தது.

ரியானின் இதயத்துடிப்பை அவதனித்தபடி படுத்திருந்தவள்.. சிறிது நேரத்தில் அசந்து போனாலும், 

பகல் முழுவதும் ஓரளவு ஓய்வு நிலையிலேயே இருந்ததாலோ என்னவோ.. சட்டென தூக்கம் தெளிய, 

அப்போதும் தூங்காமல் விழித்திருந்தவனை கண்டு அதிர்ந்து போனாள்.

அவன் அலைந்த அலைச்சலுக்கு இவ்வளவு நேரம் தூங்காமல் இருப்பது என்பது சாதாரண விசயமல்லவே..!!! 

அதனால் தவிப்போடு அவனின் முகத்தை கண்டவளுக்கு அதில் இருந்த மலர்ச்சி, அவன் தேவையில்லாததை யோசிக்கவில்லை.. என்ற நிம்மதியை அளித்த போதும்,

“என்னங்க.. என்ன இன்னும் தூங்காம யோசனையில இருக்கீங்க..?” என மீண்டும் அவன் நெஞ்சில் தன் தாடை பதித்து அவனின் விழி பார்த்து வினவ,

“தூக்கமே வரமாட்டிங்குது அம்மூ. 

ஒரே எக்சைட் டா.. ஒரு மாதிரி ஃபீல். 

அதை எப்படி சொல்லன்னு தெரியல. 

குழந்தை பிறக்கற வரை அப்படி தான் இருக்குமோ..?” என்றவனின் வார்த்தையில் அத்தனை துள்ளல்.

“சரி தான்.. அதுக்கு இன்னும் ஒன்பது மாசம் ஆகும். 

அதுவரை இப்படி தூங்காம.. எக்சைட்மென்ட்ல சுத்த போறீங்களா..? சரி தான்..!” என கிண்டலாக இனியாள் சொல்ல,

“ஏன் சொல்ல மாட்டே..? என்னோட ஃபீல் எல்லாம் உனக்கு சொன்னா கூட புரியாது. 

நீ தூங்கு..” என்று, அவளின் தலையை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து அவளின் தலையை பரிவாக வருடி விடத்துவங்கினான்.

அவனை இத்தனை மாதத்தில் புரிந்தவளாய் அவனை அவன் போக்கிலேயே விட்டாள்.. அமைதியாய் அவனை அவதானித்தபடி.

அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், “ஏன் அம்மூ.. நமக்கு பையன் பிறக்குமா..? இல்ல பொண்ணா..?” என்றான் ஆர்வத்தோடு.

“ஏன்.. ரெண்டும் வந்தா வேணான்னு சொல்வீங்களா..?” என்று குதர்க்கமாக கேட்டவளை கண்டு சிரித்தவன்,

“எந்த கேனையனாவது வேணான்னு சொல்வானா.. அப்படிப்பட்ட பாக்கியத்தை..” என்றவனின் வார்த்தையில் அத்தனை பெருமிதம்.

சிறு அமைதிக்கு பின், “அப்போ ட்வின்ஸ் தானா..?” என்றான் ஆவலை அடக்க இயலா பாவனையில்.

“நிச்சயமா சொல்ல முடியாதுங்க. 

டாக்டர் ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு தான் சொல்வாங்க..” என்றதும், 

“ஓ.. அப்போ இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணணுமில்ல அதுக்கு..?” என்றவனின் குரலின் ஸ்ருதி இறங்கி போனது பெருமூச்சோடு.

“ம்ம்..” என்று அவனுக்கு பதில் உரைத்தவளை ஆர்வத்தோடு பார்த்தவன், 

“அம்மூ.. குழந்தைகளுக்கு என்ன பேர் வைக்கலாம்..?” என்றதும்,

விழி விரித்து அவனை பார்த்தவள்,  

“பொறக்காத குழந்தைக்கு பேரா..!!” என்றவள், 

அவனின் முகபாவனை கண்டு, “நீங்களே யோசிச்சு இருப்பீங்க போலவே..? சொல்லுங்க..” என்றாள் இப்போது அவள் ஆர்வமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!