Skip to content
Post Views: 12,042
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 25
அழுது, அழுது ஓய்ந்து போனாள் பிரவீனா. மித்ரனை பார்த்த பின் ஆதிரன் பயமின்றி இருந்தான். அவளின் விசும்பலில் தோள் தொட்டு “பிரவீனா” என்றான் மித்ரன்.
“ஏன் மித்ரன் எனக்கு மட்டும் இப்படி நடக்கணும். அப்படி நான் என்ன பாவம் செஞ்சேன்” என்று அவன் முகம் பார்த்து அழுக,
“பிரவீனா ப்ளீஸ் விடு வா போலாம்”
Advertisement
“திக்கற்றவங்களுக்கு தெய்வம் தானே துணை மித்ரன். நான் கடைசியா கடவுளை மட்டும் தானே நம்பி இருந்தேன். எத்தனை கஷ்டத்தை வேணாலும் கொடு, எங்களை உயிரோடு மட்டும் விட்டுடுன்னு தானே மன்றாடுனேன். அந்த கடவுள் கூட என்னை கை விட்ருச்சே” என்று ரெண்டு கையை விரித்து பிரவீனா அழுக, அவன் மனம் கனத்தது.
“நாங்க கூட அறியாம பாவம் செஞ்சிருக்கலாம் என் பிள்ளை என்ன பண்ணுச்சு. அவனை பார்த்து கூட கடவுள் மனசு இறங்கலையே” என்றவள்,
“எனக்கே தெரியுது நான் ஒரு மாதிரி அவனையும் சேர்த்து ரொம்ப கஷ்டப்படுத்துறேன். ஆனா, நான் என்ன பண்ண? எனக்கே தெரியல மித்ரன். இந்த வாழ்க்கை எப்படி வாழனு எனக்கு வழி தெரியவில்லை” என்று முகத்தை மூடி அழுக, அவனால் தாங்கவே முடிய வில்லை.
Advertisement
“விடுமா ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் இருக்கேன்” மித்ரனுக்கு அவள் அழுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆனால் அவளை எப்படி சமாதானப்படுத்த என்று அவனுக்கு தெரியவில்லை.
Advertisement
“யார் இருந்தாலும் என் புருசன் இல்லையே மித்ரன். ஒரு பொண்ணுக்கு புருஷன் இருந்தா தானே வாழ்க்கை சுபிக்ஷம், மரியாதை. இந்த சமுதாயத்தில் அவ நிமிர்ந்து நிக்கணும்னா, அவ கூட அவ புருசன் இருக்கணும். உலகம் கூட எவ்வளவோ மாறிடுச்சு மித்ரன் என்ன மாதிரி உதவிகளை மரியாதையா பாக்குது. ஆனா, சொந்த குடும்பம் தான்.. நம்ம மனசு ரணம் படுத்தி, குத்தி பதம் பாக்குறாங்க”
“யாரையும் கவனிக்காத பிரவீனா.. விட்டு தள்ளு”
“ஆனா, அவங்க யாரோ இல்லையே மித்ரன். அவங்க கிட்ட நான் பணம் காசு, கேட்கலையே… ஒரு ஆதரவு. நான் தனியா நிக்கிறேன், என் பிள்ளையை வைத்துக்கொண்டு தனியாக கஷ்டப்படுறேன். நாங்க உன் கூடத்தான் இருக்கோம் அப்படின்னு ஒரு வார்த்தை. அவ்வளவுதானே.. கூட பொறந்த அவங்களால அந்த வார்த்தையை கூட முழு மனசா சொல்ல முடியலையே மித்ரன். நம்ம அக்கா தானே நம்மள நம்பித்தான் இங்கு வந்து இருக்கா? அவளுக்கு ஒன்னு ரெண்டு நல்லது செஞ்சா போகட்டும். நம்மளும் விரட்டி பேசினால் எங்க போய் நிப்பா? அவளுக்கு யாரு இருக்கா?.. இப்படி எதையுமே யோசிக்கவே மித்ரன் அவங்க.. நீ எப்படி அவளுக்கு மட்டும் செய்யலாம்ன்னு தான் சண்டைக்கு நிக்கிறாங்க. என் நிலையிலிருந்து என் சொந்த ரத்தத்தாலே யோசிக்க முடியலன்னா வேற யாரை நான் நம்ப முடியும்”
Advertisement
“நான் யாரு அவங்களுக்கு கூட பொறந்தவ தானே.. எனக்கு ஒன்னு ரெண்டு கூட செய்யுரதால என்ன ஆகப்போகுது. நானும் எல்லார மாதிரியும் புருசன் குடும்பம் சந்தோஷமா இருந்து.. பிறந்த வீட்டில சுரண்டுனா அது தப்பு. என் நிலை என்னன்னு தெரியும். நான் வாங்குற சம்பளம் என் பையனோட படிப்புக்கே சரியா இருக்கு.. சேமிப்புன்னு அவனுக்கு நான் எதுவுமே வைக்கலை. இந்த நிமிஷம் அவரை மாதிரி எனக்கும் ஏதாவது ஆச்சுன்னா என் பையன் அனாதை”என்றதும்,
“பிரவீனா என்ன பேச்சு இது” அதட்டினான் மித்ரன்.
“உண்மை மித்ரன். எனக்கு என் புருசன் கூட இல்லைன்றதே ஒரு பெரிய வலி. என் பையன பார்த்து வைராக்கியத்துக்கு ஓடிட்டு இருக்கேன். வீட்ல ஆண்மகன் இல்லாட்டி பொருளாதார ரீதியாக தான் அந்த குடும்பம் கஷ்டப்படும். எனக்கு அந்த கஷ்டத்தோட வெளியிலயும் நிறைய கஷ்டம். ஒரு சிலிண்டர் கூட எனக்கு மாற்ற தெரியாது. அப்படித்தான் நான் இருந்து வளர்ந்துட்டேன். இன்னைக்கு எல்லாத்துக்கும் என் பையன வச்சுட்டு நானே ஓடிட்டு இருக்கேன். யாரையும் எதுக்கும் எதிர்பார்க்க கூடாது. யாரையும் நாம சிரமப்படுத்த கூடாதுன்னு”
“எனக்கு இது வேணும்னு உரிமையா பெத்தவங்க கிட்ட கூட கேட்டது இல்லை. என் பையன் பிறந்து தான் அவங்க அப்பா இறந்துட்டாங்கன்னு என் மாமியார் வீட்டில் சொன்னப்ப, அங்க இருந்து சண்டை போடத் தெரியாம வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். எவ்வளவு நாளைக்கு பிறந்த பச்சை மண்ணு குத்தி பேசிட்டே இருப்பாங்க மித்ரன். ஒரு ஆதரவு, அரவணைப்பு என் பிறந்த வீட்ல எனக்கு கிடைச்சா போதும்னு தான் அங்க வந்தேன். சத்தியமா பணம் காசு நினைச்சு நான் வரல” என்று அவள் அழுகவும், அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“ஆனா, உலகம் இதுதான். எனக்கு முன்னாடியே தெரியும், ஒரு அளவுக்கு என் கூட பிறந்தவங்க இப்படித்தான்னு… இன்னைக்கு என்னோட அழுகை எல்லாம் இவனை நினைத்து தான். நானும் இல்லாமல் போயிட்டேன் இவன் நிலைமை என்ன? அந்தக் கேள்விதான் என்னை விடாம துரத்துது” என்றவள்,
தன் கையை மேலே தூக்கி காட்டினாள். முழங்கையில் பெரிதாக ஒரு தழும்பு இருந்தது.
“ஆதிரனுக்கு இரண்டரை வயசு இருக்கும். தீபாவளிக்கு கம்பி மத்தாப்பு கேட்டா ன்னு சொல்லி எங்க அப்பா வாங்கி கொடுத்துட்டாரு… அத கையில வச்சு விளையாடிட்டு இருந்தவன் கீழே போடவே இல்லை டீ கங்கு மேல ஏறுது அவனை போட சொல்லியும் போடவே இல்லை. இப்படி அப்படியே ஆட்டி விளையாடிட்டே இருந்தான். உள்ள இருந்து வந்த நான் தான் அதை பார்த்து மாதிரி போயி அவன்கிட்ட இருந்து வாங்கும்போது என் கையில் சூடு பட்டுருச்சு” என்று உரத்தியாக சிரித்தவள்,
“இதுதான் பெத்த பாசம் மித்ரன். அதனால தான் என்னால உங்களுடைய கல்யாண ப்ரொபோஸ்லை ஏத்துக்க முடியலை. பெத்தவங்க தான் பிள்ளையை பார்க்க முடியும். ஆதிரன் கையில் இருந்து தீக்கங்க போட சொல்லி தான் எல்லாரும் சத்தம் போட்டாங்களே தவிர, பட்டுனு அவன் கையில இருந்து யாரும் புடுங்கல. ஏன்னா, அது அவங்க மேலயும் படும். அதை தீ இல்லையா!.. ஆனால், எனக்கு அது தோணவில்லையே. நான் தொட்டா என் கையில சூடு படும்ன்ற நினைப்ப விட, என் பிள்ளை கையில சூடு பற்ற கூடாதுன்ற நினைப்பு தான் அதிகம் இருந்துச்சு”
மித்ரனால் பிரவீனா மனதை ஓரளவுக்கு நன்றாகவே கணிக்க முடிந்தது.
“யார் மேலையும் நான் தப்பு சொல்லல மித்ரன். நான் நம்புனா கடவுள் தான் என்னை தண்டிச்சிருச்சு. எல்லாம் விதி. நான் பொறக்குறதுக்கு முன்னாடியே என் தலையில ஈசன் எழுதின எழுத்தை மாற்ற முடியுமா” கோபமும், வலியும் மறைந்து போய் வெறும் ஆதங்கம் மட்டுமே மனசில் நின்றது.
பிரவீனா ஒரு மாதிரி அமைதியாக ஆரம்பித்தாள். அதுவரை மித்ரன் பொறுமையாக காத்திருந்தான். ஒரு விரக்தியான மன நிலையில் அமைதியாக உட்கார்ந்து இருக்க, பிள்ளையின் அழுகை தான் அவளை நடப்புக்கு திருப்பியது. அதன் பின் தான் சுற்றுப்புறம் அவளுக்கு உணர தொடங்கியது.
“நீங்க எப்படி வந்தீங்க?”
“உங்க அத்தை வீட்டுக்கு நீ போறேன்னு தான் உங்க அப்பா நினைச்சுட்டு இருந்திருக்காரு. ஆனா, நீ அங்க வரலைன்னவும் தான் பயந்து போய் எனக்கு போன் பண்ணாரு” கவனமாக உன் மாமியார் என்ற சொல்லை தவிர்த்தான் மித்ரன்.
“ஆதிரன் பிறந்து தான் அவங்க அப்பாவ கொன்னுட்டானு பேசுனாங்க.. இவன் அவரோட பிள்ளையே இல்லைன்னு சொன்னாங்க. அப்படி ஒரு வார்த்தை வந்ததுக்கு அப்புறம் அந்த வீட்டியையும், அந்த வீட்டு மனுசங்களையும் தேடி, ஒரு நாளும் போக மாட்டேன் மித்ரன். என்னவோ ஒரு வலி ஆதங்கம். இனி என்ன அப்படின்னு ஒரு நெனப்பு. ரொம்ப பெரிய விரக்தி.. யார் கிட்ட சண்டை போட நான் நம்பின ரெண்டே பேரு ஒன்னு என் புருஷன், இன்னொன்னு அந்த கடவுள். கடவுள்கிட்ட சண்டை போட்டு சண்டை போட்டு ஓஞ்சு போயிட்டேன். அதான் இவரை தேடி வந்துட்டேன்” என்று கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவள்,
“என்னையா மனுசன் நீ? உன்னைய நம்பி கழுத்தை நீட்டி, உன் கூட வாழ்ந்து பிள்ளையும் பெத்ததுக்கு.. நீ இங்க வந்து நிம்மதியா படுத்துட்ட… பாரு, என் நிலைமையையும், என் மகன் நிலைமையையும் கேட்க தான் வந்தேன், கேட்டுட்டேன்” என்றவள், அப்படியே திரும்பி இளங்கோவை பார்த்து இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தாள். அவளுக்கு அங்கு என்ன தெரிந்ததோ, இரு கையெடுத்து கும்பிட்டவள். திரும்பிவிடாள்.
“ஆனா, இப்போ பயமா இருக்கு. நீங்க மட்டும் வராம இருந்திருந்தா, இவனை வச்சுட்டு ரொம்ப பயந்து இருப்பேன்” என்று பிரவீனா சொல்ல,
“இப்ப உனக்கு பயம் இல்லையா?” என்றான் மித்ரன்.
“எனக்கு எதுக்கு பயம் அதான் கூட நீங்க இருக்கீங்களே!..”
“என்னை பார்த்து பயம் இல்லையா?”
“உங்களை பார்த்து நான் ஏன் பயப்படனும் மித்ரன்” புரியாமல் கேட்டாள் பிரவீனா.
“உனக்கு புரியலன்னு நினைக்கிறேன். நைட் நேரத்துல, தனியா குழந்தையை வச்சிட்டு, நடு காட்டுக்குள்ள என்கிட்ட பயமில்லாமல் இருக்க தானே”
“ஆமா” என்றாள் தயங்கி…
“இப்ப என் மேல வச்சிருக்க நம்பிக்கையை, காலத்துக்கும்வை.. கடைசி வரைக்கும் உனக்கு துணை நிற்பேன்” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை அப்படி பேசுவதற்கான நேரமும் இது கிடையாது அவளை கூட்டிக்கொண்டு பிரதான சாலைக்கு வந்தான்.
அது ஒரு ஹைவே.. அங்கே டெம்பிள் சிட்டி இருந்தது. அங்கு தான் தனியாக ஒரு ரூம் எடுத்தான் மித்ரன். பிரவீனா புரியாமல் பார்க்க,
“முதல்ல உன்னை பாரு.. முகமெல்லாம் வீங்கி, தலை எல்லாம் கலைஞ்சு. என்னவோ ரொம்ப பாவப்பட்ட மாதிரி இருக்க. இதோடு நீ கிளம்ப முடியாது. ஆதிரனும் இருக்கான். அவனையும் குளிக்க வைக்கணும். நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க நான் வெளியே நிற்கிறேன்” என்றான்.
கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் மித்ரன் சொன்னதை செய்தாள். முதலில் மகனை குளிக்க வைத்து வெளியே அனுப்பியவள். பின்பு தனக்கான உடையை எடுத்தாள். அவள் எடுத்து வந்திருந்த சேலைக்கும், கையில் இருந்த பிளவுஸுக்கும் சம்பந்தமே இல்லை.
வாழ்க்கையில் ஏதோ ஒரு இடத்தில் இப்படி ஒரு விரக்தி மனநிலை வந்து விடுகிறது. காலையில் தலை கூட வாரிருக்கவில்லை. உடை விஷயத்தில் கூட கவனமில்லாத அளவிற்கு ஒருத்தியின் உச்சத்தை தொடும் நாள்களையும் கடக்க தானே வேண்டும். எதுவும் நினைக்காமல் பிரவீனா தயாராகி வந்தாள்.
மித்ரன் அவர்களுக்கான உணவை ஆர்டர் செய்து வைத்திருந்தான். பிரவீனா நீ ஏன் வந்தாய்? எதற்கு எங்களை கவனித்துக் கொள்கிறாய்? தள்ளிப்போ என்று எதுவும் சொல்லவில்லை. ஆதிரன் அவள் அழுத அழுகைக்கு அவள் பக்கம் கூட வரவில்லை. மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். நிச்சயம் அவன் உதவி தேவையாக இருந்தது. தற்போதைய நிலையில், அவனைத் தவிர வேறு யாரையும் நம்பும் நிலையில் அவள் இல்லை…
அது ஹைவே சாலை என்பதால், அதிகப்படியான பஸ் நிற்கவில்லை. வந்திருந்த ரெண்டு மூணு பஸ்களும் நல்ல கூட்டம். அடுத்த ஒரு பஸ்ஸில் ஒரு சீட் மட்டுமே ஃப்ரீயாக இருக்க..
பார்த்தவன் “பிரவீ, நின்னா,நின்னுட்டே தான் இருக்கணும். பஸ் போகப் போக கொஞ்சம் இடம் கிடைக்கும் நாம சென்னை வரைக்கும் போகணும் வா” என்று அவளை அழைத்துக் கொண்டவன். ஃப்ரீயாக இருந்த ஒரு இருக்கையிலும் அவளை அமர வைத்தான்.
ஒன்றும் சொல்லாமல் அமர்ந்தவள், மகனை வாங்க கை நீட்டினாள். ஆதிரன், மித்ரன் கழுத்தை விட்டு கையை கூட எடுக்கவில்லை. பஸ்ஸில் முக்கால்வாசிப்பேர் தூங்கிக் கொண்டு வந்ததால்.. இவள் அழுத்தி பிடித்து பிள்ளையை தூக்கினாலும் அதிகமாக கத்தி அழுதான்.
“அவன் அழுறான் பிரவீ.. நீ விடு நான் பாத்துக்குறேன்” என்று மித்ரனை தன் தோளில் போட்டுக் கொண்டான்.
“பஸ்ல இடம் இல்லை. நின்னுட்டே வரணும், உங்களுக்கு வேற சிரமம்” என்று தயங்கி சொல்ல..
“ஃபர்ஸ்ட் ஒரு விஷயத்தை நீ தெளிவா புரிஞ்சுக்க பிரவீனா. நான் உன்கிட்ட காதல் சொல்லி உன்னை கை பிடிக்க தான் நினைக்கிறேன். அதுக்கும் ஆதிரனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆதரன் என் பையன் தான். நாளைக்கு நம்ம இணையாம போனா கூட ஆதிரனை நான் ஒதுக்க மாட்டேன். என்னவோ அவனோட பயத்தையும், தயக்கத்தையும் கண்ணுல தெரியுற வலியையும் பார்க்கும்போது கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி என்னையே பார்க்கிற மாதிரி இருக்கு. ப்ளீஸ் எங்க ரெண்டு பேருக்கும் இடையில நீ வராத. ஆதிரன் எனக்கு கஷ்டமான சுமை கிடையாது. காலத்துக்கும் இஷ்டப்பட்டு சுமக்க நினைக்கிற சுமை” என்றவன், அவளை விட்டு தள்ளி போய் நின்று கொண்டான்.
ஏற்கனவே பஸ்ஸில் இடமில்லை. இதில் ஆதிரனும் அவனை விட்டு நகராமல் இருக்க.. அவனை தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே, பஸ்ஸில் நின்று வந்தான் மித்ரன்.
திருச்சி வரை கூட்டம் குறையவில்லை. அவசரத்துக்கு ஏறிய பஸ் பெரிதாக வசதிகள் இல்லை. முழுதாக மூன்று மணி நேரம் மகனை தோளில் போட்டு நின்று வந்தான் மித்ரன். அவன் அவ்வாறு நின்று வர பிரவீனாக்கும் தூக்கம் அண்டவில்லை அவர்களையே பார்த்து வந்தாள். திருச்சி வந்ததும் இடம் கிடைக்க, முழுதாக மூன்று சீட்டு இருக்கும் இருக்கையை டிக்கெட் எடுத்து வாங்கிக் கொண்டான் மித்ரன். ஜன்னலை அடைத்து மகனை படுக்க வைத்தவன்.. இந்த ஓரம் அமர்ந்து கொண்டான். அவனுக்கு நேரே அமர்ந்திருந்தது பிரவீனா தான். இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தாள்.
ஆதிரன் நல்ல உறக்கத்தில் இருந்தான். மித்ரன் அருகில் இருப்பதாலேயே, தன்னை பாதுகாக்க ஆள் இருக்கு என்ற நிம்மதியில் பிரவீனாவும் ஒரு பக்கம் உறக்கத்திற்கு சென்றாள். அடுத்து ஓய்விற்காக பஸ் ஒரு அரை மணி நேரம் நிற்க. மித்ரன், பிரவீனாவை எழுப்பினான்.
“பிரவீ, எழுந்து வா டீ குடிச்சிட்டு, பாத்ரூம் போயிட்டு வா” என்று அழைக்க. அவள் பிள்ளை எங்கே என்று பார்த்தாள். ஆதிரன், மித்ரன் கைபிடித்து நின்றிருந்தான் இப்போது கொஞ்சம் பரவாயில்லை. முகம் தெளிச்சியாக இருந்தது. அவன் அம்மாவை பார்த்து சிரிக்கவும் செய்தான்.
பிரவீனா பாத்ரூம் போக, மித்ரன் மகனை தூக்கிக்கொண்டு கடைகள் இருக்கும் பக்கம் செல்வது தெரிந்தது. பிரவீனா திரும்ப வரும் பொழுது மகனுக்கு ஏதோ வாங்கி ஊட்டி விட்டு கொண்டு இருந்தான் மித்ரன். அவள் வந்து அமர்ந்ததும் அவளுக்கு டீயை கொடுத்தவன் தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.
பிரவீனா மகனைப் பார்க்க அவனை கவனிக்கும் முழு பொறுப்பும் மித்ரன் உடையதே… அதைத்தான் ஆதிரனும் விரும்பினான். மகன் தந்தை பாசத்திற்கு ஏங்குகிறான் என்பதை காணும் பொழுது பிரவீனாவிற்கு தொண்டை அடைத்தது. மித்ரன் மகனுக்கு ஊட்டிக்கொண்டே தன் டீயை பருக, அவர்கள் இருவரையுமே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் பிரவீனா.
“ஆதிரன் அம்மா டாய்லெட் போனும்” என்றான்.
“என்ன? என்னடா ஹோட்டல்ல இருந்து தானே வந்தோம். அப்பவே சொல்றதுக்கு என்ன” என்றவள் அவனை கூட்டிக்கொண்டு போய் சற்று தள்ளி வெளியே அமர வைத்தாள்.
ஆனால், பள்ளியில் சொல்லிக் கொடுத்த பழக்கத்திற்கு பொதுவெளியில் அமர மாட்டேன் என்று ஒரே அழுகை ஆதிரன்.
“ஆமா, நீ பெரிய ஆளு பாரு.. வெளியில உட்கார மாட்டியோ? பேசாம உட்காரு அத்து” என்று அதட்டும் போதே மித்ரன் வந்து விட்டான்.
“என்னாச்சு?”
“அவனுக்கு டாய்லெட் போனுமாம்.ஆனா, சார் வெளியே உட்கார மாட்டாராம். பாத்ரூமில் தான் போகணுமாம்” என்றதும்,
“நல்ல பழக்கம் தானே பிரவீ”
“நல்ல பழக்கம் தான். ஆனால், சூழ்நிலை ஒத்து வரணுமே… ஜென்ஸ் டாய்லெட்குள்ள நான் எப்படி போக முடியும்? லேடீஸ் டாய்லெட்குள்ள இவன் எப்படி கூட்டிட்டு போக முடியும். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா? என்றாள் தயங்கி…
“அதான் நான் இருக்கேன் நான் பாத்துக்குறேன்” என்று மகனை அழைத்து சென்றான் மித்ரன். பிரவீனாவுக்கு தான் சங்கடம். ஆதிரனை சுத்தம் செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து தூக்கும் பிரேம் கூட அவ்வாறு செய்ய மாட்டான். அம்மாவையோ தன்னையோ தான் அழைப்பான். அப்படி இருக்க மித்ரன் எப்படி என்று பிரவீனா தயங்கும்போதே… அதெல்லாம் தனக்கு ஒன்றும் இல்லை என்று ஆதிரனை சுத்தம் செய்து தூக்கி வந்தான் மித்ரன்.
பிரவீனா என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. மீண்டும் பஸ் கிளம்ப முன் மாதிரியே இருவரும் இடைவெளி விட்டு தான் அமர்ந்திருந்தார்கள். ஆதிரனை நன்றாக படுக்க வைத்து அவனை சுற்றி தன் கைகளை போட்டு அமர்ந்து கொண்டான் மித்ரன்.
அவனையே தான் பார்த்து இருந்தாள் பிரவீனா என்ன மாதிரியான அன்பு இவனது… ரத்த சொந்தத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டவள் பிரவீனா. உரிமையான இடத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவன் ஆதிரன். தான் என்ன அவ்வளவு பெரிய அழகியா? தன் மேல் ஏன் இவ்வளவு காதல் உனக்கு?
“தூங்கு பிரவீ, பக்கத்துல தான் நான் இருக்கேன். ரொம்ப எதையும் யோசிக்காத.. வாழ்க்கையில பெரிய அடிபட்டவங்க அடுத்தது எதையும் நல்லதா யோசிக்க முடியாது தான். ஆனா, நம்மளோட சக்திக்கு மேல கடவுள் நம்மை சோதிக்க மாட்டார்” என்றதும் விரக்தியாக நினைத்து கொண்டாள்.
“இதற்கு மேல் என் வாழ்வில் என்ன இருக்கு”
ஆனாலும், மித்ரன் அருகில் இருக்கிறான் என்ற ஒரு நிம்மதி இருந்தது மனம் பாதுகாப்பாக உணர்ந்தது. அவளையும் மீறி இந்த பாதுகாப்பு உணர்வு அவளுக்கு பிடித்திருந்தது. நாம்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருந்து.. என்னை பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கிறார். நிம்மதியாக உறங்கலாம் என்ற நிலை எத்தனை பேருக்கு கொடுத்து வைத்திருக்கும்… தனக்கு என்று நினைத்த அவளுக்கு மித்ரன் அருகில் இருக்கிறான் என்ற பாதுகாப்பு உணர்வே உறக்கம் கொள்ளச் செய்தது.
அங்கு சாரதா கத்தி கொண்டு இருந்தார்.
“எப்படிங்க உங்களால இதை ஏத்துக்க முடியுதா? ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தையோடு இருக்கிற ஒரு பொண்ண போய்… இவனுக்கு ஏங்க புத்தி இப்படி போகுது” வருத்தமாக சாரதா சொல்ல,
“நாம ஏத்துக்கிறோமா இல்லையா என்ற இந்த விஷயமே கிடையாது சாரதா அவன் அதை பெருசா யோசிக்கவும் இல்லை அவை முடிவு எடுத்துட்டான் அந்த பொண்ணு தான் அவன் மனைவி” என்றார் சத்தியமூர்த்தி.
“அவன் சொன்னா எல்லாம் ஆச்சா? அப்புறம் பெத்தவங்கன்னு நாம எதுக்கு?”
“அதைத்தான் உன் மகனும் கேக்குறான்.. அப்படி பெத்தவங்கதன்னு எனக்கு என்ன செஞ்சீங்கன்னு”
“என்ன செய்யல? அவனுக்காகவும், அவன் வாரிசுக்காகவும் தான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கோம். ஆனா, அவன் யாரோ பெத்த பிள்ளைக்கு அப்பாவாகி, நம்ம சொத்து எல்லாம் அங்க தூக்கி கொடுக்க நினைக்கிறானா? நான் ஒரு நாளும் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” வீம்பாக சொன்னார் சாரதா.
அவை உன்கிட்ட பர்மிஷனே கேட்கல சார் தான் ஜஸ்ட் இன்பார்ம் தான் பண்றான் நாளைக்கு அவன் கல்யாணத்துக்கு கூப்பிடுவானோ என்னவோ” என்று நிதர்சனத்தை கணவர் சொன்னதும்,
“என்னங்க இப்படி சொல்றீங்க” என்றார் சுருதி குறைந்து…
“நிதர்சனம் இதுதான் சாரு. நம்ம கைக்குள்ள நிக்கிற பையன் நம்ம மகன் கிடையாது. அப்படி கைக்குள் வைத்து நாம வளர்க்கவும் கிடையாது. அவனுக்காக சொத்து சேர்த்து வச்சா எல்லாம் ஆச்சா?.. வேற என்ன பண்ணுனோம் நாம? கூட இருந்து வளர்த்தோமா? நல்லது கெட்டது சொல்லித் தந்தம்மா? ஒழுக்கம்னா என்ன? வாழ்க்கை என்றால் எப்படி இருக்கும்? ஏதாவது அவனுக்கு புரிய வச்சோமா? இரண்டு பிள்ளைகளை எப்படி பார்த்தோமோ, அது மாதிரியா அவனை பார்த்தோம். ஜாதகம் பேரை சொல்லி பிள்ளையை நம்மகிட்ட இருந்து தள்ளி வச்சோம். இன்னைக்கு அவன் நம்மை எல்லா விட்டு தள்ளி நிக்கிறான்” சாரதா ஒன்றும் பேச வில்லை.
“சாதாரண அம்மா மாதிரி நீயும் நடந்துக்காத சாரு. நிதர்சனத்தை புரிஞ்சுக்க.. அவன் முன்னாடி இருந்த வாழ்க்கைக்கு, இப்ப எவ்வளவோ மாறி இருக்கான். எத்தனை கோவில் போயிருப்ப அவனுக்கு ஒரு கல்யாணம் ஆகணும்னு… இன்னைக்கு அவனே கல்யாணம் பண்ணிக்கிற முடிவு எடுத்து இருக்கான். அதுக்காக சந்தோஷ படு. அந்த பொண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணா இருந்தா என்ன? ஒரு குழந்தையோடு இருந்தா கூட என்ன நம்ம பையனுக்கு புடிச்சிருக்கு”
“இதுக்கு முன்னால அவன் கெட்டு சீரழிஞ்சான். எவ்வளவு வருத்தப்பட்டோம். எத்தனை நாள் தூங்காம இருந்தோம். இன்னைக்கு அவன் ஒரு நிலையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து இருக்கான். யாரும் சொல்லாம அந்த பொண்ணு அவனை நல்ல வழியில் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கு.. அந்த நன்றி கடன் நமக்கு இருக்கணும் சாரு.. அவனுக்கு நாம பணத்த தவிர வேறு எதையும் பண்ணல… பெத்தவங்களா அவை விருப்பப்பட்ட வாழ்க்கைவாது அமைச்சு கொடுப்போம். நான் முடிவு பண்ணிட்டேன். உனக்கு பையன் வேணும்னா, அவனோட உறவு வேணும்னா.. அவன் விருப்பத்தை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும் சாரு” என்றார் கண்டிப்பாக…
“என் பிள்ளையோட மனசு நான் இப்பதான் புரிஞ்சுகிட்டேன். அவன் என்கிட்ட ஆசைப்பட்டு கேட்டதை, என்னால முடியாதுன்னு சொல்ல முடியாது. நாளைக்கு நாம சென்னை போறோம். சம்பந்தம் பேசுகிறோம் அவ்வளவுதான்” என்றார் முடிவாக.
தானாக ஒரு பெருமூச்சு வந்தது சாரதாவுக்கு… அவரால் பிரவீனாவை கூட ஒரு மாதிரி ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் யாருக்கோ பிறந்த வாரிசை தன் வாரிசாக ஏற்றுக் கொள்ளத்தான் மனம் வரவில்லை. என்ன செய்ய மகன் தங்கள் கைக்குள் நிற்கவில்லையே.. ஏதாவது சொல்லப் போய் தங்கள் உறவையே வெட்டிக் கொள்வானோ என்று பயமாகவும் இருந்தது.
error: Content is protected !!