Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சாம்பலில் முளைத்த எரிமலரே..!

எரிமலர் 1

எரிமலர் 1

அந்தி சாயும் கதிரவனின் பொன்ரேகைகளால் கடலன்னை தங்க நிறமாய் ஜொலிக்க, பறவைகள் தம்  கூட்டிற்கு திரும்ப, மிதமான காற்று  என ரம்மியமான சூழ்நிலையில் சென்னையை நோக்கி பயணித்தது அந்த பிரமாண்டமான சரக்கு கப்பல். பேங்காக் நகரிலிருந்து புறப்பட்டு கிட்டதட்ட பனிரெண்டு மணி நேரம் கடந்த நிலையில் இன்னும் பதட்டத்துடன் கப்பலின் மேல்தளத்தில் நாலாபக்கமும் கடலை பார்த்தபடி நின்றிருந்தான் விக்டர். சென்னையின் பெரும்புள்ளிகளில் ஒருவரான சேவியர் பினிதாவின் ஒரே மகன்.. காலங்காலமாய் தமிழகத்தில் உள்ள புகழ்மிக்க நகைக்கடைகளுக்கு மொத்தமாக தங்க கட்டிகளை விற்பதே இவர்களின் குலத்தொழில்..கணக்கில் வருவது பாதி மீதி கடத்தல் பொருட்களாய் பெரும்பாலும் கஸ்டம்ஸ் அதிகாரிகளின் சோதனைகளுக்கு அகப்படாமல் லாவகமாய் கடத்தல் செய்வதில் கில்லாடி இந்த விக்டர்.



Advertisement

ஆயினும் அவன் பதட்டத்திற்கு காரணம் கடற்கொள்ளையர்கள்..அவர்களிடம் தப்பிப்பது இயலாத காரியம்..கணக்கில் வருவதை இன்ஷீயூர் செய்தமையால் கவலையில்லை, கணக்கில் வராத தங்க கட்டிகளே  பெரும்பங்கு எனும் போது அதை குறி வைத்து களவாடினால் அவனுக்கு பெருநஷ்டமே.

தேநீர் கோப்பையுடன் கடலை வெறித்திருந்தவனை அணுகினாள் அந்த அழகுப்பாவை..

“எக்ஸ்யூஸ்மி மிஸ்டர்..” என்ற குரலில் திரும்பிய விக்டர் கேள்வியாய் அவளை பார்க்க.. 

Advertisement

“ஹாய் மை நேம் இஸ் ஷாலினி..பூர்வீகம் தாய்லாந்து..வேலை விஷயமா சென்னை போறேன்..பர்ஸ்ட் டைம் இன் ஷிப்..சோ பீலிங் லிட்டில் அன்சேஃப்..” என சற்று தயங்க, கேள்வியாய் அவளை ஏறிட்டவன்..

Advertisement

“சோ..?என்க்கிட்ட என்ன எதிர்பார்க்கறீங்க..?.. 

இல்ல, வேலை விஷயமா முன் பணம் கட்டறதுக்கு 10 லட்சம் கொண்டு வந்திருக்கேன்..இஃப் யூ டோண்ட் மைண்ட் உங்க கேபின் ல ஸ்டே பண்ணிக்கட்டுமா இன்னிக்கு நைட்..?” என அப்பெண் கேட்கவும் ஐயத்துடன் விக்டர்..

“முன்னபின்ன தெரியாத என்னை மட்டும் எப்படி நம்புறீங்க..? 

Advertisement

சார், உங்கள பார்த்தா என் தாய் மாமா பீல் வருது, சோ கேட்டேன்..அட்லீஸ்ட் என் டிராலி ய மட்டும் வச்சுகங்க ப்ளீஸ்..” என அவள் சற்று பின்வாங்கினாள். சில நொடிகள் யோசித்தவன் பின்..

“இட்ஸ் ஓகே, என் ரூம் ல தங்கிக்கோங்க..மாலினி.. 

ஷாலினி..” என அவள் திருத்த விக்டர்..

“ம்ம்..காட் இட்..” என அவன் கீழே செல்ல தன் மொபைலில் ‘டிராப் (trap)இன் மை டார்கெட்’ என யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பினாள் ஷாலினி, மாலினி என்ற மோனிகா.

இரவு உணவை முடித்து கொண்டு வந்த விக்டர் மோனிகாவிடம்.. 

“நீங்க உள்ள இருக்கிற டிரஸ்ஸிங் ரூம் ல படுத்துக்கங்க..லாக் பண்ணிக்குங்க..மார்னிங் பார்க்கலாம்..” என கூற சரியென தலையாட்டியவள், 

“சார், கொஞ்சம் உங்க வாஷ் ரூம் யூஸ் பண்ணிக்கவா..? 

ம்ம்ம்..” என அவன் நகர்ந்தான். சில நிமிடங்களில் வெளியே வந்தவள் அந்த சிறிய அறையினுள் சென்று தாளிட்டு கொண்டு காத்திருந்தாள் மோனிகா.

நள்ளிரவு 2.00 மணியளவில்சத்தமில்லாமல் கதவை திறந்து எட்டி பார்க்க, அங்கே விக்டர் தென்படாததால் வெளியே வந்து வாஷ்ரூமில் அவன் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டவள், துரிதமாய் அவன் கை கால்களை கொண்டு வந்திருந்த கயிற்றில் கட்டிவிட்டு வெளியே வந்து அவனின் தங்க கட்டிகள் இருந்த டிராலியை எடுத்தவள் திறக்க சாவியை தேடினாள்..அறை முழுவதும் தேடியும் சாவி கிடைக்காததால் எங்கே என யோசித்தவள் வேகமாக விக்டரிடம் விரைந்தாள். இன்னும் மயக்கத்திலிக்கிறான் என தெரிந்துக்கொண்டு அவன் கழுத்து சங்கிலியில் உள்ள சிறு சாவியை லாவகமாய் எடுத்தாள் மோனிகா. அறைக்குள் வந்து ட்ராலியை திறந்து அதில் உள்ள தங்கங்களை தன் பெரிய தோள் பைக்கு மாற்றியவள் அறையை விட்டு கிளம்பும் முன் நிதானமாக கதவை மூடினான் விக்டர்.

முதலில் அதிர்ந்த மோனிகா, சட்டென சுற்றுமுற்றும் தேட..அவனோ..

“இங்க என்னை அடிக்க எதுவும் கிடைக்காது…என்னா நடிப்பு டா..? ஒழுங்கா அந்த பேக்கை என்க்கிட்ட கொடுத்திட்டா யூ ஆர் சேஃப்..” என அவளருகில் வர, பின்னே நகர்ந்தவள் சட்டென சிறு கத்தியை நீட்டி..

“கிட்ட வந்த சொருகிடுவேன்..” என மிரட்டவும் நக்கலாய் சிரித்த விக்டர்..

“ஆக்சுவலி உன்னை பர்ஸ்ட் பார்த்தப்ப நோ பீலிங்ஸ் அட் ஆல், பட் சந்தேகப்பட்டேன், அது சரியா போச்சு..நீ ரூம் ஸ்பேரயர் ல மயக்க மருந்து கொஞ்சம் கம்மியா மிக்ஸ் பண்ணிருக்கனும்..அப்பவே நீ எவ்வளவு தூரம் போற னு பார்க்கனும் னு தோணிச்சு..நாட் பேட்..ஐம் இம்ப்ரஸ்ட்..” என கூறியபடி மோனிகாவை நெருங்கினான் விக்டர்.

“விக்டர்..நான் யார் னு தெரியாம பேசிட்டிருக்க..மரியாதையா என்னை போக விடு, இல்ல நீ உயிரோட இருக்கமாட்ட.. 

ஓகே தென் ரிவீல் யுவர் ஐடன்டிட்டி..தெரிஞ்சிட்டே சாகறேன்..” என அவள் சுதாரிக்கும் முன் வளைத்து பிடித்தவன் தோள் பையை எடுக்க முயல திமிறினாள் மோனிகா.

அவனின் கிடுக்கு பிடியில் தப்பிக்க முடியாமல் திணறியவள் அவனின் மூக்கை தன் கைமுட்டியால் பலமாக தாக்க, தடுமாறிய விக்டர் கீழே சாய, சட்டென கதவை நோக்கி ஓடிய மோனி, இவன் வருவதற்குள் தப்பித்தவளை கண்டு ஆத்திரத்துடன் அவளை துரத்த ஆரம்பித்தான்.

நடுநிசியென்பதால் வெறிச்சோடியிருந்த கப்பல் மேல்தளத்திற்கு விரைந்தவள் தூரத்தில் விக்டரை கண்டு அவன் நெருங்கும் முன் கப்பலின் மூலையை அடைந்து தன் டாப்ஸை கலைந்தவள், உள்ளுக்குள் இருந்த லைஃப் ஜாக்கெட்டுடன் கடலினுள் பாய்ந்தாள்.

‘ஓ நோ..’..என கத்தியபடி விரைந்து வந்த விக்டர் எட்டிப்பார்க்க, தூரத்தில் சிறிய விசைப்படகு ஒன்று மோனியை நெருங்குவதை கண்டு யார் இந்த புதிய கொள்ளையர்கள் என யோசிக்க.. அதற்குள் படகை பற்றிய மோனிகாவை உள்ளிழுத்து போட்டுக்கொண்டு சீறி பாய்ந்தது அந்த சிறிய படகு.

சரக்கு கப்பலை கடக்கையில் விக்டரை நோக்கி ப்ரியா வாரியர் ஸ்டைலில் சமிக்ஞை செய்து  எள்ளலுடன் ஊதி தள்ளிய மோனிகாவை பார்க்க பற்றிக்கொண்டு வந்தாலும் அவளின் சமயோசித யுக்தியில் மயங்கி தான் போனான்..தங்கத்தை மட்டுமல்லாது அவன் மனதையும் அள்ளிக்கொண்டு சென்றவளை நேரம் பார்த்து பழி தீர்க்க காத்திருந்தான் விக்டர்.

அமைதியான ஏரி, அடுக்கடுக்கான பசுந்தேயிலைத் தோட்டங்கள், அதற்கு வேலி போல் அமைந்த நீண்ட மரங்களை உடைய காடுகள், முடிவில் பசுமையான பள்ளத்தாக்குகள் இது தான் மேகமலையின் அடையாளம், உலகத்து அழகை தன்னகத்தே கொண்டுள்ள மேகமலை ஒரு கடவுளின் தேசம், சிறிய மக்கட்தொகையை கொண்ட அழகிய சுற்றுலா தளம். மலையின் கிழக்கே 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது ஆர்.கே. ஆர்ட் கேலரி..கலைநயம் மிக்க சிற்பங்கள், ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் என சிறியது முதல் பெரியது வரை எண்ணற்ற வகைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்படுவதால் சுற்றுலா வாசிகள் பலர் இங்கு வந்து ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி செல்வர்..இக்கலைக்கூடத்தை பராமரிப்பது சாம்பசிவம்..வயது எழுபதை கடந்தாலும் இன்றும்சுறுசுறுப்பாய் தன் கடந்த கால கசப்புகளை மறக்க முழுமூச்சாக தன்னை அர்ப்பணித்துகொண்டவர்..தன் பேத்திக்கு ஒரு நல்வாழ்க்கை அமைய இன்றும் முனைந்து கொண்டிருப்பவர்.

வழக்கம் போல சீக்கிரமாக கடைக்கு வந்தவர் அங்கு பெருக்கி கொண்டிருக்கும் வேலையாட்களை பார்த்து..

“சீக்கிரம் சந்திரா..கடை திறக்கிற நேரமாச்சு..” என கூறிவிட்டு தன் அறையில் அமர்ந்தார்.

“இந்தாங்க டீ குடிங்க..தாத்தா” என குவளையில் இஞ்சி, ஏலக்காய் மணத்துடன் நீட்டிய மோனிகாவை பார்த்தவர் புன்முறுவலுடன்..

“டான் 2 க்கு காலையில இங்க என்ன வேலை..?

தாத்தா..” என சிணுங்கிய மோனி..

“உங்களுக்கே தெரியும் மேடம் பத்தி, இன்னிக்கு நாட்டியலாயாக்கு லீவ் விட்டாங்க…சோ உங்களுக்கு மதியம் லஞ்ச் சமைச்சி எடுத்து வர்றேன் னு சொன்னாங்க..அதான் இங்க வந்திட்டேன்..

ம்ம்…சரி கஸ்டமர்ஸ கவனி…நான் கணக்கு வழக்கு சரி பார்த்துட்டு வர்றேன்” என சாம்பசிவம் வேலையில் மூழ்கினார்.

மதியம் 12.00 மணியளவில் ஊதா நிற ஸ்க்கூட்டி பெப் வாகனத்தில் சாப்பாட்டு கூடையுடன் வந்திறங்கியது 5’10” ல் உயரத்தில் ஓர் அழகிய மக்மல் பூரி(இந்த பேர் வச்சது நம்ம ஹீரோ)..இளமஞ்சள் நிற குர்தி ப்ளூ டெனிம், காற்றில் பறக்கும் கூந்தலை ஒற்றை க்ளிப்பில் கட்டிவைத்து இருதோள்கள் வரை படர, மாநிறத்துக்கும் சற்று கூடுதலாய் வசீகரிக்கும் பேசும் கண்களுடன் பார்ப்பவரை திரும்பி பார்க்க வைக்கும் பாந்தமான அழகுடன் மிடுக்காய் நடந்து வந்தாள் ருக்விஜா..சாம்பசிவத்தின் ஒரே செல்ல பேத்தி.

ருக்விஜாவை பார்த்ததும் விரைந்து வந்த மோனிகாவை தடுத்து நிறுத்தியவள்..

“ஹே மோனி சில்…இங்க நான் உனக்கு பிரண்ட் தான் னு எத்தன தடவை சொல்றது..?..

பழகிடிச்சு மேம்..ம்ப்ச் சாரி ருக்ஸ்..

ஓகே..தாத்தா..?

கேஷ் ல இருக்காரு..

ம்ம்…நீ பார்த்துட்டு அவரை அனுப்பு..

யா..” என மோனி சென்றாள்..அறைக்கு கூடையுடன் சென்றவள் கைகளை கழுவிக்கொண்டு டேபிளில் பாத்திரங்களை அடுக்கி வைத்து வாழை இலையை கழுவி வைக்கவும் சாம்பசிவம் உள்ளே நுழைந்தார்.

“என்ன பாப்பா இன்னிக்கு அதிசயமா சமைச்சு எல்லாம் கொண்டு வந்திருக்க..?” என தன் பேத்தியிடம் கேட்க..

“நத்திங் ஸ்பெஷல் தாத்தா…இன்னிக்கு ப்ரீயா இருந்தேன் சோ ரொம்ப நாளாச்சு னு நானே சமைச்சேன்..உட்காருங்க..

நீயும் சாப்பிடு பாப்பா..

இல்ல நானும் மோனியும் சாப்பிட்டுக்குறோம்..” என இலையில் சாதத்தை பரிமாறி முளைக்கீரை பருப்பு கடையலை ஊற்றி, முளை கட்டிய பச்சைபயிறு சுண்டல்,வாழைப்பூ வடையும் பரிமாறியவள் ஒரு குவளையில் மசாலா நீர்மோரை ஊற்றி வைத்து விட்டு அமர்ந்தாள்.

“அருமையா இருக்கு பாப்பா..” என ருசித்து சாப்பிட்டவர் கைகளை கழுவிக்கொண்டு மோனியை அனுப்பி வைக்க இரு பெண்களும் உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். திரும்பும் வழியில் மோனி ஹாஸ்டலில் இறங்கி கொள்ள, ருக்வி அவளிடம்..

“நாளைக்கு மார்னிங் நாட்டியாலயா வந்துடு, மேல்( Male) டான்சர்ஸ் இன்டர்வியூ நாளைக்கு தானே..?

ஆமா ருக்ஸ்..டிரைவ் சேஃப்..பை..” என மோனி விடைபெற ருக்வி தன் வீட்டிற்கு திரும்பினாள்..அவள் அன்னை பார்கவி புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர்..பல மேடைகளில் தன் திறமையை நிலைநாட்டி பல சிறுவ சிறுமிகளுக்கு நாட்டியம் கற்றுத்தந்தவர் பார்கவி..இளம்வயதியிலேயே ருக்வியும் பரதநாட்டியம் கற்றிருந்தமையால் அவளின் அன்னையின் ஆசையை பார்கவியின் நாட்டியலாயா மூலம் நிறைவேற்றி இன்றளவும் தன்னால் முடிந்த வரை இலவசமாகவும் கற்று தருகிறாள்.

மறுநாள் காலை மேகமலை முருகன் கோயிலின் அருகே அந்த பிரமாண்டமான வெள்ளை மாளிகை ‘ பார்கவி நாட்டியாலயா’ என்ற பொன் நிற எழுத்துக்களை முகப்பில் தாங்கி கொண்டு ஒரு வித தெய்வீகத்தன்மையை சுற்றுபுறத்திலும் பரப்பியிருந்தது..காற்றில் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் பின்னனியில் விடாது ஒலிக்க மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

சரியாய் 10.00 மணியளவில் வெளிர் சாம்பல் நிற டாடா ஹேரியர் கார்  அதிவேகமாய் நாட்டியாலயா வளாகத்திற்குள்  சீறிப்பாய்ந்தது..அடர் ரோஜா நிற பாந்தினி சில்க் புடவையில் அழகிய ரோஜாக்குவியலோ என பார்ப்பவர் ஐயமுற இறங்கினாள் ருக்விஜா, மறுபக்கம் மோனிகாவுடன்.

அலுவல் அறைக்கு போகும் வழியில் அனைவரின் காலை வணக்கத்தை சன்ன சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு நடந்தாள் ருக்வி. தன் அன்னையின் புகைப்படத்திற்கு மாலையிட்டு விளக்கேற்றி தன் அன்றாட வேலைகளை பார்க்கலானாள்.

சில நிமிடங்கள் கழித்து ருக்வி அழைத்ததன் பேரில் கதவை தட்டி உள்ளே வந்த மோனியிடம்..

“இன்டர்வியூக்கு கேன்டிடேட்ஸ் வந்துட்டாங்களா..?

எஸ் மேம், ஒருத்தர் மட்டும் ஆன் தி வே…

ஓகே, லெட்ஸ் ஸ்டார்ட்..” என சொல்லவும் ஒவ்வொருவராய் உள்ளே அனுப்பினாள் மோனி, இன்னும் 3 பேர் மீதம் இருக்கும் நிலையில் நாட்டியாலயா வாயிலில் வந்து நின்ற ஓலா வண்டியில் தன் பயணப்பொதிகளுடன் வலது காலை கீழே வைத்தான் ஆர்யவீர்..ஆறடிக்கும் சற்று கூடுதலான உயரம், அலையலையாய் படியாத கேசம், அகன்ற நெற்றி, களையான முகம், சிரிக்கும் கண்கள் என வலிமையான போர்வீரனென அம்சமான மன்மதனாய் பாதம் பதித்ததும் சட்டென வாசலை நோக்கி தன் பார்வையை வீசினாள் ருக்வி.

திரும்பி நின்று ஓலா டிரைவரிடம் பணத்தை செலுத்திக்கொண்டிருந்த நெடியவனை கண்டு தன் மனம் தடம் புரள்வது ஏன் என புரியாமல் தவித்தாள் ருக்வி.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!