Skip to content
Post Views: 7,191
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் – 1
Advertisement
அந்த ட்ராவலர் கார் திருச்சியில் இருந்து பெங்களூர் ஏர்போர்ட் நோக்கி சென்று கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
பல்லவி நாளை பெங்களுரிலிருந்து லண்டனுக்கு வேலைக்கு செல்வதால் அவளின் மொத்த குடும்பமும் பெங்களூருக்கு ஏர்போர்ட்க்கு பெரிய ட்ராவலரில் , வழி அனுப்ப வந்து கொண்டு இருந்தனர்.
பல்லவியின் தாய் பைரவி முகத்தை கோபமாக வைத்து இருந்தார்.
Advertisement
பல்லவியின் தந்தை செல்லத்துரைக்கு மகள் லண்டனுக்கு வேலைக்கு செல்வது சந்தோசமாகவே இருக்க, பார்க்கும் அனைவரிடம், என் பொண்ணு லண்டனுக்கு வேலைக்கு போறா என்று சொல்லி, சொல்லியே சந்தோஷப்பட்டார்.
பல்லவியின் அக்கா ஜோதி கூட தங்கை லண்டனுக்கு வேலைக்கு செல்வதை அவளின் மாமியார் சொந்த பந்தத்திடம் சொல்லி பெருமைப்பட்டாள்.
வருத்தப்படுவது பல்லவியின் அன்னை பைரவி மட்டுமே.
தாயின் பக்கத்தில் அமர்ந்திருந்த பல்லவி அவளின் அம்மாவிடம் பேசிக்கொண்டே வந்தாள். இரண்டு வருஷம் தான் மம்மி. நான் வந்துருவேன், தினமும் வீடியோ கால் பண்ணுறேன், என்னை போனில் பாத்துக்கோ பைரவிம்மா.
உன்ன விட்டுட்டு இரண்டு வருஷம் நான் எப்படி இருப்பேன் போடி என்று கண் கலங்கியவரை அணைத்து கொண்டவள்.
அம்மா, அம்மா அழாத ஒரு இரண்டு வருஷம் தான்.
நான் சித்தப்பா வீட்டுல தானே தங்கபோறேன் ஏன் வருத்தப்படுற.
அது தான் எனக்கு வருத்தமே. உன் சித்தி யார்கிட்டையும் பேச மாட்ட, பிள்ளைகளை இங்கே விட மாட்டா, அங்க உன்ன எப்படி அனுப்புறது. உன் சித்தப்பா தான் 3 வருஷத்துக்கு ஒரு வாட்டி லண்டனுல இருந்து வந்துட்டு போவார்.
அம்மா என்னுடைய ஆசைமா லண்டனுக்கு போறது, புரிஞ்சுக்கோ என்று மகள் கெஞ்சவும்.
கண்ணை துடைத்தவர் ஆனா ஒன்னு.
என்னம்மா.
நான் யார, சொல்லுறேனோ அந்த பையனத்தான் நீ கல்யாணம் பண்ணனும் சரியா.
ஓகே, நீ யார கைகாட்டுனாலும் நான் கண்ண மூடிக்கிட்டு தாலி கட்டிக்குவேன் போதுமா என்று தாயிடம் வாக்கு குடுத்துவிட்டாள்.
எல்லோரும் பெங்களுர் ஏர்போர்ட்க்கு வந்து சேர்ந்தனர் பல்லவியை வழி அனுப்ப.
அவளின் அம்மா பைரவி, அப்பா செல்லத்துரை, அக்கா ஜோதி, மச்சான் செல்வராஜ், ஜோதியின் மகன் ஹரி, என்று இன்னும் சிலர் வந்திருந்தனர்.
எல்லாரிடமும் சொல்லிக்கொண்டவள். பைரவியை அணைத்து கொண்டு உடம்ப பாத்துக்கோ மா என்றவள், தந்தையிடம், சகோதரியிடமும் சொல்லி விட்டு, கத்தார் செல்லும் விமானத்தில் ஏறினாள். முதலில் கத்தார் சென்று, பின்பு லண்டன் விமானத்தில் ஏறி லண்டனுக்கு சென்றாள்.
எப்படியோ லண்டன் வந்து சேர்ந்து விட்டாள்.
அவளின் நீண்ட வருட கனவிது.
பல்லவியின் சித்தப்பா ஞானதுரை இந்தியாவில் படித்து முடித்து, லண்டனுக்கு வேலைக்கு வந்து. இங்கேயே திருமண முடித்து செட்டில் ஆகி விட்டார். அவர் 3 வருடத்திற்கு ஒரு முறை இந்தியா வருவார். அவர் வரும் போது பல்லவியின் வீட்டில் தான் தங்குவார். அவர் லண்டனை பத்தி பேசும் பொழுது ஆர்வமாக கேட்பாள். ஞானதுரை லண்டனை பத்தி சொல்லியதை கேட்டு வளர்ந்தவள்.
நான் படித்து முடித்ததும் கண்டிப்பாக லண்டன் செல்வேன் என்று நினைத்தவள். இப்போ லண்டன் வந்து சேர்ந்தாள்.
நீண்ட மூச்சை இழுத்து விட்டவாள். இனி இரண்டு வருடம் இங்கேதான் என்று நினைத்து ஏர்போர்டில் இருந்து வெளியில் வந்து, ஞானதுரை சித்தப்பாவை தேடினாள். அவர் இருப்பது போல் தெரியவில்லை என்று தன்னுடைய போனை எடுத்து அவருக்கு அழைக்க.
பல்லவிமா… இதோ.. டா 5 மினிட்ஸ் வந்துருவேன் வெய்ட் பண்ணு என்று கூற.
ஓகே சித்தப்பா என்று அங்கே ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டு ஏர்போர்ட்டுக்கு வருபவரை வேடிக்கை பார்த்திருந்தாள்.
அவள் எதிரில் ஒரு லண்டன் பெண்மணி நிறைமாத கர்பிணியா, தோளில் ஒரு குழந்தையை வைத்திருந்தாள் அவளின் முன்னாடி நிறைய லக்கேஜ் இருந்தது. அந்த பெண் தன்னுடைய வாட்சை பார்ப்பதும், யாரையோ தேடுவது போல் இருந்தது.
அந்த பெண்மணிக்கு ஏதோ உதவி தேவை போல என்று நினைத்தவள். அவள் அருகில் சென்று மே,ஐ, எல்பு, யூ என்று கேட்க.
எஸ் என்றவள், ஆங்கிலத்தில் நான் அடுத்த பிளைட்டில் போகனும், என் ஹஸ்பண்ட் டிராப்பிக்கில் மாட்டிக்கிட்டார், டைம் கம்மியா இருக்கு லக்கேஜை, லக்கேஜில் போடனும், குழந்தையை வைத்து கொண்டு என்று புலம்பினாள்.
நான் குழந்தையை பார்த்துக்கிறேன் என்று அவளின் தோளில் தூங்கி கொண்டு இருந்த குழந்தையை இவள் தோளில் படுக்க வைத்து தட்டி கொடுக்க.
அந்த பெண்மணி இவளுக்கு நன்றி சொல்லிவிட்டு லக்கேஜை எடுத்து சென்றவள் லக்கேஜில் வெய்ட் பார்த்து லக்கேஜில் போட்டு வந்தவள். பல்லவியிடம் மீண்டும் நன்றி சொல்லிவிட்டு குழந்தையை வாங்கி கொண்டு சென்றாள்.
ஞானதுரை ஏர்போர்ட் வந்தவர், பல்லவியிடம் ஒரு பெண் ஏதோ பேசிவிட்டு சொல்வதை பார்த்து அருகில் வந்து பல்லவி என்று அழைக்க.
சித்தப்பா என்றவள் அவரை அணைத்து கொள்ள.
வெல், கம், மை, கேர்ள் இன் லண்டன் என்று அணைத்தவர். நெனச்சத சாதிச்சுட்ட டா பல்லவி, கம் என்று காருக்கு அழைத்து சென்றார்.
அண்ணண் மகளை பார்த்து சந்தோஷப்பட்டவர். யாருமா அது? உன்கிட்ட பேசிட்டு போனது.
அதுவா சித்தப்பா, அவங்க அடுத்த ப்பிளைட்டுக்கு போகனுமாம், குழந்தையை வச்சுகிட்டு கஷ்டபட்டாங்க ஒரு சின்ன எல்பு.
ஓகே டா, வந்தவுடனே உதவி பண்ண ஆரம்பிச்சுட்ட.
அப்படி இல்ல சித்தப்பா, நம்மலால முடிஞ்ச எல்பு பண்ணுறது நல்ல விஷயம் தானே.
ஆமாடா வா.. என்று அவர் இல்லம் அழைத்து சென்றார்.
ஞானதுரையின் இல்லம் கொஞ்சம் பெரிய வீடாகத்தான் இருந்தது. முன்னாடி சின்ன கார்டன், பக்கத்தில் சின்ன கெஸ்ட் ஔஸ், இரண்டு தளம் கொண்ட வீடு என்று பார்க்க அழகாக இருந்தது.
வாம்மா என்று ஞானதுரை அவரின் வீட்டினுள் அழைத்து செல்ல.
லக்கேஜ் சித்தப்பா என்றாள்.
அதை அப்புறம் எடுத்துக்கலாம் நீ வா உள்ளே என்று அழைத்து சென்றார்.
வீட்டில் உள்ள ஹாலில் ஞானதுரையின் மனைவி ரோசி சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்.
பல்லவியை பார்த்து கம் என்றவர் ஹவ், ஆர் , யூ என்றார்.
நான் நல்லா இருக்கேன் சித்தி என்றவள்.
நீங்க.
யா, குட், என்றவர், ஆமாம் உன்ன எப்படி அனுப்பினாங்க லண்டனுக்கு என்றாள் ரோசி.
பல்லவி ரோசியிடம், நான் ஒர்க் பண்ண கம்பெனி இங்கே லண்டனுல இருக்கு சித்தி ஆதனால, ஒரு டூ இயர் இங்கே ஒர்க் பண்ண அனுப்பி இருக்காங்க.
ஓ என்றவர். உங்க தாத்தா ரொம்ப பேசுவார், தமிழ் நாடுதா எல்லாமுன்னு இப்போ என்னாச்சு. அவர் இறந்துட்டாருந்னு கிளம்பி வந்தீயா.
அப்படி இல்ல சித்தி என்றவளை.
ரோசி என்றார் ஞானதுரை. வந்த பொண்ண உட்கார கூட சொல்லாம கேள்வி கேட்டுட்டு இருக்க என்றார் கொஞ்சம் குரல் உசத்தி.
நோ டியர், என்றவர். சிட் பல்லவி என்று அவளை உட்கார வைத்தவர். அவர் மகள் ஐஸ்வர்யாவையும், மகன் ஜானையும் போனில் கீழே வருமாறு அழைக்க.
இருவரும் கீழே வந்தனர், ஐஸ்வர்யா பார்க்க 5 அடி உயரத்தில், வட்டமுகம், வெள்ளை நிறம், குட்டை முடி என்று பார்பதற்கு
பேபி டால் மாதிரி இருந்தாள். ஜான் நெடு, நெடுவென உயரமான தோற்றம்.
இருவரும் பல்லவியை கவனிக்காமல் ரோசியிடம் சென்று ஏன் வர சொன்னீங்க என்று கேட்க.
பல்லவியை காண்பித்தவர், இந்தியாவில் இருந்து வந்து இருக்காங்க என்று அறிமுகம் படுத்தி வைக்க.
இருவரும் ஹாய், பாய் என்று இருவார்த்தை பேசிவிட்டு மேலே அவர்கள் ரூம் சென்றுவிட.
பல்லவிக்கு முகம் வாடி விட்டது. நான் வருவது கூட இவர்களிடம் சொல்ல வில்லையே.
சித்திக்கு நான் இங்கே வந்தது பிடிக்க வில்லையோ என்று நினைத்து கொண்டு இருக்க.
பல்லவி என்று அழைத்த ரோசி நீ ஏதுத்த மாதிரி இருக்குறா, கெஸ்ட் ஔசுல இருந்துக்கோ. உனக்கு எங்க வீடு செட்டாகாது. நாங்க பார்ட்டி , வீக் என்டு, மிட் நைட் வருவோம் போவோம், சோ, நீ கெஸ்ட் ஔசுல தங்கிக்கோ. சித்தப்பா எல்லாம் சொல்லுவார் என்று ரோசி அவரின் ரூம் சென்று விட்டார்.
ஏதோ யோசனையில் அமர்ந்து இருந்த பல்லவியை.
டேய், பல்லவி வா என்று அழைத்து வெளியில் வர.
சித்தப்பா என்றவள், நான் என் கம்பெனி குடுத்த ஓம்லே தங்கிக்கிறேன் என்னைய , அங்க டிராப் பண்ணுறீங்களா என்றாள்.
என்னடா ஏன் என்றார் ஞானதுரை.
இல்ல சித்தப்பா என்கூட சேர்ந்து இன்னும் 4 பேர் வந்து இருக்காங்க, எங்களுக்கு தங்க ரூம் அரேஜ் பண்ணியிருக்காங்க. நான் அங்கேயே போறேன்ப்பா.
என்னடா உன் சித்தி உன்னை கெஸ்ட் ஔசுல தங்க சொன்னது உனக்கு கோபமா.
இல்ல சித்தப்பா அப்படி ஒன்னுமில்லை.
சாரிடா என்றார் அண்ணண் மகளிடம்.
ஐயோ சித்தப்பா, ஏன் சாரியெல்லாம் சொல்லுறீங்க உங்களை பத்தி எனக்கு தெரியாதா.
அப்போ என் கூடா வா என்று கெஸ்ட் ஔசுக்கு அழைத்து வந்தார்.
சித்தப்பனின் வருத்தமான முகம் கண்டு அவர் பின் சென்றாள்.
நன்றாக இருந்தது அந்த கெஸ்ட் ஔஸ், ஒரு படுக்கை அறை கொண்ட சிறிய வீடு நீட்டாக இருந்தது.
ஞானதுரை மகளுக்காக தேவையான அனைத்தையும் வாங்கி வைத்திருந்தார். இரண்டு மாதம் சமைக்க தேவையான பொருள்களை வாங்கி வைத்திருந்தார்.
ரூம் சென்று பார்த்து வந்தவள். அவளுக்கு மிகவும் பிடித்து இருக்க, நல்லா இருக்கு சித்தப்பா என்றாள்.
கிச்சன் சென்று பார்த்தவள், அது இப்பொழுது தான் புதிதாக , தனக்காக செட் செய்ய பட்டது என்று தெரிய, ஏன் சித்தப்பா என்றாள்.
என் அண்ணன் பொண்ணுக்கு செய்யாம யாருக்கு செய்வேன்.
உனக்கு எப்போ இருந்து வேலைக்கு போகனும்.
நாளைக்கு காலையில் இருந்து சித்தப்பா.
சரிடா நான் காலையில் 7 மணி வர்ரேன். நீ ரெடியா இரு நான் வந்து உனக்கு, உன் ஆபிஸ் போகும் வழியை காண்பித்து கொடுக்கிறேன் என்று அவர் வீடு சென்று விட்டார்.
வீட்டை மறுபடியும் சுற்றி பார்த்தவள். ஐயோ அம்மாவுக்கு கால் பண்ணல என்று நேரத்தை பார்த்து, பைரவிக்கு அழைக்க.
லண்டன் போயிட்டீயா டீ என்றார்.
ஆமாம்மா இப்போ தான் வந்தேன். சித்தப்பா வீட்டில் தான் இருக்கேன். சரிம்மா எனக்கு தூக்கம் வருது காலையில் டைம் பார்த்து கூப்பிடுறேன் என்று போனை வைத்தாள்.
நீண்ட பயணம் சோர்வு குடுக்க அவளின் போனில் டைம் செட் பண்ணியவள். அலாரம் வைத்து தூங்கி விட்டாள்.
காலையில் அலாரம் அடித்தவுடன் தான் எழுந்தாள். குளித்து விட்டு ரெடியாகியவள், தனக்கும் சித்தப்பாவுக்கும் கொஞ்சம் சாப்பிட சமைத்தவள் ரெடியாகி இருந்தாள்.
ஞானதுரை பல்லவியை அழைத்து செல்ல வந்தார்.
ரெடியாமா என்றார் கதவை திறந்த மகளிடம்.
ரெடி சித்தப்பா என்றவள். உள்ளே வந்து சாப்பிடும் மாறு அழைக்க.
எனக்கா என்றவர், நான் காலை உணவு சாப்பிடுறது இல்லடா, மதியம் தான் சாப்பிடுவேன். சமைச்சத , ஒரு பாக்சில் போட்டு குடு, சித்தப்பா மதியம் சாப்பிட்டுக்கிறேன்.
சரி என்றவள், ஒரு பாக்சில் போட்டு கொடுத்தாள்.
பல்லவியை அழைத்து கொண்டு பக்கத்தில் உள்ள ரெயில் நிலையம் வரை நடந்து சென்றவர். எந்த பக்கம் டிக்கெட் வாங்கனும் என்று காண்பித்தவர். அவளுக்கு ஒரு மாத சீசன் டிக்கெட் கார்டை வாங்கி கொடுத்தவர். எந்த ட்ரெயின் ஏறனும். எங்கே இறங்கனும் என்று சொல்லி குடுக்க.
அனைத்தையும் தன் போனில் பதிந்துக் கொண்டாள். ஞானதுரை அவளின் ஆபிஸ் வரை வந்து எப்படி போகனும், எந்த பக்கம் வரனும் என்று இரண்டு நாள் அவள் கூடவே வந்து வழி காட்ட.
மூன்றாவது நாள் வந்தவரை நானே போயிட்டு வந்துருவேன் சித்தப்பா என்றவள். அவளே தனியாக வேலைக்கு சென்று வர பழகினாள்.
அவள் லண்டன் வந்து இரண்டு வாரங்கள் சென்று இருந்தது. தினமும் தன் குடுபத்திடம் வீடியோ கால் பேசுவாள்.
வேலைக்கு செல்வது, சமைப்பது, வீட்டை கிளின் பண்ணுவது என்று நேரம் சரியாக இருந்தது.
ஒரு நாள் காலையில் ஞானதுரை பல்லவி இருக்கும் கெஸ்ட் ஔசின் காலிங் பெல்லை அடித்தார்.
கதவை திறந்தவள் வாங்க சித்தப்பா என்று உள்ளே அழைக்க.
உள்ளே வந்து அமர்ந்தவர் வேலையெல்லாம் எப்படி டா இருக்கு.
முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு சித்தப்பா இப்போ எல்லாம் கத்துகிட்டேன் இப்ப ஓகேப்பா.
இங்கே வீட்டுல ஏதாவது வசதி வேணுமா என்றார் மகளிடம்.
எல்லாம் நல்லா இருக்கு சித்தப்பா எந்த குறையும் இல்ல.
சரிடா, நாளைக்கு என் பிரெண்டோட பொண்ணுக்கு கல்யாணம் நீ காலையில் ரெடியா இரு சித்தப்பா வந்து கூட்டிட்டு போறேன்.
இல்ல சித்தப்பா நீங்க போங்க நான் எதுக்கு என்று கேட்க.
இல்லடா உன்னைய பத்தி என் பிரெண்டு கிட்ட சொன்னேன் கண்டிப்பா உன்ன கூட்டிட்டு வர சொன்னான்.
நானா என்றவள், சித்திக்கு பிடிக்குமோ என்னவோ.
நீ வாடா அவ ஒன்னும் சொல்ல மாட்ட.
அப்பறம் ஒரு விசயம் நம்ம ஐஸ்வர்யாவுக்கு கல்யாணம் பண்ண போறோம்.
அப்படியா சித்தப்பா ரொம்ப சந்தோசம். மாப்பிள்ளை என்ன பண்ணுறார்.
அது ஒரு பெரிய லிஸ்டே இருக்கு ரொம்ப பெரிய கோடீஸ்வர குடும்பம். நம்ம ஐஸ்சு அங்க போக குடுத்து வச்சு இருக்கனும், இந்த கல்யாணத்துக்கு அவங்களும் குடும்பத்தோட வர்ராங்க. நீ வா உன்ன அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்றார்.
சரி சித்தப்பா என்றவள் காலையில் கிளம்பி இருந்தாள்.
ரோசி, ஐஸ்வர்யா, ஜான் மூவரும் ஒரு காரில் முன்பே சென்று இருந்தனர்.
ஞானதுரை பல்லவியை அழைத்து கொண்டு நண்பனின் மகள் கல்யாணத்துக்கு சென்றார்.
பல்லவி லைட்டு வெய்ட் சில்க் பட்டு புடவை ஆரஞ்சு வண்ண நிறத்தில் அணிந்து இருந்தாள்,அந்த புடவையின் பார்டரும், பிளவுஸ்சும் பச்சை வண்ண நிறத்தில் இருந்தது. குடை சிமிக்கி மாட்டி, ஒரு பெரிய ஹாரம் மட்டும் அணிந்து, அவளின் நீண்ட கூந்தலை பின்னலிட்டு, சிறிய கல் பதித்த பொட்டு வைத்து மிக எளிமையாக வந்து இருந்தாள்.
இருவரும் கல்யாணம் மண்டபம் வந்து இறங்க. வெளியில் இருந்து பார்க்க பெரிய பார்க் போல தோற்றம் அளிக்க. உள்ளே சென்றால் மிக பெரிய ஹால் இருந்தது . பூக்களால் அலங்காரம் பண்ணி இருந்தார்கள். மண்டப நுழைவாயில் சிறிய பெண் பிள்ளைகள் பட்டு பாவடை சட்டை, தாவணி போல் அணிந்து கல்யாணத்துக்கு வரும் அனைவருக்கு பன்னீர் தெளித்து வரவேற்க,
பல்லவிக்கு பார்பதற்க்கு இந்தியாவில் கல்யாணம் நடப்பது போலவே தெரிந்தது. அங்கே நிறைய வெளிநாட்டு காரர்களும் நம் கலாச்சார படியே உடை அணிந்து இருந்தனர். அதை பார்த்து ரசித்து கொண்டே வந்தாள்.
ஞானதுரை தன் நண்பனின் குடும்பத்திடம் பல்லவியை அறிமுகம் படுத்தி வைக்க.
அனைவரும் பல்லவியை வரவேற்க.
அனைவருக்கு கைகூப்பி வணக்கம் சொன்னாள்.
சிலர் ஞானதுரையிடம் உன் பொண்ணு மாதிரியே இருக்க பல்லவி என்றனர்.
ஆமாம் என் அண்ணன் பொண்ணு, என் பொண்ணு மாதிரி தான் என்றார் அனைவரிடம்.
ஞானதுரை வாம்மா என்று பல்லவியை தன் நண்பன் சுந்தரிடம் அறிமுக படுத்த தேட, அவர் இங்கே இருப்பது போல் தெரியவில்லை.
தேடிக்கொண்டே வந்தவர் விக்ரம் ஜித்தை பார்த்து அப்பா எங்கே மாப்பிள்ளை என்றார்.
அப்பாவுக்கு ஒரு மீட்டிங் இருக்கு அங்கிள் அத முடிச்சுட்டு வருவாங்க என்றான்.
சரிப்பா என்றவர். பல்லவி என்று அழைக்க அவளோ கல்யாண மண்டபத்தை வேடிக்கை பார்த்து நின்றாள். ஞானதுரை பேசியதை கவனிக்க வில்லை. அதுவும் விக்ரம் ஜித் மாஸ்க், கூலர் அணிந்திருந்தான். முகம் கூட சரியாக தெரிய வில்லை.
பல்லவி என்றவர். விக்ரம் ஜித்தை காண்பித்து இது தான் விக்ரம் நம்ம ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ண போற மாப்பிள்ளை என்று அறிமுகம் படுத்தி வைக்க.
மாப்பிள்ளை என்ற வார்த்தை மட்டும் கேட்ட பல்லவி. ஓ.. ஐஸ்வர்யாவுக்கு பார்த்த மாப்பிள்ளை என்று மனதில் நினைத்து அவனுக்கு கைகூப்பி வணக்கம் சொல்ல.
அவன் அவளுக்கு கை குடுக்க கை நீண்டி இருந்தான்.
இவளோ வாழ்த்துக்கள் என்று முடித்து கொண்டாள்.
அவனோ இவளையே பார்க்க.
இவளோ இங்கே ஒருவன் தன்னை பார்ப்பது கூட தெரியாமல், கல்யாண மண்டபத்தை வேடிக்கை பார்த்து நின்றாள்.
விக்ரம் ஜித் ஞானதுரையிடம் பேசிக்கொண்டே இவளை பார்க்க. இவளோ ஒரு மனிதன் தன் பக்கத்தில் இருக்கிறான். தன்னை பார்க்கிறான் என்று கூட தெரியாமல், அவள் கண்கள் போகும் இடத்தை பார்த்திருந்தாள்.
ஞானதுரையிடம் பேசி முடித்தவன், கொஞ்ச தூரத்தில் சென்று நின்று பல்லவியை பார்க்க, அவன் பார்வையை அவனால் பல்லவியிடம் இருந்து திருப்பமுடியவில்லை.
பல்லவிக்கு ஏதோ உணர்வு , தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற திரும்பி பார்த்தாள். யாரும் தன்னை பார்ப்பது போல் தெரியவில்லை என்று மறுபடியும் அவள் வேடிக்கை பார்ப்பதை தொடர..
விக்ரம் ஜித், பல்லவி தன்னை கண்டு கொண்டாள் என்றவன். மண்டபத்தில் மேலே உள்ள பால்கனியில் நின்று அவளை பார்க்க. இவளை பார்க்காமல் இருக்க முடியவில்லையே என்ன கண்ணுடா அவளோடது, என்று முயற்சி பண்ணி தன் கவனத்தை வேறுபக்கம் திருப்பினான்….
error: Content is protected !!