Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Eno Vaanilai Maaruthe

ஏனோ வானிலை மாறுதே!!! 1

வானிலை – 1

 

ஷிவானி இந்த டிபன் பாக்ஸ்ஸ , கலை அத்தை கிட்ட கொடுத்துட்டு வா டா . அம்மா காலேஜ்க்கு லேட் ஆகிருச்சு நீயே போய் கொடுத்திரு மா…



Advertisement

என் தங்கம்ல அம்மாக்கு நிறையா வேலை இருக்கு, வம்பு பண்ணாம்ம போறப்ப கொடுத்துட்டு போ என்றார் கெஞ்சலாய்.

போறேன், போய் தொலையிறேன். இல்லைனால் விடவா போற என சிலர்த்து கொண்டு சென்றாள்.

போகும் வழியெல்லாம் புலம்பியபடியே சென்றாள் நம் நாயகி.
இன்னைக்கு என்ன செய்ய காத்திருக்கானோ ?

Advertisement

இதில் இந்த அம்மா வேற . நிலைமை புரியாமல் அதை கொடு இதை கொடுனு .
எல்லா எங்க அப்பாவ சொல்லனும், ஊர்ல வீடு கட்டுறதுக்கு இடமா இல்ல போயும் போயும் இந்த குரங்கு வீட்டு பக்கத்தில் கட்டி, என் உசுர வாங்கிறாங்க.

Advertisement

இன்னைக்கு ஏதாவது செய்யட்டும் கலை அத்தைக்கு ஒரு பையனே வேணாம்னு போட்டு தள்ளிரலாம் என மனதில் அவனை வறுத்தெடுத்தப்படியே அங்கே சென்றாள்.

கலை சமையல் அறையில் வேலை பார்க்க, ஹாலில் அமர்ந்து காபியையும் தன் மனைவியையும் ரசித்தவாறு ,

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?                    நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?              நீ விரல்கள் என்றால்,
நான் நகமா மோதிரமா?

Advertisement

என பாட்டு பாடிக் கொண்டிருந்தார் சந்திரன்.

[the_ad id=”6605″]

இவரது காதல் லீலையை ரசித்தவாறு வந்த ஷிவானி, அவர் அருகே அமர்ந்து . நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நினைக்கவில்லை கோபால்? கோபால்? என சரோஜாதேவி பணியில் அவரை வாரினாள்.

வாம்மா மருமகளே! வந்ததும் ஆரம்பிச்சுட்டியா . உன் வாலுத்தனத்த என அவள் காதை வலிக்காத மாறி திருகினார் சந்திரன்.
அது தெரிந்த ஷிவானியோ, உரிமையாக இப்படியே பண்ணிங்கன அப்பறம் உங்க பையன கல்யாணம் பண்ணி மாட்டேன் என்று வம்புக்கட்டினாள்.

தூக்கிட்டு போய் தாலி கட்டுவான் டி எம்பையன்னு கரண்டியுடன் வந்தார் கலை.
அதுவரை நான் என்ன பால்கோவாவ சாப்பிட்டு இருப்பேன் என்று அவரிடம் பதில் வாயாடினாள்.

இவர்கள் அறியவில்லை இவர்கள் கேலி பேசியது போன்ற தருணத்தில் தான் அவள் வாழ்க்கை அமைய போகிறது என்று .

கலையிடம் டிபன் பாக்ஸை கொடுத்து, அம்மா கொடுக்க சொன்னாங்க அத்தைம்மா என கொடுத்தாள், அவளிடம் அதை வாங்கி கொண்டு, விட்டு வந்த கவனிக்க சென்றார்.

சிறிது நேரம் சந்திரனிடன் வாயாடிவிட்டு, மாமா அந்த தடிமாடு எங்க , இன்னுமா தூங்குறான். முதல் நாளே காலேஜ்க்கு லேட்டா போன எப்படி. நைட்டு எத்தனை முறை சொன்னேன். சரியான கும்பகர்ணன் என அவர் பதில் கூறும் முன் அவன் அறைக்கு ஓடினாள்.

இன்று என்ன பஞ்சாயத்து வரும் என காத்திருந்தனர் அந்த காதல் தம்பதியான கலையும் சந்திரனும்.

இன்னும் விடியல் தன்னை அழைக்கவில்லை என்று நன்றாக இழுத்து போர்த்தி உறங்கி கொண்டிருந்தான் அவன். அதில் கடுப்பானவள் அவனை தாக்க எதாவது இருக்க என தேட , உனக்கு ஏன் அந்த சிரமம் என்று அங்கிருந்த தண்ணீர் கோப்பை அவளை பார்த்து பல் இளித்தது.

தா வந்துவிட்டேன்னு மண்டையில் எரிந்த பல்புடன் சென்றவளுக்கு தெரியவில்லை, தனக்கு தானே ஆப்பை சீவியது.

அவ்வளவு தான் கோப்பையில் இருந்த தண்ணீரை படுத்திருப்பவன் மேல் கொட்டிய நொடி, டார்லிங் நான் ஹாலில் இருக்கேன் இங்க வா என அபிமன்யூ கூப்பிடவும் சரியாக இருந்தது.

போர்வை விளக்காமல்லே ஓட  எத்தனித்தவளின் கையை சிறை செய்தான். அவன் திடீர் செய்கையில் பிடிமானம் இன்றி அவன் மேல் சரிந்தாள் ஷிவானி .

ஐயோ! என்றிருந்தது ஷிவானிக்கு . இது தான் சொந்த செலவில் சூனியம் வைச்சுக்கிறதா என எண்ணியவாறு அவனிடம் இருந்து விடுபட பார்த்தாள்.

எங்கே? தன் உடும்பு பிடியால் அவளை மடக்கி பிடித்திருந்தான். அவன் கிடுக்கு பிடியில் அவள் பெண்மை சற்று ஆட்டம் காண தான் செய்தது. அது அவளது உடலில் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது.

இதை உணர்ந்தவனும் அவளது சிப்பியில் இருந்து சிறு முத்துகள் உதிருமோ என காத்திருக்க . அங்கு ஜெய்த்ததோ மௌனத்தின் ஆட்சி.

இன்னும் எத்தனை நாள் இப்படி இருக்க போறேன்னு பார்க்கிறேன்னு மனதில் கறுவிக் கொண்டான் யாதவ் கிருஷ்ணா.

மேலும் அவளை சீண்டும் பொருட்டு , அவளை கீழே போட்டு, கை ஊன்றி அவள் மேல் படாதவாறு படுத்தான்.

மிக அருகே அவன் மூச்சு காற்று அவள் மேல் வீச .பயம், நாணம், அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்று தன் கோலிக்குண்டு கண்களால் அவனை பார்த்தாள். அதை ரசித்தவன் இதற்கு மேல் இங்கு இருந்தால், இத்தனை ஆண்டு கட்டி காப்பாற்றிய நல்லவன் பட்டம் காற்றில் பறந்திடும் என்று குளியில் அறையில் புகுந்து கொண்டான்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாள் என தெரியவில்லை, மீண்டும் அபிமன்யூவின் டார்லிங் என்ற அழைப்பிலேயே தன்னிலை அடைந்தாள்.

[the_ad id=”6605″]

இவன என்ன பண்ணலாம் யோசித்தவள், காலேஜ் போய்ட்டு வந்து உன்னை பேசிக்கிறேன் என சாத்திய அறையை பார்த்து மெலிதாய் பேசினாள்.
இன்னும் நீ போகலையா என்று யாதவ் குரல் கொடுக்க . தப்பித்தோம் பிழைத்தோம் என்று அபியிடம் ஓடினாள் ஷிவானி .

அந்த அறையையே திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வந்த ஷிவானி, அபிமன்யூ மேல் மோதி நின்றாள்.
ஆர் யூ ஓ.கே பேபி என்றான் ஷிவானியை பார்த்து.

திரு திருவென முழித்து எதுவும் பேசாது  சென்ற ஷிவானியை ஆச்சிரியமாக பார்த்தனர்.

அவள் பின்னே சென்ற அபிமன்யு அவள் உள்ளங்கையை தன் உள்ளங்கையில் பொருத்திக் கொண்டான். எந்த மறுப்பும் தெரிவிக்காது யாதவின் செயலை தற்காலிகமாக மறந்து கல்லூரியை பற்றி அபியுடன் பேசிக்கொண்டே கல்லூரி பேருந்தில் ஏறினாள்.

யாதவ் கிருஷ்ணா

ஷிவானி

அபிமன்யூ

ஷிவானி சிவராமன் ஜானகியின் காதல் பரிசு . தங்கள் மொத்த அன்பும் அவளுக்கு மட்டுமே எண்ணி ஒற்றை வைரமாக காத்தனர்.

நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோட்பாட்டை பின்பற்றியவர்கள் கலைவாணி சந்திரன். அதற்கு சாட்சி தான் யாதவ் கிருஷ்ணாவும் அபிமன்யூவும்.

சிவராமன் , சந்திரன் கல்லூரி தோழர்கள் . படித்து முடித்து சில வருடங்கள் ஒன்றாக பணி புரிந்து. இன்று ஒரு மென்பொருள் கம்பெனியின் முதலாளியாக தன் தரத்தை உயர்த்தியுள்ளனர்.

தங்களை போலவே தங்கள் குடும்பமும் நட்பு பாராட்ட வேண்டும் என்ற முனைப்பில், முடிவெடுத்து தான் பக்கத்து பக்கத்து வீடு .

யாதவ், அபிமன்யூவும் ஓர் உடல் ஈருயிர் போல். என்ன அதை வெளியே காட்டி கொள்ள மாட்டார்கள். எப்பவும் ஒற்றுமையாக இருக்கும் சகோதர்கள் வேற்றுமையான முரண்பாடு கொண்ட ஒரே கருத்து ஷிவானி தான்.

அபிமன்யூவுக்கு யாதவிடம் இருக்கும் அதே நெருக்கம் ஷிவானியிடமும் இருந்தது.

ஷிவானி அபி நட்பு கின்டர்கார்டனில் ஆரம்பித்து இப்போ காலேஜில் தொடர போகிறது….இன்று கல்லூரியின் முதல் நாள் இருவரும் ஒரே பிரிவை தேர்ந்தெடுத்து அங்கும் சேட்டைகளை தொடர உள்ளனர்.

யாதவ் – ஷிவானி ஓர் இடத்தில் இருந்தால் அந்த இடம் போர்க்களம் ஆகிவிடும் .

ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை!!!!!!!!
இப்படி எலியும் புனையுமாக சண்டையிடும் இந்த இருவர் தான்,

பின்னாளில் காதல் புறாக்களாக உலா வர போகிறார்கள்…….

செல்ல கிளியே

கொஞ்சும் மொழி பேச

வருடங்களாய் காத்திருக்கேன் நான்?

என்னிடம் மட்டும்

பேசா மடந்தையாகிறாய் ஏன்?????

???????????????

 எட்ட நில்

என்றும் நான் உனக்கு

எட்டாக் கனியே!!!!!!!

???????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!