Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-3

அத்தியாயம்-3
சூரியன் தன் கோபத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்து, உக்கிரத்தை தனித்துக் கொண்ட, மாலைப் பொழுது..

“அம்மா,அம்மா..”
அன்னையை அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அகல்யா..

ராஜவர்மனின்  ஒரே தங்கை..அவள் இடுப்பில், அவள் இரண்டு வயது மகன் அபினவ்..

“என்னடி..ஏலம் போட்டுகிட்டே வாரவ..”



Advertisement

“ஆமா,உன்னை ஏலம் போடுறாங்க..எங்கூட்டு மாரிக்கண்ணு, கன்னு போட்டுருக்கு..அதான் சீம்பால் கொண்டு வந்தேன்..அண்ணன் எங்க??விரும்பி சாப்பிடும்..”

“உங்க அண்ணன் எங்க  வீடு தங்குறான்.. எங்க,எந்த பொண்ணையாவது புடிச்சு  கட்டி புடுவேன்னு, ஓடி ஓடி ஒளியுறான்.. ஒரு நாள் மாட்டாமையா போய்யுடுவான் எவ கையிலயாச்சும்,அப்போ இருக்கு அவனுக்கு..”

“சும்மா,அண்ணனை வையாத..என்னை தான் பதினெட்டு வயசுலேயே கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க.. அண்ணனையாச்சும் அது இஷ்டத்துக்கு விடு..”

Advertisement

“என்னமோ,புடிக்காம குடுத்தனம் பண்ணுறவ மாதிரி பேசுற..உன்ற வீட்டுல நீ வைக்குறது தான் சட்டம்..உன்ற மாமியார் அப்பிராணி..உன்ற வூட்டுக்காரர்..நீ வெள்ளை காக்காய்  மல்லாக்க பறக்குதுன்னு சொன்னா கூட நம்புவார்.. இதுல சலிப்பு வேற..”

Advertisement

அவரிடம் உதடு சுழித்தவள்,
“பிடிக்கலைன்னு சொன்னனா..சீக்கிரம் பண்ணி வச்சிங்கன்னு சொன்னேன்..”
கூறிய படி  சமையல் அறை நோக்கி சென்றாள்..

“குழந்தையை கொடுத்துட்டு போடி”
தன் பேரனை வாங்கினார் மரகதம்..

ராஜவர்மனின் தந்தை, மூன்று வருடத்திற்கு முன்பு உடல் நிலை மோசமான நிலையில் இருந்த பொழுது,
அகல்யாவை அவர்கள் தூரத்து உறவில்,உள்ளூரிலேயே  திருமணம் முடித்தனர்..

Advertisement

மகள் திருமணத்தை பார்க்க அவர் விரும்பியதால்.

அகல்யாவின் கணவன் வேணுகோபால்.அருகில் உள்ள டவுன்னில் இருக்கும் அரசு அலுவலகத்தில் அதிகாரியாக இருக்கிறான்..

அவள் மாமியார் உமா.வெகுளி. வேணு அவருக்கு, ஒரே மகன்.

இவர்களை போல செல்வாக்குள்ள குடும்பம்..
நிலத்தை குத்தகைக்கு விட்டு விட்டு,அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கிறான் அகல்யாவின் கணவன்..

நன்கு தெரிந்த குடும்பம்..உள்ளூர்.அவர்களும் பெண் தேடி கொண்டிருந்த சமயம்..இவர்கள் அவசரமாய் தேடும் போது..கிடைத்த வரன்.தெரியாத இடத்தில் என்றால், ராஜா ஒத்துக்கொண்டிருக்க மாட்டான்..

வேணுவை சிறு வயதில் இருந்து தெரியும்..அதனால் அந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான் ராஜா.. வேணுவிற்கும், ராஜாவின் வயது..

அகல்யாவும் படிப்பில் சுமார் ரகம் தான்.. எனவே அவளுக்கும் கல்லூரி சென்று படிக்க விருப்பம் இல்லை..வீட்டில் கேட்டதும்,அப்பாவின் நிலை தெரிந்து,ஒத்துக்கொண்டாள்..
இப்பொழுது இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை..

அவர்கள் இருவரும், பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்தி சாயும் பொழுதில், வீட்டினுள் நுழைந்தார்கள்,ராஜாவும் பாண்டியும்..

“வாடா மா அகல்..எப்போ வந்த??”

“அவ வந்து ஒரு பொழுத்தாச்சு..உன்னை தான் ஆளே காணும்..மதியம் சாப்பாட்டுக்கு கூட வராம எங்க போனவ..??”

“நல்லா கேளுங்க அத்தை.. வாடா, விரா மீன் குழம்பாம் வீட்டுல..நம்ம வீட்டுல வேலை பார்க்குற, காத்த முத்து பொண்டாட்டி சொல்லுச்சு..ஒரு வாய் சாப்பிட்டு வரலாம்னு கூப்பிட்டா..வர மாட்டேன்னு சொல்லிபுட்டான்..அந்த மில்லு கான்டீன்ல இருக்குற, வேகாத சாதத்தையும், உப்பு சாப்பில்லாத குழம்பு பொரியலையும், திங்க வச்சுட்டான்..நாக்கே மரத்து போச்சு..”

“ஒரு வேளை சாப்பிட்டு,ஓவர் அஹ் பேசாத டா..”

“என் நாக்கு எல்லாம் கவரிமான் பரம்பரை டா..ஒரு வேளைக்கே உயிரை விட்டுரும்..”

“பாண்டி மாமா.இப்போ என்ன??.மீன் குழம்பு வேணும், அவ்ளோ தானே..அம்மா,மதியம் மீந்து போனது இருந்தா போடு..பாத்திரம் கொண்டு வரலியா மாமா..”

அவள் பேச்சில் பக் என சிரித்தான் ராஜா..

“என்னை பிச்சைக்காரனாவே ஆக்கிட்ட மா,அகலு..நல்லா இரு..”

“புறவு என்ன??என் அண்ணனே பசில வந்துருக்கும்.. சாப்பிட விடாம..பேசிக்கிட்டு..”

“பாசமலர்களா.. நடத்துங்க..”

உள்ளே சென்று, ஒரு கிண்ணத்தில் சீம்பால் கொண்டு வந்தாள்..

“என்னடா அகலு இது..மாமனுக்கு பிடிக்கும்னு சீம்பால் கொண்டு வந்தியா..உனக்கு எம்புட்டு பாசம் மாமன் மேல..”

“சீம்பால்ல கையை வச்ச, வெட்டிப்புடுவேன்..இது என் அண்ணனுக்கு..”

ராஜாவிடம் கொடுத்து,
“சாப்பிடு ண்ணா..”

“இம்புட்டு கானு சீம்பால்க்கு.. கொலை மிரட்டல் வேற..”

“பின்ன, இது என் அண்ணன்புட்டு..உனக்கு வேணுமுன்னா..உன் வூட்டு மாடு கன்னு போடையில சாப்பிடு..”

“ஒரு கிண்ணம் சீம்பால்க்கு, இந்த புள்ள காப்புரிமை எல்லாம் போடுது..அப்படி ஒரு சீம்பாலே வேண்டாம்..நான் எங்கூட்டுக்கு போறேன்..”

“ஏலே பாண்டி நில்லுடா.. இந்த சில்லுவண்டு பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்காதை..”

“அம்மா..”
பல்லை கடித்தாள் அகல்யா..

“உனக்காக  தான் அத்தை இருக்குறேன்..சீக்கிரம் சீம்பால் கொண்டு வா..”

“இருடா தங்கம், எடுத்துட்டு வரேன்..”
உள்ளே சென்றார் மரகதம்..

கெத்தாய் அகல்யாவை பார்த்த பாண்டி..

“யாரு கிட்ட..நாங்கல்லாம் யாரு,என்னன்னு தெரியாம..மோதி பார்க்க வேண்டியது..”

“போடா..பக்கி..”

“பேசிக்கிட்டு இருக்கும் போது,மாமனை ஏதும், வாடா போடான்னு, மரியாதை இல்லாம பேசுனியா..??”

“ஆமா டா பக்கி..”

“சரி, சரி, மாமா மன்னிச்சுட்டேன்..இனி, இப்படி பேசக்கூடாது..அத்தை, இன்னுமா எடுக்குற..”

“பேசுனா என்ன செய்வ..??”

“உன்னை  உன் வீட்டுக்காரன், எப்படி மேய்கிறான்..நல்ல வேளை, மாமா மகள்ன்னு  உன்னை கட்டி இருந்தா, என் நிலைமை என்ன??”

“கருவாயா, அப்படி ஒரு  நினைப்பு வேற இருக்கா உனக்கு..வகுந்து புடுவேன்..”

“வான்டெட் அஹ் வந்து  கரும்பு மெஷின்ல தலையை கொடுக்க, நாங்க என்ன மங்குனியா..போம்மா.. போய்.. பிள்ளை குட்டிகளை படிக்க வை..”

“போடா பன்னாடை..”

“டாங்கியு..”

மரகதம், சீம்பால் கிண்ணத்தோடு வந்தார்..
அதை வாங்கிய பாண்டி..

“என்ன அத்தை, இவ்ளோண்டு தர..முழுசா கொண்டு வா..அப்புறம் வவுறு வலிக்கும் உனக்கு, சொல்லிபுட்டேன்..”

“அம்புட்டு தான் லே கொண்டு வந்தா இவ.. நம்ம வீட்டு மாடு, கண்ணு போடட்டும் லே..நெறைய தரேன்..அடுத்த மாச, ஆரம்பத்துல ஒன்னு நிக்குது.. மாச கடைசில ஒன்னு நிக்குது..”

“ஏம்மா அகலு..இதான்  உன் அண்ணன் பாசமா..??இம்புட்டு கானு கொண்டு வந்துருக்க. குண்டா நெறைய கொண்டு வந்து,பாசத்தை பொழிய வேணாம்..”

“என் அண்ணாக்கு மட்டும்னா இது போதும்..உன்னை மாதிரி பெருச்சாளிக்கு கொடுத்தா தான், பத்தாது..”

“ஏண்டி,அவன் உன்னை விட பெரியவன்..மாமன் முறை.ஒரு மட்டு மருவாதை வேணாம்..ஒழுங்கா பேசு..”

“விடுங்க அத்தை.. சில்லு வண்டு அது..ராவுக்கு என்ன செஞ்சுருக்க அத்தை..”

அவனை முறைத்தாள் அகல்யா..சிறு வயதில் இருந்து  ஒன்றாய் வளர்ந்ததால்..அப்படி தான் பேசிக் கொள்வார்கள் இருவரும்..
ராஜாவுக்கு தெரியும் இது..அதனால், அவன் கண்டு கொள்ள மாட்டான்.. அவர்களே சண்டையிட்டு ஓய்வார்கள்..

“கேப்பை புட்டு கண்ணு..சாப்பிட்டு போ..”

“சாப்பிடாட்டி  நீ வருத்த படுவ.. சரி, உனக்காக சாப்பிட்டு போறேன்..வேற யாருக்காகவும் இல்லை.அந்த மீன் குழம்பு இருக்குல்ல??.”

“மானம் கெட்டவன்..”
முணுமுணுத்தாள் அகல்யா..சத்தமாய் சொன்னால்,மரகதம் அடித்து விடுவார்..கண்டிப்பானவர்..

அது, ராஜா மற்றும் பாண்டியின் காதில் மட்டும்  கேட்டது..
ஈ.. என, அவளை பார்த்து சிரித்து வைத்தான் பாண்டி..

“அகல்..”
ராஜாவின் கண்டிப்பில்..

“மன்னிச்சுக்கோ ண்ணா..”

கொஞ்ச நேரத்தில், அகல்யாவின் கணவன் வேணு வந்து, அவளையும் குழந்தையையும் அழைத்து சென்றான்..

“தெய்வம் பங்கு, நீங்க..”
என்று அவனிடம் கூறி, அகல்யாவின் முறைப்பை பெற்றுக் கொண்டான் பாண்டி..

அகல்யா இவன் மீது கோபமாய் இருக்க, ஒரு முக்கிய காரணம் உண்டு..அது, பாண்டி அகல்யா மற்றும் ராஜா மட்டுமே அறிந்த உண்மை..

அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, அவளுக்கு புதிதாய் ஒரு ஆங்கில ஆசிரியர் வந்தார்..கேரளா பெண்மணி..அழகாய் இருப்பார்..அப்பொழுது ராஜா பாண்டி இருவரும், பன்னிரெண்டாம் வகுப்பு படித்தனர் அதே பள்ளியில்.

ஒரு நாள், அவன் வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் கொடுக்க சொல்லி,  இவளிடம் ஒரு கடிதம் கொடுத்தான் பாண்டி. அந்த ஆசிரியரிடம் மாட்டி கொண்டது கடிதம்.

இவளும், விவரம் புரியாமல் கொடுத்தாள்.. பிறகு தான் தெரியும், அந்த கடிதத்தை பற்றி.,அந்த ஆசிரியர் இவளை அடித்து விட்டார்..யார் கொடுத்தா??என்று கேட்டதற்கு, இவன் பேரை கூறினாள்.. ஆனால்  அந்த ஆசிரியர் நம்பவில்லை..
அவன் நல்ல பிள்ளை என்று கூறிவிட்டார்..இவள் சொல்லாமல் மறைத்து விட்டாள் என்று, அவருக்கு கோபம் வேறு..

இது அறிந்து ராஜா,பாண்டியை வெளுத்தது  தனி கதை..அதிலிருந்து இருவரும்..இப்படி தான் அடித்துக் கொள்வார்கள்..

ஒரு வாரம் கடந்திருந்தது..
அன்று மில்லுக்கு  பைக்கில் சென்று கொண்டிருந்தான் ராஜா..பின்னால் பாண்டி அமர்ந்திருந்தான்.

அப்பொழுது, பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்தில் இருந்து இறங்கி வந்தான் மாதேஷ்..இவர்களின் பள்ளித் தோழன்..

இப்பொழுது  பொறியியல் முடித்து விட்டு,கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறான்.

அவனை கண்டதும்  வண்டியை நிறுத்திய ராஜா.

“ஏலே,பார்த்து எம்புட்டு நாள் ஆச்சு..எப்படி லே இருக்க..??”

அவனும் இவர்களை பார்த்து விட்டு,
“நல்லா இருக்கேன் ராஜா.நீ எப்படி இருக்க??பாண்டி எப்படி இருக்க டா..??”

“ஹ்ம்ம்..ஆளே மாறி போய்ட்டே.. பளபளன்னு இருக்க..”

“கிண்டல் பண்ணாத டா பாண்டி..”

“ஊர் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு..என்ன டா திடீர்னு..??”

“அப்பத்தா இங்க தானே இருக்கு..பார்க்கணுமுன்னு நிதம் போன்னு. அதான், ஓரெட்டு வந்துட்டு போவோம்ன்னு..”

“ஓ..சரி டா.. படிக்க காலேஜ் போறேன்னு போனவனுங்க..நீ,வினோத்,ராஜேஷ்,செந்தில் எல்லாம்.அப்புறம் ஆளே பார்க்க முடியல..எல்லோரும் அங்கேயே வேலை கிடைச்சு செட்டில் ஆகிட்டீங்க..எப்படி இருக்காங்க எல்லோரும்..”

“ஹ்ம்ம்..மெஷின் வாழ்கை டா.. பணத்துக்கு குறைவில்லாம இருக்கோம்..ராஜேஷும் செந்திலும் என்ஜினீயர் முடிச்சு..கொஞ்ச நாள் இங்க வேலை பார்தானுங்க அப்புறம்,வெளிநாட்டுல வேலை கிடைச்சு போய்ட்டானுங்க..”

“வினோத்??”

“அது…அவன்..”

“என்னாச்சு டா.. அவனுக்கு..??”

“என் கூட,என் கம்பெனில தான் வேலை பார்த்தான்..இப்போ..”

“இப்போ??”

“மனநல காப்பாகத்துல இருக்கான் டா..”

“என்ன டா சொல்லுற..??என்னாச்சு அவனுக்கு??”

“அது,ஒரு புள்ளைய லவ் பண்ணான்..அது, இவன் கூட சுத்திட்டு.இவன்  மிடில் கிளாஸ்ன்னு தெரிஞ்சதும்..பிரென்ட் அஹ் தான் பழகுனேன்னு, விட்டுட்டு போயிடுச்சு..ரொம்ப குடிச்சு,வேலைக்கு போகாம இருந்தான்..திடீருன்னு ரொம்ப வயலெண்ட் அஹ் நடக்க ஆரம்பிச்சுட்டான்..

அவன் அண்ணி ஏதோ சொல்லிட்டாங்கன்னு..அவங்க மண்டைய உடைச்சு.. பெரிய பிரச்சனை ஆகி..கொண்டு போய்..மென்டல் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டாங்க டா.. அங்கேயும் தப்பிக்க முயற்சி பண்ணி..இப்போ அடைச்சி வச்சுருக்காங்க..அதிகமா யாரையும்  பார்க்க விடுறதில்லை..”

“ஏன்டா,டாக்டர் பொண்ணு நோ சொன்னா, நர்ஸ் பொண்ணை காதலின்னு, விட்டுட்டு போகாம..லூசு பய.. நிஜமாவே லூசு ஆயிட்டானா..”

“பாண்டி..”
ராஜாவின் கண்டிப்பில்,

“இல்ல,மாப்பி..எனக்கு ஏற்பட்ட அனுபவத்துக்கு..நான் எத்தனை பேர் மண்டைய  உடைச்சு இருக்கனும்..நானே பொறுமையா இருக்கேன்..இந்த பயபுள்ள..”

“உன் மண்டைய  யாரும் உடைகலையேன்னு சந்தோஷப்படு..”

“ரைட் விடு மாப்பி..நீ ஏதோ கோவமா இருக்க..அப்புறம் பேசிக்கலாம்..”

“யாரை டா காதலிச்சான்.. கூட படிச்ச பொண்ணா??இல்ல வேலை பார்த்த பொண்ணா??”

“அதெல்லாம் இல்லடா..ஃபேஸ் புக்ல அறிமுகம் ஆகி,பேசி பழகிட்டாங்க டா.. அப்புறம், போட்டோ அனுப்பி..பார்த்து பேசி..சுத்திட்டு..கடைசில விட்டுட்டு போய்ட்டா..”

“இதுக்கு தான் டா.. நான் புக்ன்னு  பேர் இருக்குற எதையும், கிட்டவே சேர்க்குறதில்லை..”

“பாண்டி..”

“சரி மாப்பி..நான் பேசல..யூ கன்டினியூ..”

“ஏன்டா,அந்த பொண்ணு கிட்ட பேசி பார்த்தீங்களா டா..”

“அது பெரிய இடம் டா.. பிஆர் குரூப் ஆப் கம்பனிஸ் காரரோட ஒரே பொண்ணு டா.. இவன் ஆரம்பத்துலேயே, இவன் மிடில் கிளாஸ்ன்னு சொல்லாம..அது மேல உள்ள காதல்ல பழகிட்டு, அப்புறம் சொல்லி இருக்கான்..அது டாட்டா சொல்லிட்டு போயிடுச்சு..”

ராஜாவின் மனதில் சுருக்கென்றது..

“யாரு பொண்ணுன்னு சொன்ன??”

“பிஆர் குரூப்ஸ் பொண்ணு டா.. உனக்கு தெரியுமா??”

“இல்ல டா.. சும்மா கேட்டேன்..”

“சரி டா.. ஒரு வாரம் இங்க தான் இருப்பேன்..பேசலாம். வரேன் டா..”
கூறிவிட்டு சென்றான் மாதேஷ்..

“என்ன மாப்பி..டல் ஆயிட்ட..??”

“ஒண்ணுமில்ல டா..”
கூறியவன் பைக்கை எடுத்தான்..

அன்று மாலை வீடு திரும்பியவனிடம் வந்த மரகதம்..

“ராசா, உன்ற மாமன் சேகர் போன் பண்ணி இருந்தான்..இந்த வருஷ திருவிழாக்கு கூப்பிட்டேன்..பார்க்குறேன் மான்னு சொன்னான்..அவன் பொண்ணு என்னமோ, எம்பி படிக்குதாம்..”

“ஏன், பெஞ்சு உயரம் பத்தலியா..??”

“ஏலே பாண்டி..”

“சும்மா சொன்னேன் அத்தை.. இதை மனசுல வச்சு,என் வயித்துக்கு வஞ்சகம் பண்ணிப்புடாத..”

“அப்போ கொஞ்ச நேரம் பேசாம இரு..அதை குழந்தைல பார்த்தது..அண்ணிக்கு தான் இங்க வரப் பிடிக்காதே..

அதான், உன் பொண்ணு எப்படி இருக்கும்ன்னு கேட்டேன் .அண்ணன் போட்டோ அனுப்புறேன்..அப்டினுச்சு..அகல் தான், உன் நம்பர் சொன்னா.. அனுப்பி இருக்கும்..பாரு கண்ணு..அனுப்பி இருந்தா, காட்டு கண்ணு..கண்ணுக்குள்ளேயே நிக்குது புள்ள..”

‘ஒரு ஓரமா உட்கார சொல்லுங்க..காலு வலிக்காம..’

விவரமாக மனதுக்குள் நினைத்தான், பாண்டி..

தன் மொபைல் போனை  எடுத்துப் பார்த்தான் ராஜா..

பென்சில் ஜீன்ஸ்சும், டைட் டீ ஷர்ட்டும் போட்டு,  ஒரு அழகிய  நவ நாகரிக மங்கை இருந்தாள்  புகைப்படத்தில்..

கீழே மதுவந்தி..என்று  எழுதி அனுப்பி இருந்தார் ராஜசேகர்..

அவனிடம், மொபைலை வாங்கி பார்த்த மரகதம்,
“லட்சணமா தான் இருக்கு..ஆனா ஏன் இப்படி புடிப்பா, உடுப்பு போட்டுருக்கு..கொஞ்சம் பெருசா போடலாமில்ல..வளர்ர புள்ள”

அவரிடம்  போனை வாங்கி பார்த்த பாண்டி,

” வாவ்!!செம்ம அழகா இருக்காளே .உன் அண்ணன் கோடீஸ்வரன்னு சொன்ன..அது ஸ்கூல் போகையில  போட்ட டிரஸ் அஹ், இன்னும் போட்டுருக்கு..டிரெஸ் கூட  வாங்கி கொடுக்க மாட்டாரா..??”

“ஏலே,ரொம்ப பேசாத லே..இது ஏதோ, பட்டணத்து நாகரிகம் போல..போட்டுருக்கு..”

“ஆனாலும்.. அழகா தான் இருக்கா..”

“ஏலே பாண்டி.. இவ உனக்கு, தங்கச்சி முறை ஆகனும் லே..பார்த்து பேசு..”

“ஊர்ல உள்ள  அழகான பொண்ணு எல்லாம், எனக்கு தங்கச்சி ஆக்கிப்புடு..ஓட்டை உடைச்சல் எல்லாம், முறை பொண்ணுன்னு சொல்லு..”

“போலே..உனக்குன்னு இருக்கவ..ஏற்கனவே பொறந்திருப்பா லே..வருவா..அது வரை பேசாம இரு..”

“க்கும்.. இன்னும் வராம, என்ன பண்ணுறாளோ.??
வர்ற வழில, பஸ் பிரேக் டவுண் போல…”
கூறிக்கொண்டே, மொபைலை ராஜாவிடம் கொடுத்தான்..

அதை வாங்கிப் பார்த்தான் ராஜா..
‘அழகு தான்.. நல்ல பாம்பை போல..பளபளப்பான, விஷம் உள்ள அழகு..’
உதடு, ஏளனமாய் வளைந்தது..

“ஆமா..உன் அண்ணன், பட்டணத்துல என்ன பண்ணுறார்..??”

“அவரு, பல பிசினஸ் பார்க்குறாரு டா..”

‘அதோடு, மகளையும் சேர்த்து கவனித்திருந்தால்,இன்று ஒருவன் மனநல காப்பகத்தில் இருக்க மாட்டான்..’

“அவருக்கு, எத்தனை பிள்ளைங்க அத்தை??”

“ஒரே பொண்ணு டா..”

‘பி ஆர் குரூப் ஆப் கம்பனிஸ் ஓனரின் ஒரே பெண்..’

மனதில் தோன்றிய கசப்புடன், மாடி ஏறினான் ராஜா..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!