ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 5
பிடித்தம் 5:
‘சோ’ என்று கொட்டிக் கொண்டிருந்த அருவியை மாலினி சிறு பிரம்மிப்புடனும் ரசனையுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
அது அகஸ்தியர் அருவி. அகஸ்தியர் அருவி திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பாபநாசம் எனும் ஊரில் இருக்கிறது. வானுலக மங்கையான மழை பொய்த்தாலும் வருடம் தோறும் பொய்க்காமல் நீரை கொட்டும் அருவி இது. அதன் அழகை ரசித்திட இரண்டு கண்கள் போதாது எனலாம். இந்த இடத்திற்கு தனி வரலாறு உண்டு. இங்கே தான் அகஸ்தியர் முனிவரின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் கல்யாண கோலத்தில் காட்சி அளித்தார். அதன் பொருட்டே இந்த அருவி ‘அகஸ்தியர் அருவி’ என்று அழைக்கப் படுகிறது.
அன்று காலையில் திருநெல்வேலி வந்து இறங்கியதும் அருகில் இருந்த உயர்தர விடுதியில் குளித்து கிளம்பியவர்கள் காலை உணவை முடித்துக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த கூண்டுந்தில்(VAN) அகஸ்தியர் அருவிக்கு வந்திருந்தனர்.
Advertisement
Advertisement
மாலினி அருவியை வித விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் தலையில் யாரோ தண்ணீரை கொட்டவும் அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் திரும்பிப் பார்க்க, அங்கே கையில் சிறு காகித குவளையுடன் அவளது தோழன் கிருஷ்ணமூர்த்தி நின்றுக் கொண்டிருந்தான்.
தோழனை கண்டதும் கோபம் மறந்தவளாக, “ஹே! மூர்த்தி! நீ எப்போ வந்த? ஊரில் கல்யாண வேலை செய்யாம இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற?”
Advertisement
அவள் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லிவிட்டால் அவன் கிருஷ்ணமூர்த்தி இல்லையே!
கிருஷ்ணமூர்த்தி, “நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்கிற?”
“நான் தான் முதலில் கேட்டேன்”
“பதிலையும் நீயே முதலில் சொல்லிடு”
“பார்த்தா தெரியலை என்ன பண்றேன்னு?”
“அது தெரியுது.. சென்னையில் தான் இயந்திரங்களுடன் இயந்திர வாழ்க்கை னா இங்கே வந்துமா?”
அவள் அவனை முறைத்தபடி, “இப்போ எதுக்கு டா தலையில் தண்ணியை ஊத்துன?”
அவன், “என்ன முறைப்பு? போனை என்கிட்ட(என்னிடம்) குடுத்துட்டு போய் குளி..” என்றவன் கிண்டல் குரலில், “அட்லீஸ்ட் இன்னைக்காவது குளிக்கலாம்ல?” என்றான்.
“கொழுப்பு! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”
“இப்போ தான் வந்தேன்.. அங்கே கல்யாண வேலை செய்ய நிறைய பேர் இருக்காங்க”
[the_ad id=”6605″]
“இருந்தாலும் நீ செய்றது போல் வருமா?”
அவன் புன்னகையுடன், “இது சென்னை இல்லை மா”
“அது எனக்கு தெரியாது பாரு!”
“இங்கே இயந்திரங்களை விட சொந்தங்களுக்கு தான் மதிப்பு அதிகம்.. சென்னையில் நடக்கும் கல்யாணம் போல் இருக்காது.. சும்மா கல்யாண நேரத்தில் வந்து ‘ஹாய்’ சொல்லிட்டு போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு கிளம்புற கூட்டம் இங்கே இல்லை மா.. ஒரு வாரத்திற்கு வீடே சும்மா ஜே ஜே னு இருக்கும்.. நாம சொல்லாம அவங்களே வேலைகளை இழுத்துப் போட்டு செய்வாங்க.. மதியம் கிளம்பிடுவேன்..”
“ஹ்ம்ம்.. அது சரி தான்” என்றவள் மீண்டும் புகைப்படம் எடுக்க,
அவன், “அப்போ இன்னைக்கும் குளிக்கிறதா இல்லை”
“ஓய்!” என்றபடி அவனது புஜத்தில் அடித்தாள்.
“இங்கேயாவது இயற்கையோடு என்ஜாய் பண்ணு”
“அதானே பண்றேன்”
“எது? இப்படி இயற்கையை போட்டோ எடுக்கிறதா? இயற்கையை என்ஜாய் பண்றதுனா டெக்னாலஜி எதுவும் நடுவில் இல்லாம நீயும் இயற்கை மட்டும் னு இயற்கையோட ஒன்றிப் போறது..”
“ஹ்ம்ம்”
“போட்டோ எடுத்தது போதும், போய் குளி”
“இங்கே எப்படி டா?”
“ஏன்! குளிக்கிறவங்களை பார்த்தா மனுசங்களா தெரியலையா?”
“டேய்!”
“என்ன! லேடிஸ் ஜென்ட்ஸ் னு பார்டிஷன் பண்ணி தானே இருக்குது.. தைரியமா போய் குளி..”
“அது ஓகே தான்.. ஆனா..”
“நம்ம பிரெண்ட்ஸ் குளிக்கலையா!”
“நான் இதுவரை அருவியில் குளித்தது இல்லை டா”
“அதான் அதோட அருமை உனக்கு தெரியலை.. குளிக்க ஆரம்பித்த! வெளியே வரவே மனசு வராது.. உன்னை பத்தி தெரிந்து தான் நான் வந்தேன்”
நண்பன் தனக்காக வந்ததில் நெகிழ்ந்தவள் அப்பொழுதும் தயக்கத்துடன் பார்க்கவும்,
அவளது தயக்கம் அறிந்து அவன், “ட்ரெஸ் செஞ் பண்ணிக்க தனி ரூம் இருக்குது மா..” என்றான்.
[the_ad id=”6605″]
“சூப்பர்” என்று மகிழ்ச்சியுடன் அவனை பார்த்தவள் அப்பொழுதும், “ஆனா நான் எக்ஸ்ட்ரா டிரஸ் கொண்டு வரலையே!”
“இப்போ வேன்-ல உன்னோட டிரஸ் பேக் இருக்குதா இல்லையா?”
“இருக்குது..” என்று அவள் இழுக்க,
“இதுக்கு மேல ஏதாவது நொண்டி சாக்கு சொன்ன! எவன் பார்த்தாலும் பரவாயில்லை னு உன்னை தூக்கிட்டு போய் தண்ணீல நிக்க வச்சிருவேன்”
“ஹீ.. ஹீ”
அவள் கைபேசியை பிடுங்கியவன், “இழிச்சதும் போதும்” என்றான்.
அவள் சிறு பயத்துடனும் அதிக ஆர்வத்துடனும் அருவியை நெருங்கினாள். பாறையின் மீது பட்டு தெறித்த நீர் துளிகள் முகத்தில் பட்டதும் அதன் குளுமையில் அவளது உடல் சிலிர்த்தது. சிறு குழந்தையின் ஆரவாரத்துடன் கைகளை நீரில் அசைத்து விளையாடினாள்.
அப்பொழுது குளித்துவிட்டு வெளியே வந்த அவளது தோழி பிருந்தா, “ஹே மாலு.. வந்துட்டியா! பால்ஸ்(falls) சூப்பரா இருக்குது.. இங்கே வா.. இந்த இடத்தில் தண்ணியும் நல்லா விழுது கூட்டமும் கம்மியா இருக்குது” என்றபடி இவளை இழுத்துச் சென்றாள்.
முக்கால் மணி நேரம் அருவியில் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வந்தனர்.
மாலினி கிருஷ்ணமூர்த்தியிடம், “நீ சொன்னது போல் வெளிய வரவே மனசு இல்லை.. செம்ம டா” என்றவள், “நீ குளிக்கலையா?” என்று கேட்டாள்.
தோழிகள் அனைவருக்கும் துண்டை கொடுத்தபடி, “நான் நினைச்சா, உடனே கிளம்பி வந்து ஒரு குளியல் போட்டுட்டு போவேன்” என்றவன், தோழிகளை பொதுவாக பார்த்து, “முதல்ல ஷாலை பிழிந்து மேல போட்டுக்கோங்க.. டிரஸ் செஞ் பண்ற இடத்திற்கு கூட்டிட்டு போறேன்” என்றான்.
நண்பனின் குரலில் இருந்த வேகத்தை கண்டு கொண்ட மாலினி, “என்ன டா?” என்றாள்.
“சொல்றேன்.. சீக்கிரம் வாங்க” என்றவன், “சேகர்” என்று தோழர்கள் இருந்த பக்கம் குரல் கொடுத்தான்.
ராஜசேகர், “கிளம்பலாம் டா” என்று குரல் கொடுக்க, இவன், “வாங்க” என்றபடி அனைவரையும் அழைத்துச் சென்றான்.
இவர்கள் பத்தடி நடந்ததும் இவர்களுக்கு முன்னும் பின்னும் தோழர்கள் அரண் போன்று நடந்தபடி அழைத்துச் சென்றனர்.
மாலினி நடந்தபடியே கேள்வியாக கிருஷ்ணமூர்த்தியை பார்க்க, அவன், “ஒரு பசங்க கூட்டம் ஓவரா சவுண்ட் விட்டுட்டு இருந்தான்க”
“ஹ்ம்ம்.. குளிக்கும் போது நானும் கவனித்தேன்”
“அவன்களை பார்த்தா கொஞ்சம் சரியா படலை.. அதான்”
ஆடை மாற்றுமிடம் வந்ததும் கிருஷ்ணமூர்த்தி மாலினியின் பையை அவளிடம் கொடுக்க, அவள் அதில் இருந்து மாற்றுடையை எடுத்துக் கொண்டு சென்றாள்.
[the_ad id=”6605″]
இவர்கள் ஆடை மாற்றிவிட்டு வரவும் கிளம்பினர். கூண்டுந்து நோக்கி இவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்ட பசங்கள் கூட்டம் இவர்களைக் கடந்து சென்றனர்.
அதில் இருவர் பொண்ணுங்களை பார்த்து கிண்டல் செய்து சத்தமாக சிரித்து கண்ணடித்துவிட்டு செல்ல, தோழன் ஒருவன் கோபத்துடன் கிளம்ப, அவனது கையை பிடித்து தடுத்த கிருஷ்ணமூர்த்தி, “பொண்ணுங்க சேப்டி தான் முக்கியம்” என்றபடி அழைத்துச் சென்றான்.
கூண்டுந்தில் ஏறியதும் கிருஷ்ணமூர்த்தி, “இப்போ மேல காரையார் போக வேண்டாம்” என்றான்.
“ஏன்?” என்று சிலர் வினவ,
கிருஷ்ணமூர்த்தி, “அந்த பசங்க அனேகமா மேல போவான்க…………..”
பிருந்தா, “எங்கே போனாலும் இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கத் தானே செய்வாங்க! நாம ஏன் அவன்களுக்காக பிளானை மாத்தணும்?”
மாலினி, “அவன்களுக்காக மாத்தலை.. நமக்காக, நம் நன்மைக்காக மாத்த சொல்றான்”
கிருஷ்ணமூர்த்தி, “மேல நிறைய பேர் வரமாட்டாங்க.. சோ கூட்டம் கம்மியா இருக்கும்.. சேப்ட்டி கம்மி.. அது போக அங்க நீங்கலாம் டிரஸ் மாத்த தனி இடம் கிடையாது”
சிலர் முகம் வாடவும், கிருஷ்ணமூர்த்தி, “மதியம் லன்ச் முடிச்சதும் உங்களை முக்கூடல் ஆத்துக்கு கூட்டிட்டு போகச் சொல்றேன்.. அங்க ஆழமும் இழுப்பும் இல்லாம தண்ணி குளிக்கவும் நல்லா இருக்கும்.. டிரஸ் மாத்தவும் இடம் இருக்கும்” என்றதும்,
“ஹேய்” என்று கத்தி கூச்சலிட்டனர்.
அதன் பிறகு கிளம்பினர்.
கிருஷ்ணமூர்த்தியின் கணிப்புப்படி அந்த பசங்க கூட்டம் மேல செல்ல, இவர்கள் கீழே இறங்கி மதிய உணவை முடித்தனர்.
உணவு விடுதியில் வைத்து கிருஷ்ணமூர்த்தி மாலினியிடம் தனியாக, “வேனில் டிரைவர் சீட் பக்கம் ரெண்டு தூக்கு வாளி நொறுக்குத் தீனி வச்சிருக்கேன்..” என்றான்.
“எதுக்கு டா?”
“அம்மா குடுத்து விட்டாங்க.. ஆத்துல குளிச்சதும் பசிக்கும்.. குளிச்சிட்டு சாப்பிடுங்க.. பசங்க கிட்ட இப்பவே சொல்லிடாத ஆத்துக்கு போறதுக்கு முன்னாடியே காலி பண்ணி வாளியை கௌத்திடுவான்க”
மாலினி மென்னகையுடன், “சரி” என்றாள்.
அனைவரும் வேனில் ஏறியதும், கிருஷ்ணமூர்த்தி, “ஓகே கயீஸ் நாளைக்கு பார்க்கலாம்.. நாளைக்கு காலையில் திருச்செந்தூர் போயிட்டு மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்திடுங்க” என்று பொதுவாக கூறியவன், ராஜசேகரிடம், “சேகர் பார்த்து.. கவனம்” என்றுவிட்டு, மாலினியிடம் சிறு தலையசைப்புடன் கிளம்பினான்.
அதன் பிறகு முக்கூடல் என்ற இடத்தில் ஓடிய தாமிரபரணி ஆற்றில் ஆட்டம் போட்டனர்.
உடை மாற்றிவிட்டு வந்ததும் மாலினி அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தை சுட்டிக் காட்டி, “இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசலாமா?”
ஒருவன், “என்னது உட்காருறதா! பசியில என்னோட பெருகுடல் சிறுகுடலை சாப்டுட்டு இருக்குது” என்று கூற,
மாலினி மென்னகையுடன், “மூர்த்தி ஸனக்ஸ் குடுத்திருக்கிறான்”
அவன், “நீ உன் சைஸ்க்கு சாப்பிடுறதும் நாங்க சாப்பிடுறதும் ஒன்றா?” என்று கூற,
[the_ad id=”6605″]
இன்னொருவன், “அதானே! யானை பசிக்கு சோழப்பொறி பத்துமா?” என்று கூற,
பிருந்தா, “மாலு வண்டியில் இருக்கும் வாழை பழத்தை இந்த குரங்கு வாயில் திணி” என்றாள்.
மாலினி ராஜசேகரிடம், “சேகர்.. டிரைவர் சீட் பக்கத்துல ரெண்டு தூக்கு வாளி இருக்கும்.. அதை எடுத்துட்டு வா” என்றதும் அவன் போய் அவற்றை எடுத்து வந்தான்.
அவற்றை பார்த்ததும் ஒருவன், “எவ்ளோ பெரிய வாளி” என்று நடிகை தேவயாணி போல் கூற,
இன்னொருவன், “இது எப்படி மச்சி நம்ம கண்ணில் படாம போச்சு?” என்று சந்தேகம் கேட்டான்.
அதன் பிறகு அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் வட்டமாக அமர்ந்தபடி சிற்றுண்டியை உண்ணத் தொடங்கினர்.
ஒருவன், “இது என்ன மரம் மச்சி?”
“இப்போ தானே டா எக்ஸாம் எல்லாம் முடிந்து நிம்மதியா இருக்கிறேன்.. உனக்கு பொறுக்கலையா?”
“தெரியலைனா தெரியலை னு சொல்லிட்டு போ”
மாலினி, “இது ஆலமரம்”
முதலில் பேசியவன், “ஒரு படத்தில் செந்தில் கூட அடி விழுது னா என்னனு கேட்டு ஆராய்ச்சி பண்ணுவானே”
“அதே தான் மச்சி.. இதான் அந்த அடி விழுது” என்றபடி அவன் முதுகில் அடி போட்டான். பதிலுக்கு அவன் அடிக்க வர, இவன் ஓட என்று கூச்சலும் கலாட்டாவுமாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து ராஜசேகர், “ஓகே கயீஸ்.. இப்போ நான் ஒவ்வொரு வார்த்தையா சொல்லுவேன்.. ஒவ்வொருத்தரும் உங்க கருத்தை சொல்லணும்”
“ஓகே மச்சி”, “சரி” என்று பல குரல்கள் வந்தது.
ராஜசேகர், “முதல் வார்த்தை லவ்”
“லவ் அழகான பூ மாதிரி”
“லவ் னா மாயை”
“லவ் ஒரு சுனாமி”
“லவ் னு ஒன்னு இருக்கா?”
“லவ் னா லஸ்ட்”
“லவ் னா சொர்க்கம்.. மகிழ்ச்சி னு இப்படி சொல்லிட்டே போகலாம்”
“எந்த லவ் பத்தி கேட்கிற மச்சி? பப்பி லவ் ஆர் டைம் பாஸ் லவ் ஆர் ட்ரூ லவ்?”
“தெரியாத தேவதையை விட தெரிந்த பேய் மேல்.. அதான் மச்சான் லவ் பண்றேன்”
“லவ் இன்பமான இம்சை” என்று பல பதில்கள் வர,
[the_ad id=”6605″]
ஒருவன், “யாரை பார்த்து கேட்கிற? நான் முரட்டு சிங்கிள்” என்றான்.
மாலினி, “ஏன்! சார் கல்யாணம் பண்ணிக்க போறதில்லையா?”
“என்னை பேசுறியே நீ சொல்லு லவ் னா என்ன?”
மாலினி, “லவ்.. நம் வாழ்க்கையை உயிர்ப்புடன் வைக்கும் ஒரு உணர்வு”
“பார் டா!” என்று முதலில் பேசியவன் ஆச்சரிய குரலில் கூற,
ஒருவன், “எனி எக்ஸ்பிரியன்ஸ்?”
மாலினி மென்னகையுடன் உதட்டை பிதுக்கி தோள் குலுக்கினாள்.
சிறிது நேரம் வெவ்வேறு வார்த்தைகளை பற்றி பேசினார். பிறகு கிளம்பி தங்கும் விடுதிக்கு சென்றனர்.
——————————————————————————————————————————————————————–
மித்ராணி வேலை செய்துக் கொண்டிருந்த போது மனோஜ் கைபேசியில் அவளை அழைத்தான்.
மனோஜ், “மித்துமா என்ன பண்ணிட்டு இருக்கிற?”
“இந்த நேரத்தில் என்ன பண்ணிட்டு இருப்பாங்க? வேலை தான்”
“அது மத்தவங்களுக்கு”
“ஏன் எனக்கு மட்டுமென்ன?”
‘உன் பாடு ரொம்ப கஷ்டம் டா மனோஜ்’ என்று மனதினுள் புலம்பியவன், “எனக்கு உன் நினைப்பாவே இருக்குது மித்துமா” என்றான் சற்று கரகரப்பான குரலில்.
அந்த குரலில் செய்துக் கொண்டிருந்த வேலையை சட்டென்று நிறுத்தியவள், “மனோ” என்றாள் மெல்லிய குரலில்.
அவளது குரல் மாற்றத்தை கண்டுக் கொண்டவன் மனதினுள் மகிழ்ச்சியுடன், ‘ரொம்ப கஷ்டப்பட வேணாம் போலவே!’ என்று கூறிக் கொண்டான்.
அவன் அதே கிறக்கமான குரலில், “ஹ்ம்ம்” என்றான்.
“..”
“என்ன அமைதியாகிட்ட?”
“என்ன பேச?”
“ஏதாவது பேசு”
[the_ad id=”6605″]
“அதான் என்ன பேச?”
“நாம எப்போ கல்யாணம் செய்துக்கலாம்? கல்யாணம் செஞ்சுட்டு ஹனிமூனுக்கு எங்கே போகலாம்? எப்போ குழந்தைகளை பெத்துக்கலாம்? எத்தனை குழந்தைகளை பெத்துக்கலாம்? இப்படி எதை பற்றி வேணாலும் பேசு”
அவள் சிறு வெக்கத்துடன், “மனோ” என்று சிணுங்கினாள்.
“நீ இப்படி சிணுங்கும் போது…..” என்று அவன் இழுத்து நிறுத்த,
அவள், “போது?” என்று எடுத்துக் கொடுக்க,
அவன், “அப்படியே உன்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுக்கணும் போல இருக்குது”
“என்ன இது?” என்று அவள் சிறு கண்டன குரலில் கூற,
அவன், “பேசுறதுக்கும் தடையா?”
“அதுக்குன்னு ஆபீஸ்ஸில் வைத்தா?”
அவன் ரகசிய குரலில், “அப்போ வீட்டில் வைத்துனா ஓகேயா?”
“ஹே! என்ன பேச்சு இது! நான் போனை வைக்கிறேன்” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.
நெஞ்சில் கைவைத்தபடி மூச்சை இழுத்து விட்டவள், ‘இவன் ஏன் இப்படியெல்லாம் பேசுறான்? எனக்குள் என்னவோ பண்ணுதே! என் மனசுலையும் லவ் வந்திருச்சா? இல்லை முதல் முறை ஒரு ஆண் இப்படி பேசுறதை கேட்டு வரும் உணர்வு மட்டும் தானா? ஆனா மனசுக்கு நெருக்கமில்லாத ஆண் இப்படி பேசினா கோபம் தானே வரும்?’ என்று தன்னை தானே கேள்விக் கேட்டு குழம்பியவள், ‘எனக்கு மனோ பேசியதை கேட்டு கோபம் வரலைனாலும் அவனை அந்த மாதிரி கற்பனை செய்யவும் வர மாட்டிக்குதே! என்ன உணர்வோ இது?’ என்று மேலும் குழம்பினாள்.
மனோஜோ அவள் அழைப்பை துண்டித்ததும் புன்னகையுடன் கைபேசியில் இருந்த அவளது புகைப்படத்தை பார்த்து காதலுடனும் கிறக்கத்துடனும், “மிது பேபி” என்று அழைத்து புகைப்படத்திற்கு அழுத்தமான முத்தம் ஒன்று கொடுத்தான்.
பிறகு ஒற்றை விரலால் அவனது கைபேசியில் தெரிந்த அவளது முகத்தை வருடியவன், “லவ் யூ ஸோ மச் மிதுமா.. நீயும் கூடிய சீக்கிரம் என்னை இதே அளவுக்கு லவ் பண்ணுவ” என்றான்.
அதே நேரத்தில் தனது அறையில் அமர்ந்திருந்த பிரசாத்தும் தனது கைபேசியில் இருந்த மித்ராணியின் புகைப்படத்திடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.
பிரசாத் காதலுடன், “மித்து பேபி! உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? உன் தைரியம் பிடிக்கும்.. உன் நேர்மை ரொம்ப பிடிக்கும்.. ஆனா நீ எனக்கு கிடைக்கணும் னு உனக்கு பிடித்த நேர் வழியில் என்னால் வர முடியலை னு யோசிக்கும் போது எனக்கே என் மேல் கோபமா வருது.. ஒரு கல்யாணத்திற்கு ஆயிரம் பொய் சொல்லலாம் னு சொல்றாங்க.. நம்ம கல்யாணம் நடக்க நான் பொய் எதுவும் சொல்லலை.. என் வழியில் இருக்கும் தடையை தகர்க்கிறேன்.. அவ்ளோ தான்.. உன் சிரிப்பு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அந்த சிரிப்பை வாட விடாமல் இருக்க என்னால் மட்டும் தான் முடியும் பேபி.. ஐ லவ் யூ ஸோ மச் மித்து பேபி” என்றான்.
அதே நேரத்தில் தொழில் சாம்ராஜ்யத்தின் முதல் இடத்தில் இருக்கும் இளம் தொழிலதிபர் புகழ்வேந்தன் அறையினுள் அனுமதி பெற்று நுழைந்த சதீஷ், “பாஸ் நீங்க கேட்ட டிடேல்ஸ் மெயில் பண்ணிட்டேன்” என்றான்.
[the_ad id=”6605″]
தனது மடிகணினியில் சதீஷ் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து அதில் இருந்த புகைப்படத்தை பார்த்த புகழ்வேந்தன், “மித்ராணி” என்றான். சில நிமிடங்கள் அமைதியாக அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சதீஷ் மனதினுள், ‘சும்மாவே ஓரளவுக்கு தான் இவர் பார்வைக்கு அர்த்தம் புரியும் நமக்கு.. இப்போ இவர் என்ன நினைக்கிறார்னே புரியலையே’ என்று கூறிக் கொண்டான்.
அப்பொழுது தனது சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்த மித்ராணிக்கு புரையேறி அதிகமாக இருமினாள். புரையேறியதிற்கு காரணம் யாரின் நினைப்போ? மனோஜா? பிரசாத்தா? புகழ்வேந்தனா? – பொறுத்திருந்து பார்ப்போம்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
குறிப்பு:- எனது இடது கண்ணில் infection ஏற்பட்டுள்ளது தோழமைகளே.. வலியும் இருக்கிறது.. குறைந்தது ஒரு வாரம் ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் கண் சரியானதும் உங்களை சந்திக்க வருகிறேன்.. முடிந்தளவு சீக்கிரம் வர பார்க்கிறேன்..
