Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 23

 பிடித்தம் 23

வெற்றிவேல் அவனது இரு சக்கர வண்டியை ஓடிக் கொண்டிருக்க பின்னால் மாலினி அமர்ந்திருந்தாள்.

 

மாலினி வெற்றிவேலின் கோபத்திற்கான காரணத்தை ஓரளவிற்கு யூகித்திருந்தாள். அவனது கோபத்தை எப்படி போக்கப் போகிறோம் என்ற சிந்தனை அவளுள் ஓடினாலும் அதையும் மீறி அவனுடன் செல்லும் இந்த முதல் பயணத்தை அவளது மனம் ரசித்தது. ஆனால் இந்த முதல் பயணத்தை ரசிக்கும் மனநிலையில் வெற்றிவேல் இல்லை. அவனை கோபமே முழுதாக ஆக்கிரமித்து இருந்தது.



Advertisement

 

வெற்றிவேலின் கோபத்தில் வண்டி சீறிப்பாய, மாலினி பிடிமானத்திற்காக அவனது தோளில் மீது கையை வைத்தாள். அவளது தொடுகையில் கூட அவனது கோபம் குறையவில்லை.

 

Advertisement

வண்டியை ஒரு பூங்காவின் முன் நிறுத்தியவன், “இறங்கு.. வண்டியை நிறுத்திட்டு வரேன்” என்றான்.

Advertisement

 

“அதை என் முகத்தை பார்த்துக் கூட சொல்லலாம்” என்று அவள் மென்னகையுடன் கூற, அவன் முறைத்துவிட்டு சென்றான்.

 

Advertisement

எப்பொழுதும் சுற்றுப்புறத்தின் மீது கவனமாக இருக்கும் மாலினி இன்று வெற்றிவேலின் கோபத்தை எப்படி தணிக்கப் போறோம் என்ற யோசனையில் சற்று தள்ளி வந்துக் கொண்டிருந்த மூவரையும் கவனிக்கத் தவறினாள்.

 

அந்த மூவரில் ஒருவன் மாலினியை வேண்டுமென்றே இடிப்பது போல் வர, அவன் அருகில் வந்த பிறகே கவனித்து அவள் விலகும் முன் அந்த இளைஞன் பறந்து போய் விழுந்திருந்தான்.

 

மாலினி அதிர்ச்சியுடன் திரும்ப, அவள் பின்னால் வெற்றிவேல் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.

 

கல்லூரியில் பசங்களுக்குள் நிகழ்ந்த அடிதடி சண்டைகளை பார்த்திருக்கிறாள் தான் ஆனால் வெற்றிவேலின் இந்த கோபத்தை கண்டு அவள் சிறு பயத்துடன் அவனை பார்த்தாள்.

 

‘கவனத்தை எங்கே வச்சிட்டு இருக்கிற?’ என்று திட்ட வந்த வெற்றிவேல் அவளது கண்ணில் தெரிந்த பயத்தில் திட்டாமல் அவளது தோளை சுற்றி கை வைத்து ஆதரவாக லேசாக அணைத்துக் கொண்டான்.

 

மற்ற இரண்டு இளைஞர்களில் ஒருவன் விழுந்தவனை தூக்க செல்ல, மற்றவன் வெற்றிவேலை பார்த்து, “ஏய்! நாங்க யாரு னு தெரியுமா? கஜா அண்ணா ஆட்கள்.. எங்க மேலே………..” அவன் முடிக்கும் முன் வெற்றிவேல் விட்ட அறையில் அவனது கடவா பல் வெளியே வந்து விழுந்தது.

 

வெற்றிவேல், “பண்றது பொறுக்கித் தனம்.. இதில் சௌண்டு விடுற! வரச் சொல்லு டா அந்த கஜாவை” என்று உறுமினான்.

 

இதற்குள் முதலில் மிதி வாங்கியவனும் மற்றவனும் வந்திருக்க, அடி வாங்காதவன், “என்ன பிகர் முன்னாடி ஸீன் போடுறியா? நீ ஆம்பளையா இருந்தா இங்கேயே இருடா.. எங்க ஆட்களோட வரோம்” என்று கத்தியபடி நகர,

 

வெற்றிவேல், “இன்னும் அரை மணி நேரம் இங்கே இந்த பார்க்கில் தான் இருப்பேன்.. உன் ஆட்களை கூட்டிட்டு வாடா” என்றான்.

 

அந்த மூவரும் தெறித்து ஓட, வெற்றிவேல் மாலினியை பார்த்து, “உள்ளே போகலாம் வா” என்றபடி அணைப்புடனே அழைத்துச் சென்றான்.

 

அந்த பூங்காவின் உள்ளே சென்று ஒரு மரத்தடியில் இருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள்.

 

வெற்றிவேல் அவளது கையை பற்றியபடி, “பயந்துட்டியா?”

 

அவள் ‘இல்லை’ என்றும் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்ட,

 

அவன் மென்னகையுடன் அவளது தலையில் கைவைத்து அதன் ஆட்டத்தை நிறுத்தியபடி, “போலீஸ்காரன் பொண்டாட்டி இந்த சில்லறை பசங்களுக்கு எல்லாம் பயப்படலாமா?” என்று வினவ,

 

அவள் செல்ல முறைப்புடன், “நான் அவன்களை பார்த்தா பயந்தேன்?”

 

“ஓ” என்றபடி புருவம் உயர்த்தியவன், “எனக்கும் பயப்படக் கூடாது”

 

“இதான் முதல் முறை உங்க அதிரடியை பார்க்கிறேன்.. அதான்.. இனி பயப்பட மாட்டேன்” என்று தலை சரித்துக் கூறி கண் சிமிட்டினாள்.

 

அவளது செய்கையில் மையலுடன் பார்த்தபடி, “இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்க” என்றவனின் முகம் முடித்த போது இறுகியதோடு கையையும் விலக்கிக் கொண்டான்.  

 

முதலில் ரசனையாக ஆரம்பித்தவன் அவள் இந்த புடவையை எதற்காக கட்டி இருக்கிறாள் என்பது நினைவிற்கு வரவும் கோபத்துடன் இறுகினான்.

 

அவனது முக மாற்றத்தை கவனித்தவள் அவனது கையை பற்றிக் கொண்டு, “உங்க கோபம் நியாயமானது தான்……….”

 

“நியாயமானது இல்லை னு வேற சொல்லுவியோ!” என்று அவன் சீற,

 

அவன் நடுவில் பேசாதது போல் பாவித்து அவள் பேசினாள், “ஆனா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சியவளின் கண்களும் கெஞ்சியது.

 

அவனது கோபம் சிறிதும் குறையவில்லை என்றாலும் அவளது விழி மொழிக்கு கட்டுப்பட்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.

 

அவள், “என் காதல் மேல் எனக்கே உறுதி தெரியவேண்டியது இருந்தது.. அதான் இத்தனை நாள் வாய் திறக்கலை.. நீங்க எனக்கு பன்னிரண்டு மணிக்கு விஷ் பண்ணப்ப என்னால் என் மனதை மறைக்க முடியலை.. ஆனா அப்போ கூட என் மனதை உங்களுக்கு கோடிட்டு காட்டினேனே தவிர நேரிடையா சொல்லலையே! ஆனா உங்க கிட்ட பேசியதும் இன்னைக்கு ஈவ்னிங்கே அப்பா அம்மா கிட்ட நான் உங்களை விரும்புறதை பத்தி பேசணும் நினைத்திருந்தேன்..

இன்னைக்கு காலையில் தான் அப்பா பொண்ணு பார்க்க வரதை பத்தி சொன்னாங்க…. (வெற்றிவேலின் உடல் இறுகவும் அவள் அவனது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு தொடர்ந்தாள்)

நான் இதை தடுக்க முயற்சி பண்ணேன்.. ஆனா அப்பா ரொம்ப தெரிஞ்சவங்க, வரச் சொல்லிட்டேன், அடுத்து அவங்க முகத்தில் எப்படி முழிக்கிறது! னு சொல்லிட்டே எனக்கு விருப்பம் இல்லைனா இதை கேன்சல் பண்ணிடுறதா சொன்னாங்க.. அந்த நேரத்தில் சட்டுன்னு அப்பாவுக்காக வர சொல்லுங்க னு சொன்னாலும் நான் ஓகே சொல்லாம நீங்க ஓகே சொல்லக் கூடாது னு சொன்னேன்.. அப்பா சரி னு சொன்னாங்க..

ஆனா கொஞ்ச நேரத்திலேயே அப்பாவுக்காக கூட வேறு ஒருத்தன் முன்னாடி போய் நிக்க முடியாது னு புரிஞ்சு அப்பா கிட்ட பேசலாம் னு பார்த்தா அப்பா ஆபீஸ் போய்ட்டாங்க.. போன் பண்ணி ‘வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரது வேண்டாம்’ னு நான் சொல்லிட்டு இருக்கும் போதே அப்பா கோவிலுக்கு தான் பார்க்க வராங்க னு சொல்லிட்டு ரொம்ப பிஸியா இருக்கிறதா சொல்லி போனை வச்சிட்டாங்க.. நான் உங்களை விரும்புறதை சொன்னால் உடனே இதை தடுத்து இருக்க முடியும் தான் ஆனால் என்னால் சட்டுன்னு சொல்ல முடியலை..   

என் மேல் இருக்கும் பாசமும் எனக்கு எதுவும் ஆகிடக் கூடாதே என்ற பயத்திலும் அப்பா சம்மதிக்க தயங்கினாங்க.. ஆனா என் விருப்பம் தெரிந்தால் அப்பா ஓகே சொல்லிடுவாங்க னு எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனா அதை அப்பா மனசு நோகாம எப்படி எடுத்து சொல்றது என்ற யோசனையில் தான் அப்பா கிட்ட சட்டுன்னு சொல்லாம நேரில் சொல்லிக்கலாம் நினைத்தேன்..

இதுவே வீட்டுக்கு வந்து பொண்ணு பார்க்கிறதா சொல்லி இருந்தால் நிச்சயம் அப்பா ஆபீஸ் போய் நின்றிருப்பேன்.. கோவில் னு சொல்லவும் தான் அப்பாவுக்காக சரி கோவிலில் வரும் நூற்றில் ஒருத்தரா நினைச்சுப்போம் னு வந்தேன்..”

 

அவளது நீண்ட விளக்கத்தில் கோபம் மட்டு பட்டிருந்தாலும் முழுதாக குறையவில்லை.

 

அவன், “இந்த பொண்ணு பார்க்க வர விஷயத்தை ஏன் மதியம் என்னிடம் சொல்லலை? அதுவும் நான் கேட்டும் நீ சொல்லலை” என்று குற்றம் சாட்டும் பார்வையுடன் வினவினான்.

 

அவள் தயக்கமின்றி அவன் கண்களை பார்த்து, “என்னாலே இதை சமாளிக்க முடிறப்ப எதுக்கு உங்களை டென்ஷன் படுத்தணும் னு நினைத்தேன்.. வேலையில் இருக்கும் டென்ஷன் போதாதா உங்களுக்கு?”

 

அவளது கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டவன், “தேங்க்ஸ் டா… அண்ட் சாரி.. அவசரப்பட்டு உன் மேல………………….”

 

“இந்த விஷயத்தில் நீங்க கோபப்படாமல் இருந்து இருந்தால் நான் உங்க மேல கோபப் பட்டிருப்பேன்” என்று அவள் கண்களை உருட்டியபடி கூற,

 

அவன் விரிந்த புன்னகையுடன் அவள் தோள் மீது கை போட்டு லேசாக நெற்றியில் முட்டி, “தேங்க்ஸ் டி பொண்டாட்டி” என்றவன் அவளது கண்களை பார்த்து காதலுடன், “லவ் யூ மானு” என்றபடி அவளது வலது புறங்கையின் மீது இதழ் பதித்தான்.

 

அவள் சட்டென்று எழுந்த சிலிர்ப்பில் கையை உருவிக்கொள்ள பார்க்க, அவனோ கையை இறுக்கமாக பற்றி இருந்தான்.

 

அவள் செல்ல முறைப்புடன், “இது சரியே இல்லை ACP”

 

“நான் இப்போ ACPயா இல்லையே!”

 

“ACPயா இல்லைனாலும் பொது இடத்தில் தப்பு தான்”

 

“சரிங்க மேடம்” என்றவன் மீண்டும் அவள் நெற்றியில் லேசாக முட்டி, “எனக்கும் அது தெரியும்.. இந்த இடம் மறைவா தானே இருக்குது அதான் சின்னதா.. இதே நம்ம வீடா இருந்து இருந்தால்….” என்று கூறி நிறுத்தியவனின் பார்வை மையலுடன் அவளது இதழில் பதியவும் படபடத்த இதயத்துடன் சற்று தள்ளி அமர்ந்தாள்.

 

அவன் மென்னகையுடன் கண் சிமிட்ட, அவள், “ப்ளீஸ்” என்றாள்.

 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அவன், “ஓகே.. நீ சொல்லு”

 

“என்ன?”

 

அவன் அவளை ஆழ்ந்து நோக்க,

 

அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் புரியாதது போல் அவள் மீண்டும், “என்ன?” என்றாள்.

 

“என் பார்வையின் அர்த்தம் உனக்கு புரியலை?” என்றவனது குரலே ‘உனக்கு புரிந்தது னு எனக்கு தெரியும்’ என்று சொல்லாமல் சொல்லியது.

 

அவள் சிறு வெக்கத்துடன், “அதான் விளக்கம் கொடுத்தப்ப சொன்னனே!”

 

“அது வேற இது வேற”

 

“அது எப்படி?”

 

அவன் மீண்டும் ஆழ்ந்து நோக்க, அவள் மெல்லிய குரலில் சிறு வெக்கத்துடன், “நான் அப்பறமா சொல்றேன்”

 

“எதை சொல்லுவ?”

 

“நீங்க எதை நான் சொல்லணும் னு நினைக்கிறீங்களோ அதை” என்றாள் மென்னகையுடன்.

 

அவன் குறும்பு பார்வையுடன், “ஓ! பாரின் ஸ்டைலில் சொல்ல போறீயா.. அதான் தனியா சொல்லலாம் னு..ஹ்ம்ம்.. ஓகே ஓகே”

 

‘என்ன’ என்று யோசித்தவள் அவனது பார்வை அவளது இதழில் பதியவும், “ஏய்!!!” என்று வெக்கத்துடன் அவனது புஜத்தில் அடித்தாள்.

 

அவன் விரிந்த புன்னகையுடன், “என்னை கொஞ்ச நாள் சுத்தலில் விட்டதிற்கு பனிஷ்மென்ட்டா நீ அப்படி தான் சொல்ற”

 

“நான் எங்கே சுத்தலில் விட்டேன்? அதான் முதல் நாளே என் கண்ணில் தெரிந்தது னு சொன்னீங்களே”

 

“ஆனா நீ அதை ஒத்துக்கலையே! ஸோ இதான் பனிஷ்மென்ட்”

 

‘இதெல்லாம் பனிஷ்மென்ட்டா’ என்று அவள் சத்தமின்றி முணுமுணுக்க, அதையும் கண்டுக் கொண்டவன் அவளது காதில் கிசுகிசுப்பான குரலில், “இது சாம்பிள் தான்… கல்யாணத்திற்கு அப்பறம் விதவிதமா பனிஷ்மென்ட் தரேன்” என்று கூற,

 

அவனது மீசை அவளது காதை உரசியதிலும் அவனது கூற்றிலும் அவளது உடல் முழுவதும் சிலிர்த்தது.

 

படபடத்த இதயத்துடன் அவள் சட்டென்று எழுந்துக்கொள்ள, அவனும் எழுந்தபடி, “ரிலாக்ஸ் மானு” என்று கூறி அவளது கையை மென்மையாக பற்றினான்.

 

கையை உருவியவள் அவனை அடித்தபடி, “பப்ளிக் பிளேசில் என்ன பேச்சு இது?”

 

அப்பொழுதும் அவன் குறும்பு பார்வையுடன், “பப்ளிக் பிளேசில் பேசியது தான் உன் பிரச்சனையா?” என்று வினவ,

 

ஒரு நொடி திடுக்கிட்டவள், “யூ” என்றபடி மீண்டும் அடித்தாள்.

 

வாய்விட்டு சிரிக்க, அவள், “போலீஸ் மாதிரியா பேசுறீங்க?”

 

மீண்டும் அவளது காதில், “போலீஸ்காரன் கூட பொண்டாட்டி கிட்ட மட்டும் பொறுக்கி மாதிரி தான் பேசுவான்”

 

அவளுள் என்னவோ செய்ய அவள் சற்று திணறலுடனே, “கிளம்பலாம்” என்றாள் அவன் முகம் பார்க்காமல்.

 

அவளது அவஸ்த்தையை புரிந்தவன் மேலும் அவளை சீண்டாமல், “சரி.. நீ கிளம்பு” என்றபடி கைபேசியை கையில் எடுத்தான்.

 

“என்னது கிளம்பா?”

 

“ஆமா” என்றவன் கைபேசியில் தந்தையை அழைத்தபடி நடந்தான். அவனுடன் கிளம்பாமல் நின்றவள் அவன் திரும்பி பார்த்த பார்வையில் முறைத்தபடியே அவனுடன் நடந்தாள்.

 

“எந்த ரெஸ்டாரன்ட் பா?” என்று கேட்டு அவரது பதிலை பெற்றுக் கொண்டு அழைப்பை துண்டித்த போது பூங்காவை விட்டு வெளியே வந்து இருந்தனர்.

 

மாலினி முறைப்புடன் நிற்க, அவன், “எந்த ஒரு விஷயத்தையும் நடுவில் விட்டு எனக்கு பழக்கமில்லை.. அதுவும் இதில் நீயும் சம்பந்தப்பட்டு இருக்க.. அவன்க வர மாட்டான்க.. நான் போய் யாரு னு பார்த்துட்டு வரேன்”

 

“ஏதோ என்கௌண்டரை லைவ்வா காமிக்கிறேன் னு சொன்னீங்க” என்று அவள் முறைப்புடனே கூறினாள்.

 

“அதுக்கு நீ தயாராகனுமே!” என்று அவன் மென்னகையுடன் கூறினாலும் அவனது பார்வையில் அழுத்தம் இருந்தது.

 

அவள், “என்ன தயாராகணும்?”

 

“உங்க அப்பா வீட்டுக்கு பக்கத்தில்……” என்று ஆரம்பித்தவன் அவள் பார்த்த பார்வையில், “இப்போ நீ இருக்கிறது உன்னோட அப்பா வீடு தானே! நம்ம வீடு தான் உன்னோட வீடு” என்றான்.

 

“நம்ம வீடும் என் வீடு தான் என் அப்பா வீடும் என்னோட வீடு தான்” என்றபடி நாக்கை துருத்தி தலை ஆட்டி சிரித்தாள்.

 

அவளது செய்கையை ரசித்தவன் மென்னகையுடன், “சரி.. இப்போ நீ இருக்கிற வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் XXX கராத்தே கிளாஸ்ஸில் நாளைக்கே சேருற.. நான் மாஸ்டர் கிட்ட பேசிட்டேன்.. ஒரு வாரத்தில் சேருவ னு சொல்லி இருந்தேன்.. ஆனா நாளைக்கே சேருற.. டைமிங் ஈவ்னிங் 5 டூ 6”

 

அவள் கண்களை விரித்து நோக்க, அவன், “என்ன?”

 

“நாளைக்கே சேரணுமா?”

 

“ஆமா” என்று அழுத்தத்துடன் கூறியவன், “இப்போ கிளம்பு.. நான் அரை மணி நேரத்தில் வருவேன் னு மட்டும் சொல்லு.. இங்கே நடந்ததை சொல்லி உன் அப்பாவை கலவரப்படுத்திடாத”

 

“ஹ்ம்ம்” என்று அவள் தனியே கிளம்ப மனம் இல்லாமல் சுருதி இறங்கி கூற,

 

அதை கண்டுக்கொள்ளாமல் வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி அவளை ஏற்றிவிட்டவன் பணத்தை செலுத்தியபடி, “டுவென்டி மினிட்ஸ் தான் ஆகும்.. ரீச் ஆனதும் போன் பண்ணு” என்று கூறி அனுப்பிவிட்டு கஜா என்ற ரௌடியை தேடிச் சென்றான்.

 

——————————————————————————————————————————————-

 

உறைந்து நின்றிருந்த மித்ராணி முகத்தில் புகழ்வேந்தன் இதழ் குவித்து மென்மையாக ஊத, சட்டென்று சுயம் பெற்றவள் அவனை முறைத்தபடி, “தள்ளிப் போ டா” என்றாள்.

 

“தள்ளி போகலை னா என்ன பண்ணுவ?” என்று கண்ணில் சிரிப்புடன் அவன் வினவ,

 

அவன் அருகாமையில் தனது மனம் தடம் மாறத் துடிப்பதை உணர்ந்தவளுக்கு தன் மீதே கோபம் வந்தது. அதற்கு காரணமான புகழ்வேந்தன் மீது அதிக கோபம் கொண்டாள்.

 

 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

எல்லாம் சேர்த்து அவள் கடும் கோபத்துடன், “இப்படி தொடாமல் தொட்டு என் உணர்வுகளை தூண்டிடலாம் னு மனக் கோட்டை கட்டாத.. ஏன்னா உடல் சுகத்திற்கு மயங்கவோ ஏங்கவோ நான் வேசி இல்லை” என்றாள்.

 

அவளது வார்த்தைகளில் கடும் கோபத்துடன் அவளை முறைத்தவன் அடுத்த நொடி அவளது இதழில் தனது இதழைப் பதித்தான்.

 

இரண்டு நொடிகள் அதிர்ச்சியில் நின்றவள் அடுத்த நொடியே அதீத கோபத்துடன் அவனை தள்ள பார்க்க அதற்கு முன் அவனே விலகி இருந்தான்.

 

அவன், “அதிகமா பேசுற வாய்க்கு இதான் தண்டனை” என்று கூற, அவளோ அவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள்.

 

அவள் அடித்ததில் அவனுள் கோபம் மூண்டாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவளது வலது கையை சிறை செய்தபடி தனது கையை சுற்றி சென்று அவளது இடையை வளைத்து பிடித்தவன் அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விலகினான்.

 

அவள் மீண்டும் அடிக்க கையை ஓங்க, இந்த முறை அவளது கையை பற்றியவன், “நீ கன்னத்தில் அடித்ததிற்காக தான் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்.. இன்னொரு முத்தம் வேணும் னா தாராளமா என்னை அடி” என்று இதழோர புன்னகையுடன் கண்சிமிட்டியபடி அவளது கையை விட்டான்.

 

இயலாமை தந்த கோபத்துடனும் எரிச்சலுடனும் அவனை தள்ளி விட்டுவிட்டு அவள் கீழே சென்றாள்.

 

செல்லும் அவளையே பார்த்தபடி அவன் நிற்க, அவனது மனசாட்சி, ‘ம்கும்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவ கிட்டே நெருங்க கூடாது னு முடிவெடுத்த! ஆனா இப்போ என்ன செய்து வைத்திருக்க’ என்று அவனைச் சாட,

 

‘அதானே! இப்படியா கண்ட்ரோல் இழக்கிறது?’ என்று தன்னைத் தானே கேட்டு கொண்டவன் அடுத்த நொடியே, ‘இல்லையே! சுழலில் சிக்கினால் அது நம்மை இழுப்பது போல் அவளது இதழ்கள் என்னை சுண்டி இழுத்தும் அவளது மனநிலையை கருதி விலகினேன் தானே! ஷீ இஸ் டிரைவிங் மீ கிரேஸி பட் ஸ்டில் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியும்’ என்று கூறிக் கொண்டான்.

 

அவனது மனசாட்சி, ‘நான் சொல்றதை கேளு.. எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே இரு.. அதான் நல்லது’ என்று கூற, அவன், ‘ஹ்ம்ம்.. பார்த்துக்கலாம்’ என்று கூறிக் கொண்டான்.

 

 

 

தோட்டத்தில் மித்ராணியோ கொதி நிலையில் இருந்தாள்.

 

‘எப்படி என்னை கிஸ் பண்ணுவான்? பெருசா மெத்தையில் வீரம் காட்டுறவன் அற்பமானவன் அது இது னு டயலாக் விட்டான்.. ஆனா.. பொறுக்கி’ என்று புகழ்வேந்தனை அவள் திட்ட,

 

அவளது மனசாட்சி, ‘திரும்ப அடிகிறதை விட்டுட்டு இங்கே வந்து திட்டிட்டு இருக்க! இவ்ளோ தான் உன் வீரமா?’ என்று கிண்டல் செய்ய,

 

அவள், ‘திரும்ப அடிச்சா திரும்ப கிஸ் தருவேன் சொன்னானே!’

 

‘திரும்ப அவன் வாயிலேயே அடிக்க வேண்டியது தானே!’

 

‘ஏன் அவன் திரும்ப வாயில் கிஸ் பண்ணவா?’

 

‘உண்மையை சொல்லு.. உனக்கு அது பிடிக்கலை? அவனது இதழ் தீண்டலும் கையின் தீண்டலும் உன்னை தீண்டலை?’

 

‘சீ வெக்கம் கெட்ட மனமே!’ என்று திட்டியபடி தன் கன்னத்தை தானே அடித்தாள்.

 

‘அவனை அடிக்கிறதை விட்டுட்டு என்னை அடிக்கிற! நீ என்னை அடிச்சு திட்டினால் நான் சொன்னது உண்மை இல்லை னு ஆகிடுமா?’

 

‘ரசித்ததால் தான் அவன் கன்னத்தில் அடிச்சேனா?’

 

‘உண்மையிலேயே நீ ரசிக்கலை னா அவனது செயலில் வெறுப்பு தான் வந்திருக்கணும் ஆனா உனக்கு கோபம் மட்டுமே இருக்குது’

 

‘..’

 

‘பதில் சொல்ல முடியலையா! ஏன் அவன் திரும்ப கிஸ் பண்ணா அவன் கண்ணை கிழிச்சது போல் அவனது கன்னத்தையோ இல்லை முத்தமிட்ட உதட்டையோ கிழிக்க உன்னால் முடியாதா? இப்படி ஓடி வந்திருக்க!’ என்று அவளது மனசாட்சி மேலும் விவாதிக்க தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டாள்.

 

இருவருமே மற்றவரின் அருகாமையில் தாங்களே தங்களுக்கு போட்டுக் கொண்ட இறுக்கம் எனும் வேலியை விட்டு வெளியே மெல்ல வர ஆரம்பித்தனர். அதை புகழ்வேந்தன் தெளிவாக புரிந்துக் கொண்டான் ஆனால் மித்ராணி ஓரளவிற்கு புரிந்துக் கொண்டாலும் அதை அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

 

——————————————————————————————————————————————-

 

புகழ் பெற்ற அந்த ஐந்து நட்சத்திர உணவகத்தில் வாடிக்கையாளர் இருவருடன் தனது தொழிற் சார்ந்த சந்திப்பை முடித்த ராகுல் அவர்களுடன் கைகுலுக்கி விட்டு கிளம்ப பார்க்க,

 

வாடிக்கையாளர்களில் ஒருவர், “இந்த மீட் சுக்செஸ்புல்லா முடிந்ததை கொண்டலாம் வாங்க” என்று அழைத்தார்.

 

அவர் மது அருந்த அழைப்பதை புரிந்துக் கொண்ட ராகுல் மென்னகையுடன், “நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்றான்.

 

அவர் அப்பொழுதும் விடாமல், “அட.. சும்மா வாங்க ராகுல்” என்றார்.

 

அவன் மறுத்து பதில் சொல்லும் முன் மற்றவரும், “சும்மா லைட்டா கம்பனி கொடுங்க.. என்னோட ட்ரீட் இது” என்று கூற,

 

மறுக்க முடியாமல், “சரி வாங்க” என்றான்.

 

மூவரும் அங்கிருந்த மது அருந்தும் இடத்திற்கு சென்றனர்.

 

ராகுல், “ஒரே ஒரு ஸ்மால் மட்டும் போதும்” என்றதும்,

 

ஒருவர், “இந்த வயசில் என்ஜாய் பண்ணாம எப்ப பண்ண போறீங்க? சும்மா குடிங்க” என்று கூற,

 

அவனோ புன்னகையுடன், “என்ஜாய் பண்றதுக்கு வேற சிலதும் இருக்குது” என்றான்.

 

அவர் சிரிப்புடன், “ஓ..ஓஓ.. நீங்க அப்படி வரீங்களா? நல்ல பீஸ்ஸா ஏற்பாடு செய்யவா?” என்று கேட்டு கண் சிமிட்டினார்.

 

அவன் மென்னகையுடனே, “இதையே மறுப்பவன் அதை செய்வேனா?” என்று மறுத்தான்.

 

அவர் தோளை குலுக்க, மற்றவர் அவன் தோளை தட்டிக் கொடுத்தார்.

 

அவர்கள் இருவரும் மது அருந்த ஆரம்பிக்கவும் பார்வையை சுழற்றிய ராகுலின் கண்ணில் குடித்துக் கொண்டிருந்த பிரசாத் விழுந்தான்.

 

ராகுல், “எக்ஸ்கியூஸ் மீ” என்றுவிட்டு பிரசாத் அருகே சென்றான்.

 

பிரசாத் அமர்ந்திருந்த நிலையை வைத்தே அவன் ரொம்ப நேரமாக குடித்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவன் நண்பனின் தோளை உலுக்கி, “டேய் பிரசாத்”

 

“யாரு டா அது என்னை டேய் சொல்றது?” என்றபடி பிரசாத் தலையை மட்டும் சரித்து பார்த்தான்.

 

“டேய்.. ராகுல் டா”

 

“ஓ! வா டா நல்லவனே! நீ எங்க இங்க? உனக்கும் லவ் பெயிலியரா?”

 

“என்ன டா பண்ற?”

 

அவன் அலட்சியத்துடன், “பார்த்தா தெரியலை? குடிக்கிறேன்”

 

“அது தெரியுது.. ஏன் இப்படி?”

 

“ஏன்? அதே கேள்வியை தான் என்னை நானே கேட்டுக்கிறேன்.. நான் ஏன் அவளை லவ் பண்ணேன்? காதல் இல்லாம கோழையான மனோஜை கல்யாணம் செய்ய ஏன் போராடினா? அப்பறம் ஏன் அவ அந்த புகழ்வேந்தனை கல்யாணம் செய்தா? இந்த கட்டாயக் கல்யாணத்தை ஏன் அவ மதிக்கிறா? என்னுடன் வா னு சொன்னா ஏன் கேட்க மாட்டிக்கிறா?” என்று குளறலாக அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டான்.

 

‘என்ன சொல்றான் இவன்?’ என்று முதலில் குழம்பிய ராகுல் பின் அதிர்ச்சியுடன், “டேய் நீ லவ் பண்ண பொண்ணு மித்ராணியா?”

 

“பண்ண இல்லை பண்ற?”

 

“டேய் இது தப்பு.. இப்போ அவ வேற ஒருத்தனோட மனைவி”

 

வெறியுடன் மதுவை வாயில் சரித்தவன், ராகுல் தடுக்கவும், “விடு டா.. என் வலி உனக்கு புரியாது” என்று கத்தினான்.

 

“இதை குடிச்சா எல்லாம் சரி ஆகிடுமா?”

 

“இல்லை தான்.. ஆனா என்னை நானே மறந்து வேறு உலகத்துக்கு போவேன்”

 

“வேண்டாம் டா.. சொன்னா கேளு”

 

கோபத்துடன், “ஏன் டா எனக்கு மட்டும் இப்படி நடக்குது?” என்றவனின் குரலில் முடிக்கும் போது வலியே அதிகம் இருந்தது.

 

“காலையில் நீ எங்க போன? நான் வந்தப்ப நீ மண்டபத்தில் இல்லையே! மனோஜ் கல்யாணத்தை பார்க்க முடியாம நீயே……………….”

 

“நானா வெளியே போகலை.. அப்பன்கிற பெயரில் எனக்கு இருக்கும் வில்லன் செய்த சதி டா.. அவன் என்னை கடத்திட்டான்.. அவன் மட்டும் என்னை கடத்தாம இருந்து இருந்தால் இந்நேரம் எனக்கும் என் மித்துவுக்கும் பஸ்ட் நைட் டா” என்று பேசியபடி அவன் அரை மயக்கத்திற்கு செல்ல, ராகுல் அவனை பிடித்து சரியாக அமர செய்தான்.

 

பிரசாத் குடித்ததிற்கு பணத்தைச் செலுத்தியவன் பணியாளர் ஒருவன் உதவியுடன் அங்கேயே அறை ஒன்றை பதிவு செய்து பிரசாத்தை அழைத்துச் சென்று படுக்க வைத்தான்.

 

பிரசாத் குடி போதையில் இன்னும் என்னென்னவோ உளறினான். ராகுல் வருத்தத்துடனும் சிறு கவலையுடனும் அவனை பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான்.

 

 

                        இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!