ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 10
பிடித்தம் 1௦
“என்ன?” என்று மாலினி அதிர்ந்தது நின்றது ஒரு நொடி மட்டுமே, அடுத்த நொடியே வெற்றிவேலை முறைத்தபடி, “என்ன ACP சார்! கிரிமினல்ஸ் கிட்ட போட்டு வாங்குறதை என்னிடமும் செய்றீங்களா?”
“நான் போட்டு வாங்க நீ கிரிமினல் இல்லையே”
Advertisement
“ஆனா அதைத் தானே இப்போ செய்றீங்க!”
Advertisement
அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன், “வேலையில் நான் அதிரடிக்கு பேர் போனவன் ஆனா உன்னிடம் அப்படியா நடந்துக்கிறேன்?”
Advertisement
“பார்த்த கொஞ்ச நேரத்தில் ப்ரொபோஸ் பண்ணி கல்யாணத்தை பத்தி பேசுறது அதிரடி இல்லையா?”
Advertisement
“ப்ரொபோஸ் பண்ணிட்டு கல்யாணத்தை பத்தி பேசாம வேற எதை பத்தி பேசுவாங்க?”
அவள் முறைக்கவும், அவன், “உன் விஷயத்தில் நான் இப்போதைக்கு அதிரடி இல்லை..”
“அது என்ன இப்போதைக்கு?”
“நான் நாலு வருஷம் காத்திருந்ததை விட்டுட்டியே அதை சொன்னேன்”
“அது எனக்கு எப்படி தெரியும்?” என்றவள் அவனை சந்தேகமாக பார்த்து, “இப்போதைக்கு னு சொன்னதுக்கு உண்மையான காரணம் இது தானா?”
அவளது புத்திக் கூர்மையை ரசித்தவன் உதட்டோர புன்னகையுடன், “உண்மையான காரணத்தை நீ ஓகே சொன்னதும் சொல்றேன்”
“நான் ஓகே சொல்லவே இல்லை னா?”
“எனக்கு நம்பிக்கை இருக்குது” என்று அவன் புன்னகைக்க,
அவள், “ஓவர் காண்பிடென்ஸ் உடம்புக்கு ஆகாது பாஸ்” என்றாள்.
“ஓவர் காண்பிடென்ஸ் தானே!” என்று கேட்டு கண்ணில் புன்னகையுடன் அவன் புருவம் உயர்த்த,
அவள், ‘அப்படியா!’ என்பது போல் பார்த்தாள்.
அவன் காதலுடன் ஆழ்ந்த குரலில், “என்னோட நான்கு வருட காத்திருப்பிற்கு கொஞ்சம் கூட பிரதிபலிப்பு இல்லாமலா போகும்!” என்று கூற,
ஏனோ அவனது மனதை வருத்த விரும்பாமல் அவள் அமைதியாக பார்க்க,
அவன், “ஒன் மோர் திங்.. படத்தில் வரும் ஹீரோஸ் கூட என்னை கம்பேர் பண்ணாத.. எனக்கு அது பிடிக்காது” என்றான்.
“நான் ஏன் உங்களுக்கு பிடித்ததை செய்யணும்?” என்று கேட்டு அவள் புருவம் உயர்த்த,
அவனோ அலட்டிக் கொள்ளமால், “என்னை விரும்பலை என்றாலும் தெரிந்தவன் என்ற முறையில் எனக்காக என்னிடம் பேசும் போது மட்டுமாவது அப்படி செய்யலாமே?” என்றான்.
“பொதுவா எல்லோரும் இப்படி பேசுறது தானே!”
“இருக்கலாம் ஆனா எனக்கு பிடிக்காது” என்றபடி அவன் தோள் குலுக்கினான்.
“ஏன் பிடிக்காது?”
“நான் நானா தான் இருப்பேன்.. எதுக்கு ஒரு இமஜிணறி கேரக்டருடன் என்னை கம்பேர் பண்ணனும்?”
அவள், “ரியல் போலீஸின் சாகசங்களை நாங்க நேரில் பார்த்தது இல்லையே அதான் இப்படி கம்பேர் பண்றோம்”
[the_ad id=”6605″]
“அடுத்த முறை என்-கௌண்டர் பண்ணும் போது உன்னை கூட்டிட்டு போறேன்” என்று அவன் சிரியாமல் கூற, அவள் அவனை முறைத்தாள்.
பின் அவள், “கிரிமினல்ஸை போட்டு தள்றீங்களோ இல்லையோ நல்ல போட்டு வாங்குவீங்க போல”
அவன் யோசனையுடன், “ஏன்?”
“நல்ல பேச்சை மாத்துறீங்களே!”
“நான் பேச்சை மாத்துறேனா?”
“பின்ன! நீங்க என்னிடம் போட்டு வாங்குறதை பத்தி பேசிட்டு இருந்தோம்.. டாபிக்கை எப்படி எப்படியோ மாத்திட்டீங்க”
“நீ கேட்கலைனா நானே இதை கேட்டு இருப்பேன்.. நான் போட்டு வாங்குறேன் னு எதுக்கு சொன்ன?”
அவள் பார்த்த பார்வையில், அவன், “என் கண்ணில் பொய் தெரியுதா உனக்கு?” என்று வினவினான்.
அவள் மறுப்பாக தலை அசைக்கவும், அவன், “சொல்லு” என்றான்.
“என் அப்பா என்னிடம் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டாங்க.. நீங்க அப்பா பார்த்திருக்கும் மாப்பிள்ளை னு பொ.. (பொய் என்று சொல்ல வந்தவள் அதை விடுத்து தொடர்ந்தாள்) சொல்லி போட்டு வாங்க பார்க்கிறீங்க”
அவளை தீர்க்கமாக பார்த்தவன், “சப்போஸ் னு சொன்னேனே! அதுவும் பார்த்திருக்கிற னு நான் சொல்லலையே! ஒருவேளை அப்படி நடந்தால் உன் பதில் என்னவா இருக்கும் னு கேட்டேனே தவிர, அப்படி நடந்திருப்பதா சொல்லலையே!” என்று கூற,
மாலினி சிறு திணறலுடன், “சாரி.. நான்……..”
“இட்ஸ் ஓகே.. இப்போ உன் பதிலை சொல்லு”
பதில் சொல்வதறியாது சிறிது திணறிய மாலினி, “அது நடக்கிறப்ப பார்க்கலாம்” என்றாள்.
வெற்றிவேல் மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றான்.
மாலினி புரியாமல் பார்க்க, வெற்றிவேல், “உன் விருப்பம் இல்லாமல் உன் அப்பா அப்படி செய்ய மாட்டார் னு சொல்லலை ஸோ” என்று இழுத்து நிறுத்தி கண்ணடிக்க,
மறுத்து பேச வாய் திறந்த மாலினி அவன் கண்ணடித்ததும் ஒரு நொடி அசைவற்று நின்றுவிட்டாள், ஆனால் அடுத்த நொடியே கோபத்துடன், “ACP செய்யும் வேலையா இது? நான் உங்க மேல் வைத்திருக்கும்……………..”
“மரியாதையை கெடுத்திடாதீங்க னு சொல்லப் போறியா? நான் முதல்லேயே சொல்லிட்டேன்.. எனக்கு உன்னோட மரியாதை தேவை இல்லை.. அண்ட் உன் முன்னாடி நான் ACP-யா நிற்கலை” என்றான்.
அவள் முறைப்புடன் “போடா” என்றுவிட்டு நகர, இப்பொழுது அதிர்ந்து நிற்பது வெற்றிவேலின் முறையாயிற்று.
இரண்டடி நடந்திருந்த மாலினி திரும்பி பார்த்து, “என்ன ACP சார்! இப்பவும் மரியாதை தேவை இல்லை னு சொல்லுவீங்களா?” என்று நக்கலுடன் வினவினாள்.
சட்டென்று அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த வெற்றிவேல் மென்னகையுடன், “சொல்லுவேன் என் மனைவியிடம்” என்றான்.
[the_ad id=”6605″]
அவனது பதிலில் ‘இது தேவையா உனக்கு?’ என்ற நிலையில் அவள் பேச்சற்று நிற்க,
அவளை நெருங்கிய வெற்றிவேல் ஆழ்ந்த குரலில், “எனக்கு உன் மேல் வந்த காதல் உனக்கு என் மேல் வரணும் னு கட்டாயம் இல்லையே! என்னை வேண்டாம் னு சொல்றதுக்கு உனக்கு முழு உரிமை இருக்குது.. உன்னை நான் தொந்திரவு செய்ய மாட்டேன்.. ஆனா என் வாழ்வில் கல்யாணம் என்று ஒன்று நடத்தால் அது உன்னுடன் தான்.. உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணிற்கும் என் மனதிலும் வாழ்விலும் மனைவியாக இடம் இல்லை” என்றவன் கிருஷ்ணமூர்த்தியை பார்த்து, “தேங்க்ஸ் கிருஷ்..” என்று ஆரம்பித்தவன் லேசாக தலையை மறுப்பாக அசைத்து, “தேங்க்ஸ் மூர்த்தி.. நான் கிளம்புறேன்” என்றுவிட்டு மாலினியிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றான்.
கிருஷ்ணமூர்த்தி, “கிளம்பலாமா?” என்று வினவ, அவனுடன் அமைதியாக கிளம்பியவள், கோவிலை விட்டு வெளியே சென்றதும் நடந்தபடியே, “நீ ஒன்னுமே சொல்லலை?” என்றாள்.
“என்ன சொல்லணும்?”
“உன் கருத்தை”
“இதில் நான் கருத்து சொல்ல என்ன இருக்குது?”
“டேய்”
“என்ன?”
மாலினி மெல்லிய கோபத்துடன், “அப்போ ஒரு பொறுக்கி வந்து என்னிடம் ப்ரொபோஸ் பண்ணி நான் அவனை கல்யாணம் செய்துக்க முடிவு பண்ணா, அப்பவும் நீ கருத்து சொல்ல ஒன்னுமில்லை னு இருப்பியா?”
“உன்னை பத்தி எனக்கு தெரியும் தானே!”
“நேரிடையா பதில் சொல்லு”
“ஒருத்தன் நல்லவனா கெட்டவனா? அவனுடன் உன் வாழ்க்கையை இணைத்துக் கொள்வது உனக்கு நல்லதா கெட்டதா? னு தெரியாத அளவிற்கு நீ தெளிவற்றவள் இல்லை.. அதையும் மீறி ஒருவேளை நீ தப்பான முடிவை எடுத்தால் நிச்சயம் உன் நல் வாழ்விற்காக பேசுவேன்”
“அப்பறம் ஏன் கருத்து சொல்ல என்ன இருக்குது னு கேட்ட?”
“இப்பவும் சொல்றேன் வெற்றி அண்ணா விஷயத்தில் நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை..”
அவள் முறைக்கவும் அவன், “வெற்றி அண்ணா னு இல்லை.. இந்த விஷயத்தில் யாராக இருந்தாலும் என்னிடம் கருத்து கேட்டு நீ முடிவு எடுக்கக் கூடாது.. உன் வாழ்க்கை துணையை உனக்காக உன் மனசு படி தேர்ந்தெடுக்கணும்.. உன் முடிவை நீ சுயமா எடு.. அது தப்பா இருந்தால் நான் நிச்சயம் அதை சுட்டிக் காட்டுவேன்” என்றவன் மனதினுள் ‘வெற்றி அண்ணா விஷயத்தில் நீ நீயா இல்லாமல் கொஞ்சம் வித்யாசப் படுற தான்’ என்று எழுந்த கருத்தை அவளிடம் பகிரவில்லை.
மாலினி, “எனக்கு அவர் மேல் காதல் இல்லை தான் ஆனா அவர் நாலு வருஷமா விரும்புறதும் கடைசியா பேசியதும் என்னை என்னவோ லைட்டா டிஸ்டர்ப் பண்ணுது” என்றபோது வீடு வந்திருந்தது.
வாசலில் இவர்களுக்காக காத்திருந்த கிருஷ்ணமூர்த்தியின் அன்னை இவளது கையை பற்றி, “இப்போ தான் பிருந்தா சொன்னா.. கால் இப்போ எப்படி இருக்குது மா?” என்றவர் அவள் பதில் சொல்லும் முன் மகனை முறைத்து, “உனக்கு கொஞ்சமாச்சும் கூறு(அறிவு) இருக்குதா கூறுகெட்டவனே! கால் வலி இருக்குற பிள்ளையை கோவிலுக்கு நடத்தி கூட்டிட்டு போய் இருக்கிற! இப்போ என்னாத்துக்கு கோவிலுக்கு போன? அதுவும் நடந்து!” என்று திட்ட,
கிருஷ்ணமூர்த்தி, “அதான் நீயே கூறுகெட்டவன் னு சொல்லிட்டியே! அப்பறம் என்ன? கூறுகெட்டவனுக்கு கூறு எங்கிருந்து இருக்கும்?” என்றான் நக்கல் குரலில்.
அவர் அவனை அடுத்து திட்டும் முன் மாலினி, “எனக்கு இப்போ கால் வலியே இல்லை மா.. நான் தான் கோவிலுக்கு போகணும் னு சொன்னேன்”
அவர், “உன் நண்பனை நீ விட்டு கொடுப்பியா?” என்று கூற,
கிருஷ்ணமூர்த்தி, “என்ன சொல்லிட்டு நீ வாசல்லேயே நிக்க வச்சு பேசிட்டு இருக்கிற? இவளுக்கு சாப்பிட ஏதாவது கொடு மா” என்றான்.
“ஏலே சந்தடி சாக்கில் என்னை கூறுகெட்டவ னா சொல்ற! இருலே உன்னை பார்த்துக்கிறேன்” என்றவர், “நீ வா மா நாம உள்ளார போவும்” என்றபடி மாலினியை அழைத்துச் செல்ல, அவள் மென்னகையுடன் அவருடன் சென்றாள்.
கிருஷ்ணமூர்த்தியும் மென்னகையுடன் நண்பர்களை தேடிச் சென்றான்.
[the_ad id=”6605″]
—————————————————————————————————————————————————
புகழ்வேந்தனிடம் கையெழுத்து வாங்க சதீஷ் வந்த போது காகிதங்களை படித்துப் பார்த்து கையெழுத்திட்டவன், “இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு ராகுல் வீட்டு ஆளிடமிருந்து போன் வரும்” என்றான்.
“பாஸ்!”
புகழ்வேந்தன் உதட்டோர புன்னகையுடன், “என்னோட அல்லி ராணி ஆட்டம் ஆடியிருக்கிறா.. ஸோ நிச்சயம் அந்த ஆள் மிஸ்டர் வேதாச்சலத்திடம் பேசுவான்” என்றவன், “உனக்கு தெரியாத இன்னொரு விஷயத்தை சொல்றேன்.. மனோஜ் ரோஷினி கல்யாணத்தை மட்டும் அவன் முடிவு செய்யலை மித்ராணி பிரசாத் கல்யாணத்தையும் சேர்த்து முடிவு செய்திருக்கிறான்”
“அந்த ஆளு வீட்டில் ஆள் வச்சிருக்கிறீங்களா!!!!”
‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டியவன், “இது என் யூகம் தான் ஆனா தப்பா இருக்காது”
“ஏன் பாஸ் யூகம் னு சொல்றீங்க?”
“அவன் வீட்டில் இருக்கும் ஆபீஸ் ரூமில் வச்சு தான் பேசியிருக்கிறான்.. ஸோ விஷயம் தெளிவா தெரியாது.. அவனோட மனைவி, மனோஜ், பிரசாத், மித்ராணி, மித்ராணியோட அம்மா னு எல்லோரையும் கூப்பிட்டு வச்சு பேசியிருக்கிறான்.. என்ன பேசினாங்க னு தெரியலை ஆனா அந்த ஆள் சத்தமும் மித்ராணி சத்தமும் நடுவில் வெளியே கேட்டுச்சு னு சொன்னாங்க.. ஸோ யூகித்தேன்”
“புரியலை பாஸ்”
புகழ்வேந்தன் பார்த்த பார்வையில் சதீஷ் சிறிது அசடு வழிந்தபடி, “உங்க அளவிற்கு எனக்கு மூளை இல்லை பாஸ்.. நீங்களே சொல்லிடுங்க” என்றான்.
புகழ்வேந்தன், “மனோஜ் ரோஷினி கல்யாணத்தை மட்டும் பேசுறதா இருந்தா மித்ராணியையும் அவளோட அம்மாவையும் கூப்பிட்டிருக்க மாட்டான்.. ஸோ பிரசாத் ஏதாவது ப்ளே பண்ணி அவனுக்கும் மித்ராணிக்கும் கல்யாணம் பேசுறது போல் செய்திருப்பான்.. விஷயம் கேட்டு மனோஜ் அமைதியா இருந்திருப்பான்.. மித்ராணி பொங்கி எழுந்திருப்பா.. தட்ஸ் ஆல்”
அப்பொழுது சதீஷின் கைபேசி அலற, அதை எடுத்து பார்த்தவன், “ராகுல் வீட்டு ஆள் தான் பாஸ் கூப்பிடுறான்”
புகழ்வேந்தன் தலை அசைக்கவும் எடுத்து பேசிய சதீஷ் பேசி முடித்துவிட்டு, “நீங்க சொன்னது சரி பாஸ்.. மனோஜ் ரோஷினி கல்யாண ப்ரோபோசலை ட்ராப் பண்ணிட்டாங்க.. இப்போ வேதாச்சலம் பிரசாத் ரோஷினி கல்யாண பேச்சை முன் வச்சிருக்கிறார்”
புகழ்வேந்தன், “அவன் போட்ட பால்(BALL) பூமராங் மாதிரி அவன் கிட்டயே திரும்பி வந்திருக்குது” என்றான்.
—————————————————————————————————————————————————-
[the_ad id=”6605″]
அதே நேரத்தில் கிருபாகரனின் அலுவலக அறையினுள் நுழைந்த பிரசாத், “இப்போ எதுக்கு வர சொன்னீங்க?” என்று சிடு சிடுத்தான்.
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“அதை போனில் பேசினா என்ன?”
“பிரசாத்”
“சரி சொல்லுங்க” என்று எரிச்சல் குறையாமலேயே கூறினான்.
கிருபாகரன், “வேதாச்சலம் கிட்ட பேசினேன்.. அவர் உனக்கும் ரோஷினிக்கும் கல்யாணம்……………….”
“முடியாது னு சொல்லிடுங்க”
“ஏன்?”
“முடியாது னா முடியாது.. அவ்ளோ தான்” என்றுவிட்டு அவன் வெளியேற கதவை திறக்க,
கிருபாகரன், “பிரசாத் நில்லு” என்று சற்று குரலை உயர்த்தி கூறினார்.
அவன் இறுகிய முகத்துடன் திரும்பி நின்றான்.
கதவு சரியாக மூடாததை இருவரும் கவனிக்கவில்லை.
கிருபாகரன், “நான் உன்னிடம் சம்மதம் கேட்கலை.. விஷயத்தை சொல்றேன்.. அவ்ளோ தான்”
“நீங்க சொன்னதும் தலை ஆட்டுறதுக்கு நான் மனோ இல்லை”
“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அதைத் தானே செய்த?”
“அது நீங்க சொன்னதிற்காக இல்லை.. எனக்கு பிடித்ததை நீங்க சொன்னதால் சரி னு சொன்னேன்”
“மித்ரா மனோவை தானே விரும்புறா!”
“உங்களுக்கு பயந்து காதலுக்காக கொஞ்சம் கூட போராடாத அந்த கோழை என் மித்துவோட தைரியத்திற்கும் நேர்மைக்கும் கிட்ட கூட வர முடியாது.. என் மித்துவ நான் தான் நல்லா பார்த்துப்பேன்..”
“பிரசாத்” என்று கிருபாகரன் கண்டிக்கும் குரலில் அழைக்க,
அவனோ அசராமல், “நிச்சயம் மித்து கல்யாணம் என்னுடன் தான் நடக்கும்” என்றான்.
“இது சரி இல்லை பிரசாத்”
“நான் சரி ஆக்குவேன்”
“மனோ உன் அண்ணன்.. அவனை விரும்புற……………”
“காதலுக்கு முதல் படி நம்பிக்கை.. இப்போ அதை மனோ உடைச்சிட்டான்.. நீங்க என் வழியில் குறுக்கே வராமல் இருங்க போதும்.. உங்க கௌரவத்தை விட்டு இறங்கி நீங்க ராகுல் அப்பா கிட்ட பேச வேண்டாம்.. ராகுல் கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றவன் அவர் பதிலை எதிர் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
[the_ad id=”6605″]
அப்பொழுது உள்ளே வந்த மல்லிகா கிருபாகரனை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, அவரோ அதை கண்டுக் கொள்ளாமல் வெளியேற பார்க்க,
மல்லிகா, “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் னு சரியா தான் சொல்லி இருக்காங்க”
“பிரசாத்தும் மனோஜும் உன் பசங்க” என்று அவர் பல்லை கடித்துக் கொண்டு கூற,
“ஓ! அது இப்போ தான் உங்களுக்கு தெரியுதா?” என்று நக்கலுடன் கேட்ட மல்லிகா, “பசங்க கல்யாண விஷயத்தை முடிவு செய்யும் போது அது தெரியலையா?”
“அந்த அக்கறை இருந்து இருந்தால் நீ என்னிடம் வந்து பேசி இருக்கணும்.. பசங்களுக்கு வயசாகுது பொண்ணு பாருங்க னு நீ சொல்லி இருக்கணும்”
“ஆமா நான் சொன்னதும் அப்படியே கேட்டுருவீங்க!”
“இது வரை நீ எதையும் என்னிடம் சொன்னதோ கேட்டதோ இல்லை.. அதனால் நானும் கேட்டது இல்லை”
“நம்ம கல்யாண விஷயத்தில் என் பேச்சை கேட்டீங்களா?”
கடும் கோபத்துடன் முறைத்தவர், “எத்தனை வருஷம் ஆனாலும் இதையே பிடிச்சி தொங்கு.. அந்த விஷயத்தை தவிர வேற எந்த விஷயத்தை நீ என்னிடம் கேட்டு இருக்கிற?”
“முக்கியமான விஷயத்திலேயே நீங்க எனக்கு முக்கியத்துவம் கொடுக்கலை” என்றவர், “எந்த விஷயத்தில் இதுவரை என் அபிப்பிராயாத்தை நீங்க கேட்டு இருக்கிறீங்க?” என்று சேர்த்து கேட்டார்.
“இதை கேட்கிறதுக்கு கூட உனக்கு இத்தனை வருஷம் ஆகி இருக்குது.. பெருசா பேச வந்துட்டா” என்றவர் அவரது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறி இருந்தார்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
