Skip to content
Post Views: 7,071
“உன்கிட்ட காசு இருக்கா” என்று வந்து நின்றவனை புரியாமல் பார்த்தாள் துளசி.
Advertisement
“என்கிட்டே ஏது காசு” என்றாள்.
Advertisement
Advertisement
“அதான் வேலைக்குப் போறியே” என்றான்.
Advertisement
“ரெண்டு மாசமா தான வேலைக்குப் போறேன்” என்றவள் “எதுக்கு இப்போ காசு” என்க.
“ஸ்வாதிக்கு கல்யாணம்ல அடுத்த வாரம், அம்மா கொறஞ்சது அஞ்சாயிரம் குடுக்கணும் சொல்றாங்க இப்போ கல்யாணம் ஆயிடுச்சே அதனால நான் தனியா குடுக்கணுமாம், அதோட கல்யாணம் பெங்களூர்ல போற வரச் செலவு தங்குற ஹோட்டல் செலவு எல்லாம் எப்படியும் பத்து கிட்ட ஆயிடும்” என்றான்.
வெற்றியின் சித்தி மகளின் திருமணம் முடிவாயிருந்தது அதற்குத்தான் பணம் கேட்க்கிறான், இவன் சம்பாதிக்கிறானே அதை என்னதான் செய்கிறான் என்று யோசனை செய்தவள் “உங்ககிட்ட இல்லையா பேங்க்ல வெச்சுருப்பீங்களே” என்க.
“என்கிட்டே காசு இல்ல அக்கவுண்ட்ல ஒரு ரெண்டாயிரம் கிடைக்கும் அவ்ளோதான்” என்றான்.
துளசி அதிர்ச்சியாகி அவனைப் பார்த்தாள் “உங்க சம்பளம்…”என்க.
“ஏய்… என்ன உன்கிட்ட இருந்தா குடு சும்மா கேள்வியா கேக்குற, ஏன் எனக்கு எவ்ளோ சம்பளம்னு உங்க வீட்டில சொல்லலையா தெரிஞ்சுதானே கட்டிகிட்ட இப்போ என்ன, மெடிக்கல்ல எனக்குப் பெருசா ஒன்னும் வராது இருக்குறத வெச்சு அட்ஜஸ்ட் பண்ணி வாழு நீ சம்பாரிக்குறதும் நமக்குத்தான ரெண்டு மாச சம்பளம் இருக்கும்ல அதைக் குடுத்தா என்ன”என்றான் துள்ளிக்கொண்டு.
“சீர் பணம் உங்க கிட்டதான இருக்கு அதுல எடுத்துக்கோங்க” என்றாள் துளசி.
“ஓஹ்… உங்க வீட்டு காசுன்னு என்கிட்டே கணக்கு கேக்குற அதான சீருக்குனு தான குடுத்தாங்க அதைப் பொருளாதான் வாங்கணும்னு ஒன்னும் சட்டமில்லையே, எனக்குக் குடுத்ததுதானே பைக் வாங்கினது போக மிச்சம் இருந்தது மெடிக்கல்ல செலவாயிடுச்சு” என்றவனை அவள் புரியாமல் பார்த்தாள்.
“மெடிக்கல் ரொம்ப வருஷமா அப்படியே இருந்துச்சு காசு இல்லாம எதுவும் மாத்தல அதான் நேம் போர்டு புதுசா மாத்திட்டேன் அதுக்கே பதினைஞ்சாயிரம் ஆயிடுச்சு, உள்ளே ராக் எல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்தி பெயிண்ட் அடிச்சாச்சு மருந்து எல்லாம் மாத்திட்டு புதுசு வாங்கியாச்சு எல்லா காசும் செலவாயிடுச்சு” என்றான் சாதாரணமாக.
“உங்க மெடிக்கல் எங்க இருக்குனு கூட எனக்குத் தெரியல இவ்ளோ எல்லாம் செஞ்சிருக்கீங்க என்கிட்டே சொல்லணும்னு உங்களுக்குத் தோனலயா, இந்த வீட்டிலதான இருக்கேன் வண்டி வாங்கினதை சொல்லல இவ்ளோ வேலை நடந்திருக்கு சொல்லல எல்லா காசும் செலவாயிடுச்சுன்னா என்ன அர்த்தம், இவ்ளோ வருஷமா வேலை செய்றீங்களே கொஞ்சம் கூடவா சேமிப்பு இல்லை”என்றாள் துளசி.
“உன் வீட்டில குடுத்த காசுன்னு கணக்கு கேக்குறியா இப்போ என்ன காசு இல்லாம கல்யாணத்துக்கு போக முடியாது அவ்ளோதானே பரவாயில்ல போக வேண்டாம்” என்று சென்றுவிட்டான்.
தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டாள் துளசி நான்கு நாட்களாக ஒரு சந்தேகம் வேறு இருந்தது சோதனை செய்து பார்க்க அவள் விரும்பவில்லை.
விரும்பி ஒருமுறைகூட அவனிடம் இருக்கவில்லையே அவனிடம் தப்பிப்பதற்காக அவன் வருவதற்கு முன்பே உறங்கிவிடுவாள் அவனும் அவளை நெருங்குவதில்லை அனால் அன்று அவள் மறுத்தும் கட்டாயப்படுத்தி காயப்படுத்தினான் அதில் உருவானதாகத் தான் இருக்கும்.
‘கரு உருவாகியிருந்தால் என்ன செய்யப் போற அழிக்கப் போறியா’ என்றது மனசாட்சி.
விழிகள் கலங்கியது ‘என்ன செய்யன்னு எனக்குத் தெரியலையே இந்த நரகத்துல எவ்ளோ நாள் வாழுவன்னு தெரியலையே, ஒருவேளை நெஞ்சு வெடிச்சு செத்துபோய்ட்டேன்னா என் பிள்ளை என்ன பண்ணும் பொறுப்பில்லாத இவனை நம்பி பிள்ளை பெத்து அதும் என்னை மாதிரி இந்த நரகத்துல கிடக்கனுமா’ என்று பலவாறாக யோசனை சென்றது.
அன்று வேலைக்குச் சென்றவள் கிட் வாங்கிவந்தாள் மறுநாள் காலை உறுதியாகிவிட்டது, துளசிக்கு அழுகைதான் வந்தது “பிள்ளைவரம் கேட்டு எவ்ளோ பேர் உன்கிட்ட நிக்குறாங்க அவங்களுக்கு குடுத்தா என்ன உனக்கு? இன்னும் எவ்ளோதான் என்னைச் சுழட்டி அடிக்கப்போற” என்று அவள் தளர்ந்து அமர்ந்திருந்தாள்.
அவனிடம் சொல்லக்கூட விருப்பமில்லை வேலைக்குக் கிளம்பாமல் அமர்ந்திருப்பவளை பார்த்தவன் “என்ன போகலையா” என்றான்.
அவன் முன் கிட்டை எடுத்து நீட்டினாள் அதைப் பார்த்தவனிடம் பெரிதாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லை “ஓஹ்… அப்போ எப்படி கல்யாணத்துக்கு வருவல்ல” என்றான் அவள் அருகில் அமர்ந்துகொண்டு.
“நான் வரல நீங்க எல்லாரும் போய்ட்டுவாங்க வீனா எதுக்கு அலைச்சல்”என்றாள் அவள், அதோடு எடுத்துவைத்திருந்த பத்தாயிரத்தை அவன் கையில் கொடுத்தவள் “என்கிட்டே இவ்ளோதான் இருக்கு” என்றதோடு வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.
“டாக்டரிடம் போகவேண்டாமா” என்றான் அவளிடம்.
“போகணும்” என்றாள்.
“ஹ்ம்ம்… எனக்குத் தெரிஞ்ச லேடி டாக்டர் இருக்காங்க, அக்காகூட அவங்ககிட்டத்தான் பாத்துச்சு அங்கேயே காமிக்கலாம் சாயந்திரம் போலாம்”என்றான் அவள் ஒன்றும் சொல்லவில்லை கிளம்பிவிட்டாள், மாலை மருத்துவமனை சென்று உறுதி செய்ததும் நேரே வெண்மதியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.
“ரொம்ப சந்தோசம் நல்லா சாப்பிடு, வேலைக்குப் போகமுடியுமா” என்று பேசிக்கொண்டிருந்தாள் வெண்மதி, துளசிக்கு நதியாவை பார்க்கப் பார்க்கக் கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு சாதாரணமாக அமர்ந்திருந்தாள்.
ராஜேஷின் தாய் கொஞ்சம் நாட்கள் மகனுடன் தங்க வந்திருந்தார், அவர் அதிகம் மூத்த மகனுடன்தான் இருப்பார் இங்கே வருவது அரிது வந்தாலும் வெண்மதிக்கு புலம்பல்தான், அவர் டிவி பார்த்துக்கொண்டிருக்க நதியாவை அருகில் வைத்துக்கொண்டே வெண்மதி எப்பொழுதும் போலத் தம்பியிடம் புலம்பினாள்.
“அப்படியேதான்டா பண்றாங்க… சரியா காலைல ஏழு மணிக்குச் சாப்பாடு வேணும்னு சொல்றாங்க நான் பிள்ளைங்களை ஸ்கூல் அனுப்புறத்தை பார்ப்பானா இல்ல இவங்களுக்கு செஞ்சுட்டு இருப்பேனா எரிச்சல் படுத்துறங்க, வாய் ஓயாம பேச்சு வேற, நான் எதுவும் பதில் பேசமாட்டேன்”.
“நதியாதான் நல்லா திருப்பிக் குடுப்பா நேத்து சாயந்திரம் அஞ்சு மணிக்கே ஆரம்பிச்சுட்டாங்க டி வேணும்னு நெஞ்சு கரிக்குதுனு சொல்றாங்க ஆனா டீயும் வேணுமாம், நான் ஆறு மணிக்குத்தான் போடுவேன் சொல்லிட்டேன், கொஞ்சமா போட்டுக் குடுன்னு கேட்டுட்டே இருந்தாங்க அப்புறமா லேட்டா குடிச்சா நெஞ்சு எரியும் அப்படின்னாங்க”.
“நான் ஆறு மணிக்கு டி வெச்சேன் நதியா அவங்க டீயை எடுத்து மூடி வெச்சுட்டா, எல்லாரும் குடிக்குறீங்க எனக்கு எங்கன்னு கேட்டாங்க நீதானா லேட்டா குடிச்சா நெஞ்சு எரியும் சொன்ன அப்படின்னு அவங்களுக்கு கொடுக்கல, ரொம்ப நேரம் கேட்டாங்க அப்புறம் போய்ட்டாங்க” என்றாள் தம்பியிடம்.
துளசியின் விழிகள் ராஜேஷின் தாயில் பதிந்ததது காது சரியாகக் கேட்க்காது அவருக்கு ஏதோ தனியாகப் பேசிக்கொண்டிருந்தார் “நீங்கச் சொல்லலையா அவங்களுக்கு டி குடுக்க சொல்லி” என்றாள் துளசி.
“நான் சொன்னேன் அவ எங்க கேக்குறா” என்றாள் வெண்மதி, அதற்க்கு பிறகு துளசி ஒன்றும் பேசவில்லை கிளம்பும் முன் வெண்மதி துளசியிடம் கண்டிப்பாகக் கல்யாணத்திற்கு வர வேண்டும் என்றாள்.
“இதெல்லாம் ஒண்ணுமில்ல ஒன்னும் ஆகாது உங்களுக்கு இப்போதான் கல்யாணம் ஆயிருக்கு நீ வரலைன்னா நல்லா இருக்காது”என்றாள்.
“சரி”என்றாள் துளசி, மாமியார் மாமனார் இருவருமே அவளிடம் கல்யாணத்திற்கு வர வேண்டும் என்றனர்.
“இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு உடம்பே வளையறதில்லை என்ன இப்போ கர்ப்பம் தானே அதுக்கு கல்யாணத்துக்கு வராம இருப்பாளா எல்லாரும் என்ன நினைப்பாங்க” என்று மகனிடம் கேள்வி கேட்டார் விஸ்வநாதன்.
முட்டாள்களிடம் வாதம் செய்வது வீண் மற்றவரின் உடல் நிலையையோ மனநிலையையே கொஞ்சமும் யோசிக்காமல் நடந்துகொள்ளவர்களிடம் பேசுவது நம்மை இன்னும் தளரச்செய்யும், துளசி எப்பொழுதும் போல் அமைதியாகிவிட்டாள்.
“உன்னோட நகைல ஏதாவது ஒன்னை குடு இப்போதைக்கு அடமானம் வெச்சுட்டு அப்புறம் எடுத்துக்கலாம், பத்தாயிரத்தை வெச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது” என்றவன் அவள் வைத்தருந்த நகை பெட்டியை எடுத்து வந்து அதிலிருந்து ஒரு வளையலை எடுத்துக்கொண்டான்.
“அஞ்சாயிரம் மொய் வைச்சாலும் மீதி அஞ்சு இருக்கே அது பத்தாதா” என்றாள் துளசி.
“ஒருவேளை அங்க போய்ச் செலவு இருந்தா அப்போ காசுக்கு யார்கிட்ட போய்க் கேக்குறது” என்றவன் வளையளோடு சென்றுவிட்டான்.
புறப்படும் நாளுக்கு முதல் நாள் மாமனாரும் மாமியாரும் வந்துவிட்டனர், மதியம்போலக் கிளம்ப வேண்டும் என்றதால் காலையிலே இட்லி, எலுமிச்சை சாதம் சட்னி வாழக்காய் வறுவல் அனைத்தும் செய்து பாத்திரங்களில் அடைத்தாள் துளசி.
“கடைல வாங்கிக்கலாம்” என்றாள் வெண்மதி.
“நான் செஞ்சிருக்கேன் இல்ல அதுவேணாம் வேற சாப்பிடணும்னா உங்களுக்கு என்ன தேவையோ வாங்கிக்கோங்க” என்றுவிட்டாள் துளசி, அனைவரும் ஹோட்டல் சென்று சேர்ந்துவிட்டனர் இரவு அங்கேயே உண்டுவிட்டு குடும்பம் ஒன்றாக ஒரே இடத்தில் கூடியதை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
கொஞ்சம் நேரம் கழிந்து துளசி “முடியவில்லை படுக்கப்போகிறேன்” என்று சென்றுவிட்டாள், இவர்களின் ஆட்டம் பாட்டம் எப்பொழுது முடிந்தது என்று தெரியவில்லை, காலை ஒரு அடர் நீலயில் மஞ்சள் பார்டர் வைத்த புடவை கட்டி மிதமான ஒப்பனையில் தயாராகி நின்றாள் துளசி.
நகைகள் ஒன்றும் பெரிதாக அணியவில்லை தாலியோடு ஒரே ஒரு செயின் மட்டும் கையில் ரெண்டு வளவிகள் மாமியாரையும் நாத்தனாரையும் பார்த்தவளுக்கு ‘இது என்ன’என்றுதான் தோன்றியது, மூன்று விதங்களில் சைசில் நெக்லெஸ் கையில் நான்கு வளவிகள் பெரிய கம்மல், பெரிய பார்டர் வைத்த பட்டுப்புடவை என்று தயாராகி வந்தனர்.
துளசிக்கு அதிகப்படியாகத் தோன்றியது கல்யாணம் நடக்கும் ஹாலிற்கு சென்றபோது அவளுடைய எண்ணம் சரி என்று உறுதியானது, காரணம் திருமணம் நடக்கும் பெண்ணின் தாய் கூட மிகவும் எளிமையாகவே இருந்தார்.
அவர்கள் அனைவருமே நல்ல பணம் படைத்தவர்கள் அவர்களுடைய நடை உடையில் அது நன்றாகவே தெரிந்தது என்றால் ஆதிக்கப்படியாக எதையும் வாரியிட்டும் வரவில்லை, விஜயலக்ஷ்மியும் வெண்மதியும் மட்டுமே அப்படி வந்திருந்தனர் திருமணம் முடிந்து பரிசையும் கொடுத்து ஒரு மூலையில் சென்று அமர்ந்துகொண்டாள் துளசி.
அவளைத் தேடி அவளின் அருகில் வந்து அமர்ந்தார் ஒரு நடுத்தறவயது பெண்மணி ‘யார்’ என்று அவள் யோசித்து அமர்ந்திருக்க “என்னம்மா என்னைத் தெரியலையா” என்றார் அவர்.
அவள் சங்கடமாக அவரைப் பார்க்க “பரவாயில்ல வருத்தப்படாத நான் உன் புருஷனோட அத்தை அதாவது உன் மாமியார் விஜயலட்சுமியோட தம்பி பாபுவோட மனைவி” என்றார், இத்தனை நெருங்கிய உறவைத் தனக்கு தெரியவில்லையே என்ற சங்கடத்தோடு அவரையே பார்த்திருக்க.
“என்னை நீ பார்த்திருக்கமாட்ட ஏன்னா நான் கல்யாணத்துக்கு வரலையே” என்றார் அவர்.
“ஏன்?” என்றாள் அவள் ஆச்சர்யத்தோடு, அதற்க்கு பதிலாக அவர் மீண்டும் ஒரு கேள்வியை அவள் முன் வைத்தார்.
“அதோ அங்க ஒக்காந்திருக்காங்களே அவங்க யாருன்னு தெரியுதா” என்க, அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாள் மிகவும் வயதான ஒரு பாட்டி அமர்ந்திருந்தார் அவரையும் இவளுக்குத் தெரியவில்லை.
“அவங்க உன் மாமியாரோட அம்மா உன் புருஷனுக்கு பாட்டி” என்றார் அவர், துளசிக்கு மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டது.
“பாட்டியா! ஆனா எங்க கல்யாணத்துல பாக்கவேயில்லயே” என்றாள் துளசி.
“எப்படி பாப்ப அவங்களும் கல்யாணத்துக்கு வரலையே அவங்கள பாத்துக்கணும்னு நானும் கல்யாணத்துக்கு வரல, என் வீட்டுக்காரர் சொன்னார் ரிசப்ஷனுக்கு நீ வேணா போயிட்டு வா நான் அம்மாவைப் பாத்துக்குறேன்னு நான் தான் வேண்டாம் சொல்லிட்டேன், மரியாதை தெரியாத எடத்துல எதுக்கு போயிட்டு”.
“சொந்த அம்மாவையே பேரன் கல்யாணத்துக்கு உன் மாமியார் கூட்டிட்டு போகல, கார் வெக்கணும் அவங்க அங்க தங்குற செலவு, போய் வரச் செலவு எல்லாம் அவங்க தலைல விழுந்துடும்னு பயம் அப்படி பட்ட பாரி வள்ளல் உன் மாமனார் மாமியார், உங்களை யாருமே விருந்துக்குக் கூப்பிட்ட்டுருக்க மாட்டார்களே”என்றார் அவர்.
‘ஆமாம் வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது தங்களை விருந்து என்று யாருமே அழைக்கவில்லை’என்று அப்பொழுது நினைவு வந்தது.
“நாம என்ன மரியாதையை மத்தவங்களுக்கு குடுக்குறோமோ அதுதானே நமக்கும் கிடைக்கும், உன் மாமியார் வீட்டில யாருக்குமே ஒரு வேளை சோறு போடமாட்டாங்க, கல்யாணமான யாரையுமே இதுவரைக்கும் விருந்துக்குக் கூப்பிட்டதில்லை அப்பறம் அவங்க மட்டும் எப்படி கூப்பிடுவாங்க”என்றவர்.
“இவ்ளோ ஏன் கிட்டத்தட்ட கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல உன் மாமியார் அவங்க அம்மாவை ஒரு நாள் கூடக் கொண்டுபோய் வெச்சு பாத்துக்கிட்டது கிடையாது, நான் மருமகளாச்சே நான் தான பாத்துக்கணும்”.
“இவங்களுக்கு உடம்பு முடியாம போய் இப்போ ஒரு பன்னெண்டு வர்ஷம் ஆகுது நான் தான் எல்லாமே பாக்குறேன் பெத்த தயை பாத்துக்காத பொம்பளைக்கூட இருப்பாளா, என் வீட்டுக்குக் கூட என்னால போக முடியாது ஒரு நல்லது கெட்டது எதுக்கும் கலந்துக்க முடியாது அப்படியே ஏதாவது ரொம்ப அவசரமா போகவேண்டிய இடம்னா என் சின்ன நாத்தனார் அதான் உன் மாமியாரோட தங்கச்சி அவங்கதான் பாத்துப்பாங்க”.
“அவங்க பொண்ணு கல்யாணம் தான் இது” என்றார் அவள் தெரியும் என்பதாகத் தலை அசைக்க.
“ஏதோ அவங்க கொஞ்சம் பாத்துக்குறதால பரவாயில்ல, இப்போ பாரு இந்தக் கல்யாணம் பெங்களூர்ல நடக்குது அவங்க அம்மாவை அப்படியே விட்டுட்டா வந்துட்டாங்க அம்மாவை நாங்களே கூட்டிட்டு போறோம்னு சொல்லி எல்லா ஏற்பாடும் அவங்களே பண்ணி அத்தையை கூட்டிட்டு வந்து பாரு எப்படி ஜம்ம்னு ரெடி பண்ணி உக்கார வெச்சிருக்காங்க”.
“அதுமட்டுமா பாத்தியா எங்க எல்லாருக்குமே புடவை எடுத்துக் குடுத்திருக்காங்க உங்க கல்யாணத்துக்கு யாருக்குமே துணி எடுத்துக் கொடுக்கல” என்றார், துளசிக்கு தலை வலித்தது ஏற்கனவே எரிச்சலில் இருந்தவளுக்கு இவர் பேசியது எல்லாம் இன்னும் எரிச்சலை கூட்டியது.
‘இதையெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்’ என்று கத்த வேண்டும் போலத் தோன்றியது.
“இவங்க என்னடா இப்படிலாம் பேசுறாங்கன்னு நினைக்காதம்மா இவங்ககிட்ட பாத்து சூதனமா இருந்துக்கோ, உனக்குன்னு ஏதாவது தனியா சேத்து வெச்சுக்கோ இதுங்களை நம்பினா நட்டாத்துலதான் நிக்கணும், நாங்க குடியிருக்கிற வீடே எப்போ இடிஞ்சு தலைல விழும்னு தெரியாம நாங்க வாழுந்திட்டு இருக்கோம் உன் மாமியார் அவங்களுக்கும் அந்த இடத்துல பங்கிருக்குன்னு சண்டைக்கு நிக்குது”.
“ஒடஞ்ச கதவைச் சரிபண்ணக்கூட காசில்லை, இவருக்குக் கூலிவேலைதான் ஒரே ஒரு பெண் குழந்தை வெச்சிருக்கோம் அதைக் கவர்ன்மென்ட் ஸ்கூலுக்குத்தான் அனுப்புறோம் நல்லதா ஏதாவது செஞ்சு கொடுக்கக்கூட எங்களால முடியல அத்தைக்கு, உன் மாமியார் நல்லாதானே இருக்காங்க அம்மாவைக் கொண்டுபோய் கொஞ்சம் நாள் பாத்துக்கலாம்ல”என்றார்.
பெருமூச்சுவிட்டு “இதெல்லாம் யார்கிட்ட சொல்ல எல்லாம் என் தலையெழுத்து இந்தக் குடும்பத்துல வாக்கப்பட்டுட்டேன்” என்று புலம்பலோடு எழுந்து சென்றார், துளசியின் கவனம் இப்பொழுது முழுதாக வெற்றியின் பாட்டிமீது விழுந்ததது.
சில நொடிகள் கழிந்து எழுந்து அவரின் அருகில் சென்று அமர்ந்தாள், அவர் மெதுவாக அவளைத் திரும்பிப் பார்த்தார் ‘யார்’ என்று அவருக்குத் தெரியவில்லை.
“அம்மா… யாருன்னு தெரியுதா வெற்றியோட பொண்டாட்டி துளசி” என்றார் வெற்றியின் மாமா பாபு, மெதுவாக அவளின் கையைப் பற்றிக்கொண்டு சிரித்தார் “நல்லா இருக்கியா” என்றார், துளசிக்கு விழிகள் கலங்கியது.
குனிந்து அவரின் பாதம் தொட்டு “ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றாள்.
“நல்லா இருமா”என்றவர் அவளை அருகில் அமர்த்திக்கொண்டு ஏதோதோ கேட்டுக்கொண்டிருந்தார் “அம்மாக்கு ஞாபக மறதி இருக்கு பேசினதே திரும்பப் பேசுவாங்க”என்றார் பாபு.
துளசிக்கு தந்தையின் நினைவு வந்தது மூன்று மாதமாகிறது வீட்டிற்கு போகவில்லை, துர்கா பலமுறை விருந்திற்கு அழைத்தும் அங்கேயும் கொண்டுபோகவில்லை ஏனோ இப்பொழுது உடனே தந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றியது இங்கிருந்து அதிகம் தூரமில்லையே மிஞ்சிப் போனால் இரண்டுமணி நேரம் மட்டுமே.
விசேஷம் எல்லாம் முடிந்து ஹோட்டல் ரூமிற்க்கு சென்றதும் துளசி முதல்முறையாக அவனிடம் “வீட்டிற்க்கு போக வேண்டும்” என்று கூறினாள்.
“வரும்போது இதைப் பத்தில்லாம் சொல்லலையே இப்போ திடீர்ன்னு போகணும்னு சொல்ற” என்றான்.
“எனக்கு எங்க அப்பாவைப் பாக்கணும்”என்றாள்.
“இப்போ முடியாது நைட்டுக்கு டிக்கட் போட்டிருக்கு அடுத்ததடவ வரலாம்”என்றவன் படுத்துவிட்டான், அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்து அமர்ந்திருந்தாள் துளசி, இறுதியில் தந்தையை பார்க்காமலே மீண்டும் அந்த இருளுக்குள் சென்று புதைந்துகொண்டாள்.
error: Content is protected !!