Skip to content
Post Views: 6,372
“பெரியம்மா பேரை எழுதுனியா இல்லையா” என்ற சாந்தாவின் குரலில் பார்கவியின் விழிகள் ஒரு நொடி துளசியின் மீது படிந்து மீண்டது.
Advertisement
“உன்னைத்தாண்டி கேக்குறேன் எழுதினியா” என்றார் சந்தா மீண்டும்.
Advertisement
“அவங்கள எதுக்குமா கூப்பிடனும்” என்றாள் பார்கவி.
Advertisement
Advertisement
“ஓஹ்… உன் இஷ்டப்படி கல்யாணம் நடக்குதுன்னு திமிரா, எல்லாமே உன் இஷடம்தானா யார் யாரை கூப்பிடணும்னு கூட நீதான் முடிவு பண்ணுவியா” என்றார் சாந்தா.
“நான் எதுவும் சொல்லல இப்போ என்ன அவங்க பேரை எழுதணும் அவ்ளோதான” என்றவள் பெரியம்மாவின் பெயரை எழுதிக்கொண்டாள்.
பிரியாவிற்கு இன்னும் திருமணம் முடிவாகவில்லை அவளுடைய எதிர்பார்ப்புகளின் நீளம் கூடியிருக்கிறது, இப்பொழுது மாமியார் மாமனார் இல்லாத வீட்டிற்குத்தான் போவேன் என்கிறாள் அதை முன்னிறுத்தி அவளின் தாய் தீவிரமாக மகளுக்கு ஒரு அடிமையைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
இன்னும் இருபது நாளில் திருமணம் முடிவாயிருக்கிறது பார்கவிக்கு மாப்பிளை பிரசாந்த் திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பே வருவான் அவனுடைய வீட்டினர் முன் நின்று திருமண ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டனர்.
பார்கவியை அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது அவன் வீட்டினரோடு அவள் நன்றாகவே பழக்கப்பட்டிருந்தாள், துளசி அவளிடம் கேட்டபோது பள்ளியில் படிக்கும் போதே அவனுடன் காதல் என்றாள் தங்கை.
இரண்டு வருடமாக அவனின் வீட்டினரையும் நன்றாகத் தெரியும் என்றும் அவர்களுடன் கோவில் விஷேஷம் என்று சென்று வந்ததும் தெரிந்தது தாயிடம் இதை எதையும் துளசி கூறவில்லை.
“வணக்கம் சம்மந்தி நல்லா இருக்கீங்களா… சின்னப் பொண்ணுக்கு கல்யாணம் முடிவாயிருக்கு நேர்ல வந்து கூப்பிட முடியல வீட்டு ஆம்பளையும் படுக்கைல கிடக்கிறார், உங்களுக்குத் தெரியாததா அதனால எல்லாரும் கண்டிப்பா வந்திடனும், பத்திரிக்கையைத் தபால்ல அனுபுறேங்க” என்று நயமாகப் பேசினார் சாந்தா துளசியின் மாமியார் மாமனாரிடம்.
“கண்டிப்பா வரோம்” என்றார்கள் அவர்கள், வெற்றிக்கும் அழைத்துப் பேசினார் சாந்தா அவர் அலைபேசியை வைத்ததும் மனைவிக்கு அழைத்துவிட்டான் வெற்றி.
“நீ உங்க வீட்டுக்குப் போய் மூணு மாசம் ஆகுது இப்போ கல்யாணம்னு வேற சொல்ராங்க எப்போ வருவ” என்றான் அவளிடம், அக்கறையாகவோ அன்பாகவோ பேசாதவன் இப்பொழுது எதற்கு மனைவியைத் தேடுகிறான் அவனுடைய தேவைக்கு வாய்க்கு ருசியாக அவள் செய்துதரும் உணவு மற்றும் பெண்ணின் அருகாமை.
“கல்யாணம் முடிஞ்சுதான் வருவேன்” என்றாள் அவள்.
“கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள் இருக்கே அதுக்கு அப்புறம் போனா என்ன” என்றான் அவன்.
“எனக்கு இன்னும் உடம்பு சரியாகல” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.
திருமணத்திற்கு துணிமணி நகை அனைத்தையும் எடுத்து முடித்துவிட்டனர், இரண்டு பெண்களுக்கு என்ன கொடுத்தாரோ அதுவேதான் பார்கவிக்கும் கொடுக்கிறார் சாந்தா, பிரசாந்த் வீட்டினர் பார்கவிக்கு தனியாகப் பத்து பவன் போட முடிவு செய்திருந்தனர் அதைத் திருமணத்திற்கு இரு தினங்கள் முன்பு வீட்டிற்க்கே வந்து கொடுத்துச்சென்றனர்.
அன்றுதான் ஜெயந்தியும் வந்திருந்தார் கணவனும் மனைவியும் மட்டுமே வந்திருந்தனர் பிரியா வரவில்லை என்று கூறிவிட்டாள், ப்ரேமும் ஆனதியும் குழந்தையுடன் வந்திருந்தனர் வீடே கல்யாண கலையில் திளைத்தது.
எத்தனை முயன்றும் துளசிக்கு அவளின் கல்யாண நாட்கள் நினைவு வந்தது கண்ணீரும் வலியும் மட்டுமே நிறைந்து நின்ற நாட்கள் முயன்று அதை அப்படியே மாற்றிவைத்தவள் வேளையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள்.
துர்காவும் குடும்பமும் நான்கு நாட்கள் முன்பே வந்து சேர்ந்துவிட்டனர், பிரசாந்தை அனைவருக்குமே பிடித்துவிட்டது நல்லவனாகவே இருந்தான் திருமணத்திற்கு முதல் நாள் கூட வெற்றியின் வீட்டினர் வந்து சேரவில்லை.
“எப்போ வரீங்க” என்று துளசி அழைத்துக் கேட்க “ நான் மட்டும்தான் வருவேன்” என்றான் வெற்றி.
“ஏன்” என்றாள் துளசி.
“ஸ்வாதி புதுசா வீடு வாங்கி குடிபோறாளாம் (ஸ்வாதி வெற்றியின் சித்தி மகள் அதுக்கு போகாம இருக்க முடியாது அதனால எல்லாரும் பெங்களூர் போறாங்க, கல்யாணம் முடிஞ்சதும் நாம ரெண்டுபேரும் அங்கேயிருந்து நேரா பெங்களூரு போனும் அப்புறம் அடுத்தநாள் ஊருக்குப் போலாம்” என்றான் அவன் சாதாரணமாக.
“என்ன பேசுறீங்க நீங்க! வீடு பால் காய்ச்சறதும் என் தங்கச்சி கல்யாணமும் ஒண்ணா… யாருமே வரமாட்டோம்னு சொன்னா எப்படி” என்றாள்.
“உனக்கு என்ன சொன்னாலும் புரியாது சும்மா என் வீட்டு ஆளுங்கள ஏதாவது சொல்லணும் உனக்கு” என்றவன் “நான் கல்யாணத்துக்கு சரியா வந்துடுவேன்” என்று வைத்துவிட்டான்.
துளசிக்கு எரிச்சலாக வந்தது என்ன பிறவிகளோ என்று போனை பெட்டில் தூக்கி எறிந்தாள், மறுநாள் காலை முதல் உறவுகள் துளசியை குடைய தொடங்கினர்.
“என்ன துளசி உன் புகுந்த வீட்டிலயிருந்து யாரும் வரலையா” என்று மாறி மாறிக் கேட்கத் துளசியின் விழிகள் சாந்தாவை வெறித்தது.
ஜெயந்திக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது ‘வீம்புக்கு பெருசா மாப்பிளை பாத்து கல்யாணம் செஞ்சு வெச்சா இப்போ என்ன ஆச்சு’ என்று.
திருமணத்தன்று காலைச் சரியாகத் தாலி காட்டும் நேரம் வெற்றி வந்து சேர்ந்தான், திருமணம் நல்ல படியாக நடந்து முடிய பெண்ணையும் மாப்பிள்ளையும் தங்கள் வீட்டிற்க்கே அழைத்துச் சென்றார் சாந்தா, விஜயகுமார் படுக்கையில் இருப்பதால் மகளின் திருமணத்தைக் காண முடியவில்லை ஆகையால் மணக்கோலத்தில் இங்கேயே அழைத்துவந்து ஆசி வாங்கிக்கொண்டனர்.
அதன் பிறகு சில சடங்குகள் முடிய மணமக்களைப் பிரசாந்த் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர், அவர்கள் சென்ற அரைமணியில் வெற்றி துளசியிடம் “கிளம்பு போகலாம்” என்றான்.
“எங்க” என்றாள் அவள்.
“எங்கயோ என்ன புதுசா கேக்குறா முன்னாடியே சொன்னேன்ல ஸ்வீதா வீடு பால் காய்ச்சுன்னு அங்க போகணும்” என்றான்.
அவனையே சில நொடிகள் பார்த்து நின்றவள் “நான் வரல” என்றாள்.
“வரலையா? ஏன்?” என்றான் அவன்.
“இன்னைக்குத்தான் என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிருக்கு அதோட இங்க நிறைய வேலையும் இருக்கு” என்றவள் “ரொம்ப முக்கியமா உங்க தங்கச்சி என்னை வீடு பால் காய்ச்சுக்கு கூப்பிடல, எங்க அம்மா பார்கவி கல்யாணத்துக்கு உங்க வீட்டில எல்லாரையும் தனி தனியா கூப்பிட்டாங்க ஆனா உங்க வீட்டில யாரும் வரவும் இல்ல வர முடியாத காரணத்தைச் சொல்லவும் இல்ல”.
“பொண்டாட்டியோட தங்கச்சி கல்யாணத்துக்கு என்ன கொண்டுவந்தீங்க, என்கிட்டயாவது என்ன கொடுக்கணும்னு கேட்டீங்களா” என்றாள்.
துளசி இவ்வளவு கோபத்தோடு இத்தனை நீளமாகப் பேசி இப்பொழுதுதான் பார்க்கிறான் வெற்றி.
“வர முடியாதுனு என்கிட்டே சொன்னதை நான் உன்கிட்ட சொண்ணேன்தானே, அப்புறம் உன் தங்கச்சி கல்யாணம் நீயே கேக்க வேண்டியதுதானே என்கிட்டே உனக்கு ஈகோ அதான் நீ கேக்கல, இப்போ எல்லா பழியையும் எங்க மேல வெக்குற” என்றான் அவன்.
எப்பொழுதும் போல இவனிடம் பேசுவது வீண் என்ற முடிவுக்கு வந்தவள் குளிப்பதற்காக உடைகளை எடுக்க “இன்னும் ஒருமணி நேரத்தில கிளம்பனும்” என்றான் வெற்றி.
“நான் சொன்னது உங்களக்கு புரியலையா நான் வரலன்னு சொன்னேன், அதுவும் இப்போ என்னால வர முடியாது உங்க வீட்டில யாரும் வராததுக்கே இங்க எல்லாரும் அவ்ளோ கேள்வி கேக்குறாங்க, அதுல நானும் இன்னைக்கே கிளம்பிட்டா எப்படி”.
“இவ்ளோ நாள் பார்கவி இருந்தா அம்மாகூட இப்போ யாருமே இல்லாம தனியா இருக்குற மாதிரி இருக்கும் இன்னும் பத்து நாள்ல பிரசாந்த் ஆஸ்திரேலியா போறாங்க இதெல்லாம் முடிஞ்சிட்டு வரேன்” என்றாள் இதற்குமேல் என்ன பேச என்று தெரியாமல் தயங்கி நின்றான் வெற்றி.
வீட்டில் துர்காவும் அவள் புகுந்த வீட்டினரும் மட்டுமே இருந்தனர் துர்காவின் கணவன் சேகர் வெற்றியிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தான்.
மாலை நேர தேநீரும் சிற்றுண்டியும் அனைவருக்கும் கொடுத்தார் சாந்தா, வெற்றி அப்படியே புறப்படுவதாகக் கூற அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன தம்பி காலைல தான் வந்தீங்க அதுக்குள்ளே போறீங்க, ரெண்டு நாள் தங்கிட்டு போலாம்ல” என்றார் துர்காவின் மாமியார்.
“இல்ல சித்தி பொண்ணு வீடு பால்காய்ச்சு பெங்களூர்ல அதுக்குதான் வீட்ல எல்லாரும் போயிருக்காங்க நானும் போனும்” என்றான் அவன்.
‘வீடு பால் காய்ச்சுக்கு வந்தவர்கள் திருமணத்திற்கு வரவில்லையே’ என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ள வெற்றிக்கே ஏதோ போல இருந்தது, வீட்டினர் சொன்னபோது பெரிதாகத் தெரியவில்லை இப்பொழுது இத்தனை பேர் கேட்க அவர்களும் வந்திருக்க வேண்டுமோ என்று சிந்தித்தான்.
புறப்படுவதற்கு முன் அவள் அறைக்கு வந்தவன் “அங்கதான் வரல சொல்லிட்ட வீட்டுக்கு எப்போ வர” என்றான்.
“சொல்றேன் இப்போ வர முடியாது” என்றாள் மீண்டும்.
ஏனோ எங்குமே செல்லத் தோன்றவில்லை கொஞ்சம் தனிமையும் அமைதியும் தேவை பட்டது, என்னவோ அவள் சரியில்லை என்றவரை மட்டுமே அவனுக்குப் புரிந்ததது அதைப் பொறுமையாக அமர்ந்து அவளிடம் பேச வேண்டும் என்ன என்று கேட்க வேண்டும் எதுவும் தோன்றவில்லை “சரி” என்றவன் கிளம்பிச்சென்றுவிட்டான்
“என்ன ஜெயந்தி உன் பொண்ணை விடச் சின்னவ துளசி அவளுக்கும் கல்யாணம் முடிஞ்சு அவளைவிட சின்னவ பார்கவிக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு இன்னும் உன் மகளுக்கு வரன் அமையலயா” என்றார் உறவினர் ஒருவர்.
“எல்லாத்துலயும் பிடிவாதமா இருக்காம சில விஷயங்களை விட்டுக் குடுத்து போகணும் ஜெயந்தி, பொம்பள பிள்ளை வயசு போச்சுன்னா அப்புறம் அதுக்கு ஏத்த மாதிரித்தான் வயசான வரனா வரும் பொம்பளைக்கு ஒரு வயசு வரைக்கும் தான் தளுக்கும் மினுக்கும்” என்றார் மற்றவர்.
ஜெயந்திக்கு புரியத்தான் செய்கிறது மகள்தான் எதற்குமே ஒத்துவர மறுக்கிறாளே, ஒருவர் என்றால் தன் வாய் சாமர்த்தியத்தை காட்டலாம் இத்தனை பேரிடம் என்ன பேச… மறுவீட்டு விருந்தோடு ஜெயந்தியும் ஊருக்குச் சென்றுவிட்டார்.
வீடு பரபரப்பிலிருந்து மெல்ல சகஜநிலைக்கு மாறியது பிரசாந்தின் வீடு அரைமணி நேரம் பயணம் செய்யும் தூரத்திலே இருந்ததால் பார்கவிக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தையை அடிக்கடி வந்து பார்க்கலாம் என்று.
தந்தையின் உடலைத் துடைத்து அவருக்கு வேறு உடைமாற்றி அவரின் அருகில் அமர்ந்து கைகளைப் பிடித்துக்கொண்டாள் துளசி அவரும் மகளையே பார்த்து அமர்ந்திருந்தார்.
கணவனுக்குக் கஞ்சி கொண்டு வந்த சாந்தா அதை அவருக்கு ஊட்டி விட்டுக்கொண்டே “மாப்பிளை இன்னும் பத்து நாள்ல கிளம்பறார், பார்கவி இப்போவே அழ ஆரம்பிச்சுட்டா இவளை அழைச்சுட்டு போகணும்னா ஏதேதோ செய்யணுமாமே”.
“ஆனா இவ விவரம் தான் எல்லாம் யோசிச்சுதான் முன்னாடியே பாஸ்போர்ட் எடுத்து வச்சுட்டா அதனால ஒரு நாலு அஞ்சு மாசத்துல வந்து அவளைக் கூட்டிட்டு போய்டுவாராம்” என்று முகம் நிறைய சந்தோஷத்தோடு பேசிக்கொண்டிருக்க.
“நீ மிரட்டினப்போ யோசிக்காம பயப்படாமா எனக்கு என் வாழ்க்கைதான் பெருசுன்னு நான் தமிழ் கூடப் போயிருந்தா இன்னைக்கு உன் முகத்துல இருக்குற சந்தோசம் என் முகத்திலயும் வாழ்க்கையிலயும் இருந்திருக்கும் இல்ல” என்றாள் துளசி ஆழ்ந்த குரலில்
“துளசி!” என்ற சாந்தாவின் கைகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட “என்னைப்பத்தி எப்போவுமே நீ யோசித்தது இல்ல, தப்பு உன் மேல இல்ல என் மேலதான் பைத்தியக்காரி நீ பேசினது எல்லாம் உண்மைன்னு நம்பின பைத்தியக்காரி”.
“மானம் மரியாதை தான் உனக்கு முக்கியம் நான் தமிழ் கூடப் போய்ட்டா நீ சொன்ன மாதிரி செஞ்சிடுவான்னு பயந்து என் வாழ்க்கையை நானே குழித்தோண்டி பொதச்சுட்டேன், ஆனா இப்போ எல்லாமே சாதாரணமா தானே இருக்கு பார்கவி காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டா அதும் உன் சாதி சாணத்தை விட்டு வெளில”.
“அவளை உன்னால கட்டுப்படுத்த முடியல ஏன்னா அவ கிட்ட இருந்த திடம் துளசிகிட்ட இல்ல, அவளுக்குத் தெளிவா புரிஞ்சுது இனிமே இருக்கப்போற வாழ்க்கைதான் நமக்கு முக்கியம்னு இந்தப் பைத்தியக்காரிக்கு அது புரியல பெத்து வளத்தவங்க நிம்மதி முக்கியம்னு என்னையே நான் ஏமாத்திக்கிட்டேன்” என்றவள் எழுந்து தன் அறைக்குச் சென்று கதைவடைத்துக்கொள்ள.
சாந்தாவிற்கு மனது முள்ளாய் குத்த தொடங்கியது ‘இன்னுமே அவனை மறக்கவில்லையா அப்படியானால் என்ன வாழ்கிறாள் இவள், என்னவாகும் இவள் நிலை’ என்று.
பார்கவியின் திருமணம் முடிந்து நான்காம் மாதம் பிரசாந்த் அவளை அழைத்துச் சென்றுவிட்டான், தங்கையை மனநிறைவோடு கணவனுடன் அனுப்பிவைத்தாள் துளசி, சாந்தாவுடன் துளசியும் பிரசாந்தின் தாய் தந்தையும் பெங்களூரு விமானநிலையம் வந்திருந்தனர் அவர்களை வழியனுப்ப.
போவதற்கு முன் தன்னை கட்டிப்பிடித்த தங்கையின் நெற்றியில் முத்தம் வைத்தவள் “சந்தோஷமா இரு ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைச்சிருக்கு நிறைவா வாழனும்” என்று சொல்லி வழியனுப்பினாள்.
பார்கவிக்கு துளசியை இப்படி பார்க்கவும் விட்டுச்செல்லவும் மனம் வலித்தது ஆனால் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை ‘என் வாழ்க்கையை பத்தி யாருமே பேசாதீங்க’ என்று முடித்துவிடுகிறாள் யாரையுமே பேச அனுமதிப்பதில்லை.
“நீ எப்போக்கா ஊருக்குப் போற” என்ற பார்கவியிடம் “போகணும்” என்றாள் துளசி.
“அம்மா தனியா இருப்பாங்க, அம்மா அப்பாவை விட்டுட்டு போகக் கஷ்டமா இருக்கு” என்றாள் அவள்.
“எல்லா பொண்ணுக்கும் வர உணர்வுதான் பாரு, புருஷன் கொழந்தைங்கன்னு ஆயிட்டா எல்லாம் மாறிடும், இங்க அம்மா பாத்துப்பாங்க நீ சந்தோஷமா போய்ட்டுவா” என்று அனுப்பிவைத்தாள்.
அவர்கள் புறப்பட்டு உள்ளே சென்றபிறகு பெரியவர்கள் ஒருபக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க துளசி தனிமையை நாடி கொஞ்சம் தூரமாகச் சென்று அமர்ந்துகொண்டாள்.
விழிகள் எங்கோ இலக்கு இல்லாமல் பார்த்திருக்க சிந்தனை வேறெங்கோ இருக்க, நிறம் மங்கிய ஓவியமாக அமர்ந்திருந்தவளை தூர நின்று நெஞ்சம் விம்மப் பார்த்திருந்தான் தமிழ்ச்செல்வன்.
error: Content is protected !!