Skip to content
Post Views: 6,335

அத்தியாயம் 1
‘வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்’ என ப்ளூரே டிஸ்க் சிஸ்டத்தில் இளையராஜா 80ஸ் பாடல்களை ஓட விட்டு குண்டுமல்லி மொட்டுக்களை சரமாக கட்டிக்கொண்டிருந்தது கனகாம்பர பூவையொத்த பஞ்சு விரல்கள்..
சமையலைறையில் இருந்து வந்த அவள் அத்தை செண்பகம்…
Advertisement
“இன்னும் நிறைய கட்டணுமா கண்ணு?..”
“ஆச்சு அத்தை, முடிக்க போறேன்” என வாய் மொழியில் வீணை வாசித்தாள் அவள்.
அவள் மலர்மங்கை, பெயருக்கேற்ப அவள் பூக்களின் காதலியே..ஒரு சின்ன டேபிள் ரோஸ் பூத்தாலும் அது தனக்காகவே சிரித்து மலர்ந்தது என நினைக்கும் கனவுக்கன்னி…மாநிற மேனியவள் வதனம் குளிர்நிலவாய் எப்பொழுதும் பிரகாசிக்கும்..அவளின் கருவிழிகளில் சிக்கிக்கொள்ள ஆவல் கொள்ளும் ஆற்று கெண்டை மீன்கள்..
Advertisement
சிறு வயதில் பெற்றவர்களை பறிகொடுத்த தன் தம்பி மக்களை தன் மக்களாக பாவித்து எடுத்து வளர்த்தவர் செண்பகம்..திருமணத்தில் விருப்பமில்லாததால் தம்பி குடும்பத்துடன் வசித்தவருக்கு பின்னாளில் அத்தையே உலகமாகி போனார் அண்ணன் மற்றும் தங்கைக்கு.
Advertisement
“மாறன் வந்ததும் நீ ப்ளவர் ஷாப்புக்கு கிளம்புடா…சாப்பிட்டு கிளம்பு..”
“ம்ம் ஓகே அத்தை” என்றாள் மலர்.
கட்டிய பூச்சரத்தை அழகாய் அடுக்கி வைத்து மலர் எழவும் அவ்வீட்டு வாசலை சிறியதாக்கி கொண்டு உள்ளே வந்தான் அவள் உடன் பிறந்தவன் இளமாறன்…திராவிட நிறத்தில் அன்றாட உடற்பயிற்சி, யோகா விளைவால் ஆரோக்கியமான அளவான அழகான உடற்கட்டுடன் களையான முகமும் ஈர்க்கும் விழிகளை கொண்ட அழகிய தமிழ்மகன்…அங்குள்ள கில்லாக் இன்டர்நேஷனல் பள்ளியில் கணிணி பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணிபுரிகிறான்..இயற்கையின் மேல் அலாதி பிரியமுடையவன், தங்கை என்றால் தனதுயிரும் துச்சமே இந்த மலை இராவணனுக்கு.
Advertisement
அவர்கள் வசிப்பது திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலை சுற்றி அமைந்திருந்த தாழைக்காடு எனும் மலைக்கிராமம்…வருடந்தோறும் ஏதுவான அற்புத காலநிலை, வளர்ந்தோங்கிய மரங்கள், சோலைகள் என பசுமையில் ரம்மியாக காட்சியளிக்கும் சிறுமலையின் மலை வாழைக்கு தனி சுவை. பழநி கோயிலின் பிரசாதமான பஞ்சாமிர்தம் சிறுமலை வாழையில் தயாரித்தபோது அதன் ருசியே தனியென பெயர் பெற்றது.
பேபி பிங்க் நிற பார்மல் சட்டையில் அம்சமாய் நுழைந்த தமையனை நோக்கி வந்த மலர் அவன் கைகளிலுள்ள பைகளை வாங்கி கொள்ள கையை நீட்ட, சிறு புன்சிரிப்புடன் அவளிடம்..
“நேந்திரம் சிப்ஸ் சூடா இருக்கு..ஆறறதுக்குள்ள சாப்பிடு டா…”
“சரி ணா, முகம் அலம்பிட்டு வா, உனக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என நகர்ந்தாள் மலர்..
மதிய உணவு முடிந்து திண்டுக்கல் மணிக்கூண்டுக்கு அருகில் அமையபெற்ற தன் மலர்அங்காடிக்கு தன் இருசக்கர வாகனத்தில் விரைந்தாள் மலர்…பலவகை மலர்கள் கொண்டு கோர்க்கபட்ட பூங்கொத்துக்கள், பல வண்ண மலர்களின் செடி கொடி வகைகள், விதைகள் என தனக்கு பிடித்த பணியில் ஆர்வமாக செய்து வந்தாள் மலர்..மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை உதவியாளர்களுடன் கடையை பார்த்துகொண்டு இரவு மாறன் பணியமர்த்திய கபிலனுடன் தாழைக்காடு திரும்பிவிடுவாள் மலர்..
அறியா பருவத்தில் கண் முன்னே பெற்றவர்களை பறி கொடுத்ததன் விளைவாய் எப்பொழுதும் இறுகிய முகத்துடன் வலம் வருபவன் மலர், தன் செம்பா அத்தை என்றால் மட்டும் அரிதாய் கீற்று புன்னகை வெளிப்படும் மாறனுக்கு..அத்தையின் பாசமிகு கண்டிப்பான வளர்ப்பில் தன் கடமையை இளம் பருவத்திலே புரிந்து கொண்டு நன்கு படித்து வேலை கிடைத்ததும் தன் அத்தை நடத்திய ஓட்டலை வேறு ஒருவருக்கு மாற்றி கொடுத்து இன்று தன் குடும்பத்தை தாங்குபவன்..அவ்வப்போது தன் உற்ற தோழர்கள் விஜயன், பெருமாளுடன் இயல்பாய் இருப்பவன் சிறுமலையில் மலைத்தேன் எடுக்க செல்வான்…நண்பர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து 10 ஏக்கர் மலை நிலங்களை சொந்தமாக வாங்கி ஒரு பகுதி வாழை, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை என பலவகை பழ மரங்கள் பயிரிட்டு மீதி பகுதியில் காப்பி பயிரிட்டு இயற்கை முறையில் வளர்க்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்..விஜயன், பெருமாள் மேற்பார்வையில் நல்ல வருவாயுடன் சத்தான கனிகளும் என அவ்வப்போது வந்து பார்த்து கொள்ளும் மாறனுக்கு ஓங்கி வளர்ந்த மரங்களையும், பச்சை பசேலென காப்பித்தோட்டத்தையும் காண காண தெவிட்டாது.
திண்டுக்கல்லின் பிரதான குடியிருப்பு பகுதியின் கோடியில் கம்பீரமாக காட்சியளித்தது அந்த வெள்ளை நிற மாளிகை..வெளியிருந்து பார்ப்பதற்கு பழங்காலத்து மனை போல தெரிந்தாலும் உள்ளே நவீன வசதிகளுடன் புதுபிக்கபட்டிருக்க கீழ்தளத்தில் உள்ள ஒரு விஸ்தாரமான அறையில் Instaa Live ல் அரபிக்குத்து நடன அசைவை ஆடிக்கொண்டிருந்தனர் 65 வயதை நெருங்கும் மோமதி பாட்டியும், சராசரி உயரம், கண்களில் குறும்பு என பண்டைய கால இளவரசனை போல கம்பீரமாய் ஆடும் கட்டழகன் பேரனும்.
நெல்லையை பூர்வீகமாக கொண்ட மாணிக்கம் கோமதி தம்பதிக்கு தியாகராஜன் ரத்னவேல் என இரு மகன்கள்..அந்த காலத்து பட்டதாரி மனைவியின் கையில் பலசரக்கு கடை பொறுப்பை புரளி பேசிய ஊரார் முன் கொடுக்க, திறம்பட லாபகரமாய் நடத்தியவர் கோமு..ஆண் பெண் சமம் என உணர்ந்த கணவன் கிடைத்ததில் கர்வத்துடன் பரிபூரணமான வாழ்க்கை அமையபெற்று நெல்லை சந்தையில் வலம் வந்தவர்..காலப்போக்கில் மகன்கள் பொறுப்பேற்க கணவன் மறைவிற்கு பின் திண்டுக்கல்லில் உள்ள தங்கள் கிளைக்கடையை மையமாய் கொண்டு புலம் பெயர்ந்தார்.
எதிர்பாராத இளைய மகன் மருமகள் ரத்னம், சீதா இழப்பில் மனம் தளர்ந்தாலும் தூணாய் தன் குடும்பத்தாரை தாங்கிய இரும்பு பெண்மணி..தியாகராஜன் அவர் மனைவி சாரதாவிற்கு ஒரு பெண்…சென்னையில் புகழ் பெற்ற பத்திரிகையாளராக பணிபுரிகிறாள்..ரத்னம் சீதாவின் ஒரே மகன் யஷ்வந்த் எம்பிஏ முடித்து திண்டுக்கல் தொழிற்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வரும் வளரும் தொழிலதிபர்.
கடையிலிருந்து வீடு திரும்பிய தியாகு கை கால் அலம்பி பூஜையறைக்கு வந்தார்..பின் மனைவியிடம்..
“சாரதா, அம்மாவையும், தம்பியும் கூப்பிடு..” என சிவராத்திரிக்கான பூஜையை ஆரம்பிக்க, சாரதா..
‘ஆமா அப்படியே கூப்பிடதும் ஓடி வந்துடற மாதிரி தான்’ என முனகிக்கொண்டே அவர்கள் அறையை தட்ட உள்ளிருந்து எட்டி பார்த்த யஷ் தலையில் கொட்டிய சாரதா..
“பெரியப்பா வந்துட்டார்…சாமி கும்பிட கூப்பிடறார்..பாட்டியை கூட்டிட்டு ஒழுங்கா வந்து சேரு…”எனக்கூற யஷ் சாரதாவை பார்த்து..
“ம்க்கும் இத உள்ள வந்து சொல்லுங்க பார்க்கலாம்..” என தலையை தேய்த்தபடி யஷ் சொல்ல..சாரதா அவனை முறைத்து பின் கெஞ்சலாய்..
“சீக்கிரம் வா என் செல்லம் ல..”
“ம்ம் இது மை ஸ்வீட் பெரி(பெரியம்மா ஷார்ட்) ” என சிரித்தபடி சென்றான் யஷ்..சொன்னபடி தன் பாட்டி கோம்ஸூடன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆஜரானான் யஷ்..
பூஜை முடியும்வரை அமைதியாய் நின்ற கோமதி முடிந்ததும் ஹாலில் வந்தமர்ந்து தன் இன்ஸ்டாவில் ஐக்கியமாகிவிட, யஷ் தன் பி.எவிடம் மறுநாள் வேலைகளை பற்றி கேட்டுக்கொண்டிருந்தான்..சர்க்கரை பொங்கல் கிண்ணத்தை சாரதா கோமதியிடம் தர மறுக்காமல் வாங்கினார்..இது தான் கோமதி..அவரவர் விருப்பங்களுக்கு மரியாதை அளிப்பவர்..மனது கேட்காமல் சாரதா அவரிடம்..
“எப்படி அத்தை உங்களால சிவராத்திரி அன்னிக்கு அரபிக்குத்து ஆட முடியுது..?” என தயங்கியவாறு கேக்க..தீர்க்கமான பார்வையுடன் மருமகளை ஏறிட்டவர்..
“சாரதா விழுந்து விழுந்து கும்பிட்டா தான் சாமி சந்தோஷபடும் னா அது முதல்ல சாமியேயில்ல…மத்தவங்களுக்கு உதவல னாலும் பரவால்ல, கெடுதல் பண்ணாம இரு, முடிஞ்சா உன்னால னா உதவி பண்ணு…அந்த சாமியே உன்னை தேடி வரும்…மோர்ஓவர் சிவன் இஸ் பான்ட் ஆஃப் மியூசிக்..சோ அவருக்கு எல்லாமே ஓகே தான்…எனக்கு பிடிச்ச வகையில கொண்டாடுறேன்…லெட் மீ பி லைக் திஸ் ஆல்வேய்ஸ்..யஷ் என் ஸ்கூல்மேட் அம்புஜா வ டேக் பண்ணி இந்த சேலன்ஜ் ய அனுப்பிடு..”என்றார் கோம்ஸ். யஷ்,
“ம்ம் உங்க ஐடி சொல்லுங்க..”
“அப்ப நீ என்னை பாலோவ் பண்ணலயா?..”
“கோம்ஸ்.. திஸ் இஸ் மை அபிசியல் ஐடி..” என யஷ் சொல்லவும்..
“ஓகே ஓகே நோட் பண்ணிக்கோ,_Helena Gomez…”
“ஸ்ப்பாஆ முடில..” என சலித்தவாறே தன் பாட்டியின் ஆசையை நிறைவேற்றினான் பேரன்..ஆம் கோம்ஸ் அக்கால பாலிவுட் ஆட்டநாயகி ஹெலனின் தீவிர ரசிகை..
தனி தனி திசையில் பயணிக்கும் இவர்கள் ஓர் புள்ளியில் சேரும் போது??
தொடரும்.
error: Content is protected !!