Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒற்றை ஜன்னல்

ஒற்றை ஜன்னல் – 15.1

துளசியின் கவனம் இங்கு எங்மே இல்லை இத்தனை அருகில் அவளைப் பார்த்துவிட்டு விலகிச் செல்ல முடியவில்லை அவனால், அந்த முகத்தில் தீராச் சோகத்தின்  சாயல் விழிகளில் எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன் என்று தளும்பி நிற்கும் கண்ணீர்.

 

 



Advertisement

மற்றவர் பார்வையில்  தங்கையை வழியனுப்பிய பிறகான அவளின் வருத்தம் மட்டுமே… அவனுக்குத் தெரியுமே வெறும் ஐந்து மாதம் என்று மற்றவர் கடந்தாலும் அவளை மனதால் அறிந்தவன், அந்த விழிகள் பேசும்  மொழியைப் படிக்கத் தெரிந்தவன்.

 

Advertisement

 

Advertisement

தன்முன்னில் நிழலாடுவதையும் முகத்தின் நேரே நீட்ட7 பட்ட காபியின் நறுமணத்திலும் அவள் விழிகள் மெல்ல திரும்பிப் பார்த்தது, பார்த்த நொடி அவளின் சர்வமும் ஸ்தம்பித்தது எழமுடியவில்லை உடலின் எந்தப் பாகத்தையும்   அசைக்க முடியவில்லை தேங்கி நின்ற கடல் பொங்கி கன்னங்களை நனைத்து வழிந்தது.

 

Advertisement

 

 

“வாங்கிக்கோ துளசி… வெறும் காபி தான் உனக்கு வேற எதையும் வாங்கிக்குடுக்கற உரிமை எனக்கு இல்லையே” என்றான் உணர்வுகளற்ற குரலில்.

 

 

துளசி வாயை மூடிச் சத்தத்தை அடக்கித் தேம்ப  “மாமா” என்ற அழைப்பில் தமிழ் அவனின் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான், துளசியின் விழிகளும் அவனின் அருகில் வந்துநின்ற பெண்ணின் மீது படிந்தது புதிதாகத் திருமணம் நடந்தத்திற்கான அனைத்து அடையாளங்களும் அவளிடம் இருந்தது.

 

 

“நேரமாச்சு மாமா” என்றவள் விழிகள் துளசியில் படிந்து எழுந்து தமிழிடம் கேள்வியைத் தாங்கி நிலை கொண்டது.

 

 

“துளசி” என்றான் அவளிடம்.

 

 

“ஓஹ்…” என்றவள் “போலாமா மாமா” என்று  முன்னே நடக்க தன்னை நிமிர்ந்து பார்க்காதவளை சில நொடிகள் பார்த்து நின்றவன் மெல்ல திரும்பி நடந்தான்.

 

 

தமிழ் துளசியின் அருகில் நிற்பதை பார்த்த சாந்தா வேக நடையில் மகளை நெருங்கினார், மனது வலித்தது பாவைக்கு ‘மறந்துவிட்டார் தன்னை கடந்து சென்றுவிட்டார், வேறு வாழ்வை ஏற்றுக்கொண்டார்’ ஏனோ தன்னுடைய வருத்தம் நியாயமே இல்லை என்று தெரிந்தும் அவள் மனம் காயம் கொண்டது.

 

 

“துளசி கிளம்பு போலாம்” என்று சாந்தா அழைக்கத் துளசி அவன் சென்ற திசையில் பார்வையை பதித்தாள் அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான் உள்ளே செல்லும் வாயில் அருகில் நின்று அவள் பார்த்த பின்பே உள்ளே நுழைந்தான்.

 

 

“கல்யாணம் ஆயிடுச்சு போல நல்லதா போச்சு, பாத்தியா எல்லார்க்கும் அவங்க வாழ்க்கை தான் முக்கியம் அன்னைக்கு உனக்காக வந்து நின்னான் ஆனா பாரு ஒரு வருஷத்துல வேற கல்யாணம் பண்ணிகிட்டான் அவ்ளோதான்… நீதான் தேவையில்லாம கண்டதையும் யோசிச்சு நீயும் நிம்மதியா இல்லாம மாப்பிளை கூடையும் சந்தோஷமா வாழ மாட்டற” என்றார் சாந்த்தா.

 

 

 

சிலநொடிகளுக்கு அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தாள் பத்து நிமிடங்களுக்குப் பிறகு நிமிர்ந்தவளின் முகத்தில் புது தெளிச்சம் முகத்தை அழுந்தத் துடைத்தவள் அவன் வைத்துவிட்டு சென்ற காப்பியை எடுத்துக் குடித்தாள்.

 

 

“போலாம்” என்று எழுந்தவள் வேக நடையில் வெளியில் சென்றாள் தன்னுடைய திருமணம் முடிந்து நாளையொடு ஒரு வருடம் முடிகிறது என்பதே அப்பொழுதுதான் அவளுக்கு நினைவு வந்தது.

மனதில் தெளிவு வந்துவிட்டது ‘எதற்க்காக வருந்த வேண்டும் துளசி  அவருக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா உன்னையே நினைத்து வாழ்வை அழித்துக்கொள்ள வேண்டுமா நீ அவருக்கு முன்பே கல்யாணம் செய்துகொண்டாயே உனக்கு ஒரு நியாயம் அவருக்கு ஒரு நியாயமா, சந்தோஷமாக இருக்கட்டும் பிள்ளை குட்டி பெற்று நிம்மதியாய் வாழட்டும் நல்லா இருக்கட்டும் நல்லா இருக்கணும் அவர் மனசு போல அவருக்கு வாழ்க்கையும் நல்லா இருக்கும்’ என்று மனதில் உருபோட்டுக்கொண்டாள்.

 

 

என்றாலும் இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் ஊசியைக் குத்தியது கைநழுவிப்போன சொர்கத்தின் நினைவுகள் மனதை திடமாக்கினாள் அழுது அழுது மனதின் பாரம் அனைத்தயும் வெளியேற்றினாள்.

 

 

சாந்தாவுக்கு மகளை எப்படியாவது கணவன் வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது அவள் வந்தும் ஏழு மாதங்கள் கடந்து விட்டதே மறுநாள் காலையே ஆரம்பத்தித்துவிட்டார் சாந்தா.

 

 

“துளசி நாளைக்கே ஊருக்குக் கிளம்பு, இவ்ளோ நாள் எந்தப் புருஷன் இப்படி விட்டு வெச்சிருப்பார் அவங்க வீட்டுலயும்  என்ன நினைப்பாங்க” என்றார்.

 

 

எதற்குமே அவள்  பதில் பேசவில்லை, வெற்றி அழைத்துவிட்டான் “இன்னும் வராம உன் பொண்டாட்டி அங்க என்ன பண்றான்னு கேக்குறாங்க வீட்ல” என்று பத்து நிமிடங்கள் நிறுத்தாமல் அவன் பேசி முடிக்க “வரேன்” என்றதோடு அழைப்பைத் துண்டித்தாள்.

 

 

நான்கு நாட்களுக்குப் பிறகு பார்கவியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது “அக்கா… எப்போ ஊருக்குப் போற அம்மா வருத்தாடுறாங்க, அவங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சாமே நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோக்கா ஒருவேளை மாமாகிட்டா மாற்றம் வரலாம்ல” என்றாள் பெரியமனுஷியாக.

 

 

துளசியின் இதழ்களில் விரக்தி  புன்னகை “சரிங்க பெரியமனுஷி” என்றவள் அமைதியாக அறையில் சென்று அமர்ந்துவிட்டாள், ஊருக்குச் செல்லச் சாந்தாவும் அவளுடன் கிளம்பி நின்றார் துளசி அவரைக் கேள்வியாய் நோக்க.

 

 

 

“வந்து கிட்டத்தட்ட ஏழு மாசம் இங்க நின்னுட்ட நானே வந்து சொல்லி விட்டுட்டு வரேன்” என்றார் சாந்தா, அதற்கும் அவளிடம் எதிர்ப்பில்லை வீட்டிற்கு வந்தவளிடம் அதிக்கப்படியான கோபத்தையே காட்டினான் வெற்றி, அவள் அவனை மதிக்கவேயில்லை அவள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

 

சாந்தாதான் மருமகனிடம் அனைத்து தவறும் தங்கள் பக்கமே என்பதை போல விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்டு இரண்டு நாட்கள் அங்குத் தங்கி சென்றார், அவனும் முகத்தைத் தூக்கி வைத்துச் சுற்ற அவளும் சமாதானம் செய்யவில்லை.

 

 

ஒருவாரம் கடந்த நிலையில் அவளை அவன் நெருங்கத் துளசி பதறி மூலையில் ஒன்றினாள் “என்னடி” என்றவனை பயத்தோடு பார்த்தாள்.

 

 

“கிட்ட வராதீங்க” என்றாள் சீற்றமாக.

 

“கிட்ட வரக்கூடாதா என்ன தாண்டிப் பிரச்சனை உனக்கு” என்றான் பல்லைக் கடித்து “எனக்குப் பிடிக்கல டைம் வேணும் என் பக்கத்துல வராதீங்க” என்றாள்.

 

 

“அப்பறம் என்ன எழவுக்கு திரும்பி வந்த உன் அம்மா வீட்டுலயே குப்பை கொட்ட வேண்டியதுதானே” என்றவன் “எனக்குப் பொண்டாட்டியா இருக்க முடியுமா முடியாதா” என்றான்.

 

 

“முடியாது எனக்குப் பிடிக்கல” என்றாள் மீண்டும், கையில் கிடைத்த பொருட்களைத் தூக்கி போட்டு உடைத்தான் “சீ உன்கூடாலம் மனுஷன் வாழ்வானா” என்றவன் அந்த நடு இரவில் வண்டியை எடுத்துக்கொண்டு எங்கோ சென்றான்.

 

 

அவன் சென்றதும் கதவை அடைத்துவிட்டு வந்து அமர்ந்தாள் ஏதோ ஒரு தீர்மானத்தில் இருந்தாள் அவனே தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும்  வாழ முடியாது என்று அனுப்பிவிட வேண்டும், அவனோடு இனி வாழ முடியாது எங்குச் செல்லலாம் வேலைக்கு என்ன செய்வது, வேலை கிடைக்கவில்லையென்றால் அதுவரைக்கும் செலவுக்குக் காசு வேண்டுமே அதற்கு என்ன வழி…

 

 

‘சென்னைக்கு போகலாமா வாணி இன்னும் அங்குதான் இருப்பாளா? ஒருவேளை அங்கில்லையென்றால் தங்குவதற்கு என்ன செய்ய, எங்குச் செல்ல?  சென்னை போகவேண்டுமா?  மீண்டும் அவரைப் பார்க்க வேண்டாம்… புது வாழ்க்கை அவருக்கு நிம்மியாகப் போகட்டும்’.

 

 

‘என்னைத் தமிழ் மீண்டும் பார்க்கக் கூடாது சென்னை போகாமல் வாணியை எப்படி  சந்திக்க’ என்று யோசித்தவள் சென்னைக்கு வெளியில் எங்காவது ஹாஸ்ட்டலில் முதலில் தங்கிக்கொள்ள வேண்டும்  பிறகு   ஒரே நாளில் சென்று வாணியை சந்தித்து  திரும்பி வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

 

 

 

இப்படித்தான் அவளுடைய சிந்தனை இத்தனை நாட்களாகச் சுழன்றுகொண்டு இருந்தது, தமிழுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது முதலில் வலியைத் தந்தாலும் ஏனோ அதற்க்கு பின்பு அவள் மனம் மிகுந்த நிமமதியை உணர்ந்தது தன்னால் அவன் வாழ்வு பாழாகிவிட்டது என்ற குற்றவுணர்ச்சி அன்று அந்தப் பெண்ணை அவனுடன் பார்த்தபிறகு குறைந்துவிட்டது.

 

 

 

தன்னாலே ஒரு தெளிவும் நிம்மதியும் வந்து தங்கிவிட்டது இனி இங்கிருந்து செல்ல வேண்டும், வெற்றியும் அவனுக்குப் பிடித்தபோல ஒரு பெண்ணைத் தேடிக்கொள்ளட்டும் அவன் குடும்பத்திற்கு ஒத்துவரும் ஒரு பெண் அவனைப் பிடித்து மணந்து கொள்ளும் பெண் என்னால் அவனுடைய வாழ்க்கையும் வீணாகப்போய்விட்டது என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

 

 

“உன்னால யாருக்குமே நல்லது நடக்கல துளசி கோழையா இருந்து எல்லாரையும் கஷ்டப்படுத்திட்ட, போதும்… இனிமே யாரும் வேண்டாம் இப்போ பார்கவி அவளுக்குப் பிடிச்ச வாழ்க்கையை தேடிக்கலயா அதுனால இப்போ என் வீட்டில என்ன மாறிடுச்சு எல்லாம் அப்படியேதான் இருக்கு, ஆனா எனக்கு மட்டும் மிரட்டல் தற்கொலை நாடகம்”.

 

 

“என்ன பத்தி யோசிக்காம இருந்தவர்களை இனி நான் ஏன் யோசிக்கணும் அப்பாவை மட்டும் பாத்துக்கணும், உறவு இல்லனா போறாங்க இங்க நான் கஷ்டப்பட்டபோ இந்த உறவுல யார் வந்து  நின்னாங்க எல்லார்க்கும் அவங்கவங்க லைப் முக்கியம் இனிமே நானும் அப்படியே இருக்கேன் என்னால தனியா வாழ முடியும் யார் தயவும் தேவையில்லை” என்று தீவிரமான முடிவுக்கு வந்தாள்.

 

சொல்லாமல் ஓடிப்போகும் எண்ணமெல்லாம் இல்லை, அவனிடம் நல்ல முறையிலே சொல்லிச் செல்ல வேண்டும் சீக்கிரம் செய்ய வேண்டும் என்று அனைத்தையும் யோசித்துக்கொண்டிருந்தாள்.

 

 

பாதி  இரவில் வந்து கதவை உடைத்துக்கொண்டிருந்தான் வெற்றி அவளும் உறங்காமல்தானே இருந்தாள் கதவைத் திறந்துவிட்டு ஹாலில் படுத்துக்கொண்டாள், தினமும் சாந்தா காலைலே  அழைத்துவிடுவார்.

 

 

என்ன சமையல் என்ன செய்கிறாள் மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்று ஒரே விசாரணை, கிடைத்த வாழ்க்கையை காப்பாற்றிக்கொள், துர்கா எப்படி இருக்கிறாள், பார்கவி எப்படி அருமையாகக் குடும்பம் நடத்துகிறாள் என்று மகள்களின் புராணம் வேறு போனை கீழே வைத்துவிட்டு அவள் பாட்டிற்க்கு அமர்ந்திருப்பாள்.

 

 

அதற்கிடையில் பக்கத்துவீட்டில் தங்கியிருந்த கீதாவின் மாமியார் வழுக்கி விழுந்து காலை உடைத்துக்கொண்டார் அவள் கணவன் வெளிநாட்டில் இருக்க அவள் சிறிதாக ஒரு வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்தாள், கொஞ்சம் நடுத்தர குடும்பமே மூன்று வயதான ஒரு பெண் குழந்தை அவளுக்கு அதை அருகில் இருக்கும் பிலே ஸ்கூலில் சேர்த்திருந்தாள், மதியம் ஒருமணி போலக் குழந்தை வந்துவிடும்.

 

 

மாமியார் தான் பார்த்துக்கொள்வார் இபோழுது என்ன செய்ய என்று தெரியாமல் அவர்கள் தடுமாறி நின்றனர் துளசி தானாகவே பொறுப்பை எடுத்துக்கொண்டாள் “நான் பாத்துக்குறேன் கீதா எனக்கும்பொழுது போகும் உங்க அத்தைக்கும் ரெஸ்ட் கிடைக்கும் நீ டென்ஸன் இல்லாம வேலைக்குப் போ” என்று கூறிவிட அவர்களுக்கு அவ்வளவு நிம்மதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!