Skip to content
Post Views: 7,914
“என்னடி நினைச்சுட்டு இருக்க படிச்சு வேலைக்குப் போய்த் தனியா தங்கிட்டா எல்லா முடிவையும் நீயே எடுப்பியா” என்று போனில் தன்னை திட்டிய தாயிடம் என்ன பதில் கூற என்று தெரியாமல் நின்றாள் துளசி.
Advertisement
“என்னம்மா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல” என்றாள் அவள்.
Advertisement
Advertisement
“மாப்பிளை எதுக்கு உன்னைப் பாக்க வரார்” என்றார் சாந்தா.
Advertisement
“ஏன் பாக்க வரார்ன்னா என்ன சொல்ல!” என்று தெரியாமல் விழித்தாள் துளசி.
“நான் ஏதும் சொல்லலமா அவரேதான் பாக்க வரார் ஒரே ஊர்ல இருக்குறதால வராங்க போலாமா” என்றாள்.
“என்னடி பழக்கம் இது எங்க வீட்ல இதெல்லாம் பழக்கமில்லன்னு சொல்ல வேண்டியதுதானே, அவருக்குத்தான் தெரியாது உனக்கு அறிவு வேண்டாம் வீட்டைவிட்டு வெளில தங்கிட்டா துளிர் விட்டுப் போய்டுமா” என்றார் சாந்த்தா.
உண்மையில் துளசிக்கு புரியவில்லை வீட்டினர் முறைப்படி அனைத்தையும் செய்து அவர்கள் வீட்டிலிருந்து வந்து பூ வைத்து உறுதி செய்து போயிருக்கிறார்கள் இவரும் மாப்பிளை என்று உரிமையோடு அழைக்கிறார்.
அதோடு தினமும் மகளிடம் மாமியாருக்கு பேசுனியா நாத்தனாருக்கு பேசினியா என்ன சொன்னாங்க மரியாதையா பேசணும் நல்ல படியா நடந்துக்கணும் என்று ஆயிரம் அறிவுரை வேறு ஆனால் பார்க்கவரும் மருமகனை மட்டும் பார்க்கக் கூடாதாம் அதிலும் அவளே சொல்லவேண்டுமாம் பார்க்க வராதீங்க என்று.
“துர்கா போன் செஞ்சு என்னைக் கேள்வி கேக்குறா” என்றார் சாந்தா.
‘எதுக்கு’ என்று மனதிற்குள்ளே கேட்டுக்கொண்டவள் அமைதியாகவே இருக்க.
“அவளுக்குக் கல்யாணம் முடிவானப்போ போன்ல கூட அதிகமா பேசவிடல துளசியை மட்டும் அவர் வந்து பாத்துட்டு போறார் தினமும் போன் பேசுறார் அவ நல்ல வசதியா தனியா போய்த் தங்கிட்டா அவளுக்கு எல்லாம் நடக்குது நான்தான் என் புருஷன்கூட சரியாகூட பேசாம கல்யாணம் செஞ்சுவந்து அவரைப் பத்தியும் சரியா தெரியாம அவங்க வீட்டைப் பத்தியும் சரியா தெரியாம கஷ்டபட்டேன்னு சொல்றா”.
“உனக்குமட்டும் நான் சலுகையா நடக்குறேனாம் பெரிய மாப்பிளை கூடத் துர்கா கிட்ட கேட்டாராம் உன் அம்மாவுக்கு என்மேல மட்டும் நம்பிக்கை இல்ல போல அதான் என்னைப் பேசவும் விடல பாக்கவும் விடல ரெண்டாவது மாப்பிளைக்கு இப்போவே இவ்ளோ சப்போர்ட்டான்னு கேக்குறாராம்” என்று பக்கம் பக்கமாக வசனம் பேசத் துளசிக்கு தலை சுற்றியது இது ஒரு பிரச்சனையா என்று.
“அவர் போன் செய்யும்போது பதமா எடுத்துச் சொல்லு வரவேண்டாம்னு, பெரியம்மா என்னடி நினைப்பாங்க நாலு பேருக்குத் தெரிஞ்சா எவ்ளோ அசிங்கம் பொண்ணை ஊர் மேய விட்டிருக்கேன்னு என்னைத்தான் தப்பா சொல்லுவாங்க, என்ன புரியுதா” என்றார் சாந்தா, துளசிக்கு சுருக்கென்றது அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் என்று.
“அம்மா அவர் வாரத்துல ஒருநாள் தான் வந்து பாக்குறார் அதும் வெளில கூட இல்ல ஹாஸ்ப்பிட்டல் வந்து பாத்து பேசிட்டு அப்படியே போயிடுவார், ப்ரியா அக்காவும் ரவி மாமாவும் எல்லா நாளும் வெளில போறாங்க அந்த மாதிரிலாம் நான் எங்கேயும் போறதுகூட இல்லம்மா” என்றாள் ஆற்றாமையாக.
“அவளும் நீயும் ஒன்னாடி… அவ அங்கேயே வளந்த பொண்ணு நம்மள மாதிரிக் கிராமம் இல்ல மாப்பிளைக்கு உன்னைப் பிடிச்சதே பெரிய விஷயம் உண்ண எப்படி கரைசேக்குறதுன்னு நானே கலங்கி நின்னேன் ஏதோ அவங்க பிடிச்சுருக்குன்னு சொல்லிக் கல்யாணமும் முடிவாயிடுச்சு”.
“கொஞ்சம் அடங்கி இரு, அதிகமா பேசிப் பழகி அவருக்கு உன்னைப் பார்த்துப் பார்த்துச் சலிச்சுக்கூட போலாம் ப்ரியா தங்க சிலையாட்டம் இருக்கா அவ நிறம் என்ன அழகென்ன படிப்பென்ன அதோட எவ்ளோ சம்பளம் வாங்குறா அவ கூட உன்னை இணை சேக்குறியா” என்றவரின் வார்த்தைகள் துளசியை காயப்படுத்தியது அமைதியாகிவிட்டாள்.
“ஒழுங்கா சொல்றதை கேட்டுப் பழகு அந்தத் தம்பி போன் பண்ணும்போது இனிமே பாக்க வரக்கூடாதுன்னு சொல்லு” என்று கட்டளை பிறப்பித்து அவர் வைத்துவிட நிறையும் விழிகளோடு அமைதியாக அமர்ந்திருந்தாள் துளசி.
வாணிக்கு அவளைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது ஒரு தாய் இப்படிக்கூட இருப்பாரா என்று கோபமாகவும் வந்தது.
“ஏய் துளசி அவங்கதான் அப்படி பேசுறாங்கன்னா நீ எதுக்கு கண்ணைக் கசக்குற விட்டுத் தள்ளிட்டு போ நம்ம வீட்டாளுங்க கிட்ட நாம உண்மையா இருந்தா அவங்களும் நம்ம உணர்வுக்கு மதிப்பு குடுக்கணும், நீ இங்க நடக்குற எல்லாத்தயும் உங்க அம்மாகிட்ட மறைக்காம சொல்ற ஆனா உங்க அம்மாக்கு அதை மதிக்கத் தெரியல”.
“இனிமே அந்த அண்ணா உன்னைப் பாக்க வரத நீ வீட்டில சொல்லாத அவர் குடுக்குற பூவைக் கூட உன் பெரியம்மா வீட்டுக்குக் கொண்டு போகாத நான் எங்க வீட்டுக்குக் கொண்டுபோய் பிரிட்ஜில் வெச்சு அடுத்தநாள் கொண்டு வரேன் நீ தலைல வெச்சுக்கோ” என்ற வாணியை நன்றியாகப் பார்த்தவள்.
“அவங்களுக்கு என்னைப் பாத்துட்டே இருந்தா என்னைப் புடிக்காம போய்டுமா” என்றாள் குரல் இடற.
“ஏதாவது சொல்லிட போறேன் பைத்தியக்காரி… அந்த அண்ணா உன்னைப் பாக்க வரும்போது அவர் கண்ணைப் பாரு உன்மேல அவருக்கு இருக்குற அன்பு காதல் உனக்குப் புரியும் உங்க அம்மா சொல்றதெல்லாம் மண்டைல ஏத்திக்கிட்டீனா உனக்குக் கிறுக்குதான் பிடிக்கும் வா உள்ள போலாம்” என்று அழைத்துச்சென்றாள் வாணி.
அன்று தமிழ்ச்செல்வன் அழைத்தபோது அவனிடம் தாய் கூறியது போல இனி பார்க்க வர வேண்டாம் என்று கூறிவிடலாம் என்று பலமுறை முயன்றும் அவளால் அந்த வார்த்தையைக் கூற இயலவில்லை.
துளசிக்கும் அவனைப் பார்க்கும் ஆசை நெஞ்சம் முட்ட நின்றது, வாரத்தில் ஒரு நாள் அவன் வரும் அந்த நாளுக்கு அத்தனை ஆசையோடு காத்திருப்பாள் சாந்தா பேசியதிலிருந்து ஒரு வித வருத்தத்திலும் குழப்பத்திலும் இருந்தவள் அவனோடு சரியாகப் பேசவில்லை.
“என்னாச்சு துளசி உடம்பு சரியில்லையா குரலே ஒரு மாதிரி இருக்கு” என்றான் தமிழ், மாலை பேசிய தந்தைகூட இதேதான் கேட்டார் “துளசிமா என்னாச்சு குரலே சரியில்ல உடம்புக்கு ஒண்ணுமில்லயே” என்று.
அவளுக்கு மீண்டும் விழிகள் நிறைய “ஒண்ணுமில்ல கொஞ்சம் தலைவலி” என்றாள் மெல்ல.
“சரி தூங்கு நான் நாளைக்கு பேசுறேன்” என்றான் அவன்.
மறுநாள் அவனை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை அவள் காலையிலே வந்து நின்றிருந்தான், இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்து சென்றான் இனி அடுத்த வாரம்தான் வருவான் என்று அவள் எண்ணியிருக்க அவனைப் பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோ உடைந்த உணர்வு அவன் தோள் சாய்ந்துகொள்ள துடித்தது பெண்ணிற்கு.
வாணியை பார்த்தவன் “சிஸ்டர் கொஞ்சம் நேரம் பெர்மிஷன் சொல்றீங்களா பேசிட்டு அனுப்புறேன்” என்றான்.
“நீங்கப் பேசுங்கண்ணா நான் பாத்துக்குறேன்” என்றவள் “ஒழுங்கா பேசு அவங்ககிட்ட” என்றதோடு உள்ளே சென்றாள்.
மருத்துவமனையின் முன்னிலும் பக்கவாட்டிலும் நிறைய மரங்களும் அமரச் சிமெண்ட் பெஞ்சும் கிடந்தது, அவன் அதை நோக்கி நகர அவளும் அவனுடன் பின் சென்றாள் அவன் அருகில் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தவள் நிமிராமல் இருக்க.
“என்னாச்சு துளசி ஏதாவது பிரச்சனையா நேத்து நீ சரியாவே பேசல அதான் உடம்பு சரியில்லயோன்னு பாக்க வந்தேன்” என்க.
உதட்டை அழுந்தக் கடித்து அமர்ந்திருந்தாள், ஏதோ உள்ளது சொல்லாமல் மறைக்கிறாள் என்று புரிந்துகொண்டவன் ஒரு சிறு நகை பெட்டியை வெளியில் எடுத்து அதைத் திறந்து காண்பித்தான், பிங்க் நிற ஒற்றை கல் மூக்குத்தி.
அவள் அவனை ஏறிட்டு பார்க்க “உனக்கு அழகா இருக்கும்… நீ ஏன் மூக்கு குத்திகல” என்றான் மெல்லிய சிரிப்போடு, ஒரு கேவல் வெளிப்படக் கட்டுக்குள் அடங்காமல் கண்ணீர் வழிந்தது துளசிக்கு.
“ஏய் துளசி… துளசி… இங்க பாரு சாரி சாரி உனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம் நான் எனக்குப் பிடிச்ச எல்லாத்தயும் உன்ன செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துறேன்னா பிடிக்கலைன்னா சொல்லிடு அதுக்கு ஏன் அழற” என்க.
அவன் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டவள் அதிலே முகம் புதைத்து மீண்டும் அழ அவனுக்குத் தான் ஒன்றும் புரியவில்லை.
“துளசி என்னம்மா” என்றான் கவலையாக.
“உங்களுக்கு ஏன் என்னைப் பிடிச்சுது” என்றாள் தேம்பிக்கொண்டே.
“என்ன கேள்வி இது, ஏன் பிடிச்சுதுன்னா என்ன சொல்ல” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் “என்னைப் பாத்துகிட்டே இருந்தா உங்களுக்கு என்னைப் பிடிக்காம போய்டுமா” என்றவள் முகத்தைக் கையில் தாங்கி விழிநீர் துடைத்தான்.
“இந்த வாழ்க்கை முழுசும் உன்னைப் பாத்துகிட்டே இருக்கணும், தினமும் வந்து பாத்தா உன் வீட்டில எப்படி எடுத்துப்பாங்களோன்னுதான் வாரத்துல ஒருநாள் வரேன்” என்றவன் பாக்கெட்டிலிருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்தான்.
“உன் பெரியம்மா பொண்ணு கல்யாணம் முடிஞ்சு ஒரே வாரத்துல ஒரு முகூர்த்தம் இருக்கு உங்கவீட்டில அவ்ளோ சீக்கிரம் முடியாதுனு சொல்லிட்டாங்க அதனால ஒருமாசத்துக்கு அப்புறம் இருக்குற முகூர்த்தத்துல பேசி முடிக்கணும்னு என் அம்மாகிட்ட சொல்லியிருக்கேன், அவங்க எப்படியும் அதே முகூர்த்தத்துல கல்யாணத்தை வைக்கச் சம்மதம் வாங்கிடுவாங்க, என் கூட வாழ்ந்துபாரு துளசி அப்புறம் சொல்லு எனக்கு உன்னைப் பிடிக்காம இருக்கா இல்லாயான்னு” என்றவன்.
“உங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா” என்க.
மெல்ல தலை அசைத்தவள் அவனிடம் அதைப் பகிர்ந்துகொள்ள “இதெல்லாம் மனசுல ஏத்திக்காத, அவங்க அப்படிதான் இவ்ளோ வர்ஷம் வாழ்த்திருக்காங்க திடீர்ன்னு மாத்த சொன்னா அவங்களால முடியாது, நீ சொல்லு நான் பாக்க வரணுமா வேண்டாமா” என்றவனை பார்த்தவள் மீண்டும் அழத் தொடங்கினாள்.
“வரணுமா…” என்றான் அவள் அருகில் நெருங்கி.
“ஹ்ம்ம்” என்றாள் மெல்ல.
“அழாம சொன்னா வருவேன், பாரு மையெல்லாம் கலைஞ்சிடுச்சு” என்றவன் தன் கைக்குட்டையை எடுத்துக் கொடுக்க முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.
“இது என்கிட்டயே இருக்கட்டும் கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு ஒகேன்னா குத்திக்கோ” என்றவன் அதை மீண்டும் பையில் வைக்க, அவன் கையைப் பிடித்துத் தடுத்தவள் “எனக்குக் குத்திக்க ஆசைதான் நானே வெச்சுகிட்டுமா” என்றாள்.
“உனக்குன்னு வாங்கினது வெச்சுக்கோ ஆனா வீட்டில கேட்டா என்ன சொல்லுவ” என்க விழித்தாள்.
“சரி நான் பாத்துக்குறேன்” என்றவன் மல்லிப்பூவையும் கருப்பட்டி பணியாரத்தையும் அவள் கையில் வைத்தான்.
“இதுக்கெல்லாம் அழக் கூடாது” என்றவன் “ஆபிஸ்ல இருந்து வேலை விஷயமா ஆந்திரா போறேன் வர ரெண்டு வாரம் ஆகும் தினமும் போன் பண்றேன் எதா இருந்தாலும் என்கிட்டே சொல்லணும் சரியா, அம்மாவும் ஊருக்குப் போய்டுவாங்க நான் இப்படி எங்கயாவது போகும்போதுதான் அவங்களும் கிராமத்துக்குப் போயிட்டு வருவாங்க” என்றவன்.
“திங்கள்கிழமைதான் போறேன் அதுக்கு முன்னாடி முடிஞ்சா கண்டிப்பா வரேன்” என்று அவளை அனுப்பி வைத்தான் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே மருத்துவமனையின் உள் சென்றாள்.
அன்று மாலை அவளை அழைத்த சாந்தா “துளசி பெரியம்மாவை அழைச்சுட்டு போய் மூக்கு குத்திக்கோ” என்க.
அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள் “ஏன்மா” என்க.
“உன் மாமியார் தாண்டிச் சொன்னாங்க உனக்கு மூக்குத்தி போட்டா நல்லா இருக்குமாம், அவங்க பொண்ணுக்குக்கூட கல்யாணத்துக்கு பத்து நாள் முன்னாடி மூக்கு குத்தினங்களாம் மருமகளும் கல்லுவெச்சு போட்டுக்கிட்டா நல்லா இருக்கும்னு சொல்றாங்க”.
“வரதட்சிணை சீரு எதைப்பத்தியும் அவங்க பேசல அதெல்லாம் உங்க இஷ்டம்னு சொல்லிட்டாங்க, அவங்களா கேட்டது இது ஒண்ணுதான் நீ நாளைக்கே போய்க் குத்திக்கோ கடைல போய்க் கல்லுவெச்ச மூக்குத்தி ஒன்னு வாங்கிக்கோ உன்கிட்ட காசு இருக்குல்ல” என்க.
“இருக்குமா” என்றாள் அவள், ஆனால் எப்படி வேறு வாங்க… அவன் தந்ததை தான் இட வேண்டும் என்று ஆசைகொண்டது அவள் மனது, என்ன செய்ய என்ற யோசனையில் அந்த இரவைக் கழித்தாள் துளசி.
மறுநாள் அவளுக்கு அந்தக் கஷ்டத்தைக் கொடுக்காமல் “இந்தா துளசி இந்தக் கடைல நல்லா இருக்கும் போய் மூக்குத்தி வாங்கிகிட்டு அங்கேயே ஆள் இருப்பாங்க குத்திக்கோ, இதுக்காக நான் வரணுமா நீ தான் வெளிலலாம் போய்ப் பழகிட்டியே அதோட உன் பிரென்ட் இருக்காளே அவ பேரு” என்ன என்றார் ஜெயந்தி.
“வாணி பெரியம்மா” என்க.
“ஹ்ம்ம் அவளையும் கூட்டிட்டு போ” என்றுவிட மிகவும் நிம்மதியானது துளசிக்கு, காலைக்கு சமைத்த பூரி கிழங்கை எடுத்துவந்து வைத்தவள் தனக்கானதை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர.
“என்னம்மா இது இந்தக் காலத்துல மூக்கு குத்தணும் மூக்கணாம் கயிறு போடணும்னு சொல்லிக்கிட்டு, ஆனா ஒரு விஷயம் உண்மை சென்னைல இருக்குறதால எல்லாரும் சிட்டி ஆளுங்களா ஆயிட மாட்டாங்க இவளுக்கு ஏத்த ஆளுதான் அவங்க, இவ பழக்க வழக்கம் அவங்க பழக்க வழக்கம் நல்ல மேட்ச்” என்று சிரித்த ப்ரியா.
“இப்படிலாம் என் மாமியார் சொன்னா உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன், ஏன் ரவி கூட என் விருப்பத்தை மீறி என்னைக் கட்டாயப்படுத்த முடியாது” என்றாள் பெருமையாக.
“எனக்கே பிடிச்சுதான் செய்றேன் பிரியாக்கா, நேத்து பேசும்போது அவங்க சொன்னாங்க உனக்குப் பிடிச்சா மட்டும் குதிக்கோ இல்லனா வேண்டாம்னு” என்றாள் அவர்களைக் குறை சொல்லுவதை ஏற்கமுடியாமல்.
“உன் இஷ்டம்” என்ற ப்ரியா முகத்தைச் சுளித்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
அன்று மாலை வேணியுடன் பெரியம்மா சொன்ன கடைக்குச் சென்று மூக்கு குத்திக்கொண்டாள் கொஞ்சம் வலி இருந்தது “ராத்திரிக்கு தேங்கா எண்ணெய் வெச்சுக்கோம்மா சரியா போய்டும்” என்றார் அவர்.
“ஏய் துளசி ரொம்பா அழகா இருக்கு அதும் இந்தக் கலர் உன் கலருக்கு எடுப்பா இருக்கு மினுக்கு மினுக்குனு செம்ம” என்றாள் வாணி, துளசிக்கு வெக்கம் வந்தது அவன் பார்க்கும்போது அவன் விழிகளில் தெரியும் ரசனையைக் காண காத்திருந்தாள்.
மறுநாள் மாலையே வந்து நின்றிருந்தான், அருகில் நெருங்கி வந்தவளின் மூக்கில் மின்னிக்கொண்டிருந்த அந்த ஒற்றை கல்லில் அவன் விழிகள் நிலைத்தது அழகாய் அவன் புன்னகைக்க அந்தச் சிரிப்பு அப்படியே அவளை வாரிச் சுருட்டியது.
“அள்ளுது துளசி” என்றான் கிறக்கமாக, பெண்ணவளை மொத்தமாகச் சிவக்க வைத்தது அவன் குரல்.
“தொட்டு பாக்கவா” என்றவன் கேள்வியில் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள் மறுக்க முடியாமல் தலை அசைத்துச் சம்மதம் சொல்ல, அவளை அந்த மரத்தின் பின் மெல்ல இழுத்து நிறுத்தியவன் கையை அருகில் கொண்டு சென்றான்.
அவள் எதிர்பாரா நேரம் பட்டும் படாமலும் அந்த மூக்குத்தியில் இதழ் ஒற்றினான் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள் துளசி, மெல்ல மெல்ல உணர்வு பெற்றவள் தன்னையே எதிர்பார்ப்போடு நோக்கி நிற்பவனின் விழிகளைச் சந்திக்க முடியாமல் குனிந்துகொண்டாள், கன்னங்கள் துடுத்து விரல்கள் நடுங்க அவள் நின்ற கோலம் அவன் புன்னகையை இன்னும் பெரிதாக்கியது.
“காத்திருக்கிற நாள் எல்லாம் காத்தா பறந்திடனும் துளசி, நீ என்கிட்டே சீக்கிரம் வந்து சேர்ந்திடனும்” என்றவன் “ஊருக்குப் போறேன் சீக்கிரம் வரப் பாக்குறேன்” என்று அவள் கையில் மல்லி பூவை வைத்துவிட்டு “வரட்டுமா” என்க.
திரண்டு வந்த கண்ணீரை இமைத்தட்டி நிறுத்தியவள் “சரி” என்றாள் அவளை “போ” என்றவன் விழி அகற்றாமல் பார்த்தே நின்றிருந்தான் அவள் தன் கண்ணிலிருந்து மறையும் வரை.
மழை மேகமாய்
உருமாறவா உன் வாசல்
வந்து உயிா் தூவவா மனம்
வீசிடும் மலராகவா உன்
கூந்தல் மீது தினம் பூக்கவா
கண்ணாக கருத்தாக உனை
காப்பேன் உயிராக உனை
கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே
error: Content is protected !!