Skip to content
Post Views: 7,407
“துளசி நாங்க கிளம்புறோம் ரிசப்ஷனுக்கு வரோம்” என்றாள் துர்கா, பார்கவிக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை.
Advertisement
“இங்க தங்கக்கூட முடியாதுக்கா உன்கூட ரிசப்ஷன் வரைக்கும் தங்கிட்டு போகணும்னு நினச்சேன் இப்போ எப்படி இங்க தங்குறது..” என்று தயங்கி நிற்க.
Advertisement
Advertisement
“கிளம்பு ரிசப்ஷனுக்கு வா போதும்” என்றாள் துளசி.
Advertisement
மதியம் பார்சல் சாப்பாடு வாங்கி வந்தான் வெண்மதியின் கணவன் ராஜேஷ், வெண்மதியும் ராஜேஷும் அவர்களின் பெண்பிள்ளைகள் நதியாவும் காவ்யாவும் அவர்களின் வீட்டிற்கு சென்றனர், இங்கே அனைவரும் அமர்ந்து உண்ணும் அளவுக்கு இடம் போதவில்லை.
“நீங்க இங்க சாப்பிடுங்க நாங்க வீட்டுக்குப் போறோம் சாயந்திரம் நீங்கக் கிளம்பும்போது வரோம்” என்று அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர், உணவை முடித்துக் கொண்டு கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தனர் என்ன பேச என்று தெரியவில்லை யாருக்கும் மாலைபோலத் துர்காவும் குடும்பமும் பார்கவியும் கிளம்பி சென்றனர்.
இங்கிருந்து புறப்பட்டவுடனே பார்கவி சாந்தாவை அழைத்து அனைத்தும் கூறியிருந்தாள் “உன் பிடிவாதம்தான்மா எல்லாத்துக்கும் காரணம் நீ கூட அந்த வீட்டில இருக்கமாட்ட” என்று கத்தினாள்.
அவளிடமிருந்து போனை வாங்கிய துர்கா “அம்மா நீ ஒன்னும் டென்சன் ஆகாத அவ ஏதோ புரியாம பேசுறா” என்றவள் “நீ ஒருதடவை துளசிகிட்ட பேசிடு” என்றாள்.
“சரி” என்ற சாந்தாவுக்கு மனம் அடித்துக்கொண்டது ‘என் மேல கோபமா வேற போனா போகும்போது பேசவும் இல்ல இப்போ பேசினா பேசுவாளா இல்ல… என்ன செய்ய?’ என்று பத்து நிமிடம் யோசனை செய்தவர் மகளுக்கு அழைத்தார்.
துளசியின் அலைபேசி அடித்ததும் அனைவரின் பார்வையும் அவள்மீது விழுந்தது வேறு வழி இல்லாமல் அந்த அழைப்பை எடுத்தாள் “துளசி” என்ற தாயின் அழைப்பில் அவள் முகம் இறுகியது மெல்ல சுவரின் பக்கம் திரும்பிநின்றாள்.
“நல்லா இருக்கேன், இனிமே தான் சாப்பிடணும், நாளைக்கு பேசுறேன்” என்று சாந்த்தா கேட்ட எதற்கும் பதில் சொல்லாமல் அவளாகவே பேசி வைத்துவிட்டாள்.
“அம்மா… அவர் தோசை மாவு வாங்கிட்டு வந்துடுவார் பொடி வெச்சு சாப்பிட்டுக்கலாம்” என்றாள் வெண்மதி, அப்படி இரவுக்குத் தோசையும் பொடியும் என்று முடிந்தது, கல்யாணம் முடிந்த இரண்டாம் நாள் அமோக உணவு என்று சிரிப்புதான் வந்தது துளசிக்கு. உனக்கு எல்லாமே சூப்பரா நடந்துடுச்சு இது ஒண்ணுதான் கேடா என்றது மனசாட்சி.
அவர்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டே இருந்தனர் கொஞ்சம் தூங்கினால் தேவலாம் என்றிருந்தது அவளுக்கு ‘வெளியில் போங்கள்’ என்றா சொல்ல முடியும், இருப்பது ஒரே அறை அதிலும் நீண்டு கிடக்கும் வீட்டில் ஹால் கிட்சேன் அதை ஒட்டிப் பொதுவான பாத்ரூம் அதன்பிறகு பெட்ரூம்.
நேரம் பனிரெண்டை நெருங்கியது அப்பொழுதும் பேசிக்கொண்டே இருந்தனர், மாலை பால் வாங்கி வந்திருந்தான் வெற்றிவேல் அதில் வெண்மதி டி போட்டு அனைவருக்கும் கொடுத்தாள், துளசி வேண்டாம் என்றுவிட்டாள் இந்த நேரத்தில் எப்படி குடிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகப் பார்த்திருந்தாள்.
அவளுக்குக் கண்களைத் திறக்கவே முடியவில்லை உறக்கம் சுழற்றியடித்தது “சரி நாளைக்கு பேசலாம் துளசி பத்துமணிக்கே சாமி ஆடத் தொடங்கிட்டா” என்றான் ராஜேஷ் “சரி” என்றவர்கள் அவர்களின் வீட்டிற்கு சென்றனர், இந்த நேரம் பயம் இல்லாமல் எப்படி போகிறார்கள் என்று பார்த்திருந்தாள் அவள்.
அவர்கள் சென்றபிறகு கதைவடைத்தவன் ஒரு பாயை எடுத்துவந்து ஹாலில் விரித்தான் “அம்மா அப்பா கீழே படுக்க முடியாது அவங்க ரூம்ல படுத்துக்கட்டும் நாம இங்க படுத்துக்கலாம்” என்றான் அவள் ஒன்றும் கூறவில்லை பாயை விரித்தாள் அதன் மேலே விரிக்கக்கூட ஒன்றுமில்லை.
“அம்மா அப்பா வரும்போது நான் இங்க ஹால்ல படுத்துப்பேன் எனக்குப் பாய் மட்டும் போதும் அதான் வேற ஒண்ணுமில்ல” என்க, சரி என்பதாகத் தலை அசைத்தவள் இருந்த ஒரு தலைகாணியை அவன் அக்கம் வைத்துவிட்டு சுவரோடு ஒட்டிப் படுத்துக்கொண்டாள்.
“சரி நாங்களும் படுக்குறோம்” என்ற விஸ்வநாதன் ரூமின் கதவை அடைக்கத் துளசிக்கு என்னமோ போல் ஆனது, வெற்றிவேலை திரும்பிப் பார்க்க அவன் சாதாரணமாகப் படுத்துக்கொண்டான் தனக்குத்தான் அப்படி தோன்றுகிறதோ அவர்கள் சாதாரணமாகத்தான் நடந்துகொள்கிறார்களோ என்று எண்ணியவள் தலையை உலுக்கிக்கொண்டு திரும்பிப் படுத்தாள்.
சிறிது நேரத்தில் அவளைப் பின்னிலிருந்து அணைத்தான் வெற்றிவேல் சட்டென்று துள்ளி எழுந்தாள் துளசி “என்ன” என்றான் மெதுவாக.
“நாம ரூமுக்குள்ள படுத்திருக்குல எப்படிவேனா இருக்கறதுக்கு” என்றவள் குரலே ஒரு ஒவ்வாத தன்மையோடு இருக்க “சரி சரி, சத்தம் போடாத அவங்களுக்கு கேக்கும்” என்றவன் அமைதியாகப் படுத்துக்கொள்ள அவளுக்கு அப்படியே சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.
காலண்டரில் சிரித்துக்கொண்டிருந்த பிள்ளையாரை பார்த்தவள் “இன்னும் எண்ணலாம் வெச்சிருக்கீங்க எனக்கு ஏன் இபப்டி ஒரு வாழ்க்கை வேண்டாம்னு தானே போய்க் கிணத்துல குதிச்சேன் அப்படியே விட வேண்டியதுதானே காப்பாத்தி ஏன் இப்படி தினம் தினம் சாவடிக்குற” என்றாள் ஆற்றாமையோடு.
வெகுநேரம் விழித்தே கிடந்தவள் எப்பொழுதோ உறங்கிபோனாள் அதிகாலையே உறக்கம் தெளிந்துவிட்டது துளசிக்கு, பேன் மட்டும் ஓடிக்கொண்டிருக்க மிகவும் புழுக்கமாக இருந்தது எழுந்து பார்க்க ஐந்து முப்பது அதற்குமேல் உறங்கமுடியவில்லை பாத்ரூம் சென்றுவந்தவள் குளிக்கலாம் என்று பார்க்கக் கொண்டுவந்த அவளுடைய பைகள் உள்ளே அந்த இடுக்கு சந்து இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பெட்ரூம் கதவைத் திறக்காமல் அங்கே போக முடியாது தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டாள் இவர்கள் எபோழுது எழுவது நான் எப்பொழுது குளிப்பது என்று, கிட்சேன் சென்று பார்க்க ஒன்றுமே இல்லை டீதூள் சக்கரை ஜாம் அதுமட்டுமே அதோடு இரண்டு மூன்று பாத்திரங்கள் மட்டுமே”.
சீர் பொருட்களாக வேண்டாம் என்று முன்பே சொல்லியிருந்தனர் அதற்க்கு காரணம் இடம் போதாமை என்று அப்பொழுது புரியவில்லை, வெற்றிவேல் கையிலே கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டார் சாந்தா.
இரவு வெண்மதி கூறியது நினைவு வந்தது “ரிசப்ஷன் முடிஞ்சு வந்து தேவையான மளிகை சாமான் பாத்திரம் எல்லாம் வாங்கிக்கலாம் அதுவரைக்கும் எங்க வீட்டிலேயே சாப்பிடுங்க, இங்க சமைக்க வேண்டாம் சமைக்கவும் முடியாது பொருள் எதுவும் இல்லாம எப்படி சமைக்க” என்று கேட்டிருந்தாள்.
சரியான உறக்கம் இல்லை தலை வலித்தது, டி போடலாம் என்று பார்க்கப் பால் இல்லை முதல் நாள் மாலை வாங்கிய பாலில் மிச்சமிருந்தததை தான் இரவு டீப்போட்டுக் குடித்திருந்தனர்.
நேரம் ஏழரையை தொட்டு நின்றது வெற்றிவேல் அப்பொழுதுதான் எழுந்தான் துளசி ஹாலின் மூலையில் காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள் “எழுந்துட்டியா” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் அப்படியே அமர்ந்திருக்க.
“என்ன” என்றான் அவளிடம்.
“எனக்குக் குளிக்கணும் துணியெல்லாம் உள்ள இருக்கு” என்றாள் ஒருவித எரிச்சல் பரவியது அவளுள்.
“நேத்து ஒருநாள் தானே இன்னைக்கு அவங்க போய்டுவாங்க அதுக்குள்ள என்ன, ஒரு நாள் உங்கவீடுன்னா அட்ஜஸ்ட் பண்ண மாட்டியா, நைட் இங்கதான் படுப்போம்னு தெரியும்ல ட்ரெஸ் எடுத்து வெச்சிருக்கவேண்டியது தானே” என்றான்.
அவனிடம் வாதாட அவள் விரும்பவில்லை பல் தேய்த்து வந்தவன் “பால் வாங்கிட்டுவரேன்” என்று வெளியில் சென்றான், அப்பொழுதுதான் மாமியார் மாமனாரும் வெளியில் வந்தார்கள் அவர்கள் பல் தேய்க்கும்வரை அமைதியாக இருந்தவள் துணியை எடுத்துக்கொண்டு குளியலறை உள் நுழைந்தாள்.
குளித்து வந்தவள் சாமி கும்பிடலாம் என்ற எண்ணத்தோடு சுற்றிலும் பார்த்தாள் அப்பொழுதுதான் அவளுக்கு ஒரு விஷயம் நினைவு வந்தது நேற்று இந்த வீட்டிற்குள் நுழைந்து அவள் விளக்கேற்றவே இல்லை, ஹாலின் ஒரு பக்கம் சிறிய ஷெல்ப் இருந்தது அதில் பிள்ளையாரும் லக்ஷ்மியும் மட்டும் இருந்தனர்.
அருகில் சென்று பார்க்க மொத்தமாகத் தூசியாக இருந்ததது சிறிய விளக்கு ஒன்று என்னைக் கழுகியே வருடம் பல ஆகிறது என்றது, அந்த ஷெல்ப்பை சுத்தம் செய்துவிட்டு விளக்கைத் தேய் தேய்யென்று விளக்கிக் கொண்டுவந்தாள் அந்தோ பரிதாபம் எண்ணெய் திரி ஒன்றுமில்லை விழிகளை மூடித் தன்னை சமன்படுத்தியவள் அப்படியே கிட்சேன் சென்று டீ வைத்துக் கொடுத்தாள்.
“வெற்றி… நீ துளசியை கூட்டிட்டு கோவிலுக்குப் போயிட்டு அப்படியே வெளில எங்கயாவது போயிட்டு வாங்க, வெண்மதி நேத்தே சொல்லிட்டா மத்தியானம் உங்களுக்கு அவ வீட்டுலதான் விருந்துன்னு நாங்க குளிச்சுட்டு அங்க போயிடுறோம் நீங்கப் பொறுமையா வாங்க” என்றார் விஜயலக்ஷ்மி.
“சரிம்மா” என்றவன் குளித்துக் கிளம்பி வரத் துளசி சாதாரணமாக ஒரு சுடிதார் அணிந்துகொண்டாள் அவனுடைய பழைய பைக் வெளியில் நின்றிருந்ததது முதலில் கோவிலுக்கு அழைத்துச்சென்றான் வெளியில் மல்லிப்பூ விற்பதை பார்த்ததும் மனது அடித்துக்கொண்டது முயன்று விழிகளைக் கட்டுப்படுத்தி அவனுடன் நடந்தாள்.
“ஏதாவது வாங்கணுமா” என்றான்.
“சாமிக்கு அர்ச்சனைக்கு வாங்கணும்” என்க அதை மட்டும் அவளிடம் வாங்கிக்கொடுத்தான் கோவிலிலிருந்து வெளியில் வந்ததும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டனர்.
“நிறைய நேரம் இருக்கு துளசி சினிமாவுக்கு போலாம்” என்றான், அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை எதனோடும் ஓட்ட முடியவில்லை, காலை அவளுடைய நிலையைப் புரிந்துகொள்ளாமல் எப்படி கோவப்பட்டான்.
இவன் என் வீட்டிற்கு வந்தால் இப்படியா நடந்துகொள்வார்கள் எனக்கு இந்த வீடும் மனிதர்களும் புதிதுதானே அதை ஏன் இவன் புரிந்துகொள்ளவில்லை, என்னை இவர்கள் யாருமே ஒரு மனித ஜீவியாக நினைக்கவில்லையா என்று மனம் நொந்தாள்.
தியேட்டர் உள்ளே சென்று அமர்ந்துவிட்டார்கள் பெரிதாகக் கூட்டமில்லை, அவன் படத்தில் ஒன்றிவிட்டான் வெற்றிவேல் சரியான சினிமா பைத்தியம் அவனுக்கு உணவு கிடைக்கிறதோ இல்லையோ எந்த நேரமும் சினிமா வேண்டும் துளசிக்கு சினிமாவும் பிடிக்கவில்லை.
எப்பொழுது சினிமா தீரும் வீட்டிற்கு போகலாம் என்று பார்த்திருந்தாள் துளசி, சரியான உறக்கம் இல்லாமல் ஏதோ போல் இருந்தது.
“சினிமா பிடிக்குமா துளசி” என்ற தமிழின் குரல் செவியை நிறைத்தது.
“ஹ்ம்ம்… ஆனா அதிகம் பாத்ததில்லை ஒரு அஞ்சு பார்த்திருப்போம் எப்போவாவது அப்பா கூட்டிட்டு போவாங்க” என்றிருந்தாள் அப்பொழுது.
“கல்யாணத்துக்கு அப்பறம் நாம போலாம்… சரி ஹீரோ யார் பிடிக்கும் என்ன சாப்பாடு பிடிக்கும்” என்று அவளை முழுதாகத் தெரிந்துகொண்டிருந்தான், காலையில் ஹோட்டலில் சாப்பிடும்போதுகூட உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்கவில்லை வெற்றிவேல், அவனுடைய விருப்பங்கள் எல்லாம் அவளிடம் வலுக்கட்டாயமாகச் சொல்லிச் சொல்லி திணிக்கப்பட்டது.
வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள் மனதுக்கு பிடித்த திருமணமாக இருந்திருந்தால் உறக்கம் இருந்திருக்காது இரவுகள் இனிமையாகவும் பகல் கனவுகளைச் சுமந்தும் சென்றிருக்கும், பிடித்தவனுடன் வந்திருந்தால் இந்த எரிச்சலும் பிடித்தமின்மையும் தோன்றியிருக்காது.
அப்படி யோசிப்பதும் தவறுதானே இதுதானே வாழ்க்கை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்று எண்ணிய நொடி அவளையும் மீறி ஒரு கேவல் வெடித்தது, எத்தனை முயன்றும் கண்ணீர் கரை உடைத்தது இது எதுவும் அறியாமல் திரையில் லயித்திருந்தான் வெற்றிவேல் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள்.
ஒரு வழியாகச் சினிமா முடிந்து வெளியில் வர நேரம் இரண்டு மணியை நெருங்கியிருந்தது “அக்கா வீட்டுக்குப் போகலாம்” என்று அழைத்துச் சென்றான், அந்தத் தெரு கொஞ்சம் பெரிதாக இருந்ததது அப்பார்ட்மெண்ட் கீழ்த்தளத்தில் முதல் வீடு அவர்களுது கார் நின்றிருந்ததது பார்க்கிங்கில்.
“மாமாவோட கார்” என்றான் கடந்து உள்ளே செல்லும்போது, வீடு கொஞ்சம் பெரிதாக இருந்ததது இரண்டு படுக்கை அறை ஆனால் எங்கும் பொருட்களும் துணிகளும்… துவைத்து மடிக்காமல் இருக்கும் துணி ஒருபக்கம் துவைத்து காயப்போட்ட துணி ஹாலின் ஒரு மூலையில் ஸ்டாண்டில் இருந்ததது.
டைனிங் டேபிள் முழுதும் ஸ்னாக்ஸ்… பொருட்கள் இறைந்து கிடந்தது படுக்கை விரிப்புகள் கசங்கியே கிடக்க அடுக்களையில் சிங்க் நிறைய பாத்திரமும் காய் நறுக்கிய வேஸ்ட்டும் எண்ணெய் பிசுக்கும்… முகம் மாறாமல் இருக்க தலையைக் குனிந்து அமர்ந்துகொண்டாள்.
“வா துளசி… வாடா” என்ற வெண்மதி “உக்காருங்க லஞ்ச் ரெடி சாப்பிடலாம்” என்றாள்.
“மாமா” என்று அவன்மீது பாய்ந்த நதியாவும் காவ்யாவும் “எங்க மாமா போன தாத்தா பாட்டி காலைலயே வந்துட்டாங்க நீ இப்போதான் வர” என்க.
“கோவிலுக்குப் போயிட்டு சினிமா போனோம்டா” என்றதும் அவன் மீதிருந்து துள்ளி இறங்கிய நதியா கண்ணாடி கப்பை எரிந்து உடைத்தாள்.
“எங்களை விட்டுட்டு ஏன் போனா எப்போவும் எங்களைக்கூட்டிட்டு தான போவ, இவங்க வந்ததும் எங்களை விட்டுட்டு போய்ட்ட” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள், பத்து வயது பெண்ணின் இந்தப் பரிமாணத்தில் பதறி எழுந்து நின்றுவிட்டாள் துளசி.
“நதியா சும்மாயிரு மாமாக்கு கல்யாணம் ஆயிருக்கு அதான் அத்தையோடு போயிட்டு வந்திருக்கான் அடுத்த தடவ உங்களையும் கூட்டிட்டு போவான்” என்று ஒன்றுமே நடக்காததை போல ராஜேஷ் உடைந்த கண்ணாடியை எடுத்துக்கொண்டிருந்தான்.
“அது எப்போவும் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுதான் வெளில போவான் இன்னைக்கு விட்டுட்டு போய்ட்டான்னு கோவம்” என்ற விஜயலக்ஷ்மி “வெற்றி கூட்டிட்டு போய் ஏதாவது வாங்கிக்குடு” என்க.
அவனும் அவர்களை அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் ஜூஸ் அனைத்தும் வாங்கி வந்தான்.
“சரி முதல்ல சாப்பிடுங்க” என்ற வெண்மதி டைனிங் டேபிளில் இருந்த அனைத்தையும் அப்படியே ஒரு ஓரமாக நகர்த்திவிட்டு இரண்டு தட்டு வைத்தாள் தாய்க்கும் தந்தைக்கும்.
“நாம எல்லாரும் கீழே ஒக்காந்துக்கலாம்” என்க, துளசியும் அமர்ந்துகொண்டாள் குக்கர் சாதத்தை தட்டில் போட்டு வெண்டைக்காய் சாம்பாரை அதன் மீது ஊற்றியவள் ஒரு அப்பளத்தையும் கொஞ்சம் சேனைக்கிழங்கு வருவலையும் வைத்து “சாப்பிடு துளசி” என்க.
‘துளசிக்கு உண்மையிலே புரியவில்லை இதுதான் விருந்து சாப்பாடா’ என்று அவள் விழிகள் நம்பாமல் பார்த்தது ‘ஏன் தலைவாழை இலை போட்டுப் பத்து பதார்த்தம் வெச்சு சாப்பாடு போட்டா வழிச்சு திம்பியா, உனக்கு விருந்து வேணுமா’ என்றது மனசாட்சி.
‘எனக்குச் சோறே வேண்டாம் இப்படியே உசிர் போனா போதும், ஆனாலும் விருந்து இப்படியா போடுவாங்க… என்னை விடு அவங்க தம்பிக்கு இப்படியா விருந்து’ என்ற எண்ணத்தோடு அவனைத் திரும்பிப் பார்க்க “வறுவல் சாம்பார் சூப்பர்க்கா” என்றான்.
“அட அற்ப பதரே” என்று பார்த்தவள் அமைதியாக உண்டாள் அவள் முடித்துவிட “தயிர் போட்டுக்கோ துளசி” என்றாள் வெண்மதி.
“வேண்டாம் சாப்பிட முடியல” என்று எழுந்துகொண்டாள் கொஞ்சம் இடம் கொடுங்கள் சாய்த்துக்கொள்கிறேன் என்று கெஞ்சியது உடல் அன்று மாலை மாமனாரும் மாமியாரும் பாண்டிச்சேரி புறப்பட்டுச் சென்றனர்.
ரிசப்ஷனுக்கு மூன்று தினங்கள் இருந்தது காலையிலிருந்து பார்கவி நிறைய முறை அழைத்துவிட்டாள், ஆகையால் அவளை அழைத்தவள் “நல்லா இருக்கேன் தூங்க போறேன்” என்றதோடு வைத்துவிட்டாள்.
“நைட் வெளில சாப்பிடலாமா இல்ல அக்கா கிட்டயே சாப்பிடலாமா” என்றான் வெற்றி.
“எனக்குப் பசியில்லை வேண்டாம்” என்றாள் அவள்.
“அவங்க என்ன நினைப்பாங்க வந்து ஒரு வாய் சாப்பிடு” என்றவனை என்ன சொல்ல என்றே தெரியவில்லை அவளுக்கு.
“ரொம்ப தலை வலிக்குது தூங்கணும் இப்போ சாப்பிட்டா வாமிட் பண்ணிடுவேன்” என்றாள் மெல்ல.
“சரி நீ தூங்கு நான் அக்கா வீட்டுக்குப் போறேன்” என்றவன் வெளியில் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டான் மருந்து, எதுவும் வேண்டுமா தைலம் வேண்டுமா எதுவும் கேட்கவில்லை, உறங்கிவிடு துளசி மனதிலிருந்து எல்லாவற்றயும் எல்லோரையும் தூக்கி எறிந்துவிடு என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் கட்டிலில் சென்று படுத்தாள்.
“நேத்து பேசும்போது உன் குரலே சரியில்ல அதான் உடம்பு சரியில்லயோன்னு பாக்க வந்தேன்” என்று ஒரு கையில் பழங்களும் மறு கையில் பார்சல் செய்த சூப்பும் பிடித்து நின்றவனின் நினைவுகள் மனதை அழுத்த வாய்விட்டுக் கத்தி அழுதாள் துளசி
error: Content is protected !!