Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒளி சிந்தும் இரவு

ஒளி சிந்தும் இரவு 20.2

முல்லை உள்ளே வர, கதவை தாழிட்டான் அன்பரசு.

   இன்று முதலிரவு இல்லை என்பதாய் அன்பரசு சொல்லியிருந்ததால் சற்று இயல்பாகத்தான் இருந்தாள் முல்லை. “பால் சாப்பிடுறிங்களா?” என்றாள்.

   “ம்ஹும்… எனக்கு அந்த பழக்கமில்ல. நீ குடி. இரண்டு இட்லியும் ஒரு தோசையும்தான சாப்பிட்ட”

   “ரொம்ப சூடா இருக்கு, அப்புறம் குடிக்கிறேன்” என்று டேபிளில் வைத்தாள் பால் சொம்பை. பின்னே இயல்பாய் கட்டிலில் அமர்ந்து, ஐந்து நிமிடம் போல் அறையை நோட்டமிட்டு ரசித்த பிறகு “எனக்கு உங்ககிட்ட பேசனும். உங்களுக்கு பேக் பண்ற வேலையேது இருக்கா?” என்றாள்.



Advertisement

   காலைலயிருந்து படுத்துனது பத்தாம, இப்போ வேற தனி கெட்டப்ல வந்து படுத்துறாளே… இவளை தொடாம கிளம்புவோமா என்று மனம் தள்ளாட்டத்திற்குள்ளாக, வேணாம்டா அன்பு. அப்புறம் திரும்பி வர வரைக்கும் உனக்குத்தான் கஷ்டம் என மனதை திடப்படுத்தி “இல்ல, என்ன பேசனும்?” என்று தானும் அமர்ந்தான் அருகே.

   “நேத்து நைட், இன்னைக்கு காலைல நான் நல்லா இருந்தேனா? உங்களுக்கு பிடிச்சிருந்ததா?” என்றாள் ஆர்வமாக.

   “அதென்ன நேத்து நைட், இன்னைக்கு காலைலனு? எப்போவுமே நீ நல்லாத்தான் இருக்க”

Advertisement

      “ப்ச் அதில்லங்க. நான் என்னோட மேக்கப்பையும், பட்டுசாரி நகைகளையும் சொன்னேன். எல்லாம் அம்மாவோட சாய்ஸ், எல்லாம் புது நகைதான். ஆனா பழைய மாடல். ரொம்ப ஆர்வமா செலக்ட் பண்ணினாங்க. எனக்கும் பிடிச்சிருந்ததுதான். ஆனா உங்களுக்கு பிடிக்காதோனு புது மாடல் எடுக்கலாம்னு சொன்னேன். இந்த நகைகள் போட்டா இளவரசி மாதிரி இருப்பே முல்லைனு ரொம்ப ஆசையா சொல்லவும் என்னால மறுக்க முடியல.

Advertisement

   நீங்க இப்போ ட்ரண்ட்ல எதிர்பார்த்திங்களா? காலைல என்னை பார்த்ததும் என்னடா இப்படி வந்துருக்கானு ஏமார்ந்துட்டிங்களா?” என்றாள் தவிப்பாக.

   “எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ராணி மாதிரி இருந்த” என்றான் உண்மையாக.

   “உண்மையை சொல்லனும். அப்போ ஏன் காலைல ஏதும் சொல்லல?”

Advertisement

   “ஹே… அத்தனை பேர் முன்ன என்ன சொல்றது? முக்கியமா என் மகள் வேற பக்கத்துலயே இருந்தா”

   “ஆமாம்ல?” என சமாதானமாகி, “என் மகள் சொல்லக்கூடாது, நம்ம பொண்ணு சொல்லனும்” என கண்டித்து, “இந்த மருதாணி கூட அம்மா வச்சி விட்டதுதான். இதாவது பார்லர்ல போட்டுக்கட்டும், அவங்க இப்போ மாடல்ல போடுவாங்கனு அப்பா சொன்னார். அம்மா கேட்டாதான?

    எத்தனை கோண் வந்தாலும் மருதாணிக்கு ஈடாகாது. அதில்லாம உடல் சூட்டையும் தணிக்கும்னு அம்மாவே மெனக்கெட்டு போட்டுவிட்டாங்க” என்று தனது கைகளையும், கால்களையும் திருப்பி திருப்பி காண்பித்து, “மோந்து பாருங்களேன், இன்னும் ஸ்மெல் இருக்கு” என்று அன்பரசு நாசி அருகே உள்ளங்கையை காட்டினாள்.

   இவளின் பாவனையில் அன்பரசின் திடமெல்லாம் குறைந்து கொண்டிருக்க, “மோந்து பாருங்க” என்றாள் மீண்டும்.

   நேரம் பார்த்தான். பத்து மணி ஆகியிருக்க, பத்து மணிதான? என நினைத்தவன் அவளின் கையைப் பற்றி தனது மூக்கோடு அழுத்தி வைத்து ஆழ்ந்து வாசம் பிடிக்க, அவனின் மீசை உள்ளங்கையை குறுகுறுக்க செய்ய, இன்ப அவஸ்த்தையை தாள முடியாமல் கையை உருவ முயன்றாள்.

    விடாமல் பற்றியவன் “மருதாணி கை, கால்ல மட்டும்தான் வச்சியா?” என்றான் மயக்கத்தோடு.

    “அங்க மட்டும்தான வைக்கனும்?” என இவள் சங்கடத்தோடு முணுமுணுக்க, “அப்போ வேற எங்கேயும் வைக்கலயா? அப்புறம் எப்படி இங்கெல்லாம் சிவக்குது?” என்று கன்னத்தை வருட, “நீங்க… நீங்க கிளம்பனும்ல?” என்றாள் திணறலோடு.

   “ம் கிளம்பனும்தான்” என பெருமூச்சிழுத்தவன், “நீ எதோ உன் பிரச்சனையை ஷேர் பண்ணுவனு நினைச்சேன். ஆனா இப்படி பார்ட் பார்ட்டா காட்டினா எப்படி கிளம்ப?” என எழுந்தவன் விளக்கணைத்து அருகே வந்தான்.

   “நான் என்ன காட்டினேன்? மருதாணிதான?” என்றவளை அணைத்து “நீ மருதாணிதான் காட்டின. ஆனா எனக்கு மத்ததையும் பார்க்க தோணுதே” என்றவனின் ஒருகை புடவைக்குள் அவளின் வயிற்றையும், மற்றொரு கை இதழையும் வருடியது.

   மதியம் முத்தமிட்டவன் கைகள் முன்னேறும்போது சுகந்தி வந்ததும், அதனால் அன்பரசு சலிப்பானதும், மாலை கோவிலில் ரசித்து வாழ வேண்டும் என்றதும் மாறி மாறி நினைவில் வர, மறுக்கவா? அனுமதிக்கவா எனப் புரியவில்லை முல்லைக்கு.

   முல்லையின் தவித்த முகம் கண்டு, “வேணும் வேணாம்னு மாத்தி பேசி கஷ்டப்படுத்துறேனா?” என்றான்.

   ஆமாம் என தலையசைத்து உடனே இல்லை என தலையசைக்க, “ஆனா இப்போ வேணும்னு பிடிவாதம் செய்யுதே மனசு” என்றான் தாபமாக.

   “அப்புறம் கிளம்பின பின்ன உங்களுக்கு கஷ்டம்” என்றவளின் மேனியில் அன்பரசு கை அழுத்தமாய் முன்னேற, முல்லை பேச்சு தன்போல் நின்றது.

   மனைவியை மெத்தையில் சரித்து நெருங்கியவன், “அதைவிட கஷ்டம் இப்போ என்னை நானே கண்ட்ரோல் பண்றது. முல்லையை சூடியே தீரணும். இப்போவே” என்று புடவையை அகற்ற, அன்பரசின் தாபக் குரலுக்கு மறுக்கவும் முடியாமல், வெட்கத்தை தவிர்க்கவும் முடியாமல் மெத்தையை இறுகப் பற்றிக்கொண்டு கண்மூடினாள் முல்லை.

   இதழில் முத்தமிட்டு, “இப்படிலாம் தாராளம் காட்டினா முரடனாகிடுவேன் முல்லை. அப்புறம் உனக்கு ரொம்ப கஷ்டமாகிடும். கண்ணைத் திறந்து என்னை கண்டிச்சு வை” என்றவனின் அடுத்தடுத்த செயல்கள் முல்லையின் கண்களை மேலும் இறுக மூடச்செய்ய அன்பரசின் கண்கள் விழாக்கோலம் பூண்டது.

   “குண்டுமல்லி… நீ பூந்தோட்டமா? இல்ல பழத்தோட்டமா?” என்று முகர்ந்த படியும் சுவைத்த படியும் அன்பரசு கேட்க, வெற்றுடம்பிற்குள் உயிர் வந்ததை போன்றொரு பிரம்மை முல்லைக்கு.

   மனைவியின் அற்புதங்களை ஒன்று விடாமல் ரசித்து படிக்க, இறுதியில் பெண்மையின் நாணத்தை ஆண்மை வெல்ல, மெத்தையை பிடித்திருந்த முல்லையின் கைகள் அன்பரசின் தோள்களைப் அழுத்தமாக பற்ற, மனைவியின் அங்கங்களை அன்பால் ஆட்சி செய்யும் அரசனானான் அன்பரசு.

   தேக செழிப்பில் பிரம்மித்து முல்லையினுள் மூழ்கி, தாபம் தணிந்து விலகியவன் முல்லையை தன்னோடு அணைத்துக்கொண்டான் இறுக்கமாக.

   நிறைந்த காதலோடான கூடலென்றாலும் அது கொடுத்த சுகமான வலி சொட்டு கண்ணீராய் வெளிக்கிளம்பி அன்பரசின் கைகளில் படவே “ஹே” என பதறி விளக்கை போட எழ முயற்சித்தான்.

   “ம்ஹும்” என்று கணவனை பிடித்த முல்லையின் கண்கள் இன்னும் கூட திறக்கவில்லை.

   கஷ்டப்பட்டிருக்கிறாள் என்று அன்பரசுக்கு புரிய, “லைட் போடத்தான் எழறேன்” என்றான் கனிவாக.

   “எப்படி இருக்கோம்? லைட் போட எழறிங்க” என்றாள் உயிரை திண்ணும் வெக்கத்தோடு.

   “நைட் லேம்ப்தான் போடறேன்” என மீண்டும் எழ “வேண்டாமே” என்றாள் கண் திறந்து.

   இருளை நிறைத்திருக்கும் அறையில் நட்சத்திரமாய் மனைவியின் கண்கள் ஒளியை தர, வெக்கத்தில் சிவந்திருந்த முகம் அன்பரசுக்கு பெருத்த நிம்மதி கொடுத்ததோடு முதல் உறவிற்கான நிறைவையும் கொடுக்க, காரிருளில் ஒளி தரும் தேவதையாய் ஜொலித்தாள் அன்பரசுக்கு.

   மனைவியோடு நெருங்கிப்படுத்தவன், “கண்ணுதண்ணி கைல படவும் பயந்துட்டேன்” என்றான்.

   முதல் கூடல் அதீத வெக்கத்தை கொடுத்தபோதும், அன்பரசின் பயம் போக்க எண்ணி, “எதுவுமே முன்னாடியே யோசிக்கமாட்டிங்களா?” என்றாள் கோபம்போல்.

    “ஏன் அப்படி கேக்குற?”

   “இல்ல… முதல்ல என்னை வேணாம்னு சொன்னிங்க, அப்புறம் திடீர்னு என்னை கேட்டு வந்துட்டிங்க. அப்புறம் கல்யாணம் ஆறு மாசம் கழிச்சு சொன்னிங்க, ஆனா ஒரே மாசத்துல கல்யாணம் செய்துகிட்டிங்க. இன்னைக்கு இது வேணாம்னு கோவில்ல வச்சு சொன்னிங்க, ஆனா” என சிணுங்கலோடு போர்வையால் தன் முகத்தை மூட, சொக்கிப்போனான் அன்பரசு.

   “அச்சோ என்ன பண்றிங்க?” என முல்லை தவிக்க, “ஒன்னும் பண்ணல. கொஞ்ச நேரம் இப்படி இரு” என்று தன் மேலுள்ளவளை அணைத்தான் காதலாக.

   இவள் நெளிய, “ரொம்ப நெளிஞ்ச அப்புறம் இடையில இருக்கிற பெட்சீட்டை எடுத்துடுவேன்” என மிரட்ட சிலையானவளைப் பார்த்து சிரித்தவன் “உனக்கு என்மேல கோபமே வரலையா?” என்றான் உண்மையாக.

   “முதல்ல என்னை வேணாம்னு சொல்லவும் ரொம்ப வேதனைபட்டேன், அன்னைக்கு கோவில்ல எதுக்கு அழறனு கேட்கும்போது வேணாம்னு சொல்லிட்டு அக்கறை மட்டும் காட்டுறானு கோபம் வந்தது.

   ஆனா பொண்ணு நான்னு தெரியாமலே ரிஜக்ட் பண்ணியிருக்கிங்கனு அன்னைக்கு என்னை கேட்டு வந்தப்போ சொன்னதும் கோபம் போய்டுச்சு. அதோட எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்காகவும், வீட்டுக்கே வந்து என் அப்பாக்காகவும் பேசினதாலோ என்னவோ பழைய கோபம் அன்னைக்கே மறந்து போச்சு”

   வீட்டிலிருந்தால் அதிகம் தன்னை தேடுவாள் என “உனக்குனு தனிப்பட்ட ஆசை எதாவது இருக்கா? சாயங்காலம் எல்லார் முன்னவும் சொன்னதையே இப்போவும் சொல்லக்கூடாது. என் அத்தை மாமாவை எப்படி பார்த்துக்கனும்னு எனக்கு தெரியும்” என்றான் கட்டளையாக.

     அன்பரசு பிடி தளர்ந்திருக்கவே அவன் மேலிருந்து விலகிப் படுத்து “இன்டர்வியூ பண்ற நேரமா இது? என்னை ஃபீல் பண்ண விடுங்களேன்” என்றாள் வெக்கத்தோடு.

     மனைவியின் வெட்கம் கணவனை மொத்தமாய் சாய்க்க, “குண்டுமல்லி” என நெருங்கிப் படுத்து, “இப்படிலாம் என்னை படுத்தக்கூடாது. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் கிளம்பனும்” என்று கெஞ்சலாக சொல்லி, “எழுந்து டிரஸ் போடு. அப்போதான் உன்கிட்டயிருந்து என்னால தப்பிக்க முடியும்” என்றான் ஏக்கத்தோடு.

   “எழாம இப்படியே இருக்கனும்” என போர்வையால் அன்பரசு முகத்தை போர்த்திவிட்டு எழுந்தவள் சற்று நேரத்திலேயே உடையணிந்து, “இப்போ நான் படுத்துக்கிறேன், நீங்க டிரஸ் பண்ணிட்டு லைட் போட்டுவிடுங்க” என்றதும், அறை வெளிச்சத்தால் நிரம்பியது.

   அச்சோ என முல்லை கண்களை கை கொண்டு மூட, சிரித்தவன் கையை விலக்கி விட்டு “வந்து உக்கார்” என்றான்.

   “அப்போ டிரஸ் பண்ணும்போது” என முறைக்க முயன்று முடியாமல் கட்டிலில் படுத்து முகத்தை மூட, “அதான் வேஷ்டி கட்டியிருக்கேனே… அப்புறம் எதுக்கு முகத்தை மூடுற? நான் எழலைனா அங்கங்க சிதறி கிடந்த உன்னோட டிரஸ் எப்படி உன் கைக்கு ஒரே இடத்துல கிடைச்சிருக்கும்?” என்றான் சிரிப்போடு.

   “உங்களுக்கு மட்டும் எப்படி கண்ணு தெரிஞ்சது?” என சிணுங்க, “நீ கண்ணை உருட்டி உருட்டி டிரஸ்சை தேடும்போது உன் கண்ணுலயிருந்த வந்த வெளிச்சத்தை வச்சுதான் டிரஸ் எடுத்து கொடுத்தேன். இது நமக்கான முதலிரவு மட்டும் இல்ல, ஒளி சிந்தும் இரவும் கூட” என்றான் காதலாக.

   தன்னை பார்த்தவாறு எடுத்துக் கொடுத்திருக்கிறான் என முல்லை முகம் கோவைப்பழமாய் சிவக்க, தற்போது கிளம்பும் சூழ்நிலையை வெறுத்தவன், மனைவியின் நிலை என்னவோ என, “இப்போ நான் கிளம்பனுமே, என்மேல கோபம் வரலையா?” என்றான்.

   “வருது. ஆனா எனக்காவது இங்க இத்தனை பேர் இருக்காங்க, நீங்க தனியா ட்ராவல் பண்ணனும். அங்க ஷுட் முடியும்வரை வீட்டாளுங்களோட இருக்க முடியாது. பேசக்கூட கஷ்டம், என்னை விட நீங்கதான் பாவம். அதனால கோபம் வந்தாலும் தாங்கிப்பேன்” என்றாள் தன்மையாக.

  “இவ்வளோ புரிதல் என்னை பைத்தியமாக்கிடும் முல்லை” என்றவன் இதழோடு இதழ் கலந்து விடுவித்து, குளியலறை புகுந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!