Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை❤️ 11(இரண்டாம் பாகம்)

சுபா அர்ஜுனனுடன் இருந்தாள் தான்… ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை…. அவனுக்கான அனைத்து வேலையும் அவள் தான் செய்தள்…..ஆனால் பேசவில்லை அவன் பேச முயன்ற போதும் அமைதியாக இருந்துவிட்டாள்…. அவனும் கேட்டு கெஞ்சி என காலில் விழுவதை தவிர்த்து அனைத்தும் செய்து பார்த்துவிட்டான்…. அவள் அசையவே இல்லை…



Advertisement

உணவு உண்ணாமல் மாத்திரை சாப்பிடாமல் என அனைத்தும் செய்து பார்த்துவிட்டான்…. உணவு உண்ணாமல் மாத்திரை சாப்பிடாமல் இருந்தால் அதை கையில் வைத்து கொண்டு எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் நின்று இருப்பாள்… ஆனால் அந்த இடத்தை விட்டு நகரவே மாட்டாள்….

Advertisement

ஒருமுறை அப்படி தான் வீட்டில் யாரும் இல்லை…. இவள் உணவு கொண்டு வந்து ஊட்ட பார்க்க அவன் வாயே திறக்கவில்லை சாப்பிட “நீ எப்போ பேசுறியோ அப்போ தான்டி நான் சாப்பிடுவேன்…பழிவாங்குறல நீ… பாத்துக்கலாம் நீயா நானானு” என்று அவளிடம் கோவமாக கூறிவிட்டு உறங்கிவிட்டான்….

Advertisement

அவன் நன்றாக தூங்கிவிட்டான்…. ஒரு மணிநேரம் கழித்து தான் எழுந்தான்… அவன் எழுந்த போது அவன் உறங்கும் போது எப்படி நின்று இருந்தாளோ  அப்டியே தான் நின்று இருந்தாள்… கையில் உணவை வைத்து நீட்டிக் கொண்டே…. அவள் கை வலித்தாலும் அப்டியே வைத்து இருந்தாள்…. கண்களில் அவளின் வலி அப்படி தெரிந்தது…. ஆனால் அழுகவில்லை அவள்…. அவன் அதிர்ந்தே விட்டான்….

Advertisement

“அம்மு என்ன பண்ணிட்டு இருக்க… இவ்வளவு நேரமும் இப்படியே தான் இருந்தியா நீ… பைத்தியக்காரி…. ஏன்டி இப்படி பண்ற… என்னோட அம்மு இப்படி எல்லாம் பண்ண மாட்டா… சொல்ற பேச்சை கேட்பா…. நீ மாறிட்ட அம்மு… ரொம்ப மாறிட்ட… இப்போ என்ன நான் சாப்பிடணும் அவ்வளவு தானு… உன்மேல சத்தியமா சாப்பிடுறேன்… போய் வேற சாப்பாடு எடுத்துட்டு வா… இல்லனா இதுவே ஊட்டு” என்று கூறினான்… ஆனால் அவள் அசையவே இல்லை….

“அம்மு தம்பி மேலயும் பாப்பா மேலயும் சத்தியமா சொல்றேன்… ஊட்டு… நான் சாப்பிடுறேன்” என்று கூறினான்..

அவள் எதுவும் கூறாமல் வெளியில் சென்றுவிட்டாள் அறையில் இருந்து… உணவை சூடு படுத்தி கொண்டு வந்து அவனுக்கு ஊட்டினாள்… அவனும் எதுவும் கூறாமல் அவளையே பார்த்து கொண்டு உண்டு முடித்தான்…. அவள் சென்று தட்டை வைத்துவிட்டு அவள் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு மாத்திரை குடுக்க வந்தாள்….

மாத்திரை குடுத்தவுடன் அவனும் வாங்கி சாப்பிட்டான்… அவன் சாப்பிட்டவுடன் அறையில் இருக்கும் சோபாவில் அமர செல்லும் போது அவளின் கையை பிடித்து இழுத்து கட்டிலில் அமரவைத்து மடியில் படுத்து கொண்டான்…. அவள் அவனிடம் இருந்து விடுபட போராட அவன் விடவேயில்லை…

அவளின்  வயிற்றில் முகத்தை புதைத்து கட்டிக்கொண்டன்… அவளும் அவனை தள்ளிவிட பார்த்தாள்… ஆனால் இவள் தள்ள தள்ள அவன் மேலும் மேலும் புதைந்து கொண்டே போனான்… பின் சிறிது நேரம் கழித்து அவள் கை தானாகவே அவனின் தலையை கோதி கொடுத்தது…  அவள் தலை கோதி விட ஆரம்பித்தபின் இவன் கண்கள் தானாகவே கலங்கியது…  அவனின் கண்ணீர் அவளின் வயிற்றை நனைத்தது…. இவள் கண்ணீரும் வலிந்து அவன் மேல் விழுந்தது…

சிறிது நேர அமைதிக்கு பின் அவளே பேச தொடங்கினாள்… “நீ போனது எனக்கு பிரச்சனை இல்ல…. ஆனா யார்கிட்டயாவது சொல்லிட்டு போய் இருக்கலாம்ல… உனக்கு எதோ ஆகி இருந்தா எங்களுக்கு யார் மாமா இருக்கா… நீ இல்லாத ஒரு நாளே உன் அக்கா பேசுன பேச்சை என்னால கேட்க முடியல… என்னால முடியல மாமா…. நீ இல்லனா உன் அம்மு இல்ல மாமா…. எங்களை விட்டு போகாத … ப்ளீஸ் நீ எல்லாரையும் சமாளிப்ப தான்….. எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கும்னு தெரியாதே….. என்னிக்கோ ஒரு நாள் தப்பா நடந்தா என்ன பண்ணுவ மாமா… உன்கூட யாரோ இருந்தா பிரச்சனை இருக்காதுல….” என்று அழுது கொண்டே கேட்டாள்….

அவன் எழுந்து அமர்ந்து அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு கன்னத்தை இரண்டு கையாலும் பிடித்து அவள் கண்ணை பார்த்து கொண்டே “ப்ரோமிஸ் அம்மு இனிமே எதோ பிரச்சனைனா நான் யார்கிட்டயாவது சொல்லிட்டு தான் போவேன்…  சொல்லாம போக மாட்டேன்…. சசி அன்னிக்கு கோவில்ல நடந்தது எல்லாத்தையும் சொன்னான்…. கண்டிப்பா அந்த மாதிரி நடக்காது அம்மு…. எப்பயுமே உன்கூட தான் இருப்பேன்….. தனியா போக மாட்டேன்…. வேற யார் கிட்ட சொல்றேனோ இல்லையோ இனிமே உன் கிட்ட எதுவுமே மறைக்க மாட்டேன்…..”  என்று கூறி அவளின் நெற்றியில் முத்தமிட்டான்…..

பின் அவனே “அக்கா என்ன சொன்னாங்க அம்மு… வீட்டுல ஏன் யாரும் எதுவும் என்கிட்ட சொல்லல…. உண்மையா மட்டும் தான் சொல்லனும்… வேற எதுவும் சொல்ல கூடாது…” என்று கண்டிப்பாக கூறினான்….

அவள் அவனை பார்க்காமல் வேறு எங்கேயோ பார்த்தாவாரு அமர்ந்து இருந்தாள்…. அவன் அவளை திருப்பி அவள் கண்ணை பார்த்தாவாறே “என் கண்ணை பார்த்து உண்மைய மட்டும் சொல்லு அம்மு” என்று கூறினான்…

அவள் அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு “மாமா அப்போ பக்கத்துல யாரும் இல்லை…. பாப்பா மூனு பேரு யாதவ் எல்லாரும் அழுதுட்டே இருந்தாங்க… அதுனால கண்மணி மித்ரா பிரியா மூனு பேரும் உள்ள போயிட்டாங்க…. மருதாயி பாட்டி தூங்கிட்டு இருந்தாங்க… ஜனனியும் செண்பகம் அத்தையும் பசங்கல தூங்க வைக்க போயிட்டாங்க… அண்ணாங்க சசி கர்ணன் அப்பா(தேவியின் அப்பா) மாமாங்க எல்லாருமே உன்னை தேட போயிட்டாங்க…. நானும் அம்மாவும்(தேவியின் அம்மா) மட்டும் தான் இருந்தோம்….

நான் அம்மா மேல படுத்துட்டு அழுதுட்டு இருந்தேன்… அப்போ தான் வந்தாங்க…. ‘உன் மேல யாரு எல்லாம் பாசம் வைக்குறாங்களோ அவங்க எல்லாம் உயிரோட இருக்க மாட்டாங்க..  இப்போ அதுல என் தம்பியும் சேர்ந்துட்டானா…. முதல்ல உன் பாட்டி அப்புறம் உன் தாத்தா அடுத்து உன் அப்பா அம்மா, அடுத்து இவங்க பொண்ணு தேவி  இப்போ என் தம்பி அடுத்து என் புருஷன்… அடுத்து உன் சின்ன அண்ணன்னு எல்லாரையும் கொல்ல போறியா…. ஒழுங்கா இந்த வீட்டை விட்டு போயிடு…. என் தம்பியை எப்படியோ மயக்கி இந்த சொத்தெல்லாத்தையும் உன் பேருல எழுதி வாங்கிட்டல…. சரியான மாயக்காரி தான்டி நீ…. ஒழுங்கா இந்த வீட்டை விட்டு போ’னு சொல்லிட்டு இருக்கும் போது யாரோ வர மாதிரி இருந்தது… அதுனால போயிட்டாங்க… நான் அம்மா கிட்ட யார்கிட்டயும் சொல்ல கூடாதுனு என் மேல சத்தியம் வாங்கிட்டேன்” என்று நீளமாக அழுது கொண்டே கூறி முடித்தாள்…

அவள் கூறி முடித்தவுடன் அவனின் உடம்பு இறுகியது….. சுபா தான் “மாமா ப்ளீஸ் எதுவும் கேட்கவேண்டாம்…. நீ எங்க கூட இரு மாமா போதும்” என்று கூறி அவன் நெஞ்சிலேயே தூங்கி இருந்தாள்….. அவனும் கட்டிலில் படுத்து அவளை தன் மேலே சாய்த்து அவனும் உறங்கி இருந்தான்…

இருவரும் நிம்மதியான தூக்கம் தூங்கி பல நாட்கள் ஆகி இருந்தது…. இருவரும் அவர்களின் நெருக்கத்தில் அவர்களின் மற்ற யோசனையை ஒதுக்கி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்கினர்…. யாரும் அவர்களை தொந்தரவு செய்யவே இல்லை…. நாட்கள் காற்றாய் பறந்து இருந்தது….

அர்ஜுனனின் கால் சரியாகி இருந்தது… ஆனாலும் சுபா அவனை அதிக நேரம் நடக்கவும் நிற்கவும் விடுவது இல்லை…. இன்னும் வெளி வேலைகளை காண அவனை அனுமதிக்கவில்லை அவள்… அலைபேசி மூலம் தான் அனைவருக்கும் வேலைகளை கூறி கொண்டு இருக்கிறான்…. அதை சசியோ கர்ணனோ மேற்பார்வை பார்த்து கொண்டனர்….

நாட்கள் இப்படியே செல்ல அர்ஜுனன் வெளி வேலையும் செய்ய ஆரம்பித்து இருந்தான்…. சுபா கண்டிசன் போட்டு தான் அவனை வெளியில் அனுப்பினாள்…. அர்ஜுனனுடன் எப்போதும் ஒருத்தர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்….

அதே போல் அவனுடன் யாரோ ஒருத்தர் இருந்து கொண்டே இருந்தனர்… நாட்கள் ட்ரெயின் போல் மெதுவாக ஓடாமல் ஜெட் போல் வேகமாய் பறந்தது…. அந்த வருடம் திருவிழா ஆரம்பித்த போதே கோவில் முக்கிய தலைவர் ஒருவர் மரணம் அடைந்து இருந்தார்….

அதனால் அந்த வருட திருவிழா நடக்கவில்லை….  ஆனால் மக்கள் கோவிலுக்கு சென்று பூஜைக்கு  குடுத்துவிட்டு தான் வந்தனர்… ஆனால் காலையில் நடக்கும் தலைக்கட்டு பூஜை… இரவு நடக்கும் ரா பூஜை எதுவும் நடக்கவில்லை….

அடுத்த வருடமும் இதே போல் தான் இன்னொரு முக்கியமான நபர் இறந்து இருந்தார் அதுவும் திருவிழா நடக்கும் நாளுக்கு முன்னாடி நாள்…. அதனால் அந்த வருடமும் திருவிழா நடக்கவில்லை….

அனைவரும் என்ன இது அபசகுணம் என்று நினைத்து பயந்தனர்…. யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை….  இனிமேல் என்ன நடக்கும்…..????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!