Skip to content
Post Views: 2,573

இரண்டு வருடம் திருவிழா நடக்காமல் மக்கள் அனைவரும் பயத்திலும் சோகத்திலும் இருந்தனர்…. இரண்டாம் வருட திருவிழா நடக்கும் நாள் முடிந்து இரண்டு மாதம் ஆகி இருந்தது….
நந்தினியின் செயல் நாளுக்கு நாள் மோசமாக ஆகிக்கொண்டே இருந்தது…. சுபாவை வார்த்தையால் குத்தி கிழித்து கொண்டு இருந்தாள்…. அது யாரும் இல்லாத நேரமாக பார்த்து தான் சுபாவை திட்டுவாள்…
சுபா அவள் பேசுவதை கேட்டு அழுகவோ கோவப்படவோ மாட்டாள்…. அமைதியாகவே நிற்பாள்… அதற்கும் திட்டிவிட்டு வீட்டை விட்டு நீ சென்றாக வேண்டும் என்று கூறிவிட்டு செல்வாள்…. அவளுக்கு இந்த பெரிய வீடு வேண்டும்… ஆனால் இந்த வீடு சுபாவின் மேல் உள்ளது…. இந்த வீடு மட்டும் இல்லை… அர்ஜுனன் பேரில் வந்த அனைத்து சொத்தும் அவன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய அனைத்து சொத்தும் சுபாவின் பேரில் தான் உள்ளது… அதுவே நந்தினிக்கு மிகப்பெரிய வயித்தெரிச்சல்….
Advertisement
நந்தினி முதல் தடவை கிரிஜாவின் பேச்சை கேட்டு சுபாவை திட்டிய போதே சொத்தை பிரித்து குடுத்து விடலாம் என முடிவு செய்து விட்டான் அர்ஜுனன்….
அப்போதே அனைவரையும் அழைத்து அனைத்தையும் காட்டி இருந்தான்… பாலா இருப்பதை பார்த்து கொண்டார்.. வேறு எதையும் வாங்கவும் இல்லை.. நஷ்டமும் அடையவில்லை… அர்ஜுனன் வந்தபின் தான் அரிசி மில் லாபத்தில் ஓட ஏற்பாடு செய்தான்… அவர்கள் ஊரின் அருகில் உள்ள மற்ற ஊரிலும் நான்கு ஐந்து அரிசி மில் கட்டினான்… அதே போல் வயல்களில் ஒரே மாதிரியான பயிர்கள் போடாமல் சீசனுக்கு ஏற்ப பயிர்கள் போட்டு அதை இந்தியா முழுவதும் விற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஏற்பாடு செய்து அதை நல்ல முறையில் செய்தான்…
அது மட்டும் இல்லாமல் அவன் படித்த படிப்பிற்கு ஒரு பெரிய கம்பெனி ஆரம்பித்து அவன் தான் அதற்கு ஓனர் என்று யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு நம்பிக்கையான நபரை வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறான்… அது யாருக்கும் தெரியாது… சுபா மற்றும் முகுந்தனுக்கு மட்டும் தான் தெரியும்…
Advertisement
சொத்து பிரிக்கும் போது தான் அவன் கம்பெனி நடத்தி வருகிறான் என்றே அனைவருக்கும் தெரியும்… அதில் நந்தினிக்கு ஒரு சுணக்கம்… அவளிடம் சொல்லவில்லைஏ என… அதுவும் முகுந்தனிற்கு தெரிந்து இருக்கிறது தன் கணவனுக்கு தெரியவில்லையே என்று வேறு ஒரு கோவம்…
Advertisement
சொத்து பிரிக்கும் போது தான் அவன் கம்பெனி நடத்தி வருகிறான் என்றே அனைவருக்கும் தெரியும்… அதில் நந்தினிக்கு ஒரு சுணக்கம்… அவளிடம் சொல்லவில்லைஏ என… அதுவும் முகுந்தனிற்கு தெரிந்து இருக்கிறது தன் கணவனுக்கு தெரியவில்லையே என்று வேறு ஒரு கோவம்….
அதற்கு வாணனோ “உன் அம்மாவோட நகை எல்லாம் உனக்கு தானு… அதுவே எவளோ வருது… நான் அதுமட்டும் போதும்னு சொன்னேன் ஆனா நீ உனக்கும் சொத்து வேணும்னு ஆர்ப்பாட்டம் பண்ணதுல தான் உனக்கு இருபது சதவீத சொத்துக்கு ஒத்துக்கிட்டேன்… வேற எதோ பேசுனா உனக்கு குடுத்த எல்லா நகையையும் எடுத்து வெச்சிட்டு எதுவுமே வேண்டாம்னு கூட்டிட்டு போயிடுவேன்..” என்று மிரட்டிய பின் அமைதியாகி விட்டாள்…
வாணனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது… நந்தினி சொத்து சொத்து என இப்படி திடீரென அலைவது… அர்ஜுனன் இரண்டு நாட்கள் முன்பே சொத்து பிரிப்பதை குறித்து வாணனிடம் கூறிவிட்டான்…. அதற்கு அவன் காரணம் கூறவில்லை என்றாலும் வாணனுக்கு அதற்கான காரணம் புரிந்தது…
Advertisement
நந்தினி சொத்தை பிரித்து குடுத்து விட்டால் அமைதியாகி விடுவாள் என்று எண்ணி தான் சொத்தை பிரித்து குடுக்க முடிவு செய்தான் அர்ஜுனன்… ஆனால் அவள் அதன்பின் தான் மிகவும் மோசமாக மாறினாள்…
மெய்யனூரில் இருக்கும் அவர்கள் அனைத்து நிலத்தையும் நந்தினிக்கே கொடுத்துவிட்டான்… அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டை சுபா பெயரில் மாற்றுவதால் அந்த வீட்டில் உள்ள அவள் பங்கை ரொக்கமாக அவளிடம் கொடுத்துவிட்டான்… ஆனால் அவளுக்கு அந்த வீட்டின் மேல் கொஞ்சம் கண்ணாக தான் இருந்தது..
அது இல்லாமல் பட்டம்மாள் பாட்டி மற்றும் அவருடைய கணவனின் பூர்விக சொத்துகளில் என்பது சதவீதம் பத்தி பாதியாக சசிக்கும் கர்ணணுக்கும் இருபது சதவீதம் அர்ஜுனனுக்கும் என்று அர்ஜுனன் கூறினான்… சசி முடிவாக மறுத்தான் தனக்கு சொத்து எதுவும் வேண்டாம் என…. ஆனால் யாரும் கேட்கவில்லை… அவனுக்கு சம பங்கு கொடுத்தனர்… அர்ஜுனன் எனக்கு இருபது சதவீதம் போதும் என கூறிவிட்டான்….
நந்தினிக்கு கர்ணனும் அர்ஜுனனும் அவர்கள் பங்கை ஐந்து சதவீதம் தர வேண்டும்.. சசிக்கு அந்த கட்டாயம் இல்லை… ஆனால் அவனும் நந்தினிக்கு அவனின் பங்கில் இருந்து குடுத்து இருந்தான்…
நந்தினியை பற்றி முழுதாக அறிந்து இருந்த வாணனும் அவர்களுடைய சொத்தை பிரித்து இருந்தான்.. அது நந்தினிக்கு பயங்கர அதிர்ச்சி…. வாணன் வர்ணன் இருவருக்கும் சரிசமமாக பிரித்து இருந்தான்… மூன்று பங்காக பிரிக்கலாம் என்று தான் வாணன் நினைத்தான்… ஆனால் அர்ஜுனன் முடிவாக மறுத்துவிட்டான்…
ஆனால் அவனை கட்டாயப்படுத்தி வாணன் வர்ணன் இருவரும் அவர்கள் பங்கில் இருந்து கொடுத்தார்கள்… சுபாவிற்கு எல்லாம் தரக்கூடாது என்று சத்தம் போட்ட நந்தினியை அடித்து “நீ உன் தம்பிங்க கிட்ட இருந்து சொத்து வாங்கலாம் நாங்க என் தங்கச்சிக்கு தரக்கூடாதா” என்று கோவமாக கேட்டான்…
அவள் அமைதியாகவே இருக்க “என் தங்கச்சிக்கு சொத்து தரக்கூடாதுனா நீயும் உன் தம்பிங்க கிட்ட வாங்குன சொத்தை திருப்பி குடு…” என்று கோவமாக கூறினான்… அதன்பின் அவள் எதுவும் பேசவில்லை… ஆனால் மனதில் திட்டி கொண்டே தான் இருந்தாள்…
தற்போதும் சுபாவை திட்டிக்கொண்டே இருப்பதை பார்த்து ஆரவ் அர்ஜுனனிடம் சொல்லிவிட்டான்… “ப்பா அத்தை அம்மாவை திட்டிட்டே இருக்காங்க எப்போ பார்த்தாலும்… நான் அம்மா கிட்ட அப்பாகிட்ட சொல்லலாம்னு சொன்னேன்… ஆனா அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க…” என்று அவன் வயதிற்கு ஏற்ப கோவமாக கூறினான்
ஆரவ் வந்து சொல்லும் அளவிற்கு நந்தினியின் செயல் மோசமாவதை பார்த்து அர்ஜுனனுக்கு நந்தினி மேல் எரிச்சல் அதிகமாகியது… இருந்தும் பல்லை கடித்து கொண்டு ஆரவிடன் “தம்பி அதை அப்பா பாத்துக்குறேன்… இனிமே அத்த அம்மாவை திட்ட மாட்டாங்க” என்று உறுதியாக கூறினான்…
அவள் மனம் மாற எங்கேயாவது வெளியூர் அழைத்து செல்லலாம் என முடிவு செய்தான்… அனைவரும் செல்ல தான் ஏற்பாடு செய்தான்… ஆனால்யாரும் வரவில்லை என கூறிவிட்டான்…
வர்ணன் ஜனனி இருவரும் ஜனனியின் அம்மா அப்பாவை அழைத்து கொண்டு வெளிநாடு சென்று இருந்தனர்… ஜனனியின் அப்பாவிற்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டு இருந்தது… ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டு இரண்டு வருடம் முன்பு தான் அவருக்கு புற்றுநோய் இருப்பதே கண்டுபிடிக்க பட்டது..
அதற்கு சிகிச்சை பெற்றாலும் அவருக்கு குணமாகவே இல்லை… இதை எதேர்ச்சியாக வர்ணன் வெளிநாட்டில் உள்ள தன் நண்பனிடம் கூறிக்கொண்டு இருக்க அவன் நாட்டில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் அவரிடம் சிகிச்சை பெற்ற என்பது சதவீத நோயாளிகளை குணப்படுத்தி உள்ளார் என கூறினான்…
“இங்கு வா முடிந்த அளவு குணப்படுத்த முடியுதா என பாக்கலாம்” என்று கூறினான்… வர்ணனும் அர்ஜுனனிடமும் ஜனனியிடமும் கூறினான்… அர்ஜுனன் தனக்கு தெரிந்த மற்ற மருத்துவர்களிடம் விசாரித்து பார்த்தான்… அவர்கள் நம்பிக்கையாக கூறவே வர்ணனிடம் கூறினான்…
வர்ணன் தன் நண்பனை அழைத்து எவ்வாறு அப்பாயின்ட்மென்ட் வாங்குவது என்று கேட்டான்… அவனோ “நீ ரிப்போர்ட் அனுப்பு டா.. நான் ஹாஸ்பிடல்கே போயிட்டு விசாரிச்சு சொல்றேன்” என கூறி அந்த மருத்துவரிடம் காட்டி அப்பாயின்ட்மென்ட் வாங்கிவிட்டான்..
ஏற்கனவே அனைவர்க்கும் பாஸ்போர்ட் இருப்பதால் விசா அப்ளை செய்து சிகிச்சைக்காக அங்கு சென்றனர்…அவர்கள் சென்று ஒரு வாரம் தான் ஆகி இருந்தது…
அர்ஜுனன் குடும்பமும் வாணன் குடும்பம் மட்டும் கேரளா செல்ல ஏற்பாடு ஆகியது… ஆனால் கேரளா இரவு செல்ல ஏற்பாடு செய்து இருக்க அன்று காலை ஆரவிற்கு பயங்கர காய்ச்சல்.. அவனால் எழுந்து நடக்கவே முடியவில்லை…
இன்னொரு நாள் செல்லலாம் என வாணன் கூற நந்தினி ஏற்றுக்கொள்ளவே இல்லை… சுபா வேண்டுமென்றே இவ்வாறு கூறுகிறாள் என்று சுபாவை திட்ட ஆரம்பித்துவிட்டாள்… எனவே சுபாவும் ஆரவும் வீட்டிலேயே இருக்க அர்ஜுனன் நிரவி குட்டியை அழைத்து கொண்டு வாணன் குடும்பத்துடன் சென்றான்.. கார்த்திகா இங்கு தான் இருந்தாள்… அவள் “நான் சுபி த்த கூடவே இருக்கேன் என்று” கூறிவிட்டாள்
சுபாவிற்கு மனது ஒரு மாதிரியாகவே இருந்தது… அவளுக்கு அர்ஜுனனை அங்கு அனுப்பவே மனமில்லை… எங்கே வெளியே சொன்னால் நந்தினி இதற்கும் வேண்டுமென்றே செய்கிறேன் என்று திட்டுவாளோ என்று பயந்து அமைதியாக இருந்துவிட்டாள்… அப்போதே சொல்லி இருந்தால் தற்போதும் கஷ்டப்படவே தேவை இருக்காது…
இரண்டு நாட்கள் சென்று இருந்தது அவர்கள் கேரளா சென்று இடுக்கியை சுற்றி பார்த்துவிட்டு அன்று இரவு ஊர் திரும்பலாம் என்று முடிவு செய்து இருந்தனர்… நந்தினியின் மனம் மாறியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்…
அன்று ஒரு மலை பகுதிக்கு சுற்றி பார்க்க சென்று இருக்க அங்கு அழகு அழகாக நிறைய பூக்கள் இருந்தது…அங்குள்ள பூக்களில் குறிப்பிட்ட இடத்தில உள்ள பூக்களை மக்கள் பறித்துக்கொள்ளலாம்… கொஞ்சம் தூரமாக சென்றால் நிறைய வகைகள் உள்ள பூக்களை காணலாம் அங்கு… சுபா அப்போது அர்ஜுனனை அழைத்து இருக்க அவன் பேசிக்கொண்டே வந்தான்… நிரவி குட்டி மலையின் ஓரத்தில் உள்ள ஒரு பூவை பார்த்து அதுவேண்டும் என்று மிகவும் அடம்பிடித்தாள்…
அங்கு உள்ள பூக்களை பறிக்க தடைவிதிக்க பட்டு இருந்தது… குழந்தைக்கு அது தெரியவா போகிறது ஆனால் நந்தினிக்கு அது தெரியும் அல்லவா… அவளோ இன்னும் இன்னும் நிரவியிடம் “அப்பா கிட்ட கேளு… பிச்சி தருவாரு” என்று கூறிக்கொண்டு இருந்தாள்… சிவனேஸ் நிரவியிடம் “குட்டி அந்த பூ வேண்டாம் நாம வேற பூ பறிச்சிக்கலாம்” என்று கூறினான்… ஆனால் நந்தினி அவனை அமைதியாக இருக்க கூறிவிட்டு நிரவியிடம் “அப்பா கிட்ட அப்பா தருவான்” என்று கூறிக்கொண்டே இருந்தாள்… வாணன் சற்று தள்ளி போன் பேசிக்கொண்டு இருந்தான்…
அதனால் நிரவியும் அர்ஜுனனிடம் அழுது கொண்டே கேட்டாள்…. அர்ஜுனன் அதை மறுக்க போனில் பேசிக் கொண்டு இருந்த சுபாவும் வேண்டாம் என கூறினாள்… சிறிது நேரம் முன்பு தான் வீடியோ காலில் வந்து இருந்தாள்…
நிரவி மேலும் அழுது கொண்டே இருக்க நந்தினியும் அவனிடம் பாப்பா கேட்குறா பிச்சி தா என்று கூறினாள்…சுபாவின் மறுப்பை மீறி அர்ஜுனன் பூ பறிக்க மிகவும் ஓரம் சென்றான்… இரவு தான் மழை வந்து இருந்ததால் அங்கு கொஞ்சம் வழுக்கியது… அவனும் எக்கி பூவை பறித்து விட்டான் ஆனால் பறித்தவுடன் கால் வழுக்கி அப்டியே கீழே விழுந்து இருந்தான்… அவன் விழுவதை வீடியோ கால் வழியாக பார்த்து கொண்டு இருந்த சுபா “மாமா” என்று கத்திக்கொண்டே மயங்கி இருந்தாள்….
அர்ஜுனன் ஒரு கையில் போன் இருந்தது அதை அவன் கீழே போடவே இல்லை…. அவளையே பார்த்து கொண்டே பாறைகளில் இடித்து கீழே ஓடி கொண்டு இருந்த ஆற்றில் விழுந்து இருந்தான் அர்ஜுனன்….
சுபாவின் சத்தத்தில் ஓடி வந்து இருந்த சசியும் மித்ராவும் அவள் மயங்கி விழுந்து இருப்பதை பார்த்து அவளுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினர்… அவளும் சிறிது நேர முயற்சிக்கு பின் எழுந்தவள் “சசி நான் மாமாவை பாக்கணும் சசி… அவரு கீழ விழுந்துட்டாரு சசி.. நான் பாத்தேன்… அவரை பாக்கணும் … மேல இருந்து விழுந்துட்டாரு … அவருக்கு கூப்பிடு அவரை இப்பவே பாக்கணும் சசி….” என்று அழுதாவரே கூறினாள்….
சசி அவளை அமைதிப்படுத்தி அர்ஜுனனுக்கு அழைத்தான்… அவனால் தான் எடுக்க முடியாதே… நான்கு முறை அழைத்து பார்த்துவிட்டு வாணனுக்கு அழைத்தான்…
இடுக்கியில் அனைவரும் பிரமை பிடித்தது போல் நின்று இருந்தனர்… வாணன் திரும்புவதற்கும் அர்ஜுனன் “அம்மு” என்று கத்தி கொண்டே கீழே விழுவதற்கும் சரியாக இருந்தது…
அவனும் அர்ஜுன் என்று கத்தி கொண்டே அங்க செல்ல முற்படும் போது அங்கு இருந்தவர்கள் அதை தடுத்துவிட்டு போலீஸ்க்கு அழைத்து கூறினர்… அவர்களும் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர்…
வாணன் நந்தினியிடம் “அர்ஜுனன் ஏன் அங்க போனான்..” என்று அவளை பார்த்து கோவமாக கேட்டான்…
நந்தினிக்கு பயமாக இருந்தாலும் பயத்தை மறைத்து கொண்டு “மாமா நிரவி அந்த பூவை கேட்டு ரொம்ப ஆசையா கேட்டா… நான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்… போன்ல உங்க தங்கச்சி பாப்பா கேட்குறால பறிச்சி தாங்கனு சொன்னா… அவனும் நான் சொல்ல சொல்ல கேட்காம வழுக்கி விழுந்துட்டான்… என் தம்பி மட்டும் எனக்கு கிடைக்கல உன் தங்கச்சியை உசுரோட விடவே மாட்டேன்” என்று நடந்ததை அப்டியே மாற்றி கூறி இருந்தாள்… அவளுக்கு அர்ஜுனமலையில் இருந்து விழுந்தது மிகுந்த கவலையாக இருந்தாலும் அவளுக்கு தான் செய்தது தெரிந்தால் வாணன் தன்னை கொன்றே விடுவான் என தெரிந்து மாற்றி கூறி இருந்தாள்….
சிவனேஸ் மாற்றி கூறிய தன் தாயை ஒரு அற்ப பார்வை பார்த்தான்.. அவனை வாணனனுடன் விடவே இல்லை… எங்கே அனைத்தும் கூறிவிடுவானா என்று… அவன் நந்தினியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை… இனிமேல் அவள் கெஞ்சி கேட்டாலும் அவளிடம் ஒரு வார்த்தை பேச மாட்டான் அவன்… யாருக்காக அனைத்தும் செய்கிறாளோ அவனே அவளை வெறுத்து இருந்தான்…
அர்ஜுனன் போன் எடுக்கவில்லை என்றவுடன் சுபா மிகவும் அழுக ஆரம்பித்துவிட்டாள்… அவள் அழுதப் படியே வீடியோ காலில் பார்த்தது அனைத்தையும் பார்த்ததை அனைத்தும் கூறி இருந்தாள்… அதுமட்டும் இல்லாமல் அவள் அதை ரெகார்டில் போட்டு இருந்தாள்…. அதில் நிரவி அழுதது… அர்ஜுனன் அங்கு மறுத்தது.. சுபா அதை கேட்டு மறுத்தது… நிரவி மேலும் அழுதது… நந்தினி அர்ஜுனனை போய் பறிக்க சொல்வதில் என்று அனைத்தும் பதிவு ஆகி இருந்தது…
அதை பார்த்தவர்கள் அனைவர்க்கும் நந்தினி மேல் கோவம் கோவமாக வந்தது.. சசி வாணனுக்கு அடிக்க மித்ரா அழுது கொண்டே பிரியாவுக்கு அழைத்தாள்… கர்ணன் பிரியா இருவரும் குழந்தைகளை அழைத்து கொண்டு முகுந்தன் வீட்டிற்கு தான் சென்றனர்…
பிரியாவிற்கு அழைத்து அழுதுக்கொண்டே அனைத்தும் கூற அனைவரும் பதறி அடித்து அர்ஜுனன் வீட்டிற்கு வந்து இருந்தனர்… முகுந்தனை பார்த்து “அண்ணா அவரை போனை எடுக்க சொல்லுங்க அண்ணா… அவரை பாக்கணும்.. வாங்க போலாம்..” என்று அவனை பிடித்து இழுத்தாள்…
“பாப்பா இங்க பாரு ஒன்னும் ஆகி இருக்காது அவனுக்கு… எதோ சிக்னல் கட் ஆகி இருக்கும்… திரும்பியும் பண்ணலாம்…. நில்லு அண்ணாவுக்கு பண்றேன்” என்று அவளை தன் தோளில் சாய்த்து கொண்டு வாணனுக்கு அழைத்தான்… இரண்டு மூன்று அழைப்பிற்கு பிறகு தான் எடுத்தான்…
“அண்ணா அர்ஜுன் ஏன் போன் எடுக்கவே இல்லை… அவன்கிட்ட போன் குடுங்க.. பாப்பா வேற ஒரே அழுகை… அவன் எங்க முதல்ல” என்று அவசர குரலில் கேட்டான்…
வாணன் தயங்கி கொண்டே நடந்ததை அனைத்தும் கூறி இருந்தான்… தேடிக்கொண்டு உள்ளனர் என்று கூறி இருந்தான்… முகுந்தன் அழைத்தவுடனே சுபா அவன் போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு இருந்தாள் சுபா…. மீண்டும் அதை கேட்டு மயக்கம் அடைந்து இருந்தாள் சுபா…
error: Content is protected !!