KAK 1
அந்த ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் முகத்தில் வடிந்த வியர்வை துடைத்து விட்டு ஒரு வித பயத்துடன் பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே வேகமாக சென்றால் அவள்.
பின்னால் ஒரு முன் இருபதுகளில் உள்ள இளைஞன் அவளை விட வேகமாக சென்று கொண்டிருந்தான்.அதை பார்த்து விட்டு இன்னும் நடையை துரிதப்படுத்தி அந்த பெரிய கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பி பார்க்க அவனும் வருவது தெரிந்தது.உடனே பக்கத்தில் இருந்த அறையில் நுழைத்தாள். உள்ளே இருந்த அனைவரும் அவளை விசித்திரமாக பார்ப்பதை கவனிக்காமல் மீண்டும் வெளியே எட்டிப்பார்த்தாள். அவன் இல்லாமல் போக ஒரு பெருமூச்சி விட்டு திரும்ப அங்கே அவளை முறைத்து கொண்டு நின்று இருந்தார் அவர்.
“இதுதான் நீ கிளாஸ்க்கு வர டைமா இனிய அமிழிதினி ” என கேட்ட ப்ரோபோசரிடம்
“சார் மை நேம் இனிய அமிழ்தினி”என்க அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் பேரை திருத்தியத்தில் இன்னும் கோபம் கொண்ட ப்ரோபோசர்
“ஆமாம் மேடம் பேரு ரொம்ப முக்கியம் இல்ல. கரெக்ட் தானே இனிய அமிழ்தினி” என நக்கலாக கேக்க அதில் எல்லாரும் சிரிக்க தொடங்க
Advertisement
“எஸ் சார் ” என கெத்தா சொல்லி திரும்பி கடைசி இருக்கையில் இருந்த தன் பிரண்ட்ஸ்யை பார்த்தால் அவர்களோ அடுத்து என்ன வரும் என்ற பிதியுடன் ப்ரோபோசரை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இனிய அமிழ்தினி மேடம் ஏன் லேட்னு சொல்லுங்க கேப்போம் “
“அது சார் நான் வந்த பஸ் பிரேக் டவுன் ஆகிட்டு”
“அது எப்படி தினமும் நீ வர பஸ் மட்டும் பிரேக் டவுன் ஆகுது “
Advertisement
“அது வந்து சார் நான் தினமும் ஒரு எரும முகத்துல முழிக்கேன் அதான் ” என்றால் பாவமாக
Advertisement
அதில் கோவம் கொண்டவர் “உன்ன என்ன சொல்லித்தான் திட்டனு எனக்கு தெரியல போ போய் லாஸ்ட் பெஞ்ச்ல படுத்து தூங்கு அதுக்கு தான கிளாஸ்க்கு வர “என அவர் கோவமா சொல்ல
அவர் அருகில் சென்று அவருக்கு மட்டும் கேக்கும் குரலில் ” மாமா பாட்டிக்கிட்ட சொல்லாம விட மாட்டேன் ரொம்ப ஓவரா போற நீ “என்று விட்டு ” நீங்க சொன்ன பிறகு நான் கேக்காம இருப்பேனா இதோ போறேன் சார் ” என பவ்வியமா சொல்லியத்தில் மீண்டும் அனைவரும் சிரிக்க கொஞ்சம் கோபத்தில் இருந்தவரை கொதிநிலைக்கு கொண்டு சென்ற பிறகே உள்ளே சென்றாள்.
மீண்டும் அவளை திட்டும் முன் “சார் மே ஐ கமின் ” என்ற சத்தத்தில் அதே கோபத்துடன் திரும்பினார்.
அவளும் திரும்பி பார்த்தால், “ஐயோ இவனா” என பயத்துடன் தனது இடத்தில் அமர்ந்து பென்ச் கீழ ஒளிந்து கொண்டாள்.
” நீ என்னப்பா லேட்டா வர “
Advertisement
” சாரி சார் பஸ் பிரேக் டவுன் ஆகிட்டு ”
“நல்லா படிக்கிற பையன் நீ இப்படி சில்லியான ரிசன் சொல்லாத. இங்க சிலது எல்லாம் ஹண்டின்ல சாப்பிடவே வருது.” என்றதில்
“பென்ச் கீழே ஒளிந்து இருந்தவள், மேலே நிமிர்ந்து பார்த்தாள். அவள் அருகில் இருந்த தோழி “என்ன சகோ உங்க மாமா ரொம்ப கிண்டல் பண்ணுறாரு “
“அதான் சகோ எனக்கும் தெரியல, இன்னிக்கு இந்த மாமாவுக்கு ஒரு பொங்கல் வைக்க வேண்டியதான் “
“நோ சகோ கொலை கேஸ் ஆகிரும் வேண்டாம் “
“ஏன் சகோ நான் பொங்கல் சூப்பரா பண்ணுவேன்”
“நீ பண்ணுவ சகோ பட் யார் சாப்பிடரது ” என்ற பிரியங்காவை முறைத்து பார்த்தாள்
“நீ எப்படி பாத்தாலும் அதான் உண்மை, அதனால இந்த சின்ன தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் சகோ “
“அப்படிகின்றன “
“அட ஆமாம்கின்றன “
“சரி போ நீ இவ்வளவு சொல்லுறதால விடுறன் “
“தட்ஸ் மை சகோ “என அவர்கள் ஐஃபை கொடுக்கும் போதே
“ஆல் ஆப் யூ சைலன்ஸ் சரிப்பா நீ போய் உக்காரு” என்று சொல்ல அவன் உள்ளே வந்து அவன் சீட்டில் அமர்த்தான்.
“என்ன இவன் நம்ம கிளாஸா இது எப்படி நமக்கு தெரியாம போச்சி”
என பார்த்துக் கொண்டு இருந்தவளிடம்
“என்னடி அவன அப்படி பாக்குற சைட் அடிக்கியா ” என்ற பிரியங்கா குரலில் தெளிந்து
“ஏய் போடி நீ வேற ஆமா அவன் யாரு “
“அவனா இன்பா டி “
“இன்பானா பெரிய சிம்பாவா யாருனு சொல்லுடினா ”
“ஏய் லூசு அவன் நேம் இன்பதமிழரசன் நம்ம பக்கத்துல ஊரு பையன் தான் நல்லா படிப்பான் “
“ஓ ஆமாம் எனக்கு எப்படி தெரியாம போச்சி ”
அவனை பார்த்து கொண்டு இருந்தவள் பதில் வராதால் திரும்பி தோழியை பார்த்தால்
அதுவரை அவளை கேவலமா லுக் விட்டு இருந்தவள் ” நமக்கு சாப்பாடு தவிர வேற எதுயும் தெரியாதுன்னு இந்த காலேஜ்கே தெரியும் சகோ”
“என்ன சொல்லுற சகோ”
“ஆமாம் சகோ நம்மள பத்தி இந்த காலேஜ் ஃபுல்லா அப்படி தான் சொல்லுது சகோ “
“அப்படியா இது யார் கிளப்பி விட்ட புரளி சகோ “
“எல்லாம் நம்ம விழுதுகள் தான் சகோ “
“சரி விடு சகோ பொது வாழ்க்கைல இதுலாம் சாதாரணம் “
இருவரும் கையை தட்டி ஐ ஃபை போட்டு கொண்டனர்
“பிரியங்கா, இனிய அமிழ்தினி ஹெட் அவுட் மை கிளாஸ் ரூம்”
“ஓகே சார் ” என மெதுவா அவர்களுக்கு உள்ளே சொல்லி கொண்டு வெளியே சென்றனர்.
போகும் முன் இன்பாவை பார்க்க அவனும் அவளை முறைத்து கொண்டு இருந்தான். இவன் ஏன் நம்மள முறைக்கான் என அவனையே பார்த்து கொண்டு மெதுவாக செல்ல
“பாத்துமா இன்னும் கொஞ்சம் மெதுவா போமா அப்ப தான் கிளாஸ் சீக்கிரம் முடியும்.”
அவனை பார்த்து கொண்டே “ஓகே சார்” என்க
“இனியா… இனியா…
ஏய் இனியா… எருமை மாடு எந்திரிடி ” என அவளை உலுக்கினால் பிரியா
“சார் நான் இப்ப வெளியே போறேன் சார் “. என கண்ணை மூடிக்கொண்டு புலம்பினாள்.
“ஏய் எரும நீ இப்ப எந்திரிக்கல உன்ன ஆபீஸ் விட்டே வெளியே அனுப்பியிருவாங்க டி “
“மிஸ் இனியா மீட்டிங்க கவனிக்காம என்ன பண்றீங்க “என்ற சத்தத்தில் தெளிவாக அமர்ந்து,
“சாரி சார் “என்று அவனை பார்க்க அவளை முறைத்துக்கொண்டு இருப்பதை பார்த்து பக்கத்தில் இருந்த பிரியாவிடம்” இவன் ஏன் டி
என்ன எப்பயும் முறைச்சிக் கிட்டே இருக்கான்.
” ம் இரு இன்பாக்கிட்ட கேட்டு சொல்லுறேன் ” என எழ போக அவளின் கையை பிடித்து,
“ஏன் சகோ ஏன் நம்ம அப்படியா பழகி இருக்கோம் ” என கெஞ்சி கொண்டு இருக்கும் போதே “ஓகே கைஸ் மீட்டிங் ஓவர் நீங்க போலாம்,மிஸ் இனியா கம் டூ மை கேபின்” என்று அவன் அறைக்கு சென்றான்.
“போச்சி போ இந்த சிம்பா என்ன சொல்ல போறானோ “என அவன் பின்னே செல்ல எழுதவளின் கையை பிடித்து அமர வைத்து,”சகோ என்ன கனவு கண்ட “என்ற பிரியாவிடம்
“அதுவா என் லூசு மாமா ஒருத்தன் இருக்கான்ல அவனுக்கு மேரேஜ் ஆகுற மாதிரி கனவு கண்டேன் “
“என்ன மாறனுக்கு மேரேஜா ” என அதிர்ச்சில் அவள் கையை விட்டாவள். உடனே போனை எடுத்து இளமாறனுக்கு கால் செய்தாள்.
“அது நான் மட்டும் ப்ரோப்லம்ல இருக்கணும் நீ ஃப்ரீயா இருப்பியா” என அவள் மைண்ட் வாய்ஸில் பேசி திரும்பியவளை
“ஆல் த பெஸ்ட் சகோ” என்ற நிவேதாவின் குரல் தடுத்தது.
அவளை முறைத்து பார்த்து “போடி சைத்தான் ” என்று நாக்கை துருவி சொல்லி சென்றாள்.
– – — — — — — — – – – – – –
” சார் மே ஐ கமின் “என்று கதவை திறந்து கொண்டு கேட்டாள்.
தனது சிட்டில் அமர்ந்து எதோ பைலை பார்த்துக்கொண்டு இருந்தவன் இவள் அழைப்பில் நிமிர்ந்து
” வா அமிழ் ” என்ற வார்த்தையில் கோவமாக
” இனியா சொல்லுங்க சார்” என்றாள்.
“நான் அமிழ் சொல்லக்கூடாத” என அவளை ஆழ்ந்த பார்த்து மயக்கும் குரலில் கேட்க
அவன் குரலில் மயக்க இருந்தவள். அவன் மொபைல் ரிங்க்டோனில் தெளிந்தால் “நீங்க தான் சொல்லவே கூடாது சார் “
அவளை பார்த்துக்கொண்டே போனை ஆன் செய்து காதில் வைத்தான்.
“ம்ம் சொல்லு அமிழ்தினி” என்றதில் முகம் முழுதும் சிவந்து உடல் விரைக்க அவனை பார்க்காமல் டெபிளை முறைத்துக்கொண்டு இருந்தால்
“சரி ஓகே ஈவினிங் வரேன்” என போனை கட் செய்தான்.
“யார் கால் பண்ணாங்கனு தெரியுமா அமிழ் ” என்றதில் கடுப்பாகிவள்
“உங்க பர்சனல் எனக்கு எதுக்கு சார், இப்ப எதுக்கு கூப்பிட்டிங்கனு சொன்ன நான் என் வேலைய பாப்பேன் சார் “
“ஓ வேலைல அவ்வளவு சின்சியாரிட்டி”என மனதில் மட்டும் அவளை கலாய்த்துக் கொண்டான். பின்ன நேரில் சொல்ல முடியுமா. யார் அவளிடம் பேசி ஜெயிப்பது. இப்போது கூட ஆபிசில் அவள் மேலதியாரி என்பதால் தான் அமைதியாக இருக்கிறாள் என தெரியாதவனா அவன்.
“ஓ சரி மிஸ் இனியா. நான் குடுத்த ப்ராஜெக்ட முடிச்சிட்டுங்களா “
