Skip to content
Post Views: 2,398

கீழே விழுந்த அர்ஜுனனை பார்த்து அந்த அமைச்சர் அய்யாதுரை காருண்யா மூவரும் பார்த்து அதிர்ந்துவிட்டனர்… முதலில் அது லிங்கம் தான் என நினைத்தனர்…. ஆனால் சில நிமிடங்கள் கழித்து அது லிங்கம் இல்லை என முடிவு செய்தனர்…
Advertisement
ஏனென்றால் லிங்கத்தின் தலையில் வெட்டு காயம் இருக்கும்… அது மட்டுமில்லாமல் கன்னத்தில் தழும்பு இருக்கும்… இது எல்லாம் இல்லை என பார்த்துவிட்டு தான் அது லிங்கம்இல்லை என முடிவு செய்தனர்…
Advertisement
“அப்பா இந்த ஆளு என்னப்பா லிங்கம் மாதிரியே இருக்கான்… என்ன பண்ணலாம்” என்று கேட்டாள் காருண்யா….
Advertisement
“நில்லுமா இவன் கண்ணு முழிக்கட்டும்… அதுக்கு அப்பறம் பாத்துக்கலாம்…. இவளோ மேல இருந்து விழுந்து இருக்கான்… கண்டிப்பா எதுவும் ஞாபாகம் இருக்காது…. ஞாபாகம் இல்லனா நாம இவனை கூட்டிட்டு போய்டலாம்…” என்று கூறினார்…
Advertisement
இவர்கள் பேசுவதை கேட்ட அந்த அமைச்சர் “அது எல்லாம் அப்பறம் பாக்கலாம் இப்போ இவனை கண்டிப்பா இங்க தான் தேடி வருவாங்க… அதுனால நாம இங்க நின்னு பேசுறது வேஸ்ட்… இப்போ வெளியவும் போக முடியாது.. காட்டுல தான் இருக்கனும்… அதனால வாங்க இவங்க குடில்லயே இருக்கலாம்” என்று கூறி அங்கிருக்கும் மக்களின் குடிலுக்கு சென்றனர்…
அங்கிருக்கும் தலைவரிடம் “நீங்க எல்லாரும் கை வைத்தியம் நல்லா பாப்பிங்கல… அதை வெச்சு இவனை பொழைக்க வைங்க… இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது… போலீஸ் இல்ல வேற யாரோ தேடி வந்தாலும் நாங்க யாரும் எதுவுமே பாக்கல… ஆத்தோட அப்டியே கூட போய் இருக்கலாம்னு சொல்லிடுங்க” என்று கூறிவிட்டார்….
அவர்களும் பயந்து போய் போலீஸ் வந்து விசாரித்ததும் அவ்வாறே கூறிவிட்டனர்…. காருண்யா அய்யாதுரை அமைச்சர் மூவரும் எண்ணியது போல் அர்ஜுனன் அனைத்தும் மறந்து போய் தான் விழி திறந்தான்… அவன் கண் திறக்கவே ஒரு மாதம் மேல் ஆகி இருந்தது…
அந்த ஒரு மாதமும் அப்பாவும் மகளும் கேரளா தமிழ்நாடு என மாறி மாறி பயணப்பட்டனர்… ரித்திகா மற்றும் பொன்னம்மா பாட்டி இருவரும் கேரளாவிலேயே இருந்துவிட்டனர்.,..
பொன்னம்மா பாட்டிக்கு தெரிந்து இருந்தது…. அது லிங்கம் இல்லை என… ஆனால் ரித்திகாவிற்கோ அது அவளின் அப்பா லிங்கம் போலவே இருந்தது…. அவனின் கையை பிடித்து கொண்டே அமர்ந்து விட்டாள்…
அவனை விட்டு அவள் நகரவே இல்லை… பாட்டி அழைத்தும் நகரவே இல்லை… பாட்டி கட்டாய படுத்தி அவளை சாப்பிட வைத்து தூங்க வைப்பார்…
அர்ஜுனன் விழுந்த அடுத்த நாள் ஆஷாவின் அம்மா காட்டில் இருந்து இடுக்கி செல்ல வேண்டும் என்று கேட்டார்… அவர்களோ மறுத்தனர்… ஏன்னென்றால் ஆஷாவின் அப்பாவை கொன்றது இவர்கள் தான்… இவர்களின் திட்டத்தை எதிர்த்து பேசியதால் கொன்றுவிட்டனர்…
ஆஷாவை அனுப்ப மருத்துவிட்டனர்… “நீ மட்டும் போ… வெளிய போய் நீ எதோ இங்க நடக்குறது சொன்னா உன் பொண்ணு உயிரோட இருக்க மாட்டா…” என்று மிரட்டி தான் இடுக்கி அனுப்பி வைத்தனர்…. ஆஷாவின் அம்மாவும் ஆஷாவை எதோ செய்து விடுவார்களோ என்று பயந்து பயந்தே இத்தனை வருடமும் இருந்துவிட்டார்….
நாட்கள் அதன்போக்கில் நகர அடிபட்டு ஒரு மாதம் கழித்து மெல்ல மெல்ல கண்ணை திறந்தான்….
அவன் கண் திறந்ததும் முதலில் பார்த்தது ரித்திகாவை தான்… தன் முன் சோக விழிகளுடன் தன் கையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்த ரித்திகாவை பார்த்து ஏனோ பிடித்துவிட்டது….
ஆனால் அவனுக்கு அவன் யார் என்றே ஞாபாகம் இல்லை…. அவனால் எழுந்துகொள்ளவும் முடியவில்லை… அந்த அறையில் இருந்த அமைச்சரின் ஆளோ அனைவரிடமும் தகவல் சொன்னான்…
அர்ஜுனனுக்கு மருத்துவம் பார்த்தவர்கள் வந்து அவனை பரிசோதனை செய்துவிட்டு அந்த அமைச்சரின் ஆளிடம் திரும்பி “இனிமே எந்த பிரச்சனையும் இல்லை ஐயா…. ஆனா அவர்கிட்ட பேசி பார்த்ததுல எல்லாத்தையும் மறந்து போயிட்டாரு….” என்று கூறினர்….
அந்த ஆளோ இன்னொருவனை அழைத்து “டேய் யாரும் பேசக்கூடாது…. நான் எல்லார்கிட்டயும் தகவல் சொல்லிட்டு வரேன்…… பாத்துக்கோ…” என்று கூறி அய்யாதுரை காருண்யா அந்த அமைச்சர் மூவருக்கும் தகவல் சொல்ல சென்றான்..
அப்பாவிற்கும் மகளிற்க்கும் அர்ஜுனனுக்கு அனைத்தும் மறந்துவிட்டது என்று தெரிந்தவுடம் மிகவும் சந்தோசம்…. உடனே தங்கள் நடிப்பை தொடர கேரளா கிளம்பி வந்தனர்….ஆனால் ரித்திகாவையோ மற்ற யாரையோ பேச கூட விடவில்லை அந்த அமைச்சரின் ஆட்கள்…
அர்ஜுனனுக்கு எதுவும் புரியவில்லை… அய்யாதுரை காருண்யா இருவரும் வருவதற்குள் அந்த அமைச்சர் காட்டிற்கு வந்து இருந்தார்… அவர் வந்தவுடன் மற்றவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்… ரித்திகா செல்ல மாட்டேன் என்று அழுதவளை அமைச்சர் அடிக்க கை ஓங்கினார்… ஆனால் அர்ஜுனன் பார்வையில் தானாக அவரின் கை இறங்கியது…
எனவே அவளை வைத்து கொண்டே பேச ஆரம்பித்தார்… “உன் பேர் லிங்கம்… உன் மாமனாரோட சினேகிதன்… உனக்கு அக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல் சேர்த்தோம்… அங்க எல்லாம் காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க… ஆனா எனக்கு தெரிஞ்சவங்க மூலமா இங்க இருக்க வைத்தியர்கிட்ட உனக்கு டிரீட்மென்ட் பாக்க வந்தோம்… கடவுள் புண்ணியத்துல நீ குணம் ஆகிட்ட ப்பா… அப்பறம் குழந்தையை அடிக்குறேன்னு தப்பா நினைக்காத ப்பா… கொஞ்சம் அதிகமா அடம்பிடிப்பா ஸ்கூல் போகலாம் வா நம்ம ஊருக்கு போகலாம்னு உன்னோட பொண்டாட்டி சொன்ன ப்பா… ஆனா அவளை கல் எடுத்து அடிச்சிட்டா ப்பா… வாய்ல சொன்னா உன் பொண்ணு கேட்க மாட்டா ப்பா… அடிக்க கை மட்டும் தான் ஓங்குவேன்.. அடிக்கலாம் மாட்டேன் ப்பா… அவசர வேலையா உன் பொண்டாட்டியும் மாமனாரும் ஊருக்கு போய் இருக்காங்க வந்துடுவாங்க ப்பா….” என்று கூறினார்…
அவர் சொன்னதை கேட்டு கொண்டானே தவிர வேறு எதுவும் கூறவில்லை…. அப்டியே உறக்கத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு உறங்கிவிட்டான் அர்ஜுனன்…
அவன் கண் விழித்த போது அவன் முன் ரித்திகாவும் அவனுக்கு வைத்தியம் பார்த்தவரும் இருந்தனர்…. அவர் அர்ஜுனனிடம் வலி இருக்கிறதா என்று கேட்டார்…. இவன் கொஞ்சம் வலி இருக்கிறது என்று கூறிவிட்டு நான் எப்படி இங்க வந்தேன் உண்மையை மட்டும் சொல்லுங்க என்று கூறினான்..
அவர் தயங்கி தயங்கி எதுவோ கூற ஆரம்பித்த நேரம் அழுத விழிகளுடன் காருண்யா உள்ளே ஓடி வந்தாள்…. அவன் கையை பிடித்து கொண்டு அழுக(நடிக்க) ஆரம்பித்தாள்…
ஆனால் அர்ஜுனனுக்கு அவளின் தொடுகை ஒவ்வாத தன்மையை கொடுத்தது… அவளே அறியாமல் கையை அவளிடம் இருந்து விடுவித்து கொண்டான்….
அதன்பின் நல்லவள் போல பேசினாலும் அவள் கண்ணில் உள்ள திமிர் தான் என்ற அகங்காரம் எதுவுமே அவள்பால் நன்மதிப்பை கொண்டு வர இயலவில்லை….
மீண்டும் உறக்கம் வருகிறது என கூறி அர்ஜுனன் கண்ணை மூடி மட்டும் படுத்துவிட்டான்… அவன் உறங்குகிறான் என்று நினைத்து காருண்யா சென்றுவிட்டாள்…..
அடுத்து நாட்கள் வேகமாய் ஓடி ஒரு வாரம் சென்று இருந்தது… அவன் அதிகம் யாரிடமும் பேசவில்லை… ஆனால் ரித்திகா காருண்யாவை பார்க்கும் போது மட்டும் நடுங்குவதை உணர்ந்து கொண்டான்… மற்ற நேரத்தில் அவள் அமைதியாய் இருப்பதை காண்கிறான்… அது ஏன் என்று மட்டும் அவனுக்கு தெரியவில்லை… அம்மாவை பார்த்து குழந்தை ஏன் பயப்பட வேண்டும் என யோசித்தான்….
ஆனால் அவனால் அது மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை…
அவன் கண் திறந்துவிட்டான் தான்… ஆனால் அவன் கை கால்களில் பயங்கர எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது… அது சரியாக எப்படியும் ஆறு மாதம் ஆகும் என அர்ஜுனனுக்கு வைத்தியம் பார்த்தவர் கூறிவிட்டார்…
அய்யாதுரை ஊருக்கு போயிடலாம் என்று கூறினார்… ஆனால் காருண்யா அவரிடம் “இவனால நடக்க முடியாது சாப்பிட முடியாது… என்னால இவனுக்கு பணிவிடை எல்லாம் பண்ண முடியாது சரி ஆகுற வரை இங்கயே இருக்கட்டும்” என்று கூறிவிட்டாள்….
அப்பா மகள் இருவரும் மீண்டும் தமிழ்நாடு சென்று இருந்தனர்…. அர்ஜுனனிடம் “நம்மளை நம்பி நிறைய பேர் இருக்காங்க…அதனால போகனும் அங்க…. இங்க நீங்க எந்த கவலையும் இல்லாம இருங்க.. அங்கிள்(அந்த அமைச்சர்) கிட்ட ஹெல்ப் கேளுங்க… அங்கிள் மோஸ்டலி இங்க இருக்க மாட்டாரு… அவரோட ஆளுங்க கிட்ட கேளுங்க…. பாப்பாவை மட்டும். பேசி ஊருக்கு அனுப்பி வைங்க அவ ஸ்கூலுக்கு போகட்டும்” என்று தேன் ஒழுக பேசினாள்….
ஆனால் அர்ஜுனனுக்கு அது ரசிக்கவில்லை…. எனவே அவளிடம் பாப்பா ரொம்ப அடம் பண்றா… அவ ஸ்கூல்ல இருந்து டிசி வாங்கிட்டு வா… இங்கயே படிக்கட்டும் என்று கூறிவிட்டான்….
அவளும் விட்டது தொல்லை என சரி என கூறிவிட்டாள்… அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி டிசி வாங்கி இங்கு சேர்த்துவிட்டனர்….
காட்டில் இருக்கும் சிறுவர்களுக்காகவே ஒரு பள்ளி உள்ளது… அங்கு இருக்கும் மக்கள் காட்டில் இருக்கும் மக்கள் படிப்பில் கெட்டிகாரர்களாக இருந்தனர்… எனவே அரசு அனுமதி பெற்ற பள்ளி அங்கு உள்ளது… அங்கிருக்கும் மக்களே படித்து அரசு தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர்களாக உள்ளனர்…
அங்கிருக்கும் மாணவர்கள் எல்லாம் இங்கு தான் படிக்கின்றனர்… ஆஷாவின் அப்பாவும் அந்த பள்ளியில் இருக்கும் ஆசிரியர் தான்… ஆனால் அவரை கொன்றுவிட்டனர்….
error: Content is protected !!