Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️ 51 ( இரண்டாம் பாகம்)

திருவிழாவுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்க இன்று ரித்திகாவுக்கு வளைகாப்பு.. நிரவி டெல்லியில் இருந்து வந்து நான்கு நாட்களாகி இருக்க ரியாஸ் இன்னும் அவளிடம் பேசவில்லை… ஆனால் அவள் நலனை அறிந்து கொண்டு தான் இருந்தான்… அவளுக்கு அது தெரிந்ததால் அமைதியாகி வீட்டில் உள்ளவர்களிடம் சலசலத்து கொண்டு இருந்தாள்.. அவள் சிவா ரித்திகாவிடம் மட்டும் அதிகம் பேசவில்லை.. அவர்கள் பேசினால் பேசுவாள் இல்லை என்றல் சிறு சிரிப்புடன் கடந்துவிடுவாள்…



Advertisement

நிரவி ஊருக்கு வருவதால் தான் வாணன் குடும்பம் அய்யனார்புரம் வந்து இருந்தது… அடுத்த நாள் வர்ணன் குடும்பமும் வந்து விட அன்றைய நாள் சந்தோசமாக சென்றது.. ரித்திகா அவளிடம் கூறியது ஞாபகம் வந்தது.. அருண் என்கூட பேச மாட்டிங்குறான் என்று கூறியது.. எனவே கார்த்திகாவிடம் கேட்டாள்… “ஆமா நிரவி அந்த பைத்தியம் அதே தான் பேசிட்டு இருக்கு.. நீயும் சரியா பேசல.. அதுனால உங்கிட்ட சொல்ல முடியல… நீ பேசுறப்ப அம்மா பெரியம்மானு யாரோ கூட இருக்காங்க… சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டிங்குறான்.. நீயே அவன்கிட்ட பேசு..” என்று கூறினாள்…

யாருக்கும் தெரியாமல் அவனை தனியாக இழுத்து வந்தனர் இருவரும்… நிரவி தான் “அருண் ஏன் அவங்க கூட பேச மாட்டிங்குற..” என்று கொஞ்சம் கோவமாக கேட்டாள்..

Advertisement

Advertisement

அவனோ அலட்சியமாய் “நீ இருக்க வேண்டிய இடம் அது…” என்று கூறினான்..

“டேய்” என்று கூறி அவன் மண்டையில் அடித்தவள் “அவங்க கிட்டயும் இத தான் சொல்லிட்டு இருக்கியா.. அறிவு இருக்கா உனக்கு.. எனக்கு சிவா மாமா தான் அப்படினு முடிவு பண்ணி இருந்தா அவர் எனக்கு தான் கிடைச்சு இருப்பாரு.. அவர் ரித்திகா அக்காவுக்குக்காக பிறந்தவர்.. எனக்கும் மாமாவுக்குமான உறவை நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. அவங்க ரெண்டு பேரும் தான் மேட் பார் ஈச் அதர் கப்புள்… நீ தேவ இல்லாம அவங்க மேல கோவப்படுற..” என்று அவனுக்கு எடுத்து கூறினாள் நிரவி..

Advertisement

அவன் அமைதியாய் நிற்க “நீ அவங்க கூட பேசாம இருக்குறது மாமாவுக்கு தெரியுமா???” என அவள் கேட்க அவன் தெரியும் என தலையாட்டினான்…

அவளோ “கடவுளே ஒழுங்கா அவங்க கூட பேசு டா.. இல்லைனா அவளோ தான்..” என்று கூறி சென்றுவிட்டாள்..

கார்த்திகாவும் அவள் பின்னே செல்ல போக “நீ எங்க போற… உன் ஆளு பேசனும்னு சொன்னாங்க..” என்று கூறினான்..

கார்த்திகா “இங்க வேண்டாம்டா மாமாவை நிரவி ரூமுக்கு வர சொல்லு..” என்று கூறி நிரவியின் அறைக்கு சென்றுவிட்டாள்..

கார்த்திகை சோகமாக வருவதை பார்த்த நிரவி “என்ன கார்த்தி க்கா ஏன் சோகம்.. முன்னாடியே கேட்கனும்னு இருந்தேன்.. என்ன ஆச்சு உனக்கு..” என்று கேட்டாள்..

கார்த்திகா கலங்கியவாறே தன் தந்தை வெளியே மாப்பிளை பார்ப்பதை கூறிவிட்டு “என்னால ஆரவ் மாமாவை தவிர்த்து யாரையும் கல்யாணம் பண்ண முடியாது நிரவி… அப்பா கிட்ட பேச பயமா இருக்கு..” என்று கூறி கொண்டு இருக்கும் போதே ஆரவ் அறைக்குள் நுழைய அவர்களுக்கு தனிமை அளித்து நிரவி வெளியேறி இருந்தாள்..

ஆரவ் அழும் தன்னவளை பார்த்து “என் மேல நம்பிக்கை இல்லையா தங்கம்..” என்று கேட்டான்..

“உங்க மேல எனக்கு அத்தனை நம்பிக்கை இருக்கு மாமா.. ஆனா அப்பாவை நினைச்சா பயமா இருக்கு… ஏன் அவர் இவளோ சீக்கிரம் மாப்பிளை பாக்குறாரு தெரியல…” என்று அழுது கொண்டே கேட்டாள்…

“நீ எப்பவும் எனக்கு மட்டும் தான் தங்கம் எதுக்கு கலங்காத திருவிழா முடிஞ்சு மாமா கிட்ட பேசுறேன்.. இனிமே ஜெர்மனி போற வேலை இல்லை… இனிமே இங்க தான்.. என் தங்கத்தை தங்கமா தாங்குவேன்…” என்று கூறி அவள் கண்ணீரை துடைத்து விட்டவன் “எந்த கவலையும் இல்லாம சந்தோசமா இரு.. எல்லாமே நான் பாத்துக்குறேன..” என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்..

கதவு வரை சென்றவள் மீண்டும் வேகமாக உள்ளே வந்து அவனை பின்னிருந்து அணைத்து விட்டு “லவ் யூ மாமா” என்று கூறி ஓடி விட்டாள்… ஓடும் அவளை சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தவன் சீக்கிரம் வர்ணனிடம் பேச வேண்டும் என எண்ணி கொண்டு வெளியில் சென்றான்…

சிரித்த முகத்துடன் வெளியில் வந்த கார்த்திகாவை பார்த்த பின் தான் நிரவிக்கு நிம்மதியாக இருந்தது.. இருவரும் மாடிக்கு செல்ல அங்கு இருந்த இருவரையும் பார்த்து அதிர்ந்துவிட்டனர்.. அதுவும் சண்டை கோழிகளாய் சிலிர்த்து நிற்கும் இருவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் …..

“மாமா நீ வீட்டுல சொல்றியா இல்ல நான் சொல்லட்டா… உனக்கு என்ன சின்ன பையன்னு நினைப்பா உனக்கு இருபத்தி ஆறு வயசு… உனக்கு பொண்ணு பாக்க ஸ்டார்ட் பண்ணலாம்னு பெரிய மாமா பேசிட்டு இருக்காரு.. என்னை கழட்டி விடலாம்னு பிளான்ல இருக்கியா” என்று அவள் கோவமாக கேட்க “ஏய்” என்று உறுமி அவளை அடிக்க பாய்ந்தான் அவன்… அவனின் கோவத்தில் அவள் உடல் நடுங்கியது..

அதற்குள் கார்த்திகாவும் நிரவியும் நடுவில் வந்து அவனை தடுத்து இருந்தனர்… அவன் இன்னும் சீற்றமாய் நின்று இருக்க அவளோ அவனை தான் கண் கலங்கி பார்த்து கொண்டு நின்று இருந்தான்…

“தன்ஷி என்ன பேச்சு பேசுற நீ…” என்று தமக்கையாய் நிரவி கண்டிக்க அவளோ அவளை அணைத்து கொண்டு “நான் மட்டும் என்ன பண்ணட்டும் க்கா.. இப்பவே இவருக்கு ட்வென்ட்டி சிக்ஸ் ஆகுது.. இன்னிக்கு காலைல அர்ஜு அப்பாவும் முகி மாமாவும் பேசிட்டு இருந்தாங்க.. இவருக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணனும் பொண்ணு பாக்கணும்னு.. அதை இவர் கிட்ட சொன்னா இன்னும் மூனு வருஷம் போகட்டும் நீ படிக்கனும்னு சொல்றாரு… முகி மாமா வேற ஒரு பொண்ணை இவருக்கு பாத்துட்டா நான் என்ன அக்கா பண்றது” என்று தன்ஷிகா அழுகையுடன் கேட்டாள்…

அதற்கு ஆகாஷோ “அவ்ளோ தான் நீ என்மேல வெச்சு இருக்க நம்பிக்கையா…” என்று அவன் உறுமலாய் கேட்க அவள் தலை குனிந்து நின்று இருந்தாள்…

நிரவி அவளை நிமிர்த்தி “இப்படி எல்லாம் பேசாத தன்ஷி.. அத்தான் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு.. ஒழுங்கா சமாதான படுத்து அவரை..” என்று கூறி கார்த்திகாவை இழுத்து கொண்டு கீழே சென்று விட்டாள்..

அவன் எங்கோ பார்த்தவாறு கையை கட்டி கொண்டு சீறலாய் நிற்க இவள் மெதுவாக அவன் அருகில் நிற்க அவளை பார்க்கவே இல்லை அவன்.. அவன் கையை பிடிக்க கட்டி இருந்த கையை எடுக்க முற்பட இறுக்கமாய் வைத்து இருந்தான்…

அவன் கோவத்தை உணர்ந்தவள் அவனை அணைத்து கொண்டவள் “சாரி மாமா… நீ பெரிய மாமா சொல்லாம இருக்குறது தான் கோவம்… அது தான் லூசு மாதிரி பேசிட்டேன்.. உன் தனும்மா தானே மன்னிச்சிடேன்..” என்று அவள் கெஞ்சலாய் கேட்க அவன் அமைதியாவே இருந்தான்…

“மாமா நான் தான் சாரி சொல்றேன்ல… மன்னிச்சு விடேன்” என்று அவள் பாவம் போல் கேட்க “போடி இங்க இருந்து.. அது தான் கழட்டி விட பாக்குறியான்னு கேட்டல.. ஆமா நான் கழட்டி விடுறேன் போதுமா.. போ இனிமே நமக்குள்ள ஒன்னும் இல்ல” என்று அவன் கூற “மாமா விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத” என்று அவன் நெஞ்சை கண்ணீரால் நனைத்தாள்…

அவள் கண்ணீரில் கொஞ்சம் கோவம் குறைய அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தி “சரி தனும்மா நான் அப்பா கிட்ட பேசுறேன்… நீ கவலைப்படாத.. உனக்கு இன்னும் பப்ளிக் எக்ஸாமே ரெண்டு இருக்கு… நீ காலேஜ் போகனும்… உன் ட்ரீம் அச்சீவ் பண்ணனும்… இன்னும் நிறைய நிறைய இருக்கு.. அது வரைக்கும் நான் வெயிட் பண்றேன்.. இனிமே இப்படி கிறுக்குத்தனமா பேசுனா அவளோ தான் தனு… இப்பயாச்சும் கை ஓங்குனதோட நிறுத்திட்டேன்…. அடுத்த தடவ கிறுக்குதனமா பேசுனா ஓங்குன கையோட இருக்க மாட்டேன் அரைஞ்சிடுவேன்..” என்று கூறி அவள் உச்சியில் முத்தமிட்டவன் அவள் பேசிய கடுப்பில் தலையில் நாலு கொட்டு கொட்டி “என்ன பேச்சு பேசுற நீ… ஒழுங்கா போய் படி” என்று அனுப்பி வைத்தான்…

அவள் அவன் கொட்டிய இடத்தில தேய்த்து கொண்டே “போடா பன்னி” என்று திட்டிவிட்டு ஓடிவிட “அடிங்” என்று கூறி அவளை துரத்த பார்த்தான்… அதற்குள் அவள் ஓடிவிட போகும் அவளையே சிரிப்புடன் பார்த்து நின்று விட்டான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!