Skip to content
Post Views: 1,487
மனசு 22
காலை எழுந்ததும் இன்பவேணி குளித்து ஜான்வியை தயார் செய்து அவளும் தயாராகி சிறிது நேரம் அவளுடன் நேரம் செலவழித்து ஆபிஸ் கிளம்புவாள். பின் மதிய உணவு முடித்து மீண்டும் ஆபிஸ் சென்று இரவு வந்து ஜான்வியுடன் மீண்டும் நேரம் செலவழித்து அவளுடன் உறங்க சென்று விடுவாள். யாரும் கேட்டால் மட்டுமே அவளிடம் பதில் வரும். மற்றபடி அனைவரையும் மொத்தமாகவே தவிர்த்தாள். அவள் அவளாக இல்லை.
விதார்த்தும் சாயாலியும் அவளிடம் பேச்சுக் கொடுத்து பார்த்தாலும் சரியாக பதில் வரவில்லை. இருவரும் நொந்தே போனார்கள். உதய்கிருஷ்ணாவும் அவன் வேலையை கவனித்தானே ஒழிய இன்பவேணியை கண்டுகொள்ளவேயில்லை. பாட்டிக்கும் ராமநாதனுக்கு இவர்களின் செய்கை வருத்தத்தை கொடுத்தது.
Advertisement
சித்ரலேகா இன்பவேணியிடம் தனியே அழைத்து பேச, “இத பத்தி பேசாதீங்கண்ணீ” தவிர்த்து விடுவாள்.
Advertisement
என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று தான் இருந்தது. விடுமுறை நாளில் தன் அம்மா வீட்டிற்கு சென்று விடுவாள் இன்பவேணி. அவரிடமும் முன் போல அவள் பேசவில்லை. மானவ் அனைத்தையும் கவனித்தான். ஆனால் எதிலும் தலையிடவில்லை.
Advertisement
அன்று விடுமுறை நாள். உதய்கிருஷ்ணா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உறக்கத்தை கலைக்கும் விதமாக திரைச்சீலை அகற்றப்பட, சூரிய கதிரின் உச்சத்தில் விழித்து விட்டான்.
Advertisement
இன்பவேணி திரைச்சீலையை அகற்றி அவள் வளர்ந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா…” ஜான்வி இன்பவேணியை நெருங்கி அவளது கை பற்றிக் கொண்டாள். அப்பொழுதும் அவள் கவனம் அங்கே தான் இருந்தது.
யோசனையுடன் உதய்கிருஷ்ணா அவர்கள் பின் வந்து பார்த்தான்.
வீடு திறந்து தான் இருந்தது. வெளியே யாருமில்லை..
“என்ன பாக்குறா?” புரியாமல் குளியலறை சென்றான். வெளியே வந்து பார்த்த போது இன்பவேணியும் இல்லை ஜான்வியும் இல்லை. தயாராகி கீழே வந்தான்.
சாயாலியும் அங்கு இல்லை. ஜான்வி மட்டும் கார்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன் அண்ணனை பார்த்துக் கொண்டே, “ஓ.கே ஆன்ட்டி…இதோ இப்பவே வாங்கிட்டு வாரேன்” விதார்த் பரபரப்புடன் பேசியவாறு வெளியே சென்றான்.
ராமநாதன் மூத்தவனை பார்த்தான். அவனுக்கு நடப்பது புரியாமல் விழித்து, கேட்க ஈகோ இடம் கொடுக்கவில்லை.
உதய் சாப்பிட வா…அழைத்தார்..
சித்ரலேகா பரிமாற உணவை முடித்து எழுந்தான்.
“சித்ரா கிளம்பலாமா?” பாட்டி கேட்க, ராமநாதனும் எழுந்தார்.
எல்லாரும் எங்க போறீங்கக்கா?
வேணி வீட்டு தான்..
என்ன திடீர்னு? அவன் கேட்க, சித்ரலேகா பாட்டியை பார்த்தார்.
“ராமா, நீ இரு. நாங்க கூப்பிடும் போது வா…” கோசலையும் பிள்ளைங்களும் தனியா வேலை பாப்பாங்க. நாங்க உதவிக்கு போறோம்..
உதயிடம் திரும்பிய பாட்டி, “ஜானுவ நீ பாத்துக்கிறியா? நாங்க அழைச்சிட்டு போகவா?” கேட்டார்.
எதுக்கு அங்க போறீங்க?
உதட்டை கோணிய பாட்டி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு??
“நானும் தான் கேட்டேன்..” எடக்காக பேசினான் உதய்கிருஷ்ணா.
“உதய், இன்னிக்கு வேணி அப்பா இறந்த நாள். மதியம் வழிபாடு செய்ய அவங்களுக்கு உதவ போறோம்..” சித்ரலேகா கூறினார்.
மனம் கனத்தது உதய்கிருஷ்ணாவிற்கு.
யாருமே எங்கிட்ட சொல்லல..
சொல்லி என்ன பண்றது? உனக்கு நாங்க சொல்ற எதுவுமே காதுல விழல.
“நீ வாடி. அவன் புள்ளைய தூக்கிட்டு போனா அதுக்கும் ஏதாவது சொல்லுவான். அவனே பாத்துக்கட்டும்..” என்று சித்ரலேகாவுடன் பாட்டி சென்று விட்டார். மகனை பார்த்துக் கொண்டே அறைக்கு சென்றார் ராமநாதன்.
“இவங்க சொல்ற எல்லாத்தையும் கேக்கணுமோ?” உதய்கிருஷ்ணா கோபமாக அமர்ந்தாலும் அவனுக்கும் விசுவமூர்த்தியின் எண்ணங்கள் வந்து வந்து சென்றது.
வெளியே எட்டிப் பார்க்க, “மாமா…” என சாயாலி விதார்த் கையில் ஒரு காகிதத்தை கொடுத்து, “தேங்காயெல்லாம் பாத்து வாங்கிட்டு வாங்க” என மானவ் விதார்த்திடம் சொல்லி வீட்டிற்குள் சென்றாள்.
மானவ் அவனது காரை எடுக்க, மானவ்வும் விதார்த்தும் சகஜமாக பேசி செல்வதையும் உதய்கிருஷ்ணா பார்த்தான்.
இவர்கள் திருமணம் முடிந்து இரு மாதங்கள் ஆகி இருக்க, உதய்கிருஷ்ணாவின் பேச்சில் விதார்த்தும் அவன் குடும்பத்தினரும் அவனிடம் அதிகம் பேசுவதில்லை.
இன்பவேணியின் அன்றைய சூழ்நிலையை புரிந்து விதார்த் அவளுக்கு ஆதரவான உதய்கிருஷ்ணாவிடம் பேச, அவன் தன் தம்பியிடம் கோப முகத்தை காட்டி விட்டான். திருமணம் செய்த பின்னும் இன்பவேணியை ஒரு பொருட்டாக கூட மதிக்காத இந்த உதய்கிருஷ்ணாவை விதார்த் தவிர்த்தான்.
உதய்கிருஷ்ணாவிற்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை. அவன் தான் என்றும் யாருடனும் கலகலப்பாக பேசியதில்லையே! அவனுக்கு அவன் வீட்டின் நிலை மாறி இருப்பது உரைக்கவேயில்லை. அவன் சாதாரணமாக சுற்றி வந்தான்.
இன்று தான் அவனை எல்லாரும் ஒதுக்குவது போல உணர்ந்தான். விதார்த்தின் பாரா முகம் அவனுக்கு ஏதோ செய்தது.
உதய்கிருஷ்ணா திருமணத்தின் பின் மானவ் அதிகம் உதய்கிருஷ்ணா வீட்டிற்கு செல்லவில்லை. அனீஷையும் விடவில்லை. இடையே சில நாட்கள் குஜராத் சென்று வந்தான்.
மதியம் விசுவமூர்த்தி புகைப்படத்திற்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து படையல் போட்டு வழிபட தயாரான நேரம் பாட்டியின் அழைப்பில் ராமநாதனும் உதய்கிருஷ்ணாவும் ஜான்வியுடன் வந்தனர். ஜான்வி பேசத் தொடங்கி இருந்தாள்.
“அம்மா….” இன்பவேணியிடம் ஜான்வி தாவ, புள்ளையை பிடித்தாலும் அவள் கவனம் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த தந்தை மீதே இருந்தது. ஜான்வி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மூத்த மருமகனாக உதய்கிருஷ்ணாவை கோசலை அழைக்க, அவன் தயக்கமுடன் அவரை பார்த்தான்.
“அவன விடு கோசல” பாட்டி பட்டென சொல்லி விதார்த்தை முன் நிறுத்தி, “நீ தான் பண்ணனும்” என அவனை முன்னிருத்தினார். எல்லாரும் உதய்கிருஷ்ணாவை பார்க்க, அவன் பாட்டியை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே விதார்த் அவனின் செல்ல அங்கிளுக்கு மாலை அணிவித்து இருந்தான். தற்பொழுது அனைத்தையும் அவனே செய்து அனைவருக்கும் தீபம் காட்டி உதய்கிருஷ்ணாவிடம் வந்தான்.
அவன் விதார்த்தையே ஊன்றி கவனிக்க, அவன் கடுப்புடன் நகர, அவன் கை பிடித்து தீபத்தை தொட்டு உதய்கிருஷ்ணா கண்ணில் ஒற்றி அவனுக்கு திருநீறு அணிவித்தார் கோசலை. உதய்கிருஷ்ணாவிற்கு ஒரு மாதிரி ஆனது. ஆனால் இவர்களின் செய்கை அவனுக்கு புரியவில்லை. நான் என்ன செய்தேன்? என்று தான் நின்றிருந்தான்.
கோசலை கண்ணீருடன் இருக்க, இன்பவேணி புகைப்படத்தை தான் பார்த்தாள். அவளது கண்ணீரையோ மனக்குமுறலையோ யாருக்கும் காட்டவில்லை. இறுகிப் போயிருந்தாள்.
பெண்கள் உணவு எடுத்து வைக்க, ஆண்கள் வரிசையாக தரையில் அமர்ந்தனர். உணவு பரிமாற அவர்கள் உண்டு எழுந்து வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
ராமநாதன் விதார்த் இருவருக்கும் இடையில் அமர்ந்தான் மானவ். ராமநாதன் அவனை பார்க்க, விதார்த் கேள்வியுடன் அவனை நோக்கினான். அவர்களுக்கு எதிரே உதய்கிருஷ்ணா அமர்ந்திருந்தான்.
அங்கிள், எனக்கு ஒரு கெல்ப் பண்ணுவீங்களா? மானவ் கேட்க,
என்னப்பா?
இவர்கள் இருக்கும் ஏரியாவிலே ஒரு காலியான இடம் ஒன்று இருந்தது. அதை ஏற்கனவே மானவ் விசாரித்து இருந்தான்.
அவ்விடம் பற்றி கூறி கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் என தொழில் தொடங்குவது பற்றி விசாரித்தான். அவரும் பதில் கூறி அவருக்கு தெரிந்த பில்டர்ஸ் எண்ணை கொடுத்து பேசினார்..
“தேங்க்ஸ் அங்கிள்..” புன்னகையுடன் மானவ் கூற,
“நீங்க குஜராத்துக்கே போறதா சொன்னீங்க?” விதார்த் கேட்க,
அது அம்மாவ விட்டு போக மனசில்லை. அவங்களோட அவங்களுக்கு மகனா இங்கேயே இருக்கலாம்னு இருக்கேன்.
“அம்மாவா?” உதய்கிருஷ்ணா சிந்திக்க,
ரொம்ப நல்லதுப்பா. அவங்களுக்கு துணைக்கு இருந்தது போல ஆகும் என்றார் ராமநாதன்.
புன்னகைத்தான் மானவ்.
“அப்படியே ஒரு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணீட்டா. உங்க பையனையும் பாத்துட்ட மாதிரி இருக்கும். ஆனா பையனுக்காகன்னு மட்டும் பொண்ணு பாக்காதீங்க. பாவம்ல அந்த பொண்ணு…” உதய்கிருஷ்ணாவை குத்தலாக பார்த்தான் விதார்த்.
கண்டிப்பா விதார்த். நான் எப்பவும் சுயநலமா இருக்கலாம் மாட்டேன். அனீஷூக்கு அம்மாவாகவும் எனக்கு மனைவியாகவும் அந்த பொண்ணு இருக்கணும் என்றான் மானவ் உதய்கிருஷ்ணாவை வெட்டும் பார்வையில்.
“சரிப்பா, உனக்கு என்ன வயசாகுது?” ராமநாதன் கேட்டான்.
“ஏன் அங்கிள், பொண்ணு பாக்குறீங்களா?” புன்னகையுடன் கேட்டான்.
பார்க்கலாமே! என்றவர் வயதை மீண்டும் கேட்டார்.
முப்பத்தாறு அங்கிள்..
“என்ன? நம்பவே முடியல” விதார்த் அதிர, உதய்கிருஷ்ணாவாலும் நம்ப முடியவில்லை.
என்னப்பா சொல்ற? முப்பதாறா?
ஆமா அங்கிள், எனக்கு எங்க குடும்பத்திலே பொண்ணு பாத்தாங்க. பிடிக்கலைன்னு தள்ளி போட்டேன். அதான் கடுப்புல நாலு வருசமா விட்டுட்டாங்க. அப்புறம் தான் வெளிய பாத்துட்டு இருந்தாங்க. அதுக்குள்ள குடும்பமே இல்லாம போச்சு… முகம் வாடினான்.
“இப்ப அதுனால என்ன??” பாட்டி நான் இருக்கேன் பாக்கலாம்” அவனருகே வந்தார் பாட்டி.
நிஜமாகவே உங்க வயசு முப்பத்தாறா? இவ்வளவு யங்கா இருக்கீங்க? கேட்டான் விதார்த்.
வொர்க் அவுட் தான்..எங்க வீட்ல எல்லாரும் இப்படி தான். என்னோட அப்பாவே எனக்கு அண்ணா மாதிரி தான் இருப்பார் என்றான் புன்னகையுடன்.
வொர்க் அவுட்ல இவ்வளவு யங்கா இருக்க முடியுமா?
முடியாது, வொர்க் அவுட் + ஃபுட் கான்சியஸ்..
ஓஓ!!!! நான் கூட பேஸ் பேக், மேக் அப் ஐயிடம்ஸ் யூஸ் பண்ணுவீங்களோன்னு நினச்சேன்.
என் மூஞ்சிய பாத்தா மேக் அப் போடுற மாதிரியா இருக்கு???
லிப்ஸ் இவ்வளோ பிங்கா இருக்கு? உங்களுக்கு சிகரெட் பழக்கம் இல்லையா?
அதில்ல…லைட்டா டிரிங்க் பண்ணுவேன். குடும்பத்தை இழந்ததுல இருந்து விட்டுட்டேன்..
ம்ம்!
“எந்த மாதிரி பொண்ணு எதிர்பாக்குற மானவ்??” பாட்டி ஆர்வமுடன் கேட்க,
பெருசாலாம் வேணாம் பாட்டி. அனீஷியும் என்னையும் பாத்துக்கிட்டா போதும்.
“சரி தான்…அடுத்த வருசம் உம் பொண்டாட்டியோட தான் நீ இருப்ப பாரு…” என்றார் பாட்டி.
மானவ் முகம் சிவந்தது.
“கெர்ல் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா?” விதார்த் கேட்க,
ம்ம்! நிறைய பேர்..படிக்கும் போது இருந்தாங்க. இப்ப இல்ல..
அதான் தெரியுதே! இந்த தாடிய எடுக்கலாமே!
ஏன்? நல்லா இல்லையா? மானவ் அவன் தாடியை வருடினான்.
நாம காலையில சாமான் வாங்க போனோம்ல..அப்ப அந்த கடைக்கு வந்த பொண்ணுங்க..உங்கள பாத்து கமெண்ட் பண்ணாங்க..
அட..அப்படியா? என்னவாம்?
“லவ் ஃபெயிலியர் போல தாடி வளத்திருக்கான். இவன் மட்டும் ஷேவ் பண்ணான். திரைப்பட நாயகன் போல இருப்பான்னு சொன்னாங்க” விதார்த் சிரித்தான்.
“சரியா தான சொல்லி இருக்காங்க. அதுக்கு எதுக்கு விது சிரிக்கிற?” பாட்டி கேட்க,
இல்ல…மானவ் ஷேவ் பண்ண அப்புறம் ஒரு போட்டோ போதும். கல்யாணத்துக்கு பொண்ணுங்க வரிசையில நிக்கப் போறாங்க…அத நினைச்சேன் சிரிச்சேன்.
“என்ன? நக்கலா?” மானவ் கேட்க,
இல்ல விக்கல் மச்சான் முதல்ல ஷேவ் பண்ணுங்க. நான் சொல்றது நடக்குதான்னு பாக்கலாம் என்று மேலும் சிரித்தான் விதார்த்.
இவர்களின் பேச்சு உதய்கிருஷ்ணாவிற்கு எரிச்சலூட்டியது.
உள்ளே பதட்டக் குரல் கேட்க, எல்லாரும் உள்ளே ஓடி வந்தனர்.
என்னாச்சும்மா? பாட்டி பதற…
இன்பவேணி முகம் முழுக்க புன்னகை. கோசலை சாயாலியை உச்சி முகர்ந்தார்.
“என்னடி என்னமோன்னு வந்தா? அம்மாவும் மவளும் கொஞ்சிட்டு இருக்கீங்க?” பாட்டி கேட்க,
இன்பவேணி சாயாலியை அணைத்து வாழ்த்து தெரிவித்தாள்.
“என்ன?” விதார்த் புரியாமல் அவர்களை பார்த்தான்.
“மாமா….” சாயாலி விதார்த்தை நெருங்கி வெட்கமுடன் அவன் சட்டை பொத்தானை திருக,
“எல்லார் முன்னாடியும் என்ன பண்ற?” அதட்டினான்.
“மாமா, நமக்கு பாப்பா வரப் போது…” என்றாலே பார்க்கலாம் திகைத்து பின் மகிழ்ச்சியுடன் அவளை தூக்கி சுற்றினான் விதார்த்.
“டேய் டேய்…புள்ளைய விட்றாத. இறக்கி விடுடா..” பாட்டி விதார்த்தை அடித்தார்.
சாயாலி இறங்கவும் விதார்த் ஆசையாக அவள் வயிற்றில் கை வைக்க போக, பட்டென அவன் கையை தட்டி விட்ட இன்பவேணி அவள் கையை சாயாலி வயிற்றில் பதித்து…
“என்னோட அப்பாவே உனக்கு மகனா வரப் போறான் விது” என விழிகள் கலங்க விதார்த்தை பார்க்க, விதார்த்தும் சாயாலியும் இன்பவேணியை அணைத்துக் கொண்டனர்.
“சரி…முதல்ல சாப்பிடுங்கடி” என பாட்டி சாயாலியை பார்த்து பார்த்து கவனித்தார். கோசலை மகிழ்வுடன் இருந்தாலும் ஓர் இடத்தில் தன் மகளுக்கு இல்லையே அவள் வருந்துவாளே! என்று தோன்றியது.
கோசலை முகத்தை வைத்து கண்டறிந்த சித்ரலேகா அவர் கையை இறுக பற்றி, “கண்டிப்பா அதுக்கான காலம் வரும் ஆன்ட்டி..” என்றாள் தேற்றுதலாக.
“எனக்கு நம்பிக்கையே இல்லை சித்ரா. எம் பொண்ணு சந்தோசமாவே இல்ல என்னோட இருந்தவரை கூட நல்லா பேசிட்டு இருந்தா. இந்த ரெண்டு மாசத்துல இன்னிக்கு தான் அவ சிரிச்சே பாக்குறேன்” தாயானவர் கலங்கினார்.
“சரியாகும் ஆன்ட்டி…கவலைப்படாதீங்க..” இருவரும் தனியாக சத்தம் வராமல் பேசிக் கொண்டனர்.
மானவ்விற்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஸ்வீட்டை எடுத்து மேடம் என அழைத்து சாயாலிக்கு ஊட்டி அவன் மகிழ்ச்சியை தெரிவித்தான். உதய்கிருஷ்ணாவும் தன் தம்பியை அணைத்து மகிழ்ச்சியை தெரிவிக்க, அண்ணன் மீது கோபம் இருந்தாலும் அவன் தான் தனக்கு எல்லாம் இருந்தவன் என்ற எண்ணத்தில் உதய்கிருஷ்ணாவை அணைத்துக் கொண்டான்.
சாயாலி அனீஷிடம், “அனீஷ் குட்டி தம்பி வரப் போறான்” என்றாள் மகிழ்வுடன். அவன் சிரித்தானே தவிர பேசவில்லை. ஆனால் சாயாலி கையை இறுக பற்றிக் கொண்டான்.
இரவும் அங்கேயே கழிய, குழந்தைகளுடன் எல்லாரும் நேரம் செலவழித்து செல்ல, உதய்கிருஷ்ணாவிற்கு உறக்கம் பறிபோனது.
அன்றைய இரவு மகிழ்ச்சியுடனும் சிலருக்கும் வேதனையுடனும் சிலருக்கும் கழிந்தது.
“எங்கேயோ எப்போ நான்
தொலைந்தேனோ தெரியாதே!
இப்போ அங்கே இனி
நான் போக முடியாதே!
தேவை மட்டும் உன் உறவென்று
மனம் சொல்லுதே!”
உதய்கிருஷ்ணா அன்றிலிருந்து குடும்ப உறுப்பினர்களை கவனிக்க தொடங்கினான். ஆனால் தன் மனைவியை மட்டும் விட்டு விட்டான்.
சாயாலி ரௌடி குடும்பத்து பெண் என்றாலும் தங்கள் குடும்பத்திற்கு வாரிசு வரப் போவதை அறிந்திருந்த தாத்தா சாயாலிக்காக கர்பிணி பெண்கள் உணவுண்ணும் பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி வந்திருந்தார். பாட்டி அவரை கண்டுகொள்ளாமல் செல்ல, சாயாலியும் சித்ரலேகாவும் தான் அவருடன் பேசினார்கள்.
அவர் இன்பவேணியை தேட, “வேணி ஆபிஸ் போயிருக்கா தாத்தா” என சித்ரலேகா கூறவும் அவரை பார்த்தாள் சாயாலி. அவர் இதழ்கள் வளைந்தது. அதை கண்டு கோபம் வந்தாலும் பொறுத்து சென்று விட்டாள் சாயாலி.
அன்று கோசலைக்கு உடல்நலமில்லாமல் இருக்கவே மானவ்வையும் அனீஷையும் உணவுண்ண அழைத்திருந்தார் பாட்டி. அவர்கள் வந்த சற்று நேரத்தின் பின் தான் இன்பவேணி வந்தாள்.
சாடை மாடையாக தாத்தா இன்பவேணியை கேள்வியால் துளைக்க, கடுகடுத்த விதார்த், “தாத்தா அமைதியா சாப்பிடுங்க” சத்தமிட்டான்.
இன்பவேணி என்ன தான் அவருக்கு சலிக்காமல் பதில் கூறினாலும் கணவனின் துணை இல்லாமல் வெதுப்பி தான் போனது அவள் மனது.
“வேணி சாப்பிட வா…” சித்ரலேகா அழைக்க, “வாரேன்” அவளறைக்கு சென்று விட்டாள். இன்பவேணி கீழே வந்த போது அனைவரும் உணவை முடித்திருந்தனர்.
விரக்தியுடன் இன்பவேணி உணவு மேசையில் அமர, அவளுக்கு பரிமாற வந்தாள் சித்ரலேகா.
“வேண்டாம் அண்ணீ. நானே எடுத்துக்கிறேன்” இன்பவேணி அவளாக உணவை எடுத்து வைத்து உண்டாள்.
பாட்டி மெதுவாக மானவ் அருகே அமர்ந்து, “மானவ் நீ சித்ரா பத்தி என்ன நினைக்கிற?” பாட்டி கேட்க, எல்லாரும் அவர் எண்ணம் புரிந்து பார்க்க, உதய்கிருஷ்ணா அவரை முறைத்தான். ஆனால் அவர் எங்கே அவனை கண்டார். அவர் மானவ்வை தான் அளந்து கொண்டிருந்தார்.
உணவு முடித்து சித்ரலேகாவும் அங்கு வர, சித்ரா நைஸ் கெர்ல்..அழகா இருக்கா. நல்லா சமைக்கிற. உங்கள நல்லா கவனிச்சுக்கிறா…என்றான்.
“எதுக்கு பாட்டி?” உதய்கிருஷ்ணா பற்கள் நெறிய கேட்டான்.
நம்ம சித்ராவ நம்ம மானவ்வுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு தான் கேட்டேன். என்ன மானவ் சொல்ற? பாட்டி கேட்க, சித்ரா பாட்டியை முறைத்தாள்.
“என்ன பாட்டி காமெடி பண்றீங்களா? ஏற்கனவே அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கல. நீங்க புரிஞ்சு தான் கேக்குறீங்களா? விருப்பமில்லாத யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” இன்பவேணியை பார்த்துக் கொண்டே கூறினான்.
சுர்ரென ஏறியது உதய்கிருஷ்ணாவிற்கு.
“பாட்டி இவனுக்கெல்லாம் நீங்க பொண்ணு பாக்கணும்னு உங்களுக்கு என்ன தலையெழுத்தா? அக்காவ போய் இவனுக்கு???” உதய்கிருஷ்ணா கேட்க, பழச்சாற்றை அருந்திக் கொண்டிருந்த சாயாலி கண்ணாடி தம்ளரை கீழே போட்டு உடைத்து எழுந்தாள்.
error: Content is protected !!