Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️ 53 ( இரண்டாம் பாகம்)

அய்யனார் அர்ஜுனன் உடம்பில் இருந்து இறங்கியதும் அர்ஜுனன் மயங்கி கீழே விழ குடும்பத்தினர் யாவரும் அதிர்ச்சியில் இருந்ததால் அதை கவனிக்கும் நிலையில் இல்லைஊர் மக்கள் தான் அவரை பிடித்து ஒரு இடத்தில படுக்க வைத்து குடும்பத்தினரிடம் சென்றனர்அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாய் பார்த்துஎன்னப்பா அது எல்லாம் அர்ஜுனன் தம்பிக்கு ஒன்னுமாகாது.. பயப்படாம இருங்கபாருங்க தம்பி மயக்கத்துல இருக்கு..” என்று தைரியம் கூறி அவர்களை தெளிய வைத்தனர்..

அர்ஜுனனை அடுத்து தெளிவாக இருக்கும் முகுந்தன் கூட பயந்து இருந்தார்.. ஊர் மக்கள் பேசியதில் கொஞ்சம் தெளிந்து அனைவரையும் தைரியப்படுத்தினார்..
சசி வர்ணா போய் கார் எடுங்கஅண்ணா நீங்க எல்லாரையும் கூட்டிட்டு போங்க ஆகாஷ் நீ போய் பசங்களை பாரு கர்ணா வா அர்ஜுனனை பிடி ஆரவ் அர்ஜுனனுக்கு ஒன்னுமாகாது.. வாஎன்று அனைவருக்கும் வேலை ஏவி கலைத்துவிட்டு பின் அய்யனாரை ஒரு நிமிடம் நின்று பார்த்தவர் வேகமாக அனைவரும் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்..

வீட்டிற்கு சென்றும் அனைவரும் அதிர்ந்த நிலையில் இருக்க அனைவரையும் உறங்க அனுப்பிய முகுந்தன் ஆரவை மட்டும் நிற்க கூறினார்.. அவன் உடன் ஆகாஷும் நிற்க ஆரவ் அருகில் சென்றவர் அவனின் தோளை பற்றி ஆரவ்அர்ஜுனனுக்கு ஒன்னுமாகாதுபயப்படாம இருக்கனும்எதுவும் யோசிக்காம தூங்கு சரியா..” என்று கூறி அனுப்பி வைத்தார்.. “ஆகாஷ் பாத்துக்கோ அவனை…” என்று கூறி ஆகாஷையும் அனுப்பி வைத்தார்



Advertisement

அடுத்த நாள் காலை நிதானமாகவே விடிந்துவீட்டிர் ஆளுக்கு ஒரு யோசனையில் இருந்தனர்ஏனோ இன்னும் அர்ஜுனன் எழவில்லை.. முகுந்தனும் வர்ணனும் அர்ஜுனன் அறைக்கு வரும்போது சுபா அர்ஜுனன் கையை பிடித்தவாறு அவரையே பார்த்தவாறு அமர்ந்து இருந்தார்.. அவர் கண்கள் செய்வது இருந்ததாகி பார்த்தே அவர் இரவு முழுவதும் உறங்கவில்லை என தெரிந்தது.. வர்ணன் சுபா தோளில் கை வைக்க அந்த அரவத்தில் தான் தன்னிலை உணர்ந்து அவரை திரும்பி பார்த்தார்….

அர்ஜுனன் அன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்அதனால் அவர்கள் பேசுவது கூட அவருக்கு கேட்கவில்லை… “அண்ணா அய்யனார் என்னவோ சொல்றாரே ண்ணா.. எனக்கு பயமா இருக்கு.. சாமி எப்பயும் ஆக்ரோஷமா தானே இறங்குவாரு.. ஆனா இந்த தடவ நிதானமா இறங்கி இருக்காருமாமாவோட தாத்தாவுக்கு இப்படி தான் ஆச்சு அடுத்த திருவிழா அப்ப அவர் உயிரோட இல்லை.. அடுத்து வருஷத்துல இருந்து சாமி யார் மேலயும் இறங்கரொம்ப வருஷம் கழிச்சு தான் மாமா மேல இறங்குனாரு.. எனக்கு பயமா இருக்கு ண்ணா.. மாமாவுக்கு ஒன்னுனா சத்தியமா நான் உயிரோட இருக்க மாட்டேன்.. அவருக்கு ஒன்னும் ஆகாது தானே ண்ணாஎன்று வர்ணனை அணைத்து கொண்டு அழுதுவிட்டார்

பாப்பா மச்சானுக்கு ஒன்னுமாகாது நீ பயப்படாம இரு.. நாளைக்கு அவன்கிட்ட இன்னிக்கு நடந்தது எதுவும் சொல்ல கூடாது.. நாங்க சொல்லிக்குறோம்.. சரியா எதுவும் யோசிக்காம வேற ரூமுக்கு போய் படு.. கண்ணு எல்லாம் எவளோ சிவப்பா இருக்கு பாரு.. அர்ஜுனன் கிட்ட நாங்க பேசிக்குறோம்என்று கூறிய முகுந்தன் சுபாவை அழைத்து கொண்டு வேறு அறைக்கு சென்றவர் அவர் உறங்கிய பின் தன் மகனை அழைத்தவர்சுபா அத்தை உள்ள தூங்கிட்டு இருக்கா.. யாரையும் உள்ள விடாம பாத்துக்கோ..” என்று கூறிவிட்டு அர்ஜுனன் அறைக்கு சென்றுவிட்டார்..

Advertisement

அங்கு அர்ஜுனன் இன்னும் எழாமல் இருக்க அவரை தொந்தரவு செய்யாமல் சிறியவர்களுக்கு தெரியாமல் மற்றவர்களிடம் அர்ஜுனுக்கு எதுவும் தெரியக்கூடாது சரியா… என்று கூறி வேலைகளை பார்க்க அனுப்பி வைத்தனர்..

Advertisement

அர்ஜுனன் ஒரு மணிநேரம் கழித்து தான் எழுந்து இருக்க அவருக்கு உடம்பு எல்லாம் பயங்கரமாக வலித்தது.. அவர் எழுந்தது தன் மனைவியை தேட அவர் இல்லாததை பார்த்து அப்போது தான் மணியை பார்த்தார்மணி ஒன்பதை தொட்டு இருக்க மெதுவாக எழுந்து குளிக்க சென்றார்.. சுபா குளித்தற்கான அடையாளம் இல்லாமல் இருக்க யோசனையுடன் கீழே சென்றார்

அங்கு அனைவரும் எதுவும் நடக்காதது போல் அவரவர் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர்இரவு நடந்தது எதுவும் தெரியாத சிறியவர்கள் எப்போதும் போல் சலசலத்து கொண்டு இருக்க கார்த்திகா தன்னவனை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள்.. அவன் கண்கள் அலைபாய்ந்து கொண்டே இருக்க அவன் எதோ தீவீர சிந்தனையில் உள்ளன என கண்டுகொண்டாள்..

அவன் தன் அறைக்கு சென்ற போது யாரும் அறியாமல் அவன் பின் சென்றவள் மாமா என்று அழைத்தாள்அவள் குரல் கேட்டதும் தங்கம் என்று கூறி அவளை இறுக்கி அணைத்து இருந்தான்.. அவன் இருக்கியே அணைப்பே மனதில் எதையோ போட்டு குழப்பி கொண்டுள்ளான் என எண்ணிய கார்த்திகா அவன் முதுகை மென்மையாக தடவி கொடுத்தான்.. அவன் இது தான் பிரச்சனை என்று கூறவில்லை.. அவளும் கேட்கவில்லை அவளின் அருகாமை அவனை அமைதிப்படுத்தி இருந்தது..

Advertisement

அவள் அவனை தன்னிடம் இருந்து பிரித்துமாமா நீ என்ன பிரச்சனைனு சொல்ல வேண்டாம்.. என்ன பிரச்சனையா இருந்தாலும் நீ சமாளிச்சிடுவ.. எதுக்கும் கலங்காம இரு…” என்று கூறி வெளியேறிவிட்டாள்

அவள் பேசியபின் தெளிவடைந்த ஆரவ் தன் அப்பாவிற்கு ஒன்னுமாகாது என நம்பிக்கை கொண்டு அறையில் இருந்து வெளியேறினான்..

அர்ஜுனன் கீழே வந்தாலும் அவரின் பார்வை சுபாவை தான் தேடியது.. அங்கு அவனுக்கு காபி கொண்டு வந்த மித்ராவிடம்சுபி எங்க மித்தும்மாஎன்று கேட்டார்..

காலைல இருந்து நான் பாக்கல அத்தான்.. ரூம்ல இருப்பானு நாங்க அவளை தேடலயே.. அவ கீழயும் இறங்கி வரல.. ரூம்இல்லனா எங்க போய் இருப்பா.. கதவை நான் தான் திறந்தேன்.. வெளிய போகவும் வாய்ப்பு இல்ல..” என பதட்டமாக கூறினார்

முகுந்தன் அப்போது வந்தவர்சுபிம்மாக்கு கொஞ்சம் காய்ச்சல் அதுதான் தனியா தூங்க வெச்சு இருக்கோம்இப்போ காய்ச்சல் குறைஞ்சிடுச்சு.. வேற ஒன்னுமில்ல.. அர்ஜுன் நீ பாக்குறதா இருந்தா போய் பாரு..” என்று கூறி அனுப்பி வைத்தார்..

அர்ஜுனன் வேகமாக அவர் இருக்கும் அறைக்கு செல்ல ஓய்ந்த தோற்றத்தில் நெற்றி சுருக்கத்தோடு நன்றாக உறங்கி கொண்டு இருந்தார்அவர் நெற்றியை தொட்டு பார்க்கும் உடல் சூடு மட்டுமே இருந்தது.. அவர் அருகில் அர்ஜுனன் அமர்ந்து கொண்டார்..

சுபா அவரின் வாசனை உணர்ந்து மெதுவாக கண்களை திறந்தார்.. அவர் அருகில் அர்ஜுனன் அமர்ந்து இருப்பதாய் பார்த்து வேகமாக எழுந்தார்

அம்மு மெதுவா மெதுவா.. திடீர்னு என்ன காய்ச்சல் உனக்கு..” என்று கேட்டு அவர் நெற்றியை தடவி கொடுத்தவர் அவரை தன் தோளில் சாய்த்து கொண்டார்சுபா அவரை இறுக்கி அணைத்து கொண்டார்

சுபாவை தங்கள் அறைக்கு அழைத்து சென்றவர் அவரை குளிக்க கூறிவிட்டு அவர் குளித்தவுடன் கீழே அழைத்து வந்தார்சுபாவின் முகம் தெளிவடைந்த முகத்தை பார்த்து அனைவரும் நிம்மதியுற்றனர்

அனைவரும் அவரவர் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர்கார்த்திகா போகும் முன் ஆரவை தான் ஏக்கமாய் பார்த்து கொண்டு சென்றாள்.. ரித்திகாவும் சிவாவும் மட்டும் இங்கேயே தங்கி கொண்டனர்

நிரவி நாளை மாலை டெல்லி செல்கிறாள்.. வீட்டில் அனைவரும் செல்லம் கொஞ்சிக்கொண்டு சந்தோசமாக தான் இருக்கிறாள்.. இருந்தும் ஏதோ ஒரு தடுமாற்றம்இருந்தும் அதை அழகாக மறைத்து கொண்டாள்

பெண்கள் அனைவரும் தனியாக பேசி கொண்டு இருக்க ஆரவ் தன் மூன்று தந்தைகளிடம் ஒரு விஷயத்தை கூறினான்.. அர்ஜுனன் அதை தான் பார்த்துக்கொள்வதாக கூற அதை மறுத்துஅப்பா இதை நான் பாத்துக்குறேன்.. உங்க கிட்ட சொல்லாம செய்ய மனசு இல்ல அது தான் உங்க கிட்ட சொல்ல வந்தேன்…” என்று கூறி கிளம்பிவிட்டான்..

கர்ணன் தான்என்ன அண்ணா இப்படி சொல்றான்..” என கேட்கஅவன் வளர்ந்துட்டான் கர்ணா நம்ம கிட்ட சொல்லிட்டு செய்யணும்னு யோசிக்குறான் விடு போய் வேலையை பாரு.. எனக்கு கொஞ்சம் அசதியா இருக்குஎன கூறி அறைக்கு கிளம்பினார்..

உடனே சசியும் கர்ணனும் பதறிஎன்ன ஆச்சு ண்ணா வாங்க ஹாஸ்பிடல் போகலாம்என கூறடேய் தம்பிகளா எனக்கு ஒன்னுமில்ல நான் தூங்க தான் போறேன்.. எதுக்கு இந்த பதட்டம்என்று கேட்க அவர்களும் இருவரும்ஒன்னும் இல்ல ண்ணா போய் தூங்குங்கஎன்று கூறி கிளம்பிவிட்டனர்..

அர்ஜுனன் தான் போகும் இருவரையும் மார்கமாக பார்த்து கொண்டே அறைக்கு சென்றார்

ஆரவ் அவனுடைய புல்லட்டில் ஏறி அமர்ந்தவன் மெய்யனூர் நோக்கி சென்றான்தாங்கள் வந்து ஒரு மணி நேரத்தில் வந்து நிற்கும் ஆரவை எல்லாரும் பார்க்க அவனோ நேராக சோபாவில் அமர்ந்து இருக்கும் வர்ணனிடம் சென்றான்..

என்ன மாப்பிளை எதாவது சொல்லனுமாஎன்று கேட்டார்அவனோ அவரை நேராக பார்த்துநான் யார் மாமா உங்களுக்குஎன்று கேட்டான்..

அவரும் புரியா பார்வையுடன்மாப்பிளைஎன்று கூறினார்.. “அப்படினா எதுக்கு கார்த்திகாவுக்கு வெளிய மாப்பிளை பாக்குறீங்க.. நான் அவளை ஒழுங்கா பாதுகா மாட்டேனா..” என கேட்டான்.. அவன் கேட்பதை பார்த்து கார்த்திகா பதட்டமாக தன் தந்தையை பார்த்தாள்அருனேஸ் அவள் அருகில் அவள் கையை கெட்டியாக பிடித்து கொண்டான்

வர்ணனோ அவனை கூர்மையாக பார்த்து கொண்டேபொண்ணுனு வீட்டுல இருந்தா பொண்ணு கேட்க தான் செய்வாங்க.. அது தான் அவங்களை பத்தி விசாரிச்சேன்என்று புன்னைகையை மறைத்து கொண்டு கூறினார்

அவனோஅவங்க கேட்டா என் பொண்ணுக்கு என் தங்கச்சி பையன் இருக்கான்னு சொல்லனும்என்று கூறஎதை நம்பி நான் அப்படி சொல்ல முடியும்என மறுகேள்வி கேட்டார்

ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா உங்க தங்கச்சி உங்க நண்பன் மேல நம்பிக்கை இல்லையாஎன்று கோவமாக கேட்டான்

நம்பிக்கை எல்லாம் இருக்கு..உங்களுக்கு இந்த கல்யாண பேச்சு பிடிக்காம இருந்தா என்ன பண்றதுவெளிநாடு போய் படிச்சிட்டு வந்து இருக்கீங்க.. வேற ஒரு பொண்ணைஎன்று வாக்கியத்தை முடிக்க கூட விடாமல்என் மனசுல எப்பவும் கார்த்திகா மட்டும் தான் இருப்பா.. தயாரா இருங்க நல்ல நாள் பொண்ணு கேட்க வருவேன்என்று கூறி கிளம்ப பார்த்தான்..

அவன் கூறியதில் அனைவருக்கும் பரம திருப்தி.. செல்லும் அவனை தடுத்து நிறுத்திய ஜனனிசாப்பிட்டு போடா..” என்று கூறஇனிமே உங்க பொண்ணோட புருஷனா தான் இந்த வீட்டுல சாப்பிடுவேன்அதுவும் இவரு வாங்க மாப்பிளை சாப்பிடுங்க மாப்பிளை சொன்னா தான் சாப்பிடுவேன்..” என்று கூறி கிளம்பிவிட்டான்

போகும் அவனை தான் எல்லாரும் சிரிப்புடன் பார்த்து கொண்ட இருந்தனர்.. அதன்பின் கார்த்திகாவை பார்க்க அவள் வெட்கப்பட்ட்து கொண்டே அறைக்கு ஓடிவிட்டாள்.. அவள் பின்னே அவள் தம்பியும் ஓடிவிட்டான்..

பெரியவர்கள் மட்டும் இருக்க வாணன் தான்ஏன்டா வெளிய மாப்பிளை பாத்த..” என கேட்கஅண்ணா நான் எல்லாம் பாக்கல பொண்ணு கேட்டாங்க.. நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லஅப்படினு சொல்லிட்டேன்.. ரெண்டு மூணு இடம் போன் பண்ணிட்டே இருந்தாங்கஅவங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்.. இதை ஜனனி கிட்ட நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ற வயசாகிடுச்சா பொண்ணு கேட்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்கஅப்படினு சொல்லிட்டு இருந்ததை நம்ம வீட்டுல ஒன்னு கடைசியா பொறந்து இருக்கே அது கேட்டுட்டு கல்யாண தேதியே குறிச்சி மாதிரி சொல்லி வெச்சு இருக்கு.. நானும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணவன் தான் ண்ணா.. என் பொண்ணோட முகத்தை பார்த்து நான் கண்டிபிடிக்க மாட்டேனா.. திருவிழா முடிஞ்சு பேசலாம்னு இருந்தேன் அதுக்குள்ள மாப்பிளையே பேச வந்துட்டாருஎன கூர் சிரித்தார்

அவர் கூறிய பின் அனைவரும் மலர்ந்து சிரித்தனர்.. ஏனென்றால் அனைவருக்கும் ஆரவ் கார்த்திகாவுக்கு கல்யாணம் செய்ய தான் ஆசை..

ஆரவ் வீட்டிற்கு சென்றதும் அனைவரையும் ஹாலில் அமர்த்தி ன் காதலை கூறிவிட அனைவருக்கும் அளவில்லா சந்தோஷம் தான்.. நாளையே நல்ல நாளாக இருக்க நிரவி ஊருக்கு செல்வதற்குள் பெண் பார்க்கும் படலத்தை முடித்து விடலாம் என எண்ணி நாளை பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்து இருந்தனர்

முகுந்தன் குடும்பத்திடம் கூற அவர்களுக்கும் அளவில்லா சந்தோஷம்.. அடுத்த நாள் சந்தோசமாய் விடிய பெண் பார்க் குடும்பமாய் கிளம்பினர்.. முகுந்தன் குடும்பம் ஏற்கனவே மெய்யனூர் சென்று இருந்தனர்.. வந்தவர்களை அனைவரும் வரவேற்க கார்த்திகா பச்சை பட்டு உத்தி சந்தோசமாய் அனைவர்க்கும் காபி வழங்கினாள்

அடுத்து மாப்பிள்ளையின் சகோதரி பெண்ணுக்கு பூ வைக்க வேண்டும்.. அனைவரும் ரித்திகாவுக்கு தருவதா நிரவிக்கு தருவதா என தடுமாற இருவரும் சிரித்த முகத்துடன் இணைந்தே கார்த்திகாவுக்கு பூ வைத்தனர்அனைவரும் உணவு அருந்த செல்ல ஆரவ் மட்டும் முறுக்கி கொண்டு அமர்ந்து இருந்தான்.. யார் அழைத்தும் எழாமல் சட்டமாய் அமர்ந்துவிட்டான்

வர்ணன் சிரிப்புடன் விளையாட்டாய் மரியாதையாய்வாங்க மாப்பிளை சாப்பிடுங்க மாப்பிளைஎன அவன் நேற்று கூறியதை கூறி உணவு அருந்த அழைக்க அவன் மாப்பிளை மிடுக்குடன் எழுந்து உணவு அருந்த சென்றான்

திருமணம் ஆறு மாதம் கழித்து வைத்து இருந்தனர்நிரவிக்கு செமஸ்டர் விடுமுறை அடுத்த ஆறு மதத்திற்கு பிறகு என்பதாலும் ரித்திகாவுக்கு குழந்தை பிறந்து மூன்று நான்கு மாதங்கள் ஆகி இருக்கும் என எண்ணி ஆறு மாதம் தள்ளி வைத்துவிட்டனர்..

அதன்பின் சந்தோசமாய் அந்த நாளை கழித்து விட்டு அனைவரும் மனா நிம்மதியுடன் வீட்டிற்கு கிளம்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!