Skip to content
Post Views: 2,328

சுபா நடந்த அனைத்தையும் கூறி இருக்க ரேவதி அதிர்ந்து போய் நின்று விட்டாள்…. அவள் கணவன் ஜேம்ஸும் அதிர்ந்து விட்டான்…..
ரேவதி மனம் திருந்திய பின் அனைவர் பற்றியும் கூறி இருந்தாள்… அதனால் தான் அவன் அதிர்ந்தது….. ஆஷா அர்ஜுனன் போட்டோவையே உற்று பார்த்து கொண்டு இருந்தாள்…
Advertisement
பின் எதையோ ஞாபக படுத்தி ஜேம்ஸை அழைத்து மெதுவாக “அப்பா இவர் இன்னும் சாகல…நான் இவரை பார்த்து இருக்கேன்” என்று கூறினாள்….
Advertisement
“ஆஷா ம்மா என்ன சொல்ற… இவரை எங்க பார்த்த நீ” என்று அவனும் யாருக்கும் கேட்காதவாறு மெதுவாக ஆஷாவிடம் கேட்டான் ஜேம்ஸ்…
Advertisement
“எனக்கு நல்லா ஞாபாகம் இருக்கு…. அம்மா இங்க ஊருக்கு வரதுக்கு முன்னாடி நாள் தான் இந்த அங்கிளை எங்க ஊருல இருந்த நதில இருந்து எடுத்துட்டு வந்தாங்க பேட் கைஸ்….. யார்கிட்டயும் வெளிய இதை பத்தி சொல்ல கூடாதுனு மிரட்டுனாங்க…. அடுத்த நாள் அம்மா பயந்துட்டே வேலைக்கு போகனும்னு சொன்னாங்க…. அவங்க அம்மாவை மிரட்டி தான் வேலைக்கு அனுப்புனாங்க… அப்பறம் ரொம்ப நாள் இந்த அங்கிள் எங்க ஊருல தான் இருந்தாரு… ஆனா அவருக்கு அவர் யாருன்னே தெரியல….இதுக்கு மேல என்ன ஆச்சுனு தெரியல…” என்று கூறி முடித்தாள்….
Advertisement
இதை பற்று ஆஷாவின் அம்மா தான் கூற வேண்டும் என நினைத்து “மதி ஒரு அரை மணி நேரம் ஒரு முக்கிய வேலை இருக்கு… நானும் பாப்பாவும் போயிட்டு வரோம்… இங்கேயே இருக்கியா” என்று கேட்டான்…
ரேவதியும் “சரி” என்று கூறிவிட்டு “கொஞ்ச நேரம் இருக்கட்டா க்கா” என்று சுபாவிடம் கேட்டாள்…. சுபாவும் சரி என கூறிவிட்டாள்…
அவர்கள் இருவரும் சென்ற பின் ரேவதி சுபாவின் பக்கம் திரும்பி “நீங்க இங்க வந்த வாட்டி ஊருல உங்களை யாரும் தேடலயா க்கா… உங்க அண்ணாங்க ரெண்டு பேர் இருப்பாங்க… அப்பறம் சசி கர்ணா இவங்க எல்லாம் தேடி இருக்கலாம்ல… அவங்க ஏன் தேடல…” என்று கேட்டாள்….
சுபாவோ “தேடி இருப்பாங்க… இப்பயும் தேடிட்டு தான் இருப்பாங்க…. ஆனா நான் இங்க இருப்பேன்னு நினைச்சி இருக்க மாட்டாங்க… ஏன்னா மாமா இங்க தான் கீழ விழுந்து கிடைக்காம போனாரு…. அதுனால என்னை இங்க தேடி இருக்க மாட்டாங்க…. முகுந்தன் அண்ணா தான் சொன்னாரு… ஜனனி இங்க தேடி பாக்கலாம்னு சொன்னப்பா மத்தவங்க இங்க இருக்க மாட்டனு சொல்லி இருக்காங்க.. அந்த அண்ணாவும் பேசி பேசியே இங்க வர விடாம பண்ணி இருக்காரு…. என்னை தேடமா இல்லை…. ஆனா எனக்கு அங்க போக பயமா இருக்கு… நிரவி குட்டி அங்க சந்தோசமா இருக்கட்டும்… நானும் ஆரவும் இங்கேயே இருந்துக்குறோம்…” என்று கூறி முடித்தாள்…
“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே” என்று ரேவதி கேட்டாள்….
சுபாவோ இல்லை என்று தலையாட்டினாள்…. “நீங்க இன்னும் அத்தான் உயிரோட இருப்பாருனு நம்புறீங்களா… இப்போ கூட கீழ விழுந்து கிடைக்கல தான் சொன்னிங்க…. இந்நேரம் உயிரோட இருந்தா உங்களை தேடி வந்து இருப்பாருல”என்று தயங்கியாவாரு ரேவதி கேட்டாள்….
“கண்டிப்பா வந்து இருப்பாரு…. ஆனா இப்ப வரலனா எல்லாம் மறந்து இருக்கும்… அவர் வரலனாலும் என்னை அவர் கண்டிப்பா நினைச்சிட்டு தான் இருப்பாரு… இன்னிக்கு வரலனா கண்டிப்பா ஒரு நாள் என்னை தேடி அவர் வருவாரு….. நீயும் பாப்ப…” என்று நம்பிக்கையுடன் கூறினாள் சுபா…
அதே நேரம் அர்ஜுனனும் அங்கு அவளை பற்றி தான் அதியிடம் பேசிக் கொண்டு இருந்தான்… (அதி யாருனு தெரியாதவங்க என்னோட போட்டி கதை தேவதையின் தேவதூதன் அவன் கதை படிச்சா தெரியும்)….. சுபா ரேவதியிடம் தன் கடந்த காலத்தை கூற ஆரம்பித்த போது அர்ஜுனனும் தனக்கு நினைவு திரும்பிய பிறகு நடந்த அனைத்து விஷயத்தையும் கூற ஆரம்பித்து இருந்தான்….
“எனக்கு நினைவு திரும்புற அப்ப ஒரு காட்டுக்குள்ள இருந்தேன்… பக்கத்துல ஒரு பாப்பாவும் ஒரு பெரியவரும் இருந்தாங்க… ஆனா எனக்கு நான் யாருனே தெரியல… அவர் என்கிட்ட வலி எதோ இருக்கா அந்த மாதிரி கேட்டுட்டு இருந்தாரு… நானும் வலி இல்ல நான் எப்படி இங்க வந்தேன் அப்டினு கேட்டுட்டு இருந்தேன்… அவர் சொல்ல கொஞ்ச நேரம் யோசிச்சாரு… ஆனா அவர் உண்மையை சொல்ல ஆரம்பிக்குற அப்ப ஒரு முப்பது வயசு லேடி ஓடி வந்து என் கையை பிடிச்சு நான் தான் உங்க பொண்டாட்டி அப்டினு சொன்னாங்க… பட் அவங்க முகத்துல இருக்க பதட்டத்துக்கும் அவங்க கண்ணுல இருக்க திமிருக்கும் சம்பந்தமே இல்லை…. எனக்கு அவங்கள என் பொண்டாட்டியா பாக்கவே முடியல… அவங்க என் கையை பிடிச்சிட்டு இருக்குறது கூட ஒரு மாதிரி அருவருப்பா இருந்தது… அது வேற யாரும் இல்லை… சிவங்கங்கை எம்எல்ஏ வோட பொண்ணு காருண்யா தான்…. ” என்று கூறினான் அர்ஜுனன்….
“அப்பறம் எப்படி அவங்க கூட போனீங்க…” என்று அதி கேட்டான்…. அதற்கு அர்ஜுனனோ அவன் கையை பிடித்து அமர்ந்து இருந்த சிறுமியை காட்டி “தோ இவளுக்காக தான்…” என்று கூறி கூற ஆரம்பித்தான் அர்ஜுனன்….
நாம என்ன நடந்ததுனு பாத்துட்டு வரலாம்….
சிவகங்கை சுற்றுவட்டார பகுதியில் அய்யாதுரை என்றால் ஒரு பயம்… அவர் எம்எல்ஏவாக தொடர்ந்து மூன்று முறை இருந்துள்ளார்… ஆனால் இந்த முறை அவரால் வெற்றிபெற இயலவில்லை… அதனால் கடும்கோவத்தில் தன் மகளிடம் கத்திக்கொண்டு இருந்தார்….
“எங்க போய் தொலைஞ்சான் உன் புருஷன்…. நான் அப்பவே சொன்னேன்னே யாருக்கும் தெரியாம உன் பொறிக்கித்தனத்தை பண்ணு இப்ப பண்ணாதனு அவன் பண்ண காரியத்துல இப்போ பாரு நான் தோத்துட்டு நிக்குறேன்….” என்று கோவமாக திட்டிக்கொண்டு இருந்தார்……
அவர் மகள் காருண்யாவோ “அப்பா அவன் அப்படி தான் அவனை பத்தி தெரிஞ்சு தானு கல்யாணம். பண்ணி வெச்சுங்க…. இப்போ என்ன… எங்கயோ போய் தொலையட்டும் கருமம் இந்த பிசாசுசையும் கூட்டிட்டு போய் இருக்கலாம்… ரெண்டு நாளா அப்பா அப்பானு ஒரே அழுகை… ஏய் பொன்னம்மா இவளை இழுத்துட்டு போ..” என்று அங்கு வேலை செய்யும் பெண்மணியிடம் கூறிவிட்டு மீண்டும் தந்தையிடம் திரும்பி “அப்பா நாளைக்கு கேரளா போகனும் ஞாபகம் இருக்கா… ஆனா ஒரு வாரம் பிரஸ் எல்லாம் நம்ம வீட்டுக்கு வெளிய தான் சுத்துவாங்க….” என்ன பண்ணலாம் என்று கேட்டாள்…
அப்போது அந்த எம்எல்ஏக்கு கால் வந்தது.. அதில் சொன்ன விஷயத்தை கேட்டு “ச்சே இருக்குற பிரச்சனைல இது வேறயா… யாருக்கும் சொல்லாத… நாங்க வரோம்… அங்க பக்கத்துல இருக்க ஆளுங்க யாருமே இருக்க கூடாது எல்லாரையும் வெளிய அனுப்பிடு… நீ மட்டும் தான் அங்க இருக்கனும்” என்று கூறி தலையை பிடித்து கொண்டு அமர்ந்து கொண்டார் அய்யாதுரை….
காருண்யா அவரிடம் “என்ன ஆச்சு ப்பா என்ன பிரச்சனை” என்று கேட்டாள்…
அவரோ “உன் புருஷன் பண்ணை வீட்டுல மருந்து குடிச்சு செத்து போய் கிடக்குறானம்… ஏற்கனவே பிரஸ் எல்லாம் இங்க தான் சுத்திட்டு இருக்கு… இப்போ இது தெரிஞ்சா அவனை நாம தான் கொன்னு இருப்போம்னு போடுவாங்க… என்ன பண்ணலாம்” என்று சிறு பதட்டம் இல்லாமல் கேட்டார்…
அவளோ சிறு அதிர்ச்சி கூட இன்றி “வேற நாளே இல்லையா அவனுக்கு சாக.. அப்பா கண்டிப்பா நாம இன்னிக்கு கேரளா போயே ஆகணும்…. யாருக்கும் தெரியாம அங்கேயே புதைக்க சொல்லிடுங்க.. நாம அங்க எல்லாம் போக வேண்டாம்” என்று தன் கணவன் இறந்து விட்டான் என்ற சிறு வருத்தம் இன்றி கூறினாள்…
“இல்லடா போயிட்டு வந்துரலாம்… நம்ம கண்ணு முன்னாடியே புதைக்கட்டும்… இல்லனா பிரச்சனை ஆயிடும்…” என்று கூறினார்…
அவளும் சலித்து கொண்டே “அந்த ஆளை கல்யாணம் பண்ணி வெச்சிங்க சரி… இந்த சனியனை ஏன் கூட்டிட்டு வந்திங்க…. இப்போ அவன் போயிட்டான்… இந்த சனியனை கொன்னா நமக்கு தான் பிரச்சனை” என்று இரக்கம் இன்றி கூறினாள்….
அப்பா மகள் இருவரும் சலித்து கொண்டே காருண்யாவின் கணவன் லிங்கம் இறந்து கிடைக்கும் பண்ணை வீட்டுக்கு சென்றனர்… அந்த வீட்டில் வேலை செய்யும் பொன்னம்மா தான் அங்கிருக்கும் சிறுமியை பார்த்து கவலைபட்டு கொண்டார் சிறுமியின் நிலையை நினைத்து….
error: Content is protected !!