Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஓசை 31 (இரண்டாம் பாகம்)

அன்று திருவிழா முடிந்த பின் அனைவரும் அர்ஜுனன் வீட்டிற்கே செல் அனைவரும் அறைக்கு சென்று உறங்கி விட அர்ஜுனனும் சுபாவுடன் உறங்க சென்றான்குழந்தைகள் ஆளுக்கு ஒருவருடன் உறங்க சென்று விட இருவர் மட்டும் தனித்து இருந்தனர்


Advertisement

சுபாவின் முகம் யோசனையாகவே இருந்ததுஅர்ஜுனனை அமர வைத்து அவன் காலை தன் மடியில் வைத்து அமுக்கி விட்டு கொண்டு இருந்தவள் கவனம் அவனிடம் இல்லை..
அம்முஎன்று இரண்டு மூன்று முறை அழுத்தி கூப்பிட பின் தான்என்ன மாமாஎன்று கேட்டாள்
என்ன யோசனையில இருக்க அம்மு.. உன் கவனம் இங்க இல்லைசாமி வாகு எதோ தப்பா…..” என்று அவன் கூறி முடிக்கும் முன்பேஅப்படி எல்லாம் எதுவும் இல்ல மாமாநிரவி குட்டிக்கு எல்லாருக்கும் வைக்கும் போதே விபூதி வெச்சாங்கஆனா கடைசில திரும்பியும் பாப்பாவை முன்னாடி கூப்பிட்டு சாமி கயிறு கட்டிவிட்டு விபூதி பூசித்து ஒரு நிமிஷம் பாப்பாவை பார்த்துட்டே உங்க மேல இருந்து இறங்கிட்டாங்க…..” என்று கூறி ரா பூசையில் நடந்த அனைத்தையும் கூறினாள்அவனும் உள்வாங்கி கொண்டான்

Advertisement

அம்மு நிரவி குட்டிக்கு எதுவும் ஆகாதுநாம இல்லாம பாப்பா ரொம்ப கஷ்டப்பட்டாஅதனால சாமி நின்னு பார்த்துட்டு போய் இருப்பாங்க…. நானும் பாப்பாவுக்கு நான் இருக்கேன்சசி கர்ணன் உன் அண்ணனுங்க இருக்காங்க… athuku மேல அய்யனார் இருக்காருநீ கவலைப்படாதஎனக்கு இப்போ கால் வலி இல்ல அம்மு.. வா வந்து தூங்கு….” என்று அவளை தன் கை வளைவில் வைத்து தானும் உறங்கிவிட்டான்

Advertisement

அடுத்த நாள் ஐந்தரை மணிக்கே எழுந்த சுபா அடித்து போட்டது போல் உறங்கும் தன்னவனை பார்த்தவள் அவன் தூக்கம் கலையாதவாறு எழுந்தவள் குளித்து ஆறு மணிக்கு கீழே சென்றாள்யாரும் இல்லை எழவில்லைஅவள் வாசலுக்கு சென்றவள் கூட்டி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு கொண்டு இருக்க ரித்திகாவும் சீக்கிரமே எழுந்தவள் சுபா வெளியில் இருப்பதை பார்த்து அவள் அருகில் சென்றாள்
அவளை பார்த்து சிரித்த சுபாகுட் மார்னிங் ரித்தி குட்டிஅதுக்குள்ள ஏன் எழுந்திங்கநைட் லேட்டா தானு தூங்கி இருப்பிங்கஇன்னும் கொஞ்ச நேரம் போய் தூங்குங்க…” என்று கூறினாள்
இல்ல ம்மாதூக்கம் வரல அது தான் எழுந்துட்டேன்…” என்று தயக்கமாக கூறினாள்

Advertisement

அவளின் தயக்கத்தை பார்த்த சுபாஎன்ன குட்டி அப்பா பத்தி கேட்கனுமாஎன்று கேட்டாள்அவள் பாவமாக தலையாட்ட திருவிழா பற்றி கூறிஅது நம்ம சாமி குட்டி எதுவும் ஆகாதுஅப்பா இப்போ எல்லாம் நார்மலா தான் இருப்பாங்கநீ வேணும்னா போய் பாரு…” என்று அனுப்பி வைத்தாள்….
ரித்திகா அறைக்கு சென்று பார்க்கும் போது அர்ஜுனன் சுபா தன் அருகில் இல்லை என்பதை அறிந்து மெல்ல கண் திறந்து எழுந்து அமர்ந்தான்ரித்திகா தயங்கி தயங்கி அறை வாசலில் நிற்க அர்ஜுனன் அதை பார்த்துபாப்பா ஏன் அங்க நிக்குறீங்கஅப்பா கிட்ட வாங்க…” என்று கை நீட்டி அழைத்தான்
அவளும் ஓடி சென்று அவன் கை வளைவில் அமர்ந்துகுட் மார்னிங் ப்பா…” என்று கூறினாள்அர்ஜுனனும் அவள் உச்சியில் முத்தமிட்டுகுட் மார்னிங் டாஅதுக்குள்ள என்ன எழுந்துட்ட… கொஞ்சம் நேரம் அப்பா கூட தூங்கு நானும் தூங்க தான் போறேன்…” என்று கூறி அவன் படுத்து அவளையும் தட்டி தூங்க வைத்து விட்டு தானும் உறங்கிவிட்டான்
இதை எல்லாம் ஒரு குட்டி உருவம் ஓரமாக அழுது கொண்டே பார்த்து இருந்தது…. வேகமாக மீண்டும் தான் படுத்து இருந்த அறைக்கு சென்று அழுது கொண்டே படுத்துவிட்டதுவேறு யாரும் இல்லை நிரவி குட்டி தான்சசியிடம் தான் இரவு தூங்கினாள்அப்பாவிடம் நான் தான் முதலில் குட் மார்னிங் கூறுவேன் என்று சசியிடம் கூறிவிட்டு எழுந்து ஓடினாள்ஆனால் அங்கு ஏற்கனவே ரித்திகா இருந்ததை பார்த்து மீண்டும் சசியின் அறைக்கே சென்றுவிட்டாள்….
சசி அவள் அழுது கொண்டே வருவதை பார்த்து அவளை தன் மடியில் அமர வைத்துகுட்டிமா ஏன் அழுவுறீங்ககீழ விழுந்துட்டீங்களா…” என்று அவள் உடலில் எதோ காயம் தெரிகிறதா என்று ஆராய்ந்தான்
ஹூம் இல்ல சசிப்பாநான் அப்பா பாக்க போனேனா அங்க அவங்க இருக்காங்கஅவங்க அப்பா கிட்ட குட் மார்னிங் ப்பா சொல்றாங்கஅப்பா அவங்களுக்கு இங்க கிஸ் பண்றாங்க…” என்று உச்சந்தலையை காட்டி கூறிவிட்டுஅப்புறம் அப்பா அவங்களை அவங்க பக்கத்துல படுக்க வெச்சிகிட்டாங்கபாப்பா பாக்கலை…” என்று அழுது கொண்டே கூறினாள்
அச்சோ குட்டிமா இதுக்கு எல்லாம் அழுவங்களாபாப்பா எவளோ ஸ்ட்ரோங்அப்பா பாத்து இருக்க மாட்டாங்கநான் சொல்லி இருக்கேன் எதுக்கு எடுத்தாலும் அழுக கூடாதுபாப்பா பிரேவ் கேர்ள்னு பிரேவ் கேர்ள் அழுவங்களா இல்லை தானுபாப்பா அழுதா பிரேவ் அண்ட் ஸ்ட்ரோங் கேர்ள் இல்லஇப்போ பாப்பா கொஞ்ச நேரம் தூங்குங்க…” என்று அவளை பெட்டில் படுக்க வைத்து விட்டு அங்கு மெத்தையில் உறங்கும் தன் மனைவி மற்றும் மகள்களை பார்த்தான்நான்கு பேர் இருப்பதால் குழந்தையை வைத்து கொண்டு சரியாக உறங்க முடியாது என சசி எப்போதும் கீழே தான் உறங்குவான்நேற்று நிரவி குட்டியும் அவன் மார்பிலே உறங்கிவிட்டாள்….
தன் நான்கு தேவதைகள் உறங்குவதை சிரிப்பு பொங்க பார்த்து கொண்டு இருந்தவன் நிரவி குட்டி அப்போதும் தேம்பி கொண்டே உறங்குவதை பார்த்து முகம் அப்படியே மாறிவிட்டது….. அவளுக்கு ஒரு நெற்றி முத்தமிட்டவன் அவள் விழாதவாறு தலையணை வைத்து விட்டு அவன் மனைவியிடம் சென்றான்அவளும் ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்தாள்அவளை தொந்தரவு செய்யாமல் மென்மையாக முத்தமிட்டு விட்டு குளித்து விட்டு ஹாலிற்கு சென்றான்
அங்கு சுபா மட்டுமே இருந்தாள்மற்றவர்கள் யாரும் இன்னும் எழவில்லை…. சசி இன்னும் சுபாவிடம் சரியாக பேச ஆரம்பிக்கவில்லைகேள்வி கேட்டால் பதில் இல்லை என்றால் அமைதியாக சென்றுவிடுவான்…. அவன் வருவதை பார்த்து காபி கலக்கியவள் சோபாவில் அமர்ந்து இருந்தவன் அருகில் சென்றாள்…. காபியை வாங்கியவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லைஏன் ஒரு தலையசைப்பு கூட இல்லை
குடித்து விட்டு அவன் எழ பார்க்கசச்சுஎன்ற அவள் அழைப்பில் நின்றான்அவள் அழைத்து விட்டாளே தவிர்த்து பேசாமல் அவளை பார்க்க வேகமாக வெளியில் சென்றுவிட்டான்
அதன் பின் ஒரு ஒருதராக வர அவர்களுக்கு வேண்டியதை குடிக்க கொடுக்க ஆரம்பித்தாள்பெண்கள் அனைவரும் சேர்ந்து காலை உணவு செய்ய ஆண்கள் அப்படியே வயல்களை பார்க்க சென்றுவிட்டனர்கார்த்திகா சிவனேஸ் தவிர்த்து மற்றவர்கள் உறங்கி கொண்டு இருக்க அர்ஜுனனும் இன்னும் எழாமல் இருந்தான்
காலை உணவை சமைத்து முடித்து விட்டு முதலில் சசியின் அறைக்கு சென்ற சுபா அங்கு கண்களில் கண்ணீர் வடிய உறங்கும் தன் மகளை பார்த்து உறைந்து நின்று விட்டாள்….
மித்ரா அறைக்கு வந்தவள் சுபா நிற்பதை பார்த்துஎன்ன சுபி பாப்பா அழுதுட்டு தூங்குறானு பாக்குறியாகாலைல சீக்கிரமே அர்ஜுனன் அத்தானுக்கு குட் மார்னிங் சொல்ல போய் இருக்கா அங்க அந்த பொண்ணு ஏற்கனவே சொல்லிட்டு இருந்து இருக்குஅது மட்டுமில்லாம பாப்பாவை பாக்காம அத்தான் அந்த பொண்ணை தூங்க வெச்சு இருக்காங்கஅதை பார்த்துட்டு அழுதுட்டே சசி கிட்ட சொல்லி இருக்காநானும் சசியும் ஒன்னு தான் சொல்றோம் சுபி அந்த பொண்ணை பாத்துட்டு பாப்பாவை விட்றாதீங்க ரெண்டு பேரும்பாப்பா உன்னை போல ரொம்பவே சாப்ட்…. சின்னதா காயம் பட்டா கூட தங்கமாட்டாஅவளை காயப்படுத்தீடாதிங்கபாக்க முடியலைனா நாங்க பாப்பாவை பாத்துக்குறோம்நீங்க அந்த பொண்ணை மட்டும் பாத்துக்கோங்க….. எங்க ரெண்டு பேருக்குமே நிரவி ரொம்ப முக்கியம்…” என்று கூறியவள் நிரவி குட்டியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்பாப்பாவும் அவளை உணர்ந்துலவ் யூ மித்தும்மாஎன்று கூறி ஆழ்ந்து உறங்க ஆரம்பித்துவிட்டாள்…..
சுபா அதை கண் கலங்க கேட்டு கொண்டு இருந்தாள்மித்ரா எழுந்தவள் உன்னை காயப்படுத்த சொல்லல சுபாநிஜம் அது தான்நீங்க பாப்பாவை வேணும்னேவாய்ட் பண்ணல தெரியும் ஆனா அப்படி தான் நடக்குதுஎன்று அவள் கூறி கொண்டு இருக்கும் போதே அவர்களின் இரண்டாவது மகள் எழுந்து அழ ஆரம்பித்து விட மித்ரா அவளை பாத்ரூம் அழைத்து சென்றுவிட்டாள்
அவள் அறைக்கு சென்று பார்க்கும் போது ஆரவும் அங்கு தான் இருந்தான்அவன் அர்ஜுனனின் மறுபக்கம் படுத்து உறங்கி கொண்டு இருந்தான்இதை பார்த்த சுபாவிற்கு மித்ரா சொல்வது போல் நிரவி தங்களிடம் இருந்து விலக ஆரம்பித்ததை போல் இருந்தது… இனிமேல் அவர்கள் தெரியாமல் செய்யும் தவறுகளே நிரவியை இன்னும் அவர்களிடம் இருந்து விலக ஆரம்பித்துவிடுவாள் என தெரியாமல் இதற்கே கண் கலங்கி நின்று இருந்தாள் சுபத்திரா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!