Skip to content
Post Views: 3,033
அத்தியாயம் 17
காலை ஆறு மணி, அருண் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது. யாருடா காலையிலே என்று எட்டி பார்த்தார் செந்தில். செந்தில், ராஜா இருவரும் தோட்டத்தில் தங்கள் செல்ல மகளிடம் மாட்டி கொண்டு முழித்து கொண்டிருந்தார்கள்.
Advertisement
“என்ன சித்தப்பா, சொல்றதை கவனமா கேளுங்க. எத்தனை தடவை சொல்றது?” என்றாள் விசாகா.
ஆட்டோவில் இருந்து இறங்கி வந்தான் கதிர். அவனுக்கு ட்ரைனிங் முடிந்து தூத்துக்குடியில் போஸ்டிங் கிடைத்திருந்தது. அங்கே சேர்வதற்கு முன், இரண்டு நாட்கள் குடும்பத்தோடு இருக்கலாம் என்று வந்திருக்கிறான்.
Advertisement
Advertisement
“என்ன விசா காலையிலே தோட்டத்துல ஒரு பயற்சிகூடம்?” என்று இவர்களிடம் வந்தான்.
விசாகா மதுரையில் தனது இளங்கலை படிப்பை முடித்துவிட்டு இப்பொழுது கவர்ன்மென்ட் அக்ரி ஆபிசர் பரிட்சைக்காக வீட்டில் இருந்தே தயார் செய்து கொண்டிருக்கிறாள்.
Advertisement
அங்கே மதுரையில் சிலம்பம் கற்றுக்கொண்டிருந்தாள், இங்கே தினமும் பயிற்சி மேற்கொள்கிறாள். தனியே செய்ய போர் அடிப்பதால், சித்தப்பாக்கள் இருவருக்கும் கற்று கொடுத்துக்கொண்டிருக்கிறாள். தினமும் காலை ஐந்தரை முதல் ஆறரை வரை இவளிடம் சிக்கி தவிக்கின்றார்கள் இருவரும்.
“கதிர் அண்ணா.. வா வா “ என்று ஆரவாரமாக வரவேற்றாள்.
“டேய் கதிரு, வா வா.. உள்ளே போவோம் வாடா” என்று செந்திலும் ராஜாவும் இது தான் சாக்கென்று உள்ளே செல்ல பார்த்தார்கள்.
“அப்பா.. நீங்க சின்ன வயசுல என்ன சொல்லி என்னை வளர்த்தீங்க.. டெடிகேஷன்… டிடெர்மினேஷன்.. ரொம்ப முக்கியம் அப்படினு தானே?”
“நானா?” என்றார் செந்தில்.
“அதுக்கு…” என்றார் ராஜா.
அதனால உங்க பயிற்சியை சிறப்பா முடிச்சிட்டு வாங்க.. நான் ரெண்டு நாள் இங்க தானே இருக்க போறேன் என்று அவர்களை விசாகாவிடம் மாட்டி விட்டுவிட்டு கிளம்பினான் கதிர்.
“சித்தப்பா, கெட்டியா புடிங்க சிலம்பத்தை.. இப்படி பின்னாடி கொண்டுவாங்க..” என்று விசாகா மிரட்டுவதை கேட்டுக்கொண்டே நேரே பின்பக்கம் சென்று, முத்து கருப்பன் வீட்டு பக்கம் சென்றான்.
பின் பக்கம் கேட்டில் இருந்து அன்னம் விசாகாவின் பயிற்சியை தான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். இவனை பார்த்தது “வா வா கதிர்..” என்றார் உற்சாகமாக.
“அன்னும்மா.. எனக்கு கொஞ்சம் கருப்பட்டி காபி” என்று உரிமையாக கேட்டு அவருடன் அவர்கள் வீட்டினுள் நுழைந்தான்.
“எங்க முத்து? தூங்கறானா?”
“அவன் இன்னிக்கு வேலை முடிச்சு மதியம் தான் வருவான் கதிர். பதினெட்டு மணி நேரம் ஷிப்ட் போட்ருக்காங்க.. எப்படி தான் வேலை செய்றானோ? டாக்டர் படிச்சா பெருமையா இருக்கும்னு நான் நினைச்சேன் டா.. இப்ப பாத்தா ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு “ என்று புலம்பினார்.
கதிர் சிரித்து கொண்டான்.
“நீயும் ரொம்ப இளைச்சு போய்ட்ட டா.. வேலை கஷ்டமா இருக்கா?”
“இப்ப தான் ட்ரைனிங் முடிஞ்சிருக்கு. வேலை கஷ்டமா இருந்தாலும் இஷ்ட பட்டு செஞ்சா சந்தோசமா தான் இருக்கும்”
“நல்லா பேசுறீங்கடா எல்லாரும்.. நீ ஹால்ல போய் உட்காரு, ரெண்டு நிமிஷம், காபி எடுத்துட்டு வரேன். ஆம்லெட் போடவா?”
“பெப்பர் தூக்கலா போடுங்க” என்று கூறிக்கொண்டே ஹாலிற்குள் சென்று பேப்பர் எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
“அன்னு… அன்னு.. சீக்கிரம் வாம்மா.. “ என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தார் சுந்தரம்.
“ஒரு நிமிஷம் இருங்க வரேன்” என்று அடுப்படிக்குள்ளே இருந்து குரல் கொடுத்தார் அன்னம்.
“டெய்லி தம்பி இருக்கான்.. இல்லனா விசாகா இருக்கான்னு போக்கு காட்டி வர மாட்டேங்கற.. இன்னிக்கு தான் யாருமே இல்லையே.. வரியா இல்லையா?” என்று மீண்டும் குரல் வந்தது உள்ளே இருந்து.
“போச்சு.. போச்சு..” என்று அன்னம் கையில் ஆம்லேட்டுடன் வேகமாக ஹாலிற்குள் நுழைந்தார்.
“நீ வரியா.. நான் அப்படியே வெளிய வரவா.. முதுகுக்கு சோப்பு போட எவ்வளவு நேரம் கூப்பிடறது” என்றார் சுந்தரம்.
அவருக்கு கதிர் இருப்பது தெரியாது அல்லவா?
அன்னம் மேலே அவர் பேசுவதை தடுப்பதற்குள், “அய்யய்யோ.. வந்துடாதீங்க மாமா.. காலையில பச்சை புள்ளய பயமுறுத்திடாதீங்க.. காபி குடிக்க வந்தது ஒரு குத்தமா? ஆளை விடுங்க” என்று அன்னம் கையில் இருந்த ஆம்லெட்டை ஒரு கையில் எடுத்து கொண்டு , “ஆத்தி.. அன்னும்மா.. எனக்கு காபி கேன்சல்.. காலையில மாமா என் கண்ணை கெடுத்துட போறாரு.. நீங்க முதல போய் சோப்பு போடுங்க.. எங்க பெரியம்மாவை காபி போட சொல்லிக்கிறேன்” என்று கூறிக்கொண்டே ஒடிவிட்டான் கதிர்.
“அய்யோ மானம் போச்சு” என்று சுந்தரமும் அன்னமும் தலையில் அடித்து கொண்டார்கள். பின் கதிர் இன்றைய தலைப்பு செய்தியாக இதை வாசித்து விடுவானே?
பின் கதிர் நேரே அருண் சாலா வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே அருணும் சாலாவும் பேப்பர் படித்து கொண்டிருந்தார்கள். ஒரே பேப்பரை இருவரும் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். அருண் கையில் காபி கப் இருந்தது. அவர் ஒரு மிடறு குடித்து விட்டு சாலாவிடம் கொடுத்தார். பின் சாலா ஒரு மிடறு குடித்தார். பார்க்க அவ்வளவு கவித்துவமாக இருந்தது அந்த காட்சி..
கதிர் தொண்டையை கனைக்கவும், இருவரும் வேகமாக விலகி அமர்ந்தார்கள்.
“வா வா கதிரு” என்று இருவரும் வரவேற்றார்கள். “பெரியம்மா காபி” என்று கூறிக்கொண்டே அமர்ந்தான்.
“நீங்க பயிற்சிக்கு போகலையா பெரியப்பா” என்றான் அருணிடம்.
“ஒரு நாள் போனேன், உங்களுக்கு வராதுன்னு விசாகா அனுபிட்டா..” என்றார் சோகமாக.
“ஹா.. ஹா.. ஹா.. உங்க நடிப்பை என்கிட்ட காட்டாதீங்க.. விசாவே போங்கன்னு சொல்ற மாதிரி பண்ணிருப்பீங்க.. பாவம் உங்க தம்பிங்க.. எஸ்கேப் ஆக தெரியாம முழிக்குறாங்க”
“போலீஸ் காரன் இல்ல.. இதெல்லாம் கண்டுபிடிக்காம போய் கிரிமினல்ஸ கண்டுபுடி போடா“
பின் சாலா கொடுத்த காபி குடித்துவிட்டு மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு முதல் மாடிக்கு சென்றான்.
அவன் மாடிக்கு சென்று சற்று நேரத்தில் பாலு வந்திறங்கினான். கதிர் போல ஆரவாரம் இல்லாமல் அமைதியாக வந்தான். அவன் கோயம்பத்தூரில் மருத்துவம் படித்து கொண்டிருக்கிறான். கதிர் வருவதால் வெள்ளி கிழமை லீவ் போட்டு சனி ஞாயிறும் சேர்ந்து வருமாறு கூறி இருந்தார் சாலா.
“என்ன பெரிய மம்மி .. இப்ப இந்த வீட்ல தான் பாப்புலேஷன் அதிகம் போல” என்று நுழைந்தான்.
“கதிர்… கதிர்வேல் ஐ.பி.எஸ். வாங்க வாங்க” என்று நாடக பாணியில் வரவேற்றார் வள்ளி.
சேந்தன் பாதி தூக்க கலக்கத்தில் கையில் பாலை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.
நல்லம்மை அலுவலகம் கிளம்பி தயராக வந்தாள்.
“வாங்க தம்பி” என்று கதிரை வரவேற்றாள்.
“என்ன அண்ணி, கோழி கூவரப்ப ஆபிஸ் கிளம்பி நிக்கறீங்க?”
“அவ ஆபிஸ் போக ரெண்டு மணி நேரம் ஆகுது டா.. அதான் ஏழு மணிக்கு கிளம்பிடுவா” என்றார் வள்ளி.
“நல்லா.. இன்னிக்கும் சாப்பிடாமா போக கூடாது… இந்தா சீக்கிரம்” என்று கையில் ஒரு பவுலில் உணவை எடுத்து கொண்டு வந்தான் வீரா.
“ஏங்க நிஜமா டைம் ஆச்சு… நீ வாயை திற..” என்று ஸ்பூனில் அவளுக்கு ஊட்டி விட்டான்.
“சேந்தன் கூட ஒழுங்கா சாப்பிடறான், நீ தான் இப்படி சாப்பிட படுத்துற” என்று கையில் ஜூஸுடன் வந்தாள் மயில்.
“இப்ப தான் காபி குடிச்சேன், எனக்கு ஜூஸ் வேண்டாம்” என்றான் கதிர்.
“உனக்குன்னு சொன்னாளா? நம்ம இருக்கறது ரெண்டுக்கும் கண்ணு தெரியாது. பல்ப் வாங்காமா இரு” என்று நொடித்து கொண்டார் வள்ளி.
ஜூசையும் நல்லம்மை வாயில் ஊற்றினாள் மயில், கேப்பில் வீரா உணவை அவள் வாயில் திணித்தான். வாட்டர் பாட்டில் டிபன் பாக்ஸ் என்று எல்லாம் எடுத்து கொடுத்து, “சீக்கிரம் அவளை விட்டுட்டு வாங்க தம்பி.. அதுக்குள்ள நான் சேந்தனை கிளப்பிடறேன்” என்றாள் மயில்.
நல்லம்மை, வாயில் வீராவும் மயிலும் அடைத்தை முழுங்கி கொண்டே கதிருக்கும் வள்ளிக்கும் கையசைத்து விடைபெற்று கிளம்பி சென்றாள்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் சேந்தனை இதை போலவே கிளப்பி, அவன் பள்ளி வேனில் அவனை அடைத்தார்கள்.
பிறகு தான் வந்து, “வாங்க தம்பி..” என்றார் மயில் கதிரை பார்த்து. “நீ எப்ப டா வந்த?” என்றான் வீரா.
“உங்க ரெண்டு பேருக்கும் இவ்வளவு நேரமா நான் இருந்தது தெரியல அப்ப..”
“ஒரு நாளைக்கே இப்படி சொல்றியே. நான் எல்லாம் தினமும் இப்படி தான்.”
“நீங்க ஹெல்ப் பண்ணலாம் இல்ல பெரிய மம்மி.”
“டேய், பாவம் டா. இவங்க பண்ற அலும்பிலேயே நல்லாவும், சேந்தனும் முழி பிதுங்கி நிக்கிறாங்க.. நானும் போனா அவ்வளவுதான்” என்றார்.
வெற்றி எழுந்து வந்து “வா கதிரு” என்றான். வீராவும் வெற்றியும் பத்து மணி போல தான் ஆபிஸ் கிளம்புவார்கள். அவர்களுடன் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு தங்கள் வீட்டிற்குள் நுழைந்தான்.
“மம்மி வந்துட்டேன்.. உங்க செல்ல பிள்ளை.. உங்களை தேடி ஓடோடி வந்துட்டேன்” என்றான் தெய்வாவை பார்த்து.
“நீ வீட்டுக்கு வந்து ஒன்றரை மணி நேரமாச்சு.. ஓடோடி வந்தியாக்கும் என்னை பார்க்க..போடா ” என்றார் கடுப்பாக.
“என்ன மம்மி இப்படி சொல்லிட்டீங்க… எல்லாரையும் பார்த்துட்டு வந்தா பிரீயா உங்கிட்ட பேசலாம்ல.. பசிக்குது மம்மி”
“போய் குளிச்சிட்டு வா.. உனக்கு புடிச்ச இட்லியும் எலும்பு குழம்பும் தயாரா இருக்கு “
“ எங்க வாத்தியார காணும்?”
“ டேய் கதிரு..” என்று வந்து கட்டிக்கொண்டான் சுப்பு.
பின் அண்ணனும் தம்பியும் இட்லி எலும்பு குழம்பையும் ஒரு பிடி பிடித்தார்கள்.
“டேய் அண்ணா, இங்கேயே போஸ்டிங் வாங்கிட்டு வாடா.. எனக்கு நீ இல்லமா கஷ்டமா இருக்கு.”
“பேசாம நீ தூத்துக்குடி வந்துடேன்”
“மம்மி பாவம்ல..”
“ஹா ஹா ஹா.. ரெண்டு வருஷம் சுப்பு. அப்புறம் நாம கேட்ட இடத்துல போஸ்டிங் கிடைக்கும்”
இப்படி நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்றாக இருந்தார்கள் அந்த வாரம். அதனால் அன்று இரவு அனைவருக்கும் கீழே உணவு என்று சாலா அழைத்திருந்தார்.
——————
error: Content is protected !!