Skip to content
Post Views: 2,432

கருப்பன் ஆட்டம் 10
Advertisement
கருப்பனும் மலரும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு இடையில் கருப்பன் மீதான மரியாதை கடந்த பயமும், மலர் பேசும் பேச்சுகளால் உண்டான பயமும் ஒன்று கூடி, பயத்தில் மயிலுக்கு வயிறே கலக்க ஆரம்பித்தது.
Advertisement
Advertisement
அவள் இருவரையும் பார்த்துவிட்டு இடையே பார்க்க, அங்கே உள்ள கயிற்றுக்கட்டில் குப்புற அடித்த படுத்து கொண்டிருந்தான் தர்மன்.
அவனைப் பார்த்த மயிலோ ‘அட படுபாவி பயலே! இங்க இவ்ளோ பெரிய பஞ்சாயத்து போயிட்டு இருக்கு, இந்த சத்தத்தில் கூட கொஞ்சம் கூட அசராம தூங்குறானே! எப்படி தான் இவனுக்கு இப்படி தூக்கம் வருதோ! என்று நினைத்தவள் இவர்களை சிறிது நேரம் பேசி விட்டு நகர்ந்து வந்தவள்,
Advertisement
அங்கே இருந்த செம்பு தண்ணீரை எடுத்தவள் தூங்கி கொண்டிருக்கும் தர்மன் முகத்தில் சலம்ப தெளித்தவள், பின் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் ரீதியில் மலரிடம் வந்தாள்.
தன்மேல் தண்ணீர் பட்ட உணர்வு தோன்றி பட்டென கண்விழித்த தர்மன், அந்த குட்டி வீட்டிற்குள் கருப்பனை தவிர இருந்த மற்ற இருவரையும் பார்த்தவன் கருப்பனுக்கும் மலருக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதம் ஒன்றும் புரியாமல் தனது தலையை சொரிந்து கொண்டு அவர்களைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தான்.
கடை கண்ணால் அவனை கவனித்த மயிலோ, உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டவள் தன் முன்பு இருக்கும் இரு சண்டை கோழிகளையும் பார்த்தவள்,
அவர்கள் இருவரின் பேச்சுகளும் இப்பொழுது முடிவை எட்டுவதுபோல் இல்லாமல் இருக்கவே, தானே முன் வந்தவள்
“அத்தான் எல்லாம் என் தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க, இனிமே இப்பிடி நடக்காம பாத்துக்குறேன்” என்று கூறிவிட்டு மலரின் கையைப் பிடித்து தர தரவென இழுத்து சென்றால் மயில்.
போகும் வழியில் மலர் மயிலிடம் “ஏய் மயிலு ஏன்டி என்ன புடிச்சி இழுத்துட்டு வந்த? என்ன விட்டுருந்தா அந்த காட்டான இன்னும் நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டு இருப்பேன்ல” என்று மலர் அதே காட்டத்தோடு கேட்டாள்.
“அடியா ஆத்தா! நீ ஏற்கனவே கேட்டு வச்சதுக்கே நீ என் அத்தான் இவ்ளோ அமைதியா இருந்ததே பெரிய விஷயம் பேசாம வாடி என்று அழைத்து சென்றவள்,
நீ ஏண்டி வந்த முதல் நாளே இப்பிடி பிரச்சனைய தூக்கி தலையில் போட்டுக்கிட்டு ஆடுற?” என்று மயில் கேட்டாள்.
“ஏன்டி உன் ஐத்தான் மட்டும் என்ன வாடி போடி அது இதுன்னு பேசுவான் நான் கேட்டுட்டு இருக்கணுமா?”
“நீ என்னமோ வாய் கொறைச்சு பேசுன மாதிரி சொல்ற? அத்தான் தான் ஆம்பள பேசுறார்னா, ஒரு வார்த்தையாவது நீ குறைச்சு பேசுனியா? நீயும் வார்த்தைக்கு வார்த்தை எதுத்து பேச தானடி செஞ்ச?”
“ஆமா! ஏன் உன் ஐத்தானுக்கு மட்டும் தான் வாய் இருக்கா என்ன, எனக்கு எல்லாம் வாயில்ல?”
“உனக்கு வாய் இருக்குன்னு முன்னையே உனக்கு தெரியும்ல. அப்போ இந்த வாயவும் இத்தனை துடுக்கான பேச்சையும் நீ உங்க அம்மா அப்பா கிட்ட கொட்டி உன் மனசுல உள்ளத சொல்லி நியாயம் கேட்டு நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்தி இருக்க வேண்டியது தானடி?” என்று மயில் கேட்டாள்.
அதற்கு மலரிடம் அப்பொழுது எந்த பதிலும் வரவில்லை. அவளின் முகம் வாடி அமைதியானதை உணர்ந்தவள் அந்த பேச்சை மாற்றி நிலைமையை சகஜமாகவும் பொருட்டு,
“வெரசா நடடி எங்க ஆத்தா வேற போனவள இத்தன நேரம் ஆள காணோம்ன்னு இந்நேரம் வெளக்கமாத்தோட நிக்கும்” என்று கூறி மலரை பிடித்து இழுத்துச் சென்றாள் மயில்.
சற்று முன்பு இருந்த அந்த மலர்விழியின் துடுக்குற்ற பேச்சும் முகமும் மொத்தமும் வடிந்து அமைதியான முகத்தோடு மயிலின் பின்னால் சென்றால் மலர்.
மயில் ஊற்றிய தண்ணீரின் உபயத்தால் உறக்கம் கலைந்து எழுந்து கட்டிலில் அமர்ந்திருந்த தர்மன் கருப்பனை பார்க்க,
அவனோ இத்தனை நேரம் மலர்விழியிடம் சண்டையிட்டது வேற ஒருவனோ எனும் ரீதியில் முகம் முழுவதும் பிரகாசிக்க, அடர்ந்து வளர்ந்த மீசைக்கு அடியில் மெலிதாக இழையோடிய இதழ் விரியா புன்னகையோடு தனது மீசையை நீவி கொண்டிருந்தவனை பார்த்த தர்மன் ஒன்று புரியாமல் மேலும் தனது தலையை சொரிந்தவன்,
“டேய் மச்சான்! இங்க என்னடா நடந்துச்சு?”என்று கேட்டான்.
அவன் எழுந்து விட்டான் .என்பதை பார்த்தவன் அவனின் அருகில் சென்று அமர்ந்து, “நீ எப்படா எந்திரிச்ச?” என்று அதே புன்னகை மாறாத பிரகாச முகத்தோடு கேட்டான்.
“நான் எந்திரிச்சது இருக்கட்டும். நீ என்னடா பன்ற? அது பொட்ட புள்ளடா? அந்த புள்ள கூட சரிக்கு சமமா மல்லு கட்டிட்டு இருக்க?” என்று தர்மம் கேட்டான்.
“ஏய் நீ வேறடா அவளை பத்தி தெரியாம பேசாத, அவ சரியான ரப்பு புடுச்ச சண்டக்கோழியா இருக்கா, நான் கூட ஆரம்பத்துல கொஞ்சமா மிரட்டிட்டு விட்ரலாம்னு தான் பார்த்தேன்.
ஆனா அவளோட வாய் கொழுப்பும் திண்ணக்கமான பேச்சும் எனக்கு புடிச்சிருந்துச்சுடா. அதுதான் அவளை பேச விட்டு நானும் பேசிட்டு இருந்தேன்” என்றான் கருப்பன்.
“டேய் மச்சான். நீயாடா இது? உன் பேச்சு சரியில்லையேடா!” என்று தர்மன் அவனை மேலும் கீழும் ஒரு மாதிரியான பார்வை பார்த்து கொண்டு கேட்டான்.
“அடச்சீ!அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா, எனக்கு எப்பவுமே பொட்ட புள்ளைங்க தைரியமா இருக்கிறது ரொம்ப பிடிக்கும். அதைவிட அதிகமா இந்த மாதிரி சரிக்கு சமமா எதுத்து பேசுறதும் பிடிக்கும். புள்ளைங்கன்னா இப்பிடி தான் இருக்கவும் செய்யணும்.அந்த புள்ள பேசினது எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா அதுதான் லைட்டா!”என்று கருப்பன் கூற,
“நீ நடத்துடா நடத்து! என்றவன் ஆமா! நீங்க சண்டை போட்டீங்க சரி என் மூஞ்சில யாருடா தண்ணிய தெளிச்சது?” என்று தர்மன் மிக முக்கிய கேள்வியை கேட்க,
“உன் மூஞ்சில தண்ணிய தெளிச்சாங்களா? இந்த வேலையை யாருடா பார்த்தா! ஒருவேளை மயில் புள்ள பார்த்து இருக்குமோ?” என்று கேட்க,
“அவளுக்கு என் மேல என்ன ஆத்திரமோ!” என்று நினைத்து கொண்டவன் முகத்தில் உள்ள தண்ணீரை வளித்து விரலால் சுண்டிவிட்டவன்,
சரி விடு நீங்க ரெண்டு பேரும் வேர்க்க விறுவிறுக்க போட்ட சண்டையில, உங்க வேர்வை துளி என் மேல பட்டு இருக்கும்” என்று கூறி சமாளித்தான் தர்மன்.
அதன் பின் நண்பர்கள் இருவரும் கிளம்பி அவரவர் வேலையில் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர்.
அய்யனார் தன் கையில் உள்ள துண்டுச்சீட்டையும் மாதேஷையும் மாறி மாறி பார்த்தவன்,
“ஆமா! நீ யாரு?” என்று கேட்டான்.
“நான் யாரா இருந்தா உங்களுக்கு என்னங்க, எனக்கு இந்த அட்ரஸ் எங்கன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்?” என்று மாதேஷ் சற்று பவ்வியமான குரலில் கேட்டான்.
ஆனால் அவன் பேச்சுக்கும் அவன் தோற்றத்திற்கும் துளியும் பொருத்தம் இல்லாமல் இருக்கவே,
“நீ காரணம் சொன்னா தான் நான் விவரம் சொல்லுவேன்” என்று தீர்க்கமாக கூறினான் அய்யனார்.
“சரி நான் காரணம் சொல்றேன். நீங்க எனக்கு இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்லணும் சரியா?” என்ற மாதேஷ் கேட்டான்.
“சொல்றேன் நீ முதல்ல சொல்லு” என்றான் அய்யனார்.
“இந்த அட்ரஸ்ல இருக்குற மயிலுன்ற பொண்ணும் எனக்கு கல்யாணம் பண்ண இருந்த மலருன்ற பொண்ணும் ஃப்ரண்ட்ஸ்ங்க,
இந்த மயிலு என் கல்யாணத்துக்கு வந்து இருந்தா, அப்ப என்ன கல்யாணம் பண்ணி இருந்த கல்யாண பொண்ணையும் சேத்து இங்க கூட்டிட்டு வந்துட்டா, அதனால அங்க எனக்கு கல்யாணம் ஆகாமல் நின்றுச்சு.
அதான் இந்த பொண்ண தேடி கண்டுபிடிச்சு மலர கூட்டிட்டு போகணும்னு வந்து இருக்கேன்” என்று மாதேஷ் கூறினான்.
அவன் கூறவும் அவன் யாரென்று நன்றாக புரிந்து போனது அய்யனாருக்கு. ஆனால் அதை விட ஒரு படி மேலே சென்று மயில் அவனிடம் கூறிய என் ஃபிரண்டுக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்ல. சுருக்கு வச்சுக்க போயிட்டா நான் தான் காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்துட்டேன்” என்று கூறிய வார்த்தைகள் முதன்மை பெற்று விடவே,
இப்பொழுது மையிலைப் பற்றியும் மலரை பற்றியும் கூறினால் அவன் மலரை அழைத்துச் செல்ல வாய்ப்பு இருக்கிறது, அப்படி அழைத்து சென்றாள் அந்த பெண் மறுபடியும் கல்யாணம் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது? என்று சில கணம் யோசித்தவன்,
“நீ சொல்ற இந்த விலாசத்துல இருக்கிற பொண்ணு மயிலு, ஊரோட காலி பண்ணி போய் ரொம்ப மாசம் ஆச்சு”
“என்ன சொல்றீங்க?” என்று அதிர்ந்தவாறு கேட்டான் மாதேஷ்.
“ஆமா இந்த மயிலுன்ற புள்ளையும் அவங்க குடும்பமும் இந்த ஊரை விட்டு போய் பல மாசம் ஆயிடுச்சு” என்று அவன் நம்பும் படியாக சரியான பொய்யை கூறினான் அய்யனார்.
“அப்படியா! உங்களுக்கு கன்ஃபார்மா தெரியுமா?”என்று மாதேஷ் மீண்டும் கேட்க,
‘என் தங்கச்சிய பத்தி என்கிட்டயே வந்து விசாரிப்ப நான் உனக்கு உண்மைய சொல்லனுமாடா வெண்ணை!’ என்று நினைத்த அய்யனார்,
“அட ஆமாங்குறேன், உங்க கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன ஆக போது இந்த மயிலுன்ற புள்ளையும் அவங்க குடும்பமும் ஊரை விட்டு போய் பல மாசம் ஆச்சு” என்றான் மறுபடியும்.
அவன் கூறியது உண்மை தானோ என்று நினைத்தவன் “அப்போ அவங்க எந்த ஊரூக்கு போய் இருக்காங்கன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான்.
“கடன்காரங்க தொல்லை தாங்க முடியாம தான் இந்த ஊரை விட்டு ஓடி போய் இருக்காங்க அப்பிடி இருக்கும் போது எந்த ஊருன்னு யாருகிட்டயாவது சொல்லுவாங்களா என்ன?” என்று அவனிடமே மறு கேள்வி கேட்டான் அய்யனார்.
அவன் கூறியதை சிலகணம் யோசித்த மாதேஷ் “சரிங்க” என்று விட்டு இரண்டு அடி இடையே நகர்ந்தவர்,
“ஓ ஷிட்..!” என்று தனது காலை தரையில் உதைத்தவன் இப்பொழுது என்ன செய்து மயிலையும் மலரையும் கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தவன் தனது காரில் ஏறி கிளம்பியிருந்தான்.
அடுத்து ஒரு வாரம் அதன் போக்கில் கடந்திருந்த நிலையில், இன்று அதிகாலை எழுந்த மலர் அமுதாவிற்கு சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்து கொண்டிருந்தாள்.
சிறு சிறு வேலையே ஆயினும் மலர்விழி நேர்த்தியாக செய்வதை பார்த்த அமுதாவோ,
“அங்க பாரு அந்த எரும மாட, மணி ஏழாச்சு இன்னும் போர்வைய இழுத்து போட்டுக்கிட்டு தூங்குது” என்று மலரிடம் மயிலை பற்றி குறைபட்டார்.
அன்றைய பொழுது கருப்பனுக்கும் மலருக்கும் வாக்குவாதம் ஆனதோடு எந்த தோப்பிற்கும் வயக்காட்டிற்கும் மலரை அழைத்துச் செல்வதே இல்லை மயில்.
காலைக்கும் மதியத்திற்கும் ஆன உணவு வகைகளை செய்து வைத்த அமுதா தான் வயக்காட்டிற்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்று விட,
மலர் மயிலிடம் வந்தவள் “மயிலு நீ முன்னாடி சொன்னல்ல இங்க பக்கத்து ஊர்ல ஒரு காலேஜ் இருக்குன்னு, அங்க எனக்கு ஒரு வேலை கிடைக்குமா?”
“இப்ப எதுக்குடி நீ வேலைக்கு போறேன்னு கெளம்புற?”
“இல்லடி நானும் படிச்சிருக்கேன்ல எத்தனை நாளைக்கு வீட்ல சும்மாவே இருக்க சொல்ற வேலைக்கு போனா எனக்கும் மனசுக்கு கொஞ்சம் திடமா இருக்கும்” என்று கேட்க
“ஊர்ல இருந்து வந்தே ஒரு வாரம் தானடி இருக்கும். அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்” என்று மயில் கேட்க
“பரவால்லடி எனக்கு என்னமோ வீட்ல சும்மா இருக்கிறது போர் அடிக்குது அதனால அந்த காலேஜ்ல ஏதாவது வேக்கன்சி இருக்கான்னு விசாரிச்சு சொல்லுடி”
“அந்த காலேஜ்ல வேக்கன்சி இருக்கான்னு அங்க போய் கேட்டு பார்த்தா தான் தெரியும். பேசாம நம்ம ரெண்டு பேரும் நேரா போய் பாத்துட்டு வந்துடுவோமா?” என்று மயில் கேட்க,
சரி என்ற மலர் கூறவும் மயில் தன் அம்மாவிற்கு போனில் அழைத்து விபரம் கூறினாள்.
மலரும் மயிலும் கிளம்பி அந்த ஊருக்கு பக்கத்து ஊரில் இருந்த ஒரு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜுக்கு சென்றனர்.
காலேஜில் அக்ரிகல்ச்சர் பிரிவில் ஒரு வேக்கன்சி இருப்பதாக அந்த கல்லூரியின் தாளாளர் கூறினார்.
“சார் நானும் அக்ரிகல்ச்சர் படிச்சிருக்கேன். எனக்கு அந்த போஸ்டிங் தரிங்களா?” என்று மலர் கேட்டாள்.
“சரி உங்களோட சர்டிபிகேட் கொடுங்க” என்றதும் அவள் நீட்டிய சர்டிபிகேட்ஸ்சை வாங்கி செக் செய்த அந்த தாளாளர்
“நாளையில் இருந்து இந்த காலேஜின் அக்ரிகல்ச்சர் பாடப்பிரிவின் ப்ரொஃபஷராக நீங்க ஜாயின் பண்ணிக்கலாம்” என்று கூறவும் தோழிகள் இருவரும் வேலை கிடைத்த சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
அதே நேரம் கருப்பனும் தர்மனும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தீவிரமாக கலந்தாலோசித்து கொண்டிருந்தனர்.
கருப்பன் வேட்டை தொடரும்….
💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝
கமெண்ட் ப்ளீஸ் 🙏🏻😊
error: Content is protected !!
Super super super super super super.. Iyanar unmaiya sollala…
😊