Skip to content
Post Views: 1,847
கருப்பன் ஆட்டம் 24
கருப்பனுடன் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்திருந்தால் மலர்விழி.
வீடு முழுவதும் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது.
Advertisement
அதனை காதல் வாங்கிக் கொண்டே என்னவென்று புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தால் மலர்.
Advertisement
அங்கே அமுதாவோ “இப்ப கருப்பனுக்கு கட்டிக் குடுத்தா என்ன தப்புங்கிற..! அதான் மதனியே வந்து கேக்குறாங்கல்ல கட்டி கொடுத்தா தானே ஊர் காட்டு பய சிறுக்கிக வாயிக்கு ஒரு பூட்டு போடு முடியும்….” என்று கூறினார்.
Advertisement
“அம்மா ஊர் காட்டு பயலுக எதனாலும் சொல்லிட்டு தான் இருப்பாய்ங்க, அதுக்காக அந்த பயலுக்கு போயி மயில கட்டி குடுக்க சொல்றியா…? அதெல்லாம் முடியாது.
Advertisement
ஊர் காட்டு சிருக்கிக வாய மூடுறதுக்காக என் கூட பொறந்த பொறப்ப என்னால பலி கொடுக்க முடியாது….! அதுவும் அவன் கூட ..ச்சை.. நினைக்கும் போது அறுவருப்பா இருக்கு…!” என்று முகத்தை அஷ்ட்ட கோணலாக வைத்துக் கொண்டு கூறினான் அய்யனார்.
அங்கு நடக்கும் எதுவும் புரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தால் மலர்விழி. பின் அது குடும்ப விஷயமாக எதுவும் இருக்கும் அதில் நாம் தலையிடக்கூடாது… என்று எண்ணியவள் அறைக்குள் சென்று விட்டாள்.
அறைக்குள்ளோ கட்டிலில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள் மயில்.
அதனைப் பார்த்து பதறிய மலர்விழி தனது கைப்பையை கழட்டி ஓரிடத்தில் வைத்துவிட்டு அவள் அருகில் வந்தவள்,
“ஏய் மயிலு என்னடி ஆச்சு…? நீ எதுக்குடி இப்படி அழுதுட்டு கெடக்குற வெளியே வேற அம்மாவும் உங்க அண்ணனும் ரொம்ப தீவிரமா வாக்குவாதம் பண்ணிட்டு இருக்காங்க…! என்னடி ஆச்சு….?” என்று நடக்கும் நிகழ்வு எதுவும் புரியாமல் கேட்டால் மலர்.
அவள் குரல் கேட்டு அறைக்குள் நுழைந்த அமுதா “வாடியம்மா மகராசி…., எல்லாம் உன்னால் ஆனது. நீ மட்டும் ஒரு பொட்டச்சியா வீட்டோட அமிக்கிட்டு இருந்துருந்தா இந்த பிரச்சனை வந்திருக்குமா…?
சரி வீட்ல ஏதோ பிரச்சனை பெத்தவக அவசர பட்டு விருப்பம் இல்லாம கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க, அவசர பட்டு சுருக்கு வச்சுக்க போயிட்ட அதனால உன்ன இங்க கூட்டிட்டு வந்துட்டன்னு இந்த சிறுக்கி மக சொன்னதுனால உன்னைய நம்பி நான் இங்க தங்க வச்சேன் பாத்தியா….!
அதுக்காக நீ என்ன என்ன வேலை பார்த்துட்டு வந்துருக்குற…? ஊர் காட்டுல என்னால தலை காட்ட முடியல, ஒன் வீட்ல இருக்கிற பொட்டச்சிய என்ன வேலை பாத்துருக்கா பாத்தியா…..?
நீ எதுக்கு அந்த புள்ளைய வீட்ல தங்க வச்சுருக்க….! இதெல்லாம் ஒரு குடும்பமா…! அது இதுன்னு என்னென்ன பேச்சு பேசுறாலுகா தெரியுமா…! என்னால காது குடுத்து கேட்க முடியல…!” என்று கூறினார் அமுதா.
அதனைக் கேட்ட மலர்விழி அவர் கூற வருவது ஒன்றும் புரியாமல் அமுதாவை உறுத்து பார்க்க, மயிலோ “அம்மா சும்மா இரும்மா…! அவளை போய் எதுவும் சொல்லிட்டு இருக்காதாம்மா…!” என்றாள்.
“நீ வாய மூடுடி உன்னால வந்த வெனை தான் எல்லாம்…! எவளோ எக்கேடோ கெட்டு ஒழியட்டும்னு விட்டு போட்டு வராம…. எங்கேயோ கடந்த சனியன நீ கொண்டு வந்தன்னு நடு வீட்டுகுள்ள விட்டேன்ல…., அதுக்கு தான் நான் கெடந்த அனுபவிச்சிட்டு இருக்கேன்…!” என்று தலையில் அடித்துக் கொண்டு கூறினார் அமுதா.
“அம்மா! என்னம்மா ஆச்சு…? நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க…? நான் அப்படி என்னம்மா தப்பு பண்னேன்….?”என்று கேட்டால் மலர்விழி.
“நீ என்னமா பண்ணல…! இல்ல இன்னும் என்ன பண்ணனும்….!” என்று கேட்டார் அமுதா.
“அம்மா நீ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருக்கியா…! இப்ப என்ன ஒன் மவங்காரன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாற்றான்னு தானே என்ன பேசுறோம் ஏது பேசுறோம்னு தெரியாம தையா தக்கான்னு குதிக்குற…!
இப்போ நான் சொல்றேன் எனக்கு இந்த கல்யாணத்துல துளியும் விருப்பம் இல்ல…! நான் கருப்பு அத்தான கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…! எனக்கு தருமனத்தேன் தான் புடிச்சிருக்கு…!” என்று மயில் தனது மனதில் உள்ளதை மொத்தமாக போட்டு உடைத்தாள்.
அவள் கூறியதை கேட்டு மூவருக்கும் அதிர்ச்சி. மலர்விழிக்கோ கருப்பு அத்தானுடன் கல்யாணம் வேண்டாம் என்றதும்….! மாமா கூட மயிலுக்கு கல்யாணமா….! என்று…
அமுதா மற்றும் அய்யனாருக்கு எனக்கு கருப்பனை கல்யாண பண்ண மாட்டேன் என்றதும் பின் தர்மனைத்தான் பிடிச்சிருக்கு… என்ற வார்த்தையும்…!
“என்னடி சொன்ன….! என்ன சொன்ன….? தருமனா யாரு அந்த முத்துலட்சுமி மவனையா சொல்ற….?”
“ஆமா அவன தான் விரும்புறேன் அவனை தான் கல்யாணமும் பண்ணிக்குவேன்….! அண்ணன் என்ன நான் கருப்பன் அத்தான கல்யாணம் பண்ணிக்க வேணான்னு சொல்றது…..! மறுபடியும் தெளிவா சொல்றேன் நல்லா காத குடுத்து கேட்டுக்க….
எனக்கு கருப்பு அத்தான் கூட கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை….! எனக்கு தருமன தான் புடிச்சிருக்கு….! நான் அவனை தான் விரும்புறேன்….! அவனதான் கல்யாணமும் பண்ணிக்குவேன்….! இதுக்கு அப்புறம் இந்த மாதிரி பேச்சு பேசுறதெல்லாம் விட்டுடு….! அப்புறம் மலர எந்த ஒரு வார்த்தையும் தப்பு சொல்லாத…!” என்றால் மயில்.
(இவ்வளவு காரசாரமாக இங்கு வாக்குவாதம் நடக்கும் அளவிற்கு என்ன நிகழ்ந்திருக்கும் பார்ப்போமா…)
இன்று பறவிய புறளி பொண்ணுத்தாயின் காதுக்கும் எட்டி இருந்தது. அதனை கேட்ட பொண்ணுத்தாய்க்கோ தன்னிடம் கேட்பவரிடம் என்ன பதில் சொல்வது செய்வது என்றே தெரியவில்லை…!
அதே சமயம் ஊர்காரர்கள் வாயையும் அடைக்க வேண்டுமே….! யாரோ எப்படியோ பேசிவிட்டு போகட்டும்….! என்று நினைத்து நகர்ந்து செல்வதற்கு இது ஒன்றும் நகரத்து வாழ்க்கை அல்லவே…!
கிராமத்து வாழ்க்கை நரம்பு கம்பிகளால் பின்னப்பட்ட சிலந்தி வலையாயிற்றே…! ஒரு விஷயம் ஊருக்குள் தவறாக பரவினால் அது நம்மையே சுற்றி சுற்றி வந்து நம்மளுடைய மன நிலையை அடி ஆழம் வரை பாதித்து வாழ்க்கையவே நிலை குலைய செய்து இந்த நிலையை சமாளிப்பதற்கு நம்மை நாமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தூண்டும் அளவிற்கு சென்றுவிடும்….! கொடிய விஷ வாயுவை காற்றில் கலந்து அதனை சுவாசிப்பதற்கு நிகரான சூழல் அது.
ஊர் காரர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒரு பெண்ணுடன் தன் மகன் பேசிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டவருக்கு ஒரு வேலை தன் மகனும் அந்த பெண்ணை விரும்புகிறானோ….! என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.
இருப்பினும் யார் என்று தெரியாத ஒரு பெண்ணிற்கு தன் மகனை திருமணம் செய்து வைக்க பொண்ணுத்தாய்க்கு விருப்பமில்லை.
அதனால் தானாகவே ஒரு விஷயத்தை யோசித்தவர் பல வருடங்களாக தன் மகள் செய்த காரியத்தால் தனக்கும் தன்னுடைய அண்ணன் குடும்பத்திற்கும் உள்ள பகையை விளக்கும் பொருட்டு தன் அண்ணன் மகளான மயிலுக்கும் தன் மகனுக்கும் திருமணம் செய்து வைத்துவிடலாம்…” என்று நினைத்தவர் மதிய வேளை பொழுது அதனைப் பற்றி அமுதாவிடமும் வந்து பேசி இருந்தார்.
அப்பொழுதிலிருந்தே மயிலின் வீட்டிற்குள் இதே பேச்சுகள் தான். அமுதா மலர்விழியின் விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்து மயிலை தான் திட்டிக் கொண்டிருக்கிறார்.
மலர்விழியை திட்ட முடியாத சூழ்நிலை கைதியாகவும் மாறி இருக்கிறார்…!
மாலை நேரமாக வேலை முடித்து விட்டு ஊருக்குள் வந்திருந்த அய்யனாரின் காதுகளிலும் கருப்பன் மலர்விழியின் விஷயம் எட்டி இருக்க…!
அதனூடே வீட்டிற்குள் வந்தவனுக்கு பொண்ணுத்தாயி அமுதாவிடம் வந்து பேசிவிட்டு சென்ற விஷயங்களையும் கேட்டவன், ஆத்திரம் கொண்டவனாக,
“அவனுக்கு போயி என் தங்கச்சிய கட்டி குடுக்குறதா… கண்டிப்பா மாட்டேன்….!” என்று தன் அன்னையிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.
இப்பொழுது….,
மயில் கூறிய விஷயத்தை கேட்ட அமுதா ஆங்காரம் கொண்டவராக,
“என்னடி சொன்ன….! என்ன சொன்ன…! நீ நான் சொல்றவன கடிக்க மாட்டியோ….! நீ சொல்ட்ரியே அவன் எந்த காட்டு பயலோ… அவன போய் விரும்புறேன், அவள தான் கட்டிக்குவேன்னு சொல்ற….எத்தன ஏத்த கொழுப்பு இருந்தா என்கிட்டயே இவ்வளவு திமிரா பேசுவ…
அப்பிடின்னா உனக்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு ஏறி இருக்கணும்…. கரைக்கிறேன்டி இன்னையோடு உன் திண்ணகமான பேச்சையும், வாய் கொழுப்பையும் சேத்தே கரைக்கிறேன்…..!” என்று கூறிவர்
அங்கு கடந்த துடப்பத்தை எடுத்து மயிலை அடி பின்னி எடுத்து விட்டார். அவர் அடிப்பதை பார்த்து பதறி அமுதாவை பிடித்து தடுக்க போராடிக் கொண்டிருந்தால் மலர்விழி.
அதனை பார்த்து மேலும் ஆத்திரமடைந்த அமுதா, “முதல்ல தள்ளி போ நீயி.. உன்னால வந்த வெனை எல்லாமே …! பொண்ணுனா அடக்க ஒடுக்கமா வீட்ல அமுக்கிட்டு உட்காராம, ஆம்பள பய கிட்ட போயி உனக்கு என்னடி பேச்சு வேண்டி கெடக்கு….!
“நீ ஊர்லயும் இந்த மாதிரி தான் எவன் கூடையாவது ஊர் சுத்தி பொறுக்கிட்டு திருஞ்சுருப்ப அதனாலதான் உங்க அப்பனும் அத்தாலும் உனக்கு எவனையாவது புடிச்ச கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்த்து இருப்பாங்க….!
அது பொறுத்துக்க முடியாம பெரிய இவளாட்டம் வீட்ல இருந்து கெளம்பி ஊரு விட்டு ஊரு தாண்டி வந்து இருக்க…! உன்னைய மட்டும் சொல்லி குத்தமில்லடி உன் கூட பழக்கம் வச்சிக்கிட்டா பாரு இவள சொல்லணும்….!”என்று கூறி மலரை புறந்தள்ளிவிட்டு மயிலை மேலும் அடி பின்னி எடுத்துக் கொண்டிருந்தார் அமுதா.
அமுதா அடித்த அடியில் மயிலின் உடலில் ஆங்காங்கே ரத்த சிவப்பாக காயங்கள் தென்பட்டாலும் அதனையும் பொருட்படுத்தாத மயில்
“அம்மா நீ என்னை கொன்னே போட்டாலும் சரி, இதுக்கப்புறம் என் ஆயுசு இருக்கும்…, எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கும்ன்னா அது தர்மன் கூட தான்….!” என்று உறுதியாக கூறினால் மயில்.
அந்த வீட்டின் கூடத்தில் நின்று இவை அனைத்தையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த அய்யனார் மயில் கூறிய வார்த்தையில் உள்ள அழுத்தத்தை உணர்ந்தவனுக்கு தற்சமயம் என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஆனால் அவள் வாங்கும் அடியையும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ளாமல் அறைக்குள் நுழைந்து அமுதாவின் கையில் உள்ள தொடப்பத்தை பிடுங்கிக் கொண்டவன்,
“அம்மா…, என்ன பண்ணிட்டு இருக்க அவதான் ஏதோ கிறுக்குத்
தனமா பேசுறான்னா…. நீயும் அதுக்காக அவள இத்தனை அடி அடிப்பியா….!” என்று தன் தங்கையின் மீது கரிசனம் கொண்டு பேசினான் அய்யனார்.
“நீ பேசாம போய்டு அய்யனாரு.. இவள இப்படியே விட்டா சரிப்பட்டு வர மாட்டா….! என்று கூற
“அம்மா நீ வாமா…!”என்று கூறிய அய்யனார் அமுதாவின் கைபிடித்து இழுத்துக் கொண்டே அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
அமுதா பேசிய விஷம் கக்கும் வார்த்தைகளிலேயே மனம் ரணப்பட்டு சிலையென சமைந்து நின்றவள் தான்…
அதன் பின்பு நடந்த விஷயங்களை விழிகளில் பார்த்தாலும் கூட, அது புத்தியில் உரைக்கவில்லை.
அனைத்தும் மழுங்கடிக்கப்பட்ட ஒரு நிலையில் நின்றிருந்தால் மலர்.
மயில் தன் அம்மாவிடம் வாங்கிய அடியில் வலியில் அழுது கொண்டிருந்தவள் பின் சிலையென சமைந்து நின்ற மலர்விழியை பார்த்து தன்னை தானே தேற்றிக் கொண்டவள்,.
“ஏய் மலரு என்னடி இப்படி நிக்குற…! என் அம்மா என்ன அடிச்சதை பத்தி யோசிச்சுட்டு இருக்கியா…!அது எல்லாம் ஒன்னும் இல்ல…! எங்க அம்மா எப்பவுமே அடிக்கிறதுதான். ரெண்டு நாள்ல சரியா போயிடும்
நீ வா…!” என்று அழைத்து அவளை கட்டிலில் அமர வைத்தாள்.
அப்பொழுதும் மலர்விழி ஒரு இடத்தை வெறித்துக் கொண்டு எதுவும் பேசாமல் அதே உறைந்த நிலையில் இருந்தாள்.
அங்கு கருப்பன் வீட்டிலோ இன்று ஊருக்குள் பேசிக்கொண்ட அனைத்து விஷயங்களையும் பூடகமாக தன் மகனிடம் கூறிய பொண்ணுத்தாயி,
“இந்த ஊர்க்கார பயலுக வாய் அடைக்கனும்னுதென் நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்யா…!
தன் அம்மா ஊர்க்காரர்களின் பேச்சை கேட்டு அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு தன் வாழ்வில் ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்பதை நினைக்கையிலேயே கருப்பனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“என்னமா முடிவு எடுத்துருக்க …!” என்று அடக்கப்பட்ட குரலில் கேட்டான் கருப்பன்.
“நான் என்னப்பா பண்ணியிருப்பேன்…எனக்கு இருக்கிற ஒரே வழி நீயும் மயிலும் கல்யாணம் பண்ணிக்கிறது தான். ஏன்னா உனக்கும் வயசு வந்துடுச்சுல்ல நானும் ரொம்ப வருஷமா உனக்கும் மயிலுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சுட்டு தான் இருக்கேன்.
அதுக்கு நேரம் கூடி வந்த மாதிரி தான் இந்த சூழ்நிலையும் வந்துருச்சு…!” என்று நேரம் பார்த்து தான் மனதில் உள்ளதை கருப்பனிடம் கூறினார் பொண்ணுத்தாயி.
தன் அன்னை பேசிய அனைத்தையும் பற்களை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்த கருப்பன் ஒரு கட்டத்திற்கு மேல் தான் இதற்கு மேல் இங்கு இருந்தால் தன் அன்னை மனம் காயப்படும் படி பேசி விடுவோமோ….!” என்று எண்ணி வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான்.
அதேநேரம் மலர்விழியோ அந்த வீட்டில் இருந்த மயில்,அமுதா, அய்யனார் என மூவரின் கண்ணிலும் இருந்து மறைந்து ஊரை விட்டு கிளம்பும் நோக்கில் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
இதில் பேசிய வசனங்கள் அனைத்தும் கதைக்காக மட்டுமே!
error: Content is protected !!