ஹார்ட் பீட் திருடன் – 08
ஹார்ட் பீட் திருடன் – 08
நாட்களும் வேகமாய் செல்ல ரஷ்யா அதிகார பூர்வமாக தாங்கள் ஆட்கொல்லி நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்தது. சீனாவிற்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. இச் செய்தி அன்ரூட்டிற்கும் அதிர்ச்சியே மற்றைய நாடுகள் முன்டி மோதி ஆட்கொல்லி நோய்க்கான வைரஸுற்கான தடுப்பூசியை வாங்கினர். அன்ரூட் ரஷ்யாவை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவை எல்லாம் ஜோகித்தால் தடுக்கப்பட்டது
Advertisement
வறிய நாடுகளுக்கு ஜோகித் தனது செலவிலும் என்ஜியோக்களினாலும் தடுப்பூசிகளை வழங்கினான். ஆட்கொல்லி நோயின் தாக்கம் குறையத் தொடங்கியது.
ஜோகித்தும் பல மாதங்களுக்குப் பின் மாளிகைக்கு வந்தவன் யாரையும் கண்டு கொள்ளவில்லை ” தன்னை முற்று முழுதாக தொற்று நீக்கிய பின் தான் மாளிகையினுள் நுழைந்தான். பாட்டியிடம் பல விடயங்களைப் பற்றி பேச அவரோ “ரோகித் என்னபா சொல்ற ” ” ஆமாம் பாட்டி என சில வீடியோ ஆதாரங்களைக் காட்டிப் பேசினார். அவரால் எதனையும் நம்ப முடியவில்லை
இப்படியே சில நாட்கள் செல்ல ஜார்ஜிற்கும் உடல் நலம் குன்றிபா போனது மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஆட்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாகத கூற இதை அறிந்த அன்ட்ரூட்டிற்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தையை மாளிகையிலேயே தனிமைப்படுத்தப்படுத்தினர். அவரை அப்படி நிலையில் கண்ட எலிசபெத் இடிந்து போனார்.
Advertisement
சில நாட்களில் அவரது மூப்புக் காரணமாக மருந்துகள் பலனளிக்காது அவர் இறப்பைப் தழுவினார். மொத்த கிரேஸ் குடும்பத்திற்கும் அவ் மாளிகையைக் கட்டியாண்ட ஆலமரம் சாய்ந்ததில் பெரும் இழப்பு.
Advertisement
அவர் முகத்தை இறுதியாக பார்க்கக் கூட முடியாத நிலை அவர் உடல் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு அரச மரியாதையுடனேயே தகனம் செய்யப்பட்டது.
ஜார்ஜின் இறப்பை தொடர்ந்து எலிசபெத் தளந்து விட்டார். உடனடியாக மாளிகை முழுக்க தொற்று நீக்கப்பட்டது. நாட்களும் செல்ல மாளிகையும் வழமைக்கு திரும்பியது. அன்ரூட் அலுவலக விடியம் மட்டுமே ஜோகித்திடம் பேசிக் கொள்வார். அவன் மாற்றம் புரிந்தாலும் யாரால் கேள்வி எழுப்ப முடியும்…. ஜார்ச்சின் இறப்பைத் தொடர்ந்து ஜோகித் தனக்குள் இன்னும் இருகிப் போனான்.
அன்று இரவு உணவின் போது நாயோமி பேச்சை தொடங்கினார். “ஜோகித் வெட்டிங் பற்றி என்ன முடிவெடுத்திருக்க” தாயை நிமிர்ந்து பார்த்தவன். “இன்ட்ரஸ்ட் இல்ல மாம்” என்றான். அன்ரூட் தொண்டையை செருமியபடி “ஜோகித் அடுத்த மாதம் நீ சார்ஜ் எடுத்துக்க, வேண்டும் அதற்கு முன்னாடி வெட்டிங் செய்து கொண்டால் நல்லம்” என்றார்.
Advertisement
அவரை உறுத்து விழித்தவன் பார்வையை சந்திக்க முடியாது அன்ரூட் பார்வையை திருப்ப ” யாருக்கு நல்லது மிஸ்டர் அன்ட் ரூட்”என்றான். அவர்கள் ஜோகித்திற்கு பெண்னை தெரிவு செய்து விட்டு அவனிடம் கேட்கின்றனர். மாளிகையில் என்ன நடந்தாலும் அது ஜோகித்தின் காதுக்கும் வந்துவிடும் அல்லவா. நயோமியோ ” ஜோகித் என்ன பேசுற” என சத்தமிட “கீப் க்யோட் மாதம்” அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில கிராண்ட் பால வந்து நிக்குது” என்றான்.
அன்ரூட்டிற்கு விளங்கி விட்டது அனைத்தும் மகனுக்கு தெரிந்து விட்டது. அவரின் செயலை. அவன் குடும்பத்தினர் முன்னிலையில் போட்டுடைத்ததில் ஆத்திரப்பட்டவர் “ஜோகித் சட் அப் யுவர் மவுத்” என்றார்.
தந்தையை முறைத்தவன் பாட்டியை பார்க்க அவர் முகம் கசங்க அமர்ந்திருந்தார். அன்ரூட்டிற்கு தாயே நிமிர்ந்து பார்க்க கூட முடியவில்லை. உலக நாடுகளை உலுக்கிய கொடிய ஆட்கொல்லி இவ்வளவு உயிர்களை காவும் என்றும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் அனல் அடங்கினாலும் எங்கோ ஒரு இடத்தில் அதன் தாக்கம் இருந்து கொண்டே இருந்தது.
ஜோகித்தோ “கிரேன்மா ரிலாக்ஸ்” என அவரை தனது தோளுடன் அனைத்தான். அப்போது நயோமியும் “ஜோகித் எது செய்தாலும் உங்க அப்பா சரியாத் தான் செய்வார்” என்றார் கணவனுக்கு சார்பாக. “ம்ம்” அப்புறம் என்றான், நக்கலாக அதை உணராத அவரோ “இப்படியான பேச்சை விட்டுது பதவி ஏற்பதற்கு முதல் வெடிங்குக்கு ஆயத்தமாய்க்கோ டேவிட்ர மகள எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அவளும் உனக்கு பொருத்தமா இருப்பா, பதவி ஏற்கிறப்போ வெட்டிங்க வச்சிப்போம்” என்றார் மகனுக்கு குறையாத அழுத்தத்துடன். “சோ எல்லாம் நீங்க டிசைட் பண்ணிடு தான் என்கிட்ட சொல்றீங்க” என்றான் புயலை உள்ளடங்கிய குரலில்
எல்சன்,லிடியா, மர்தா,ஈடன் ,எமி எலிசபெத் பாட்டி என அனைவருக்கும் இருந்தது. அவன் குரல் ஒரு கிலியை தந்தது. கைகளை கழுவிய எப்படி அவன் எழ உணவுண்ட பாதியில் அவன் எழுந்ததால் நயோமிக்கு ஒரு மாதிரியாகி விட்டது.
” எலிசபெத் பாட்டிக்கோ மருமகளின் பேச்சு. ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியது. அது அவரின் முகத்தில் வெளிப்பட்டது.
அன்ரூட்டிற்கு மனைவி தன்னை விட்டுக் கொடுக்காது பேசியது சந்தோசம் என்றாலும் ஜோதிடத்தின் பேச்சு ஒருவித அழுத்தத்தை அவருக்குத் தந்தது. மற்றையவர்களுக்கு உணவு இறங்குமா என்ன மெல்ல மெல்ல ஒவ்வொருவராக கலைந்தனர்.
அறைக்கு வந்த ஜோகித்திற்கு ” கோபத்தை அடக்க முடியவில்லை அறையில் இருந்த பொருட்களை உடைத்தவன் கோபம் தீராது தனது தளத்தில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்தான் அவனது கோபத்தை அந்த நீரினால் கூட குளிர்விக்க முடியவில்லை பல மணிநேரம் நீந்தியவன் குளத்தை விட்டு வெளியே வர அறை இருந்த நிலையைக் கண்டவன் சர்வண்ட்டை இன்டர்காமில் அழைத்தவன் அறையை சுத்தம் செய்யச் சொன்னான்.
தனது அனுமதியில்லாமல் அறையினுள் யாரும் நுழைய முடியாது. சிறிது நேரத்தில் அறை பழைய நிலைக்குத் திரும்பியது.
லாயருக்கு அழைத்தவன் அவரிடம் சில விடயங்கள பேசிவிட்டு அந்த இராப் பொழுதில் பேலஸை விட்டு வெளியேறினான்.தந்தையின் இரக்கமற்ற செயலை அவனால் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.
நீண்ட பயணத்தின் பின் அவன் வந்திறங்கியதென்னவோ சென்னைக்குத் தான்.தனது உற்ற நண்பனான அர்ஜுனுக்கு அழைத்தவர் அவனுடன் பேசி இந்தியாவில் வீடொன்றை வாங்கியவன் அங்கே தங்கிக் கொண்டான்.தனது படிப்பை மூலதனமாக் கொண்டு “ப்ரிப் கால்” எனும் பெயரில் சாஃப்ட் வேர் கம்பனி ஒன்றை நிறுவியவன் ஒரு வருடத்திலேயே இந்தியாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டான்.
இப்படியே செல்லும் வாழ்கையில் அடிக்கடி அரிய வகைப் பொருளை திருடி கைப்பற்றுவதை வழக்காமாக்கிக் கொண்டு மீடியாவையும் போலிஸ் டிபார்ட்மெண்ட்டையும் பரபரப்பாக வைத்துக் கொண்டான்.
யாராலும் கண்டுபிடிக் முடியாத ஒரு இன்டர்நெஷனல் திருடனின் இதயத்தை திருடிய தேவதை நம் மகிஷா தான்.
சூரியனும் தன் பொற்பாதங்களைப் பூமியில் பரப்பி அழகாகப் புலர்ந்தது அந்த காலைப் பொழுது, கண்காட்சி நடைபெறும் இடத்தில் நடிகைகள் விலையுயர்ந்த நகைகளை அணிந்து வலம் வந்தனர் அவர்களுக்கு இணையாக மகிஷாவும் அழகான. பார்ட்டி கவுனில் இருந்தாள். ஆங்காங்கு பாதுகாப்புக்கென காவலர்களும் வலம் வந்தனர்.
நடிகைகளுக்கு என பிரத்தியேகமாக உணவுகள் தயாரிக்கப்பட்டது. .அதில் தான் கரன் இனைந்து கொண்டான்.
மதிய உணவு வேளையில் நடிகைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது.” ரோஷினியும் உணவை உண்டவளுக்கோ ஒரு மாதிரி இருக்க சைகையில் அருகில் நின்ற கரனிடம் ஏதோ கேட்க ,அவனும் பதறியபடி “அந்தப் பக்கம் மேடம்” என்றான்.
அவளும் வாஸ்ரூம் நுழைந்தவர் வாந்தியெடுக்க வாஸ் ரூமின் மற்றோரு பக்கம் இருந்து வந்த மகிஷாவோ ” ஆர் யூ ஓகே மேடம் ” என ரோஷினியை பிடிக்க ரோஷினியோ குடலே வெளிவரும் அளவிற்கு வாந்தியெடுக்க அவள் தோளை ஆதரவாக பிடித்தபடி அவள் அறியாது அவள் கழுத்தில் இருந்த டைமண்ட் நெக்லஸை கழற்றியவள் அதனை தன் உடையில் மறைத்துக் கொண்டாள். “இருங்க யாரயாவது கூட்டிட்டு வாரன் என அங்கிருந்து வெளியேறினாள் மகிஷா. ரோஸியைத் தேடி அவ்விடம் மற்றொரு பெண் வர அவளுடன்
வாந்தியெடுத்து முடித்த ரோஷினியோ தளர்வாய் வாஸ்ரூமிருந்து வெளியேற அவள் சென்று சிறிது நேரத்தில் வெளியேறிய மகிஷாவை நோக்கி வந்த கரனிடம் தான் எடுத்த நெக்லஸ்ஸை போற போக்கில் அவன் கையில் வைக்க, அவனும் அதை எடுத்துக் கொண்டு ஆண்களுக்கான கழிப்பறைறினுள் நுழைந்தவன் அதை இரு பகுதிகளாக பிரித்து மாற்றினான்.
ஒன்றை கையில் , வகையிலும் மற்றையதை கழுத்தில் அணியும் வகையிலும் மாற்றியவன் அதன் நிறத்தையும் நெயில் பாலிஷ் கொண்டு மாற்றினான்.
பின் மகிஷாவிற்கு “ரெடி” என குறுஞ்செய்தி அனுப்பினான் அதே போல் வந்த மகிஷாவின் கையில் அவன் வைக்க மீண்டும் வாஸ்ரூமினுள் நுழைந்தவள்,தான் அணிந்திருந்த இமிடேஷன் நகையை கழற்றி டாய்லெட்டில் போட்டு ஃபிளாஸ் ஆன் செய்தவள் கரன் தந்ததை அணிந்து கொண்டு மீண்டும் யாருக்கும் சந்தேகம் வராது மீண்டும் நடிகைகளுடன் இணைந்து கொண்டாள்.
ஃபோட்டோ ஷூட்டும் ஆரம்பமானது நடிகைகள் நகைகளை அணிந்து போஸ் கொடுக்கத் தொடங்கினர்.அப்போதா ரோஷியை நெருங்கிய பாதுகாவலப் பெண்ணோ “மேடம் நெக்லஸ் எங்க ? என் வினவ ரோஷியோ பதறியபடி கழுத்தை தடவிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.அவளை பாதுகாவலப் பெண் உலுக்க உடையை நாலாபுறமும் உதற அவளின் வித்தியாசமான செய்கையில் காட்ஸ் அவளை சூழ அந்த நிமிடம் சற்றுப் பரபரப்பாக மாறியது இவை அனைத்தும் ஏதோ சரியில்லை என மட்டும் புரிந்தது.
ஜோகித் அர்ஜுனும் பாதுகாவலர் உடையிலேயே இருந்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
அனைவரையும் சோதனை செய்யத் தொடங்கினர்.அப்போது ஜோதிடத்தின் கண்ணில் சிக்கினால் அழகோவியமாக இருந்த மகிஷா அவளையும் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.
ரோஷியை நெருங்கிய அவ் நிகழ்வை நடத்துபவர் ” என்ன ரோஷி இது நெக்லஸ் எங்க ” எப்படி இவ்வளவு கேயார் லெஸ்ஸா இருந்த” என அதிகாரமாய் கேட்க யோகிக்கு அழுகையே வந்து விட்டது.
ஜோகித் அர்ஜுனுக்கு கண்காட்ட அப்போது அவ்விடமே பின் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின் வந்தது. அந்த குறுகிய நேரத்தை பயன்படுத்திய ஜோகித் தனது பாக்கட்டில் இருந்த ஒரிஜினல் நெக்லஸை ஒத்த போலி நெக்லஸை வாஸ் ரூம் செல்லும் வழியில் போட்டவன் எதுவும் தெரியாது நின்று கொண்டான்.
நெக்லஸை எல்லாரும் ஆங்காங்கு தேட ஜோதிடத்தின் பார்வை மகிஷாவைத் தழுவியது. அர்ஜுனோ “சார் என மற்றொரு அதிகாரியை அழைத்தவன் ” வாஸ் ரூம் சைட் பார்க்கலாம் ரோஷி மேடம் அந்த சைட் போனவங்க என்றான்.
அதே போல் காட்ஸ் அங்கு விரைய நெக்லஸும் வழியிலேயே கிடந்தது அதைக் கைப்பற்றியவர்கள் “ஜுவல் கிடைச்சிருக்கு” என சொல்ல அப்போது தான் ரோஷிக்கு மூச்சே வந்தது.
