Skip to content
Post Views: 1,929
கருப்பன் ஆட்டம் 26
தர்மன் மயிலிடம் “நீ வாத்தா நான் உன்ன என் வீட்டு கூட்டிட்டு போறேன்…!” என்று கூறி மீண்டும் ஊருக்குள் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றான்.
Advertisement
தர்மன் அவன் வீட்டின் கதவை தட்டி விட்டு நிற்க, கதவை திறந்த அவனின் அம்மா முத்துலட்சுமி தர்மனுடன் அருகில் நின்றிருந்த மலரை பார்த்து விட்டு, தர்மனை பார்த்து முறைத்தவர்,
Advertisement
“இந்த சிறுக்கிய எதுக்குடா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்த…?” என்று கேட்டார்.
Advertisement
“ஏத்தா என்னத்தா பேச்சு பேசிட்டு இருக்க, அந்த புள்ள பாவம் இல்லையா…! ராத்திரி 10 மணி ஆச்சு…! இதுக்கு அப்புறம் பொட்ட புள்ள எங்க போகும் சொல்லு….?”
Advertisement
“அதுக்கு அவ தlங்கி இருந்த வீட்ல பொட்ட புள்ளையா அடக்கம் சுருக்கமா இருந்து இருந்தா இந்த நெலம வந்துருக்குமா….?”
தன் தாயின் பேச்சைக் கேட்டு எரிச்சலடைந்த தர்மன் தற்சமயம் தன் அம்மாவிடம் பேசி வாதாடினால் மலரை இங்கு தங்க வைக்க முடியாது என்று எண்ணி தன்னை அமைதி படுத்தி கொண்டவன்,
“சரித்தா ஒன் பேச்சுக்கே வர்றேன்….! இதுவே உன் புள்ளையா இருந்துருந்தா இப்படித்தான் இந்த ராத்திரியில எங்கேயோ எக்கேடோ கேட்டு ஒழியட்டும்னு விட்டுறுவியா…?” என்று கேட்டான்.
“என் வீட்டு பொட்ட புள்ளயா இருந்தா வீட்டை தாண்டி கால் கிளம்பி போகாதுடா…! அப்படி ஒன்னும் நான் என் புள்ளைய வளக்கவும் மாட்டேன்.,
எந்த காட்டு சிறுக்கியவோ கொண்டு வந்து என் புள்ள கூட சேர்த்து வச்சு பேசாத…! இப்போ வீட்டுக்குள்ள வருதுன்னா நீ மட்டும் வா இவளுக்கு எல்லாம் என் வீட்ல எல்லாம் எடம் கெடயாது….!” என்று உறுதியாக கூறினார் முத்துலட்சுமி.
“ஏத்தா என்ன பேச்சு பேசுற…!” என்று தர்மன் முழுதாக முடிக்கும் முன்பு கதவை அடித்து சாதித்துக் கொண்டார் முத்துலட்சுமி.
அதைப் பார்த்து வெற்று புன்னகை சிந்திய மலர் “பரவால்லண்ணே நான் கிளம்புறேன்…!” என்றாள்.
“ இந்தாம்மா எங்க கிளம்புறேன் கிளம்புறேன் சொல்லிக்கிட்டு இருக்குற நீயி…! சரி என்கூட வா.….!” என்ற தர்மன் வேறு வழி இல்லாமல் மலரை அழைத்துக் கொண்டு கருப்பனின் மண் வீட்டிற்கு கிளம்பினான்.
அங்கே கருப்பனோ தன் தாய் மீது உள்ள கோபத்தில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வயல் வரப்பில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான்.
தூரத்தில் தர்மனும் அவனின் அருகில் ஒரு பெண்ணும் வருவதை பார்த்தவன் புருவம் சுருக்கி அதனை பார்க்க, கிட்ட வர வர தர்மனுடன் வருவது மலர்விழி என்று தெரியவும் புருவம் விரித்தவன் வேகமாக ஓடி சென்று மலரின் அருகில் நின்றவன்,
“ஹே மலரு……! நீ என்னடி தர்மன் கூட…! இந்நேரத்துல…! அதுவும் இங்க…?” என்று கேட்டான் கருப்பன்.
அந்தக் குரலில் தன் மேல் உள்ள அன்பில் வெளிவந்த படபடப்பான வார்த்தைகளையும் அவனின் தவிப்பு நிறைந்த முகத்தையும் பார்த்த மலர்விழி தனது கையில் உள்ள பேகை கீழே போட்டுவிட்டு அவனை அணைத்து அவனின் மார்பில் முகம் புதைத்து அழுது கரைந்தாள்.
திடீரென்று அவள் அழுவதை பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்த கருப்பன் அருகில் நின்றிருந்த தர்மனை ஏறிட்டு பார்த்தான்.
அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவனோ “அந்த புள்ள கிட்டையே கேளுடா…!” என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்குள் சென்றான்.
வெகுநேரமாக தன்னவனின் மார்பில் சாய்ந்து இத்தனை நேரம் ஆதங்கத்தை அழுது கொட்டி தீர்த்த மலர்விழி, பின் பொறுமையாக அவனின் மார்பிலிருந்து தலையை பிரித்தாள்.
அவளின் அழுகையின் அர்த்தம் உணர்ந்தவனாக, “என்ன ஆச்சு மலரு இப்ப எதுக்கு நீ இந்த நேரத்துல பேக்கும் கையும்மா தர்மன் கூட வந்த….? வீட்ல யாரும் எதுவும் சொன்னாங்களா…?” என்று பரிவான குரலில் கேட்டான்.
“அது வந்து என்றவள் வீட்டில் நடந்த விஷயங்களையும், பின் தான் ஊரை விட்டு செல்வதற்கு முடிவெடுத்ததையும், பேருந்து நிலையத்தில் தர்மன் தன்னை பார்த்து மீண்டும் ஊருக்குள் அழைத்து வந்து அவனின் வீட்டிற்கு சென்றதையும், அங்கே அவனின் அம்மாவும் தான் தங்குவதற்கு அனுமதிக்காமல் விட்டதையும் கூறியவள்,
எனக்கு இங்கே எங்கயுமே தங்க எடம் இல்லை மாமா….! நான் எங்க போகட்டும்…..? இதுக்கு பேசாம நான் அன்னைக்கே செத்துப் போயி இருக்கலாமான்னு தோணுது மாமா….!” என்று கூறினாள்.
அதனை கேட்ட பதறிய கருப்பன் அவளின் இந்த பேச்சில் அவளின் கன்னத்தில் அறைந்தவன் பின் அதனை தாங்க முடியாமல் அவளை மீண்டும் அணைத்து தன் மார்பில் அழுத புதைத்துக் கொண்டவன்,
“முட்டாள்….! முட்டாள்…..! முட்டாச் சிறுக்கி மாதிரி பேசாதடி நீ இல்லன்னா நான் என்னாவேணும்னு நினைச்சு பார்த்தியா….!” என்று கேட்டவனின் உள்ளமும் கலங்கி கண்களில் கண்ணீர் தேங்கியது.
வெகு நேரமாக அணைப்பில் இருந்த இருவரும் ஒருவர் மனத்தின் காயத்தை ஒருவர் அணைப்பில் ஆற்றி தேற்றி கொண்டிருந்தனர்.
முதலில் சுயம் நீண்ட கருப்பன் அவளை பொறுமையாக தன்னிலிருந்து விலக்கியவன் “நீ எதுக்குடி இந்த நேரத்துக்கு பஸ் ஸ்டாண்டுக்கு போன…..! ஏன் ஒனக்கு நம்ம வீடு இல்லயா …! இது உன் வீடுடி….!
மகாராணி மாதிரி வந்து நம்ம வீட்ல இருக்கலாம்லடி…! ஏன் உனக்கு இந்த வீடு பிடிக்கலையா…! அதனாலதான் இந்த வீட்ட பத்தியும் என்ன பத்தியும் கூட யோசிக்காம ஊர விட்டு கிளம்பிடலாம்னு முடிவெடுத்தியா….?” என்று அவளின் கண்களை அழுந்த பார்த்து கேள்வி கேட்டான்.
“ஐயோ மாமா அப்படி எல்லாம் சொல்லாதீங்க மாமா….! நம்ம ரெண்டு பேரும் நம்ம மனசுல உள்ள விஷயத்தை வெளிய சொல்லி பழக ஆரம்பிச்சு முழுசா ரெண்டு நாள் கூட முடியல…, ஆனா அதுக்குள்ளேயே உங்களுக்கு இவ்வளவு பெரிய கெட்ட பேரு வந்துடுச்சு….!
இதுக்கு அப்புறமும் அந்த கெட்ட பேரு உங்களுக்கு நெலைக்க வேண்டாம்…! என்னால உங்களுக்கு எந்த தொலையும் வேண்டாம்ன்னு தான் மாமா நான் ஊரை விட்டு கிளம்பலாம்ன்னு முடிவு எடுத்தேன்….!” என்று கூறினால் மலர்.
“இதே போல இன்னொரு தடவ கிறுக்கு தனமா பேசிட்டு இருந்தன்னா அறைஞ்சிடுவேன்டி..! நீ எனக்கு தொல்லையாடி உன்னால எனக்கு பிரச்சனை வருதுன்னு யாரடி சொன்னா….!
ஊர்காரங்க அப்படி தாண்டி தனக்கு தோன்றத வச்சு பலவிதமா திருச்சு பேசுவாய்ங்க…, அதெல்லாம் நம்ம ஒரு விஷயம் எடுத்துக்கிட்டா இங்க யாருமே அவங்களுடைய வாழ்க்கையை வாழ முடியாது….!
ஊருல இருக்குறவைங்க எத்தனை பேச்சு பேசினாலும் அதை எல்லாம் தாண்டி, எதுத்து உன்ன நான் கல்யாணம் பண்ணி, இந்த வீட்ல நீயும் நானும் சந்தோஷமா வாழ்வோம்டி….! அத மட்டும் முழுசா நம்பு. உனக்கு எப்பவுமே நான் இருக்கேன்….!” என்று அவளின் தோளை அழுந்த பற்றி அவளின் கண்களை பார்த்து அழுத்தமான குரலில் தைரியம் கூறினான் கருப்பன்.
அவன் கூறிய வார்த்தைகளில் உள்ள அழுத்தத்தையும் அதில் உள்ள அன்பையும் உணர்ந்த மலர்விழி மனதில் உள்ள அந்த பாரங்கள் அனைத்தும் வழிந்தோடி தன்னவன் தன் மீது கொண்ட இத்தனை காதலை நினைத்து அத்தனை கர்வமாக இருந்தது.
அதன் விளைவாக “என்ன மன்னிச்சிடுங்க மாமா…! இனிமே நான் இந்த மாதிரி யோசிக்க மாட்டேன்….!” என்று கூறினாள்.
“சரி வா நம்ம வீட்டுக்கு போலாம்….!” என்று அவளை ஒரு கையிலும் அவளின் பையை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு தனது மண் வீட்டிற்கு வந்தான்.
வரும் வழியில் மலர்விழி “மாமா அந்த வீடு ரொம்ப சின்னது அதுக்குள்ள தான் நீங்களும் தர்மன் அண்ணனும் இருக்கீங்க…! இதுல நான் எப்படி மாமா…?” என்று கேட்டாள்..
“அது ஒன்னும் பிரச்சனை இல்ல, நானும் தர்மனும் வெளியே இருக்குற பொட்டல்ல கயித்து கட்டுல போட்டு படுத்துக்கிறோம்….! நீ வீட்டுக்குள்ள படுத்துக்கோ…!” என்று கூறிய கருப்பன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றவன் அவளை அங்கே படுக்க வைத்துவிட்டு,
தர்மனும் கருப்பனும் கயித்து கட்டிலை வெளியில் போட்டுக்கொண்டு படுத்தனர்.
வீட்டிற்குள் படுத்திருந்த மலர்விழிக்கு மனது முழுவதும் ஒருவித நிறைவு. தன்னவனின் வீட்டில் தான் இருக்கின்றோம் . இனி யாரும் தன்னை தரக்குறைவாகவோ….! அல்லது உனக்கு வீட்டில் இடமில்லை என்றோ கூற மாட்டார்கள்….! என்ற எண்ணமும், தான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றோம் என்ற நிறைவும் இருந்தது .
அதே சமயம் தாங்கள் இருவரும் பேசிக் கொண்டதற்கே ஊர்க்காரர்கள் அப்படி ஒரு பழியை சுமத்தினர்களே…! தான் கருப்பன் வீட்டில் இருப்பதை தெரிந்தால் இதற்கும் என்ன பேச்சு பேசுவார்களோ….? என்ற எண்ணமும் மலருக்கு இல்லாமல் இல்லை.
மலர்விழியை தர்மன் அழைத்து வந்ததையும், அவள் இப்பொழுது கருப்பனின் மண் வீட்டில் தங்கி இருப்பதையும், ஒருவன் பார்த்தவன், விடியற்காலை எப்பொழுது கிளம்பும் இந்த விஷயத்தை ஊருக்குள் பரப்பலாம்…! என்று ஆர்வமாக காத்திருந்தான்.
வெகு நேரம் தரையில் படுத்து விட்டதை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு அதிகாலை நேரமாக தான் நிம்மதியான உறக்கம் வந்தது.அதுவும் சிறிது நேரமே….!
அதிகாலையில் எப்பொழுதும் போல்
உறக்கம் கலைந்து எழுந்த கிராமத்து மக்கள் அனைவருக்கும் மலர்விழி கருப்பனின் வீட்டில் தங்கி இருக்கும் செய்தி பரவியது.
மீண்டும் இருவரின் பேச்சுகளும் ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி, அவர்களின் கிராமத்து சூழலுக்கு விதிகளுக்கு இவர்கள் ஒழுக்கக்கேடை விளைவித்து விட்டனர் என்னும் ரீதியில் அவர்களை வசை பாட ஆரம்பித்து விட்டனர்.
இந்த விஷயம் அந்த ஊரில் கிராமத்து தலைவர் கிருஷ்ணன் தலைமைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் விளைவாக கிராமத்து தலைவர் ஒரு ஆளை அனுப்பி,
இன்று 9:00 மணியளவில் ஊர் மத்தியில் உள்ள ஆலமரத்தில் கருப்பன் மலர்விழி குறித்த விஷயங்களுக்கு தீர்வு காண வேண்டும் அதனால் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது என்றும் கருப்பனுக்கு தகவல் சொல்லி அனுப்பி வைத்தார்.
தகவலை கேட்ட கருப்பன் ஆத்திரம் கொண்டவனாக நின்று இருக்க, அவனின் அந்த முகத்தை வைத்தே தன் நண்பனின் மனநிலையை அறிந்து கொண்ட தர்மன்,
“டேய் மச்சான் என்னனாளும் பார்த்துக்கலாம்டா….! கோபம் மட்டும் பட்டுடாதடா….! இதுக்கு என்ன முடிவு பஞ்சாயத்து எடுக்குறாங்களோ அத பாத்துட்டு அதுக்கப்புறம் நம்ம யோசிக்கலாம்டா….!” என்றான்.
அதற்கு கருப்பனோ “இவைங்க யாருடா ம*ராண்டிங்க என் வாழ்க்கைக்கு தீர்ப்பு சொல்றதுக்கு…! இவங்க என்ன தீர்ப்பு சொன்னாலும் நான் மலர எக்காரணம் கொண்டும் விட்டு தரவும் மாட்டேன்….!”
“இப்ப யாரு மச்சான் உன்ன விட்டுத்தர சொன்னது….! என்னதான் பண்றாய்ங்கன்னு பார்ப்போமே…! இன்னையோட இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டுட்டு வருவோம்….!”
“பாவம்டா மலரு இந்த மாதிரி விஷயம் எல்லாம் அவளுக்கு பழக்கம் இல்ல… அது அவளால ஏத்துக்கிட்டு சுலுவா கடந்து போகவும் முடியல….! இந்த சின்ன விஷயத்துக்கு போயி நான் செத்துரட்டுமான்னு கேட்டாடா….!” என்றான் கருப்பன்.
பின் கருப்பன் ஒரு விஷயத்தை உறுதியாக தனது மனதிற்குள் பதித்துக் கொண்டான். பின் 9 மணி அளவில் மலர் தர்மன் மற்றும் கருப்பன் மூவரும் ஊர் மத்தியில் உள்ள ஆலமரத்தின் முன்பு விசாரணை கைகளாக நிற்கவைக்கப்பட்டனர்.
பஞ்சாயத்து தலைவர் இவர்களுக்கு கொடுக்கப் போகும் தண்டனை என்ன….? அதனை கருப்பன் ஏற்றுக் கொள்வானா…? நாளை பார்ப்போம்…
கருப்பன் ஆட்டம் தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
error: Content is protected !!