தர்மனும் கருப்பனும் கருப்பனின் மண் வீட்டில் அமர்ந்து ஊர் கதை பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கருப்பனின் அம்மா தர்மனுக்கு ஃபோனில் அழைத்து கருப்பனை சாப்பிட அழைத்து வருமாறு கூறினார்.
Advertisement
அதற்கு தர்மனோ கருப்பன் உணவு வேண்டாம் என்று கூறிய விஷயத்தை கூறினான்.
அதனைக் கேட்டு முகம் வாடிய பொன்னுத்தாயி சரி என்று விட்டு அழைப்பை துண்டித்தவர் பின் மனம் தாங்காமல் தன் மகனுக்கும், அவனின் ஆருயிர் நண்பனான தர்மனுக்குமான உணவினை தூக்கு சட்டியில் போட்டு எடுத்துக்கொண்டு அந்த இரவு நேரத்தில் வயக்காட்டின்
Advertisement
நாலாபுறமும் உள்ள தோப்புகள் கோபுரங்களாக சூழப்பட்டிருந்த அந்த கும்மென்ற கரும் இருட்டில் கருப்பன் இருக்கும் வீட்டை நோக்கி வந்தார்.
Advertisement
கருப்பனும் தர்மனும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்ட உள்ளே நுழைந்த பொன்னுத்தாயை பார்த்த கருப்பன் “என்னத்தா நீ ஏன் இந்த இருட்டுல போய் அலைஞ்சுச்சுட்டு இருக்க?”என்று கேட்க,
Advertisement
“நீ தான் சாப்பிட வர மாட்டேன்னு சொல்லிட்டியே சாமி, அதனாலதான் எடுத்துட்டு வந்தேன்”
“ஒருநாள் சாப்பிடலனா என்னத்தா ஆயிட போகுது. இப்ப எதுக்கு நீ இந்த இருட்டுல தூக்கு சட்டியை தூக்கிட்டு அலஞ்சுட்டு இருக்குற?” என்ற கருப்பன் கேட்க,
“அது எப்படி சாமி, நீ இங்க சாப்பிடாம இருக்கும்போது என்னால அங்க நிம்மதியாக இருக்க முடியும்? இப்ப என்ன இந்த இருட்டுல வந்தா என்னைய என்ன முனியா அடிச்சு புட போகுது நீ சாப்புட வா ஐயா” என்றவர்
கருப்பனுக்கும் தர்மனுக்குமான உணவினை அங்கிருந்த தட்டை எடுத்து அதில் போட்டு இருவர் கையிலும் கொடுத்தவர் அவர்கள் சாப்பிடவும் தான் அங்கிருந்து கிளம்பினார்.
போகும் தன் தாயை பார்த்துக் கொண்டிருந்த கருப்பனிடம் “நீ ஒரு நாள் சாப்பிடலனாலும் உன் ஆத்தா தாங்காதுன்னு உனக்கே தெரியும்ல அப்புறம் ஏன்டா முன்ன கேட்டப்போ சோறு வேணாம்னு சொன்ன?” என்று தர்மன் கேட்டான்.
“அது ஒன்னும் இல்ல மச்சான், அந்த புள்ள என்ன காட்டான்னு சொன்னதோட மனசு சோத்த தேடல, அதான் வீட்டுக்கு போகாம விறு விறுன்னு நான் இங்க வந்துட்டேன்” என்றான் கருப்பன்.
“சரி படுடா தூங்குவோம் நாளைக்கு வேற ஆத்துருக்கு லோடு ஏத்த போகணும்” என்று இரு நண்பர்களும் ஒரே கட்டிலில் படுத்து கொண்டு தாங்கள் பாதியில் விட்டிருந்த ஊர் கதையை மீண்டும் பேச தொடங்கினர். கருப்பன் எப்பொழுதும் தங்க விரும்புவது அவனின் மண் வீட்டில் தான்.
கருப்பன் எப்பொழுது தன் அம்மா இருக்கும் அந்த வீட்டில் சென்று தங்குகிறானோ அப்பொழுதே தர்மனும் தன்னுடைய வீட்டிற்கு செல்வான். இது நண்பர்களுக்கு இடையில் எப்பொழுதும் நிகழும் நிகழ்வே!
அதிகாலை சூரியன் அழகாக புளர அந்த கிராமம் முழுவதும் அத்தனை பொலிவுடன் ஒளி பெறுவதை, பறவைகளின் சத்தத்தை வைத்து உணர்ந்த மலரின் குடை மறைத்த இமைகளின் கருவிழிகளை மெல்ல திறந்து பார்க்க, சூரியனின் ஒளி கீற்று ஒன்று மயிலின் அறைச் சாளரம் வழியாக துளைத்து வந்து மலரை தட்டி எழுப்பியது.
மெலிதாக புன்னகைத்துக் கொண்டு எழுந்த அமர்ந்தவள் தனது அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் மயிலை பார்த்துவிட்டு எழுந்து சென்று தனது காலை வேலைகளை முடித்துக் கொண்டு அமுதாவின் அருகில் வந்தவள்.
“அம்மா என்ன செய்றீங்க?”
“ நீ என்னடாம்மா இந்நேரமே எந்திருச்சுட்ட இப்போ உனக்கு எந்த வேலையும் இல்ல இன்னும் நேரம் இருக்கு போய் தூங்கு”என்று அமுதா கூறினார்.
“இல்லம்மா எனக்கு தூக்கம் வரல, முதல் முதலா கிராமத்துல இந்த மாதிரி ஒரு சூரிய உதயம் பாக்குறேன் ரொம்ப அழகாக அருமையா மனசுக்கு இதமா இருக்குமா, இதுக்கப்புறம் படுத்தாலும் தூக்கம் வராது”
“அப்படியாம்மா அப்ப சரி, நீ இங்கன உக்காந்து வேடிக்கை பாரு நான் போய் சாப்பாட்டு வேலையை பாக்குறேன்” என்று அமுதா தனது வேலையை பார்க்க சென்று விட,
வெகு நேரமாக வீட்டின் முன்பு இருந்த திண்ணையில் அமர்ந்து அங்கு இருக்கும் குட்டி குட்டி வீடுகளையும், அதன் வெளியில் திறந்து விட்ட கோழியையும், தன் தாய் கற்று கொடுக்கும் பாடங்களை சமத்து பிள்ளைகளாக கேட்டு கொண்டு பின்னாலேயே ஓடி வரும் கோழி குஞ்சுகளையும்,அந்த மண் தரையில் காலில் செருப்புடன் கையில் செம்பு தண்ணீருடன் கண்மாய்க்கு போகும் வரும் மக்களை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு, இதற்கும் மேல் அழகு பொலிவுடன் பச்சை பசேல் என்று இருக்கும் வயல்வெளிகளை பார்க்க ஆர்வம் தோன்றவே,
எழுந்து உள்ளே வந்தவள் உறங்கிக் கொண்டிருக்கும் மயிலை அவசரமாக எழுப்பினாள்.
தனது புறங்கைகளால் இமைகளை தேய்த்துக் கொண்டு, “இந்நேரத்திலேயே உசுப்பி விட்டு தண்ணி தூக்க சொல்லி ஏன்த்தா உசுர எடுக்கிற?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தவள் தன் முன் மலரை இருப்பதை பார்த்து சடைந்து கொண்டவள்,
“இன்னைக்கு நீ வந்து உசுப்பி இருக்கியா, இத்தனை நாள் என் ஆத்தா தான் உசுப்பும்”
“ஏய் மயிலு சீக்கிரம் எந்திரிச்சு என்ன வயக்காட்டுக்கு கூட்டிட்டு போடி, அங்க போய் சுத்தி பாத்துட்டு வரலாம்!” என்று கண்களில் ஆர்வம் மிளிர கேட்டால் மலர்.
“என்னது வயக்காட்ட பாக்கணுமா! சரி அத நீயே போய் பார்த்துட்டு வர வேண்டியது தானே!” என்று மயில் மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டு படுத்து விட,
போர்த்திய போர்வையை பிடித்து இழுத்தவள் “எனக்கு எப்படிடி இந்த ஊரும் பாதையும் தெரியும்? நான் எங்கேயாவது வழி தெரியாம போய் மாட்டிகிட்டன்னா எதுக்கு தேவை இல்லாத வேலை எந்திருச்சு வாடி” என்றவள் அவள் கையைப் பிடித்து எழுந்து அமர வைத்தாள்.
அவளையும் அவள் முகத்தில் மிளிர்ந்த ஆர்வத்தையும் பார்த்த மயில் “சரி இருடி டீய குடிச்சிட்டு பாத்ரூம் போயிட்டு வரேன்” என்று அவளின் கையை விடுத்து அமுதா போட்டு கொடுத்த டீயை குடித்துக் கொண்டிருக்க, அவளை வேகமாக குடிக்க அவசர படுத்தினால் மலர்.
“அடியே நீ வயக்காட்டுத்தான பார்க்கணும்? இப்பவே போயி தான் பாக்கணும்னு என்ன இருக்கு, மட்ட மத்தியானத்துல கூட போய் பார்த்துக்கலாம். பேசாம உக்காருடி” என்ற மயில் சாவகாசமாக டீயை குடித்தாள்.
அதான் நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்குடி” என்று அவள் குடித்துக் கொண்டிருந்த டீயை பிடிங்கி வேறு புறம் வைத்துவிட்டு அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றால் மலர்.
மலர் முன்னே சென்று கொண்டிருந்தவள் மயிலின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே செல்ல,
“அடியே மலரு நானே வரேன் கைய விடுடி, இழுத்துட்டு போறேன்னு கைய ஒடிச்சுப்புடாத” என்று அவளிடமிருந்து தனது கையை எடுத்து கொண்ட மயிலோ,
பச்சை பசேல் என பசுமை ததும்பி வழியும் ஒரு தோப்புக்குள் அவளை அழைத்துச் சென்றாள். சுற்றிலும் பச்சை புல்வெளிகள் தங்களின் அழகை வெளிப்படுத்தும் விதமாக காற்றில் அசைந்து சிலிப்பி கொண்டிருக்க,
அதனை பார்த்த மார்க்கத்திலேயே கண்கள் மின்ன ஆர்வமாக அதனை ஆழ நோக்கினால் மலர்விழி.
அடுத்ததாக அவர்கள் ஒரு வாழை தோப்பிற்குள் சென்றனர். சுற்றிலும் வாழை மரங்கள் நிறைந்த பகுதியை கடந்து உள்ளே செல்ல, அங்கு புளியந்தோப்பு ஒரு புறமும் மாந்தோப்பு ஒரு புறமும் தென்னந்தோப்பு ஒரு புறமும் என நாலு புறமும் நான்கு தோப்புகள் வேலியிட்டு அமைந்திருக்க,
நாலா புறமும் தனது புருவம் உயர்த்தி கருவிழிகளை சுழல விட்டு அதிசயித்து பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளின் பதிந்தது அந்த தோப்பிற்கு நடுவில் ஒய்யாரமிட்டு இருக்கும் மன்சுவரால் சூழப்பட்ட அந்த குட்டி வீடு.
“ ஏய் மயில் இந்த வீடு எவ்ளோ சூப்பரா இருக்குல!” என்று அவள் அதே அதிசயத்தில் கேட்க,
அதற்கு மயிலோ “ஏண்டி மெட்ராசுல உன் வீடு எத்த பெருசா கடல் கணக்கா இருந்துச்சு, அதையெல்லாம் விட்டு புட்டு இந்த வீட்டை போய் சூப்பரா இருக்குன்னு சொல்ற உனக்கு என்ன கிறுக்கு புடுச்சு முத்தி போச்சா?”
“ஏய் மயிலு கொஞ்சம் கூட ரசனையே இல்லையாடி உனக்கு! என் வீடு பெருசாவே இருந்தா கூட அதை நினைச்சு பாரு கொஞ்சம் கூட இடைவெளியே இல்லாம அடுத்தடுத்து அடுக்கி இருக்கிற வீடு.
ஆனா இங்க பாரு பச்சை பசேல்ன்னு மரம், சலசலன்னு வரப்புல ஓடுற தண்ணி சத்தம், கீச்கீச்சுன்னு இனிமையான பறவை சத்தம், ஏசியே இல்லாம வர்ற குளிர் காத்து, பொலுஷன், வண்டியோட இரைச்சல் சத்தம், ஆளுங்க சத்தம் இப்பிடி எந்த ஒரு தொல்லையும் இல்லாமல் இப்படி அமைதியான ஒரு இடம்.
இதை பார்க்கும் போதே எவ்வளவு ரம்மியமா இருக்கு இத விட்டு புட்டு என் வீட்டை போய் இது கூட கம்பேர் பண்ற ரசனை கெட்டவளே!”என்று மலர் மயிலிடம் சடைந்து கொண்டாள்.
“சரித்தா சரி, நீ ரசனையோடவே பாரு, நான் பாத்ரூம் கூட போகாம வந்துட்டேன் எனக்கு வயித்த கலக்குது நான் போறேண்டி” என்று மயில் கிளம்ப எத்தணிக்க,
“அடியே மயிலு இவ்வளவு தூரம் வந்துட்டோம், அந்த வீட்டையும் கொஞ்சம் காட்டுடி” என்று மலர் ஆர்வமாக கேட்க,
“என்னது, அந்த வீட்ட கட்டணுமா?”
“ஆமாண்டி அந்த குட்டி வீடு எவ்வளவு சூப்பரா இருக்கு பாரேன்” என்று அவள் அதே ரசனையோடு கூற,
“அடியே! இது என்ன தஞ்சை பெரிய கோவிலா! இல்ல ஆக்ராவுல இருக்கு தாஜ்மஹாலா! உள்ள போய் சுத்தி காட்ட சொல்ற?” என்று மயில் கேட்க,
“தாஜ்மஹாலா இருந்தாலும் சரி தஞ்சையில் இருக்கிற பெரிய கோயிலா இருந்தாலும் சரி, அதுக்கு இது ஒன்னும் சடஞ்சது இல்ல,இது வந்துட்டு வாழும்போதே கிடைக்கிற சொர்க்கம்டி” என்றால் மலர்.
“ஏய் மலரு புள்ள என்ன நான் சொன்னதையே நீ எனக்கு ரிப்பீட் அடிக்கிறியா? என்றவள் நீ இங்கே இருந்த பொறுமையா பாத்துட்டு வா நான் போறேன்” என்றாள்.
“சரி நீ போ நான் போய் பாத்துட்டு வரேன்” என்று அவள் இரண்டடி எடுத்து வைக்க,
“அடியே நில்லுடி அது யாரோட வீடு தெரியுமா? நீ பாட்டுக்க முந்திக்கிட்டு உள்ள போறேங்குற”
“நேத்து நான் ஒருத்தனை வசப்பாடுனன்னா யாருடி அது?” என்று மறந்தவளாக கேட்டாள் மலர்.
“வேற யாரு எல்லாம் என் அத்தான் கருப்பந்தேன். இது எல்லாம் என் அத்தானோட தோட்டமும் வீடுந்தேன்” என்றால் மயில்.
“உன்னோட ஐத்தான் வீடா இருந்தா என்ன இப்ப, நான் என்ன உன் ஐத்தான் வீட்ல போய் குடும்பம் நடத்தவா கேக்குறேன்! சும்மா உள்ள போய் பாக்கத்தானே கேக்குறேன்” என்றால் மலர்.
“வேணாண்டி மலரு, நம்ம போயிடலாம் வாடி” என்று மயில் எவ்வளவு கூறியும் கேட்காமல்,
மலரோ “நீ வாடி!” என்று அவளையும் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு அந்த குட்டி வீட்டை நோக்கி சென்றாள்.
அந்த வீடு மொத்தமுமே 15க்கு 10 என்ற அளவில் சொல்லும் அளவிற்கு மிக எளிமையான மன்சுவரால் சூழப்பட்ட வீடு,
ஆனால் சென்னையில் அத்தனை செல்வ செழிப்பில் திளைத்த பெண்ணவளுக்கு இந்த வீட்டின் மீது ஏன் தான் அத்தனை ஆர்வமோ தெரியவில்லை.
மயில் அந்த வீட்டின் அருகில் வரவே தயங்கிக் கொண்டிருக்க, ஆனால் மலரோ எதையும் கண்டு கொள்ளாமல் அந்த வீட்டின் அருகே சென்றவள்,
மயில் சொல்ல சொல்ல கேட்காமல் அந்த வீட்டில் கதவை திறந்தாள்.
கதவை திறந்த பார்த்த நொடி பெண்கள் இருவரும் “ச்.. ச்சீ “ என்று கூறி தங்களது கைகள் கொண்டு கண்களை இருக்க மூடிக்கொண்டனர். 🤔🙄
நேற்றைய மாலை பொழுது மாதேஷ் மலரையும் மயிலையும் தேடும் முயற்சியில் மலர் படித்த கல்லூரிக்கு சென்று,அவளின் தோழியான மயிலின் பெயரைக் கூறி, அவள் ஊரின் வீட்டின் முகவரியை கேட்டு வாங்கி கொண்டவன், நேற்று இரவே கிளம்பி மலரை அழைத்துச் செல்லும் நோக்கில் அதிகாலையிலேயே மயிலின் வீட்டு முகவரியை கையில் வைத்துக்கொண்டு அந்த கிராமத்தின் எல்லையில் நின்றிருந்தான். 😳
Indha malar pesama irukamata… Ipo enna prblm karuppan kitta panna poranu thriyala… Indha madhesh Vera vandhuta.. Avan iyyanar kuda sernthuvano… Super super super super super super sis
Indha malar pesama irukamata… Ipo enna prblm karuppan kitta panna poranu thriyala… Indha madhesh Vera vandhuta.. Avan iyyanar kuda sernthuvano… Super super super super super super sis