Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருப்பு நிலா Episode-22

அத்தியாயம் 22

பசங்களை தூங்க வைத்து விட்டு அறைக்கு வந்த ரசிகா திகைத்து நின்றாள். ஆதி ரசிகா அறையில் அவளுக்காக காத்திருந்தான்.



Advertisement

ஆதி, இங்க என்ன பண்றீங்க? ரசிகா கேட்டாள்.

அவளது சோபாவில் அமர்ந்து வா..என்று அழைத்தான் ஆதிரேயன். அவனருகே வந்து நின்றாள்.

Advertisement

Advertisement

பக்கத்துல வா ரசி என்றான். அவள் நின்ற இடத்தை விட்டு நகராமல், சொல்லுங்க? என்றாள்.

ஆதி எழுந்து அவளருகே வந்து, ரசி என்று அவளது கையை பிடித்தான்.

Advertisement

சொல்லுங்க ஆதி?

நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? ஆதி கேட்க, ரசிகா அவனை விட்டு நகர்ந்து நின்றாள்.

போனை எடுத்து பிரச்சனை நடந்த அனைத்தையும் காட்டி, இதுல நிறைய கமெண்ட் உனக்காக தான் வந்திருக்கு. இதுல ஆதிக்கு நீ பொருத்தமா இருப்பன்னு தான் கமெண்ட் பண்ணி இருக்காங்க. நீயே பாரு என்று ஆதி அவன் போனை ரசிகா கையில் திணித்து விட்டு நின்றான்.

ஆதி, நான் பார்க்கிறேன். நீங்க உங்க அறைக்கு போங்க. நான் குளிக்கணும் என்றாள்.

ஓ.கே என்று போனை வாங்கி அவன் நகர, அவனை பார்த்து விட்டு அவன் வெளியேறும் முன்னே ரசிகா ஆடையை எடுத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தாள். அவளுக்கு நடந்து அனைத்தும் கனவு போல் இருந்தது. எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

எனக்கு ஆதியை பிடிச்சிருக்கு. கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ல முடியலை. என்ன சொல்வது? என்று யோசனையுடன் ஆடையை மாற்றி விட்டு வெளியே வந்து தலையை துவட்டிக் கொண்டே கண்ணாடி முன் நின்று அவளை பார்த்து விட்டு, பால்கனி கதவை திறந்தாள்.

ஜில்லென்ற இயற்கை காற்று அவள் மீது பனியுடன் சேர்ந்து அடிக்க, குளிரில் அவளுக்கு அவளாக கையணைப்பை உடலுக்கு கொடுத்து நின்றாள்.

அவள் பின் வந்த ஆதி அவளை பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டு, இந்த நேரம் இங்கே எதுக்கு நிக்குற? என்று அவளை அணைத்தவாறு அறைக்குள் கொண்டு வந்தான். ரசிகா முதலில் பயந்தாலும் ஆதி குரல் கேட்கவும் அமைதியாக இருந்தாள்.

ரொம்ப அமைதியாக இருக்கீங்க? என்று ஆதி அவளை அவன் பக்கம் திருப்பினான், கண்ணீருடன் நின்ற ரசிகாவை பார்த்து, ரசி ஏதும் பிரச்சனையா? உனக்கு பிடிக்கலையா? என கலக்கமான மனதுடன் ஆதி கேட்டான்.

ரசிகா ஆதியின் மார்பினுள் புதைந்து அழுது கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ் ஆதி” என்றாள்.

என்ன? அவன் கேட்டுக் கொண்டே அவளையும் தன்னுடன் இழுத்துக் கொண்டே பால்கனி கதவை பூட்டினான்.

எனக்கும் இங்கிருந்து போக பிடிக்கலை. எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு. சொல்ல தான் முடியாமல் கஷ்டமா இருந்தது. ஆதி என்னை கல்யாணம் செய்த பின் என்னை உங்களுக்கு பிடிக்காமல் போயிடாதுல்ல?

ரசி, கல்யாணம் செய்த பின் எப்படி பிடிக்காமல் போகும்? எனக்கு ரசி எப்போதும் வேண்டும். என் அருகிலே இருக்கணும். இருப்பாயா? என்று அவளை நிமிர்த்தினான்.

ம்ம்..என்று மீண்டும் ஆதியை அணைத்துக் கொண்டாள்.

அப்படின்னா, நாம கல்யாணம் பண்ணிக்கலாமே? ஆதி கேட்க, முறையாக இந்த தாலியை கழற்ற நினைக்கிறேன் ஆதி. விவாகரத்தை முடித்த பின் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள்.

இஸ் ட்? சுயரா? ஆதி கேட்க, ம்ம்..என்று வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றாள். ஆதி மகிழ்வுடன் ரசிகாவை தூக்கி சுற்றினான்.

ஆதி, இறக்கி விடுங்க. நீ உங்க அறைக்கு போய் ஓய்வெடுங்க என்றாள்.

ஓய்வா? என்ற ஆதி, நீ இப்படி கையில் இருக்கும் போது உன்னை விட்டு நான் எப்படி போவேன்? என்று ரசிகாவை அவளது படுக்கையில் போட்டு அவனும் அருகே படுத்துக் கொண்டான்.

ஆதி, “நீங்க உங்கள் அறைக்கு போங்க” என்று ரசிகா சொல்ல, ம்ம்.. போகலாம். எனக்கு வேண்டியதை ரசி கொடுக்கணும் என்று அவளிடம் அவன் கன்னத்தை காட்டினான்.

அவளை நெருங்கி வந்த ரசிகா அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை அணைத்து படுத்துக் கொண்டாள்.

எனக்கு போகவே விருப்பமில்லை ரசி என்றான் ஆதிரேயன். அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவளது இரு கன்னத்திலும் ஆதி கையை வைக்க, அவள் கண்களை மூடினாள். ஆதி புன்னகையுடன் அவளது இதழ்களை உரச, கண்களை திறந்தாள் ரசிகா.

ரசி..

ம்ம்..

ரசி..

ம்ம்..சொல்லுங்க ஆதி?

நாம கொஞ்சமா தொட்டுக்கலாமா?

என்ன ஆதி? ரசிகா பதற, ஒன்றுமில்லை பிளாக் மூன். நான் உன்னை ஏதும் செய்யலை என்று மெதுவாக அவள் கன்னம் உரசி, பின் அவன் இதழ்களை அவளது மேனியில் உலவவிட்டான். பெண்ணவள் மயத்தில் அவனது பின்னந்தலையை இறுக பற்றிக் கொண்டாள். அவளருகே படுத்த ஆதி, ரசிகா இதழில் முத்தம் கொடுத்து விட்டு, போதும் ரசி. நாம மீதியை இன்னொரு நாள் தொடர்வோம் என்றான்.

அவனை பார்த்துக் கொண்டே ரசிகா, சாரி ஆதி, உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துக்கிறேன்ல்ல?

இல்லையே? நீ என் பக்கம் இருக்கன்னு சொல்லி இருக்க? கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்க? மறந்துடாத..என்றான்.

நான் எப்படி மறப்பேன் ஆதி? உங்களை மறக்க என்னால் முடியாது. காலத்திற்காக நாம் காத்திருப்போம் என்றாள்.

ரசி, உனக்கு நான் உன்னோட சின்னாவாக இருக்க முடியும்ன்னு நினைக்கிறியா? ஆதி கேட்க, சிந்தனையுடன் ஆமா ஆதி நீங்க இருப்பீங்க என்றாள் ரசிகா.

“லவ் யூ மை ப்ளாக் மூன்” நான் அறைக்கு போகிறேன். நீ வர்றீயா?

ஷ்.,போங்க ஆதி. நாளைக்கு வேலை இருக்கு என்று அவன் அறைக்கு செல்லவும் படுக்கையில் படுத்த ரசிகாவிற்கு மனம் துள்ளலாட்டம் போட்டது. ஆதி..என்னால உங்களை விட்டு இருக்க முடியாது. நான் போகமாட்டேன். உங்களை கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்திட்டேன் என்று மகிழ்வுடன் படுக்க சென்றாள்.

மறுநாள் காலையில் உணவருந்த அமர்ந்தனர். மெல்லினா அகரன் அருகே வந்து அமர்ந்தாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.

அகரன் அவளை பார்த்து, போ என்று கண்ணசைத்தான். எப்போதும் ஆதி அருகே அமரும் மெல்லினா அகரன் அருகே இருப்பதை கவனிக்க ஆரம்பித்தனர்.

ரசிகா உணவை எடுத்து வைத்து பரிமாற சாப்பிட்ட ஆரம்பித்தனர்.

அகரனது சட்டையை மெதுவாக இழுத்து, மேசைக்கு அடியில் கையை நீட்டினாள் மெல்லினா.

என்ன? அவன் புருவத்தை உயர்த்த, அவளது புத்தகப்பையை காட்டினாள்.

என்ன வேணும்? அகரன் வாயசைக்க, பென் என்றாள். இல்லை என்று அவன் கையசைத்தான்.

இல்லையா? என்று அவன் தொடையில் கிள்ளினாள். பல்லை கடித்துக் கொண்டு முகத்தை சுருக்கினான் அகரன். அவனருகே இருந்த தமிழரசன் தொண்டையை கனைத்தான்.

என்னாச்சுப்பா? என்று ரசிகா தண்ணீர் எடுத்து அவரிடம் வந்தார். அகரன் மெல்லினாவை முறைத்து விட்டு சாப்பிட, அவள் கோபமாக அவன் காலை மிதித்தாள்.

ஆ..என்று விபுதன் கத்தினான்.

அய்யோ போச்சு, காலை மாத்தி மிதிச்சுட்டேனே! என்று மெல்லினா நாக்கை கடித்தாள். எல்லாரும் அகரனையும் மெல்லினாவையும் பார்த்தனர்.

அகரன் போன் ஒலிக்க, மெல்லினா எட்டிப் பார்த்தாள். அவன் அண்ணி அழைப்பது அவளுக்கு தெரிந்தது. போனை கட் செய்தான் அகரன்.

மகனே, எவ்வளவு நேரம் தான் கட் பண்ணுவீங்க? பேசுங்க என்றார் தமிழரசன்.

“இது தேவையில்லாத கால் தான்” என்றான் அகரன்.

“நேற்று உன்னோட மாமா கால் பண்ணான் அகரா!” என்று தமிழரசன் சொல்ல, அகரன் சாப்பிடாமல் எழுந்தான்.

நில்லுப்பா, எங்க போற? தப்பிக்க முடியாது என்றார் தமிழரசன்.

என்னாச்சு மாமா? ஆதி கேட்க, இவனுக்கு அவங்க அண்ணி சொந்தத்துல்ல கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துருக்காங்க. இவன் கால் எடுக்க மாட்டேங்கிறானாம். அந்த பையன் வருத்தப்படுறான் என்றார் தமிழரசன்.

நீங்க என்ன சொன்னீங்க? அகரன் கேட்க, “உன் விருப்பம் என் விருப்பம்ன்னு சொல்லீட்டேன்” என்றார்.

அகரன் மெல்லினாவை பார்த்தான். அவள் கண்கலங்க அவனை பார்த்தாள்.

மறுபடியும் அகரன் போன் ஒலித்தது. அவன் சினமுடன் போனை பார்த்து அமைதியானான். மெல்லினாவை பார்த்துக் கொண்டே போனை எடுத்து, சொல்லு பிரணி? என்றான்.

மாமா, நீயே வீட்டுக்கு வந்துட்டா நல்லது.

ஏன்டா?

அத்தை பிளான்ல்ல மாட்டிக்காத.

பிளானா?

ஆமா மாமா, அந்த பொண்ணை உன்னை பார்க்க ஊட்டி அனுப்ப போறாங்கலாம். அதான் உனக்கு இப்ப அப்பா இருக்கார்ல்ல. அவரை வைத்து ஏதாவது பேசி தட்டி கழிச்சிரு. மத்த பொண்ணு மாதிரி இவ இல்லை. அண்ணி மாதிரி டேஞ்சரா இருக்கா. நான் அவளிடம் பேசினேன். சரியில்லை மாமா. நீயே பார்த்துக்கோ.

வாட்? இங்கேயா?

மாமா..என்று அவள் அழைக்க, போனை பிடுங்கிய அகரன் அக்கா, நீயே வந்துருடா. அவள மாதிரியே உனக்கு பொண்ணு பார்த்து வச்சிருக்கா.

வந்து என்ன செய்ய சொல்ற? அகரன் சத்தமிட்டான்.

நான் பேசினாலும் எடுபடாது. அகரா நீ பழைய அகரனாக மாறி வா. புரியுதுல்ல..

அக்கா, நான்..என்று நெற்றியில் கை வைத்தான்.

அக்கா, நான் நாளைக்கு வாரேன்னு சொல்லு. ஆனா அந்த பொண்ணு இங்க வரக் கூடாது என்றான்.

ம்ம்..என்றார் அக்கா.

அக்கா, மாமா என்ன சொன்னாங்க?

அவர் என்ன சொல்ல முடியும்? நம்மலையே மதிக்க மாட்டானுக. அவர் தலையிட முடியுமா?

சரிக்கா, நீங்க யாரும் வேறெதுவும் செய்ய வேண்டாம். நாளை வாரேன்னு மட்டும் சொல்லு. நான் வந்து பார்த்துக்கிறேன் என்று அகரன் போனை வைத்தான்.

மெல்லினா முறைத்துக் கொண்டே அவன் முன் வந்தாள்.

மாம்ஸ், மாட்டுன. என்ன செய்யப் போற? விபுதன் கேட்க, மெல்லி நான் வீட்ல போய் பேசிட்டு வந்துடுறேன்.

ஓ..அப்படியா? பேச தான் போற? இதை நான் நம்பணுமா? மெல்லினா கேட்க, எல்லாரும் எழுந்தனர்.

நாளைக்கு நானும் வாரேன். போகலாம் என்றார் தமிழரசன்.

நானும் என் வீட்ல பேசணும். நானும் வாரேன் என்றாள் ரசிகா.

ரசி, நீ எதுக்கு போகப் போற? ஆதி கேட்க, இதுவரை யாரிடமும் பேசியதில்லை. நான் சும்மா பேசிட்டு தான் வரப் போறேன்.

அத்தை, நீ போறது சரியா இருக்காது விபுதன் கூற, நீ படிக்கிற வேலையை பாரு. நானே பார்த்துக்கிறேன் என்றாள் ரசிகா.

அப்ப நானும் வாரேன் என்று ஆதி சொல்ல, ஆமா அண்ணா, ஸ்கூல் லீவு  தான். நானும் கண்டிப்பாக வருவேன் என்றாள் மெல்லினா.

நீ எதுக்கு வரப் போற? அகரன் கோபமாக கேட்டான்.

நான் வந்தால் உன்னோட கல்யாணம் நின்றும்ன்னு பயப்படுறியா? மெல்லினா கேட்க, என்னடி பேசுற? சவிதா சத்தமிட்டார்.

அம்மா, நீ அமைதியா இரு. நான் என்ன பேசுறேன்னு தெரிந்து தான் பேசுறேன். சொல்லுடா? என்று மெல்லினா கத்தினாள்.

“நான் கல்யாணத்தை நிறுத்த தான் போறேன்” என்றான் அகரன்.

சரி, அதையும் பார்க்கிறேனே?

“நீ வர வேண்டாம் மெல்லி” அகரன் சொல்ல, நான் வருவேன் என்று அகரனுடன் சண்டைக்கு வந்தாள்.

வராதன்னு சொன்னா..நீ வரக்கூடாது என்று அகரன் சத்தமிட்டான்.

அகரா..பிரபாகரன் சத்தமிட்டார்.

மெல்லினா கோபமாக அவனிடம் வந்து அவனது சட்டையில் கையை விட்டு அவளுடைய பிரேஸ்லெட்டை எடுத்து, இனி உனக்கு இது தேவைப்படாது என்று அவள் அதை தூக்கி எறிந்தாள். அது கீழ் விழுந்து சிதறியது. வெளிர்நிற மணிகள் உருண்டோடியது. அகரன் கோபம் தலைக்கேறியது. அவளை அடித்து விட்டான்.

எல்லாரும் சத்தமிட, மெல்லினா அழுது கொண்டே அவளறைக்கு சென்றாள். அகரன் கோபமாக கீழே விழுந்ததை எடுத்து விட்டு வெளியே சென்றான்.

என்னடா நடக்குது? சவிதா கேட்க, நான் சொல்றேன் என்று நேற்றிரவு விபுதன் பார்த்ததை கூறினான்.

அட, நான் நினைச்ச மாதிரியே நடந்துருக்கே? நாட்களாகும்ன்னு நினைச்சேன். வேகமாகவே இருவரும் புரிஞ்சுக்கிட்டாங்க தமிழரசன் சிரித்தார்.

அப்பா, சிரிக்கும் நேரமா இது? ரசிகா கேட்டாள்.

அவங்கள மாதிரி அழணுமாம்மா? அவர் கேட்டாள்.

அய்யோ, உங்களிடம் பேச முடியாது என்று பிரபாகரன், சவிதா, ஆதியை பார்த்தாள் ரசிகா.

இதை நானும் எதிர்பார்க்க தான் செய்தேன். ஆனால் அகரன் வீட்டினரை தான் எதிர்பார்க்கலை என்றான் ஆதி.

ஆதி, அவன் அவர்களிடமிருந்து தள்ளி இருக்கணும்ன்னு தான் இங்கே வந்தான். இப்ப கூட அவனை இவங்க விடுவது போல் இல்லை. ஆனால் அப்பா..நீங்க கோர்ட்டுல ஸ்டே வாங்கியதை சொல்லி இருப்பீங்கல்ல? ரசிகா கேட்டாள்.

ம்ம்..சொன்னேன். அப்புறம் எதுக்கு அகரன் மாமா பேசிய போது அவன் விருப்பம்ன்னு சொன்னீங்க?

அம்மாடி, அவங்க அகரனை சின்ன வயதிலிருந்து வளர்த்தவர்கள். அவங்களும் ஆசைப்படுவாங்கல்ல?

சரியா போச்சு. இப்படி நினைச்சா அவனையும் உங்களையும் பிரிக்க என்னவெல்லாம் செய்யணுமோ? அத்தனையும் செய்வாங்க.

அவனோட மாமா நல்லவர் தானம்மா?

ஆமாப்பா, அக்கா, மாமா, பிரணி பிரச்சனையில்லை. மாமாவோட அம்மாவும் அகரன் அண்ணியும் அடிக்கடி பேசிப்பாங்க. எல்லாமே இவங்க மூலம் அவன் அண்ணிக்கு சென்று விடும்.

அப்பா, நீங்க பேசியதை சொல்லி இருப்பாங்க. போச்சு..சும்மா பேசியே அவனை சாவடிப்பாங்க. நானும் அவனுடன் போகணும். ஆதி நீங்களும் மெல்லியும் வர வேண்டாம். அப்பா நீங்க வர்றீங்க என்றாள் ரசிகா.

அந்த பொண்ணையும் பார்த்திடலாம். என் பையனையே கஷ்டப்படுத்துவாலா? என்று அவர் கேட்க, ரசிகா அவர்களை பார்த்துக் கொண்டே, நான் அவனை பார்த்துட்டு வாரேன்.

அகரன் கண்ணீருடன் பாசிகளை கையில் வைத்துக் கொண்டிருந்தான். வழிய விடு என்று அகரனை நோக்கி வந்த ரசிகாவை நகர்த்தி விட்டு ஆதி அகரனிடம் வந்தான்.

ஆதி, வழிய விடுங்க. நான் அவனிடம் பேசணும்.

நாங்க எதுக்கு வர்றோமாம்? பேச தான் வாரோம் என்றான் ஆதி.

அகரன் இருவரையும் பார்த்து எழுந்தான். ரசிகா ஆதியை முறைக்க, பேசு என்றான்.

நான் தனியா பேசணும்.

ரகசியமா? ஆதி கேட்க, யாரும் ஏதும் பேச வேண்டாம் என்றான் அகரன். மீண்டும் அவனது போன் அழைத்தது.

சொல்லு என்றான் அகரன்.

மாமா, அந்த பொண்ணு கிளம்பிட்டு இருக்காலாம். நீ வர வேண்டாம்ன்னு சொன்னாங்கலாம்.

நான் இரவுக்குள் வந்துருவேன்னு சொல்லு. நான் இப்பவே கிளம்புறேன். சொல்லீடு. அவ இங்க வர வேண்டாம். அண்ணா வீட்டுக்கு அந்த பொண்ணை வரச் சொல்லு என்று போனை வைத்து விட்டு சினமுடன் தூக்கி எறிந்தான்.

சில்லுசில்லாய் நொருங்கியது போன்.

அகரா, போன் என்று ரசிகா போனிடம் சென்றாள்.

அதை என்ன செய்யப் போற? ஒன்றும் செய்ய முடியாது. புதுசு தான் வாங்கணும் என்றான் ஆதி.

பாஸ், நான் கிளம்புறேன். இன்று மட்டும் லீவு தாங்க. மன்டே வந்திடுறேன்.

நீ என்ன விருந்தா சாப்பிட போற? மூணு நாள் லீவு கேக்குற? ரசிகா கேட்க, ரசி, நானே என்ன செய்யணுன்னு புரியாம இருக்கேன். நீ என்னை டென்சன் ஆக்காத என்று பைக்கை எடுத்தான். ஆதி அவனை தடுத்து காரில் ஏறச் சொன்னான். இருவரும் அவனை பார்த்தனர்.

இருவருமே காரில் ஏறுங்க. போகலாம்.

பாஸ், நான் பார்த்துக்கிறேன்.

என்ன பார்க்க போற? ஏறு அகரா. நான் கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன் என்று ஆதி அவன் அப்பாவிடம் வந்து, மெல்லினாவை அழைத்து செல்ல கேட்டான்.

தம்பி, அங்க பொண்ணு போனா பிரச்சனை ஆகாதா? சவிதா கேட்டார்.

அம்மா, அதான் நான் இருக்கேன்ல்ல. மாமா சொல்லுங்க. நீங்களும் தான் வரணும்.

சரிப்பா.

முதல்ல அவள சமாதானப்படுத்தணும் என்றார் சவிதா.

அம்மா, நான் அவளை சரி செய்கிறேன். அவள் ஆடையை மாற்ற எடுத்து தாங்க. போற இடத்துக்கு ஏற்றாற் போல் இருக்கணும் என்றான் ஆதி.

முதல்ல அவளை கதவை திறக்க சொல்லு..

ஆதி புன்னகையுடன் மெல்லினா அறைக்கு சென்றான்.

மெல்லி, “வெளிய வா” ஆதி மெல்லினாவை அழைத்தான்.

நான் வர மாட்டேன். நீ போ.

சரி, நாங்க போறோம். நீ எல்லாம் முடிந்த பின் அழக்கூடாது.

எங்க போற? சிந்தனையுடன் மெல்லினா கேட்டாள்.

ஆதி விசயத்தை சொல்லி விட்டு, நீ தான வாரேன்னு சொன்ன? இப்ப நீ வரலைன்னா.. அந்த பொண்ணையே நாளைக்கே அகரனுக்கு கல்யாணம் செய்து வச்சிடுவோம்.

கல்யாணமா? என்று பட்டென கதவை திறந்தாள்.

வாரீயா? இல்லை இன்னும் அழணுமா?

நானும் வாரேன். நானா? அவளா?ன்னு பார்க்கிறேன்.

இரும்மா, அம்மா..சீக்கிரம் வந்து இவள் தயாராக உதவுங்க.

வந்துட்டேன் என்று சவிதாவும் வந்தார்.

அம்மா, உனக்கு கோபம் வரலையா? மெல்லினா கேட்க, இல்லை..பத்திரமா போயிட்டு வா. வா தயாராகலாம் என்று அறைக்கதவை சாத்தினார்.

சீதாம்மாவை அழைத்து ரசிகாவின் சில ஆடைகளை எடுத்து வரச் சொல்லி விட்டு மெல்லினாவிடம் சொல்லி விட்டு தமிழரசனை செல்ல சொன்னான் ஆதி. அவரும் ஆதியும் காரிடம் வந்தனர். பின்னே ஆடைகள் வைத்திருந்த பையை கொண்டு வந்து வைத்தனர்.

எதுக்கு ஆதி ஆடையெல்லாம்?

ரசி, அதான் மூணு நாள் சொன்னானே? வாங்க என்று ஆதி அழைக்க, பசங்க வந்தனர்.

ஆதி, பசங்களுமா?

தேட மாட்டாங்களா?

ஓ.கே என்று ரசிகா அவர்களை அவளிடம் வைத்துக் கொண்டாள்.

அகரா, நீ மாமா காரில் ஏறிக்கோ என்றான் ஆதி.

அகரனும் இறங்கி தமிழரசனுடன் ஏற, அவர் பின் சீட்டை காட்டினார். கடுப்புடன் ஏறி பின் சீட்டில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டு, என்ன செய்வது? என சிந்தித்துக் கொண்டிருந்தான் அகரன்.

ஆதி, மெல்லியுமா? ரசிகா கேட்க, சிவப்பும் சந்தனக்கலரும் சேர்ந்த வெஸ்டர்ன் மாடல் சுடியில் வந்தாள் மெல்லினா.

ஆதி பின் காரை கை காட்ட, தமிழரசன் காரில் அமர்ந்திருந்த அகரன் அருகே அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்தாள். அவனுக்கோ யோசனை முழுவதும் எப்படி சமாளிப்பது? என்பதிலே இருந்தது.

ஆதியும், தமிழரசனும் காரை எடுத்தனர். பின் தான் மெல்லினாவை பார்த்தான்.

மெல்லி, நீ எங்க வர்ற? அகரன் கேட்க, அவள் அவனை முறைத்து விட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்.

அப்பா, இவ எதுக்கு? வேண்டாம்.

இல்லப்பா, என் செல்ல மருமகளுக்கு உன் வீட்டு நிலவரம் முழுசா தெரிய வேண்டாமா? அவளும் தெரிஞ்சுக்கட்டும்.

அய்யோ, அவங்களையே சமாளிக்க முடியாது. இவள் வேறையா? அகரன் சொல்ல, என்ன? மெல்லினா கேட்டாள். அகரன் அமைதியாக அமர்ந்து கொண்டான்.

சற்று நேரத்தில் அவள் கை மீது அகரன் கை வைக்க, அவனை பார்த்து முறைத்து விட்டு, மாமா எவளாது என் நிலையில இருப்பாளா? என்னோட நேரம் பாருங்களேன். ரொம்ப மோசமா இருக்கு என்றாள் மெல்லினா.

அப்பா, இப்ப நல்லா தான் இருக்காங்க. அங்கே சென்ற பின் தான் என்ன ஆகப் போகிறதோ? அகரன் சொல்ல, மாமா..உங்க பையன் மட்டும் அந்த பக்கம் சாய்ந்தான். அவனை கொன்றுவேன். இங்க பாருங்க கத்தி வச்சிருக்கேன் என்று கையில் கத்தியை காட்டினாள்.

அடிப்பாவி, அவங்க எல்லாரும் என் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்க போறாங்க. நீ என்னை இல்லாமல் செய்து விடாத? அகரன் புலம்பினான்.

அவனுக்கு மெசேஜ் வந்தது. அந்த பொண்ணு வீட்டுக்கு வந்துட்டா என்று பிரணிதா அனுப்பி இருந்தாள். போனை பிடுங்கிய மெல்லினா..புகைப்படம் கேட்டாள்.

மாமா, அதான் வர்றேல்ல..

ஓய், நான் உன்னோட மாமா இல்லை. நான் மெல்லினா. அனுப்பு என்றாள்.

அம்மா..என்று பிரணிதா அகரன் அக்காவை தனியே அழைத்து சென்று, நீ நினைச்சது நடந்திரும் என்று விசயத்தை சொன்னாள்.

வாய மூடுடி. இவளுகளுக்கு இப்ப தெரிய வேண்டாம் என்று அகரனை அழைத்து மெல்லினாவிடம் கொடுக்க சொன்னார் அகரன் அக்கா.

அக்கா? அவன் சத்தமிட, நீ அமைதியா இரு. இவளுகள சும்மாலாம் விடக்கூடாது. இவ கெட்ட கேட்டுக்கு என் தம்பி கேட்குதோ? என்று திட்டி விட்டு, போனை கொடுடா. அந்த பிள்ளைய வச்சே அவளுகள விரட்டலாம்.

அக்கா, மெல்லியால் முடியாது அகரன் சொல்ல, நீ சொல்லாத. கொடு என்று சொல்ல, அவனும் கொடுத்தான். இருவரும் சிலமணி நேரம் பேசினார்கள். பேசி விட்டு போனை அகரனிடம் கொடுத்து விட்டு அவனை பார்த்தாள்.

என்ன பேசுனீங்க? அவன் கேட்க, சொல்ல முடியாது. நீ நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கோ என்றாள் மெல்லினா. அகரன் மீண்டும் சாய்ந்து கொண்டான். அவ்வப்போது அவளை ஓரக்கண்ணால் பார்த்தான். தமிழரசன் புன்னகையுடன் வண்டியை செலுத்தினார்.

அகரன் வீட்டிற்கு வந்ததும், அண்ணா முதல்ல அவன் மட்டும் போகட்டும் என்ற மெல்லினா, உன்னோட போனை கொடு என்று கேட்டாள்.

உனக்கு எதுக்கு? அகரன் கேட்க, கொடுத்துட்டு போடா என்று பிடுங்கினாள் மெல்லினா. அகரன் உள்ளே செல்லவும் போனை காதில் வைக்க, அகரன் அக்கா மீனாட்சியும் பிரணிதாவும் வெளியே வந்தனர்.

வாங்க என்று அனைவரையும் பக்கத்துக்கு வீட்டிற்கு அழைத்து சென்றார் மீனாட்சி.

மீனாக்கா, அகரா? ரசிகா கேட்க, ரசிம்மா வா விசயத்தை சொல்றோம் என்று அழைத்து சென்றார்.

“இதோ அகரன் வந்துட்டான்” என்று அவன் சித்தப்பா ஒருவர் சொல்ல, அவன் அவரை முறைத்துக் கொண்டே உள்ளே வந்தான்.

அந்த பொண்ணு ஜானகி புடவையில் அவனருகே வந்து நின்றாள்.

அவன் விலகி நின்று அவளை பார்த்து விட்டு, இந்த பொண்ணை எனக்கு பிடிக்கலை என்றான்.

இவளுக்கென்ன டா குறைச்சல்? அகரன் அண்ணி எகிறினாள்.

அண்ணி, நீங்க சொல்றதுக்காக கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது.

நாங்க பொண்ணு பார்க்காமல் யாருடா உனக்கு பார்ப்பா? அவன் அண்ணன் கேட்டான்.

ஏங்க, அவனுக்கு தான் பெரிய இடத்து அப்பா இருக்காரே? நாம் சொல்வதை கேட்பானா? இவனுக்காக என்னவெல்லாம் செய்திருக்கோம்? என்று அவன் அண்ணி ஒப்பாரி வைத்தாள்.

நல்ல காரிடம் நடக்கும் போது இப்படியாம்மா அழுவ? அவள் கணவன் கேட்க, நம்ம பிள்ளைய விட நல்லா பார்த்துட்டு இருந்திருக்கோம். அந்த நன்றியை கூட நினைக்காமல் இவன் பேச்சை பாருங்க என்று அழுது சாதிக்க நினைத்தாள் அகரன் அண்ணி.

அக்கா, நீங்க எதுக்கு அழுறீங்க? அகரனுக்கு என்னை பிடிக்கும். என்னை எப்படி அவனுக்கு பிடிக்காமல் போகும்ன்னு பார்க்கிறேன் என்று அவன் முன் வந்த ஜானு அவன் தோளில் கையை போட்டாள்.

அய்யோ, “பிள்ளைக்கு உன் மேல எவ்வளவு ஆசை?” ஒருவர் சொல்ல, எல்லாரையும் கேவலமான ஒரு பார்வையை பார்த்தான் அகரன்.

என்னடா திமிறா? அப்படி பாக்குற? அவன் அண்ணன் சத்தமிட்டான்.

இல்லை, நீங்க எல்லாரும் குடும்பம் தானான்னு பார்க்கிறேன்.

என்னடா சொன்ன? அவன் அண்ணன் அகரனை அடிக்க வந்தார். அவர் கையை தட்டி விட்டார் பிரபாகரன். உடன் சவிதாவும் வந்திருந்தார்.

சார், மேம்..என்று அகரன் அழைக்க, அனைவரும் விலகினர்.

மேம்மா? மாப்பிள்ள உங்கள அத்தைன்னு அழைக்க சொன்னேனே? மறந்துட்டீங்களா? சவிதா கேட்க, அகரன் புரியாமல் விழித்தான்.

ஹலோ, அவனை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் ஜானு சொல்ல, ஏம்மா இப்படி எல்லார் முன்னாடியும் உரசிகிட்டு நிக்குற? நீங்க கல்யாணத்துக்காக எங்க மாப்பிள்ளைய பேச கூப்பிட்டீங்களா? இல்லை வேறெதுக்குமா? என்று சவிதா கேட்க, மேடம் நீங்க அதிகமா பேசுறீங்க? அகரன் அண்ணன் சொன்னான்.

அண்ணா..சவிதா சத்தமிட்டார். தமிழரசன் உள்ளே வந்தான்.

இதோ நீங்க சைன் செய்த பத்திரம். நான் அகரனுக்காக நீங்க இருக்கணும்ன்னு தான் உங்க உறவை முறிக்க விரும்பலை. ஆனால் நீங்க என் பையனை ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க. அவன் அடிப்பட்ட போது இருந்த வலியை விட இப்ப தான் அதிகமா கஷ்டப்படுறான். இனி முறிப்பதை தவிர வேற வழியில்லை என்ற தமிரசன்…சந்துரூ என  அழைத்தார்.

ஹாய்..ஹலோ..நான் வக்கீல் சந்துரூ. இனி உங்களுக்கும் அகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்த பைலில் தயார் செய்திருக்கேன். இனி அகரன் முழுவதும் தமிழரசன் சார் குடும்பம் தான். இனி அகரனையோ அவனது குடும்பத்தையோ தொந்தரவு செய்தால் உங்களுக்கான தண்டனையை நீதிபதி கொடுக்க வேண்டி இருக்கும். நீங்க சைன் பண்ணுங்க. முடிச்சுக்கலாம் என்றான்.

அவன் என் தம்பி. உறவை முறிக்கணுமா? என்ற அகரன் அண்ணன் சைன் பண்ண மாட்டோம் என்றார்.

ஆதி, ரசிகா, லிது, நிது, அவர்கள் பின் நம் குட்டி மெல்லினா புடவையில் அழகு தேவதையாய் வந்தாள்.

அங்கிள், என்னை நினைவிருக்கா? என்று மெல்லினா கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள். எல்லாரும் அழகான அவளை பார்த்து அசையாது நின்றனர். அகரன் மெய்மறந்து அவளை ரசித்து பார்த்தான். ஜானு வயித்தெறிச்சலில் நின்றாள்.

மெல்லினா அகரனிடம் வந்து, எல்லார் முன்னும் அவனை பார்த்து ஒற்றை கண்ணடித்தாள். அகரன் புருவத்தை உயர்த்த, மெல்லினா அவனை பார்த்து புன்னகைத்து கையை நீட்டினாள். அகரனுக்கு அவர்களது திட்டம் புரிய வந்தது.

அகரன் மீனாட்சியை பார்க்க, கையை பிடிக்க சொல்லி கண்ணசைத்தார். அகரன் பிரபாகரன் சவிதாவை பார்த்தார்.

ரசிகாவை பார்த்த அகரன் அண்ணி, எல்லாம் உன் வேலையாடி? என்று அவளிடம் வர, ரசிகாவை மறைத்து நின்றான் ஆதிரேயன்.

என்ன? ஆதி அதிகார தொனியில் கேட்க, அகரன் அண்ணி பயந்து பின் விலகினார்.

மாப்பிள்ள எங்க பொண்ணு கையை இப்ப நீங்க பிடிக்கலைன்னா எப்பொழுதுமே பிடிக்க முடியாது என்றார் பிரபாகரன். அகரன் மெல்லினா கையை பிடித்து அவளை பார்க்க, அகரா இப்ப நீ தயாரா இருக்கீயா? மெல்லினா கேட்க, ம்ம் என்றான்.

எல்லாரையும் பார்த்து இருவரும் நின்றனர். நானும் அகரனும் காதலிக்கிறோம். இப்ப எங்களுக்கு நிச்சயம் நடக்கப் போகுது. நான் பள்ளியில் தான் படிக்கிறேன். நிச்சயம் மட்டும் தான் இப்பொழுது. மூன்று வருடம் கழித்து நாங்க கல்யாணம் பண்ணிப்போம்.

அகரா, இது ஓ.கே வா? என மெல்லினா அவனை பார்த்தாள்.

நிச்சயமா? என்று அதிர்ந்து அகரனும் மெல்லினா குடும்பத்தை பார்த்து ஆதியிடம் பாஸ், இப்பவா? எனக் கேட்டான்.

இப்ப பாஸ் இல்லை அகரா. மச்சான் என்றான் ஆதிரேயன் புன்னகையுடன். ரசிகா அவனிடம் வந்து, எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. உன்னோட லவ் சக்சஸ்டா என்று அகரன் கையை பிடித்து ரசிகா குலுக்கினாள். ஆதி அவள் கையை எடுத்து, நீ இப்படியே சொல்லலாமே? எனக் கேட்டான்.

ஆதி, “சும்மா இருங்க” என்று ரசிகா அகரன் அண்ணனை பார்த்தாள்.

அக்கா, என்ன பண்ணீட்டு இருக்காங்க? ஜானகியும் அவள் வீட்டினரும் சத்தமிட்டனர்.

ஏய், “நீ வெளிய போடி” என்று அகரன் அண்ணி மெல்லினா கையை பிடிக்க, அகரன் அவன் அண்ணி கையை இறுக்கி பிடித்து, அவளோட கைய விடுங்க என்று சத்தமிட்டான்.

அவள விடுடா..என்று அவன் அண்ணன் சத்தமிட்டு, அகரனை அடிக்க வந்தான். ரசிகா அவர் கையை தட்டி விட்டாள்.

ஏய், என்னடி பண்ற? என்று அகரனது அண்ணி ரசிகாவிடம் கையை ஓங்கிக் கொண்டு வந்தாள். தமிழரசன் வேகமாக அவர்களிடம் வந்தார்.

அப்பா, நில்லுங்க என்று ரசிகா அகரனது அண்ணியை முறைத்து பார்த்தாள்.

என்னடி முறைக்கிற?

இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒப்பாரிய நடத்துனீங்களே! அதை பற்றி நான் உங்களிடம் கேட்கணுமே?

என்ன? அகரன் அண்ணன் ரசிகாவிடம் வந்தான்.

அண்ணா, நீங்க ஒரு அண்ணனா அகரனுக்கு இருக்க இடம் கொடுத்தீங்க. சாப்பாடு போட்டீங்க. ஏன் படிக்ககூட வச்சீங்க? உங்க தம்பின்னு மரியாதை யாராவது கொடுத்தாங்களா? அவன் பல நேரம் வீட்டிற்கு வந்ததில்லை. எப்ப? பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே..

அவன் வீட்டிற்கு வரலைன்னு ஒரு நாளாவது தேடி இருப்பீங்களா? சாப்பாட்டான்னா? இல்லையா? பாதுகாப்பா இருக்கானா? ஏதாவது பார்த்துருக்கீங்களா?

நீங்க அவனுக்கு உதவியது புண்ணிய கணக்கில சேர்ந்திருக்கும். இதுவே போதும். இதுக்கு மேல அவனை தொந்தரவு செய்யாதீங்க. இனி அகரன் இந்த வீட்டுக்கு வர மாட்டான். வாடா..என்று ரசிகா அழைக்க,

ரசி, ஒரு நிமிசம் என்று அவன் அண்ணாவிடம் சென்று அவரை அணைத்து விட்டு, “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” மாமா முறைக்கு நான் செய்ய வேண்டியதை இதில் எடுத்துக்கோ என்று அகரன் கிரிடிட் கார்டு ஒன்றை அவன் அண்ணனிடம் கொடுத்தான்.

நாம பிரிந்தாலும் பந்தம் பிரியாது. நீ உன்னோட குடும்பத்தை இனி என்னை நினைக்காமல் பார்த்துக்கலாம். நானும் என் குடும்பத்தை பார்த்துக்கணும் என்று மெல்லினா, ரசிகா கையை பிடித்தான் அகரன்.

அக்கா, நீ எப்பொழுது வேண்டுமானாலும் என் வீட்டிற்கு வரலாம் என்று அகரன் ஜானுவை பார்த்தான். அவள் மெல்லினாவை முறைத்துக் கொண்டிருக்க, அகரன் அவளை பார்த்து, எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு. வேற எவனையாவது பிடிச்சுக்கோ. யார் என்ன சொன்னாலும் நீ என்னிடம் அப்படி நடந்திருக்க கூடாது. உன் கேவலமான குணம் இதிலே தெரியுது என்று அகரன் கோபமாக சொல்ல, அகரனை அடிக்க அவள் கையை ஓங்கினாள்.

மெல்லினா அவளை தள்ளி விட்டு, இனி யாரும் என் அகரன் அருகே வரக் கூடாது. பிரணி, எல்லாமே தயாரா இருக்கா? என்று மெல்லினா சத்தமிட்டாள்.

மருமகளே இப்ப என்ன செய்தீங்க? தமிழரசன் கேட்க, பிரணிதா படியிலிருந்து இறங்கி ஓடி வந்தாள்.

மெல்லி, நீ சொன்ன மாதிரி எல்லாத்தையும் வீடியோ எடுத்திட்டேன். போஸ்ட் பண்ணிடலாமா? என்று ஜானகியை பார்த்து போனை ஆட்டிக் கொண்டே கேட்டாள் பிரணிதா.

அதை உன்னோட அத்தையும், மாமாவும் தான் சொல்லணும். வக்கீல் அங்கிள்..அவங்க கிட்ட சைன் வாங்குங்க. இல்ல இதை எல்லாருக்கும் தெரியப்படுத்திடலாம் என்றாள் மெல்லினா.

ஏதும் செய்திடாத என்ற அகரன் அண்ணி வேகமாக கையெழுத்திட்டார். அகரன் அவன் அண்ணனை பார்த்தான்.

என்னால போட முடியாது. என்ன இருந்தாலும் அவன் என் தம்பி என்று அவர் சொல்ல, அங்கிள் நீங்க நடிக்க தேவையில்லை. அதான் அவன் பணம் கொடுத்துட்டானே? போதாதா? இல்லை கலி சாப்பிடணுமா? என்று மெல்லினா கேட்க, மெல்லி..வா போகலாம் என்றான் அகரன்.

அகரா நில்லு, உன்னோட அறை எங்க இருக்கு? மெல்லினா கேட்க, மெல்லி இது தான் என்று மேலிருந்த அறையை பார்த்தான்.

எல்லாரும் வெயிட் பண்ணுங்க. நாங்க வாரோம் என்று மெல்லினா அகரனை இழுத்து மேலே சென்றாள். ஜானகியும் அவள் வீட்டினரும் கிளம்பினார்கள். அகரனின் அண்ணன் கையெழுத்திட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!