கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -6
கரைந்தேன் மெல்ல தொலைந்தேனே அத்தியாயம் -6
ஏரா நேராக வந்து தன் அம்மாவிடம் “ஒம்மா நீங்க ஏன் பாவைக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க? இப்போ பாருங்க ஹுனும் அவங்களும் ஒன்னா கார்ல வந்து இறங்குறாங்க என்னன்னு கேள்வி கேட்க மாட்டீங்களா?”
Advertisement
அதற்கு அஜ்ஜீமா சிரித்தப்படி “ஏரா அவங்க எங்கே போய்ட்டு வராங்கன்னு எனக்கு தெரியும் பாவை என்கிட்ட சொல்லலை.ஆனால் ஹுன் எல்லாத்தையும் சொல்லிட்டான் ஆஸ்பிட்டல் தானே போய்ட்டு வந்து இருக்காங்க” என்று நடந்த விவரங்களைச் சொன்னார்.
அதைக் கேட்ட ஏரா இதற்கு மேல் எதுவும் பேசமுடியாததால் அமைதியாகச் சென்று விட்டாள்.
Advertisement
Advertisement
மறுநாள்…
ஒரு கவளம் மதுபானத்தை அருந்தியதால் வந்த விளைவால் மயங்கிச் சரிந்தான் கிம்.தென் கொரியாவில் உள்ள மக்கள் எல்லோரும் நிச்சயம் மதுபானத்தையும் ஒரு உணவாகவே அருந்துவார்கள்.ஆனால் கிம்மிற்கு எப்பொழுதுமே ஒத்துக் கொள்ளாத ஒன்று.
Advertisement
தலையை அழுந்த பிடித்தபடி அமர்ந்தவன் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.தன் கைப்பேசியைப் பார்க்க அதில் நாற்பது மிஸ்டுகால் இருந்தது.அதில் முப்பது முறை மேலாக க்வாங் அழைத்திருந்தாள்.
அந்த அழைப்பை பார்த்தவனுக்கு க்வாங் உடன் இரவு உணவிற்கு வருவதாக சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.
உடனே கிம் தன் கைபேசியை எடுத்து க்வாங்கை தொடர்பு கொண்டான்.அழைத்த முதல் அழைப்பிலேயே அவள் எடுக்கவில்லை.இரண்டு முறை தொடர்பு கொண்டும் கைப்பேசியை எடுக்காமல் போக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.நிச்சயம் அவன் தன் மேல் கோபமாக இருப்பாள் என்று அவனுக்கு தெரியும்.
அதனால் “க்வாங் என்னை மன்னிச்சிடு முக்கியமான வேலையாக வெளியே வந்து இருந்தேன் அதனால்தான் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை இன்று நிச்சயம் உன்னை நானே வந்து சந்திக்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
அடுத்த நேராக எழுந்து குளியலறைக்குள் சென்றான்.இன்று அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பு நிகழ்ச்சியில் உள்ளது.அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான்.
பாவை எப்பொழுதும் போல் அலுவலகத்துக்கு செல்வதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.
இம்முறை ஹீன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான்.
பாவையைப் பார்த்ததும் புன்னகை ஒன்றை தர பாவையும் ஹீனைப் பார்த்து புன்னகைத்தாள்.செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாலும் அவனின் பார்வையோ அவளின் மீதே நிலைத்து இருந்தது.
செல்லும் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.பாவையின் தாய் வெளியே வந்தவர் ஹுன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதைப் பார்த்து “ஹுன் புதுசா தோட்டத்துக்கு தண்ணீரெல்லாம் ஊத்துறே?” என்றதற்கு “ஒம்மா இயற்கை இரசிக்கும் போது மனதுக்கு லேசாக இருக்கு” என்று பாவையின் மீது கண் வைத்து அவன் சொல்ல அஜ்ஜீமாவோ தலையில் அடித்துக் கொண்டு “ஏதோ புதுசு புதுசா நடந்துக்கிறே ஒன்னும் புரியலை” என்றவரிடம்
“ஒம்மா பாவை ஆபிஸ்க்கு இன்னைக்கு சீக்கிரமா போயிட்டா நீங்க போகலையா?” என்றான்.
“இன்னைக்கு பாவைக்கு மற்ற கம்பெனிகளோடு கான்பரென்ஸ் மீட்டிங் இருக்கு அதனால அவ சீக்கிரமா போகனும்” என்றார்.
அதைக் கேட்டு அவனும் தலையசைத்தான்.பாவை வந்த கொஞ்ச நாட்களிலேயே ஓரளவு தெரிந்த ஹங்குவான் மொழியை இப்பொழுது கொஞ்சம் பேச கற்றுக் கொண்டாள்.அதனால் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றாள்.அங்கு வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் வர இருப்பதால் ஆங்கிலத்தில் பேசுவதற்காக இவள் சென்று இருந்தாள்.
அங்கே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து தன் அலுவலகத்தில் மேலாளருக்கு காத்திருந்தவள் மடிக்கணினியில் தேவையான கோப்புக்களை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.
முதலீட்டார்கள் என ஓரளவு எல்லோரும் வந்து விட்டனர்.இவளுடைய மேலாளர் உட்பட.இந்த நிகழ்ச்சியை நடத்தும் மற்றும் இவர்களோடு இன்னும் சில கம்பெனிகளின் மொத்த உதவி தலைமை நிர்வாக அதிகாரிக்காக அனைவரும் காத்திருந்தனர்.
பக்கத்தில் உள்ளவர்கள் அந்த தலைவரைப் பற்றி அடுத்த தலைமை அதிகாரியாக இவரே வரவிருப்பதால் தற்சமயம் அவருக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக பேசினர்.மேலும் இந்த அதிகாரியே தலைமை அதிகாரியின் மகன் என்று பேசிக் கொண்டனர்.
பேசிக் கொள்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டாலும் பாவை அதை எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தாள்.
அப்பொழுது எல்லோருடைய கண்களும் அறையின் வாயிலில் இருக்க….
மேல்நாட்டு உடையான கோட் சூட் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் அதோடு கரங்களில் கைபேசியுடன் உள்ளே நுழைந்தான் அந்த நிறுவனத்தின் உதவி தலைமை அதிகாரியான கிம் சியோ ஜீன்.
அங்கே வந்திருப்பவனைக் கண்டு எல்லோரும் முகத்திலும் புன்னகை ததும்பி இருக்க…
அதைக் கண்ட பாவையின் முகமோ மொத்தமாக அதிர்ச்சியில் இருந்தது.அங்கே அவனைக் கண்டதும் தன்னை அறியாமல் எழுந்துக் கொள்ள அவனோ அங்கே ஒருத்தி இருப்பதாக எண்ணிக் கொள்ளாமல் நேராக தன் பார்வையை செலுத்தியவன் இருக்கையில் போல் அமர்ந்தான்.
பாவையின் அருகில் இருந்த மேலாளர் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக “போடுகா ஜிக்கியாயோ இஸ்ஸாயோ – உட்காரு எல்லோரும் பார்க்குறாங்க” என்றார்.
அவளும் இடமறிந்து அமைதியாக உட்கார்ந்தாள்.கிம் தன்னுடைய சந்தித்தலுக்கான நிகழ்ச்சியைப் பற்றி பேச ஆரம்பித்தான்.
அவளின் பார்வை அவனின் மீதே நிலைத்து இருந்தது.அவன் பேசுவது எதுவும் இவளுடைய காதில் விழவில்லை.மாறாக விழிகள் முழுவதும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.எந்த சூழ்நிலையில் அவனை சந்திக்கவே கூடாது என்று நினைத்தாளோ இன்று தன்னவனின் முன்னால் நிற்பதை நினைத்து வெளியே வாய்விட்டு சொல்லி அழ முடியாமல் உள்ளே தேக்கியபடி எச்சிலை விழுங்குவதை பெரும் பாராமாகிப் போனது.
அவன் தன்னுடைய பேச்சை முடித்ததும் மற்றவர்கள் தங்களுடைய யோசனையைப் பற்றி எல்லாம் பேசினார்கள்.ஏற்கனவே பாவையின் மேலாளர் அவளிடம் எல்லாவற்றையும் தயார் செய்யச் சொல்லி விட்டு அவரே நிகழ்ச்சியில் பேசுவதற்காக எழுந்தார்.
உடனே கிம் “ஒசாகி யகி ஜோம் ஹெல்தகோ ஹிஸ்ஸாயோ – உங்க கம்பெனியோட புது எம்ளாயி பேச சொல்லுங்க” என்றான் சாதாரணமாக…
இதைக் கேட்டு பாவைக்கு தான் இன்னும் திணறிப் போனாள்.அவளின் மேலாளர் அவளைப் பார்க்க வேற வழியில்லாமல் மெதுவாக தன் வயிற்றைப் பிடித்து எழுந்தாள்.தன்னைத் தானே கொஞ்சம் சமநிலைப் படுத்திக் கொண்டாள்.
அதை எல்லாம் அவன் பார்க்காமல் மடிக்கணினியில் தன் பார்வையை செலுத்தினான்.பாவை முதலில் தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு தன் நிறுவனத்தின் விளக்கக்காட்சியை சரியாக பேசி செய்து முடித்தாள்.அவனோ எல்லோரையும் எப்படி கவனித்தானோ அப்படித்தான் அவனின் செயல் இருந்தது.
கிம் எதற்கும் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் சிறு தலையசைப்பை மட்டும் பாவையின் மேலாளரிடம் பார்த்துச் சொன்னான்.
வந்திருந்த எல்லோருடைய விளக்கக்காட்சி முடிந்ததும் புது நிறுவனத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.எல்லோரும் பேசி முடித்ததும் கிம் சியோ ஜீன் நேரில் சந்தித்து அவனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இவளும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது வந்தது.தயக்கமும் தவிப்பும் ஒரு சேர வந்தது.அதை வெளிக்காட்டாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.
அப்பொழுது இவளுடைய முறை வர கிம்மின் உதவியாளர் வந்து ஏதோ அவனின் காதில் சொல்ல உடனே “மற்றவங்களை இன்னொரு நாள் அவங்க கம்பெனில சந்திக்கிறேன் இப்போ நான் கிளம்புறேன்” என்று சொல்லிக் கொண்டு வெளியே சென்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் தான் பாவைக்கு தற்போது நிம்மதியாக இருந்தது.அவன் சென்ற பிறகு கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இவளும் வெளியே வந்தாள்.அங்கே கிம்முடன் அந்த நாட்டுப் பெண்ணொருத்தி நெருங்கி நின்றபடி சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
அவனும் பதிலுக்கு புன்னகையோடு பேச கடைசியில் அந்தப் பெண்ணவள் இவனின் கரங்களோடு கரம் கோர்த்தப்படி காரில் ஏறிச் சென்றனர் இருவரும்.
இதை எல்லாம் பாவை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று கிம்மின் உதவியாளன் அவனுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினான்.
எல்லாவற்றையும் பார்த்தவளின் மனமோ நீண்ட ஒரு பெருமூச்சை ஒன்றை விட்டப்படி அப்படியே பார்வை நிலைத்து இருந்தது.அவனோடு இருந்த பழைய நினைவுகள் அவளை ஆக்கிரமித்துக் கொண்டன.
இருக்கும் சூழ்நிலையில் மெதுவான நடையோடு கிம்மின் நினைவுகளும் அவளை ஆக்கிரமித்துக் கொண்டன.
இங்கே க்வாங் கிம்முடன் பேசிக் கொண்டிருந்தாலும் பாவை தன்னைப் பற்றி அறிந்துக் அவன் செய்த செயல் சரியானது தானா? என்று அவனின் உதவியாளன் அனுப்பிய பாவையின் புகைப்படத்தை பார்த்தப்படி இருந்தான்.
கிம் எப்பொழுது சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்தாலும் கண்காணிப்பு படமியின் மூலம் வந்திருப்பவர்களை பார்ப்பது வழக்கம்.அப்படி அவன் பார்க்கும் பொழுது அங்கே பாவை இருப்பதை கண்டுக் கொண்டான்.
ஏற்கனவே இரண்டு முறை க்வாங்விற்கு கைப்பேசியில் அழைப்பு விடுத்திருந்தவன் கடைசியாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
அவன் நேற்று வராமல் இருந்ததிற்கு மன்னிப்பு கேட்டிருந்தான்.அலுவலகத்தில் பாவையை பார்க்கவும் உடனே க்வாங் வீட்டிற்கு அவளுக்கு பிடித்த பூக்களை அனுப்பி காலையில் அவனை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறும் இன்றைய நாள் அவளோடு இருப்பதாகவும் உறுதியளித்து அட்டை அனுப்பி இருந்தான்.
அதைப் பார்த்த க்வாங் தன் தோழனின் திடீர் மாற்றத்தில் மகிழ்ச்சியடைந்தவள் அவன் சொன்ன மாதிரியே நேராக அலுவலகத்திற்கு வந்தாள்.
பாவை தன்னைப் பார்க்கும் பொழுது அவளை மறந்து விட்டு தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாக நினைக்க வேண்டும் என்று தான் கிம் அத்தனையையும் செய்தான்.
கிம் நினைத்தது போலவே பாவை அதைப் பார்த்து விட்டாள்.என்ன தான் அவன் செய்த செயல் அவனுக்கு வெற்றி கிடைத்தாலும் ஏதோ ஒரு நெருடல் மனதைப் போட்டு படுத்தியது.பாவை மட்டும் தன்னை மறந்து இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது தானும் அப்படித் தான் என்று காட்டிக் கொள்ள இத்தனை மெனக்கெடல்கள் இருந்தும் மனம் தான் போனவளையே நினைத்துக் கொண்டிருந்தது.
க்வாங் கேட்கும் கேள்விகளுக்கு உதடுகள் பதில் அளித்தாலும் மனமோ அவளையே நினைத்திருந்தது.
பாவைக்கு வேலைகள் எதுவும் சீராக செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.கடைசியில் வேலை நேரம் முடிய அங்கிருந்து வேகவேகமாக கிளம்பியவள் நேராக பேருந்து நிறுத்தத்தில் போய் அமர்ந்துக் கொண்டாள்
அங்கே பேருந்திற்காக காத்திருந்தவள் அவள் அருகினில் இரண்டு பேர் ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்ததாக பெற்றவர்கள் இருவர் வேலையை முடித்து விட்டு தன் மகளுக்காக நிறுத்தத்தில் காத்திருக்க அந்தப் பெண் அதே இடத்திற்கு வரவும் மூவருமாக சிரித்துப் பேசினர்.அதைப் பார்த்தவளின் விழிகளோ காயம் பட்ட மனதினை இன்னுமாக காயப்பட வைத்தது. பழைய நினைவுகளுக்குள் தன்னை தொலைத்திட நினைத்தாள் பெண்ணவள்.
கண்களை மூடி அப்படியே சாய்ந்தாள்.மனம் முழுவதும் பாராமாக நெஞ்சை அழுத்தியது.
வானம் தன் சாரலைத் தூவ மழை பெய்யத் துவங்கியது.
மூன்று வருடங்களுக்கு முன்னால் ….
தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னையில் தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ஆட்டோமொபைல்ஸ் துறையில் உள்ள நிறுவனங்களில் பயிற்சிக்காக வேலையில் சேர்ந்திருந்தாள் பாவை.
வீட்டின் சின்னவளாளதால் எப்பொழுதும் அவளின் தந்தைக்கு செல்லப்பிள்ளை பாவை.தந்தையோடு சேர்ந்து தாயையும் உடன்பிறந்த அக்காவையும் வம்பிழுப்பது பாவையின் வழக்கம்.
பாவையின் அக்கா வாணி ரொம்ப அமைதியானாவள்.பாவைக்கு இன்னொரு அம்மாவாகத் தான் இருப்பாள்.இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.அவளுடைய பொருட்களை எடுப்பது,சண்டைப் போடுவது என தன்னுடைய நாட்களை அழகாக கழித்தாள் பாவை.
பாவையின் தந்தை ரமணா “பாவை இன்னும் ரெடியாகலையா? புது கம்பெனிக்கு வேலைக்கு போகனும்?” என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் வாயில் தோசையை வைத்துக் கொண்டிருந்தவள் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த பாவையின் தாய் செல்வி “என்னங்க அவ சாப்பிட்டு இருக்கா?” என்றதும் வாணி அப்பாவோடு கடைக்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டு வந்தாள்.
ரமணாவும் வாணியும் வெளியே செல்வதற்காக தயாராகிக் கொண்டு வாசலில் வர பின்னால் வந்த பாவை “அப்பா என்னை முதல்ல டிராப் பண்ணிட்டு போங்க டைம் ஆச்சு” என்று பதற்றமாக சொல்லினாள்.
செல்வி “பாவை அப்பாவும் அக்காவும் வெளியே போறாங்க நீ இப்போ உன் பைக்ல போ” என்றதற்கு “அதெல்லாம் முடியாது முதல் நாளு வேலைக்கு போறேன் அப்பாத் தான் டிராப் பண்ணனும் அக்கா நீ வெயிட் பண்ணு” என்று வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் பாவை.
ரமணாவோ வாணியிடம் “வாணி நீ பாவையோட வண்டில வா கம்பெனில அவளை டிராப் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் கடைக்கு போகலாம்.நீ வந்த வண்டியை அங்கே பார்க்கிங்ல விட்டால் வரும் போது பாவைக்கு சுலபமாக இருக்கும்ல” என்று தன் செல்லப்பிள்ளைக்கு ஆதரவான வழியைச் சொல்ல அப்படியே நடந்தது.செல்வித் தான் புலம்பிக் கொண்டிருந்தார்.ஆனால் அதை எல்லாம் கேட்கத் தான் ஆளில்லை.
ரமணா சொன்னது போல் பாவையை கம்பெனியில் இறக்கி விட்டு இருவருமாக இன்னொரு பக்கமாக கடைக்குச் சென்றனர்.அதற்கான மெனக்கெடல்கள் அதிகம் தான் இருந்தாலும் வாணி புன்னகையோடு இருந்தாள்.
பாவை தன் அப்பாவிடம் ஆசி வாங்கி விட்டு தன் புது நிறுவனத்திற்குச் சென்றாள்.காரின் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான சென்னையின் உள்ள கொரியன் நிறுவனத்தின் வந்திருந்தாள்.
அங்கே முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள் கொரிய மக்களே இருந்தனர்.புது அலுவலக நண்பர்களோடு ஆரம்பம் ஆனது.
நாட்கள் வேகமாக கடந்து இருக்க வாணிக்கு தினகரனோடு திருமணம் முடிந்து போனது. அவள் தன் கணவன் வீடு ஊட்டியில் இருந்தாள்.இப்பொழுது நினைத்த உடன் எல்லாம் அக்காவை பார்க்க போகலாம் என்று சொல்லி ஊட்டிக்குச் சென்று சுற்றிக் கொண்டிருந்தாள் பாவை.
