Skip to content
Post Views: 3,267
கற்பனை 22
இரண்டு நாட்கள் நிரூபனும் நிவாஸும் ஒருவரை ஒருவர் விடுத்து வாழமுடியாது எனும் பிரிவுத் துயரில் மீண்டும் மீண்டும் தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள,இங்கே வீட்டில் திருமகள் தனியே தவித்தாள். வீட்டில் அநேகமான மளிகை பொருட்கள் தீர்ந்து விட்டிருந்தது. இன்னமும் அவளிடம் அதிக பணப் புழக்கம் இல்லை.அதோடு வெளியுலகத் தொடர்பும் முன்பைவிட வெகுவாகக் குறைந்து விட்டிருந்தது.முன்பெல்லாம் பெற்றோர் ,அவர்களது ஆதரவும் அரவணைப்பும் இருந்தது.
Advertisement
இப்போது ம்ஹும்..எல்லாமே விட்டுப் போயிற்று. தனித்தீவு ஆகிப்போனாள் . இரண்டு நாட்கள் கழித்து வந்த நிவாஸ் இவளைக் கண்டுகொள்ளவே இல்லை. அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தான் விலகிப்போனது தவறு.இதோ இப்போது மறுபடியும் என்னை பார்ப்பதைக் கூட தவிர்க்கிறார்’என்ற கழிவிரக்கம் மிக என்ன செய்து கணவனை சமாதானம் செய்வது என்று குழம்பினாள்.
வீட்டு நிலவரத்தை வேறு கணவனிடம் சொல்ல வேண்டும். அவன்தானே எல்லா விஷயங்களையும் கவனிக்கிறான். ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனிடம் பேச சென்றாள் .அவளது குரலைக் கெட்டவனுக்கு மனைவியை திரும்பியும் பார்த்தான் இல்லை. அவளும் வேறு வழி எதுவும் இல்லாமல் அவனிடமே ‘என்னங்க..வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கி மூணு மாசம் ஆகுது.எல்லாம் காலி ஆயாச்சு.இன்னிக்கு இருக்கிறதை வச்சு சமையல் பண்ணிட்டேன்.பட் ,நாளைக்கு ஏதாவது வேணும்னா..இப்போ போய் குரோசிரிஸ் வாங்கியாகணும்”என்று சொல்லிவிட்டாள் .
Advertisement
Advertisement
‘அற்ப புழுவே’ என்பதை போல் அவன் பார்த்த பார்வையில் அவளது உடல் முழுவதும் கூசிப் போயிற்று. என்றோ எங்கோ படித்த-கேட்ட பெண்ணிய வார்த்தைகளும் சுய மரியாதையும் வெறும் காற்றில் வரையப் படும் கார்ட்டூன் அவளை சுழட்டி அடிப்பதுபோல ஏதோ உணர்வு. அவனிடம் மேற்கொண்டு பேசும் திராணி இல்லாமல் தனது அறைக்குள் வந்துவிட்டாள் .
அடுக்களைக்குள் சென்ற நிவாஸ் அவள் சொன்னது உண்மைதானா..என்று மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு தனது காரில் கிளம்பினான்.என்ன நினைத்தானோ..மீண்டும் வீட்டுக்குள் வந்தவன் திருமகளிடம் “நீயும் கிளம்பு. ரெண்டுபேருமே போயிட்டு வாங்கிகிட்டு வருவோம். ஜஸ் டென் மினிட்ஸ். கெட் ரெடி ” என்றுவிட்டு வெளியே மனைவிக்காக காத்திருந்தான்.
Advertisement
அவன் சொன்னதை மெதுவாக உள்வாங்கியவள் மனம் காயப்பட்டு போயிருந்தது உண்மை.அவனிடம் மறுக்கும் தெம்பு இப்போது அவளிடம் சுத்தமாக இல்லை. அவன் சொன்ன நேரத்திற்கு இரண்டு நிமிஷங்கள் முன்பாகவே கிளம்பி வந்துவிட்டாள் .
அவளை மெச்சுதலாக பார்த்தவன், கண்களில் அவளது கன்னத்தின் செழுமை பட , அவனது மூச்சுக்காற்று சூடானது. அவன் நினைவுகளில் நிரூபன் வந்து சென்றான். அவன் மீண்டும் மீண்டும் சொன்னவையே காதில் ஒலித்தது.” இங்கே பாரு நிவாஸ். நம்ம ரிலேஷன்ஷிப் நிச்சயமா ரொம்ப நல்லாவே போகுது. என்னோட காதல் தோல்விக்கு(?) நீ ..நீ மட்டும்தான் மருந்து.பட் ,உனக்கும் கல்யாணம் ஆயாச்சு.உன்னோட சம்பாதித்த பணத்தை கொடுக்கவும் செலவு செய்யவும் ஆள் வேணும். அண்ட் இப்படியே இருந்தா உனக்கு ஏதோ உடம்புல பிரச்சனைனு பேசுவாங்க.ஸோ ,சீக்கிரமா அப்பா ஆகுற வழிய பாரு”என்று சொல்லி அனுப்பியிருந்தான்.
நிஜம்தான்.மறுப்பதற்கு இல்லை. ஆணிடம் இருக்கும் அளவுக்கான அதே ஈர்ப்பு அவனுக்கு பெண்ணிடமும் உண்டு.திருமணத்திற்கு முன்பே பெண்களுடனும் இருந்தவன்தான். அதை தவறு என்று அவன் நினைக்கவில்லை. பெண்களுடன் இருந்த பொழுது நிறைவை உணராத ஜடமும் இல்லை.
திருவின் மறுப்பு அவனுக்கு தீயை பற்ற வைத்திருந்தது. அதன் வலியை திரும்ப அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று அவனது மனம் விரும்புகிறது. எப்போதுமே பெண்ணின் முதல் கடமை எல்லா விஷயத்திலும் கணவனுக்கு தேவையானவற்றை செய்வதும் அவனது தேவையை தீர்த்து வைப்பதும்தான்.அதை மறுக்க இவளுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும். அதை நிலைக்க விடலாமா”என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
எப்போதோ ஒருமுறை நடக்கும் கூடலின் சமயத்தில் கூட அவன் மேலிருப்பனே தவிர அவளை மேலே ஆக்கிரமிக்க விட்டதில்லை. அவள் அப்போது கூட தனக்கு கீழே தான் இருக்கவேண்டும் என்று யோசிப்பவன். இதோ அவர்கள் வழக்கமாக வாங்கும் குரோசேரி ஷாப் வந்துவிட இருவரும் காரை அதன் தரிப்பிடத்தில் விட்டு உள்ளே நுழைந்தார்கள்.
தேவையான அனைத்தயும் மூன்று மாதங்களுக்கு வாங்கியவன் ,ஆல்கஹால் வாங்கிய வேகத்தை பார்த்து திருவுக்குள் பயப்பந்து உருண்டது. இருவருமாக மீண்டும் வீட்டுக்கு வரும்பொழுது இரவு பத்தை தாண்டிவிட்டது. சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டதால் ,திருவுக்கு வீட்டில் வேலை ஒன்றும் பெரியதாக இல்லை.
அடுக்களையில் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் தனது அறைக்குள் நுழைய பார்க்க அறைக்கதவு திறக்க முடியவில்லை. பூட்டி வைத்துருந்தான் நிவாஸ். அவள் கதவின் முன்னால் நின்றுகொண்டு நிவாஸ் அறையை ஏக்கமாக பார்க்க,புரிந்து கொண்டவனோ “இங்கே என்னோட ரூமில்தான் இனிமே நீ தூங்கணும் திரு. வேறே வழி இல்ல”என்றான் தெளிவாக. அவன் வார்த்தைகளில் அர்த்தம் புரிந்தவளுக்கு வயிறு சில்லிட்டது.
ஏற்கனவே அதிகமாக குடித்திருந்த நிவாஸுக்கு அவனது உணர்வுகள் விழித்துக்கொள்ள சுய நினைவுடன் இருக்கும் திருவிடமிருந்து ஓத்த்துழைப்பு சரியானபடிக்கு கிடைக்காது என்று புரிந்தவனாக அவளுக்கு வலுக்கட்டாயமாக டக்கீலாவை புகட்டிவிட்டான். அவளது மறுப்புகள் காற்றோடு கரைய, அவனது வேகத்தில் அவளது பெண்மையும் நடுங்கியது.
அன்றைய கூடலில் அவள் இழந்தது தான் அதிகம். அடுத்தநாள் எழும் பொழுதே கால்கள் தள்ளாடியது. தலைவலி ஒருபுறம் என்றால் கை கால்களை அசைக்கவும் அவளால் இயலவில்லை. முதல்நாள் நடந்தவை அவளுக்குள் கணவன் மீதான பயப்பந்தை மீண்டும் உருள செய்தது.
கூடல் இவ்வளவு கொடுமையான தண்டனையாக இருக்கும் என்று அவள் திருமணத்திற்கு முன் யோசித்ததுகூட இல்லை.தெரிந்திருந்தால் திருமணமே செய்துக்கொண்டு இருந்திருக்க மாட்டாள்.’எல்லா ஆண்களுமே இப்படித்தான் இருப்பார்களா..இல்லை இவர்தான் இப்படி நடந்துகொள்கிறாரா’ என்ற புதிய சந்தேகம் வேறு வந்து தொலைத்திருக்க தேவையே இல்லாமல் அவளது நினைவடுக்குகளில் ஆஜரானான் நிருபன்.
ஏதேதோ சந்தேகமே இல்லாமல் உணர்வு போராட்டம். பழைய நினைவுகள். அவனுடன் பழகிய நாட்கள் சொற்பம் என்றாலும் அந்த நாட்கள் ஆரம்ப காலத்தில் இனித்தாலும் கடைசியில் அவளுக்குள் கசப்புணர்வைத்தானே விதைத்துவிட்டு சென்றது. அப்படியென்றால் அநேக ஆண்களின் எண்ணம் உடலின் தேவையை முன்வைத்துதான் இருக்குமா?அப்படியென்றால் உண்மைக்காதல் ,காவியக் காதல் எல்லா கண்றாவியும் இதை வைத்துதானா? என்றெல்லாம் தீவிர யோசனைக்கு உள்ளாக மனமும் உடலும் இன்னமும் சோர்வு கொண்டது.
பங்களூரு வீட்டில் ஜான்வி மனம் நிலையில்லாமல் தவித்தது. அவளால் இங்கே சாகேத்துடன் இருக்க முடியாது . இங்கிருந்து கிளம்பிய தீர வேண்டும் என்ற எண்ணம் அவளை ஆட்டிப்படைத்தது . அவனுக்கு துரோகம் செய்து கொண்டு அவன் வீட்டிலேயே இருப்பது தவறு என்ற எண்ணம் அவள் சிந்தனையை ஆட்டிப்படைக்க தனது கணவனிடம் இவருக்கான நிரந்தர பிரிவு பற்றி எப்படி பேசுவது என்று வார்த்தைகளை யோசித்துக்கொண்டிருந்ததாள் .
சாகேத் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறான். இந்த சமயத்தில் பிரியத் தேவையான எல்லாவற்றையும் யோசித்தே ஆகவேண்டும்.எப்படியும் இந்த முடிவு எடுத்த பிறகு இங்கே தங்கி இருப்பது சரியாகாது என்று தோன்ற தனது அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக்கொண்டு விநீதனுடைய பிளாட்டுக்கு சென்றுவிட்டாள்.
‘சாவியின் இன்னொரு பிரதி சாகேத்பத்ரியிடம் இருக்கு விநீதன் .இனிமே நா இங்கே தான்” என்றுவிட்டவளை திரும்பவும் அங்கே அனுப்புவதற்கு விநீதனுக்கு மனம் இல்லை. அவனது முழுப்பெயர் சொல்லி இதுவரை யாருமே குறிப்பிட்டது இல்லை. கல்லூரியில் அவனது பெயரை முதன்முறை கேட்டபொழுது ஜான்வியின் மனதில் அழுத்தமாய் பதிந்து விட்ட பெயர். எல்லோரும் சாகேத் என்று அழைக்க அவனது பெயர் இவளுக்கு எப்போதுமே சம் திங் ஸ்பெஷல் தான். அவனது நினைவுகளில்மூழ்கியவளுக்குள் மானது தங்களது திருமண வாழ்வு எல்லோரையும் போல சரியாக அமைந்திருக்க கூடாதா..என்று தோன்றாமல் இல்லை.
விநீதனுடன் அவளுக்கு இருப்பது காமம் சார்ந்த காதல்தான் என்பதில் அவளுக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதே சமயம் சாகேத்தையும் மறக்க முடியாமல் இருதலைக்கொள்ளி நிலையானது பெண்ணுக்கு.
நிச்சயம் செக்ஸ் வாழ்வு இல்லாத ஒரு காதல் வாழ்க்கையை அவளால் வாழ முடியாது. அப்படி இருக்கும் பொழுது கல்யாணம் ஆனா பிறகும் வெறும் நண்பர்களாக வாழ்வோம் என்றெல்லாம் உளறிக்கொண்டு தெய்வீகக் காவியம் படைக்க அவளால் முடியாது.
ஊருக்கு திரும்பி வந்த பிறகு சாகேத் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்வான் என்று வேறு தெரியவில்லை. எப்படியும் இத்தனை நாட்களில் சாகேத்துக்கு விநீதனுடனான எனது உறவு ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று தன்னை தானே சமாதானம் செய்து செய்துக்கொண்டு தனது உடமைகளை விநீதனுடைய அறைக்கு கொண்டு சென்று எடுத்து வைக்கத் தொடங்கினாள்.
அவள் மனதில் ஒரு இதம் பரவுவதை அவளால் உணர முடிந்தது. திருமணம் முடிந்து கணவனுடன் வாழாமல் வேறொருவரைத் தேடி வருவதும் இன்னொரு உறவை நாடுவதும் இந்த உலகத்தின் பார்வையில் நிச்சயம் தவறுதான். இவளும் கூட வேறு யாராவது இது போல செய்திருந்தால் வம்பு பேசியிருப்பாள். ஆனால் , இப்போது அவள் இருக்கும் நிலை ..அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. சொல்லி புரியவைக்கும் விஷயம் இல்லை இது. முற்றிலும் வேறு.
குறைந்தபட்சம் விநீதன் என்னை புரிந்து கொள்வதே பெரியவிஷயம் எண்டு தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவளுக்கு ,விநீதன் என்னை மிகவும் நேசிக்கிறாரோ என்றும் தோன்றாமல் இல்லை.
சாகேத் -விநீதன் இருவரையும் பற்றி சிந்தித்ததில் அவளுக்கு தலைவலிதான் மிச்சம். சாகேத் எப்போது வருவான் என்று விசாரித்து எல்லா விஷயங்களையும் முடித்தாக வேண்டும் என்று குறித்து வைத்துக்கொண்டவளுக்கு அடுத்து இரு பெற்றோர்களிடமும் எப்படி விவாகரத்து பற்றியும்,விநீதனுடனான உறவு பற்றியும் சொல்லி புரியவைப்பது என்று மீண்டும் கவலைகள் ஆக்கிரமிப்பு செய்ய ஓய்ந்து போனாள்.
ஜான்வியுடைய பெற்றோர் நிச்சயம் இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டார்கள். சாகேத்தின் பெற்றோரை பற்றியெல்லாம் இவளுக்கு பெரியதாக கவலையும் இல்லை ,அக்கறையும் இல்லை. ஆனால் ,ஜான்விக்கு இனி வரும் வாழ்க்கைக்கு நிச்சயம் அவளது பெற்றோரின் ஆதரவு வேண்டும்.
ஏற்கனவே விநீதனுடன் தானே வாழ்ந்தேன்.அவனையே கல்யாணம் செய்து கொண்டிருந்திருக்கலாம்.இத்தனை புது பிரச்சனைகள் வளர்ந்திருக்காது .அதே சமயம் இந்நேரத்திற்கு அவர்களுக்கென்று குழந்தை கூட பிறந்திருக்கும் என்று மாற்றி மாற்றி மீண்டும் சிந்தனைகள். இதையெல்லாம் விநீதனுடன் எப்படி பகிர்ந்து கொள்ள முடியும் என்று நினைத்து அமைதியாக இருந்தாள் .
error: Content is protected !!