Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 27 2

“இதோ பாரு மரியாதையா நீயே போய் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா இந்த விரலோட போய்விடும்.. இல்லை அதையும் மீறி என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன்னு வை உயிரோடவே உன்னை விட மாட்டேன் பார்த்துக்கோ” என்று கீதா அவனை மிரட்ட,

அவளை கூர்மையாக பார்த்த அஜய், “அப்போ உனக்கு நிஜமாவே என்னை பிடிக்கலை… அப்படித்தான??” என்று கேட்க,



Advertisement

“அஃப்கோர்ஸ் ஆமா.. உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலை” என்று பட்டென்று கீதாவிடம் இருந்து பதில் வந்தது.

Advertisement

“ஏன்???” என்று அஜய் ஒற்றை வரியில் வினா எழுப்ப,

Advertisement

“ஏன்னா நீ என்னை மாதிரியே வாய்க்கு வாய் பேசுற.. இப்படி இருக்க ஆள் எல்லாம் எனக்கு செட் ஆகாது.. எனக்கு நான் சொல்றதெல்லாம் கேட்டு தலையாட்டுற மாதிரி ஒரு அம்மாஞ்சி தான் மாப்பிள்ளையா வேண்டும்” என்று கீதாவும் அஜயை எதற்கு மறுக்கிறாள் என காரணத்தைக் கூறினாள்.

Advertisement

“சோ இதான் உன் பிரச்சனை இல்லையா???” என்று அவன் கீதாவின் கண்களை பார்த்துக் கொண்டே வினவ,

அதில் சற்று தடுமாறிய கீதா பின் தன்னை சமாளித்துக் கொண்டு, “ஆ.. ஆமா” என்று மொழிய, அவளின் நொடி நேர தடுமாற்றத்தையும் தனக்குள் குறித்துக் கொண்டான் அஜய்.

“ஓகே… பிடிக்காத உன் கூட வாழ எனக்கும் ஐடியா இல்லை.. நான் உன் கழுத்துல அன்னைக்கு போட்டு விட்டேனே ஒரு செயின் அதை திருப்பிக் கொடு நான் போய்டுறேன்” என்று சிரிப்பை உள்ளடக்கிக் கொண்டு அஜய் கூற,

அவனின் கூற்றைக் கேட்டு திருட்டு முழி முழித்தாள் கீதா.

‘ஹய்யோ இவன் என்ன சரியான பிச்சைக்காரனா இருப்பான் போல.. போடுற மாதிரி போட்டுட்டு இப்போ திருப்பிக் கேட்குறான்?? சேட்டு கடையில அதை அடகு வச்சே அஞ்சு நாளைக்கு மேல ஆச்சுன்னு இந்த பிசாசுகிட்ட எப்படி சொல்ல’ என்று அவனிற்கு கேட்குமாறு முணுமுணுத்துக் கொண்ட கீதாவோ, “அதெல்லாம் நான் எப்போவோ தூக்கி எறிஞ்சுட்டேன்.   வேணும்னா குப்பையில போய் தேடி எடுத்துட்டு கிளம்பிகிட்டே இரு.. என்னை ஆளை விடு.. நான் உள்ள போய் இந்த கல்யாணத்தை நிறுத்தணும்” என்று அவள் அவனிடமிருந்து தப்பித்துச் செல்ல முயல,

அவளை போக விடாமல் வழி மறைத்த அஜய், “என்ன அப்படியே நைசா கழண்டுக்க பார்க்குற.. நீ என்னை கட்டிப்பேன்னு நம்பிக்கையில தான் என் பரம்பரை செயினை உனக்கு போட்டேன்.. இப்போ கட்டிக்க முடியாதுன்னு என் மனசை உடைச்சதும் இல்லாம என் செயினை வேற திருப்பித் தராம லந்து பண்றியா?? மரியாதையா என் பத்து பவுன் செயினை நீ குடுக்கலை அவ்ளோதான்” என்று அவன் மிரட்டல் விடுத்தான்.

“புழுகினி மூட்டை அது வெறும் நாலே முக்கால் பவுன் தான்.. அதுக்குள்ள பத்து பவுன்னு அபாண்டமாக பொய் சொல்லி என்னை ஏமாத்த பார்க்கிறயா??” என்று கீதா அதிர்ந்து போய் கேட்க,

” பார்ரா தூக்கி எறியுறப்போ எவ்ளோ பவுன்னு வெய்ட் போட்டு பார்த்திட்டு தான் உங்க ஊர்ல தூக்கி போடுவீங்களா மேடம்.. ஏதோ அடகு கடைக்காரன் மாதிரி கரெக்டா வெய்ட் போட்டு சொல்றியே.. உண்மையை சொல்லு.. எங்க என் செயின்” என்று அவன் கிடுக்குப் பிடி போட,

அவனிடம் உளறிவிட்டு மாட்டிக் கொண்டதில் திறு திறுவென விழித்த கீதா,

“சரி இப்போ என்ன… ஆமா நான் அதை ஒரு எமர்ஜென்சிக்கு அடகு வச்சேன் தான்..உனக்கு அந்த இத்துப்போன செயின் தான வேணும் ரெண்டு நாள் டைம் கொடு அதை அந்த சேட்டுகிட்ட இருந்து வாங்கி உனக்கு தந்திடுறேன்.. இப்போ மலைமாடு மாதிரி என் வழியில நிக்காம தள்ளி நில்லு.. உள்ள போய் இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்தணும்” என்று பிரச்சனை முடிந்ததைப் போல் பேசிவிட்டு அவனை தள்ளிக் கொண்டு உள்ளே போகப் பார்க்க,

‘நானா மலைமாடு??’ என்று மனதிற்குள் பொருமிக் கொண்ட அஜய், வெளியே முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டு, “அடிப்பாவி!!!! என்னைப் பிடிக்காது பிடிக்காதுன்னு சொல்லிட்டு என் செயினை எந்த உரிமையில நீ அடகு வச்ச?? அடகு வச்சதும் இல்லாம என்னையே மரியாதை இல்லாம பேசுறியா?? உனக்கு கண்டிப்பா இதுக்கு தண்டனை கொடுத்தே ஆகணுமே” என்று அவன் தாடையைத் தடவிக் கொண்டு யோசிக்க,

அவனின் பாவனையே அவன் ஏதோ பெரிதாக திட்டம் தீட்டுகிறான் என்பதை பெண்ணவளுக்கு சொல்லாமல் சொல்லியது.

“உனக்கு ரெண்டு நாள் எல்லாம் டைம் தர முடியாது.. ஒரே ஒரு நாள் தான் டைம் அதுக்குள்ள என்னோட செயின் என் கைக்கு வந்திருக்கணும்.. இல்லை உன்னை திருட்டு கேஸ்ல உள்ள தள்ளிருவேன் ஜாக்கிரதை.. அப்பறம் முக்கியமான விஷயம் உள்ள போய் இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்னு கலாட்டா பண்ற வேலையெல்லாம் நீ பண்ணவே கூடாது.. மரியாதையா உள்ள போய் இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளையை கிடைச்சதுக்கு போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கனும் அப்படின்னு சொல்லி கல்யாணத்துக்கு ஓகே சொல்ற.. அதான் உனக்கு தண்டனை” என்று அஜய் சிரியாமல் அவள் செய்ய வேண்டியதை பட்டியலிட்டான்.

அதைக்கேட்டு கொதித்தெழுந்த கீதாவோ, ” மவனே ஏதோ செயினை அடகு வச்சுட்டோமே போனா போகுதுன்னு பாவம் பார்த்தா என் தலையிலே மிளகாய் அரைக்க பார்க்குறியா நீ?? உன்னை கட்டிக்க புண்ணியம் பண்ணிருக்கனுமா??? இரு நான் உள்ள போய் உன்னை கிழிக்குற கிழில உன்னைப் பெத்தவங்க உன்னை பெத்து எவ்ளோ பாவம் பண்ணிட்டோம்னு ஃபீல் பண்ண வைக்கலை என் பேரு கீதா இல்லை” என்று கூறிவிட்டு  அவள் விரைவாக உள்ளே செல்ல எத்தனிக்க,

“ஒரு நிமிஷம் இதை வாங்கிட்டு போய்டு அவதார் குட்டி” என்று கூறிய அஜய், அவள் சுதாரிக்கும் முன் அஸ்வத்திடம் இருந்து பெற்ற அந்த சின்ன குடுவையை அவள் நாசித் துவாரத்தின் அருகில் சென்று திறந்திருக்க,

அடுத்த நொடி வீடே அதிரும் அளவிற்கு , “ஹாஹா ஹாஹாஹா” என்று பேய் சிரிப்பு சிரிக்கத் தொடங்கினாள் கீதா.

அவளின் சிரிப்பு சப்தத்தைக் கேட்டு உள்ளிருந்து அனைவரும் பதறிப் போய் வெளியே வந்து பார்க்க, அங்கு கீதா அஜயைக் கண்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க, அஜயும் புன்னகையுடன் அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இருவரும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருப்பது போல் ஓர் காட்சி தான் தெரிந்தது.

ஆனால் அவர்கள் அருகில் சென்று பார்த்தால் தான், கீதா அவனை சிரித்துக் கொண்டே கழுவி ஊற்றிக் கொண்டிருப்பதும், அஜய் புன்னகையோட அவளுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருப்பதும் புரியும்.

அவர்களின் மகிழ்ச்சியை கண்கூடாக கண்டுவிட்ட சந்தனபாண்டி இப்போது எந்த உறுத்தலும் இல்லாமல், “புள்ளைங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப

பிடிச்சிருச்சு போல.. எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க பாருங்க..பார்க்கவே மனசுக்கு நிறைவா இருக்கு.. கூடிய சீக்கிரமே கல்யாணத்தை வச்சுப்புடணும்.. இந்த வாரம் வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு அன்னைக்கு பூ வைச்சு உறுதி பண்ணிக்கலாம்..நீங்க என்ன சொல்றிங்க” என்று துரிதமாக முடிவெடுக்க,

மதுரமும் இரட்டிப்பு சந்தோஷத்துடன் தன் மகன்களின் சம்மதத்தை கேட்க, ராமனும் பரமசிவனும் அங்கு பைத்தியம் போல் விடாமல் சிரித்துக் கொண்டிருந்த கீதாவை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டே வேறு வழியில்லாமல் சம்மதமாக தலையசைத்தனர்.

அதற்கு மேல் பேச வேண்டியதையெல்லாம் போனில் கலந்துரையாடிக் கொள்ளலாம் என்று மதுரம் கூறிவிட்டு அங்கிருந்து தன் குடும்பத்தை கூட்டிக் கொண்டு கிளம்ப ஆயத்தமாக,

அஸ்வத் அஜய்க்கு  தங்கள் திட்டம் வெற்றியடைந்து நாள் குறித்து விட்டார்கள்  என்பதை தன் கட்டை விரலை தூக்கிக்காட்டி சைகை செய்ய,

அதை உணர்ந்து  தன் கையில் வைத்திருந்த குடுவையில் இருந்த நைட்ரஸ் ஆக்சைடைக்(சிரிப்பு வாயு) கண்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

அங்கே அவனை சிரிப்புடன் வறுத்தெடுத்துக் கொண்டிருந்த அவனவளைக் கண்டு விஷமப் புன்னகையுடன் நெருங்கி, ” இனி நீ எங்கேயும் தப்பிக்க முடியாது.. தி ரியல் கேம் பிகின்ஸ் நவ் பேப்ஸ்” என்று கண்ணடித்துக் கூறியவன் அவள் அதிர்ந்து நிற்பதை பொருட்படுத்தாமல் அங்கிருந்து விசிலடித்துக் கொண்டே கிளம்பியிருந்தான்.

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!