Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 20

அன்று ஒரு திருமண வரவேற்பு ஆறு மணிக்குத் தொடங்கும் என்று கூறியிருந்தார்கள் இவள் பார்லரில் காத்திருக்கப் கல்யாண பெண்ணோ ஆறுமணிக்குத்தான் அழைத்தாள்.

 

“சடங்கு அது இதுன்னு லேட் பண்ணிட்டாங்க நான் பார்லர் வந்து மேக்கப் போட்டுத் திரும்பி மண்டபம் வர நேரம் ஆயிடும் ப்ளீஸ் நீங்க இங்க வரமுடியுமா”  என்றாள் மணப்பெண்.



Advertisement

 

விழிகளை மூடித் தன்னை சமன் படுத்தினாள் சக்திப்பிரியா. சில நேரம் இதுபோல் நடப்பதுண்டு என்றாலும் அவ்வளவு தூரம் பயணம் எரிச்சலாக இருந்தது, முன்பே அனைத்தையும் பேசி வைத்து அதற்கு ஏற்றப் போல அனைத்தையும் தயார் செய்து வைத்திருக்க இப்பொழுது போய் மாற்றச் சொல்கிறார்களே என்று கடுப்பு.

 

Advertisement

“ப்ளீஸ்ங்க எனக்குப் புரியுது தப்புதான் வேற வழி இல்லாமதான் கேக்குறேன்”  என்றாள் மணப்பெண்.

Advertisement

 

“சரிங்க ஆனா, நாங்க உங்க இடத்துக்கு வந்து செய்ரோம் சோ எக்ஸ்பென்ஸ் இன்னும் அதிகமாகும் நீங்க பே பண்ண ஒத்துக்கிட்டா வரோம்”  என்றாள்.

 

Advertisement

“கண்டிப்பா கொடுக்குறேன் ப்ளீஸ் வாங்க”  என்றாள் அவள்.

 

சக்திப்பிரியா உடன் ஒரு பெண்ணினை அழைத்துச்சென்றாள், மணப்பெண்ணோ அவ்வளவு சோர்ந்து தெரிந்தாள்  “நான் முன்னாடியே சொன்னேனே ஒருமணி நேரமாவுது ரெஸ்ட் எடுங்கன்னு”  என்றவள் வேலையை ஆரம்பித்திருந்தாள்.

 

அவளிடம் விஷயம் சொன்னதே தாமதமாக அதிலும் அவர்கள் வராமல் இவளை அங்கே வர வைத்திருந்தனர், இதில் பத்தே நிமிடத்தில் சீக்கிரம் செஞ்சு அனுப்புங்க தொழிற் சங்கத் தலைவர் வந்திட்டு இருக்கார் என்றார்கள்.

 

இவளுக்கு வந்த கடுப்புக்கு அப்படியே வீட்டிற்குக் கிளம்பிவிட்டால் என்ன என்று தோன்றிவிட்டது. அவசரமாகப் புடவை கட்டி மிக எளிமையாக மேக்கப் செய்து முதலில் அனுப்பிவிட்டாள் தொழிற்சங்கத் தலைவர் வந்துவிட்டாரே.

 

அவர் இறங்கிய உடனே ஆட்கள் பரிசுகளோடு மேடையேறத் தொடங்கப் பெண்ணின் தாயே பேசிச் சமாதானம் செய்து அரைமணி நேரம் கடன் வாங்கி மகளைச் சக்திப்பிரியாவிடம் ஒப்படைத்தார்.

 

எப்படியோ அந்த மணப்பெண் கேட்ட போல அவளுக்கான அனைத்தையும் செய்துமுடித்தவள் டென்ஷன் குறைந்து இருக்கையில் அமர்ந்தாள் தளர்வாக, அங்கே அவளுடைய அலைபேசி வெகுநேரமாக அடித்து அடித்து ஓய்ந்திருந்தது.

 

இன்றைய வரவேற்புக்கு சிவபாலனுக்கும் அழைப்பு உண்டு மனைவியையும் உடன் அழைத்துச்செல்ல விரும்பியிருந்தான். மணப்பெண் அலங்காரம் அவளுக்குத் தான் வந்திருக்கிறது என்பது தெரிந்ததும் அவளிடம்  “உனக்கு வேலை எப்போ முடியும்”  என்று கேட்டிருந்தான் காலையில்.

 

“எப்படியும் ஆறரைக்குள்ள முடிஞ்சிடும்”  என்றாள் அவள்.

 

“சரி அப்போ ஒரு எட்டரை போல ரெடியா இரு புடவை கட்டிக்கோ”  என்றான்.

 

“எங்க போறோம்”  என்றாள் அவனை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டே.

 

அவளை இழுத்து இதழ் பூட்டியவன்  “ஹ்ம்ம் ஒரு இடத்துக்குப் போறோம் சிவன் அவன் சக்தியோட சேர்ந்து முதல் தடவையா ஒரு இடத்துக்குப் போறான்”  என்றவன்.

 

“இப்போ நேரம் இருக்கா”  என்க.

 

“உங்களுக்குன்னா நாளைல இருந்து கடன்கூட வாங்கிப்பேன்”  என்றாள் அவனை இறுக்கிக்கொண்டு.

 

“கோவிலுக்குப் போலாமா”  என்றான் மூக்குத்தியில் இதழ் ஒற்றி.

 

“ஹ்ம்ம்”  என்றாள். காலைக் கோவிலுக்குச் சென்றார்கள் பூ வாங்கி கொடுத்தவனைக் கண்ணெடுக்காமல் அவள் பார்த்திருக்க.

 

“சக்தி வெளில இருக்கோம்”  என்றான் சுற்றிலும் பார்வையைச் சுழற்றி தலை கோதிக்கொண்டே.

 

“அப்போ வீட்டுக்குப் போலாமா”  என்றாள் அவள்.

 

இதழ் மடித்துச் சிரித்தவன்  “உள்ள போ”  என்றான் அவளும் சிரித்துக்கொண்டே அவனுடன் உள்ளே நடந்தாள்.

 

காலையிலே புடவை அதற்குத் தோதாக நகை என்று எடுத்து வைத்திருந்தாள், பார்லரிலிருந்து வீடு வந்து குளித்துத் தயாரானால் அவன் வந்ததும் செல்லலாம் என்று அவள் நினைத்திருக்க அனைத்தும் தலை கீழானது.

 

மீண்டும் அலைபேசி அடிக்க வேகமாக எடுத்தாள்  “எங்க இருக்க சக்தி”  என்றவன் குரலில் பதட்டத்தின் சாயல்.

 

“அத்தான் அது…”  என்றவள் விவரத்தைக் கூற சில நொடிகள் யோசித்தவன்   “சரி அங்கேயே இரு நான் வரேன்” என்றான்.

 

“இல்லத்தான் நீங்க வந்து அப்புறம் நாம கிளம்பிப் போக நேரம் ஆயிடும் தானே”  என்றாள்.

 

“நான் வரேன் வெய்ட் பண்ணு”  என்று வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான், தன்னை பார்த்துக்கொண்டாள் சந்தனநிறத்தில் சிகப்பு ஜரிகை வேலைப்பாடு கொண்ட அழகான சல்வார் தான் அணிந்திருந்தாள். முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு கொஞ்சமாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டாள். மணப்பெண் அறையில்தான் இருந்தாள்.

 

“வெளில வா”  என்றான் அலைபேசியில் அழைத்து, அவளும் வர அங்கே மேடை அருகே நின்றிருந்தான். வந்தவளைப் பார்த்தவன் விழிகள் மிளிர்ந்தது.

 

விரல்களைக் கோர்த்துக்கொண்டான் வாழ்வில் முதல் முறையாக அவனுக்கே அவனுக்கான உறவோடு மேடையேறினான் அவனைப் பலரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

 

யாருடனும் ஒட்டாதவன் இத்தனை நெருக்கமாக அவளுடன் மேலேறி பரிசைக் கொடுத்துப் புகைப்படத்திற்கும் நின்றான், முத்து முன்னில் நின்று புகைப்படத்தை எடுத்துத் தள்ளினான்.

 

தன் தோள்மேல் கைபோட்டு தன்னை அத்தனை நெருக்கமாக நிறுத்தி நின்றிருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள் சக்திப்பிரியா. மெல்லிய சிரிப்பு இழையோடிய அவன் முகத்தைக் கடந்து வேறு எதுவும் அவள் சிந்தையில் பதியவில்லை.

 

அவனைத் தவிர வேறு எதையும் அவள் பார்க்கவும் இல்லை. மெல்லத் திரும்பி அவளைப் பார்த்தவன் இதழ்கள் இன்னும் அழகாக விரிந்தது  “போலாமா”  என்றான் அவளிடம்.

 

“ஹ்ம்ம்”  என்றவள் அவனுடன் நடக்க.

 

“உங்க சம்சாரமா பாலா தம்பி இங்க ஒரே பதட்டம் அதைச் செய் இதைச் செய்ன்னு ரொம்ப நேரம் ஆயிப்போச்சு மண்டபம் வரவே. அதுல இதெல்லாம் சரியா கவனிக்கல நாங்க ரொம்ப லேட் பண்ணிட்டோம் ஆனாலும் ரொம்ப அழகா என் பொண்ணு ஆசைப்பட்ட மாதிரியே செஞ்சு கொடுத்துட்டாங்க ரொம்ப தேங்க்ஸ் மா”  என்றார் பெண்ணின் தாய்.

 

“இருக்கட்டுங்க”  என்றாள்.

 

பெண்ணின் தந்தையும்  “பாலா தம்பி சம்சாரமா ஒரு வார்த்தை சொல்லலையேமா எங்களுக்கும் தெரியல”  என்றார்.

 

“இது அவங்களோட தனிப்பட்ட உழைப்பு இங்க சிவபாலன் மனைவியா இல்ல சக்திப்பிரியாவா தான் அவங்க தெரியணும்”  என்றான் மனைவியைப் பெருமையாய் பார்த்து, முத்துவும் வர உணவு உண்டு புறப்பட்டனர்.

 

இரண்டு நாட்களாகவே வீட்டில் வேலைகள் நடந்துகொண்டிருந்தது. சுந்தரேசனின் திதி என்று சிவபாலன் சொல்லியிருக்க சக்திப்பிரியாவும் தன்னால் முடிந்ததைச் செய்துகொண்டிருந்தாள்.

 

ஏதேனும் பிரச்சனையைக் கிளப்புவார்கள் என்று சிவபாலன் எதிர்பார்த்தான் அது எப்படி என்ன ரூபத்தில் என்பதுதான் அவன் யோசனையாக இருந்தது. மனைவியை நிச்சயம் காயப்படுத்தப் பார்ப்பார்கள் என்று தோன்றியது அவளிடம் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் ஒரு அவஸ்தையில் இருந்தான்.

 

சுந்தரேசனை பற்றி அறிந்துகொள்ளத் தேடிச் சென்று அங்கே கிட்டிய தகவல்கள் ஒன்றும் உவப்பானதாக இல்லை, அதை இங்கே பகிரவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை அதனோடே வேலைகள் நடந்துகொண்டிருந்தது.

 

இந்த முறை ஷர்மி குடும்பத்தினரோடு சக்திப்பிரியா வீட்டினரும் வந்திருந்தனர், காலை அறையில் புடவை கட்டிக்கொண்டிருந்தவள் அருகில் வந்து அவளைத் தன் புறம் திருப்பி அணைப்பில் வைத்தவன்  “இன்னைக்கு பூஜைல என்னவேனா நடக்கலாம் உனக்குப் பிடிக்காத நீ கவலைப்படுற மாதிரி விஷயங்கள் கூட நடக்கலாம்”  என்றவன்.

 

அவள் கன்னம் தாங்கி அவள் விழிகளைப் பார்த்து  “உன்னைத் தாண்டி எனக்கு எதுவும் இல்ல அதை நீ மனசுல பதிய வை”  என்று அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

 

“அத்தான்…”  என்றாள் ஒருவிதமான தவிப்போடு.

 

“ஒண்ணுமில்ல கீழ போ வரேன்”  என்றான், என்னவோ என்று மனது அடித்துக்கொண்டது சக்திப்பிரியாவுக்கு. அனைத்தும் தயாராக இருந்தது அய்யர் அழைக்கவும் சிவபாலன் வந்து அமர.

 

“கதிர் நீ போய் உக்காரு இனிமே நீ செஞ்சா போதும்”  என்றாள் கவிதா சிவபாலன் முகம் இறுகியது. சக்திப்பிரியா அதிர்வோடு கணவனைத் திரும்பிப் பார்த்தாள் அவன் சட்டென்று எழுந்துகொண்டான்.

 

“என்ன கவிதா இது என்ன பேசுற நீ”  என்றார் ரங்கசாமி.

 

கதிரும்  “என்னக்கா இது அண்ணா தானே இத்தனை வருஷமா செய்றார் இப்போ எதுக்கு என்னைச் செய்யச் சொல்ற”  என்றான்.

 

“ஏன் உன்னால என் புருஷனுக்குச் செய்ய முடியாதா நியாயமா பார்த்தா உனக்குத்தான் அதிக உரிமை அவர் உனக்குத் தான் தாய் மாமா”  என்றாள்.

 

கதிர் ஏதோ பேச வர  “கதிர்”  என்றான் சிவபாலன் அவன் திரும்பிப் பார்க்க  “செய்”  என்று கண்காணிப்பித்தான். அதற்குமேல் ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டான் கதிர்.

 

ஆனால் அவன் முகத்தில் தெளிச்சமில்லை முகம் கடுகடுவென்று இருந்தது. கவிதாவுக்கு அதற்கும் கோபம்  “இவ்ளோ நேரம் நான் சொல்றேன் என்கிட்டே மல்லுக்கு நிக்குற அவன் கண் காமிச்சதும் உக்காந்துட்ட உனக்கு நான் தானே கூடப் பொறந்தவ ஆனா அவன் சொன்னாதான் இங்க எதுவுமே நடக்கும்ல”  என்றாள் அத்தனை வெறியோடு.

 

அவளை ஒரு நொடி பார்த்த கதிர்  “ஆமா ஏன்னா இந்த வீட்டுக்கு எல்லாமே அவர்தான் பார்த்துப் பார்த்துச் செஞ்சிருக்கார் அவர் சொன்னபடிதான் இதுவரைக்கும் நடந்திருக்கேன் இனிமேலும் அப்படிதான்”.

 

“உன் புருஷன் எனக்கும் தாய்மாமாதான் ஆனா தன்னோட கடைசி நிமிஷத்துல கூட எனக்குப் பாலாதான் கொல்லி போடணும்னு சொல்லிட்டு போயிருக்கார். என் பேரைச் சொல்லல அப்பா பேரையும் சொல்லல அப்போ அவருக்கு இதெல்லாம் யார் செஞ்சா சந்தோஷமா இருக்கும்? நல்லா யோசி நீதான் இப்போல்லாம் என்னமோ புதுசா பேசுற நடந்துக்குற எனக்கு ஒன்னும் புரியல இப்போவும் அண்ணா சொன்னதாலதான் இங்க உக்காந்திருக்கேன்”  என்றான்.

 

கவிதா முகம் சுருங்கியது உண்மைதான் கணவனுக்குப் பாலன் செய்வதில் தான் விருப்பம் புரிகிறது என்றாலும் தன்னிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்ற கோபம் அதை இப்படிக் காட்டினாள்.

 

“நான் இந்தச் சடங்கைச் செஞ்சிதான் எனக்கு அவர் மேல இருக்குற அன்பை புரியவைக்கணும்னு இல்லை. இத்தனை வருஷமும் அவர்க்குச் செய்யவேண்டியதை நிறைவா தான் செஞ்சிருக்கேன் அதால ஒன்னும் பிரச்சனை இல்ல நீ செய்”  என்ற சிவபாலன் தள்ளி நின்றான்.

 

கணவன் அருகில் வந்தவள் அவன் கரத்தை அழுத்தமாகப் பற்ற அவளைத் திரும்பிப் பார்த்தவன் மெல்லிய புன்னகையோடு  “ஒன்றுமில்லை”  என்று கண்சிமிட்டி அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டான்.

 

மகனை இப்படி அவமானப்படுத்துவதைப் பார்த்த அன்புக்கரசி கலங்கி நிற்கச் சித்ராவும் சௌமியாவும் அவரின் இருபக்கமும் வந்து நின்றுகொண்டனர். சௌமியாவிற்கு தாயின் செயல் சுத்தமாகப் பிடிக்கவில்லை அன்னையை முறைத்துக்கொண்டு நின்றாள்.

 

அனைத்தும் முடிந்து பந்தியும் முடிய அனைவரும் புறப்பட்டுச் சென்றிருந்தனர் வீட்டினர் மட்டும் இருக்க இன்னும் யாரும் உண்டிருக்கவில்லை.

 

ஷர்மியின் வீட்டினரைச் சாப்பிட வைத்துக் கதிரேசன் அனுப்பிவைத்துவிட்டான், மகேந்திரன் அங்கேயே காத்திருந்தார் இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் பழியைச் சுமந்துகொண்டு செல்ல இன்றே இதற்கு ஒரு முடிவு தெரியட்டும் என்று அவர் நின்றார்.

 

மகளை நினைத்து ஒரு சிறு பயம் உள்ளே இருந்தது. எப்படிப்பா திடீர்ன்னு ஒத்துக்கிட்டார் கல்யாணத்துக்கு என்று கேட்டுக்கொண்டே இருந்தாளே இப்பொழுது பேசும் விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வாளா என்ற பதட்டம் அவருள்.

 

“நீ செஞ்சது கொஞ்சம் கூடச் சரியில்ல கவிதா நாலு பேர் இருக்குற சபைல இப்படி அவனை நீ அசிங்கப் படுத்தியிருக்கக் கூடாது. சொல்றவ இதை நேத்தே சொல்லியிருக்கணும் அவன் உக்காராம இருந்திருப்பான்”  என்றார் ரங்கசாமி.

 

“என்னப்பா பெத்த பொண்ணை விட அவன் மேல பாசம் பொங்குது உங்களுக்கு”  என்றாள் கவிதா.

 

அவளை அதிர்வோடு பார்த்த ரங்கசாமி பின் ஒரு விரக்தி சிரிப்போடு  “அதை நான் செஞ்சிருக்கணும் அங்கதான் தவறிட்டேன்”  என்றார் தளர்வாக.

 

“என்னதான்க்கா உன் பிரச்சனை” என்றான் கதிர்.

 

“என்ன பிரச்சனை தோ நிக்குறாரே இந்த மனுஷன்தான் என் பிரச்சனை”  என்றாள் மகேந்திரனை காட்டி, பவுனுத்தாயி, சிவபாலன், மகேந்திரன் தவிர அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.

 

அதிலும் சக்திப்பிரியா  “எங்க அப்பா என்ன செஞ்சார் அவர் மேல என்ன கோவம் உங்களுக்கு”  என்றாள் கொஞ்சம் காட்டமாகவே. சிவபாலன் அவளைத் தடுக்கவில்லை இதோ அனைத்தும் வெளிவரப் போகிறது வரட்டும் என்று அமைதியாக நின்றான், ஆனால் அவன் விழிகள் மனைவியைக் கடந்து எங்கும் செல்லவில்லை.

 

“என்ன கோவமா? என் புருஷன் சாவுக்கே உன் அப்பா தான் காரணம் அன்னைக்கு ஒரு இன்ஜினியர் என் புருஷனை அடிச்சு அவமானப்படுத்தினதா சொன்னாங்கள்ல அது இந்த ஆளுதான்”  என்றாள்.

 

“மரியாதை இல்லாம பேசினா அவ்ளோதான் பாத்துக்கோங்க”  என்று சீறினாள் சக்திப்பிரியா.

 

“பிரியாமா அமைதியா இரு”  என்று மகளைத் தன் பக்கம் இழுத்தார் மகேந்திரன். சக்தி கணவனைத் திரும்பிப் பார்த்தாள் அவன் பெரும் அமைதியுடன் அவளை மட்டுமே பார்த்து நின்றிருந்தான்.

 

“எங்க இல்லன்னு சொல்லச்சொல்லு ஏன் இது உன் புருஷனுக்கும் தெரியும் உன்னை எப்படிக் கல்யாணம் செஞ்சுக்கிட்டான் அதுக்கு காரணமே உங்க அப்பாவைப் பழிவாங்கத்தான், நான்தான் அவன்கிட்ட கேட்டேன் வாக்கு குடுக்க சொன்னேன். உன்னைக் கல்யாணம் செஞ்சு வயித்துல ஒரு பிள்ளையைக் குடுத்து உன்னை உன் அம்மா வீட்டுக்குத் துரத்தி விடனும் அப்போதான் கைக்குழந்தையோட புருஷன் இல்லாம நான் அனுபவிச்ச வலி உன் அப்பனுக்கு தெரியும்னு செய்யச் சொன்னேன்”.

 

“செய்றேன்னு என்கிட்டே வாக்கு குடுத்துட்டு இப்போ உன்னைத் தலைல தூக்கி வெச்சுகிட்டு சுத்துறான், கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சே ஏன் இன்னும் நீ கர்ப்பம் ஆகல உன் புருஷன் தான் தள்ளி வெச்சிருப்பான். எங்க உன் வயித்துல பிள்ளை தங்கிட்டா உன்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டி வந்திடுமோன்னு”  என்றாள்.

 

கவிதா பேசத் தொடங்கியதிலிருந்தே சக்தியின் பார்வை சிவபாலனிடம் மட்டுமே ‘ இப்போ நமக்குப் பாப்பா வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்’  என்று அவன் கூறியிருக்க.

 

“அதெல்லாம் முடியாது நிறைய வேலை இருக்கு சட்டுபுட்டுனு பிள்ளை வேணும்”  என்றவளை வாரிச் சுருட்டியவன்  “முடியாது எனக்கே எனக்குன்னு மட்டும் நீ கொஞ்ச நாள் வேணும் பிள்ளை வந்துட்டா என்னை விட்டுடுவ அதனால கொஞ்ச நாள்”  என்று தாஜா செய்திருந்தான் அவள் விழிகள் கலங்கத் தொடங்க அவன் உடல் இறுகியது.

 

“பேசி முடிச்சுட்டியாம்மா”  என்றார் மகேந்திரன்.

 

அனைவருமே அதிர்ச்சியில் நின்றிருந்தனர் அதிலும் பூரணி மகளை அத்தனை தவிப்போடு பார்த்தார், மகளுக்கு மருமகன் மீது இருக்கும் நேசம் அறிந்தவர் ஆயிற்றே எப்படித் தங்குவாள் இதை என்று எண்ணியவர் விழிகள் மருமகன் மீது பதிந்தது  ‘என் மகளை ஏமாற்றினாயா?’  என்ற கேள்வியோடு அதை அவன் உணர்தலும் அவன் விழிகள் சக்தியைக் கடந்து எங்கும் செல்லவில்லை.

 

“இப்போ நான் பேசலாமா”  என்ற மகேந்திரன்  “உங்க கணவரோட நண்பரின் மனைவிக்கு உதவின அந்த இன்ஜினியர் நான் இல்லை”  என்றார்.

 

பவுனுத்தயும் கவிதாவும் அவரைப் புரியாமல் பார்த்தனர் பிறகு கவிதாவே  “நாங்க நேர்ல பாக்கலையே அப்போ என்னவேனா சொல்லிக்க வேண்டியது தான்”  என்றாள்.

 

“நீங்க நேர்ல பாக்காத ஒரு விஷயத்தை யாருன்னே தெரியாத ஒருத்தர் சொன்னப்போ மட்டும் எப்படிம்மா நம்புனீங்க”  என்றார் அவர், அவள் அமைதியாக நின்றாள்.

 

“உங்க கணவரோட நண்பர் கிட்டப் பேசினாரே ஒருத்தர் அவர்தான் அங்க இருந்த இன்ஜினியர். அந்தப் பொண்ணுக்கு உதவி செஞ்சதும் அவரும் அவரோட மனைவியும் தான். நான் அந்த இன்ஜினியருக்கு மேல இருக்குற பதவில இருந்தேன் அங்க நடக்குற வேலையைக் கண்காணிக்க அன்னைக்குத்தான் அங்க போனேன்”.

 

“போன எடத்துல இப்படி விபத்து… என் கண்முன்னாடிதான் நடந்துச்சு அங்க பெருசா ஹாஸ்பிடல் எதுவம் எனக்குத் தெரியாது அதான் அந்த எஞ்சினியரை கூப்பிட்டேன். உங்க கணவர் அடி பட்டுக் காப்பாத்த முடியாதுன்னு தெரிஞ்சதும் தன் மேல பழி விழாம இருக்க சம்பந்தமே இல்லாத என்னை அதுல இழுத்து விட்டுட்டு போய்ட்டார் அவர்”.

 

“அன்னைக்கே இன்னும் கொஞ்சம் நல்லா விசாரிச்சிருந்தா உங்களுக்குப் பல உண்மைகளும் தெரிஞ்சிருக்கும் அப்போதைக்கு இங்க யாரும் அவ்ளோ தூரம் போய் விசாரிக்கக்கூடிய நிலையில் இல்ல அதான் இப்படி”  என்றவர்.

 

“நீங்கச் சொன்னீங்கன்னு என் மகளை மாப்பிள்ளை கட்டல என் பொண்ணை விரும்பித்தான் பெண் கேட்டார். என்கிட்டே இந்த விஷயத்தைப் பத்தியும் பேசினார், முதல்ல எனக்குப் புரியவேயில்லை ஏன்னா நான் அதுல சம்பந்தப்படவே இல்ல அப்புறம்தான் ஞாபகமே வந்துச்சு”.

 

“அந்த இன்ஜினியரை நேராவே போய்ப் பார்த்து விசாரிச்சுட்டு வந்தோம் எல்லா உண்மையும் அவரே சொல்லியிருக்கார், நம்பிக்கை இல்லன்னா அவரே நேர்ல வந்துகூடச் சொல்லுவார். அப்போதைக்குத் தப்பிக்க ஏதோ வாயில வந்ததை சொல்லியிருக்கார் அது இத்தனை வருஷம் கழிச்சு இப்படியொரு பழிவாங்கல் நிலைல வரும்னு சத்தியமா நினைக்கலன்னு வருத்தப்பட்டார்”.

 

“நீங்க நம்புனாலும் இல்லனாலும் இதான் உண்மை அப்புறம் இப்போ அந்த ஆள் நான் இல்லன்னு தெரிஞ்ச அப்புறம் அடுத்தது அந்த இன்ஜினியரை பழி வாங்க போறீங்களா”  என்றவர்.

 

“அவர் இன்னும் சில உண்மைகளையும் சொன்னார் அதை நீங்கத் தாங்க மாட்டீங்க அதான் மாப்ள உங்ககிட்ட சொல்லல. இன்னைக்கு இந்த உண்மை தெரிஞ்சமாதிரி அதையும் நீங்கத் தானாவே தெரிஞ்சுக்குற நாள் வருமா இருக்கும்”  என்று சொல்லியவர்.

 

“பூரணி வாப்போலாம்”  என்றுவிட்டு மகளைப் பார்க்க வேகமாக வீட்டிலிருந்து வெளியேறினாள் சக்திப்பிரியா. செல்லும் அவளையே சிவந்த விழிகளோடு பார்த்து நின்றான் சிவபாலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!