Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே

பூவே 4



Advertisement

          “பாட்டி” என்ற குரலுடன் அபிராமி உள்ளே வந்தாள்..

Advertisement

Advertisement

“என்னடி, பள்ளிகொடம் போகாம! இங்க வந்திருக்கவ” எனக் கேட்டபடி  அடுப்படியிலிருந்து வெளியே வந்தார்..

“அது நீங்களும், அம்மாவும்  வெளியே போறீங்களாமே!  எப்ப போறதுன்னு கேட்டு வர சொன்னாங்க” என்றாள்

Advertisement

“தோ! நா சீலை துணியை மாத்திட்டு வந்தா கிளம்ப வேண்டி தான்..” அறைக்குள் போக போனவர், திரும்பி “அந்த திண்டு மேல பலகாரம் இருக்கு பாரு,  நீ ரெண்டு எடுத்துட்டு மீதியை தட்டுப்போட்டு மூடி வைடி” என்று அறைக்குள் நுழைந்துக்கொண்டார்..

அடுப்பு திண்டின்  அருகே! வந்தவளோ ,மூடி போட்ட இரண்டு பாத்திரத்தையும் திறந்து பார்த்தவள். “ஐ இட்லி, ஜாங்கிரினு” சொல்லி , ஒரே ஒரு ஜாங்ககிரி மட்டும் எடுத்தவள்.. இட்லியை முழுவதுமாக எடுத்து கீழே! சம்மணமிட்டு அமர்ந்தவள் சாப்பிட தொடங்கினாள்..

இங்கு வேல்விழி தன் ஆடைகளை மாடியில் காயபோட  படியேறியவள் பார்வையில் , அபிராமி இட்லி சாப்பிடுவதை பார்த்து கண்ணெல்லாம் கலங்கியது..

‘கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாத  நிலை’ அவளுக்கு , ஏனோ! நிறைய ஏமாற்றங்களை கண்டவளுக்கு சாப்பாட்டு விஷத்திலும் ஏமாற்றம் நிகழ்ந்ததை,   தான்  தாங்கமுடியவில்லை..

மூக்கு விடைக்க கண்ணெல்லாம் கலங்கியது.. அவள் சாப்பிடுவதை கண்டு சிறு ஏக்கமும் வந்தது. ‘பின் தன் நிலையை தானே! நொந்தவளாக மாடியேறினாள்’.

ஆடை மாற்றி வந்த காளியம்மா கண்டதோ! கண்கள் கலங்கி மேலே சென்ற வேல்விழியும், இங்கு வழித்து  தின்று சப்புக்கொட்டிய அபிராமியும் தான்..

“ஏட்டி , நா உன்னை பலகாரம் தானே! சாப்பிட சொன்னேன்” என்றார்

” போ! பாட்டி இட்லியும் பலகாரம் தானே! எனக்கு இதுவே போதும்னு” சொல்லி கொல்லை பக்கம் சென்றாள் கைகள் கழுவ,

வேலுவை என்னதான் புடிக்காது என்றாலும். ஒருநாளும் அவள் வயிற்றில் அடிக்க நெனைச்சதில்லை , அவளின் வாடி போன முகமே கண் முன்  நிற்க. பெருமூச்சு விட்டு மேல் நோக்கி குரல் கொடுத்தார்..

“எம்புட்டு நேரம்டி , மேலுக்கே  நிற்ப பள்ளிக்கொடத்துக்கு   நேரமாகலையா” என்றார்

சத்தம் கேட்டு கீழே வந்தாள்.

அவளையே பார்த்து நின்றவர்.. “எதுவும் கிடைக்கும்போதே! எடுத்துக்கணும்.. காலம் கடத்துனா இப்படித்தான் கையை விட்டு போகும்னு” சொன்னவர் “சோறு சாப்புட்டு கெளம்பு வீட்டை பூட்டி சாவியை நிலப்படி  மேல வச்சிட்டுப்போ” என்றதும்.

‘சரியென தலையாட்டினாள்’..

அபிராமி கை கழுவி ‌வரவும். இருவரும் கிளம்பினர்..

தன் அறைக்குள் சென்றவள் கண்ணாடியில் தன் முகத்தை காண ‘கண்கள் சிவந்து , அழுததில் லேசாக சளியும் பிடித்திருந்தது.. இந்த முகத்தோட போனா, நல்லாவே இருக்காதுன்னு தனக்கு தானே சொல்லிக்கொண்டு பின்கட்டுக்கு சென்றவள்.

அங்கேயிருந்த குளியலறையில் முகத்தை சோப்  போட்டு  கழுவியவள், முகத்தில் நீர் வழிய கண்களை மூடியபடி நடந்து வர, எதிரே வந்த ஆடவன் மீது மோதியவள்  “‘அச்சோ” என்ற சத்தத்துடன் கண்களை திறந்து பார்க்க , அவனோ! அவளை  சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான்..

“என்ன வேலு , தனியா கண்ணாமூச்சு ஆடுற” என்றான் சிரிப்புடன்.

அவன் சிரிப்பை கண்டு இவள் உதடும்  சின்னதாக பிரிந்தது..

“என்ன அமைதியா இருக்க”.

என்ன சொல்லனும்னு  அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

” சரியாபோச்சு , என்ன தனியா இருக்க வீட்டுல மத்தவங்கள காணோம்னு கேட்டேன்” என்றான்

“தெரியல மாமா, நா  வீட்டுக்கு வரும்போதே! பெரிய பாட்டி , தாத்தா இல்லை.. சின்னபாட்டி இப்பதான் அபி கூட கெளம்பி  போனாங்க” என்றாள்..

“ஓ” என்று வீட்டை சுற்றி ஒரு முறை பார்வையை சுழல விட்டவன்..

அவளை பார்த்து “உனக்கு என்னாச்சு , முகம் வீங்குன மாறி இருக்கு” என்று வெற்றி  கேட்க,

“அது” என்று தயங்கி நிற்க..

“என்ன வேலு ஆச்சு, உடம்பு எதுவும் சரியில்லையா” என்று பார்வையாலே! அவளை ஆராய்ந்தான்..

“உடம்புக்கு எதுவுமில்லை மாமா” என்றவள். காலையில் எழுந்ததிலிருந்து , இவன் வருவது வரை நடந்ததை மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்..

அவள் சொன்னதை கேட்டவனுக்கு கோவம் வந்தாலும்.. ‘தனக்குத்தானே அமைதி’  எனக் சொல்லிக்கொண்டு , அவளை நிமிர்ந்து பார்த்தான்..

“வேலு, இட்லி கிடைக்கலன்னு யாருன்னா, அழுவாங்களா”,

” அழ மாட்டாங்க தான் மாமா,  தாத்தா அதை கொடுத்ததும் ரொம்ப ஆசையா‌ சாப்பிடபோறேன்னு நெனைச்சிட்டேனா! அந்த ஏமாற்றத்தை என்னால தாங்க முடியல” என்று இப்போது சொல்லும் போது கூட அவள் கண்கள் லேசாக கலங்க தான் செய்தது..

“ச்சோ! ஒரு பொருள் உன் கையை விட்டு போகுதுன்னா , அதைவிட  சிறப்பான ஒன்னு உன் கைக்கு கிடைக்க போகுதுன்னு  அர்த்தம் வேலு” என்றான்.

“என்ன சிறப்பான ஒன்னு கிடைக்க போகுது எனக்கு.. இப்ப வழக்கம்போல சின்னபாட்டி  செய்து வச்ச சோறு தான். இன்னைக்கும் எனக்கு கிடைக்க போகுது போ! மாமா எனக்கு பள்ளிக்கொடம் நேரமாச்சு” என்று கோவமாக சொல்வதாக தான் அவள் எண்ணினாள்,

‘அவளின் கோவம் , எதிரே இருந்தவனுக்கு சிரிப்பை தான் வரவழைத்தது’ வாய் விட்டு சிரித்தால்.. இருக்குற கோவத்துக்கு தன்னை கடிச்சி கொதறவும் இவள் தயங்க மாட்டாள்’ என்று  மனதோடு  நினைத்தவன்.

“வேலு”

“ப்ம்ச் , என்ன மாமா” என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

‘அங்க பாருன்னு’ பார்வையாலே சொல்ல ,

வேண்டா வெறுப்பாக திரும்பி பார்த்தவள்.. ‘நியூஸ் பேப்பரில் பொட்டலம் கட்டியிருந்ததை பார்த்தவள்..

“என்ன மாமா இது” என்று அந்த பொட்டலத்தை கையில் எடுத்தபடி கேட்க,

“பிரிச்சு பாரு ,  உனக்கு சிறப்பான ஒன்னா கூட இருக்கலாம்னு” அவன் பூடகமாக சொல்லவும்..

மாமனை திரும்பி பார்த்து.. கையிலிருந்த பொட்டலத்தை பிரித்தவள் கண்கள் அகலமாக விரிந்ததை , பார்த்தவன் எப்போதும் போல் இப்பவும் அந்த விழியில் விழுந்து எழுந்தான்…

“மாமாஆஆ, பூரி” என்றவளுக்கு , சாப்பிடாம கையை விட்டு போன இட்லி பழைய கதையானது அவளுக்கு..

“சாப்பிட்டு கிளம்பு மணியாகுது” என்றான்..

சம்மங்கால் போட்டு அமர்ந்தவள் ‘வேகவேகமாக பொட்டலத்தை பிரித்து  ஒரு பூரியை எடுத்து ,உருளை  மசாலாவில் தொய்த்து எதிரே நின்றவனை’, கீழே! குனிய சொல்லி கையிலெடுத்த முழு பூரியும் அவன் வாயில் தினித்திருந்தாள்..

அவனும் சிரிப்புடனே! அதை மென்று சாப்பிட தொடங்கினான்  ‘அவன் வாயில் வைத்தது  என்னவோ! ஒரு பூரி தான்.. பொட்டலம் வாங்கிய மொத்த பூரியும் அவன் வாயில் இருப்பது போல், நிறுத்தி  நிதானமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான்’..

வேல்விழியோ, ‘காணாததை  கண்டது   போல்..மிச்சமிருந்த பூரியை சிந்தாமல் , சிதறாமல் சாப்பிட்டவள்.. கடைசியாக மொத்தத்தையும் வழித்து சாப்பிட்டு ஒவ்வொரு விரலாக சப்புக்கொட்டி சப்பி எடுத்தாள்..

அவள் செய்கைகளை இமைக்காமல் பார்த்தவனுக்குள் ‘ மெல்ல ஆசை எழுந்தது அவள் விரலை சப்பி சாப்பிட’  தன் மனம் போகும் போக்கை எண்ணி எழுந்து நின்றான்..

“மாமா பூரி சூப்பரா இருந்திச்சுன்னு” சொல்லியபடி கொல்லைபக்கம் ஓடினாள்..

இவனும் சிரிப்புடன்  திண்ணையில் அமர்ந்தான்..

வேல்விழியோ! பின்கட்டிலிருந்து வந்தவள். ‘கடிகாரத்தில் மணி பார்க்க நேரம் 8.40ஜ தொட  சில நொடிகளே! இருந்தது’..

‘போச்சு போ! இன்னைக்கும்  லேட்டு தான்னு’ புலம்பியபடி பள்ளி பையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தவள்.

வெற்றறியை பார்த்து “மாமா , நீங்க வெளியே போறப்போ! வீட்டை பூட்டிட்டு சாவியை வழக்கமாக வைக்கிற இடத்துல வச்சிடுங்கன்னு” அவள் வார்த்தை முடிந்தது தெருமுனையில்.

“வாலு , நின்னு சொல்லிட்டு போறாளா பாரு, காலு தரையிலே படாது  இவளுக்கு” மனதோடு செல்லமாய் அலுத்துக்கொண்டான்..

***

     அந்த  ஒத்தையடி பாதையில் அன்னையும், மகளும் பேசியபடி நடந்தனர்..

“ஏம்மா!  வூட்டுல சொல்லியே இந்த ஜாதகத்தை பாக்கலாமே! யாருக்கும் தெரியாம,  இப்டி போறது எனக்கு என்னவோ! சரியாபடல, இந்த மனிஷன் வேற என்னை ஒரு தினுசாவே பாத்து வைக்கிறாரு” என்று மூச்சு வாங்கியபடி  அந்த மேட்டில் ஏறிக்கொண்டே சொன்னாள் சரசு

“ஏட்டி, நீ வேற என் வயித்துல புளிய கறைக்க பாக்குற!  வூட்டுல சொல்லி செய்யுறளவுக்கு இப்ப பொறுமை இல்லடி, ஜாதகம் பொருந்தி வந்தா தான்.. மேற்கொண்டு பேசமுடியும்..

இப்பவே உன் அப்பாயி கடைசி ஆசைன்னு சொல்லி, எங்க அந்த சிறுக்கியை கட்டி வச்சிடுமோன்னு.. நாளுக்கு நாள் பயந்து வருதுடி, இதுல கொட்டாய் (மாட்டு தொழுவம்) தீ பிடிச்ச மாறி கனவு வேறடி.. நானே இவ உட்கார்றதுக்குள்ள  காவ்யாவுக்கும், உந்தம்பிக்கும் சம்மந்தம் பேசிடனும்னு தவியா  தவிக்கிறேன்டி” என்றவர் பார்வை மொத்தமும் வழியில் தான் இருந்தது..

“இப்ப மட்டும் அவ என்ன குத்த வச்சி உட்கார்ந்துட்டு மாறி , ரொம்ப தான் பண்ணுறம்மா நீ!” என்று அலுத்துக்கொண்டாள் மகளும்..

இவளுக்கு எங்கேயிருந்து என் கவலை தெரிய போகுது.. என்று மனதோடு புலம்பிக்கொண்டு , ஜோசியரின் வீட்டு திண்ணையில் அமர்ந்தனர்..

“நல்லவேளைடி கூட்டம் இல்லை” என்றவர் சுற்றி முற்றி பார்த்தார் அறிந்தவர், தெரிந்தவர் யாராவது இருக்குறாங்களா என்று பார்வையை சுழல விட்டவர். நெஞ்சில் கை வைத்து நிம்மதி பெருமூச்சு  விட்டார்..

“ஏம்மா, இப்டி பயப்புடுற நீ”!

” இல்லடி , உங்க அப்பாயிக்கு இந்த ஊர்ல தெரியாதவங்களே இருக்காது.. யாராவது நம்மளை பார்த்துட்டு போய் சொல்லிட்டா , என்ன பண்ணுறதுன்ற கவலை தான்டி” என்றார்..

இங்கு ஜோசியரோ! காலை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.. காலையில் ஓடிவந்தவர்   பள்ளம்  இருப்பதை கூட கவனிக்காமல் அதில் விழுந்து எழுந்ததில்  காலில்  காயம் இல்லையென்றாலும்.. நல்லா பிசகியிருந்ததில் வலியும் சேர்ந்துக்கொண்டது…

“எம்புட்டு நேரம் இப்படியே! இருக்கப்போறீங்க, ஜோசியம் பாக்க ஆளுங்கலாம் வந்து காத்திட்டு இருக்காங்க” என்ற மனைவியை , கண்ணில் கனல்  தெறிக்க  பார்த்தவர்..

“இன்னைக்கு ஜோசியம் பாக்க முடியாதுன்னு சொல்லி அனுப்புடி, எல்லாரையும்” என்றதும்..

“எல்லாரையும் அனுப்பிட்டு  சோத்துக்கு பிச்சையெடுக்கவா, நீ! சொல்லுறதே  பொய்  ஜோசியம் அதை பாக்கவே ஒன்னு ,ரெண்டு பேர் தான் வராங்க.. அதையும் கெடுத்து விட பாக்குற! மரியாதையா  வந்து. ரெண்டு வார்த்தை சொல்லி தட்சனை வாங்கி கொடுக்குற, இல்லை முடியாதுன்னு சொன்ன கால்ல கல்லை தூக்கிப்போட்டுடுவேன்னு” என்று மிரட்டினார்.

“ஆத்தி” என நெஞ்சில் கை வைத்தார்.. வேற வழி இல்லை என்று எண்ணியவர் .. மெல்ல தாங்கி தாங்கி நடந்துவந்தவர்… தன் ஆஸ்தான இடத்தில் அமர்ந்தவர் .. ஒவ்வொருவராக வரச்சொல்லி  மனைவியிடம் சொல்ல,

அவரும் முன் , பின் என்று கணக்கு வைத்து ஆட்களை அனுப்பி வைத்தார்…

ஐஞ்சாவது ஆட்களாக தான் அன்னையும், மகளும் அமர்ந்தனர்…

“சாமி, என் பையனுக்கும், பேத்திக்கும் ஜாதகப்பொருத்தம் பாக்கனும்” என்றார் காளியம்மா..

“உங்க பேரும்மா” என்று  ஜோசியர் கேட்க,

“காளியம்மா, இவ என் ரெண்டவது பொண்ணு சரசு” என்றதும்.

சிறு அதிர்வுக்கு உள்ளானார் ஜோசியர் ‘அமைதியா  இருந்த இவங்க பையனே  அந்த பாடு படுத்தினான்.. பாக்கவே காளிவேசம் போட்ட கணக்கா இருக்குற இவங்ககிட்ட மட்டிக்கிட்டு , உன் நிலமை ரொம்ப மோசம்னு’ தனக்குத்தானே சொன்னவர்..

அவர்கள் கொடுத்த இரண்டு ஜாதகத்தையும் பிரித்து பார்த்தவருக்கு சிறு நிம்மதி.. பொய்  சொல்லவேண்டிய  அவசியம் இல்லாததில்..

அன்னையும், மகளும்  படபடப்புடன் ஜோசியரின் முகத்தையே பார்த்தனர்…

அவர்கள் தவிப்பு புரிந்தாலும், ஜாதகம் அவர்களுக்கு எதிராகவல்லவா இருக்கு என்று நினைத்தவர் .. ‘திருச்சிற்றம்பலம்’ என்று முணுமுணுத்தவர் அவர்களை நிமிர்ந்து பார்த்தார்..

“இந்த ரெண்டு ஜாதகத்துக்கு பத்து பொருத்தத்துல ஒரு பொருத்தம்  கூட பொறுந்தி  வரலம்மா” என்றார்

“என்ன சாமி சொல்லுறீங்க”  வெளிவராத குரலில் காளியம்மா கேட்க,

“ஆமாம்மா, பொண்ணு ஜாதகம் பாத்ததுல , இப்ப கலியாண  யோகம் கூடிவருது.. அதுவும் மாப்பிள்ளை உறவு முறையில   தான் முடியும்.. பையனுக்கு ரெண்டு வருஷத்துக்கு கலியாண யோகம் இல்லை, இந்த ஜாதககாருக்கு கல்யாணம் நீங்க யாரும் எதிர்பாக்காத நேரத்தில் தான் நடக்கும்” என்றதும்..

“என்ன சாமி சொல்லுறீங்க” இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்டனர் இருவரும்..

“நா, சொல்லலம்மா  கட்டம் அப்படி தான் சொல்லுது” எனவும்,

“பொண்ணு சொந்தத்துல அமையுமா, அசலா சாமி” என்று காளியம்மா கேட்க,

“பொண்ணு இரத்த உறவுல தான் அமையும் ம்மா” என்றார் அவரும்..

இவர்கள் இருவரும் தட்சனை வைத்து வெளியே வந்தனர்..

“என்னம்மா , அமைதியா வர்ற”.

” ஜோசியர் என்னடி இப்டி சொல்லிட்டாரு, மனசு என்னவோ! படபடன்னு வருதுடி” என்று சுமைதாங்கி கல்லில் சாய்ந்து நின்றார்..

“ம்மா, நீ ஏன்? ஒன்னுமில்லாததுக்கு எல்லாம் , அலப்பறையை கூட்டுற.. காவ்யா மட்டும் தான் எனக்கு பொண்ணா, அடுத்து அபி இருக்காலே ! அவளும் இரத்த உறவு தானே அப்படி பாரும்மா, ஜோசியர் சொல்லுற பத்துல , நாலு தான் நடக்கும்னு நீயே! சொல்லியிருக்க.. அப்டி இருக்கும்போது இப்டி கலங்கி நின்னா, நல்லாவா இருக்குன்னு” அன்னைக்கு ஆறுதலாக சொல்லி அழைத்துச் சென்றாள் சரசு

சரசு சொன்ன மாறி பத்தில் நாலு விஷயம் நடந்தாலும்.

நாலும் இவர்களுக்கு எதிராக இருக்கும் என்பதே விதி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!