Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaadhala Appadina

காதலா??அப்படின்னா?! – 7

காதல் – 7

பெண்ணவளை கண்டதும் உடலும் உள்ளமும் பரபரக்க அவளிடம் சென்று பேச துடித்த மனதை சுற்றுபுறம் கருதி அடக்கியவன் அவளிடம் பேசும் சந்தர்ப்பதிற்காக மனதை அடக்கி காத்திருந்தான்.  அவளின் நடணம் முடிந்து மேடையில் இருந்து மேடையின் பின்புறம் சென்றவள் அதன் பிறகு கண்களில் படவில்லை. 

அவனின் அலைபுருதலை ரசித்துக்கொண்டிருந்த பாலாஜி மேடையில் ஒரு கண்ணும் நண்பனின் சுழலும் விழிகளில் ஒரு கண்ணுமாய் இருந்தவன் முகத்தில் நண்பனை அறிந்த மென்முறுவல்.

வென்முகிலுக்கோ அடுத்து அடுத்து வரும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இருக்கும் பொருட்டு அவளால் வேறு எந்த நிகழ்சிகளையும் மற்ற நண்பகளோடு இருந்து ரசிக்க முடியவில்லை. மேடையின் வலது பக்கம் மறைவில்  மேடை தெரியும் படி நின்றவ அங்கே இருந்தே மற்றவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்தாள். 



Advertisement

அவள் நின்ற இடத்தில் இருந்து பாலாஜி தெரிய அருகில் வீரேஷையும் பார்த்தவள்.. இவர் அன்று அந்த் ரெஸ்டாரண்டில் பார்தவர் தானே அவரும் வீரெஷ் சாரும் நண்பர்களா?’(என்னது சாரா??!! கேட்டா பயபுள்ள நெஞ்ச புடுச்சுடுமே!) என எண்ணமிட்டபடி அவளின் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். 

விழா முடிய இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே இருக்க அடுத்து அதிலும் ஒன்று நிறைவு உறை கல்லூரியின் சார்பில் அதனால் அவளின் தேவை அங்கே தேவை இல்லாததினால் அவள் அங்கே மாணவிகளுக்கு உடை மாற்ற என்று இருந்த அறைக்கு சென்று அவளின் நடண உடை கலைந்து வேறு உடை மாற்றி தோழிகள் இருக்கும் இடத்திற்கு வர 

அதுவரை மேடையில் ஒரு கண்ணும் அவளின் தோழிகள் இருந்த புறம் ஒரு கண்ணுமாய் இருந்தவன் அவள் வெளி வந்ததும் கார்முகில் சூழ்ந்த நிலவு மேகத்தை தவிர்த்து வெளி வந்தது போல் அந்த இடமே பிரகாசமாய் தொன்றியது வீரிற்கு. 

Advertisement

இது வரை நின்று கொண்டே இருந்தது மட்டும் இல்லாமல் ஒரு வித டேன்ஸனினிலேயே இருந்தது அங்கு வந்ததும் தான் எதோ இயல்பாய் சுவாசிப்பது போல் தொன்றியது வென்முகிலுக்கு.. பக்கத்தில் இருந்தவளிடம் தண்ணீரை வாங்கி தொண்டையில் சரித்தவள் கால்களை மடக்கி சம்மனமிட்டு அந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டு அருகில் இருந்தவளின் தோழில் முகத்தை சாய்த்துக்கொண்டாள். 

Advertisement

அருகில் இருந்த மற்ற தோழிகள் இது வரை நடந்த நிகழ்சிகளை பற்றி சிலாகித்துக்கொண்டும் இப்பொழுது  நடக்கும் நன்றியுறையை வழக்கம் போல் கலாய்த்து கொண்டிருந்தனர். 

இவர் பாடம் எடுத்தாலே தூக்கம் வந்துடும் இதுல நன்றி உறை வேற!” என வரும் கொட்டாவியை அடக்கியபடி சௌஜன்யா சலித்துக்கொள்ள

எல்லோரும் இப்படியே தூங்கிட்டா சாப்பாட்டு செலவு மிச்சம்னு ப்ளான் போட்டு இருப்பார் விருமாண்டி(அது தாங்க டின்)”  என ஸன்ஜனா கலாய்க்க

Advertisement

சத்தம் போடாம இப்படியே மெதுவா ஹாஸ்டலுக்கு நடைய கட்டிடுவோமா? எனக்கேல்லாம் சாப்பாட்டை விட தூக்கம் தான் முக்கியம். இப்போவே தூக்கம் கண்ண சொக்குது!” என விதுன அவள் பங்குக்கு கடுப்படிக்க.. 

என்னால எப்படியும் வர முடியாதுவந்திருக்கும் கெஸ்ட்ஸ் எல்லாம் அவங்க வீட்டை பார்த்து கிளாம்பும் வரை ஐ ஹவ் டு பி ஹியர். டின்னர் மானேஜ் பண்ணனும்!” என கண்ணை மூடியபடியே பதில்  வென்முகில் கூற.

என்னது கடைசியில அதையும் உன் தலையில கட்டிடானா இந்த சதிஷ்? அவன் என்ன தான் பண்ணுவானாம்?” என பொறிய

ஹேய் விடுப்பாஅந்த மட்டும் வெளியே அலையுற வேலையெல்லாம் தரலையே! செர்வெர்ஸ் இருப்பாங்க. புஃபே தானே எனக்கு பெரிதாய் வேலை எதுவும் இருக்காது!  நான் ஜஸ்ட் கொவார்டினேட் பண்ணா மட்டும் போதும்.”

ஹே சொல்ல மறந்துடேன், பாலாஜி அந்த ரெஸ்டாரண்ட் ஓனர் அவரும் வீரேஷ் சாரும் பிரண்ட்ஸ் போல ஒன்னா தான் உட்கார்ந்து இருந்தாங்க… ” என கூற 

எங்க என கேட்டபடி விதுனாவும் ஸன்ஜனாவும் எட்டிபார்க்க அவர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு வீரேஷ் இருந்த பக்கம் திரும்ப அப்பொழுது ஏதேட்ச்சியாய் திரும்பிய பாலாஜியின் கண்களில் விதுனா எட்டி பார்ப்பதும் வென்முகில் கைகாண்பிப்பதும் பட 

மச்சான் உன்னை பற்றி தான் டாக்ஸ் போல! ” என பாலாஜி வாரிக்கொண்டே அவனும் அங்கு இருந்தபடியே கை காண்பிக்க 

இதை எதிர்ப்பார்க்காத விதுனாவும் வென்முகிலுக்கும் படபடப்பாகி போனது! என்ன செய்வது என்று புரியாமல் சட்டென்று குனிந்து கொண்டனர். “அச்சச்சோ கரக்டா பார்த்துட்டான்  கடோத்கஜன்!” என விதுனா தலையில கைவைக்க…”போச்சு மானமே போச்சு!!!” என்று புலம்ப

பெயர் வேற மாத்தி சொல்லியிருந்தேன்! இப்படி ஒரு இக்கட்டுல மாட்டிகிட்டேனே!” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தாள் ரூல்ஸ்!! 

ஆமாம்ப்பா, அப்படி தான் போல இருக்கு! மிஸ்டர். வீரேஷ் பாட்ச் தான் போல. ஆனால் செம பெர்ஸ்னாலிட்டிஸ்ல ரெண்டு பேரும்.  நம்ம கூடயும் தான் படிக்குதுங்களே  எல்லாம் வேஸ்ட் பெல்லோஸ்! ” என ஸன்ஜனா புலம்ப

அத சொல்லு மச்சி! என்ன ஒரு கரிஷ்மால்லஎன ஜொல்ல 

ஆரம்பிச்சுட்டீங்களாசரி நான் மெதுவாய் டின்னர் நடக்கும் இடத்துக்கு போறேன். எல்லாரும் கிளம்பும்போது கிளம்பினா கூட்டத்துல சீக்கிரம் போக முடியாது. விது, என் உடைகள் எல்லாம் இந்த பாக்ல இருக்கு நீ ஹாஸ்ட்டல் போகும் பொழுது எடுத்துட்டு போய்டுறியா?”

ம்ம் சரி வென்ஸ்! நீ வரும் பொழுது எப்படி வருவ? நாங்க யாரவது இரண்டு பேர் வெய்ட் பண்றோம்.”

ஒஹ் ஆமாம் இல்ல! யாராவது பசங்க கூட வருவாங்கன்னு நினைக்கிறேன் .. எதுக்கும் நீயும் இருக்குறியா?  உனக்கு தூக்கம் வருதா? ஒரு மணி நேரத்துல முடிஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்.”  

விதுனாவும்,  இருக்கிறேன். ஆனால், காலையில மட்டும் விடிஞ்சும் விடியாமையும் எழுப்பாம இருப்பியா?” என டீல் பேசியவள் வென்முகிலுடன் டைனிங் ஹாலிற்கு கிளம்பினாள். 

இருவரும் வழக்காடியபடி டைனிங் ஹாலில் எல்லாவற்றையும் பார்வையிட்டபடி சுற்றி வர ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது. 

உள்ளே வந்ததும் வீரேஷின் பார்வை வென்முகிலை தொடர, பாலாஜியின் கண்களோ விதுனாவை சுற்றிக்கொண்டிருந்தது.  விதுனா சலசல வென்று எதோ பேசிக்கொண்டிருக்க மென்முகில் அதற்கு சிரித்தும், அவளை மிரட்டியும் என சமாளித்துக்கொண்டிருந்தாள். 

வீரேஷும் பாலாஜியும் ஆசிரியர்களுடன் இணைந்து நின்றபடி பேச ஆரம்பிக்க மற்ற விருந்தினர்கள் சாப்பாடு எடுத்தபடி பேசிக்கொண்டிருந்தனர். வென்முகில் பாலாஜி எதுவும் கேட்டுவிடகூடாதே என்று அந்த பதட்டத்தில் இருக்க 

விதுனாவோ அன்னைக்கே ஓவரா கேள்விகேட்டான், இன்னைக்கு நாம எட்டிபார்த்ததை வேற பார்த்துட்டான் என்ன பண்ணபோறானோ என இவள் ஒரு வித பதட்டத்தில் இருந்தாள். 

மற்றவர்கள் சிரிது நகர்ந்ததும் சிவில் மற்றும் ஆர்கிடேக்ட் டிபார்ட்மெண்ட் HOD-யுடன் பேசியபடியே வர உணவு இடத்தில் இருந்த வென்முகில் மரியாதை நிமித்தம்ஹெல்லோ சார்! ” என கூற

என்னம்மா எல்லா ஆர்கனைசிங்கும் பக்காவா பண்ணிடிங்க போல!  உங்க க்லாஸ் தான் அதிக இன்வால்மெண்ட்னு பேச்சு! வெல்டன்!”

மற்ற டிபார்ட்மெண்ட்ஸும் பண்ணாங்க சார். ஒவ்வொரு டிபார்ட்மெண்டுக்கும் ஒவ்வொரு வேலைன்னு முதல்லயே செக்ரெகேட் செய்ததால கொஞ்சம் இசியாக இருந்தது சார்என எந்த வித போலி பணிவோ மிதம்மிஞ்சிய செயர்கைதனமோ இல்லாமல் அவள் பதில் அளிப்பதை பார்த்த வீரேஷ் மனதில் மெச்சிக்கொண்டான். ஆசிரியர்கள் மற்ற விருந்தினர்களுடன் கலந்து பேச என்று நகர்ந்துவிட

அருகில் இருந்த பாலஜியை பார்த்தாலும் பேசுவதற்கு முதலில் கூறிய பொய் தயக்கத்தை கொடுத்தது. என்ன தான் அந்த பொய்க்கு காரண காரியம் இருந்தாலும் இதுவரை இப்படி மாட்டியது இல்லை என்பதினால் எழுந்த தயக்கம். ஆனால் பாலாஜிக்கு அதெல்லாம் இல்லையே! “ஹெல்லொ மேஹா! எப்படி இருக்கீங்க? வேண்டும் என்றே அவள் சொன்ன பெயரை சொல்லி அழைக்க

பக்கத்தில் இருந்த விதுவிற்கு எதுவும் இல்லாமலே புறை எரியது! 

இவனை இன்ரொடியுஸ் பண்ண தேவை இல்லைன்னு நினைக்கிறேன், you might have seen him on the stage, veeresh!”

கண்களில் குறும்புடனும் சிறு சுவாரசியத்துடனும் பார்த்துக்கொண்டிருந்த வீரேஷை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள், பாலாஜியிடம்சாரி!” என

ஹேய் கம்மான் (comeon) இட்ஸ் ஆல்ரைட், இப்போவாவது நிஜ பெயரை சொல்லலாமே!”

உள்ளே சென்ற குரலில், “வென்முகில்என அவள் கூறியதும் வீரேஷின் முகத்தில் சட்டேன ஒரு சந்தோஷம் பாலாஜியை திரும்பி பார்த்தவன்எப்படிஎன்பதை போல் ஒற்றை புருவத்தை உயர்த்த பாலாஜியுமே அவனின் கணிப்பில் ஒரு கணம் மலைத்திருந்தான். 

அவளின் சங்கடமான முகம் பார்த்த வீரேஷ், “hey don’t feel bad, these precautions are necessities these days!”

வென்முகிலின் அருகே அதுவரை அமைதியாய் இருந்த விதுனா, “நீங்க வேற சீனியர், அவ பீல் எல்லாம் பண்ணலை! மாட்டிக்கிட்டோமே இப்படினு நினைச்சுட்டு இருப்பா!” என தோழியாய் அவளை வாரினாலும் சுழ்நிலையை சிறிது சகஜமாக்கவே செய்தது! 

விதுனாவை பார்த்து சிரித்த வீரேஷ், “பாவம் முன்ன பின்ன பொய் சொல்லி பழக்கம் இல்லையா இருக்கும் விட்றலாம்!” என ..

அபி சொன்னது வேறு மனதிற்குள் உறுத்திக்கொண்டிருக்க வீரேஷ் சகஜமாய் பேசியது அதுவும் இரு முறையும் வென்ஸிக்கு சப்போர்ட் செய்து பேசுவது அவளின் கவணத்தில் பட தவரவில்லை. 

ஒரு வித யோசனையான பாவத்துடன் அவனை ஏறிட்டு பார்க்க அவளின் பார்வையில் அவளின் மனதின் ஒட்டத்தை அறிந்தவனாய் சிரித்துக்கொண்டான். 

இதையெல்லாம் கவணிக்காமல் வென்ஸி, “ஹையோ இப்படி இவர்(வீரேஷ்) முன்னாடி மானம் போச்சே!” என மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தாள்.  

இதில் இருந்து தப்பிக்கும் எண்ணமாக, “சாரி, பாலாஜி சார்,  நீங்க பேசிக்கிட்டு இருங்க! I have to go around and check other guests as well.” என கூறியவள் விதுனாவின் கிண்டலான பார்வையையும் வீரேஷின் சிரிக்கும் கண்களையும் சாய்சில் விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என இடத்தை காலிசெய்தாள். 

அவள் போனதும் பாலாஜி, “சோ.. உன் பெயரை சொல்லவே இல்லையே!” என எதுவும் அறியாதவனாய் கேட்க்க

நீங்க தான் கேட்க்கவே இல்லையே கசீனியர்!”

அன்னைக்கு கேட்ட்ப்போ யாரோ இல்லாத SP காப்பத்தினது போல இப்போ ஆள் இல்லையேன்னு பாக்குறியா?”

பாலாஜியின் ஒருமை அழைப்பை கவனித்தவன், “என்னடா நடக்குது?”

பாலாஜியும் அவர்கள் வந்த அன்று அவளை பார்த்தையும் அவள் செய்ததையும் கூறியவன், “ஆமாம் நீ சொன்ன cs-ஆவது உண்மையா?” என அவளை அறிந்தவனாய் கேட்க்க

சிரித்து மலுப்பியவள், “நீங்க செம ஷார்ப் சீனியர்என அவனையும் கலாய்க்க 

இன்னும் பெயரை சொல்றாளான்னு பாரு, சரியான குடுகுடுப்ப!” என எண்ணியபடி விதுனாவை முறைக்க

இவர்களின் வார்த்தை விளையாட்டை பார்த்தவனுக்கு இது ஸ்வாரசியாமாய் இருக்க, ‘சரி….. மச்சியும் கவுந்துட்டான் போலஎன எண்ணியவன், 

விதுனா! நானும் வென்ஸியும் ஒரே டிபார்ட்மெண்ட் தான். B.Arch!” என பதிலளித்தவள் வீரேஷிடம் திரும்பி, “நீங்க சாப்பிடுங்கநான் போய் வென்ஸியை பார்த்துட்டு வரேன்.”

அவள் சிறிது நகர்ந்ததும், “என்னடா.. ஓவர் உரிமையா இருக்குஎன்ன நடக்குது இங்க

எனக்கே சரியாய் தெரியலை மச்சி, வார்த்தைக்கு வார்த்தை பேசுறது நல்லா இருக்குஅவ்ளோ தான் இப்போதைக்கு!”

உண்ண மாதிரியா, என்னமா சப்போர்ட் பண்ற… ” என அவன் பங்குக்கு கலாய்க்க

எனக்கு உண்ணா மாதிரி இருக்கா இல்லையான்னு குழப்பம் இல்லையில்ல அதுனால் அப்படி தான் இருக்கும் விடு விடு! ”

நீ சப்போர்ட் பண்றது வென்முகிலுக்கு புரிஞ்சதோ இல்லையோ, அந்த குடுகுடுப்பைக்கு புரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.”

ம்ம்கவனிச்சேன், முகத்தில் இருந்த கிண்டலை! செம நக்கல் பேர்வழியாய் இருக்கும் போல!” என இவர்களுக்குள் பேசியபடி கையில் உணவுடன் மற்றவர்களுடன் கலந்து பேசியபடியே உணவை முடித்தனர். 

பேச்சு பேச்சாய் இருந்தாலும் இவர்கள் இருவரும் சாப்பிடாததை கவனித்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. தான் எதேனும் சொல்ல அது காலேஜில் அவளுக்கு எதுவும் வேறு மாதிரியான பேச்சுக்கு வழிவகுக்க கூடாது என்பதினால் அமைதியாய் இருந்தான். 

முக்கிய விருந்தினர்கள் கிளம்பியதும், மற்றவர்கள் இதற்கு பிறகு  பேசிக்கொண்டு தான் இருக்க போகிறார்கள் என்பதினால் வென்முகிலும் விதுவானும் கிளம்ப

எதேட்சமாய் வருவது பொல் வந்த வீரேஷ், “கிளம்பிட்டீங்களா? எப்படி போக போறீங்கவேன் எல்லாம் இப்போ இருக்காது இல்ல?” என கேட்க்க 

இல்லை சார்! சதிஷ் வருவான்.” என வென்முகில் கூறியதும் அவளின் சாரை கேட்டு மானசிகமாய் தலையில் கைவைத்தவன்.. 

சார் எல்லாம் வேண்டாம் முகில்! வீரேஷ்ன்னே சொல்லுங்க. ”

உங்களை போய் பேர் சொல்லியாஎன்னால முடியாது சார்!”என பட்டேன அவளின் எதிப்பை தெரிவித்தவள் அவனின் முகில் ஆச்சர்யமே!. 

அவள் அறிந்த வகையில் காலேஜில் எல்லோரும் வென்ஸ் அல்லது வென்ஸி என்றே அழைத்துப் பழக்கம். வீட்டிலோ மற்ற நெருங்கிய சொந்ததில் இவள் சின்ன குட்டியே! இது வரை யாரும் முகில் என்று அழைத்ததே இல்லை எனலாம். ஆனால் எனோ அவனை திருத்தவும் தோனவில்லை அதே சமயம் அந்த பெயர் நல்லா இருப்பதாக கூட தோன்றியது தான் ஆச்சர்யம்!! 

அப்போ டார்லிங் அல்லது மாம்ஸ்ன்னு வேனா கூப்பிடுறியா?’ என மனதிற்குள் நினைத்தவன்அப்படின்னா உங்க பிரண்ட் மாதிரி சினியர்ன்னு கூட கூப்பிடு .. இந்த சார் எதோ வயசான பீல் குடுக்குதுஎனகிடப்பதேல்லாம் கிடக்கட்டும் கிளவியை தூக்கி மனையில் வைய்யுங்குரது போல இப்போ சார்ன்னு அவ கூப்பிடுறதுல தான் அவன் தலை போக போவது மாதிரி அது ஒன்றே குறியாய் இருந்தான். 

டிரை (try) பண்றேன் சா.. ” என முடிக்காமல் விட்டுவிட 

அதற்கு மேல் இதை பற்றி பிரஸ் பண்ண விரும்பாதவனாய், நாங்க கூட கிளம்பிட்டோம் , if you don’t mind we can drop you on our way. 

இல்லை சா.. உங்களுக்கு எதுக்கு சிரமம் .. இட்ஸ் ஹர்ட்லி 5 மினிட்ஸ். ” என கூரியவளையும் வீரேஷையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் விது! 

என்னடா நடக்குது இங்க! அவரின் பார்வையும் பேச்சும் அபி சொன்னதை ப்ரூவ் பண்ணுதே! இந்த  மக்குக்கு புரியுதா இல்லையா? மத்தவிஷயத்திலெல்லாம் சட்டுன்னு புரியுரவளுக்கு இது புரியாதா என்ன? புரிஞ்சாலும் புரியாத மாதிரி இருக்காளோ?’ என அவள் முகத்தை ஆராய, அதில் அப்படி ஒன்றும் தெரியவில்லை.. இது ஒரு விடாகண்டின்னு தெரியாமல் கா()லை விடுராறே பாவம்….

அதற்குள் பாலாஜியிடம் கண்ணை காட்ட, அவனும் கனகாரியமாய் எதோ ஒரு சாக்கிட்டு சதிஷை அந்த இடத்தை விட்டு நகர்த்த..  பத்து நிமிஷம் ஆகியும் இன்னும் அவன் வராததினால் இருவரும் தனியாகவே கிளம்ப  முடிவெடுக்க  முகிலின் அருகில் வந்தவன்,”அரத பழைய டையலாகாக இருந்தாலும் பரவாயில்லை, கார் தான் சுமக்க போகுது ! எனக்கு ஒரு சிரமும் இல்லை!” என

நீயே சுமக்குறதுக்கும் ரெடியா இருக்கன்னு எனக்கு தானே தெரியும்என மனதிற்குள் நினைத்தபடி பாலாஜி வீரேஷை பார்த்து ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி தலையை ஆட்டி சன்ன சிரிப்பை உதிர்க்க, அதை கவனித்தவன்  நீ வேற ஏண்டா?!’ என கண்டன பார்வையை அவனை நோக்கி பார்சல் செய்தவன்இனி நீங்க நடந்து போகனும்ன்னாலும் 15 – 20 மின் ஆகிடும் இல்லையா? அல்ரெடி 10:30 ஐ டொண்ட் திங்க் இட்ஸ் சேஃப்  என கூற 

அவன் சொன்ன நேரம் எல்லம் கணக்கு போட்டவள் இதற்கு மேலும் தூக்கத்தை தியாகம் பண்ண விரும்பாதவளாய் விதுனா வென்ஸி மறுபடியும் மறுக்கும் முன்னர், “ஒக்கே சீனியர்! இதுக்கு மேல எல்லாம் தூக்கத்தை தியாகம் பண்ண முடியாது! “ என அறிவித்தவள் அவளை கனல் பார்வை பார்த்துக்குகொண்டிருந்தவளிடம், “ஹெய் வென்ஸ் கோச்சுக்காத டீ….” என அடுத்தவர்கள் முன்னால் இவள் செய்யும் அட்டகாசத்தை பார்த்தவள் நெற்றி கண் இருந்திருந்தாள் எரிச்சே இருப்பாள். அவளின் முகத்தை பார்த்த விது, வென்ஸியின் கைகளை பிடித்துக்கொண்டு கொஞ்சும் குரலில்மிச்ச கோவத்தை நாளைக்கு வேனா கண்டினியு பண்ணிக்கலாமாஎன பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க்க

இதுவரை அவளின் செயல்களை ஒரு சுவரசியத்தோடு பார்த்துக்கொண்டிருந்த பாலாஜி பக்க்கென்று சிரித்துவிட, “அட என் சீனியர், இருக்குற கொல்லியில சிரிச்சு பெட்றோல ஊத்துறிங்க? ” என தலையில் கை வைத்து அவள் அலுத்துக்கொள்ள வென்முகிலின் முகத்திலுமே லேசான இலக்கம் தோன்றியது. 

அச்சோ சீக்கிரம் சீக்கிரம், வென்ஸி சிரிச்சுட்டா, அவ மனசு மாற்றதுக்குள்ள போய்டலாம்என அதையும் கலாய்க்க

பேசாம இருடி!” என அடிகுரலில் அவளிடம் காய்ந்தவள், “சார், நீங்க எவ்வளவு பிஸியான ஆள்ன்னு தெரியும் thanks for taking your time for us!” என வீரேஷிடம் மன்னிப்பு கோறும் பாவனையில் சொல்ல

தன்னை அந்நியன் போல் அவள் நடத்தும் விதம் ஒருவித கோவத்தை கொடுத்தது. பார்க்காத வரை ஒன்றும் தெரியவில்லை. பார்த்ததும் தான் அவளை சிறிதளவு கூட பாதிக்கவில்லை என்பது மனதில்ஆதஙகத்தை கொடுத்தது. 

எந்த ஒரு விஷயத்திலும் இந்த அளவு பொறுமையை கடைபிடிக்காதவன் இப்பொழுது அவளிடம் இருந்து நெகடிவாக எதுவும் வந்துவிடக்கூடாது என்று தன்னுடைய ஒவ்வொரு அடியையும் நிதனமாய் எடுத்துவைக்க அது அவன் இயல்போடு ஒத்துப்போகாமல் முறண்டியது! மனதிற்குள், “I am ready to share my life with you” அப்படின்னு கத்தவேண்டும் போல் எழும் ஆதங்கத்தை முயன்று கட்டிபடித்திய்வன், “if its a trouble I wouldn’t offer” எனக்கு இஷ்டம் இல்லையென்றால் நான் செய்யமாடேன் என்று கூறியவன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 

இருவரும் இருவேறு மன நிலையில் இருக்க காலம் இவர்களின் எண்ண ஒட்டத்தை அறிந்தோ அறியாமலோ இருவருக்கும் வழிவகை செய்யுமோ?

இங்கே தயக்கம்! அங்கே மயக்கம்!!

காதல் வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!