Skip to content
Post Views: 639
அத்தியாயம் 08
ஐந்து வருடங்களுக்கு பின்.
Advertisement
“ ஐயரே நல்ல நேரம் முடியறதுக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு. ”
Advertisement
Advertisement
“ இன்னும் அரை மணி நேரம் இருக்கு பேபியம்மா.. ”
Advertisement
“ இன்னும் கதிர் பையல காணோம் ஏன் இவ்வளவு தாமதம் பண்றாங்க. ராஜி.. ”
“ தெரியல அத்தை. ரமேஷ் கால் எடுக்க மாட்டேங்கிறாங்க.. ”
“ எப்படி ஊரகூட்டி விமர்சையா பண்ண வேண்டிய கல்யாணத்தை நம்ம மட்டும் நடத்தி வைக்க வேண்டியதா இருக்கு. என் தங்கத்து தலையில் இப்படியா எழுதி வைக்கனும் அந்த கடவுள்.. எல்லாரும் புள்ளை பெத்தாங்கன்னு நானும் ஒருத்தனை பெத்து வச்சிருக்கேன் டி. இவ்வளவு பிடிவாதம் ஒரு மனுஷனுக்கு ஆகவே ஆகாது. யாருன்னு இவன் இப்படி மாப்பிள்ளையை போய் வெறுத்து நிற்கிறான்..
அவன் ஒருத்தனின் வீம்பு பிடிவாதத்துக்காக இவங்க இரண்டு பிஞ்சு மனச காயப்படுத்துறது கடவுளுக்கே அடுக்காத விஷயம்.. அவன் கண் பார்க்க என் பிள்ளைங்க ரெண்டும் சந்தோசமா நிம்மதியா ஒற்றுமையா நல்லது,கெட்டது எல்லாம் பார்த்து வாழ்ந்து காட்டணும்..
இப்படியா பட்ட மாப்பிள்ளையை நம்ம ஒதுக்கி வச்சு நம்ம பொண்ணு மாப்பிள்ளையோட சேர்ந்து சந்தோசமா இருக்கிற காலத்தை வேஸ்ட் பண்ணிட்டோம் என்று அவன் வருந்தணும்..
அந்த கடவுள் அவன் வருந்துவதை என் கண்ணால பாக்குறதுக்கு இந்த உடம்பில் உசுர புடிச்சு வைக்கணும்..
எத்தனை பேர் எத்தனை விதமா கேட்டு பார்த்திருப்போம். கதிர மாப்பிள்ளையா ஏத்துக்கோ சரவணா என் தங்கம் சந்தோஷமாக அவன் கூட மட்டும் தான் வாழும்.
அவனும் சந்தோஷமாக தங்கம் கூட மட்டும் தான் வாழ விருப்பப்பட்ட இரண்டு மனச பிரித்து என்ன சுகத்தை காணப் போற?
நீயும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட. இந்த சூழ்நிலையை நாங்க உனக்கும் செஞ்சுருந்தா நீ எப்படி இதை எதிர்கொண்டிருப்ப?
உனக்கு அப்படி செய்ய எங்க அண்ணனும் உங்க அப்பாவும் இல்லாத திமிருதானே!
இப்படி எவ்வளவோ பேசியும் எடுத்து சொல்லியும் அவன் பிடிவாதத்தில் தானே நிற்கிறான். பெத்த பொண்ணு கல்யாணத்தை பார்க்காமல் விமர்சையை அடுத்து நடத்தாமல் அந்த வீம்பும் பிடிவாதமும் அவன் கையில இருக்குற பணமும் யாருக்கு வேணும்.. ”
“ அத்தை வேண்டாம் நீங்க பெரியவங்க மனசு நொந்து ஒரு வார்த்தை பேச வேணாம்.. நம்ம என்ன பண்ணுறது எவ்வளவோ முயற்சி செஞ்சோம் மாமாவும் கல்யாணத்துக்கு வரல மாமா வரலன்னு அக்காவும் வரல. தாய் தகப்பன் இருந்தும் இல்லாமல் தமிழ் கல்யாணம் நடக்கணும்னு இருக்கு விதி. அதை யாராலையும் மாத்த முடியாது. ரெண்டு பேருக்குமே தாய் தகப்பன் இல்லாம தான் கல்யாணம் நடக்க போகுது..
விடுங்க அத்தை சந்தோஷமா நம்ம கல்யாணம் பண்ணி வைப்போம்.. நம்மளும் கவலைப்பட்டு முகத்தை சோகமாக வைத்து இருந்தால் அவங்க எப்படி சந்தோஷமாக கல்யாணம் நாளை அனுபவிப்பாங்க?
இன்று அவங்களுக்கு ரொம்ப பொக்கிஷமான நாள்ல எந்த ஒரு கஷ்டமும் அவங்களுக்கு வேணாம்.. நம்ம மனச தேத்திகிட்டு சந்தோசமா கல்யாணம் பண்ணி வைப்போம்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துருவாங்களாம். இங்க நம்ம எல்லாரும் ரெடியா இருக்கோம் வந்தா கல்யாணம் பண்றதுக்கு ரெடி பண்ண வேண்டியதுதான்.. ” என்றாள் ராஜி..
இந்த ஐந்து வருடம் இவர்களின் வாழ்க்கையில் பல விஷயங்களை பார்த்து விட்டது..
தமிழின் சடங்கு நடந்து ஒரு மாதத்தில் வேர்கடலை புடுங்கி அதை பதப்படுத்தி விற்று அதில் கிடைத்த பணத்தில் ஏதாவது வேறு தொழில் செய்யலாம் என யோசித்து மேலும் மூன்று மாதம் கடந்து மீண்டும் வேர்க்கடலை செய்து வித்து இரண்டு போக பணத்தையும் சேர்த்து அவனுக்கு டிரைவிங் தெரியும் என்பதால் ஒரு கார் எடுத்து ஓட்டலாம் என முடிவு செய்தான்..
அவன் வசிப்பதும் கிராமம். அதனால் என்ன தொழில் செய்வது என்று அவனுக்கு சரியான முடிவு எடுக்க தெரியவில்லை.. வழிகாட்டையும் பெரிய ஆண் என்று சரவணன் தவிர யாரும் இல்லை அவர் வழிகாட்டுவதற்கு தயாராகவும் இல்லை..
அவனிடம் இருப்பது சின்ன தொகை. பெரிய முதலீடு போட்டு வேறு தொழில் செய்வதற்கும் வசதி இல்லை. அதனால் இருக்கும் பணத்தை கொண்டு இரண்டாம் தரத்து கார் ஒன்றை வாங்க திட்டம் போட்டான்..
அதை மகேஸ்வரியிடம் சொல்லி சரவணன் மற்றும் கோமதியிடமும் சொன்னான்.
சரவணன் அதை காதில் வாங்கினாரா இல்லையா என்று தெரியவில்லை.. அதை பற்றி நல்லது கெட்டது எதுவும் சொல்லவில்லை உன் விருப்பம் என்று மட்டும் சொல்லிவிட்டார்..
தினேஷும், மணியும் சேர்ந்து நல்ல காராக பார்த்து தான் அவனுக்கு வாங்குவதற்கு உடன் நின்று அனைத்தும் பார்த்து முடித்து கொடுத்தார்கள்..
காருக்கு பூஜை போட்டு வீட்டில் உள்ளவர்களை ஏற்றி ஊரைச் சுற்றி வந்து கோமதியும்,தமிழ்,செழியன் பேபியம்மா என அவர்களையும் ஏற்றி திரிந்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்..
புதிதாக ஒரு வாகனம். இரண்டாம் தரம் தான். ஆனால் அவனுக்கு புதிய வாகனம் தான். சந்தோஷத்தோடு தான் அதை டாக்ஸியாக ஒட்ட ஆரம்பித்தான்..
கிராமத்தில் எங்கோ ஒரு பணக்கார வீடுகளில் கார் இருந்தது. ஆனால் ஆட்டோ ஓடிய அளவிற்கு டாக்ஸியாக அந்த ஊரில் பெரிய அளவில் ஓடவில்லை.. இவன்தான் ஆரம்பித்து வைத்தான். மக்கள் அன்றாடம் காட்சிகள் அவர்களும் பஜார் போவதற்கு பஸ் தான் எதிர்பார்த்தார்கள்.. எங்கோ ஒருவர்தான் அவன் காரில் போக அழைப்பு விடுத்தார்கள்..
சென்னை போன்ற பெரிய நகரங்களில் டாக்ஸி ஓட்டி அதில் வரும் வருமானத்தை பார்ப்பது போல் இங்கே பார்க்க முடியவில்லை..
தவறான முடிவோ என நொந்து விட்டான்..
பேபியம்மாவும்,மகேஸ்வரியும் தான் தேற்றி தொடர்ந்து முயற்சி செய் என கூறி அவனை உத்வேகப்படுத்தினார்கள்..
எப்படி ஆயினும் ஒரு சொந்த நிரந்தர தொழில் செய்து நல்ல முறையில் வந்தால் தான் மாமனிடம் தமிழை பெண் கேட்கலாம் என நினைத்து உழைக்க தான் முயன்றான்..
ஒரு மனிதன் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு எவ்வளவு உழைத்தாலும் அவனிடம் அது தங்குவதற்கு அவனுக்கு காலமும் வழி விட வேண்டும்..
மண்ணைத் தொட்டால் பொன்னாகவும் பொன்னை தொட்டால் மண்ணா போவதும் காலம் தான் தீர்மானிக்க வேண்டும்..
அப்படித்தான் கதிர்க்கும் நடந்தது காலம் அவனுக்கு இன்னும் நல்வழி காட்டுவதற்கு அமையவில்லை..
சும்மா எல்லா நேரமும் அவன் சரவணன் வீட்டிற்கு செல்லவில்லை.. சரவணன் பற்றியும் அவரது ஒதுக்கத்தை பற்றியும் நன்கு தெளிவாக புரிந்து கொண்ட பின் அங்கே போவதை தவிர்த்து தான் வந்தான்..
மனம் சோர்ந்து போகும் போது அல்லது சின்னப்பொண்ணு பார்க்க வேண்டும் என நினைத்தால் அவளது பள்ளி வெளி வாசலில் அவளுக்கு தெரியாமல் யாருக்கும் தெரியாமல் அங்கு இருக்கும் வேப்பமரத்தின் அடியில் நின்று அவள் வரும் நேரம் பார்த்து விட்டு போய்விடுவான்..
தீபாவளி,பொங்கல் சீர்கொண்டு மட்டும் கட்டாயம் அங்கே சென்று கோமதிக்கு கொடுத்துவிட்டு தமிழயும் பார்த்துவிட்டு பேபியம்மாவிடமும் சொல்லிவிட்டு வருவான்..
தமிழின் சடங்கின் பின் இன்னும் அவன் காபியோ ஒரு வேளை உணவோ அங்கே சாப்பிட்டவில்லை..
பேபியம்மாவும் தமிழுக்கு 18 வயதாகட்டும் நாம் இப்பொழுது ஒன்றும் பேசக்கூடாது என அண்ணன் மகன் போக்கில் விட்டுவிட்டார்..
மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு தூரத்து சவாரி மட்டும் வரும். உள்ளூரிலோ, பஜாரிலோ அவனுக்கு சவாரி என்பதே இல்லை.. அதனால் எடுத்த காரை விக்காமல் அப்படியே வீட்டிலேயே டெம்ப்ரவரி செட் ஒன்றை போட்டு பாதுகாப்பாக நிறுத்தி விட்டான்..
முதல் முதல் எடுத்தது அதை மீண்டும் விக்க அவனுக்கு விருப்பமில்லை.. வீட்டு தேவைக்கு உதவட்டும் என போட்டு விட்டான்..
காலங்கள் யாருக்கும் காத்திருக்காமல் இரண்டு வருடம் போய்விட்டது..
அவன் ஆரம்பித்த தொழில் தான் அவனுக்கு கை கொடுக்கவில்லை.. அவனது பூமித்தாய் எப்பொழுதும் அவனை கைவிடமாட்டார். அந்த நம்பிக்கையில் அக்கம் பக்கத்தில் இருப்பவரிடமும் சும்மா கிடந்த நிலத்தை குத்தகைக்கு பணம் கொடுத்து வாங்கி அதில் பயிர் செய்தான்..
அவன் நினைத்தது போல் பூமித்தாய் அவனை மிகவும் நேசித்தார் போலும் கைவிடாமல் அவனது உழைப்பிற்கு தகுந்தது அனைத்தையும் லாபமாக அள்ளிக் கொடுத்தாள்..
மனிதர்கள் தான் வஞ்சகமும் பொறாமையும் கொள்வார்கள். இயற்கை என்றைக்கும் இயற்கையை நேசித்தால் மனிதர்களுக்கு தன்னால் முடிந்ததை அள்ளிக் கொடுக்கும்..
செல்வியும் அன்பும் ஒரே வயது பிள்ளைகள் ஒன்றாக பிறந்தவர்கள் என்பதால் வளர்ந்து விட்டார்கள் அவர்களும் ஆளுக்கு ஒரு டிகிரி முடித்து காத்திருந்த நேரம்..
செல்விக்கு 21 வயது ஆகிவிட்டது அவளுக்கு திருமணத்திற்கு பார்க்க வேண்டும் கையில் பணம் வேண்டும் தங்கைக்கு நகை செய்ய வேண்டும் என கடமை அவனை அழைக்க மேலும் பூமித்தாய் நம்பித்தான் அவன் மேலும் மேலும் பயிர் செய்து பணம் சேர்க்க ஆரம்பித்தான்..
செல்வியும் அரசாங்க பள்ளிக்கு வேலைக்கு ஆடர் வரும் வரை காத்திருக்காமல் தனியார் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து கொண்டாள்..
அன்பு அந்த ஊர் பஜாரில் இருக்கும் கட்டுமான கம்பெனி ஒன்றில் என்ஜினியராக சேர்ந்து கொண்டான்..
செழியன் படித்துவிட்டு தந்தை தொழிலை தந்தையோடு சேர்ந்து செய்ய ஆரம்பித்தான்..
பேபியம்மா, கோமதி, ராஜி,மகேஸ்வரி இவர்களிடம் செல்விக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்க்க வேண்டும் எனக் கூறினான் கதிர்..
தினேஷ் ஐந்து வருட காண்ட்ராக்டில் சவுதி நாட்டுக்கு வேலைக்காக சென்று விட்டான்.
கதிரையும் உடன் அழைத்தான் ஐந்து வருடம் அங்கே வேலை செய்தால் தேவையான பணம் கிடைக்கும் அதை வைத்து பெரிய தொழில் முதலீடாக போட்டு செய்ய ஆரம்பிக்கலாம் வா என எவ்வளவோ அழைத்தான்.. ஆனால் அவனது வீட்டையும், பூமியையும் விட்டு அவனுக்கு செல்ல விருப்பமில்லை.. அயல்நாட்டில் போய் சொந்தத்தையும் சொந்த மண்ணையும் விட்டு கஷ்டப்பட்டு உழைப்பதற்கு நம் பூமியில் கஷ்டப்பட்டால் பூமித்தாய் சந்தோஷப்பட்டு கொடுப்பால் என அவன் நம்பினான் அதனால் போகவில்லை..
செல்வி அண்ணனிடம் எதையும் மறைக்கவில்லை..
வீட்டில் அவளது திருமண பேச்சு அடிபடும் போது
“ அண்ணா எனக்கு உன் நண்பன் மணிமாறன் அவரை பிடிச்சிருக்கு அவர்கிட்ட நான் இன்னும் சொல்லவில்லை .. நீங்க கேட்டு பாருங்க அவருக்கு சம்மதம் என்றால் கல்யாணம் பண்ணி வைங்க.. அவருக்கு விருப்பம் இல்லை என்றால் நீங்க வேற மாப்பிள்ளை பாருங்க நான் கட்டிக்கிறேன்.. ” என்றாள்..
ஏன் அவனைப் பிடித்தது என காரணம் கேட்ட போதும்
அவனது தாயை விட்டால் அவனுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை. அவர்கள் இருக்கும் வீடு அதை சுற்றி ஓரளவுக்கு இடம் இருக்கிறது..
அவனும் பருவத்திற்கு அதில் பயிர் செய்வான் மற்றும் மேஸ்திரியாக வேலை செய்கிறான்..
மணி தாய் கங்கா உடல்நலம் பாதிக்கப்பட்டவர்..
தாயை கவனமாக பார்த்துக் கொள்கிறான். தாய்க்கு பின் செல்வி அவனுக்கு மனைவியானால் நன்றாக பார்த்துக் கொள்வான்.
இதோ அடுத்த தெருவில் அவரது வீடு உள்ளது தன் அக்கா,அண்ணன், தம்பி, அம்மாவுடன் தன் குடும்பத்தோடு எப்பொழுது ஒன்றாக இருக்கலாம்..
மணிக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.. அவனை கட்டினால் தான் எல்லா வகையிலும் சந்தோஷமாக இருக்கலாம் அவனையும் கங்காவையும் நன்றாக தன்னால் பார்த்துக் கொள்ள முடியும் என நினைத்ததாக கூறினாள்..
இது அவளது விருப்பம் மட்டும்தான். மணி இங்கே வந்து போகும் பொழுது கூட நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்ததில்லை. அவளும் அவனுக்கு விருப்பம் என அவனிடம் காட்டிக் கொண்டதில்லை.
ஒரு நேரம் அது நடக்கவில்லை என்றால் அனைவருக்கும் சங்கடம் என்பதால் விட்டுவிட்டாள்..
படிப்பில் முழு கவனமும் வைத்து இதோ படித்து அரசாங்க பள்ளியில் ஆசிரியராக வேலைக்கும் போட்டு விட்டாள்..
கூடிய சீக்கிரம் அதுவும் கிடைத்துவிடும். இந்த ஊர் பள்ளியில் வேலை கிடைத்தால் மிகவும் சந்தோசம். இதே ஊரில் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
என நினைத்ததாக கூறினாள்..
அவள் நினைத்து கூறிய எதுவும் தவறில்லை.. அவர்களுக்கும் மணியை வேண்டாம் என சொல்ல காரணம் இல்லை.
கிட்டத்தட்ட இரண்டு குடும்பமும் பொருளாதார ரீதியாக ஒரே இடத்தில் இருக்கிறார்கள்.. நண்பன் என்று தங்கையின் வாழ்க்கை பற்றி கவலைப்படவில்லை அவனைப் பற்றி முழுவதும் கதிருக்கு தெரியும்..
அவனுக்கு உடன்பிறந்த பெண்கள் யாரும் இல்லை.. அண்ணன் மட்டும்தான் அதனால் தங்கைக்கு நாத்தனார் தொல்லை இல்லை கங்காவும் மிகவும் அமைதியானவர்..
அவனும் சொந்தமாக ஒரு பைக் வைத்திருக்கிறான். மேஸ்திரியாக விடு மற்றும் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அவனை நம்பி முழு பொறுப்பையும் ஒப்படைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டான்..
ஒரு வீட்டையோ கடையோ ஏதோ ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு முழு பொறுப்பும் அவனது..
அவன் கேட்கும் பணத்தை கொடுத்து விடுவார்கள். வேலையை ஆள் வைத்து சிறப்பாக முடித்து கொடுத்து விடுவான். அந்த அளவிற்கு தொழிலில் தற்பொழுது வளர்ந்து விட்டான்..
கதிர் குடும்பத்திற்கு செல்விக்கு மணியை திருமணம் முடிப்பதற்க்கு தடை எதுவும் இல்லை..
கதிரும் நேரம் பார்த்து மணியிடம் இதைப் பற்றி பேசினான்.. முதலில் அவனால் நம்ப முடியவில்லை.. நண்பன் தன்னிடம் விளையாடவில்லை உண்மையைத்தான் கூறுகிறான் என சந்தோஷத்தில் கதிரை கட்டி அணைத்து மகிழ்ந்தான்..
குடும்பத்தோடு கங்கா விடமும் பேசி நல்ல நாள் பார்த்து அவனுக்கு எடுத்துச் செய்ய வேறு ஆட்கள் இல்லை என்பதால் இருவரும் சேர்ந்து இரு பக்கம் இருக்கும் அனைத்து வேலைகளையும் பார்த்து நல்ல நாளில் கதிரால் முடிந்த அளவுக்கு நகை போட்டு தங்கையை திருமணம் செய்து கொடுக்க ரெடி பண்ணினான்..
சரவணன் சொன்னது போல் ராஜிக்கு செய்த அதே அளவு நகையை செல்விக்கும் செய்தார். இதில் கதிர் எவ்வளவோ மறுத்து கூறி வேண்டாம். என்றான். தன்னால் தன் தகுதிக்கு கொடுக்க முடிந்த நகை போதும். தன் நண்பன் இதெல்லாம் எதிர்பார்த்து திருமணம் செய்யவில்லை என எவ்வளவோ கூறினான்..
தாய்மாமன் சீர் இதை யாரும் தடுக்க முடியாது என கூறி செய்தார் சரவணன்..
சிறப்பாக மணிமாறன் அன்புச்செல்வி திருமணம் நடந்தது..
நண்பனின் நிலை தெரிந்து வீட்டுப் பொருட்கள் சீர் எதுவும் வேண்டாம் என மணி தடுத்து விட்டான்..
அவனது வீட்டிலும் அனைத்தும் அவன் வாங்கி போட்டிருப்பதால் அதை பணமாகவே அவன் கையில் கொடுத்து விட்டான் கதிர்.
அதை வேண்டாம் என மணி தடுத்தும் கேட்கவில்லை தான் தங்கைக்கு செய்ய வேண்டியது எதுவும் குறை இல்லாமல் செய்ய வேண்டும் என கூறினான்..
அவர்களுக்கு வாழ்க்கை சந்தோஷமாக போனது அதற்கு சாட்சியாக அடுத்த மாதமே செல்வி கருவுற்றாள்..
செல்வி சொன்னது போல் கங்காவையும் நன்றாக பார்த்துக் கொண்டாள்..
மணிக்கு அனைத்திலும் உதவியாக இருந்தாள்.
மணி யும் அவளை கையில் வைத்து தாங்கினான்..
அடுத்த தெருவில் தாய்வீடு இருந்தாலும் அடிக்கடி தாய் வீடு வருவதில்லை..
தேவை என்றால் மட்டும் வருவாள். பள்ளிக்கு மணியே அழைத்து சென்று மீண்டும் அழைத்து வருவான். அப்படி சந்தோசமாக வாழ்ந்தார்கள்.
அவள் தகுதிக்கும் அழகுக்கும் வேறு மாப்பிள்ளை பார்த்தாலும் தன் தங்கை இப்படி வாழ மாட்டாள்.
என சந்தோசப்பட்டது குடும்பம்..
செல்விக்கு குழந்தை வயிற்றில் ஆறு மாதமாக இருக்கும் போது அரசாங்க வேலைக்கான ஆர்டர் வந்தது. அதுவும் இரட்டிப்பு சந்தோஷம் அவளுக்கு அவள் எதிர்பார்த்தது போலவே அந்த ஊர் பள்ளிக்கு வந்தது அவளது ஆனந்தத்தின் அளவை சொல்ல வார்த்தைகள் இல்லை..
தமிழ் டென்த் பப்ளிக் எக்ஸாம் பாஸ் பண்ணி வேறு பள்ளியில் சேர்ந்தாள்..
பெரிய மாடி வீடு ஒன்றை அவர்கள் கேட்டது போல் அழகாக உரிய நேரத்தில் கட்டிக் கொடுத்ததால் மணிக்கு கொடுத்த சம்பளத்தையும் விட அன்பளிப்பாகவும் சிறு தொகை பணம் கொடுத்தார்கள்..
அதை வைத்து அக்கம் பக்கத்திலும் சொந்தங்களுக்கும் சொல்லி மணிமாறன் தனது மனைவியின் சீமந்தத்தை சிறப்பாகவே செய்தான்..
செல்வி தாய் வீடு வந்ததும் இரவில் மட்டும் மணிமாறன் தாய்க்கு உதவியாக அவர்கள் வீட்டில் இருந்தான்.. நேரம் கிடைக்கும் போது மனைவியை வந்து பார்த்துவிட்டு சென்றான்..
செல்வி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்..
மருமகனின் வரவில் கதிர் மிகவும் மகிழ்ந்து அவனது சோகங்கள் அனைத்தும் தள்ளி வைத்து பிள்ளை வரவை சந்தோஷமாக கொண்டாடினான்..
மேலும் ஒரு வருடம் கழித்து அவர்களது வாழ்க்கை அனைவரின் வாழ்க்கையும் அவர்களது ஓட்டத்தின் பின் சென்றது..
ராஜியின் கணவன் ரமேஷ் வந்ததும் அந்த நேரம் ஊரில் பேமஸ் மேஸ்திரியாக மணி இருந்ததால் மணியை வைத்து அவனது கிளினிக்கையும் பாமசியையும் கட்டினான்..
மணி தொழிலில் கால் ஊன்றி முதல் போட்டு சின்ன அளவான வீடுகளை கட்டி கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டான்..
செல்வியின் மகனுக்கு ஒரு வயதாகி மூன்று மாதம் கடந்த போது ஒரு மழை நேரத்தில் மின்சாரம் தாக்கி மகேஸ்வரி உயிர் பிரிந்தது..
தனது உற்ற தோழியின் பிரிவில் பேபியம்மா முதற்கொண்டு அந்த குடும்பம் மிகவும் பிரிவு துயரில் நொந்து போனார்கள்..
யார் யாரை தேற்றுவது என தெரியாமல் துயரில் ஆழ்ந்த நேரம் ராஜியின் மகள் நிலா பெரிய மனுஷியானாள்.
தாயின் பிரிவு அந்த பிரிவு துயரையும் தன் ஒரே மகளின் விசேஷத்தை எடுத்து செய்ய முடியாத நிலை என மிகவும் மோசமான நிலை தான் அவர்களுக்கு அந்த காலம்..
நிலாவின் சடங்கு தான் அவர்களையும் ஒரு அளவிற்கு ஆற்றுப்படுத்தி துயரிலிருந்து வெளிக்கொண்டு வந்தது..
இப்படி பொதுவான விசேஷங்களில் தான் கதிரும்,தமிழும் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் பார்த்து விட்டு கடந்து விடுவார்கள்..
அவர்களுக்குள் எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது..
மகேஸ்வரியின் முதல் வருட திவசம் செய்ததும் ராஜி யும் ரமேஷும் அவர்களது கிளினிக் திறப்பு விழா வைத்து அவர்களது அடுத்த கட்ட வாழ்க்கை பயணத்தை நோக்கி அடி வைத்தார்கள்..
இப்படியே ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகளோடு காலங்கள் கடந்து தமிழுக்கு பள்ளி படிப்பு முடிந்ததும் அவளை காலேஜில் சேர்த்து விட்டார் சரவணன்..
காலேஜ் முதல் வருடம் போய்க் கொண்டிருந்த நேரம் அவர்களோடு பக்கத்து ஊரில் இதே தொழில் செய்யும் ஒருவரின் மகனுக்கு தமிழை பெண் கேட்டு வரவும் வீட்டில் பேசிவிட்டு கூறுவதாக கூறி தமிழின் கல்யாணத்திற்கு முதல் அடி எடுத்து வைத்தார்..
error: Content is protected !!