Skip to content
Post Views: 1,604
அத்தியாயம்-19
வெளியே வழக்கம் போல் இயங்குவது போல் இருந்தாலும், எல்லோரும் உள்ளுக்குள் ஒரு இறுக்கத்துடனே சுற்றுவது தெரிந்தது..
அதிதிக்கு பவியை எதிர் கொள்ளவே பயமாக இருந்தது.
பவித்ரா குற்றம் சாட்டியது போல் நான் அவரை ஓரங்கட்டிவிட்டு முந்திச்செல்ல நினைப்பதாக மற்றவர்களும் நினைத்துவிடுவார்களோ.. என்ற அச்சமும் எழுந்தது.
Advertisement
அதற்கு தகுந்தாற்போல் லிடியாவும் அவளை குறுகுறுவென்று பார்க்க..
“என்ன லிடி..” என்றாள் அலுப்புடன்…
“இல்ல..பவித்ரா மேம் பேசினதுல அப்செட் ஆகிட்டியோன்னு பார்த்தேன்… அதெல்லாம் கண்டுக்காத விடு, இது ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் தான் சீக்கிரம் சரி ஆகிடும்..” என்று அவள் ஆறுதல் கூறவும்தான் அதிதிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
Advertisement
வசீகரனுடன் மீட்டிங் இருப்பதை சொல்லி அது விஷயமாக பேச பவித்ராவின் இடத்துக்கு சென்றாள் அதிதி.. அவளுக்கு தனி கேபின் எல்லாம் இல்ல, ஆனால் அவளது உயரமான தடுப்புகள் உள்ள பெரிய க்யூபிக்கலாக இருக்கும்.
Advertisement
“மேம்..” என்றாள் தயங்கியபடி..
“யெஸ்..” என்றாள் கணினித் திரையிலிருந்து பார்வையை விலக்காமல்.
“மேம் வசீகரன் சாரோட 2 மணிக்கு மீட்டிங் ஷெட்யூல் ஆகியிருக்கு..”
Advertisement
“அது உன் வேலைதானே..நீ பார்த்துக்கோ..” என்றாள். இன்னும் அவளைத் திரும்பி பார்க்காமலே தான் பேசினாள்..
“மேம் நீங்க இல்லாம எப்படி மேம்..” என்று இழுத்தவளிடம்..
“நேத்து நான் இல்லாமதான மீட்டிங் போச்சி.. இப்ப மட்டும் என்ன..?” என்றாள் அவளை நிமிர்ந்து பார்த்து.
அதிதி என்ன சொல்லுவதென்று தெரியாமல் தலைகுனிந்து நின்றிருந்தாள்.
அவள் முகத்தில் என்ன கண்டாளோ.. சற்று மனம் இளகிய பவித்ரா..
“இந்த ப்ரோபோசல்ல நம்ம டிமாண்ட்ஸ் என்னன்னு உனக்கு தெரியும்ல… அதை முடிஞ்ச அளவுக்கு நமக்கு லாபம் இருக்க மாதிரி நெகோஷியேட்(negotiate) பண்ண பாரு..லீகல் விஷயம்லாம் நம்ம லாயர்கிட்ட பேசனும்..”
“அப்புறம் லிங்கா மெஷினரீஸ் பத்தி கம்ப்ளீட்டா ஸ்டடி பண்ணு.. நம்ம குடுக்குற டெக்னிக்கல் சப்போர்ட்னால அவங்களுக்கு எவ்ளோ லாபம் வரும்ன்னு எஸ்டிமேட் பண்ணி சொல்லனும்.. அதுக்கு மொதல்ல அவங்க கம்பெனிக்கு போய் பார்க்கறது, அவங்க தேவைகள் என்னன்னு தெரிஞ்சிக்கறது ரொம்ப முக்கியம்.. சோ அவங்களுக்கு வசதியான நாள் பார்த்து டிராவல் ப்ளான் பண்ணிக்கோ.. இன்னும் வேற என்ன தெரியனும்..?”என்று அவள் கேட்க..
இவள் பாவமாக அவளை பார்த்து..
“சாரி மேம்.. நான் உங்க ப்ரோஜெக்ட எடுத்துக்கனும்னு சத்தியமா நினைக்கல.. எல்லாமே எதிர்பார்க்காம நடந்துடுச்சி..” என்றாள் மிகுந்த வருத்தத்துடன்.
“பரவால்ல விடு.. எனக்கு உன்னோட நிலைமை புரியுது.. காலைல நானும் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. நீ எதுவும் மனசுல வச்சிக்காத.. என்னைப் பத்தி கவலைப்படாம உனக்கு குடுத்த வேலைய நீ சரியா பண்ணு.. ஓகே வா..?” என்று சமாதானமாக பேசினாள்.
“அப்போ உங்களுக்கு என் மேல எதுவும் வருத்தம் இல்லையே..?” என்றாள் கண்களில் எதிர்பார்ப்பைத் தேக்கி..
“அதெல்லாம் எதுவும் இல்ல…நீ போய் வேலைய பாரு..” என்று சிறு முறுவலுடன் பவி கூற அதிதி மனதில் பாரம் நீங்கியவளாக “தேங்க் யூ மேம்..” என்று மனதார கூறிவிட்டு துள்ளல் நடையுடன் சென்றாள்.
இதை தன் கேபின் கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருந்த விக்ரம் பவித்ராவை மெச்சுவது போல பார்த்து லேசாக சிரித்தான்.
பவித்ராவின் முகமும் புன்னகையில் அழகாக மலர்ந்திருந்தது.
அன்று மாலை வேலை முடித்து வீடு வந்து அப்பாடா என்று சோபாவில் பொத்தென்று விழுந்தாள் அதிதி..
மற்றொருபுறம் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய அப்பா தனசேகர்,
“என்ன பாப்பா.. ரொம்ப டயர்டா இருக்க. நெறைய வேலையா?” என்று விசாரித்தார்.
“ஆமாம் பா..” என்றவள் “அம்மா… சாப்ட என்ன இருக்கு..” என்று சமையலறையில் இருந்த அம்மாவிடம் கேட்டாள்..
“பஜ்ஜி போட்டுட்டு இருக்கேண்டி இரு வரேன்..” என்று உள்ளிருந்து பதில் வந்தது..
அப்போது மேலிருந்து இறங்கி வந்த அனிருத்(அதிதியின் தம்பி)
“ஏய் இது என்னோட ப்ளேஸ் எந்திரிடி..” என்றான்.
“முடியாது போடா..” என்று அலட்சியமாக கூறிவிட்டு..
“அம்மா சீக்கிரம் கொண்டு வாம்மா பசிக்குது..”என்று அவள் தன் அம்மாவிடம் சொல்லி முடிக்கும் முன்பே சோஃபா குஷன் ஒன்று வேகத்துடன் வந்து அவள் முகத்தில் விழுந்தது..
“எந்திரின்னு சொல்றேன்ல..” என்று கோபமாக அதட்டினான் அனி..
“எருமமாடு இருடா உன்னை பார்த்துக்கறேன்..” என்று இவள் கையில் கிடைத்த இன்னொரு குஷனை எடுத்து அவனை நோக்கி வீச, கடைசி நொடியில் லாவகமாக விலகி தப்பித்துவிட்டு
“எய்ம் பண்ணி அடிக்க கூட தெரியல..வேஸ்டுடி நீ..” என்று ஏளனமாக சிரித்தான்.
“பிசாசு இன்னிக்கு நீ செத்தடா..” என்று அவள் விரட்ட அவன் ஓட இருவரும் ஹாலை சுற்றி சுற்றி வந்தனர்..
அதற்குள் கையில் பஜ்ஜி தட்டுகளுடன் வந்த சுதாஷினி..
“ஏய் எருமைமாடுகளா ஒழுங்கா வந்து உக்காருங்க..” என்று குரல் உயர்த்தவும் இருவரும் பெட்டிப்பாம்பாக அடங்கி அமைதியாக வந்து அமர்ந்தனர்..
அப்போதும் அனிருத் அவளை முந்திக்கொண்டு அவன் இடத்தில் உக்கார்ந்து விட்ட வெற்றிக்களிப்பில் அதிதியைப்பார்த்து பழிப்பு காட்ட..
தலையில் அடித்துக்கொண்டார் சுதாஷினி.
“ஒன்னு என்ஜினியரிங் படிச்சிருக்கு, ஒன்னு டாக்டர்க்கு படிக்குது,ஆனா எப்பப்பாரு என் இடத்துல உக்காந்துட்டான்.. என் ஸ்னாக்ஸ திருடிட்டான்னு எல்கேஜி யூகேஜி பிள்ளைங்க மாதிரி அடிச்சிக்க வேண்டியது..” என்று பிள்ளைகளைத் திட்டியவர், தன் கணவரிடம் திரும்பி..
“ஏங்க உங்க கண்முன்னாடிதானே சண்டை போடுறாங்க என்னன்னு கேக்க மாட்டீங்களா..?” என்றார் ஆயாசத்துடன்.
“என்னம்மா பண்றது என் பிள்ளைகள் ஆச்சே, அவங்களும் என்னை மாதிரி நீ சொன்னாதான் கேக்குறாங்க..” என்று தன் நகைச்சுவை திறனைக்காட்டினார் தனசேகர்..
“அப்பா பூமர் ஜோக் அடிக்கறாருல்ல..” என்று அனிருத் கேட்க, அதிதியும்
“ஆமாண்டா..” எனவும்
நமட்டு சிரிப்பு சிரித்தனர் அக்கா தம்பி இருவரும்..
அவ்வளவுதான் சண்டை போட்ட இருவரும் சேர்ந்துவிட, சமாதானம் செய்யவந்த அம்மா, அப்பாவிடம் சண்டைப்போட தொடங்கிவிட்டார்.
“ஓ..அப்போ நான் கொடுமைக்காரி.. உங்கள கண்ட்ரோல் பண்ணி வச்சிருக்கேன்.. அப்படித்தானே சொல்லவரீங்க..?” என்று காளி அவதாரம் எடுக்க.
“நான் எங்கம்மா அப்படி சொன்னேன்..? நீ சொன்னா சரியா இருக்கும் அதை நான் எப்பவும் கேட்டுக்குவேன்ங்கற அர்த்தத்துலதான் அப்படி சொன்னேன்.” என்று தனது ஜோக் பேக் ஃபயர் ஆவதை உணர்ந்து தன் மனைவியை சமாதானம் செய்ய முயன்றார்.
அதை பார்த்து அதிதி பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்த போது அவளது கைபேசி ஒலித்தது..
“டெவில்” என்ற பெயரைப்பார்த்ததும் அவளுக்கு இன்னும் சிரிப்பு கூடியது..
“ஹல்லோ..” என்று
அதே சிரிப்புடன் அவனுக்கு பதிலளிக்கவும்..
“என்ன ஒரே சிரிப்பா இருக்கு..என்கிட்ட பேசுறதுல அவ்ளோ சந்தோஷமா..?” என்று அதிசயித்தான்.
“ஆசைதான்.. நான் ஒன்னும் அதுக்காக சிரிக்கல..”
“வேற எதுக்காக சிரிச்சன்னு சொன்னா நானும் கொஞ்சம் சிரிச்சி டோப்பமீன(dopamine) ஏத்திக்குவேன்..”
“ம்க்கூம்..இப்ப எதுக்கு கால் பண்ணீங்க… என் கார்டிசால(cortisol) கூட்டவா..” என்று திருப்பிக்கேட்க..
“காலையில ஆஃபிஸ்ல பிரச்சனைன்னு பாவம் கொழந்த டென்ஷனா இருந்ததே.. இப்போ எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு ஃபோன் பண்ணா.. ஸ்டிரெஸ்ச அதிகமாக்க கால் பண்றியான்னு கேக்குற..? உன்மேல இருக்கற அக்கறையில கூப்ட்டேன் பாரு எனக்கு தேவைதான்..”
அவளுக்காக கால் பண்ணானா..!! என்று துள்ளிய மனதை அடக்கியபடி..
“யாரது..கொழந்தை..?” என்று அவள் கேட்க..
“நான் ஃபோன் பண்ணதே தப்புதான்.. வைக்கிறேன் விடு..”
என்றவனை அவசரமாக் இடைமறித்து..
“இல்ல வேண்டாம்..”என்று தடுத்தவள்..சில வினாடி இடைவெளிவிட்டு..
“சாரி..” என்றாள் மென்மையாக..
“பார்றா..கிட்டிக்கு சாரி கேட்க கூட தெரியுமா? திட்டமட்டும்தான் ப்ரோகிராம் பண்ணியிருக்குனு நெனைச்சேன்..” என்று அவன் கேலி செய்யவும்..
“உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க.. சாரி கேன்சல்..”
“ஓவ் ஓவ் ஓவ்.. இருக்கட்டும் விடுமா.. உன்னோட அர்ச்சனை மழைக்கு நடுவுல அப்பப்ப விழுற இந்த மாதிரி ஒன்னு ரெண்டு நல்ல வார்த்தையையாவது காது குளிர கேட்டுக்கறேனே..”
பேச்சினூடே பஜ்ஜித்தட்டுடன் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்திருந்தாள் அவள்.
“என்ன பேச்சையே காணோம்.. நான் மட்டும் தனியா பேசிட்டு இருக்கேன்..”
“உங்க வாய் ஃப்ரீயா இருக்கு நீங்க பேசுறீங்க என்னுது பிஸியா இருக்கு..” என்றாள் பஜ்ஜியை விழுங்கியபடி..
“தின்னுக்கிட்டே பேசிட்டு இருக்கியா? வர வர கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம போச்சி..”
“என்ன பண்றது எனக்கு பசிக்குது, அம்மாவோட பஜ்ஜி வேற சூப்பரா வேற லெவெல்ல இருக்கு..” என்று அவள் சிலாகிக்க..
ஒரு கணம் அமைதியானவன்..
“ஹே கிட்டி.. ஆஃபீஸ் விஷயம்தான் எனக்கு சொல்லமாட்ட.. உன் வீட்டுல இருக்கவங்கள பத்தியாவது எனக்கு சொல்லலாம்ல..?” என்று கெஞ்சலுக்கும் கொஞ்சலுக்கும் நடுவிலான ஒரு தொனியில் கேட்க..
அந்த குரலை தட்டிக்கழிக்க மனமில்லாமல் அதிதியும் அவள் வீட்டில் இருப்பவர்களைப் பற்றி சொல்லத்தொடங்கினாள்.
“அப்பா ஃபினான்ஸ் செக்ட்டார்ல இருக்காரு ஒரு MNCல வைஸ் பிரசிடெண்ட்டா இருக்காரு.
அம்மா ஹோம் மேக்கரா தான் இருந்தாங்க… சூப்பரா சமைப்பாங்க.. கொஞ்ச வருஷம் முன்னாடி யூடியூப்ல ஒரு குக்கிங் சேனல் ஆரம்பிச்சி செம ஹிட் ஆகிட்டாங்க.. சில்வர் பட்டன் ரீச் பண்ணி இப்ப கோல்ட்ட நோக்கி போயிட்டு இருக்காங்க..
வெளியல்லாம் போனா நெறைய பேர் அடையாளம் கண்டுபுடிச்சி வந்து ஃபோட்டோ கூட எடுத்துட்டு போவாங்க.. அப்படியே செலிபிரிட்டி மாதிரி ஃபீல் பண்ணுவாங்க..தெரியுமா..? நானும் அனியும் கிண்டல் பண்ணுவோம், ஆனா எங்களுக்கும் உள்ளுக்குள்ள பெருமையாதான் இருக்கும்.இங்க லோக்கல்ல நடக்குற சமையல் போட்டிக்குலாம் எங்க அம்மாவ ஜட்ஜா கூப்பிடுவாங்க தெரியுமா..?”
என்று பேசிக்கொண்டே போனவள் எதோ தோன்ற பேச்சை நிறுத்திவிட்டு.
“சாரி ரொம்ப போர் அடிக்கிறனா..?” என்று கேட்டாள்.
“ஏன்.. நல்லதானே போயிட்டு இருந்தது..இப்ப என்ன ஆச்சி..?”
“இல்ல உங்களுக்கு வேற வேலை இருக்கும் நான்பாட்டுக்கு என் கதைய சொல்லி உங்க டைம வேஸ்ட் பண்றேனோன்னு தோணுது.”
“அப்படி முக்கியமான வேலை எதுவும் எனக்கு இப்ப இல்ல.. நீ சொல்லு.. ஆனா நீ குடுக்குற பில்டப்ப பார்த்தா ஆன்ட்டி சமையல சாப்டே ஆகனும் போல இருக்கே… ஆமா..நடுவுல அனின்னு சொன்னியே அது யாரு?” என்று கேட்டு அவளை மேலும் பேசத்தூண்டினான்.
“அனிருத் என்னோட தம்பி.. கேஎம்சில மெடிசின் படிச்சிட்டு இருக்கான்..”
‘மச்சான் டாக்டரா..’ என்று நினைத்ததை வெளியே சொல்லாமல் தவிர்த்தவன்,
“உன்னோட ஃபேமிலி ரொம்ப அழகா இருக்கு..” என்று உணர்ந்து கூறினான்.
“தாங்க்ஸ்..” என்றவள்..
“சரி.. இப்ப உங்க ஃபேமிலிய பத்தி சொல்லுங்க..” என்று திருப்பிக் கேட்க..
“அதான் நீ ஏற்கனவே என் அப்பாவையும் பாட்டியையும் பார்த்திருக்கியே.. என்னோட ஃபேமிலியே அவ்ளோதான்..”
“ஓ..” என்பதற்கு மேல் என்ன சொல்வதென்று அவளுக்கு தெரியவில்லை..அவன் அம்மாவைப் பற்றி கேட்கலாமா.. கூடாதா ?கேட்டால் அவனுக்கு எதுவும் சங்கடமாகிவிடுமா..?என்று இவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அந்த பேச்சு முடிந்தது என்பது போல், வேறு பேசினான் அவன்..
“அப்றம் சொல்லு.. .”
“என்ன சொல்றது?”
“கிட்டி.. நீ நிஜமாவே ஓகே தானே..? எதுவும் பிரச்சனை இல்லையே..என்னால எதாவது பண்ண முடியும்ன்னா சொல்லு நான் பண்றேன்..” என்று சீரியஸான குரலில் கேட்க
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நான் இப்ப ஓகேதான்..நான் தான் தேவையில்லாம காலையில உங்கள ரொம்ப கத்திட்டேன் சாரி…”என்றாள் வருத்தத்துடன்.
“அய்யோ.. இப்படி ஒரே நாள்ல இவ்ளோ ஷாக் குடுத்தா எப்படிமா.. சுனாமி கினாமி வந்துட போகுது..” என்று அவன் மீண்டும் அவனது சீண்டலைத் தொடங்கினான்.
“உங்ககிட்ட போய் சாரி சொன்னேன் பாருங்க.. என் வாய ஃபினாயில் ஊத்தி கழுவனும்..” என்று அவள் படபடக்கவும்
வாய்விட்டு சிரித்தவன்
“சரி நான் வைக்கவா..?” என்று அந்த சிரிப்பினூடே கேட்க..
‘அதற்குள் வைக்கிறானா..?’ அவளுக்கு இந்த உரையாடல் நீண்டுகொண்டே போகாதா என்று ஏக்கமாக இருந்தது..
அவன் வைத்துவிட போகிறான் என்ற அவசரத்தில்
“சாப்டீங்களா..” என்று வாயில் வந்ததைக் கேட்டுவிட்டு
‘அய்யோ கிரிஞ்ச்னு நெனைச்சிக்குவானோ..” என்று தன்னையே நொந்துகொண்டாள்.
ஆனால் அவன் அப்படியெல்லாம் எதுவும் நினைத்தமாதிரி தெரியவில்லை..
“இனிமே தான் கிட்டி.. உன்ன கேட்கவே வேணாம்.. நல்லா பஜ்ஜிய முழுங்கிட்டு மயக்கத்துல இருப்ப..” என்று கலாய்த்தவனுக்கு சரியான பதிலடி எதுவும் சட்டென்று தோன்றாமல் போக..
“ம்க்கூம்..” என்று உதட்டை சுளித்தாள்.
அவள் பாவனையில் சிரித்தவன்..
“சரி வைக்கறேன்..” என்று அவன் இழுக்க.. இதற்குமேல் நீட்டித்தால் நன்றாக இருக்காது என்று உணர்ந்து..மனமில்லாமல்
“ம்ம்..” என்றாள் சன்னமாக…
“என்ன..?”
“ஒன்னும் இல்ல..”
“சரி நாளைக்கு பேசலாம்..” என்று அவன் அடுத்த நாளுக்கும் சேர்த்து அடிபோட்டதை உணர்ந்தும் உணராமலும் இவள் மீண்டும்
“ம்ம்..”என்று மட்டும் சொல்ல..
அவள் மனதை அறிந்தவன் போல அவன் முகத்தில் புன்னகை விரிய
“பை டியர்..” என்றான்.
அவனுடைய டியர் என்ற அழைப்பில் உடல் முழுவதும் பரவசம் ஜிவ்வென்று ஏற..
“பை..” என்றாள் காற்றாகிவிட்ட குரலில்..
ஒரு கணம் நிறுத்தி தாமதித்து, அந்த மௌனத்தின் இனிமையை உள்வாங்கி அனுபவித்தபடி மீண்டும் ஒரு “பை” யுடன் அழைப்பைத் துண்டித்தான்.
முகம் முழுவதும் பூரிப்பும் சிரிப்புமாக சிவந்த கன்னங்களுடனும் வந்த மகளிடம்
“ஃபோன்ல யாரு அத்து..?” என்று கேட்டார் சுதாஷினி..
ஒரு கணம் தடுமாறி..
“க்ளையண்ட் மா..” என்று விட்டு செல்லும் மகளை துளியும் நம்பாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் தம்பதியினர் இருவரும்..
error: Content is protected !!