Skip to content
Post Views: 1,659
அத்தியாயம் 23
“வர வர சொன்ன பேச்சை கேட்குறதே இல்லை அரிசி மூட்டை நீ”
Advertisement
“என்ன இப்ப சொல்ற பேச்சை கேட்காம இருக்கேன் நான்.. நீங்க தான் உங்க மாமியார் கூட கூட்டு சேர்ந்து என்னை அதிகாரம் பண்ணிட்டு இருக்கீங்க”
“என்னை பார்த்தா அதிகாரம் பண்ற மாதிரியா இருக்கு.. உன் கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன்”
Advertisement
Advertisement
“இதுவும் ஒரு வகையில் அதிகாரம் தான் அரிசி மண்டி… என்னை கொஞ்சும் அதிகாரம், கெஞ்சும் அதிகாரம், அன்பு அதிகாரம், காதல் அதிகாரம்.. “
“பேச்சை மாத்தாத.. இதுவரைக்கும் உன் கேஸ் விஷயத்துல நான் தலை இட்டிருக்கேனா சொல்லு?”
Advertisement
“அதுக்காக இப்ப மூக்கை நுழைப்பீங்களா?”
காலையில் இருந்து முத்தாயியுடன் மல்லுக்கு நின்று கொண்டிருக்கான் ஹிருதய்.
ஒரு அரசியல் வாதியை எதிர்த்து கேஸ் போட்டிருந்தாள் முத்து. அவர்கள் மறைமுகமாக பல மிரட்டல்களை விட்டு கொண்டிருக்கிறார்கள்.
‘ஊரை திருத்த நம்மால் ஆகுமா. ஓரளுவுக்கு நல்லது செஞ்சா போதும். ஆழம் தெரியாம காலை விட கூடாது’ என்று மாலதி கூறுகிறார். கிட்ட தட்ட அனைவர்க்கும் அதே கருத்து தான். அனைவரும் என்றால் முத்து வீட்டு பக்க ஆளுங்கள், ஹிருதய் வீட்டு பக்க ஆளுங்கள் அனைவருக்குமே.
வேறு யார் சொன்னாலும் கேட்கமாட்டாள் என்று அனைவரும் ஹிருதய்யை தான் நெருக்கி கொண்டிருக்கிறார்கள்.
“சொன்னா கேளு, இதால நம்ம ரெண்டு பேருக்கும் மட்டும் பாதிப்புனா பரவாயில்லை. நாளைக்கு நம்மால நம்ம குடும்பம் பாதிக்க கூடாது இல்ல முத்து” என்று இறங்கி வந்து பேசினான்.
“நீங்க என்ன நினைக்கிறீங்க தயா.. நான் சீக்கிரமா ஆபத்துல மாட்டிக்குவேண்ணா ?”
ஹிருதய்க்கு அப்பொழுது தான் பல்ப் எரிந்தது. மாலதி, சௌந்தர், நித்யகல்யாணி, ஸ்ரீகாந்த் ,சிவங்கரி என்று மாறி மாறி அவனிடம் பேசி முத்துவை தடுக்குமாறு கேட்கவும் அவன் நிதானமாக யோசிக்கவே இல்லை. மனைவியை வேறு யாரும் எதுவும் சொல்லிவிட கூடாது என்று அது ஒன்றே அவன் சிந்தனை.
“அப்ப நீ எல்லாம் பக்காவா பிளான் போட்டிருக்கியா? முன்னாடியே சொல்ல வேண்டியது தானே?”
“நீங்களும் உங்க உடன் பிறப்பும் எத்தனை பேரை இப்படி புலம்ப விட்டு அமைதியா வேடிக்கை பார்த்திருப்பீங்க.. அதான் நீங்களும் கொஞ்சம் அனுபவிக்கட்டும்னு அமைதியா இருந்தேன்”
“நீ இருக்கியே.. சரியான அறிவாளி அரிசி மூட்டை..” என்று மனைவியின் கன்னத்தை பிடித்து ஆசையாக கிள்ளினான்.
“என்ன ப்ளான்னு கேட்க மாட்டிங்களா?”
“என்னால ரகசியத்தை எல்லாம் காப்பாத்த முடியாது ம்மா. ஏற்கனவே மாத்தி மாத்தி போன் போடுறாங்க.. என் கிட்ட சொன்னா நான் உளறினாலும் உளறிடுவேன்”
முத்து உதட்டில் சன்ன சிரிப்பு ஒன்று நெளிந்தது.
“அப்ப அதான் ப்ளான்னா.. என் கிட்ட எதையாவது கதை சொல்லுவ, நான் அதை உளறணும், என்னை வச்சு எல்லாரையும் சுத்தல்ல விடணும்.. அப்படித்தானே.. அதுக்கு வேற ஆளை பாரு” என்று ஹிருதய் கூறிக்கொண்டிருக்கையிலே வெளியே புல்லட் சத்தம் கேட்டது.
“இதோ, தாத்தா வந்துட்டாரு.. ரெண்டு பேருமே சேர்ந்து என்னமோ பண்ணுங்க, நான் கிளம்புறேன்..”
“யோவ் தக்காளி.. கழட்டி விட்டுட்டா போற. இரு இரு பார்த்துகிறேன்” என்ற முத்துவின் குரலை கேட்டு சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான் ஹிருதய்.
அதன் பிறகு கந்தசாமியும் முத்துவும் தங்கள் திட்டத்தை அழகாக செயல்படுத்தினார்கள்.
உண்மையிலே தேர்தல் சமயத்தில் இப்படி வழக்கு போட்டால் கொஞ்சம் வேலை நடக்கும் என்றே வழக்கை பதிவு செய்தார்கள்.
அரசியல்வாதி புது பார் ஒன்றை ஏழைகளின் குடிசை பகுதியின் அருகே ஆரம்பித்திருந்தார்.
அந்த பாரினால் அங்கே உள்ள மக்களுக்கு தொல்லைகளும் அதிகரித்தது.
பெண் பிள்ளைகள் அதை தாண்டி செல்வதற்கு பயந்தார்கள்.
பாரை மூடுவதற்காக என்று தான் வழக்கு பதிந்திருந்தார்கள்.
இப்பொழுது, உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கும் வேண்டாம். நாங்கள் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம்.. ஆனால் உங்களால ஒரு சிறு உதவி ஆக வேண்டும் என்று ஊரில் உள்ள சில பெரிய தலைகளை வைத்து பஞ்சாயத்து பேசினார்கள்.
“காசு வேணும்னா முன்னவே சொல்ல வேண்டியது தானே, எதுக்கு குடைச்சல் கொடுக்கிறீங்க?” என்று எகிறினார் அரசியல்வாதியின் அல்லக்கை.
“காசு எல்லாம் வேணாமுங்க.. உங்க பாரோட காம்பௌண்ட்ட கொஞ்சம் உயரமா கட்டிக்கோங்க.. அப்புறம் அந்த பக்கமா வர வழிய அடைச்சிட்டு, அந்த ஏரியா மக்களுக்கு பின்னாடி பக்கமா வழி அமைச்சு கொடுத்திடுங்க” என்றாள் முத்து.
“அது சுத்து வழியா இருக்குமே?” என்றார் அந்த அரசியல் தலைவர் யோசனையாக.
“அது பரவாயில்லைங்க.. ரெண்டு நிமிஷம் சுத்தி போறதுனால ஒன்னுமில்லை.. இதுல உங்களுக்கு ஆதாயம் தான். பார் தெடர்ந்து நடத்தலாம். சேரி மக்கள் மனசுல இடம் பிடிச்சு அவங்க ஓட்டையும் வாங்கிக்கலாம்.. எனக்கு அங்க இருக்கிற பிள்ளைகள் பாதுகாப்பு தான் அய்யா முக்கியம்.”
அவருக்கும் நல்ல யோசனையாக படவே, கேஸை வாபஸ் வாங்க கூறி, முத்து சொன்னபடி செய்துகொடுப்பதாக ஒத்துக்கொண்டார்.
பஞ்சாயத்தை சிக்கல் இல்லாமல் முடித்து வீடு திரும்பினார்கள் அய்யாவும் பேத்தியும்.
நேரே இருவரையும் கந்தசாமி வீட்டிற்கு வருமாறு ஹிருதய் இருவருக்கும் மெசேஜ் அனுப்பி இருந்தான்.
வீடு திரும்பியதும், “யாரும் இனி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. சுமூகமா பிரச்னையை முடிச்சிட்டு வந்துட்டோம் “ என்றார் கந்தசாமி.
“என் வீட்டுக்காரரை நீங்க எல்லாம் சேர்ந்து பாடாய் படுத்துறீங்கன்னு நானே கேஸையும் வாபஸ் வாங்கிட்டேன்” என்றாள் முத்து.
மாலதி, சௌந்தர், பிரேம், ரம்யா என்று அவர்களும் வந்திருந்தார்கள்.
“அக்கா வா வா, உனக்காக தான் வெயிட் பண்றேன், அப்பத்தா மருதாணி அரைச்சு வச்சிருக்காங்க” என்று ரம்யா முத்துவை அழைத்து சென்றாள்.
மாலதியும் நித்யகல்யாணியும் சேர்ந்து விரைவாக சமையலை முடித்துவிட்டார்கள். அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த காலத்து வீடு, வீட்டின் மத்தியில் பெரிய முற்றத்தோடு இருக்கும் வளவு. முற்றத்தை சுற்றி தூண்கள் வரிசையாக இருக்கும். ஆளுக்கொரு தூண் பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுத்து முத்துவின் கைபேசி அலறியது.
யார் என்று ப்ரேம் தான் எடுத்து பார்த்தன். முத்துவும் ரம்யாவும் இரண்டு கைகளிலும் மருதாணி வைத்திருந்தார்கள்.
‘ப்ரதம் ப்ரோ’ என்று வந்தது.
ப்ரேம் ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டு முத்துவின் அருகில் வைத்தான்.
“ஹலோ ப்ரோ, அப்புறம் பஞ்சாயத்தை எல்லாம் ஒரு வழியா முடிச்சிட்டீங்க போல” என்று ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்தான் ப்ரதம்.
“ஆமா ப்ரோ அதை விடுங்க. நீங்க சுசீலாம் எப்ப ஊருக்கு வரீங்க.. என்ன சொல்றாரு குட்டி பாஸ்..” என்று லாவகமாக பேச்சை மாற்றினாள்.
“அதுவா இப்ப முக்கியம்?” என்று சுசீலா இடை புகுந்தாள்.
“எப்படி முத்து உனக்கு மட்டும் இப்படி எல்லாம் ஐடியா வருது” என்றாள் சுசீ அந்த பேச்சை விடாமல் .
அனைவரின் கவனமும் இப்பொழுது தொலைபேசிக்கு திரும்பியது.
“அது என்ன முத்துவை மட்டும் சொல்ற சுசீ? கந்து அய்யாவும் முத்துவும் சேர்ந்து தான் பிளானிங் எல்லாம்” என்றான் ப்ரதம்.
“போச்சு போச்சு.. சோலிய முடிசிடுவான் போலவே!” என்று கந்தசாமி முனங்கினார்.
“விடுங்க ப்ரோ..” என்று முத்து கூறியதை டீலில் விட்டு ப்ரதமேஷும் சுசீலாவும் இவர்கள் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார்கள்.
உண்மையில் அந்த அரசியல் வாதி ஒரே ஒரு முறை மட்டுமே, முத்துவை கேஸ் வாபஸ் வாங்குமாறு சௌந்தரிடம் பேசினார்.
அதன் பிறகு மாலதி நித்யகல்யாணி எல்லாம் முத்துவை வற்புறுத்தவும், மீதி மிரட்டல் கால்களை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தது முத்துவும் கந்தசாமியும். இவர்களே அரசியல்வாதி சார்பாக மிரட்டி பேசுவதை போல ஆள் செட் செய்திருந்தார்கள்.
முத்து காலை கட் செய்ய நினைக்கும் பொழுதே கைபேசியை நித்யகலாயணி கையில் எடுத்திருந்தார்.
“இதுல ஹைலைட் என்னன்னா எங்க பாட்டிக்கு எல்லாம் மிரட்டல் போன் போட்டு.. அவங்களும் நமக்கு எதுக்கு மிரட்டல் கால்ன்னு யோசிக்காம, பெரிய போலீஸ் அதிகாரி மாதிரி கொடுத்த பில்ட் அப் இருக்கே ப்ரோ.. நீங்க நேர்ல பார்த்திருக்கணும்..”
“ஆனா முத்து எனக்கு முதல்ல நீ சொன்ன டயலாக் எல்லாம் பேசும் போது கை கால் எல்லாம் உதறல் எடுத்துச்சு.. ஆனா த்ரில்லிங்கா இருந்துச்சு முத்து” என்றாள் சுசீலா.
“அய்யோ லூசுங்களா..நிப்பாட்டுங்க.. உங்களை எல்லாம் அப்ரெண்டிஸ்சா வச்சுக்கிட்டதுக்கு எனக்கு வேண்டும்” என்று முத்து பல்லை கடிக்கவும் தான் ப்ரதமேஷ்க்கு ஏதோ சரி இல்லை என்று தோன்றியது.
“ஓகே ப்ரோ, எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க பாய்” என்று வைத்து விட்டான்.
“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும் உங்க ரெண்டு பேருக்கும். எங்க எல்லாரையும் பயமுறுத்திருங்க.. இன்னிக்கு உங்க தோலை உரிக்காம விட மாட்டேன்” என்று நித்யகல்யாணி பக்கத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்து கொண்டு கந்தசாமியை துரத்தினார்.
“விடாதீங்க அத்தை..” என்று அவருக்கு பின்னே மாலதி முத்துவை துரத்தினார்.
கந்தசாமி “இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா. கட்டின புருஷன்னு பொண்டாட்டியும் மதிக்கல.. மாமனார்ன்னு மருமகளும் மதிக்கல. இப்படியா அடிக்க வருவீங்க?” என்று கத்தி கொண்டே ஓடினார்.
ப்ரேமும் ரம்யாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
சௌந்தர் கூட, “விடுங்க ம்மா, விடு மாலு.. சும்மா விளையாட்டா செஞ்சுட்டாங்க” என்றார் இவர்களுக்காக.
“விளையாடற வயசாடா உன் அப்பனுக்கு” என்று அவரிடம் பாய்ந்தார் நித்யகல்யாணி.
“முத்து, உங்க அப்பா நம்மளை அடி வாங்கி வைக்காம விட மாட்டான் போலயே” என்று பேத்தியிடம் வாய் பேசிக்கொண்டே ஓடினார்.
ஹிருதய் தான் குறுக்கே புகுந்து, “விடுங்க அப்பத்தா, விடுங்க அத்தை “என்று முத்துவையும் கந்தசாமியையும் அவன் முதுகுக்கு பின்னே மறைத்து கொண்டான்.
“எல்லாம் உன்னால தான் ஹிருதய்.. நீ செல்லம் கொடுத்து தான் இரண்டு பேரையும் கெடுத்து வச்சிருக்க.. அதான் இப்படி அடங்காம சுத்திகிட்டு இருக்காங்க” என்றார் மாலதி மூச்சு வாங்க.
“என் புருஷன் எனக்கு செல்லம் கொடுக்கிறார். ஏன் உனக்கு உன் புருஷன் கொடுக்கல?” என்று முத்து எகிறிக்கொண்டு பதில் சொல்வும், ‘நங்’ என்று அவள் தலையில் கொட்டிவிட்டார் மாலதி.
“உன் புருஷன் உனக்கு மட்டும் செல்லம் கொடுக்க வேண்டியது தானே ? எதுக்கு என் புருஷனுக்கு கொடுக்கிறான்” என்று நித்யகல்யாணி கேட்டு கந்தசாமியின் கன்னத்தில் இடித்துவிட்டே நகர்ந்தார்.
“எத்தனை தடவை சொல்றது, யாரும் முத்துவை அடிக்க கூடாதுன்னு” என்று ஹிருதய் அழுத்தமாக கேட்டு, மனைவியை அழைத்து சென்று அவளை அமரவைத்து பக்கத்திலே அமைதியாக அமர்ந்து கொண்டான்.
மாலதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அனைவரும் அமைதி ஆகிவிட்டனர்.
“விடு இதயா, நாங்க செஞ்சதும் தப்பு தானே” என்று கந்தசாமிதான் ஹிருதய்க்கு சமாதானம் கூறினார்.
அதன் பிறகு ஹிருதய் யாருடணும் பேசவே இல்லை.
“இனிமேல் அடிக்க மாட்டோம்” என்று நித்யகல்யாணியும் மாலதியும் சத்தியம் செய்துதான் அவனை மலை இறக்கினார்கள்.
“ஆனாலும் முத்து உன் வீட்டுக்காரர் ரொம்பத்தேன் அழுத்தம்” என்று பேத்தியிடம் குறைபட்டுக்கொண்டார் நித்யகல்யாணி. ஆனால் அவரது குரலில் பெருமிதம் தான் இருந்தது.
மதிய உணவின் போது, மீன் குழம்பை இலையில் ஊத்தும்பொழுதே முத்துவிற்கு பிரட்டி கொண்டு வந்தது.
திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆனதால் அனைவரும் நல்ல செய்தியாக இருக்குமோ என்று கேள்வியாக முத்துவை பார்த்து வைத்தனர்.
அதையே வார்த்தைகளால் கேட்டார் நித்யகல்யாணி.
“அப்பத்தா, நல்ல செய்தினாலும் வாந்தி வரும், சமையல் நல்லாவே இல்லைனாலும் வாந்தி வரும்.. இப்ப எதுக்கு வருதுன்னு தெரியலையே” என்று அவரை வெறுப்பேற்றி விட்டே நிம்மதியாக உணவை உண்டாள்.
மாலை மருத்துவமனை சென்று நல்ல செய்திதான் என்று அனைவருக்கும் தெரிவித்தனர்.
“பி ஸ்கொயர் நாம பாட்டி ஆகப்போறோம்” என்று மாலதி பூம்பாவைக்கு அழைத்து முதலில் கூறினார்.
பின் அங்கே சென்னையிலும் அனைவருக்கும் மகிழ்ச்சியாக விஷயத்தை பகிர்ந்து கொண்டார்கள்.
பூம்பாவையும் ஸ்ரீகாந்த்தும் உடனே புறப்பட்டு வந்தார்கள்.ஹாசினி லீவ் விட்டதும் வருவதாக கூறி பெற்றோர்களை அனுப்பி வைத்தாள். சிவங்கரியும் ஹாசினியும் இருந்து கொள்வார்கள். முன்பு போல் இல்லாமல் இப்பொழுது ஹாசினி எல்லா வேலைகளையும் பழகி இருந்தாள். சிவங்கரியின் துணையோடு சுலபமாக வீட்டிலும் அனைத்தையும் பார்த்துவிட்டு கல்லூரிக்கும் சென்று வருகிறாள்.
அவ்வப்பொழுது அவர் அவர் தோது படி அனைவரும் வந்து சென்றார்கள் முத்துவை பார்க்க.
கேசவன் காதம்பரி இருவரும் கூட ஒருவாரம் இருந்துவிட்டு சென்றார்கள்.
ஹிருதய் முத்துவின் குழந்தைக்காக அனைவரும் ஆவலாக காத்து கொண்டிருக்கிறார்கள்.
error: Content is protected !!